1. சுந்தரின் 'கொரோனா' கேலிச்சித்திரம் (ஒரு கற்பனை)
கொஞ்ச நேரம் கொரோனாவை மறந்து விட்டு சிரித்திரன் சுந்தரின் கேலிச்சித்திரத்தில் சிரித்து சந்தோசமாகவிருப்போமென்று 'நூலகம்' தளத்திலுள்ள சிரித்திரன் சுந்தரின் கேலிச்சித்திரங்கள் அடங்கிய தொகுப்பு நூலான 'சிரித்திரன் சித்திரக்கொத்து' நூலைப் புரட்டினேன். முதலில் கண்களில் பட்டது இந்தக் கேலிச்சித்திரம்.
தற்போது தேர்தல் காலம். கொரோனா வந்து எல்லாவற்றையும் தடுத்து விட்டதே என்று நினைத்தேன்.
இந்தக் கேலிச்சித்திரம் சிறு மாற்றத்துடன் இக்காலகட்டத்துக்கும் பொருந்துமேயென்று தோன்றியது.
படத்தில் நோயால் படுக்கையிலிருக்கிற முதியவரை நாடி தேர்தல் வேட்பாளர் வந்து நிற்கிறார். அவரைப்பார்த்து அந்த முதியவர் "தம்பி அழாதை. வோட்டுப்போடுற நாள் வர கால் சுகப்பட்டுப்போம். நான் ஓடி வந்து உனக்கு வோட்டுப் போடுறன்" என்கின்றார்.
முதியவர் கூறுவதை ""தம்பி அழாதை. வோட்டுப்போடுற நாள் வர கொரோனா சுகப்பட்டுப்போம். நான் ஓடி வந்து உனக்கு வோட்டுப் போடுறன்" என்று மாற்றினால் எப்படியிருக்கும் என்று நினைத்துப் பார்க்கிறேன் சிரிக்கப் போன இடத்திலும் சிந்தனையில் கொரோனாதான்
2. சிரித்திரன் சுந்தரின் சிரிக்க சிந்திக்க வைக்கும் இன்னுமொரு கேலிச்சித்திரம்.
இங்குள்ள கேலிச்சித்திரத்தில் மணமக்களை வாழ்த்திப் பரிசு கொடுக்கும் முதியவர் "இந்தாங்க எனது கல்யாணப்பரிசு .பாலுக்குத் தட்டுப்பாடான காலமிது" என்கின்றார்.
இதற்குப் பதிலாக அந்த முதியவர் ""இந்தாங்க எனது கல்யாணப்பரிசு .'பாத்ரூம் டிஸ்யு'க்குத் தட்டுப்பாடான காலமிது" என்று கூறினால் எப்படியிருக்குமென்று சிந்தனையோடுகிறதே படத்திலிருப்பதும் தோற்றத்தில் 'பாத்ரூம் டிஸ்யு' மாதிரித்தான் தெரிகிறதே
3. சிரிக்க சிந்திக்க சுந்தரின் கேலிச்சித்திரமொன்று.
தற்போதுள்ள சூழலில் பரவி வரும் சமூக விரோதிகளால் பரப்பப்படும் வதந்திகளை நினைக்கையில் இன்றும் சூழலுக்கு பொருந்தும் சுந்தரின் கேலிச்சித்திரம் என் கவனத்தை ஈர்த்தது.
4. இங்குள்ள சுந்தரின் மைனர் மச்சான் கேலிச்சித்திர உரையாடலை இப்படி மாற்றினால் எப்படி?
லேடி: "வழக்கமாக் கை கொடுப்பீங்கள். இதென்ன கூத்து! மைனரும் எலெக்ஷன் கெண்டெஸ்ட் பண்றதா/"