டேவிட் ஐயா வாழ்வும் மரணமும் - வ.ந.கிரிதரன் -
இன்று (ஏப்ரில் 24) டேவிட் ஐயா (எஸ்.ஏ. டேவிட் ஐயா) அவர்களின் பிறந்ததினம். அவரது பிறந்த தினத்தையொட்டி 'டேவிட் ஐயா வாழ்வும் மரணமும் (1924 - 2015) ' என்னும் தலைப்பில் காணொளியொன்று உருவாகியுள்ளது. 2012இல் உருவான காணொளி. இரு பகுதிகளைக் கொண்டது. சமூக, அரசியற் செயற்பாட்டாளர் அசோக் (யோகன் கண்ணமுத்து) அவர்களின் அறிவுறுத்தலின்பேரில் உருவான காணொளியை இயக்கியவர் டி. அருள் எழிலன். காணொளிக்காக டேவிட் ஐயாவை நேர்காணல் செய்தவர் எழுத்தாளர் சயந்தன்.
இது பற்றி எழுத்தாளர் சயந்தன் தனது முகநூற் பதிவில் குறிப்பிட்டிருப்பது:
"பிரான்சில் வாழும் அசோக் யோகன் சொல்லி 2012-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அப்போது சென்னையில் வசித்த டேவிட் அய்யாவை முடிந்த அளவு காட்சிப்படுத்தினேன். அவரது நீண்ட வாழ்வை விடியோவாக பதிவு செய்தேன். பல்வேறு சூழல் காரணமாக அவரது பிறந்த நாளையொட்டி (ஏப்ரல் 24) இப்போது அதனை வெளியிடுகிறோம். சாலமோன் டேவிட் அருளானந்தம் என்னும் டேவிட் அய்யா ஒரு இயக்கமாக, சிந்தனையாக, தனிமனிதனாக வரலாறாகவும் கனவாகவும் வாழ்ந்தவர்.அவர் வாழ்வும் மரணமும் ஒரு அனுபவம் ஒரு செய்தி ஈழத் தமிழர் அரசியல் வரலாற்றிலும் போராட்ட வரலாற்றிலும் மின்னி மறையும் மேகம் போல சில செய்திகளையும் வாழ்வையும் விட்டு சென்றிருக்கிறார். 1924-ஆம் ஆண்டு பிறந்து 2015-ஆம் ஆண்டு மறைந்த டேவிட் அய்யாவின் வாழ்க்கை எங்கிருந்து துவங்கி எப்படி முடிந்தது என்பதை ஒரு தடமாக ஆவணப்படுத்துகிறது இந்த பதிவு."
கட்டடக்கலைஞராக, நகர அமைப்பு நிபுணராக இலங்கை மற்றும் பிற நாடுகள் பலவற்றில் பணியாற்றிய டேவிட் ஐயாவை அவரை இலங்கையில் நடைபெற்ற அகிம்சை ரீதியிலான தமிழர் விடுதலைப்போராட்டம் தன் பக்கம் ஈர்த்தது. அதே சமயம் எழுபதுகளில் அவர் காந்தியத் தத்துவத்திலும் ஈடுபாடு காட்டினார். அதன் விளைவாக உருவானதே காந்திய அமைப்பு. அவ்விதம் ஆரம்பிக்கப்பட்ட காந்திய அமைப்பு பின்னர் இலங்கைத் தமிழர் ஆயுதப்போராட்டத்திலுமோர் அங்கமாக மாறியது காலத்தின் கோலம்.






முன்னுரை

நடிகர் விவேக் மாரடைப்பினால் மறைந்து விட்ட செய்தி துயரகரமானது. மாரடைப்பு சிலரைச் சிலரைச் சடுதியாகத் தூக்கிச் சென்று விடுகின்றது. ஏற்கனவே விவேக் இருதய நோயினால் பாதிக்கப்பட்டிருந்தாரா அல்லது இதுதான் முதன் முறையா தெரியவில்லை. விவேக் 59 வயதில் நம்மை விட்டுப்பிரிந்துள்ளார். அவரது மறைவு என் தந்தையாரின் மறைவினை நினைவு படுத்தியது. என் தந்தையார் எம் பதின்ம வயதில் எம்மைவிட்டு , மாரடைப்பினால் சடுதியாகப்பிரிந்தபோது அவருக்கு வயது 58.
அவனது பாட்டன் பெருவளவுக்காரராயும், பெரிய உபகாரியாயும் இருந்தார். அதனால் கிராமத்திலும், அயல் கிராமங்களிலும்கூட, பெருமதிப்புப் பெற்றிருந்தார். ஆரம்பத்தில் அவர்களது குலத்தொழில் துணி துவைப்பதாகவிருந்தது. நான்கு ஐந்து தலைமுறைகளுக்கு முந்திய காலத்திலிருந்து வெள்ளைக்காரச் சேவகத்தில் பரம்பரைத் தொழில் கைவிடப்பட்டு, பெருநிலவுடைமைக் குடும்பமாக அது ஆகியிருந்தது. பெருநிலங்களில் ரப்பர் பணமாய் வழிந்துகொட்டியது. சீமைச் சாராய குடியும் கூத்தியாள்களுமாய் பெருவளவுக் குடும்பத்துக்கு கிராமத்திலிருந்த அவப்பெயரை அவனது பாட்டன்தான் ஓரளவேனும் மாற்றிவைத்தார். அப்பொழுதும் அந்த மதிப்பை அவருக்கு மட்டுமாகவே கிராமம் ஒதுக்கிக்கொடுத்தது.
- எழுத்தாளர் கடல்புத்திரனிடம் ஒருமுறை பேச்சுவாக்கில் 'ஏன் நீங்கள் உங்கள் இயக்கப் பயிற்சி முகாம் அனுபவங்களைப் பதிவு செய்யக்கூடாது" என்று கேட்டேன்.எழுதுவதாகக் கூறிச் சிறு நாவலாக எழுதியுள்ளார். பெயர்களை மாற்றியிருக்கின்றாரென்று தெரிகின்றது. இருந்தாலும் தளத்திலியங்கிய அமைப்பின் பயிற்சி முகாமொன்றின் அனுபவங்களைப் பதிவு செய்திருக்கின்றார். அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது. - பதிவுகள்-
யுனெஸ்கோவால் உலகப் பூர்வகுடிகளாக அங்கீகரிக்கப்பட்ட நீலகிரி படகர் இன மக்களின் பூர்வகுடித் தன்மைக்குரிய, அவர்களின் பல்வேறு தனிக்கூறுகளுள் நீலகிரியைப் பற்றிய நிலவியல் அறிவும் இன்றியமையான ஒன்றாகும். நீலகிரியில் உள்ள பெரும்பான்மையான இடங்கள் படகர்களால் பெயரிடப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. அப்பெயர்கள் படகர்களின் தனித்திராவிட மொழியான படகு மொழியின் தொன்மையினை விளக்குவனவாகத் திகழ்கின்றன.
யாழ்ப்பாணத்தில் இயல்,இசை, நாடகம் எனும் முத்தமிழ் கொலுவிருந்த ஓர் இனியகாலம். யாழ்.திறந்தவெளியரங்கம், வீரசிங்கம் மண்டபம் என்பன வாரம்தோறும் கலைநிகழ்ச்சிகளால் களை கட்டியிருந்த சிறப்பான காலகட்டம். யாழ் மண்ணின் ஏனைய பகுதிகளிலும் அப்பொழுது கலை நிகழ்ச்சிகள் நிறைவாகநடைபெற்று வந்தன. யாழ்ப்பாணம் என்றால் அங்கே பல அடையாளச்சின்னங்கள் எம் மனக்கண்ணில்எழும். அவை பாரம்பரியத்திற்குரியவையாகவும் நவீனத்துவமானவையாகவும் அமைந்துள்ளன. அரங்கங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகள் அன்றுடன் முடிந்துவிடும். நிழல் படங்கள் மட்டும் பார்வைக்கு இருக்கும். அவையும் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் அமைந்துவிடுவதில்லை. 1970கள் யாழ்ப்பாணம் பல்வேறு விதமான நவீன தொழில் நுட்பங்களைதம்மகத்தே உள்வாங்கிக் கொண்டிருந்த காலகட்டம். அப்பொழுதுதான் ஒலிப்பதிவுகள் மேற்கொள்ளக்கூடிய வசதிகள் ஏற்பட்டன. இசைப்பிரியர்களை மகிழ்வித்துவந்த இசைக்களஞ்சியமாக யாழ்ப்பாணத்தின் அடையாளங்களில் ஒன்றாக அக்காலகட்டத்தில் திகழ்ந்தது நியூ விக்ரேர்ஸ். யாழ்ப்பாணம் மணிக்கூட்டு வீதியில், யாழ்.பொது மருத்துவமனைக்குப் பின்புறமாகஇந்த நிறுவனம் அமைந்திருந்தது. அப்பொழுதெல்லாம் திரைப்படப்பாடல்கள் கேட்பதென்றால் இலங்கை வானொலிஒன்றே வழியாக இருந்தது. வானொலியில் ஒலிபரப்பாகும் பாடல்களைக் கேட்கும் இசைப் பிரியர்கள் மீண்டும்அப்பாடல்களைக் கேட்பதற்கு யாழ்ப்பாணத்தில் பெரும் வரப்பிரசாதமாகஅமைந்தது நியூ விக்ரேர்ஸ் நிறுவனம்.
”கிழக்கு வானில் சூரியன் தங்கப்பாளமாக ஜொலித்தபடி உதயமாகிக்கொண்டிருந்தான். சூரியோதயத்தை நான் முன்னர் கடற்கரையோரங்களில் நின்று பார்த்துக் களித்திருக்கிறேன். ஆனால், உயரத்தில், பறந்துகொண்டிருக்கும் விமானத்திலிருந்து, புதிய கோணத்தில் வெண்பஞ்சுக் கூட்டங்களாக மிதந்துகொண்டிருக்கும் மேகங்களினூடாக அந்த அழகிய காட்சியைப்பார்த்தபோது நான் மெய்மறந்துபோனேன். ஆதவனின் ஒளிப்பிழம்புகள் கணத்துக்குக்கணம் புதிது புதிதாய் கொள்ளை அழகை அள்ளித் தெளித்துக்கொண்டிருந்தன.”
- பதிவுகளின் 'சிறுவர் இலக்கியம்': இப்பகுதியில் சிறுவர் இலக்கியப்படைப்புகள் வெளியாகும். உங்கள் படைப்புகளை இப்பகுதிக்கு அனுப்பி வையுங்கள். சிறுவர் இலக்கியத்தைப் பிரதிபலுக்கும் கதை, கவிதை, கட்டுரைகளை நீங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
கவிஞர் சாரணாகையூம் (இயற்பெயர் ஜனாப் என்.எஸ்.ஏ.கையூம்) பதுளையைச் சேர்ந்தவர். ஆசிரியராகப் பணியாற்றியவர். இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் குழந்தைகள் இலக்கியமென்றால் சோமசுந்தரப்புலவர், வேந்தனார் இவர்களுடன் என் நினைவுக்கு வரும் அடுத்தவர் இவர். என் மாணவப் பருவத்தில் ஈழநாடு மாணவர் மலரில் வெளியாகிய இவரது குழந்தைக் கவிதைகளைப் படித்து இன்புற்றதுண்டு/. இலங்கையில் வெளியான பத்திரிகைகள், சஞ்சிகைகள் பலவற்றில் இவரது கவிதைகளும் இடம் பெற்றிருக்கும். 
எழுத்தாளர் முனியப்பதாசனின் எழுத்துப்பிரவேசம் 1964இல் கலைச்செல்வி சஞ்சிகை நடத்திய சிறுகதைப்போட்டியில் இவரது 'வெறியும் பலியும்' சிறுகதை முதற்பரிசு பெற்றதுடன் ஆரம்பமாகியது. கடற் தொழிலாளர் சமூகத்தைப் பின்னணியாகக் கொண்டு படைக்கப்பட்ட சிறுகதை. கலைச்செல்வியின் ஆசிரியரும், பதிப்பாளருமான சிற்பி சரவணபவன் எழுத்தாளர்கள் பலரை உருவாக்கியுள்ளார். அவர்களில் இவருமொருவர்.


- எழுத்தாளர் மொன்ரியால் மைக்கல் (இயற்பெயர் ஜெயரூபன் மைக் பிலிப் - Jeyaruban Mike Philip) ஜீவன் கந்தையா, மொன்ரியால் மைக்கல், சதுக்கபூதம், ஜெயரூபன் என்னும் பெயர்களிலும் பதிவுகள் இணைய இதழில் இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன. பதிவுகள் இணைய இதழின் ஆரம்ப காலகட்டத்தில் பங்களித்தவர்களில் இவரும் ஒருவர். ஆகஸ்ட் 2002 தொடக்கம் பெப்ருவரி 2003 வரை பதிவுகள் இணைய இதழில் வெளியான இவரது ஆறு கட்டுரைகளை ஒருங்குறியில் மீள்பிரசுரம் செய்கின்றோம். அன்று திஸ்கி , அஞ்சல் எழுத்துருக்களில் பதிவுகள் இதழில் வெளியான பல படைப்புகளுள்ளன. அவையும் காலப்போக்கில் ஒருங்குறிக்கு மாற்றப்படும். இவரது 'ஏழாவது சொர்க்கம்' என்னும் நாவலும், ஜெயரூபன் என்னும் பெயரில் எழுதிய 'ஜடாயு' என்னும் சிறுகதையும் பதிவுகள் இதழில் வெளியாகியுள்ளன. - பதிவுகள் -


பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









