கோப்பாய்க் கோட்டை பற்றிச் சில குறிப்புகள்! - வ.ந.கிரிதரன் -
தலைமுறை தாண்டிய பயணம்: பத்மநாப ஐயர் - 80!
தமிழ்க் கலை இலக்கிய உலகில் பத்மநாப ஐயர் நன்கறியப்பட்ட ஒருவர். அவருக்கு ஆகஸ்ட் 24 அகவை 80. அதனையொட்டி 'வணக்கம் லண்டன்' நடத்திய 'தலைமுறை தாண்டிய பயணம்' மெய்நிகர் நிகழ்வில் கலை, இலக்கிய ஆளுமைகள் பலர் கலந்து தம் கருத்துகளைத் தெரிவித்தனர். இந்நிகழ்வில் உரையாற்றிய அனைவரும் பத்மநாப ஐயரின் இலக்கியப்பங்களிப்பைப் பல்வேறு கோணங்களில், அவருடனான தம் சொந்த அனுபவங்களின் அடிப்படையில் அணுகி ஆற்றிய உரைகள் பத்மநாப ஐயரின் பன்முகக் கலை, இலக்கியப் பங்களிப்பை அறிய உதவுகின்றன.
இதுவரை வெளியான வ.ந.கிரிதரனின் வெளியான நூல்கள் & மின்னூல்கள் (அமேசன் - கிண்டில் வெளியீடு)!
வ.ந.கிரிதரனின் வெளியான நூல்கள்:
1. அமெரிக்கா (நாவல் & சிறுகதைத்தொகுப்பு. ஸ்நேகா - மங்கை பதிப்பக வெளியீடு)
2. நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (ஆய்வு நூல். ஸ்நேகா பதிப்பக வெளியீடு)
3. மண்ணின் குரல் (நாவற் தொகுப்பு. குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடு)
4. குடிவரவாளன் (நாவல். ஓவியா பதிப்பக வெளியீடு)
5. அமெரிக்கா (நாவல். திருத்திய பதிப்பு. மகுடம் வெளியீடு)
6. எழுக அதி மானுடா (கவிதைத்தொகுப்பு. மங்கை பதிப்பக வெளியீடு)
7. மண்ணின் குரல் (நாவல், கட்டுரை & கவிதைத்தொகுப்பு. மங்கை பதிப்பக வெளியீடு)
வ.ந.கிரிதரனின் மின்னூல்கள் (அமேசன் - கிண்டில் வெளியீடு):
1. நவீன கட்டடக்கலைச் சிந்தனைகள் (கட்டுரைகள்)
2. வ.ந.கிரிதரனின் கட்டுரைகள் தொகுதி ஒன்று.
3. ஒரு நகரத்து மனிதனின் புலம்பல் (கவிதைத்தொகுப்பு)
4. அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள் (அறிவியற் கட்டுரைகள்: கதைகள் & கவிதைகள))
5. கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள் (புகலிட அனுபவச் சிறுகதைகள்)
6. நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாவது பதிப்பு)
7. கணங்களும் குணங்களும் (நாவல்)
8.மண்ணின் குரல் (நாவல். கனடாவில் வெளியான முதல் நாவல்)
9. அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் (நாவல்)
10. குடிவரவாளன் (நாவல்)
11. அமெரிக்கா (நாவல்)
12. An Immigrant (Novel - Translation by latha Ramakrishnan)
13. Nallur Rajadhani City Layout (Research Paper - Translation By Latha Ramakrishnan)
14. A messsage for Stallion Stealers! (A collection of poems. Five of them are translated by various writers and the rest are my own English poems)
15. America (English Translation by Latha Ramakrishan)
தமிழறிஞர் த. துரைசிங்கம் காலமானார்! - இளநிலா சுரேசானந்த் -
இலக்கிய வித்தகர், கலாபூசணம், ஓய்வுநிலைக் கல்விப் பணிப்பாளர் த. துரைசிங்கம் (84) திங்கட்கிழமை மாலை (23 - 08 - 2021) கொழும்பில் காலமானார். ஈழத்து இலக்கியப் பரப்பிலும், கல்விப் புலத்திலும் நன்கு அறியப்பட்ட புலமையாளர் த. துரைசிங்கம் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். ஆறு தசாப்தங்களுக்கு மேலாக, எழுத்துத் துறையில் ஈடுபாடு கொண்டு அமைதியாகச் செயற்பட்டு வந்தவர்.
சிறந்த எழுத்தாளர். கவிஞர். நூற்றுக்கு மேற்பட்ட நூல்களின் ஆசிரியர். இளம் வயதிலேயே பத்திரிகைச் செய்தியாளராகப் பணியாற்றத் தொடங்கியவர். ஆசிரியராக, அதிபராக, கோட்டக் கல்வி அலுவலராக, மாவட்டக் கல்விப் பணிப்பாளராகப் பணியாற்றிய பல்துறை அனுபவசாலி.
இவரது எழுத்துப் பணிக்குக் கிட்டிய அங்கீகாரமும் விருதுகளும் ஏராளம். சிறுவர் இலக்கியத் துறைக்கான தேசிய இலக்கிய (சாகித்திய) விருதினை நான்கு முறை பெற்ற பெருமைக்குரியவர். வடக்கு கிழக்கு மாகாணக் கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சு, இலங்கை இலக்கியப் பேரவை, யாழ் இலக்கிய வட்டம், கொழும்பு விவேகானந்த சபை, கலாசார அலுவல்கள் அமைச்சு, மட்டக்களப்பு எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் எனப் பலதரப்பட்ட அமைப்புகள் இவருக்கு விருதுகளை வழங்கிக் கௌரவித்துள்ளன. இலக்கிய வித்தகர், கலாபூசணம், தமிழியல் விருது முதலான பல்வேறு விருதுகளுக்குரித்தானவர். எழுத்துப் பணியில் இடைவிடாது உழைத்துக்கொண்டிருந்த தமிழறிஞர்.
இவரது சிறுவர் இலக்கிய நூல்கள், பல பதிப்புகள் வெளியாகி ஈழத்தில் விற்பனையில் சாதனை படைத்தவையாகும். பைந்தமிழ் வளர்த்த ஈழத்துப் பாவலர்கள், தமிழ் இலக்கியக் களஞ்சியம், ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாறு, ஈழத்துத் தமிழ் அறிஞர்கள், ஈழத்தில் சிறுவர் இலக்கியம் மற்றும் சிறுவர் இலக்கிய நூல்கள் குறிப்பிடத்தக்க, பாராட்டுப் பெற்ற நூல்களாகும். தமிழகத்திலும் இலக்கியவாதிகள், தமிழறிஞர்களின் பாராட்டுகளைப் பெற்றவர்.
'சென்டானியல் கொலிஜ்' (Centennial College) நினைவுகள்..... - வ.ந.கிரிதரன் -
எனக்கு வாசிப்பது, எழுதுவதைப்போல் இன்னுமொரு பிடித்த விடயமுமுண்டு. அது கற்றல். அவ்வப்போது 'டொராண்டோ'விலுள்ள தொழில் நுட்பக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் எனக்குப் பிடித்த துறைகளில் பாடங்கள் எடுப்பது வழக்கம். 'டொராண்டோப் பல்கலைக்கழகம்' , 'யோர்க் பல்கலைக்கழகம்', 'சென்டானியல் கொலிஜ்', 'செனகா கொலிஜ்' என்று பல கல்விக்கூடங்களில் அவ்வப்போது பாடங்கள் எடுத்திருக்கின்றேன். வானியற்பியல், உயர் கணிதம், இலத்திரனியற் பொறியியல், குடிசார் பொறியியல், தகவல் தொழில் நுட்பம் என்று பல் துறைகளில் படித்திருக்கின்றேன். வாழ்க்கையின் போராட்டங்கள் மட்டுமில்லையென்றால் வாழ்க்கை முழுவதும் படித்துக்கொண்டிருக்கவே விரும்புவேன்.
தொழில் நுட்பக் கல்லூரிகளைப் பொறுத்தவரையில் என் அபிமானக் கல்லூரி சென்டானியல் கொலிஜ்தான். இங்கு நான் எவ்வகைப் பாடங்களை எடுத்தாலும் அத்துறையில் உடனேயே வேலை கிடைத்து விடும்.
ஒரு மாத 'கணினி வரைபடஞர்' (CAD) பாடம் எடுத்தேன். உடனேயே 'கிங் சிட்டியில்' நில அளவையாளரின் நிறுவனத்தில் கணினி வரைபடஞராக வேலை கிடைத்தது. 'Soil Testing' எடுத்தேன். உடனடியாகவே மார்க்கம் நகரிலிருந்த பாகிஸ்தானியக் கனடியப் பொறியியலாளரின் நிறுவனத்தில் அத்துறையில் வேலை கிடைத்தது. இங்குதான் இலத்திரனியற் பொறியியற் தொழில் நுட்ப 'டிப்ளோமா'வும் படித்தேன். அதற்கும் படித்த உடனேயே அத்றையில் வேலை கிடைத்தது. தகவல் தொழில் நுட்பத்துறையில் எனக்கு ஆர்வம் ஏற்பட்டதற்குக் காரணம் இத்தொழில் நுட்பப்படிப்பே.
படித்தோம் சொல்கின்றோம் : மக்கத்துச்சால்வை மண்ணும் மக்களும் சௌந்தர்ய உபாசகரின் எளிமையான வாழ்வை பேசும் சிறப்பு மலர்! - முருகபூபதி -
பல வருடங்களுக்கு முன்னர் ஈழத்தின் மூத்த எழுத்தாளர் செ. கணேசலிங்கனின் மண்ணும் மக்களும் என்ற நாவல் வெளிவந்தது. அந்த நாவலை, அது அதிதீவிரவாதம் பேசுகிறது என்ற காரணத்தினால் தடைசெய்தார்கள். சில வருடங்களுக்கு முன்னர் ஈழத்தின் மற்றும் ஒரு இலக்கிய ஆளுமை எஸ். எல். எம். ஹனீபா எழுதிய மக்கத்துச்சால்வை என்ற கதைத்தொகுப்பு வெளியானது. ஹனீபாவின் எழுத்துக்களை பிடிக்காத சில அதிமேதைகள் அவரை கிறுக்கன் என்று வர்ணித்தனர். அதற்கு அவர், “ நான் கிறுக்கன் எண்டா, எதுக்கடா என்னுடைய எழுத்துக்களை படிக்காங்கள் … ? “ என்று எதிர்க்கேள்வி போட்டவர். மகாகவி பாரதியைக்கூட அவன் வாழ்ந்த காலத்தில் கிறுக்கன் என்றுதான் சிலர் அழைத்தார்கள். எங்கள் புகலிட நாட்டில் ஒரு கவிஞர் தனக்கு கிறுக்கு பாரதி என்றே புனைபெயரும் வைத்து, அதனையே தனது மின்னஞ்சல் முகவரியுமாக்கியிருக்கிறார். எனவே கிறுக்கு என்பது மோசமான சொல் அல்ல.
எஸ். எல். எம். ஹனீபா அவர்களின் வாழ்வையும் பணிகளையும் விரிவாகப் பதிவுசெய்யும் மக்கத்துச்சால்வை மண்ணும் மக்களும் சிறப்பு மலர், இந்த கொரோனோ காலத்திலும் எப்படியே விமானம் ஏறி, பசுபிக் சமுத்திரத்தையும் கடந்து, அவுஸ்திரேலியாவில் எனது வீட்டு வாசலை வந்தடைந்துவிட்டது. அனுப்பிவைத்த மலரின் தொகுப்பாளரான மக்கத்துச்சால்வை வாசகர் வட்டத்தின் தலைவர் எழுத்தாளர் ஓட்டமாவடி அறபாத் அவர்களுக்கும், மலர் கிடைத்த தகவலை தாமதமின்றி மின்னஞ்சல் வாயிலாக தெரிவித்துவிட்டேன். இதில் ஒரு ஒற்றுமையையும் என்னால் அவதானிக்க முடிந்தது.
ஹனீபாவையும் அறபாத்தையும் நான் முதல் முதலில் சந்தித்தது 2010 டிசம்பரில் கிழக்கிலங்கையில்தான். நான் எனது இலக்கிய நண்பர்களுடன் 2011 ஜனவரியில் இணைந்து கொழும்பில் நடத்திய சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டுக்கான தகவல் அமர்வு நிகழ்ச்சிகளுக்காக இவர்களது வாழ்விடங்களுக்கு சென்றவேளையில்தான் அந்த முதல் சந்திப்பு நிகழ்ந்தது.
அதன்பின்னர் அறபாத்தை சந்திக்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. எனினும் ஹனீபாவை கடந்த 2019 இல் கிளிநொச்சியில் நடந்த 49 ஆவது இலக்கிய சந்திப்பில் காணமுடிந்தது. அந்த இரண்டு நாட்களும் மறக்கமுடியாத தருணங்கள். எனது நினைவறையில் சேமித்து வைத்துள்ளேன். எம்மத்தியில் நன்கு அறியப்பட்ட சில எழுத்தாளர்கள், அவர்களது பூர்வீக ஊரின் பெயரால் அல்லது அவர்கள் எழுதிப்புகழ்பெற்ற புத்தகத்தின் பெயரால் பிரபல்யமாகியிருப்பர். ஒரு கூடைக்கொழுந்து எனச்சொன்னவுடன் எமக்கு மலையக மூத்த படைப்பாளி என். எஸ். எம். இராமையா நினைவுக்கு வருவாரே, அதேபோன்று மக்கத்துச்சால்வை என்றவுடன் ஹனீபாதான் நினைவுக்கு வருவார்.
சிறுகதை: மேய்ப்பர்கள்! - எஸ். அகஸ்தியர் -
[ எழுத்தாளர் எஸ்.அகஸ்தியர் அவர்களின் பிறந்த தினமான ஆகஸ்ட் 29 தினத்தினையொட்டி அவரது மகள் எழுத்தாளர் நவஜோதி யோகரடன்ம் 'மேய்ப்பர்கள்' என்னும் இச்சிறுகதையை அனுப்பியுள்ளார். இது பற்றி அவர் பதிவுகளுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் "எனது தந்தையின் பிறந்த தினம் ஆகஸ்ட் 29 ஆம் திகதி எதிர்நோக்குகிறது. (29.08.1926 – 08.12.1995) அவர் நினைவாக இக்கதையை அனுப்புவதில் மகிழ்வையும், நன்றியையும் உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். நன்றியோடு நவஜோதி நவஜோதி யோகரட்னம்" என்று குறிப்பிட்டுமுள்ளார். அவருக்கு எம் நன்றி. அகஸ்தியர் நினைவாக அவரது இச்சிறுகதையைப் பதிவுகள் பிரசுரிப்பதில் மகிழ்ச்சியடைகின்றது. -பதிவுகள் -]
“ஏ புள்ள காவேரி, அந்தாளு அந்தால வந்து இம்புட்டு நேரமாக் காத்துக்கிட்டிருக்கு. நீயி என்னா செஞ்சிக்கிட்டிருக்கே? எந்திரிச்சுப் போ புள்ள”
திகில் நாயகன் 'நைட்' ஷியாமளன்! - கிறிஸ்டி நல்லரெத்தினம் – மெல்பன் -
அன்றும் ஃபிலடெல்பியாவில் காலை சோம்பலுடன் விடிந்தது. அவன் கண்களைக் கசக்கிக்கொண்டு ஒரு சூடான காப்பியை ஊற்றி உறிஞ்சியவாறு ஹாலில் வந்து அமர்ந்தான். என்னதான் செய்வதாம்? டிவியை உயிர்ப்பித்து சனல் வேட்டையை ஆரம்பிக்க வேண்டியதுதான். அப்போது.....தன்பின்னால் மாடிப்படிகளில் ஏதோ கிசு கிசு சப்தங்களும் மகிழ்ச்சி சிணுங்கல்களும்.... என்னவாய் இருக்கும் என ஊகிக்கும் முன்னே மலரிலும் மென்மையான இரு கரங்கள் அவன் கண்களை பொத்திற்று. மற்றும் இரு சோடிக்கரங்கள் அவனின் தோள்களில் பரிவுடன் இறங்கி இறுகிற்று. இந்த குட்டிக் குறும்பில் அவன் திழைத்தான்.
"ஹப்பி ஃபாதேஸ் டே டாட்!"
அந்த அன்புக்கூக்குரலுக்கு சொந்தமான மூன்று பதிவயது பெண்களின் அன்பில் மூழ்கினான் அவன். ஒவ்வொருவராக தம் அன்புத் தந்தையை ஆரத்தழுவி கன்னங்களை நனைத்தனர். கடைக்குட்டி கையில் இருந்த 'தந்தை நாள்' பரிசு கைமாறி அவன் கைக்கு ஊர்ந்தது.
"ப்ளீஸ்.... ஓபிண் இட் டாட்!'
அவர்கள் மூவரினதும் அன்புக் கட்டளைக்கு அடிபணிந்து மெதுவாய் அந்த பார்சலை கட்டியிருந்த இளநீல பட்டியை அவிழ்த்து பிரிக்கிறான். அவனுக்கு பிடித்த நான்கு புத்தகங்கள் புது மணத்துடன் அவனை வரவேற்கின்றன. அத்தனையும் கிராஃபிக் நாவல் எனும் வகுப்புக்குள் அடங்கும் பெரியோர் காமிக்ஸ். கனிவுடன் தன் செல்வங்களைப் பார்க்கிறான். பார்வை ஆயிரம் கோடி நன்றி என சொல்லாமல் சொல்லிற்று. நம் நாயகன் வேறு யாருமல்ல. ஹாலிவுட் கனவுலகையே தன் 'த சிக்ஸ்த் சென்ஸ்' The Sixth Sense படத்தின் மூலம் திரும்பிப்பார்க்க வைத்த திகில் மன்னன் நைட் ஷியாமளன்தான்!
காலத்தால் அழியாத கானங்கள்: 'உன்னைத்தான் நான் அறிவேன்' - ஊர்க்குருவி -
பாடகி பி.சுசீலாவின் சிறந்த பாடல்களிலொன்று இந்தப்பாடல். வரிகளை உணர்வு பூர்வமாகப் பாடியிருப்பார். கவிஞர் கண்ணதாசன் தன் மொழியாற்றல் காரணமாக, மனத்தை மயக்கும் எளிய , இனிய சொற்களைக்கொண்டு சிறப்பான பாடல்களைத் தருவதில் வல்லவர். இப்பாடலும் அத்தகையதொன்று.
ஜெமினியின் 'வாழ்க்கைப்படகு' படப்பாடல்கள் அனைத்துமே இனியவை; சிறந்தவை. அவற்றிலிதுவுமொன்று. நடிகை தேவிகாவியின் இவ்விதமான நடனப்பாடல்கள் அதிகமில்லை. அவள் அவன் மீதான காதலைச்சொல்வதுடன், காதலின் சிறப்பையும் எடுத்துரைக்கின்றாள். அவன் மீதான காதலை வெளிப்படுத்துகையில் தேவிகாவின் அவன் மீதான காதல் உணர்வுகளை வெளிப்படுத்தும் முகபாவங்கள் அற்புதம். இப்பாடலில் தேவிகாவின் நடன அசைவுகளும் உள்ளங்கவர்பவை.
படம்: வாழ்க்கைப்படகு
பாடியவர்: பி.சுசீலா
வரிகள்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ்.வி - ராமமூர்த்தி
https://www.youtube.com/watch?v=LQ-8LoS5zJ0
எதிர்வரும் ஞாயிறு நிகழ்வு: Zoom வழியாக , சி. மெளனகுருவின் இரு நூல்கள்- அறிமுகமும் கலந்துரையாடலும்! - எம்.பெளசர் -
முருகபூபதியின் கதைத்தொகுப்பின் கதை ! சிறுகதைத் தொகுப்பில் பெண்கள் ! ஒரு கண்ணோட்டம்! - சி.ரஞ்சிதா -
எழுத்தாளர் முருகபூபதி அவர்களுக்கு அறிமுக பாமாலை அவசியமற்றது. எழுத்துலகம் நன்கு அறிந்த ஒரு படைப்பாளி. புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியாவில் வாழும் இவர் இன்றுவரை எழுத்து துறைக்குள் பயணித்துக்கொண்டு தொடர்ந்து இலக்கியப் பணி ஆற்றிவருகின்றமை மகிழ்ச்சியளிக்கிறது. அவரால் இந்த ( 2021) ஆண்டு படைக்கப்பட்ட கதைத்தொகுப்பின் கதை என்னும் சிறுகதைத்தொகுதி அண்மையில் ஜீவநதி வெளியீடாக வெளிவந்துள்ளது. 15 சிறுகதைகளைக் கொண்ட இத்தொகுப்பில் இடம்பெறும் “அம்மம்மாவின் காதல்”, “அவள் அப்படிதான்”, “ஏலம்”, “கணங்கள்”, “நேர்காணல்” ஆகிய ஐந்து சிறுகதைகளிலும் பரந்து விரிந்து இடம்பிடித்துநிற்கும் பெண்கள் தொடர்பான பிரச்சினைகளை அலசி ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.
பெண்கள் தொடர்பான சமூகப் பார்வை, அவர்கள் மீதான கரிசனை – மேலைநாட்டார் வருகையோடு தமிழ்ச்சூழலுக்குள் வேரூன்றியது. பெண் கல்வி, பெண்களுக்கு தொழில், வாக்குரிமை என அவர்களது சமூக அந்தஸ்து உயரவே மேலைநாட்டுப் பெண்ணியச் சிந்தனைகளும் வலுப்பெற ஆரம்பித்தன. அரசியல், பொருளாதாரம், கலை, கலாசாரம் - பெண்களுக்கான அங்கீகாரத்தை வழங்கவே இலக்கியங்கள் வாயிலாகவும் பெண்ணியம் பல எழுத்தாளர்களால் பேசப்பட்டன. பெண்களின் பிரச்சினைகளைப் பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் தமது படைப்பிலக்கியங்களில் ஆழமாக பேசியுள்ளனர். முற்போக்குச் சிந்தனையுடைய பல பெண்ணிய படைப்புக்களை தமிழ்ச்சூழலில் இன்றுவரை நாம் தரிசித்துக்கொண்டுதான் இருக்கிறோம்.
கவிதை: காலச்சுழல்! - துவாரகன் -
முன்னோர்
புண்ணியத்தை அறுவடை செய்யக்
கற்றுத் தந்தனர்.
நேர்மையைக் கற்றுத் தந்தனர்.
நாங்களோ,
பாவத்தை அறுவடை
செய்து கொண்டிருக்கிறோம்.
'நடு' இணைய இதழ்: கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலனுடனான நேர்காணல்!
கலை, இலக்கியத்தின் பல்வகை வடிவங்களிலும் பங்களித்து வருபவரும் கவிஞரும், சமூக அரசியற் செயற்பாட்டாளருமான வ.ஐ.ச.ஜெயபாலனுடனான நேர்காணலொன்று 'நடு' இணைய இதழில் வெளியாகியுள்ளது. 'நடு; இணையை இதழின் ஆசிரியரான கோமகன், ஏப்ரில் 2019இல் நடத்திய நேர்காணலிது.
நேர்காணலுக்கான இணைப்பு: https://naduweb.com/?p=17475
இந்நேர்காணலில் ஜெயபாலன் கவிதை, ஈழத்தமிழர்களின் அரசியல், புகலிடத்தமிழர்களின் அரசியல், தனது அரசியல் அனுபவங்கள், தனது ஆரம்ப கால வாழ்பனுவங்கள், அவரது சினிமா அனுபவங்கள் எனப் பல்வகை அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார்.
இவர் என்றுமே மதில் மேல் பூனையாக இருந்ததில்லை. தான் நம்பியதை, நம்புவதை எப்பொழுதும் எவ்விதத்தயக்கமும் இல்லாமல் எடுத்துரைக்க, இடித்துரைக்கத் தவறுவதில்லை. அது இவர் மீதான என் அபிமானத்துக்கு முக்கிய காரணங்களிலொன்று.
ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் இணைய வழிக் கலந்துரையாடல்: ‘தமிழரின் காப்பிய அழகியல் ’ - இளங்கோ , கம்பன் ஆகியோரை மையப்படுத்திய பார்வை! பேசுபவர்: பேராசிரியர் நா. சுப்பிரமணியன்!
ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் இணைய வழிக் கலந்துரையாடல்: ‘தமிழரின் காப்பிய அழகியல் ’ - இளங்கோ , கம்பன் ஆகியோரை மையப்படுத்திய பார்வை! பேசுபவர்: பேராசிரியர் நா. சுப்பிரமணியன்!
இலங்கை மாணவர் கல்வி நிதியம் – அவுஸ்திரேலியா ( 1988 – 2021 )! மலையகத்தில் கொவிட் நெருக்கடி காலத்தில் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் பணிகள்! - முருகபூபதி -
அவுஸ்திரேலியாவிலிருந்து கடந்த 33 வருடகாலமாக இயங்கிவரும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் ( 1988 – 2021 ) ஏற்பாட்டில் கடந்த 2019 ஆம் ஆண்டு இலங்கை மலையகத்தில் நுவரேலியா மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட வறுமைக்கோட்டில் வாழும் ஏழைத்தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவும் நிதிக்கொடுப்பனவு இவ்வாண்டும் அண்மையில் வழங்கப்பட்டது.
கடந்த காலங்களில் இலங்கையில் வடக்கு – கிழக்கில் நீடித்த போர் அநர்த்தங்களினால் பெற்றோரை, குடும்பத்தின் மூல உழைப்பாளிகளை இழந்த ஏழைத்தமிழ் மாணவர்களுக்கு உதவிய இலங்கை மாணவர் கல்வி நிதியம், மலையகத்தில் முன்னைய மண்சரிவு முதலான அநர்த்தங்களினாலும் தந்தையை இழந்தும் பாதிக்கப்பட்ட வறுமைக்கோட்டில் வாழும் மாணவர்களுக்கும் தற்போது உதவி வருகிறது. நுவரேலியா மாவட்டத்தில் நானுஓயா நாவலர் கல்லூரி, டெஸ்ஃபோர்ட் தமிழ் மகா வித்தியாலயம், கந்தப்பளை மெதடிஸ்ட் கல்லூரி மற்றும் மகளிர் பாடசாலை (Our Lady’ School ) , ஆரம்ப பாடசாலை முதலானவற்றைச் சேர்ந்த மாணவர்கள் இத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றனர்.
சிறுகதை: ஒரு வாய் சோறு! - இணுவையூர் சக்திதாசன், டென்மார்க் -
அவன் கன்னங்கள் இரண்டிலும் வழிந்த கண்ணீர் உதட்டில் விழுந்து உப்பு கரித்த போதுதான் அது கண்ணீர் என்பதை, உணர்ந்தான் ஏகாம்பரம்.
அவன் நினைவுகள் உணர்வுகளற்று உதிரியாக ஆங்காங்கே திட்டுதிட்டாய் நிற்கும், மேகக்கூட்டங்கள் போல திசைமாறி நின்ற இடத்தில் நின்றன. அப்பப்ப உணர்ச்சிகள் உரசப்படும்போது. மேகம் கறுத்து மழை பொழிவதுபோலத்தான் அவன் கண்களும் .
வாழ்வின் நீள அகலங்களை அளந்தவன் ஏகாம்பரம். ஆனாலும், எதிலும் மனம் ஒட்டிக் கொள்ளாமல் வாழை இலையில் விழும் தண்ணீரைப் போல எந்த சந்தோசத்தையும் ஏற்க மறந்தவனாய் விரக்தியின் விளிம்பில் நின்று வாழ்வைக் கடந்து கொண்டிருந்தான்.
வேளாவேளைக்குசாப்பாடு, நேரம்தவறாமல் தண்ணிவண்ணி , கூல்றிங்க்ஸ்.. சாப்பாட்டுக்குப் பிறகு, நொட்டு நொறுக்குகள், பழங்களென ... எந்தக் குறையுமில்லாத வாழ்வுதான் ஏகாம்பரத்தினுடையது.
இதை விட பணிவிடை செய்ய பணியாட்கள் .. வெளியேசென்றுவர வாகன வசதிகள் என, எல்லாம் இருந்தும் எதுவுமில்லாத உணர்வுடன் தான் ஏகாம்பரத்தின் வாழ்வு கரைந்து கொண்டிருந்தது.
எப்பவும், முப்பது நாற்பது பேர் அவனைச் சுற்றியிருந்தாலும், யாருடனும் அனாவசியமாகப்பேச விரும்பமில்லாமல். புன்னகை ஒன்றை மட்டும் வீசிவிட்டு, கடந்து சென்று விடுவான். அவனுக்கென்று இருக்கின்ற பிரத்தியேக அறையில் தானும் தன்பாடுமாய் தனிமையில் இருப்பதையே அவன் விரும்புவான்.
குறு நாடகம்: ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை. - வ.ந.கிரிதரன் -
தாயகம் (கனடா) பத்திரிகையில் வெளியான எனது சிறுகதை 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை! பின்னர் அச்சிறுகதை இந்தியாவில் மித்ர பதிப்பக வெளியீடாக வெளிவந்த 'பனியும் பனையும்' புலம்பெயர் தமிழர் சிறுகதைத் தொகுப்பிலும் இடம் பெற்றிருந்தது. பின்னர் திண்ணை, பதிவுகள் ஆகிய இணைய இதழ்களிலும் வெளியானது. அச்சிறுகதையை குறுநாடகமாக்கியுள்ளேன். அதனையே இங்கு நீங்கள் காண்கின்றீர்கள். - வ.ந.கி
[ தமிழ்க் கனேடியனான , 'டொரோண்டோ'வில் வசிக்கும் பொன்னையா வாகனத்தில் பஞ்சாப்காரனின் கராஜ் நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றான். அது ஒரு ஞாயிற்றுக்காலை. ]
பொன்னையா (தனக்குள்): வரவர நகரம் பெருக்கத்தொடங்கிட்டுது. முன்பென்றால் ஞாயிறு விடுமுறை நாள். கடைகளைத் திறக்க மாட்டான்கள். இப்ப நிலை மாறிட்டுது. ஞாயிறும் கடைகளைத் திறக்கிறான்கள். 'ட்ரஃபிக்'கும் அதிகமாயிட்டுது. பஞ்சாப்காரன் திட்டப்போகின்றான்."
மலைபடு கடாமில் பண்பாட்டுப் பதிவுகள் - ராஜகுமாரி. ஈ, முனைவர் பட்ட ஆய்வாளர் -
முன்னுரை
பதினெண் மேற்கணக்குநூல்களில் இடம் பெற்ற பத்துப்பாட்டில், பத்தாவதாய் இடம்பெற்ற நூல் மலைபடுகடாம் ஆகும். இரணிய முட்டத்துப்பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார், கல்குன்றக் கோட்டத்துச் செங்கண் மாத்சூவன் நன்னன் சேய் நன்னனைப் பாடிய ஆற்றுப்படைநூலாகும். கூத்தரை ஆற்றுப்படுத்திப் பாடியதால் இந்நூல் கூத்தராற்றுப்படை எனவும் பெயர் பெறும்.
மலைபடுகடாம்
இலக்கியங்கள், அவை தோன்றிய காலத்திய மக்களின் வாழ்வியல், கலாச்சாரம், மொழி, பண்பாடு போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டதாகக் காணப்படுகின்றன. அந்தவகையில் 583 அடிகளைக் கொண்ட இந்நூல் அக்காலத்திய மக்களின் வாழ்க்கைமுறை, மன்னன் ஆட்சி, இயற்கை வளம் போன்றவற்றை அழகுற எடுத்துரைக்கிறது. காட்டில் கேட்கின்ற பலவகையான குரல்களும் ஒருங்கிணைந்து மலையில் மோதி எழும்புகின்ற முழக்கத்தை 56 அடிகளில் தொகுத்துக் கூறிமலையாகிய யானையின் பிளிறல் எனும் பொருள்படும் படி மலைபடுகடாம் என புதுமைப் பெயர் பெற்று இசைச் செறிவோடு, பண்பாடும் காட்டி நிற்கின்றது.
பண்பாடு
பண்பாடு என்றால் ஓர் இனத்தாரின் கொள்கைகள், கோட்பாடுகள், நோக்கங்கள், இலட்சியங்கள், வாழ்க்கைமுறைகள், பழக்கவழக்கங்கள், சமூகச்சட்டங்கள், சமயங்கள், வழிபாட்டுமுறைகள், களவொழுக்கம், கற்பொழுக்கம், அகத்திணை, புறத்திணை மரபுகள், இலக்கிய மரபுகள், அரசியல் அமைப்புகள், ஆடை, அணிகலன்கள், திருவிழா, உணவு, பொழுதுபோக்கு போன்றவற்றைக் குறிக்கும்.
Culture என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்சொல்லே பண்பாடு ஆகும். “மனிதன் தன்னுடைய தேவைகளையும், விருப்பங்களையும் நிறைவேற்றிக் கொள்ள உருவாக்கிய கருவியே பண்பாடு”என சி.சி. நார்த் குறிப்பிட்டுள்ளார். பண்பாடு என்றால் ஒரு குழுவின் வரலாறு, மொழி, பண்புகள், சமய நம்பிக்கைகள், தொழில்கள் போன்றவற்றை, அடுத்தடுத்து வரும் மற்ற மக்களுக்குக் காட்டும் அளவு கோலாகும். காட்டு மிராண்டியாய் சுற்றித்திரிந்த மனிதன் பல்வேறு கட்ட பண்பட்ட, பண்பாட்டு வளர்ச்சியினால் தனக்கென பல அடையாளங்களைப் பதித்துச் சென்றான். மனிதனின் பரிணாம வளர்ச்சியின் படிக்கட்டுகளாய் பண்பாடு பயணித்து வருகிறது.
தொடர் நாவல்: ஒரு கல் கரைந்தபோது! - ஸ்ரீராம் விக்னேஷ் (நெல்லை வீரவநல்லூர்) -
( 5 )
அதிர்ச்சி…. ஆச்சரியம்…. குழப்பம்….. சந்தேகம்….. எல்லாமே என்னிடம் சமத்துவம் புரிந்தன.
நல்லவேளை…. மயக்கம் மட்டும் வரவில்லை. ஒருவாறு என்னைச் சுதாகரித்துக் கொண்டேன்.
“என்னக்கா சொல்றே…. நான் மனசு வெக்கணுமா….. அப்பிடீன்னா, ஏற்கனவே அறுத்துப் பொதைச்ச காலை, தோண்டி எடுத்துவந்து ஒட்டவெக்கப் போறீங்களா…..”
இலேசான கிண்டல்.
அக்காள் முகத்திலே இலேசான சிரிப்பு.
“உனக்கு எப்பவுமே இந்தக் கிண்டல் விட்டுப் போகாதில்ல…. ஒறிஜினல் காலுமாதிரியே பிளாஸ்டிக் கால் மாட்டி நடக்கலாமுன்னு நீ கேள்விப்பட்டதே இல்லியா….”
இப்போதுதான் எனக்கொரு சம்பவம் நினைவிற்கு வருகிறது. படிக்கின்ற காலத்தில் என்னோடு படித்த மாணவி ஒருத்திக்கு இதுபோன்ற நிலை ஏற்பட்டதும், பின்பு அவள் பிளாஸ்டிக் கால் மாட்டி பழையபடி நடமாடியதும், சமீபத்தில் திருமணமாகி கணவன், குழந்தையென மகிழ்ச்சியாக வாழ்வதும் ………
அப்படியானால்……,
உண்மையிலே அக்காளும், அதுபோல் எனக்குப் பிளாஸ்டிக் கால் போட முயற்சிக்கின்றாளா…..!
இனிமேல் நானும் மற்றவர்களோடு சேர்ந்து நடமாட முடியும்…. வண்டி ஓட்ட முடியும்…. எனது தோழிகளைச் சந்திக்க முடியும்…. சினிமா, நாடகம், திருவிழா, கொண்டாட்டங்கள் என்று கலகலப்புக்களைக் காண முடியும். நாளை எனக்கும் திருமணம் நடக்கும்….
காமிக்ஸ் பிறந்த கதை! சூப்பர் மேனுக்கு ஏழு வகை நாணயங்களை வெளியிட்ட தேசம் ! - கிறிஸ்டி நல்லரெத்தினம் – மெல்பன் -
"இராமனுக்கும் இராவணனுக்கும் நடந்த போரில் அடிபட்டு மூர்ச்சையான இலக்குவன் மற்றும் வானர வீரர்களைக் காப்பாற்ற வாயு புத்திரர் அனுமன் இமயத்திலிருந்து பெயர்த்துத் தூக்கிவந்த அரிய மூலிகைகளைக்கொண்ட சிறிய மலையை இலங்கைக்கு வான் மார்க்கமாக எடுத்துச் சென்றார்......"
என்ன, காமிக்ஸைப்பற்றி எழுத வந்து இராமாயண கதா கலாட்சேபம் செய்கிறேன் என்ற குழப்பமோ?
காமிக்ஸ் எனும் வரைகதை என்றதும் நினைவில் வருவது மீனாயகர் எனும் சூப்பர்ஹிரோக்கள்தான் என்பது உண்மை. எமது இதிகாசக் கதைகளில் அனுமான் போன்ற மீனாயகர்கள் கொட்டிக் கிடந்தாலும் நவீன காமிக்ஸ்களின் ரிஷிமூலம் தேடுவது அத்தனை இலகுவானதல்ல.
எகிப்திய பிரமிட்களில் தொடங்கி கற்குகை சுவரோவியங்கள் உட்பட பல ஆதி நாகரிகங்களில் ஒரு சம்பவக் கோர்வையை புரிய வைக்க மனிதன் தொடர் ஓவியங்களை (sequential art) ஒரு கருவியாகப் பாவித்தான். மொழி விருத்தியடையாத காலத்தில் இந்த ஓவியங்களே பேசும் படங்களாய் கதைகளை பல காலங்கள் கடந்தும் மக்களுக்கு சொல்லிற்று. மொழி கடந்த ஓவியக்கலையும் சிற்பக்கலையும் என்றும் பார்ப்பவர் மனதில் பசுமையாய் பதிந்து மன்னர்கள் சரித்திரங்களை ஆட்சிகள் கடந்தும் அறிவித்தது.
இந்தியாவின் அஜந்தா, எல்லோரா குகை ஓவியங்கள் புத்தரின் வாழ்க்கை துளிகளையும் ராஜஸ்தானின் காவட் (Kaavad) ஓவியக்கலை இராமாயண மகாபாரத கதைகளை தொடர் ஓவியங்களாய் மக்கள் மத்தியில் பரப்பிற்று. காவட் கதை சொல்லிகளின் காலம் இப்போது மலையேறிப்போய்விட்டது எனலாம்.
நம் ஊர் கோயில்களிலும் இவ்வகை தொடர் ஓவியங்கள் கொட்டிக் கிடக்கின்றன. சித்தன வாசல் , தாராசுரம், கீழப்பமூர் கோவில் ஓவியங்களும் மகாபல்லிபுர மகிசாசுர மர்த்தினி அகர வதை சிற்பங்களும் சில உதாரணங்கள்.
கடந்த காலம், எதிர்காலத்தைத் திருட விடலாமா? - ஸ்ரீரஞ்சனி -
பொருள் ஒன்றின் பயன்பாடு அல்லது பழக்கப்பட்டுப்போன நடத்தை ஒன்று எங்களுக்குத் தீங்கு விளைவிக்கின்றது என்பது தெரிந்தாலும்கூட, அந்தப் பொருளைப் பயன்படுத்துவதை அல்லது குறித்த நடத்தையில் ஈடுபடுவதை எங்களால் நிறுத்தமுடியாமல் இருக்கிறதெனில், அந்தப் பொருள்/நடத்தை எங்களைக் கட்டுப்படுத்துகிறது எனலாம், இல்லையா? இதுவே அடிமையாதல் (addiction) எனப்படுகின்றது.
இவ்வகையான அடிமையாதல் நிலை ஒருவரிடம் காணப்படும்போது, அது அவரின் தெரிவு என்றோ அல்லது அது அவரின் ஒழுக்கப் பிரச்சினை என்றோதான் நாங்கள் பொதுவாகக் கருதுகிறோம். அப்படி அடிமையாவதால், அவருக்கோ அல்லது அவரின் குடும்பத்தவருக்கோ பிரச்சினைகள் ஏற்படும்போது, ‘குறித்த பொருளின் பாவனையை/நடத்தையை நிறுத்த வேண்டியதுதானே,’ என நாங்கள் சுலபமாகக் கூறிவிடுகிறோம். அதேபோல, அந்தப் பழக்கத்தை நிறுத்தமுடியாமல் அல்லல்படுபவர்கள் மேல் கோபப்படுகின்றோம். ஆனால், உண்மை என்னவென்றால் அப்படி நிறுத்திவிடுவது என்பது ஒரு இலேசான விடயமில்லை என்கிறார், NIH’s National Institute on Alcohol Abuse & Alcoholism என்ற அமைப்பின் தலைவரான Dr. George Koob.
இந்த யதார்த்தத்தை எனது மொழிபெயர்ப்பாளர் வேலை ஊடாக நானும் விளங்கிக்கொண்டேன். என் தொழிலின்போது நான் இதுவரை சந்தித்திருந்த மனிதர்களின் அனுபவங்களும், அவர்களுக்கான சிகிச்சைகளின்போது நான் கற்றுக்கொண்டவைகளும் என் கருத்துக்களை மாற்றிக்கொள்வதற்கு மிகவும் உதவியிருக்கின்றன. அவ்வாறாக நான் கற்றுக்கொண்டவற்றை பொதுவெளியில் பகிர்ந்துகொள்வது சிலருக்காவது பயனளிக்கக்கூடும் என நினைத்தேன். அதற்கான சந்தர்ப்பத்தை கனடா உதயன் பத்திரிகையின் வெள்ளி விழா மலரில் வழங்கியிருக்கும் உதயன் ஆசிரியருக்கு முதலில் என் மனமார்ந்த நன்றி.
தொடர் நாவல்: கலிங்கு (2009 -4) - தேவகாந்தன் -
4
“நேத்தே வருவியளெண்டு பாத்துக்கொண்டு இருந்தம்.” என தயாநிதி சொன்னதற்கு தனபாலன் சலிப்போடு சொன்னான்: “நேற்றே வெளிக்கிட்டிட்டன். வரேலாமப்போச்சு. ஒரு பக்கம் சன நெரிசல். சாமான் ஏத்தின மாட்டு வண்டிலுகள் ஒரு பக்கம். ட்ராக்ரர் லாண்ட் றோவருகள் இன்னொரு பக்கம். காருகள் வானுகளெண்டு அதுகள் வேற. வன்னியில உவ்வளவு வாகனங்கள் நிக்கிறது நேற்று ராத்திரித்தான் தெரிஞ்சுது எனக்கு. அதுக்குள்ள பாதையெல்லாம் வெள்ளமும் சேறுமாய்க் கிடக்கு. பிரமந்தனாறு மேவிப் பாயுது ஒரு பக்கத்தால. அதுக்குள்ள மாட்டுப்பட்டு அரக்க ஏலாமல் நிண்டுகொண்டிருக்கு வாகனமெல்லாம். கண்டாவளை, தறுமபுரம், விசுவமடு எங்கயும் வெள்ளம்தான். வெள்ளம் வீடுகளுக்குள்ள ஏறி நிக்குது. இப்ப வந்ததே கடவுள் புண்ணியத்திலதான்.”
“சரியான நேரத்திலதான், தம்பி, வந்தியள். இல்லாட்டி இந்தக் குஞ்சுகளையும் வைச்சுக்கொண்டு என்ன செய்யிறது, எங்க ஓடுறதெண்டு தெரியாம ரா முழுக்க தலை விறைச்சுப்போயிருந்தன்” என்றாள் நாகி.
“அப்பிடி நீங்கள் செய்ததுதான் நல்லம், அன்ரி. வெளிக்கிட்டிருந்தியளெண்டா இந்தச் சனத்துக்குள்ள லேசில தேடிக் கண்டுபிடிச்சிடேலாது.”
வாகனம் மெதுவாக முன்னேறிக்கொண்டிருந்தது.
வண்டில்களும், ட்ராக்ரர்களும், லாண்ட் றோவர்களும் சாமான்களோடு ஊர்ந்து செல்ல, வீட்டுக்குரியவர்களும் அவர்களது குழந்தைகளும் பின்னால் சென்றுகொண்டிருந்தனர். சைக்கிளில் சாமான்களைக் கட்டி சிறுகுழந்தைகளையும் அதில் ஏற்றிக்கொண்டு தள்ளியபடி செல்லும் கணவர்களைப் பின்தொர்ந்து மனைவிகளும் மற்றும் உறவினர்களும். பைகளை தோளில் கொளுவிக்கொண்டு, மூட்டைகளை தலையில் சுமந்தபடி நடந்துகொண்டிருந்தார்கள் பலர். அந்த நெரிசலுள் கார்களும், வான்களும் உள் நுழைய முயன்று உறுமிக்கொண்டு இருந்தன. அவை எரிந்து கக்கிய மண்ணெண்ணெய்ப் புகை காற்றிலெங்கும் கனத்திருந்தது.
அஞ்சலி: மாத்தளை கார்த்திகேசு விடை பெற்றார்! மலையக மக்களின் ஆத்மாவின் குரல் ஓய்ந்தது ! - முருகபூபதி -
நேற்றைய தினம் ( 06 ஆம் திகதி ) எமது அவுஸ்திரேலியா நேரம் இரவு 7-00 மணியளவில் லண்டனிலிருந்து தொடர்புகொண்ட இலக்கியவாதிகள் பத்மநாப அய்யர், மு. நித்தியானந்தன் ஆகியோருடன் ஓரிணைப்பில் பேசிக்கொண்டிருந்தேன். ஏ.ஜே. கனகரட்ணா பற்றிய எனது ஒரு கட்டுரை தொடர்பாக ஒரு முக்கிய செய்தியை ஊர்ஜிதப்படுத்துவதற்காக அந்த தொலைபேசித் தொடர்பை இணைத்தவர் பத்மநாப அய்யர். எமது உரையாடலில் எழுத்தாளரும் நாடக – திரைப்படக்கலைஞரும் கொழும்பு தமிழ்க்கதைஞர் வட்டத்தின் தலைவர் மற்றும் முக்கிய பொறுப்புகளில் இருந்தவருமான எமது நீண்டகால இனிய நண்பர் மாத்தளை கார்த்திகேசு பற்றியும் பேசிக்கொண்டிருந்தோம். இந்த மாதம் ஞானம் இதழின் முகப்பினை அலங்கரித்தவர் மாத்தளை கார்த்திகேசு. குறிப்பிட்ட அட்டைப்பட அதிதி கட்டுரையை மு. நித்தியானந்தன் விரிவாக எழுதியிருந்தார். மாத்தளையின் ஜீவநதி என்ற அக்கட்டுரை , நன்றாக வந்துள்ளது. அதனை மேலும் பரவலான வாசிப்புக்கு பகிர்ந்துகொள்ளவேண்டும். அதன் மூலப்பிரதியை எனக்கு அனுப்பிவைக்கவும் எனவும் நித்தியிடம் கேட்டிருந்தேன். எமது தொலைபேசி உரையாடல் முடிந்ததும், மின்னஞ்சல்களை பார்த்தபோது அக்கட்டுரை வந்திருந்தது. அதனை மீண்டும் படித்துக்கொண்டிருந்தபோது, மற்றும் ஒரு தொலைபேசி அழைப்பு வாட்ஸ் அப் ஊடாக வந்தது. அதற்கு பதில் சொல்லிவிட்டு, பார்க்கின்றேன். எனது உறவினரும் மாத்தளையை பூர்வீகமாக கொண்டிருந்தவருமான சதீஸ் தியாகராஜாவிடமிருந்து மின்னலாக வந்த தகவலில் மாத்தளை கார்த்திகேசு மறந்தார் என்ற செய்தியைக்கண்டு அதிர்ச்சியடைந்தேன். நாம் ஆழமாக நேசிக்கும் ஒருவர் பற்றி பேசிக்கொண்டிருந்தால், அடுத்த கணம் அல்லது சில மணிநேரங்களில் அவர்பற்றிய ஒரு செய்தி வரும். அல்லது அவரே எம்முடன் தொடர்புகொண்டு பேசுவார். இதனை ரெலிபத்தி என்பார்கள். எனக்கு இதுபோன்ற ரெலிபத்தி சம்பவங்கள் நிறைய நடந்திருக்கின்றன. ஆனால், இந்த ரெலிபத்தி இப்படி ஒரு துயரத்தையும் எடுத்துவருமா..? எனினும் நண்பர் மாத்தளை கார்த்திகேசுவின் மறைவுச்செய்தியை ஊர்ஜிதப்படுத்திக்கொள்வதற்காக மீண்டும் லண்டனில் பத்மநாப அய்யருடன் தொடர்புகொண்ட பின்னர் இந்த அஞ்சலிக்குறிப்பினை கனத்த மனதுடன் எழுதுகின்றேன்.
அ.முத்துலிங்கத்தின் படைப்புகள் பற்றிய ஜெயமோகனின் கருத்துகளும் ஆசி. கந்தராஜாவின் எழுத்துகளும்! - ரஞ்ஜனி சுப்ரமணியம் -
புனைவிலக்கிய எழுத்தும், ரசனைகளும் இன்றைய இலக்கிய உலகின் முக்கிய பேசுபொருள். புனைவின் கலைத்தளமும் அதன் புரிதலும் வாசகரின் ரசனைக்குரியது மட்டுமன்றி வேறுபடக் கூடியதுமாகும். இதனால் சிறுகதைகள், நாவல் முதலான கலைப் படைப்புகள் பலதரப்பட்ட விமர்சனங்களை எதிர்கொள்வது இயல்பானது. இலத்திரனியல் சாதனங்களும், சமூக ஊடகங்களும் மலிந்துவிட்ட இக்காலத்தில் யாதும் ஊரே என்பது போல், எல்லோரும் எழுத்தாளர்களே. அனைவரும் மனங்கவரும் வண்ணமோ புலன்களில் பதியும் வண்ணமோ எழுதுவதில்லை என்பது உண்மைதான். எனினும் இதுதான் இலக்கியத்தின் இலக்கு என்ற முடிவை எடுக்கும் திறன் கொண்டவர்கள் யார்...?, எனும் வினா வாசகர் மனதில் உருவாவது இயல்பானதே. எனது மனதிலும் அவ்வினா உண்டு. இவ்வினாவுக்கு மூலகாரணமாக அமைந்தவர், இன்றைய தமிழ்இலக்கிய உலகின் பெரும் எழுத்தாளரான ஜெயமோகன் அவர்கள். அவரது இணையத்தளத்தில் சமீபகாலத்தில் வெளியான வாசகர் கேள்விக்கான பதிலின் ஒரு பகுதியாக கீழ்வரும் கருத்துகள் கூறப்பட்டிருந்தன. கேள்விகள் அவரது இலக்கிய ரசனை பற்றியதும், எழுத்தாளர் முத்துலிங்கத்தின் புனைகதைகளின் ரசனை பற்றியவையும் ஆகும்.
மார்ச் 2, 2021 அன்று, அவரது இணையத்தளப் பதிவொன்றில் 'எழுதுபவர், வாசிப்பவர் எவராக இருந்தாலும் அவர் தமிழ்ச் சூழலில் மிக அரியவர். ஆயிரத்தில் பல்லாயிரத்தில் ஒருவா். அவர் எனக்கு அணுக்கமானவா்தான்' என்ற, ஜெயமோகனது சமீபகால கருத்தானது இலக்கிய மதிப்பீடுகளுக்கும், அவரது இளமைக்கால கருத்துகளுக்கும் முற்றிலும் மாறானது அல்லவா...?என்ற வாசகரின் கேள்விக்கு பதில் அளிக்கையில், 'இளமையில் இலக்கிய அழகியல் சார்ந்த அளவுகோல்களை மதவெறி போல் பற்றிக் கொண்டிருந்ததாகவும், இன்று தனது பார்வை விரிந்திருப்பதாகவும்..., தான் சொல்வது தீர்ப்பு அல்ல, ஒரு பார்வை தான்' என்ற பொருள்படப் பதில் கூறியிருந்தார். இந்தக் கூற்று எனக்கு மிகுந்த விருப்பையும், திருப்தியையும் அளித்தது. அதுவரை அவரது இலக்கியக் கருத்துகள் சிலவற்றின் மீது கொண்டிருந்த மனவிலக்கத்தில் இக்கூற்று ஒரு மாற்றத்தினை ஏற்படுத்தியது. இது வரவேற்க வேண்டிய மனமாற்றமும் கூட. ஒரு வாசகர் என்ற முறையில் அவருக்கு அணுக்கமானவராகவே என்றும் தொடர விரும்புகிறேன். அதே சமயம் வேறு சில தளங்களிலும் இம்மனமாற்றம் ஏற்படுமா என்ற ஆவலையும் கொண்டிருக்கிறேன்.