இலங்கைப்பாராளுமன்றத் தேர்தல் 2020: அம்பாறைத் தொகுதிச் சிக்கல் தீர்ந்தது!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் ஆசனம் நாவிதன்வெளிப் பிரதேசசபைத் தவிசாளர் தவராசா கலையரசனுக்கு வழங்கப்பட்டது. இலங்கை அரசு வெளியிட்ட அதிசிறப்பு வர்த்தமானி அறிவிப்பில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் கூட்டமைப்பின் நல்லதொரு முடிவு. தமிழ் உறுப்பினர்களற்ற அம்பாறைக்கு இதன் மூலம் தமிழ் உறுப்பினரொருவர் கிடைத்துள்ளார்.
அதிசிறப்பு வர்த்தமானி அறிவிப்பு: http://www.documents.gov.lk/files/egz/2020/8/2188-02_T.pdf
அறிந்து கொள்வோம்: இலங்கைப் பாராளுமன்றத்தில் மொழிபெயர்ப்பு வசதிகள்!
அண்மையில் சசிகலா ரவிராஜ் விடயத்தில் நம்மவர்கள் நடந்து கொண்ட முறையைப் பார்த்தபோது ஒன்று புரிந்தது.இவர்களுக்கு வாக்குகள் எவ்விதம் கையாளப்படுகின்றன என்னும் விடயம் தெரியாது? ஆளுக்காள் கூறும் விடயங்களை அப்படி அப்படியே நம்பி உணர்ச்சிப்பெருக்கெடுத்துத் தாண்டவமாட மட்டும் தெரிகிறது.
இப்பொழுது ஒருவர் முகநூற் பதிவொன்றில் மிகப்புத்திசாலித்தனமான கேள்வியொன்றினைக் கேட்டிருக்கின்றார். அம்பாறையில் தமிழ் மட்டும் தெரிந்த தவராசா கலையரசன் தெரிவு செய்யப்பட்டால் பாராளுமன்றத்தில் எந்த மொழியில் பேசுவார்? பெரிய கண்டுபிடிப்பு! பாராளுமன்ற நடைமுறைகளைத் தெரியாதவர்கள் அரசியல் கருத்துகள் உதிர்க்கின்றார்கள். நமது அரசியல் ஆய்வாளர்கள் பலரின் ஆய்வுகளும் இவ்வகையானவைதாம்.