
அலமாரியில் ஓரமாக வைக்கப்பட்டிருந்த மூக்கு கண்ணாடியில்
திட்டு திட்டாகப் படிந்திருந்தன
ஞாபக மறதிகள்
இரவில் தவிர்த்த மாத்திரைகளாகவும்
மளிகை கடையில் தவறவிட்ட பாக்கிகளாகவும்
மேஜையில் விட்டுச்சென்ற சாவிகளாகவும் ஆங்காங்கே படிந்திருக்க
கோடுகளாகத் தென்பட்ட நிராகரிப்புகளுக்கும் மறதிகளுக்கும் இடையே
தெரிந்த பார்வையில்
சுழன்று கொண்டிருந்தது
தாத்தாவின் உலகம்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
[டிஜிட்டல் ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banada) உதவி : VNG]



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









