பாரதத்தாய் பெற்றெடுத்த மைந்தன்!
பார்போற்றும் கவி; அவன் தான் எங்கள் பாரதி!
அச்சமில்லை! அச்சமில்லை! என அச்சம் தவித்தவன்!
ஆண்மையின் அடையாளமாகத் திகழ்ந்து!
ஏறுபோல் நடந்து! கொடுமையை எதிர்த்து போராடி!
சரித்திரம் பல படைத்து!
சாவதற்கு அஞ்சாமல் சாத்திரம் கலைந்து!
பல சாக்கடைகளை அகற்றி!
சமூகப் புரட்சி செய்த சாதனையாளன்!
நெஞ்சில் உரம் கொண்டு! நேர்மை தவறாமல்!
நிமிர்ந்த நடையாய்! நேர்பட பேசி!
சொல்வதை உரக்கச் சொல்லி
பிறர் செய்யாதைத் துணிந்து செய்த
தரணியைத் தழைக்கச் செய்த
தன்நிகரில்லாத் தலைவன்!
புவிப்போற்ற புதியன படைத்து
தமிழ்மொழியைப் புகழேற்றிய புரட்சியாளன்!
போர்க்குணம் கொண்டு
ரெளத்திரம் பழகி
வீரியம் பெருக்கி
வெடிப்புறப் பேசி
விடியலை நோக்கி
வீரிடெழுந்த வித்தகன்!
சித்தனைப்போல் திரிந்த சித்தனுமில்லை!
பித்தனைப்போல் பிதற்றும் பித்தனுமில்லை!
தமிழுணர்வு கொண்ட பித்தனவன்!
சுட்டெரிக்கும் கண்கள்
கோபத்தின் கனல் திலகம்
வீரத்தின் அடையாளம் இவன் மீசை
மொழியின் மாமகுடம் மூண்டாசு!
மக்கள் மனதில் தேசபக்தியை விளைத்தவன்!
மனதில் உறுதி வேண்டும் என முழுக்கமிட்டவன்!
மானம் போற்றிய தன்மானக் கவிஞன்!
சாதி எனும் சாவுக்கு
சவுக்கடித் தந்தவன்!
சரிக்க விழுந்த மனிதனையும்
சரித்திரம் படைக்கச் சொன்னவன்!
வசனகவிதையை முதலில்
தமிழுக்குத் தந்தவன் நம் கவிஞன்
பாரதியே!
இந்தியப் பத்திரிகையில் கார்ட்டூணை அறிமுகம் செய்து
புலவனாய்! பத்திரிகையாளனாய்!
சுதந்திரப்போராட்ட வீரனாய்!
பன்முகத் தோற்றம் கொண்ட பாரதியைக் கொண்டாடும்போது
தமிழன்னையே கொண்டாடப்படுகின்றாள்!
மின்னஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
பாரதத்தாய் பெற்றெடுத்த மைந்தன்!
பார்போற்றும் கவி; அவன் தான் எங்கள் பாரதி!
அச்சமில்லை! அச்சமில்லை! என அச்சம் தவித்தவன்!
ஆண்மையின் அடையாளமாகத் திகழ்ந்து!
ஏறுபோல் நடந்து! கொடுமையை எதிர்த்து போராடி!
சரித்திரம் பல படைத்து!
சாவதற்கு அஞ்சாமல் சாத்திரம் கலைந்து!
பல சாக்கடைகளை அகற்றி!
சமூகப் புரட்சி செய்த சாதனையாளன்!
நெஞ்சில் உரம் கொண்டு! நேர்மை தவறாமல்!
நிமிர்ந்த நடையாய்! நேர்பட பேசி!
சொல்வதை உரக்கச் சொல்லி
பிறர் செய்யாதைத் துணிந்து செய்த
தரணியைத் தழைக்கச் செய்த
தன்நிகரில்லாத் தலைவன்!
புவிப்போற்ற புதியன படைத்து
தமிழ்மொழியைப் புகழேற்றிய புரட்சியாளன்!
போர்க்குணம் கொண்டு
ரெளத்திரம் பழகி
வீரியம் பெருக்கி
வெடிப்புறப் பேசி
விடியலை நோக்கி
வீரிடெழுந்த வித்தகன்!
சித்தனைப்போல் திரிந்த சித்தனுமில்லை!
பித்தனைப்போல் பிதற்றும் பித்தனுமில்லை!
தமிழுணர்வு கொண்ட பித்தனவன்!
சுட்டெரிக்கும் கண்கள்
கோபத்தின் கனல் திலகம்
வீரத்தின் அடையாளம் இவன் மீசை
மொழியின் மாமகுடம் மூண்டாசு!
மக்கள் மனதில் தேசபக்தியை விளைத்தவன்!
மனதில் உறுதி வேண்டும் என முழுக்கமிட்டவன்!
மானம் போற்றிய தன்மானக் கவிஞன்!
சாதி எனும் சாவுக்கு
சவுக்கடித் தந்தவன்!
சரிக்க விழுந்த மனிதனையும்
சரித்திரம் படைக்கச் சொன்னவன்!
வசனகவிதையை முதலில்
தமிழுக்குத் தந்தவன் நம் கவிஞன்
பாரதியே!
இந்தியப் பத்திரிகையில் கார்ட்டூணை அறிமுகம் செய்து
புலவனாய்! பத்திரிகையாளனாய்!
சுதந்திரப்போராட்ட வீரனாய்!
பன்முகத் தோற்றம் கொண்ட பாரதியைக் கொண்டாடும்போது
தமிழன்னையே கொண்டாடப்படுகின்றாள்!
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.