வரலாற்றுச் சுவடுகள்: முன்னாள் மேயர் செல்லன் கந்தையன் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டை நீக்கியது இன்றைய யாழ் மாநகரசபை! ஏன்?
அண்மையில் முனைவர் செல்லத்துரை சுதர்சனுக்கு அளித்த நேர்காணலில் முன்னாள் யாழ் மாநகரசபையின் முதல்வராகவிருந்த செல்லன் கந்தையன் அவர்கள் குறிப்பிட்ட ஒருவிடயம் என் கவனத்தை ஈர்த்தது.
அன்று கூட்டணித்தலைவர்களிலொருவரான ஆனந்தசங்கரியின் தலைமையில் நடைபெறவிருந்த நூலகத் திறப்பு விழா தடைபட்டதும் முன்னாள் மேயர் அவர்கள் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதனால் நூலகத்திறப்பு விழாவில் வைக்கப்படவேண்டிய அவர் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு வைக்கப்படவில்லை. ஆனால் அக்கல்வெட்டை அவருக்குப் பின் பதவியேற்ற யாழ் மாநகரசபை நிர்வாகம் மீண்டும் அங்கு வைத்துள்ளது. அவ்விதம் வைக்கப்பட்ட கல்வெட்டைத்தற்போதுள்ள மாநகரசபை நிர்வாகம் நீக்கி விட்டதாகவும் அவர் குற்றம் சாட்டுகின்றார். இதனை நான் இப்பொழுதுதான் நானறிந்தேன். அப்போது என்னிடமெழுந்த கேள்வி: எதற்காக இதுவரை அங்கிருந்த அவர் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டை இன்றுள்ள மாநகரசபை நீக்க வேண்டும்? அதற்கான காரணம் என்ன? இன்று ஏன் இத்தனை வருடங்கள் கழிந்து இருந்து வந்த கல்வெட்டை இன்று பதவியிலிருக்கும் மாநகரசபை நீக்க வேண்டும்?