ஆளுமைகளை அறிந்துகொள்வோம்: எழுத்தாளர் முனியப்பதாசன்! - வ.ந.கிரிதரன் -
எழுத்தாளர் முனியப்பதாசனின் எழுத்துப்பிரவேசம் 1964இல் கலைச்செல்வி சஞ்சிகை நடத்திய சிறுகதைப்போட்டியில் இவரது 'வெறியும் பலியும்' சிறுகதை முதற்பரிசு பெற்றதுடன் ஆரம்பமாகியது. கடற் தொழிலாளர் சமூகத்தைப் பின்னணியாகக் கொண்டு படைக்கப்பட்ட சிறுகதை. கலைச்செல்வியின் ஆசிரியரும், பதிப்பாளருமான சிற்பி சரவணபவன் எழுத்தாளர்கள் பலரை உருவாக்கியுள்ளார். அவர்களில் இவருமொருவர்.
இவரது இயற்பெயர் தாமோதரம்பிள்ளை சண்முகநாதன். யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர். யாழ் இந்துக் கல்லூரியின் அருகிலிருந்த ஒழுங்கைப்பகுதியில் வாழ்ந்ததாக அறிகின்றேன். இவரது கதைகள் ஈழநாடு, சுதந்திரன், கலைச்செல்வி, விவேகி போன்ற பத்திரிகை, சஞ்சிகைகளில் வெளியாகின. ஈழநாடு ஆசிரியர் ஹரன் இவரது எழுத்தின்பால் பெரு மதிப்பு மிக்கவரென்றும், அவரே இவரது சிறுகதையொன்றை ஆனந்தவிகடனுக்குக் கொண்டு சென்று கொடுத்ததாகவும், அது விகடனில் முத்திரைக்கதையாக வெளியாகியதாகவும் மேலும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர் ஐம்பதுக்கும் குறைவான கதைகள் வரையில் எழுதியுள்ளதாக ஈழநாடு குறிப்பிடுகின்றது. எழுத்தாளர் செங்கை ஆழியான் அவர் இருபது சிறுகதைகளே எழுதியுள்ளதாகக் குறிப்பிடுவார். அவற்றில் சிலவற்றை எழுத்தாளர் செங்கை ஆழியான் சேகரிக்க , எழுத்தாளர் டொமினிக் ஜீவா தனது மல்லிகைப்பந்தல் பிரசுரமாக வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. முற்போக்காளரான டொமினிக் ஜீவா அவர்கள் ஆன்மிகப்போக்குள்ளவரான முனியப்பதாசனின் சிறுகதைகளைத் தனது பதிப்பக வெளியீடாக வெளியிட்டுள்ளதும் முக்கியமானது. இத்தொகுதியை நூலகம் எண்ணிம நூலகத்தில் வாசிக்கலாம்.




- எழுத்தாளர் மொன்ரியால் மைக்கல் (இயற்பெயர் ஜெயரூபன் மைக் பிலிப் - Jeyaruban Mike Philip) ஜீவன் கந்தையா, மொன்ரியால் மைக்கல், சதுக்கபூதம், ஜெயரூபன் என்னும் பெயர்களிலும் பதிவுகள் இணைய இதழில் இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன. பதிவுகள் இணைய இதழின் ஆரம்ப காலகட்டத்தில் பங்களித்தவர்களில் இவரும் ஒருவர். ஆகஸ்ட் 2002 தொடக்கம் பெப்ருவரி 2003 வரை பதிவுகள் இணைய இதழில் வெளியான இவரது ஆறு கட்டுரைகளை ஒருங்குறியில் மீள்பிரசுரம் செய்கின்றோம். அன்று திஸ்கி , அஞ்சல் எழுத்துருக்களில் பதிவுகள் இதழில் வெளியான பல படைப்புகளுள்ளன. அவையும் காலப்போக்கில் ஒருங்குறிக்கு மாற்றப்படும். இவரது 'ஏழாவது சொர்க்கம்' என்னும் நாவலும், ஜெயரூபன் என்னும் பெயரில் எழுதிய 'ஜடாயு' என்னும் சிறுகதையும் பதிவுகள் இதழில் வெளியாகியுள்ளன. - பதிவுகள் -


இலங்கையின் தென்பகுதியில் கொக்கலை என்ற சிங்களக் கிராமத்தில் 1890 ஆம் ஆண்டு பிறந்த மார்ட்டின் விக்கிரமசிங்கா, சிங்கள இலக்கிய உலகில் புகழ்பெற்ற படைப்பாளி. அவர் இலக்கியத்தின் அனைத்து துறைகளிலும் 90 இற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருப்பவர். அவற்றில் குறிப்பிடத்தகுந்த படைப்புகள் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் மாத்திரமன்றி ருஷ்ய மொழியிலும் பெயர்க்கப்பட்டுள்ளன. அத்துடன் அவரது நாவல்கள் சில திரைப்படங்களாகியுள்ளன. 1914 ஆம் ஆண்டில் தனது முதலாவது நாவலாக லீலா என்ற புதினத்தை வெளியிட்டிருக்கும் மார்ட்டின் விக்கிரமசிங்கா 1976 ஆம் ஆண்டு தமது 86 ஆவது வயதில் மறைந்தார். அன்னாரின் நினைவாக இலங்கையில் மல்லிகை இதழும் சிறப்பு மலர் வெளியிட்டுள்ளது.
டெலிபோன்மணி விடாமல் அடித்துக்கொண்டு இருந்தது. நல்ல தூக்கக் கலகத்தில் இருந்த சகுந்தலா, திடுக்கிட்டு எழுந்து டெலிபோனை தூக்கினாள் . அது யாழ்ப்பாணத்தில் இருந்து வாசுகி " நான்தான் அக்கா" என்றாள் .
தமிழ்நாட்டிலிருந்து சினிமாவுக்காகவே வெளியான பொம்மை இதழில் பலவருடங்களுக்கு முன்னர் அதன் கேள்வி - பதில் பகுதியில் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது.
- எழுத்தாளர் கடல்புத்திரனிடம் ஒருமுறை பேச்சுவாக்கில் 'ஏன் நீங்கள் உங்கள் இயக்கப் பயிற்சி முகாம் அனுபவங்களைப் பதிவு செய்யக்கூடாது" என்று கேட்டேன்.எழுதுவதாகக் கூறிச் சிறு நாவலாக எழுதியுள்ளார். \ பெயர்களை மாற்றியிருக்கின்றாரென்று தெரிகின்றது. இருந்தாலும் தளத்திலியங்கிய அமைப்பின் பயிற்சி முகாமொன்றின் அனுபவங்களைப் பதிவு செய்திருக்கின்றார். அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது. - பதிவுகள்-
இளைஞனொருவன் தன் நெஞ்சுக்கினியவளை நினைத்துப் பாடுவதாக அமைந்துள்ள பாடலின் வரிகள் அனைத்தையுமே நெஞ்சில் நிலைத்து நிற்க வைக்கும் வகையில் எழுதியுள்ளார் கவிஞர் வாலி. முதலிரண்டு வரிகள் போதும் இப்பாடலை நிலைத்து நிற்க வைப்பதற்கு. எனக்கு மிகவும் பிடித்த வரிகள் "காற்று வாங்கப் போனேன். ஒரு கவிதை வாங்கி வந்தேன்." இவ்வரிகளைக் கேட்கையில் இயற்கையின் அழகில் மெய்ம்மறந்தபடி , காற்று வாங்கப் போகையில் ஏற்படும் அமைதி கலந்த இனிமை எம்மை வருடிச் செல்லும்.



தமிழ்க்கவிதைகள் சங்ககாலத்திலிருந்து இன்று வரையில் பல்வேறு விடயங்களைப்பற்றி விபரித்திருக்கின்றன. சங்காலக்கவிதைகள் , காப்பியங்கள் பல அக்காலகட்டத்து நகர்களைப்பற்றிய தகவல்கள் பலவற்றைத்தருகின்றன. குறிப்பாக சிலப்பதிகாரம் அக்காலகட்டத்தில் புகழ்மிக்க கோநகர்களாக விளங்கிய காவிரிப்பூம்பட்டினம், மதுரை மற்றும் வஞ்சி பற்றி, அந்நகர்களில் வாழ்ந்த மக்கள் பற்றி, அவர்கள் ஆற்றிய பல்வேறு தொழில்கள் பற்றியெல்லாம் விரிவாகவே தகவல்களைத்தருகின்றது. அக்கால நகரங்களின் நகர வடிவமைப்பு பற்றி, வாழ்ந்த மக்கள் புரிந்த தொழில்கள் பற்றி, நடைபெற்ற விழாக்கள் பற்றி, பிற நாடுகளுடன் நடைபெற்ற வர்த்தக நடவடிக்கைகள் பற்றி.. என்று பல்வேறு வகைப்பட்ட தகவல்களை அவற்றின் மூலம் அறிந்துகொள்ளலாம். இதனைப்போல் அண்மைக்கால இலங்கைத் தமிழ்க்கவிஞர்களின் கவிதைகளில் நகரம் கூறு பொருளாக அமைந்துள்ளதா என்று சிறிது சிந்தனையையோட்டியதன் விளைவுதான் இக்கட்டுரை. இதுவொரு விரிவான ஆய்வல்ல. எதிர்காலத்தில் மேலும் பல படைப்புகளை ஆராய்ந்து காலத்துக்குக்காலம் விரிவுபடுததப்படுத்தக்கூடியதொரு ஆரம்பக்கட்டுரையே.
சருகுகள் சரசரத்திருந்த தரையை நிர்மலமற்ற வெண்மையாக்குவேன் எனக் கங்கணம் கட்டிக்கொண்டதுபோலத் தொடர்ந்து பனி கொட்டிக்கொண்டிருந்தது.
கலைஞர்களே! நீங்கள் எழுத்தாளராகவிருக்கலாம். கலைக்குழுவாக இருக்கலாம். கலை அமைப்பாகவிருக்கலாம். கனடாக் கலைச் சபையில் இணைவதன் மூலம் அச்சபை வழங்கும் பல்வேறு நிதிகளைப்பெற முடியும்.

அவர் ஒரு கொடுங்கோலராக இருந்தார். சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தபடி எல்லாப் பிள்ளைகளையும் அந்தக் கோல் மூலமாகவே கட்டுப்பாட்டிலும், பயத்திலும் வைத்திருந்தார். உக்கு பண்டாரவுக்கு அந்த இயலாத உடம்பில் தொங்கிக்கொண்டிருந்த மெலிந்த கைகளினால் எவ்வாறு இலக்கு வைத்து ஓடிக்கொண்டிருக்கிறவர்ளை கோலினால் தாக்கமுடிகிறதென்ற ஒரு வினா எப்போதும் இருந்துகொண்டிருந்தது.
முன்னொரு காலத்தில் மாத – வார இதழ்களில்தான் சிறுகதைகள் வெளிவந்துகொண்டிருந்தன. முன்னொரு காலம் என்றால், பழந்தமிழ் இலக்கியம் அறிமுகமான அந்தக்காலம் அல்ல. குறிப்பிட்ட முன்னொரு காலத்தில் இலங்கையில் இலக்கியத்துறையில் மறுமலர்ச்சிக்கால இலக்கியம் , மண்வாசனை இலக்கியம், முற்போக்கு இலக்கியம், பிரதேச மொழி வழக்கு இலக்கியம், தலித் இலக்கியம், போர்க்கால இலக்கியம், இடப்பெயர்வு இலக்கியம் என்று சிலவகை இலக்கியப்படைப்புகளை இலங்கையில் மாத இதழ்கள் தாங்கி வெளிவந்தன. தமிழ்ப்பத்திரிகைகள் ஞாயிற்றுக்கிழமைகளில் வெளியிட்ட வார இதழ்களும் இலக்கியப்படைப்புகளுக்கு போதியளவு களம் வழங்கின. காலம் மாறியது. இலங்கையில் இனநெருக்கடி உச்சம் பெற்றதனால் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்தவர்கள் மத்தியிலிருந்த கலை, இலக்கியவாதிகள், புகலிடத்திலிருந்து இதழ்களை வெளியிட்டு வந்ததுடன் புகலிட இலக்கியத்தையும் பேசுபொருளாக்கினர். மாறிக்கொண்டிருப்பது காலம். சமகாலத்தில், முகநூலின் வருகையையடுத்து பலரும் அதிலும் எழுதி உடனுக்குடன் எதிர்வினைகளையும் வரவாக்கிக்கொள்கின்றனர். நவீன தொழில் நுட்பத்தின் தீவிர பாய்ச்சலினால், வரப்பிரசாதமான இணைய இதழ்களும், முகநூல்களும் இலக்கியம் பேசிவருகின்றன. எவரும் தத்தமக்கென வலைப்பூவை வைத்துக்கொண்டும் தங்கள் அன்றாட பதிவுகளை அதில் ஏற்றமுடிகிறது.
பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









