“ அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா " எனும் இந்த வாசகம் நகைச்சுவை நடிகர் கவுண்டமணி அவர்கள் ஒரு திரைப்படத்தில் பேசி எமையெல்லாம் சிரிக்க வைத்தார். எதற்காக இந்நேரத்தில் நான் இதைக் கூறுகிறேன் என்று நீங்கள் எண்ணலாம். இன்றைய இங்கிலாந்தின் அரசியல் அரங்கத்தில் மேடையேறும் காட்சிகளுக்கும் இவ்வாசகத்துக்கும் பொருத்தமிருக்கும் எனும் எனது பிரதிபலிப்பே அதற்குக் காரணமாகும். ப்ரெக்ஸிட் எனும் படகில் ஏறி தனது அரசியல் பயணத்தின் இலட்சியமான பிரதமர் எனும் பதவியைத் தனதாக்கிக் கொண்டார் எமது பிரதமர் பொரிஸ் ஜோன்சன். மிகவும் உற்சாகத்துடன் ப்ரெக்ஸிட் எனும் சிக்கலுக்குத் தீர்வு கண்டு விட்டேன் என்ற கோஷத்துடன் ஓரளவு மக்கள் ஆதரவுடன் இடைத்தேர்தலைச் சந்தித்த அவர் 80 பெரும்பான்மை ஆதரவுடன் ஆட்சியமைத்துக் கொண்டார்.

ப்ரெக்ஸிட் எனும் தீர்வு ஏதோ இலகுவாக செயற்படுத்தப்படக்கூடியதொன்றல்ல என்பது அரசியல் அறிவில் தெளிவுடைய அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு விடயமாகும். அதனால் ஏற்படக்கூடிய பொருளாதார பின்னடைவுகள் பற்றி அனுபவமிக்க அரசியல், மற்றும் பொருளாதார நிபுணர்கள் பல அறிக்கைகள் மூலம் அறிவுறுத்தியிருந்தனர். ப்ரெக்ஸிட் பிரச்சனையைத் தீர்த்து வைத்தவர் என்னும் பெயரெடுப்பதற்காக அவசரம் அவசரமாக பல சிக்கலான தீர்வுகளை ஏற்றுக்கொண்டு விட்ட பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அதன் விளைவுகளைச் சமாளிக்கத் திணறிக் கொண்டிருக்கும் போதுதான் முன்னறிவிப்பின்றி உலகினுள் பிரவேசித்தது கொரோனா. கொரோனா எனும் நுண்கிருமியின் தாக்குதலிலிருந்து மக்களைக் காப்பதுதான் தலையாய கடமை எனும் கோஷத்துடன் ப்ரெக்ஸிட் பிரச்சனைகளை ஓரம் கட்டி வைத்தார் எமது பிரதமர்.

2020 மார்ச்/ஏப்பிரல் தொடங்கி 2022 ஜனவரி முடிவுவரை பல்வேறு காலப்பகுதிகளில் லாக்டவுண் பல்வேறு வடிவங்களிலும், வெவ்வேறு பரிமாணங்களிலும் நிறுவப்பட்டது. அதிகபட்ச லாக்டவுண் விதிகளாக ஹாஸ்பிட்டல்களில் இறுதிக் கட்டத்தில் இருக்கும் உறவினர்களைக் கூட கடைசிமுறையாகப் பார்க்க முடியாத வகையில் அவை நடைமுறைப்படுத்தப்பட்டன. வயோதிப இல்லங்களில் வசிக்கும் தமது வயதான உறவினர்களைச் சந்திக்க முடியாதவாறு லாக்டவுண் விதிகள் அமைந்திருந்தன. மிகவும் கடினமான விதிகளை மிகவும் சிரத்தையுடன் ஐக்கிய இராச்சிய மக்கள் பின்பற்றினர் , இவ்விதிகளை இயற்றி நடைமுறைப்படுத்துமாறு நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தவர் பிரதமரே. இவ்விதிகளை மீறியோர் மீது போலிஸார் நடவடிக்கை எடுத்து அபராதம் விதித்தனர்.

ப்ரெக்ஸிட் வெற்றியின் பின்னனியில் உழைத்தவரான டொமினிக் கமிங் ஸ் என்பவரைத் தனது அரசியல் அலோசகராக தான் பிரதமரானவுடன் பொரிஸ் ஜோன்சன் அவர்கள் நியமித்திருந்தார். இவ்வாலோசகரின் அதீத நடவடிக்கைகள் பிரதமரின் கட்சி உறுப்பினர்கள் பலரை மனக்கசப்புள்ளாக்கியது. சுமார் ஒருவருடத்தின் முன்னால் தீவிரமான லாக்டவுண் நேரத்தில் பிரதமரின் அரசியல் ஆலோசகர் தனது ஜோடியுடன் ஒரு உல்லாச இடத்திற்கு விஜயம் செய்தார் என்பது சிறிது காலத்தின் பின்னால் அம்பலத்துக்கு வந்தது. வெகுஜனத்தின் அதிருப்தியையும் பொருட்படுத்தாது விதிகளை மீறிய அவ்வாலோசகருக்கு தனது ஆதரவை அளித்துப் பாதுகாத்தார் பிரதமர். ஆனால் சில காலத்தின் பின்னால் பிரதமருக்கும், அவருக்கும் ஏற்பட்ட கருத்து மோதலினால் அவ்வரசியல் ஆலோசகர் பதவி நீக்கப்பட்டார். ஆனால் பிரதமருடன் நெருக்கமாகவிருந்த அவரினால் பிரதமருக்கு பல இடையூறுகள் நேரிடலாம் எனும் அச்சம் பிரதமரின் ஆதரவாளர்களிடம் அப்போதே நிலவியது. இந்தப் பின்னனியில் தான் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தனது பதவியையே பறிகொடுக்கக் கூடிய ஒரு நிலைக்கு இப்போது தள்ளப்பட்டிருக்கிறார். எப்படி என்கிறீர்களா ?

ஐக்கிய இராச்சிய மக்களின் மீது அதிகூடிய லாக்டவுண் விதிகள் போடப்பட்டு அவர்கள் அதனை கடைப்பிடித்து வந்த அதே நேரம் பல்வேறு காலகட்டங்களில் பிரதமரின் கீழியங்கும் அவரது கட்டிட அரச உத்தியோகத்தர்கள் சுமார் 16 தடவைகள் விருந்துகளை ஐக்கிய இராச்சிய அரசுக் கட்டிடமான பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திலேயே நடத்தியிருக்கிறார்கள் எனும் அதிர்ச்சியான தகவல்கள் ஓன்றன் பின் ஒன்றாக வெளிவந்தன. நாடே ஓரளவு கொதித்தெழுந்தது. தமது நெருங்கிய உறவினர்களின் மரணச் சடங்குகளில் கூட கலந்து கொள்ளாமல் விதிகளை பொதுமக்கள் கடைப்பிடித்துக் கொண்டிருக்கையில் பிரதமரின் உத்தியோகபூர்வமான கட்டிடத்தில் விருந்துகளை நடத்தியிருக்கிறார்கள் அதிலும் ஓரிரு விருந்துகளில் பிரதமரே நேரடியாகக் கலந்து கொண்டுள்ளார் எனும் தகவல் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இத்தகவல் முதலில் வெளிவந்தபோது பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய கேள்விக்கு பிரதமர் விருந்துகள் எதுவுமே நடக்கவில்லையென்றும் லாக்டவுண் விதிகள் எவையுமே மீறப்படவில்லையென்றும் உறுதியளித்தார். தொடர்ந்து வெளிவந்த புகைப்படங்கள் செய்திகள் அனைத்தும் பிரதமரின் கூற்றுக்கு எதிராகக் காணப்பட்டது. பிரதமர் ராஜினாமாச் செய்ய வேண்டும் எனும் கோஷம் நாட்டின் நாலாபக்கங்களில் இருந்து எழுந்தாலும் பிரதமரின் அமைச்சரவை அவருக்கு ஆதரவாக நின்றது. பாராளுமன்றத்தில் பட்டும் படாமலும் மன்னிப்புக் கோரிய பிரதமர் மிகவும் உயர் பதவி வகிக்கும் அரசு அதிகாரியாகிய சூ கிறே என்பவரை நடைபெற்ற விருந்துகளின் பின்னனியை விசாரிப்பதற்காக நியமித்தார்.

பிரதமரின் நிலை இன்னும் மோசமாகியது. அவரால் நியமிக்கப்பட்ட அரச உயரதிகாரியால் தனது அறிக்கையை முழுமையாகச் சமர்ப்பிக்க முடியவில்லை. காரணம் பிரதமரின் அலுவலகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்த விருந்துகளில் 12 சட்டத்தை மீறியிருக்கலாம் எனும் காரணத்தினால் அவை போலிஸாரிடம் கையளிக்கப்பட்டது.. பொலிஸாரின் விசாரணைகள் முடிவுறும் வரை அறிக்கை முழுமையாக சமர்ப்பிக்கப்படக் கூடாது என்று பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பிரதமர் பாராளுமன்றத்தில் தவறான செய்திகளைக் கூறியிருக்கிறார் என்பதால் அவர் உடனடியாக ராஜினாமாச் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கூட்டாக அறிக்கை விட்டு வருகின்றனர். நாட்டு மக்கள் மத்தியிலும் பிரதமரின் செல்வாக்கோடு அவரது கட்சியின் செல்வாக்கும் சரிந்து வருகிறது. பிதமரும், அவர்து அமைச்சர்களும் நடந்த தவறுக்கு வருந்துகிறோம் ஆனால் ப்றெக்ஸிட், கொரோனா தடுப்பூசி, கொரோனா நோயின் கட்டுப்பாடு என்பனவற்றை பிரதமர் சிறப்பாகக் கையாண்டிருக்கிறார் அவரின் பதவி ராஜினாமா என்பது அவசியமற்றது என வாதிடுகிறார்கள்.

அதேசமயம் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தமது கட்சியின் தலைமைப் பதவிக்கு ஏற்றவரில்லை எனப்தால் அவர்மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என அவரது கட்சியைச் சேர்ந்த சுமார் 17 பாராளுமன்ற உறுப்பினர்கள் கடிதங்கள் சமர்ப்பித்திருக்கிறார்கள் என்பது செய்தி. இவர்களது எண்ணிக்கை 54 ஐ எட்டுமானால் பிரதமர் மீது அவரது கட்சியே நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை முன்னெடுக்கும். பிரதமரின் உத்தியோக வாசஸ்தலத்தில் நிகழ்ந்த விருந்துகளைப் பற்றிய பொலிஸாரின் விசாரணை முடிவுகள் இன்னும் என்ன அதிர்ச்சிகளை வைத்திருக்கிறது என்பதும் பிரதமரின் பதவிக்கு ஒரு அச்சுறுத்தலே . பிரதமருக்கு உடனடியான ஆபத்து இல்லையெனினும் மேமாதம் நடைபெறப்போகும் உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் அவரது பதவிக்குச் சாவுமணி அடிக்கலாம் எனும் கருத்து நிலவுகிறது. ஐக்கிய இராச்சிய அரசியல் மேடையில் இன்னும் என்னென்ன காட்சிகள் அரங்கேறப் போகின்றன என்பதைப் பொறுத்துத்தான் பார்க்க வேண்டுமாயினும் இந்நாடகம் களைகட்டிக் கொண்டுதான் இருக்கிறது என்பதே உண்மை.

அது என்ன தொலைவில் ஒரு சத்தம் ? ஓ ! அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா எனும் வாசகமோ ?


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.
வீடு வாங்க & விற்க!

'
சாந்தி சந்திரன்
Shanthi Chandran

HomeLife/GTA Realty Inc.
647-410-1643  / 416-321-6969
5215 FINCH AVE E UNIT 203
TORONTO, Ontario M1S0C2

விளம்பரம் செய்ய

வ.ந.கிரிதரனின் பாடல்கள்
பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க

அ.ந.கந்தசாமியின் நாவல் 'மனக்கண்' மின்னூல்!
வாங்க
வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' மின்னூல்!
பதிவுகளில் வெளியான சிறு நாவலான எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' தற்போது அமேசன் & கிண்டில் மின்னூற் பதிப்பாக, பதிவுகள்.காம் வெளியீடாக வெளியாகியுள்ளது. தமிழ் அகதி இளைஞன் ஒருவனின் முதற்காதல் அனுபவங்களை விபரிக்கும் புனைகதை.  மின்னூலினை வாங்க

                                         

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
 

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். மின்னூலினை வாங்க


எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம்

 


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி. இதனை வாங்க இங்கு அழுத்தவும்.


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி. நூலை வாங்க


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan. To buy


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp. Buy here