[ இன்ஸான் முஸ்லிம் வாரப்பத்திரிகையில் வெளியான சிறுகதைகளைப்பற்றிய ஆவணச்சிறப்புள்ள இப்பதிவினை எழுத்தாளர் ஜவாத் மரைக்கார் அவர்கள் தனது முகநூலில் பதிவு செய்துள்ளார். அதனை நான் இங்கு பதிவு செய்கின்றேன். - வ.ந.கி -]
21.6.1967 தொடக்கம் 4.7.1969 வரை இலங்கையில் வெளிவந்த வாரப் பத்திரிகை ‘ இன்ஸான் ‘ .அப்போதைய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துக்கு எதிராக , முஸ்லிம்களுக்கு விழிப்புணர்வூட்டும் நோக்கில் இப்பத்திரிகை வெளியானது.
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் ( ரஷ்ய சார்பு ) நிதியுதவியில் இப்பத்திரிகை வெளியிடப்பட்டதாயினும் தன்னையொரு கம்யூனிஸ்ட் பத்திரிகையாக அது இனங்காட்டிக்கொள்ளவில்லை. இதன் ஆசிரியர் அபூதாலிப் அப்துல் லதீஃப் . துணை ஆசிரியர் பண்ணாமத்துக்கவிராயர் பாரூக். எனினும் , அவர்களின் பெயர்கள் பத்திரிகையில் வெளிப்படுத்தப்படவில்லை. அப்பத்திரிகையில் எழுதியவர்களுக்கோ அதன் வாசகர்களுக்கோ தெரியாத இரகசியங்களாகவே இவை இருந்ததெனலாம். ‘ கௌரவ ஆசிரியர் : எஸ்.எச்.ஏ. வதூத் ‘ என நண்பர் ஒருவரின் பெயர் பின்னாள்களில் பொறிக்கப்பட்டது. இலங்கை முஸ்லிம்களின் பேச்சு வழக்குச் சொற்கள் அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட இப்பத்திரிகை முஸ்லிம்கள் மத்தியில் அன்று பிரபலம் பெற்றிருந்தது.
இன்ஸான் ஓர் அரசியல் பத்திரிகையாக இருந்தபோதிலும் ( மொழி பெயர்ப்பு உட்பட ) சிறுகதை , கவிதை , கட்டுரைகள் என கலை – இலக்கிய ஆக்கங்களுக்கும் முக்கியத்துவமளித்தது. பின்னாளில் புகழ் பெற்ற பல எழுத்தாளர்கள் , ' தாம் இன்ஸான் பண்ணையில் வளர்ந்தவர்கள் ' என்று பெருமிதப்பட்டுக்கொள்ளும் அளவுக்கு அவர்களின் பயில்களமாக இன்ஸான் அமைந்தது.
எஸ்.எல்.எம். ஹனிபா எழுதிய ' ஆத்மாவின் ராகங்கள் ' என்ற சிறுகதை ஏற்படுத்திய அருட்டுணர்வால் , ‘ ராகங்கள் ‘ என முடியும் தலைப்புகளில் சில கதைகள் ( ஆசிரியர் குறிப்புடன் ) தொடர்ந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்ஸானில் வெளிவந்த சிறுகதைகளின் பட்டியலை வரலாற்றுத் தகவலுக்காக இங்கு தந்துள்ளேன்.
கதைகளை எழுதியோரின் பெயர்கள் பத்திரிகையில் இடம்பெற்றுள்ளவாறே தரப்பட்டுள்ளன. புனைபெயர்களில் / வேறு பெயர்களில் எழுதியோர் பின்னாட்களில் பயன்படுத்திய பெயர்களையும் ( நானறிந்தவரை ) தந்துள்ளேன்.
21.6.67 தாய்மை – மஹ்மூத் தைமர் ( மொழிபெயர்ப்பு )
30.6.67 இரத்த உறவு எங்கே ? – சாய்பு நானா
7.7.67 மோகன சக்தி – இல்பத் இதிலிபு ( சிரியா - மொழிபெயர்ப்பு )
4.8.67 திருந்திய உள்ளம் – கஹற்றோவிற்ற எம்.எல்.எம்.அவ்ஃபு
21.7.67 கண்ணீர் துளிகள் – எஸ்.ஐ.எஸ்.டி. மவ்லானா
11.8.67 மன்சூர் – ஸாதத் ஹஸன் மின்டே ( உருது - மொழிபெயர்ப்பு )
18.8.67 கண்ணீரே காணிக்கை ! – பன்விலை - பாரூக்
25.8.67 கை கொடுத்தவன் – ஹேனமுல்லை எம்.எம்.எம். நஸ்றுத்தீன்
1.9.67 அருள் மழையும் அடை மழையும் – எ.எல்.எ. லத்தீஃப்
15.9.67 தெளிவு – எஸ். ஃபத்தீலா சிங்ஹவன்ஸா
22.9.67 ஏமாற்றம் – எம்.எஸ்.ஏ. மொஹிதீன்
29.9.67 கிராமத்தில் பூதம் – கஃபூர் குலியாம் ( ரஷ்யச் சிறுவர் கதை - மொழியெர்ப்பு )
6.10.67. சம்மதம் தானா ? – பாணந்துறை மொயீன் ஸமீன்
13.10.67 சகடக்கால் – பாஹிறா ( எம்.எச்.எம். ஷம்ஸ் )
20.10.67 சூன்யம் – பாணந்துறை எம்.பி.எம். நிஸ்வான்
27.10.67. ஆகாயக்கோட்டை – ஏ.எல்.ஏ.லெதீப்
3.11.67 கடைசிக் கடிதம் – எச்.எம். முஹம்மது ஹனீபா ( ஓட்டமாவடி )
10.11.67 வண்டு – மன்னிநகர் கலீல் ( கலைவாதி கலீல் )
17.11.67 பெண் உள்ளம் – செல்வி பீ.எஸ். கதிஜா , ஹாலி எல
24. 11.67 பெண் பிறந்தால் – புஷ்பதாஸன்
1.12.67 கதீஜாவின் கண்ணீா் – மருதானை முர்ஷி பாஷா ( பேருவளை , மருதானை )
8.12.67 இதயக் கண் – எஸ்.டி. அபூபக்கர் , அம்பலந்துவை
15.12.67 கதவு திறந்தது (சிங்களக் கதை - மொழிபெயர்ப்பு )
22.12.67 கருத்தைக்கவர்ந்த கானம் – பாஹிறா ( எம்.எச்.எம். ஷம்ஸ் )
29.12.67 நோன்புக் கஞ்சி – மன்னிநகர் கலீல் ( கலைவாதி கலீல் )
12.1. 68 மனப்பேய் – கே.ஏ. ஹாஜா மொஹிதீன்
19.1.68 அன்புக் கரம் – மொயீன் ஸமீன் , பாணந்துறை
26.1.68 ஸகாத் – மியாம் ( முஸ்தபா , திக்குவல்லை )
2.2.68 ஒரே கொண்டாட்டம் – முர்ஸி பாத்ஷா ( பேருவளை , மருதானை )
16.2.68 சகோதரத்துவம் – மன்னிநகர் கலீல் ( கலைவாதி கலீல் )
23.2.68 அஞ்சன மை – பாஹிறா ( எம்.எச்.எம். ஷம்ஸ் )
1.3.68 நானும் மனிதன்தான் – ரஹீம் ( எம்.எஸ்.ஏ. ரஹீம் / யாழ் ரஹீம் )
8.3.68 யாருக்குப் பெருநாள் - மன்னிநகர் கலீல் ( கலைவாதி கலீல் )
22.3.68 விடியுமா ? – ரஹீம் ( எம்.எஸ்.ஏ. ரஹீம் )
29.3.68 ஒளி பிறந்தது – பூவெளிக்கடை மன்சூர் ( எம்.எல்.எம். மன்சூர் )
5.4.68 ஆசிரியம் – ரஹீம் ( எம்.எஸ்.ஏ. ரஹீம் )
12.4.68 உழைப்பு – வை.அஹ்மத்
26.4.68 ஸீனத் – பொத்துவில் எம்.எஸ்.எம். பாத்தும்மா
3.5.68 ஊட்டு – ஓடையூர் எஸ். ஹனிபா ( எஸ்.எல்.எம். ஹனிபா )
17.5.68 ரெண்டாம் ஷோ ! – பாஹிறா ( எம்.எச்.எம். ஷம்ஸ் )
24.5.68 ஓடப்போறேன் – கலீல் ( கலைவாதி கலீல் )
31.5.68 பிறழ்வு – இப்னு யாஸீன்
7.6.68 மையித்து – ஸைபுஃத்தீன் ( கலைவாதி கலீல் )
14.8.68 சன்மார்க்கம் - ஓடையூர் எஸ். ஹனிபா ( எஸ்.எல்.எம். ஹனிபா )
21.6.68 புனர்ஜீவன் – இப்னு முஹையதீன்
28.6.68 ஒரே வார்த்தை - எச்.எம். முஹம்மது ஹனீபா ( ஓட்டமாவடி )
5.7.68 அவன் மனிதன் – முஹம்மத் பஷீர் ( மலையாளம் – மொழிபெயர்ப்பு )
12.7.68 ரஹீம் கான் – குவாஜா அஹ்மத் அப்பாஸ் ( உருது - மொழிபெயர்ப்பு )
19.7.68 கபூல் – எம்.எல்.எம். தாஸீம்
26.7.68 வருடங்கள் பத்து – ஒட்டுமாவடி ஹனிபா ( எச்.எம். முஹம்மது ஹனீபா )
2.8.68 ஆத்மாவின் ராகங்கள் – ஓடையூர் எஸ். ஹனிபா ( எஸ்.எல்.எம். ஹனிபா )
9.8.68 பேரம் – பாணந்துறை எம்.பி.எம்.நிஸ்வான்
16.8.68 மாத்ரு பூமி – ரஹீம் ( எம்.எஸ்.ஏ. ரஹீம் )
23.8.68 வெள்ளை காகிதம் – டி.எல். ரஷீத் ( வாழைச்சேனை )
30.8.68 திருப்புமுனை – பாஹிறா ( எம்.எச்.எம். ஷம்ஸ் )
6.9.68 ராஹிலா – ரஹீம் ( எம்.எஸ்.ஏ. ரஹீம் )
13.9.68 ஒரு வெள்ளி ரூபாய் – மன்னிநகர்க் கலீல் ( கலைவாதி கலீல் )
20.9.68 மனித ராகங்கள் – இன்ஸாத் ( பொத்துவில் )
27.9.68 பைப்படி – ஜுனைதா
4.1068 முறையீடு - பாணந்துறை எம்.பி.எம்.நிஸ்வான்
11.10.68 ஆலிம்சா – ரஹீம் ( எம்.எஸ்.ஏ. ரஹீம் )
18.10.68 காலம் மாறுது – மொயின் ( மொயின் சமீன் )
1.11.68 இதயத்தின் ராகங்கள் – அஸ்ஸாதிக் ( எஸ்.எல்.எம். ஹனிபா )
8.11.68 பிசாசுக் கோட்டி – பாஹிறா ( எம்.எச்.எம். ஷம்ஸ் )
15.11.68 ஆமினா - ஹேனமுல்லை எம்.எம். நஸுறுத்தீன்
22.11.58 காதல் ராகங்கள் – பாணந்துறை மொயின் சமீன்
29.11.68 வர்க்கம் - மன்னிநகர்க் கலீல் ( கலைவாதி கலீல் )
13.12.68 அன்பின் ராகங்கள் – வாழைநகர் ரஷீத்
22.12.68 கொடை - பாணந்துறை எம்.பி.எம்.நிஸ்வான்
22.12.68 நாளை பெருநாள் – பாஹிறா ( எம்.எச்.எம். ஷம்ஸ் )
10.1.69 நெஸ்ப்ரே – திக்குவல்லை கமால்
17.1.69 துன்ப ராகங்கள் - எம்.பி.எம்.நிஸ்வான்
24.1.69 நிராசை – மொயீன் சமீன் பாணந்துறை
31.169 நேர்த்தி – நவாஸ் , சிலாபம்
21.2.69 கலீல் சாச்சா – எ.என்.எஸ். நியாஸ் ( புத்தளம் )
7.3.69. எத்தீன் சுபைதா - திக்குவல்லை கமால்
14.3.69 காணிக்கை – தொடங்டகஸ்லந்தை யூ.எல்.எஸ்.ஹஸன்
21.3.69 தியாகத் திருநாள் - பாணந்துறை எம்.பி.எம்.நிஸ்வான்
28.3.69 புயலின் ராகங்கள் - ஹேனமுல்லை எம்.எம்.எம். நஸுறுத்தீன்
4.4.69 சியவஸ ஸ்வீப் - தொடங்டகஸ்லந்தை யூ.எல்.எஸ்.ஹஸன்
11.4.69 தெய்வ நீதி – பூவெளிக்கடை மன்சூர் ( எம்.எல்.எம். மன்சூர் )
25.4.69 நன்மை – ஐ.எ.ஹமீத்
9.5.69 அவன் செயல் – பூவெளிக்கடை முஹம்மத் மன்சூர் ( எம்.எல்.எம். மன்சூர் )
16.5.69 பெரிய இடத்துப் பெண் – திக்குவல்லைக் கமால்
18.7.69 பலாப் பழம் – ஐ. ஆப்தீன்
30.5.69 மூன்றாம் கத்தம் – பாஹிறா ( எம்.எச்.எம். ஷம்ஸ் )
6.6.69 பிரார்த்தனை – ஐ.எ.ஹமீத்
20.6.69 இரத்தம் சிந்தும் – எ.சி.நஜுமுத்தீன் , யாழ்ப்பாணம்
27.6.69 தாய்மை – ரகுமான்
4.7.69 ஜன்னல் – சாரணா கையூம்