'மீண்டுமொரு தலித் இனத்து பதின்ம வயதுப் பெண்ணொருத்தியை உத்தரப்பிரதேச மாநிலத்தில் நான்கு பேர் கூட்டாகப் பாலியல் வன்முறைக்குள்ளாக்கி, முதுகெலும்பை உடைத்து, நாக்கை அறுத்து, கால்களை அடித்து , உடைத்துத் துன்புறுத்தியுள்ளனர். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்தப்பெண் இறந்திருக்கின்றார். பொலிசார் அப்பெண்ணின் குடும்பத்தவருக்குக் கூட அறிவிக்காமல் அப்பெண்ணின் உடலை எரித்து இறுதிச்சடங்கை முடித்துள்ளார்கள். '
இந்தியாவில் இதுபோன்ற செய்திகளைத் தொடர்ந்து கேட்டு வருகின்றோம். இந்தியாவில் இது போன்ற நிகழ்வுகள் அடிக்கடி நிகழ்கின்றன. தடுப்பதற்கு தற்போது அமெரிக்காவில் நடைபெறுவதைப்போல். இளைய சமுதாயம் (அனைத்துச் சமூகங்களையும் உள்ளடக்கிய) தாமாகவே போராட வேண்டும். Talit Lives Matter, Women Lives Matter போன்ற நோக்கங்களின் அடிப்படையில் போராட வேண்டும். இவ்விதமான குற்றச்செயல்களைச் செய்பவர்களைத் தண்டிப்பதற்கு இந்திய ஊழல் அரசியல் துணையாக இருக்கப்போவதில்லை. போராடினால்தான் அரசியல்வாதிகள் நாட்டின் தேசிய பாதுகாப்பு கருதி இவ்விடயத்தில் கடுமையாகக் குற்றவாளிகளுக்கெதிராக நடவடிக்கை எடுப்பார்கள்.
அனைத்துச் சமூகத்தினரும் ஒன்றிணைந்து தலித் சமுதாய மக்களுக்கு எதிராக நடைபெறும் அநீதிகளுக்கெதிராகப் போராட வேண்டும். பெண்களுக்கெதிரான வன்முறைகளுக்கெதிராகப் போராட வேண்டும். அவ்விதம் செய்யாவிட்டால் தலித் சமுதாயத்து மக்கள் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். அங்குள்ள தலித் அரசியல்வாதிகள் நிரம்பி வழியும் அரசியல் கட்சிகள் தொடர்ச்சியான போராட்டங்களைச் செய்வதாகப் பத்திரிகைகளில் நான் செய்திகளைக் காண்பதில்லை. ஏன்? இந்நிலை மாற வேண்டும்.