தொடர் : தீவுக்கு ஒரு பயணம் (5) - கடல்புத்திரன் -
அத்தியாயம் ஐந்து - அடுத்த நாள் இதற்கு மேலே செல்கிறார்கள் . புளொமின்டன் " லுக் அவுட் " , என்கிற அதிகமான மலையின் உயரப் புள்ளி வருகிறது . அதிலிருந்து கீழ் நோக்கி அதிகளவு சரிவைப் பார்க்கலாம் . கண் கொள்ளாக் காட்சிகள் கண்களை நிறைக்கின்றன . அதிலிருந்து பார்த்தால் கஸ்பி நிலங்களையும் பார்க்கலாம் என்றால் இன்னொரு புறத்தில் இவர்கள் இருக்கிற வீடும் இருக்க வேண்டும் . சற்று செல்ல சிவப்பு மண் சுவருடன் பள்ளத்தில் இறங்கிற கடற்கரை . ஓரிரு மரங்களின் வேர்கள் சிறிது வெளியில் தெறிய முக்கால்வாசி வேருடன் சுவர் மண்ணுடன் நிற்கிற மரங்கள் . மண்ணை அரித்தாலும் சரிந்து விழாது உறுதியாகக் கிடக்கிற மண்ணாகக் கிடக்க வேண்டும் . நம்மூரில் என்றால் மரம் சரிந்து விழுந்திருக்கும் . மண்ணும் தான் . அப்படி கரை தோறும் அங்காங்கே கடற்கரைகள் இருக்கின்றன .
அவ்விடத்தில் தான் அதிகபட்ச உயர் அலைகள் அடிப்பதாகவும் கூறப்படுகிறது . அந்த தீவின் நில மட்ட உயரங்களைப் புரிந்து கொள்ள சிரமப் படுகிறான் . நில அளவையியல் அறிவு அவசியம் தேவைப்படுகிறது . தில்லைக்கு தட்டுத் தடுமாறிய ... நிலையிலே கிடக்கிறது .
கடலுக்குள் நீட்டிக் கொண்டிருக்கிற துண்டு நிலப்பரப்பில் இருக்கிற பசுமைக் காட்டினுள் ஐந்து கிலோ மீற்றர் , பத்து ...என அதிக தூரம் நடக்கிற சுற்றுக்கள் இருக்கின்றன . நானும் பிள்ளைகளும் நடந்திருக்கிறோம் " என்கிறாள் பூமலர் . " பூச்சிகள் ...மலை ஏறுவது போல நடக்க முடியாது " என ஜெயந்தி கூற அதை தவிர்த்து விடுகிறார்கள் . ஆனால் , கடற்கரை அழகாகவேக் கிடக்கிறது . " கல்லை அலை அடித்து குகையை ஏற்படுத்தி இருக்கிறது எல்லாம் மேலே செல்ல தான் வருகிறது . நீருக்கு நடுவே சிற்பி போல செதுக்கிய உருவங்களும் கிடக்கின்றன " என்று விபரிக்கிறாள் பூமலர் . நீரும் லேசு பட்டதில்லை .