எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் மீதான மதவாத தாக்குதலுக்குக் கண்டனம்!
[எழுத்தாளர் மனுஷ்யபுத்திரனின் உடல்ரீதியான குறைபாட்டை மிகவும் கீழ்த்தரமான முறையில் விமர்சித்திருந்த தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் என்ற இஸ்லாமிய அமைப்பும் அதன் தலைவரான ஜெய்னுலாபிதீனின் அந்த அறிக்கையினை இணையத்தில் வாசிததோம். மதமொன்றினைப் பிரதிநிதிப்படுத்துபவர் மற்றவர்களுக்கு முன்மாதிரி இருக்க வேண்டும். அவ்விதமாக இருக்க வேண்டிய ஒருவரிடமிருந்து இவ்விதமாக ஒருவரின் உடல்ரீதியிலான குறைபாட்டினைச் சுட்டிக்காட்டி, வன்முறையினைத் தூண்டும் வகையிலான அறிக்கை வெளிவந்திருப்பது துரதிருஷட்டமானது. மனிதரின் பேச்சுரிமை போன்ற அடிப்படை உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் சட்டங்களைக் கொண்ட மண்ணில் வாழ்ந்துகொண்டு, ஒருவரின் கருத்து தனக்குப் பிடிக்கவில்லையென்பதற்காக இவ்விதம் கீழத்தரமாக அறிக்கை வெளியிட்டிருப்பது உண்மையிலேயே கண்டிக்கத்தக்கது. தர்க்கத்தை தர்க்கரீதியில் எதிர்கொள்வதே சரியான அணுகுமுறை. இது பற்றிய எழுத்தாளர் ஜெயமோகனின் கட்டுரை, எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரை மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க அறிக்கை ஆகியன ஒரு பதிவுக்காக இங்கு மீள்பிரசுரமாகின்றன. - பதிவுகள் -