அகவை எண்பது காணும் சிந்தனைப்பூக்கள் எஸ். பத்மநாதன்! - குரு அரவிந்தன் -

'சிந்தனைப்பூக்கள்' பத்மநாதன் என்று தமிழ் இலக்கிய உலகில் அறியப்பட்ட உரையாளர், எழுத்தாளர் திரு. எஸ். பத்மநாதன் அவர்கள் இவ்வருடம் டிசெம்பர் மாதம் முத்து விழாக் கொண்டாடுகின்றார். இவர் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்தில் உள்ள உரும்பிராய் என்ற ஊரில் பிறந்தார். ஆரம்ப கல்வியை உரும்பிராய் சைவத் தமிழ் வித்தியாலயத்திலும், அதைத் தொடர்ந்து உரும்பிராய் இந்துக் கல்லூரி, ஸ்கந்தவரோதயா கல்லூரி, பேராதனை பல்கலைக் கழகம் ஆகியவற்றில் கல்வி கற்றார். பேராதனை பல்கலைக்கழகத்தில் புவியியல் சிறப்புப் பட்டமும், கொழும்பு பல்கலைக்கழகத்தில் கல்வி டிப்ளோமா பட்டமும் பெற்றவர். கனடாவில் ரொறன்ரோ வர்த்தகக் கல்லூரியில் 1993 ஆம் ஆண்டு ‘பிரயாணமும் உல்லாசப் பயணமும்’ என்னும் துறையில் டிப்ளோமா பட்டம் பெற்றுள்ளார்.
இலங்கையின் மலையகத்தில் உள்ள பதுளை, நுவரெலியா, பண்டாரவளை மாவட்டங்களில் சமூகக்கல்வி பாடசேவைக்கால ஆலோசகராகவும், பாடவிதான அபிவிருத்தி சபையில் நூலாக்கக் குழுவிலும், ஒஸ்மானியா கல்லூரியில் ஆசிரியராகவும், கோப்பாய் அரசினர் பயிற்சிக் கல்லூரியில் சமூகக் கல்வி விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் அறிவியல் அரங்கக் குழுவுடன் இணைந்து நிகழ்ச்சியை நடத்தியுள்ளார். இலங்கையில் இருந்து வெளிவரும் மல்லிகை, வீரகேசரி, தினபதி, ஈழநாடு, தினக்குரல் ஆகிய ஊடகங்களில் கல்வி, புவியியல் சம்பந்தமான கட்டுரைகள் எழுதியுள்ளார்.


Statement by the Prime Minister on the National Day of Remembrance and Action on Violence Against Women


சிவ ஆரூரன் சிறைக்குள்ளிருந்து இலக்கியம் படைத்தவர். தனது சிறைக்காலத்தை வாசிப்பு எழுத்து என மாற்றி நம்பிக்கையை விதைத்தவர். கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை என பல்துறைகளிலும் ஈடுபட்டு வருபவர். சமூக இயங்கியலை வெளிப்படுத்தும் பல நாவல்களைத் தந்தவர். சிறந்த நாவலுக்கான விருதுகளை மாகாண மட்டத்திலும் தேசிய மட்டத்திலும் பெற்றவர். ஜீவநதி வெளியீடாக 2022 இல் வெளிவந்த ‘ஊமை மோகம்’ என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டதாக இக்கட்டுரை அமைந்துள்ளது.


கடந்த ஜூலை மாதம் நடுப்பகுதியில் நான் இலங்கையில் நின்றபோது, கொழும்பில் பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு அவர்களைச் சந்தித்தேன்.



2023 ஆம் ஆண்டு, நவம்பர் 19 ஆம் தேதி, சர்வதேச ஆண்கள் தினமாகும் (International Men’s Day). இந்த அமைப்புடன் “
“வாழ நினைத்தால் வாழலாம். வழியா இல்லை பூமியில் “ என்ற பாடல் வரிகளை மறந்திருக்கமாட்டோம். வாழ்க்கை வாழ்வதற்குத்தான் என்ற தொனிப்பொருளில்தான் இந்த வரிகள் அமைந்துள்ளன. ஏமாற்றம், துரோகம், வறுமை, அவமானம், தோல்வி, மன அழுத்தம், விரக்தி, இழப்பு, தனிமை , குடும்ப வன்முறை முதலான காரணங்களினால், எமது சமூகத்தில் தற்கொலைகள் நிகழுகின்றன. அடிப்படைக் காரணத்தை அறிந்து, அதற்கேற்ப உரிய தீர்வை கண்டுபிடிக்காமல், பலரும் விபரீதமான முடிவுகளையே கண்டடைகின்றனர். உலக அரங்கிலும் பல புகழ்பெற்ற கலைஞர்கள், எழுத்தாளர்கள், நடிகர்கள், அரசியல்வாதிகள், விஞ்ஞானிகளும் கூட தற்கொலை செய்துகொண்டிருக்கின்றார்கள். அதற்கு நாம் அடல்ஃப் ஹிட்லர் முதல்கொண்டு பலரை உதாரணம் காண்பிக்க முடியும்.
கூடத்துள் பாய் விரித்துப் படுத்திருந்த அல்லிராணியின் ஜன்னலூடு பாய்ந்த பார்வையில் வௌி கருமை திணிந்து கிடந்தது தெரிந்தது. ஒரு வெள்ளிகூட வானில் பூத்ததாய்க் காணக்கிடக்கவில்லை. முதல்நாள் தன் வீட்டு முற்றத்திலிருந்து அவள் பார்க்க நேர்ந்த இரவு, அதன் பாதியளவும் இருண்மை கொண்டிருக்கவில்லை என்பது ஞாபகமாக அவளுக்கு அதிசயம் பிறந்தது. மாலையில்கூட பார்த்தாளே, அம் மாதிரி இருண்ட பாதிக் கோளமாகும் முன் அறிகுறியேதும் அப்போதும் கண்டிருக்கவில்லைத்தான்.


உலக இலக்கியங்களின் தொன்மையும், சிறப்பும் வாய்ந்த நூல்கள் என போற்றப்படுபவை கடைச்சங்க நூல்களே ஆகும். அவை பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என்பனவாகும். இப்பதிணென்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று நாலடியார் எனும் நூலாகும்.






மூன்று விதமான அறிமுகங்களாக என் பேச்சை ஆற்றலாம் என்றுள்ளேன். புத்தக வெளியீட்டின் அழைப்பிதழில் அறிமுகம் என்றாக சொல்லப்பட்டிருப்பதால் அறிமுகம் என்ற விடயத்திற்குள் அதிகம் எனது பேச்சைச் சுருக்க விரும்புகின்றேன். ஆனால் இதற்குள் சிறிய அளவில் புத்தகம் பற்றிய எனது பார்வையை எனது வாசிப்பின் அடிப்படையில் இணைக்கின்றேன். முதலில் அது என் அறிமுகம் , புத்தக ஆசிரியர் வந கிரிதரன் பற்றிய அறிமுகம் , இறுதியாக புத்தகம் பற்றிய அறிமுகமாக இருக்கும்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









