பதிவுகள் முகப்பு

மே 1 - உழைப்பாளர் தினப்பாடல் : வ.ந.கிரிதரனின் பாடல் - 'உழைப்பாளர் தினமிது! உரிமைக்குரல் கொடுப்போம்.'

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
அரசியல்
01 மே 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மே  1 - உழைப்பாளர் தினப்பாடல் : வ.ந.கிரிதரனின் பாடல் -  'உழைப்பாளர் தினமிது! உரிமைக்குரல் கொடுப்போம்.' 

வ.ந.கிரிதரனின் குரலில் ''உழைப்பாளர் தினமிது! உரிமைக்குரல் கொடுப்போம்.'   பாடலை இசைத்துப் பாடியிருப்பது SUNO 5.5 AI   டிஜிட்டல் ஓவியம்: கூகுள் நனோ பனானா வழி வநகி

பாடலைக் கேட்க - https://www.youtube.com/watch?v=A9qVjj6YZLU


உழைப்பாளர் தினமிது! உரிமைக்குரல் கொடுப்போம்.
உழைப்பவர் இயக்கமே  உலகத்தின்  இயக்கமாம்.

உழைப்புக்கு உரிய  ஊதியம்  வழங்குவோம்.
உழைப்பவர் உயர்வே உலகத்தின் உயர்வாம்.
உண்மையிது உணர்வோம். செயற் படுவோம்.
மண்ணில் மலர்ச்சியை ஏற்றி வைப்போம்.

உழைப்பாளர் தினமிது! உரிமைக்குரல் கொடுப்போம்.
உழைப்பவர் இயக்கமே  உலகத்தின்  இயக்கமாம்.

உழைக்கும் பெண்களின்  உரிமைகளை வழங்குவோம்.
உழைப்பவர் தொழிலை நிரந்தரம் ஆக்குவோம்.
வர்க்க ஒற்றுமையை உருவாக்கி வைப்போம்.
சொர்க்கம் அதுவேயென உணர வைப்ப்போம்.

மேலும் படிக்க ...

காவிரிப்பூம்பட்டினம் போல் புகழ்பெற்ற துறைமுக நகரே யாழ்ப்பாணப்பட்டினம்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
கட்டடக்கலை / நகர அமைப்பு/ வரலாறு/ அகழாய்வு
30 ஏப்ரல் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

[அண்மையில் யாழ்ப்பாணக் கோட்டையில் நடந்த அகழ்வாய்வுகள் பற்றிய ஆங்கிலக் ஆய்வுக்கட்டுரையையும் (Recent Excavations and Survey at Jaffna Fort in 2017 and Reflections on the Antiquity of Indian Ocean Trade”), அதன் உள்ளடக்கத்தையும் கூகுள் நனொ பனானா மூலம் பெற்றுப் படித்தேன். இது வெளிப்படுத்தும் தகவல்களை இக்கட்டுரையில் பாவித்துள்ளேன். தகவற் பிழையெவையாவது தென்பட்டால் அறியத்தாருங்கள் ]


1. யாழ்ப்பாணம் பற்றிய வரலாற்றறிஞர்களின் சந்தேகங்களும், புரிதல்களும்!

யாழ்ப்பாணம் தமிழர்களின் புகழ்பெற்ற நகரங்களில் ஒன்று. இருந்தாலும் இதன் சரித்திரம் பற்றிய கேள்விகளும்,, சந்தேகங்களும் இன்னும் வரலாற்று அறிஞர்களுக்கு உண்டு., யாழ்ப்பாணச் சரித்திரம் பற்றிய நூல்கள் பல வெளிவந்திருக்கின்றன.  இவற்றின் அடிப்படையில் பொதுவாக இந்நகர்பற்றிய வரலாற்றுத்  தகவல்களாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம். இவை எனது நூலான 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' என்னும் ஆய்வு நூலில் குறிப்பிடப்பட்டுள்ளவை:

.கலாநிதி சி.க.சிற்றம்பலம், சுவாமி ஞானப்பிரகாசர் போன்றவர்களின் கருத்துப்படி யாபாபட்டுன எனக் கூறுவது நல்லூரையே. "...யாழ்ப்பாணப் பட்டினம் (சிங்கள நூல்கள் யாபாபட்டுன எனக் கூறுவன) என்பதும் நல்லூரையே குறித்தது எனலாம்". ('யாழ்ப்பாண இராச்சியம்', கலாநிதி சி.க.சிற்றம்பலம்).

மேலும் சுவாமி ஞானப்பிரகாசர், எஸ்.டபிள்யு.குமாரசுவாமி போன்றவர்களின் கருத்துப்படியும் சிங்களவர் நல்லூருக்கு வைத்த 'யாப்பநே', 'யாப்பா பட்டுநேயே' பின்னர் யாழ்ப்பாணமாக மருவியதென்பதையறியலாம்:

மேலும் படிக்க ...

உளவியல் அணுகுமுறையில் எஸ்.ஜே. சிவசங்கரின் 'நிழல்'! - முனைவர் சி.தேவி -

விவரங்கள்
- முனைவர் சி.தேவி -
ஆய்வு
29 ஏப்ரல் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கட்டுரையாளர் - முனைவர் சி.தேவி, உதவிப்பேராசிரியர், தி ஸ்டாண்டர்டு ஃபயர்ஒர்க்ஸ் இராசரத்தினம் மகளிர் கல்லூரி, சிவகாசி. 


முன்னுரை

இலக்கியமும் உளவியலும் இணைத்து ஓரு சேரப்பார்க்கத்தக்க அறிவுத்துறையாகும், இலக்கியப் படைப்புகளையும், படைப்பாளிகளையும் உளவியல் கோட்பாடுகள் மூலம் ஆராயத் திறனாய்வாளர்கள் முற்படுகின்றனர். படைப்பாளனின் மனநிலை, உணர்வுகள் மற்றும் எண்ணங்களைப் பற்றி ஆராய உளவியல் உதவுகிறது. மேலும், இலக்கியப் படைப்புகளின் மூலம் மனித நடத்தைகளையும் உணர்வுகளையும் புரிந்து கொள்ளலாம்.  எனவே எஸ்.ஜே. சிவசங்கர் அவர்களின் “ கடந்தைக்கூடும் கேயாஸ் தியரியும்” என்ற சிறுகதைத்தொகுதியில் இடம்பெற்றுள்ள படைப்பான 'நிழல்' எனும் சிறுகதை உளவியல் பார்வையில் அணுகப்பட்டுள்ளது.

இலக்கியமும் உளவியலும்
படைப்பாளியின் உளவியல்
படைப்பின் உளவியல்
உளவியலைக் கருவியாகப் பயன்படுத்துதல்
சமூக மற்றும் வாழ்வியல் கூறுகளைப் புரிந்துகொள்ளுதல்

ஒப்பிலக்கியத்தின் ஒரு பிரிவு என்ற ஐந்தின் அடிப்படையில் இலக்கியங்கள் உளவியல் சார்ந்து ஆயப்படுகிறது.

மேலும் படிக்க ...

ஆய்வு: கம்பராமாயணத்தில் முதன் முதலில்..!!! - முனைவர் க.மங்கையர்க்கரசி -

விவரங்கள்
- முனைவர் க.மங்கையர்க்கரசி -
ஆய்வு
29 ஏப்ரல் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


கட்டுரையாளர்: கம்பராமாயணத்தில் முதன் முதலில்..!!! - முனைவர் க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி(சுழல்-II), மீனம்பாக்கம், சென்னை 600061 


முன்னுரை

தமிழ்மொழி எளிமையானது. இனிமையானது. தொல்காப்பியம் உள்ளிட்ட பல இலக்கணநூல்களைத் தன்னகத்தே கொண்டது. சங்கஇலக்கியம் முதலாக பல்லாயிரக்கணக்கான நூல்களைக் கொண்டது.பல செய்திகளை உள்ளடக்கியது என்றாலும் சில செய்திகளைக் கம்பரே தம் இராமாயணத்தில் முதன் முதலில் கூறியுள்ளார். அவற்றுள் சுவையான சில செய்திகளை மற்ற இலக்கியங்களில் காணப்படாத, கம்பரே கூறிய செய்திகளைக் கண்டு நாம் வியப்போம்.கம்பர் கூறிய வியப்பான சில செய்திகளை இக்கட்டுரையில் நாம் ஆராய்வோம்.

முதல் விவாகரத்து

கம்பரே முதன் முதலில் விவாகரத்து குறித்துக் கூறியுள்ளார். கைகேயி, தசரதனிடம் பரதன் நாடாளவும், இராமன் காடாளவும் வரம் கேட்டதால் மனமுடைந்த தசரதன், வசிஷ்டரிடம் இவள் என் மனைவி அல்லல் இவளை மனைவி எனும் நிலையிலிருந்து முற்றிலும் நீக்கிவிட்டேன். அரசனாக வரப்போகும் அந்தப் பரதனையும் இனி என் மகன் என்று கருத மாட்டேன். அவன் என் இறுதிச் சடங்கு செய்வதற்கு உரிமை உடையவன் ஆக மாட்டான் என்றான்.

“இன்னே பலவும் பகர்வான் இரங்காதாளை நோக்கி
சொன்னேன் இன்றே இவள் என் தாரம் அல்லள் துறந்தேன்
மன்னே ஆவான் வரும் அவ் பரதன்தனையும் மகன் என்று
உன்னேன் முனிவா அவனும் ஆகான் உரிமைக்கு என்றான்”
(நகர் நீங்கு படலம் 341)

மேலும் படிக்க ...

வ.ந.கிரிதரனின் குரலில் பாரதியாரின் 'நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா!'

விவரங்கள்
-மகாகவி பாரதியார் -
கலை
28 ஏப்ரல் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

வ.ந.கிரிதரனின் குரலில் பாரதியாரின்  'நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா!' இசைத்துப் பாடியிருப்பது SUNO 5.5 AI  டிஜிட்டல் ஓவியம்: கூகுள் நனோ பனானா வழி வநகி


பாடலைக் கேட்க - https://www.youtube.com/watch?v=Js6sGGAHIFY

நின்னைச் சரணடைந்தேன்,
நின்னைச் சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னைச் சரணடைந்தேன்

நின்னைச் சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னைச் சரணடைந்தேன்

பொன்னை, உயர்வை, புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள் தின்ன தகாதென்று..
நின்னைச் சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னைச் சரணடைந்தேன்

மேலும் படிக்க ...

சங்க இலக்கியம் கூறும் அறம்! - முனைவர் அ .கல்பனா -

விவரங்கள்
- முனைவர் அ .கல்பனா -
இலக்கியம்
28 ஏப்ரல் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கட்டுரையாளர் : முனைவர் அ .கல்பனா, உதவிப்பேராசிரியர் தமிழ்த்துறை, நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவை -


முன்னுரை

சங்ககாலம் மனித வாழ்வின் முக்கிய இடத்தை பெறுகிறது . சங்ககாலமும் தமிழ் மொழியும் பிரிக்கமுடியாதது உலகின் மூத்த மொழிகளுள் ஒன்றாக விளங்குகின்ற மொழி தமிழ் மொழியாகும். 'கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றி மூத்தகுடி' என்று புறப்பொருள் வெண்பா மாலை என்ற புற இலக்கண நூல் கூறுவதைக் கொண்டு தமிழின் பழமையை உணரலாம். தொடக்க காலத்தில் தமிழ் எந்தப் பகுதியில் பேசப்பட்டது என்பதைத் தொல்காப்பியம் என்ற பழம்பெரும் இலக்கணநூல் கூறுகிறது.

சங்கம்

சங்கம் என்ற பெயரை முதலில் ஆராய்வோம். சங்க இலக்கியங்கள் என்று சொல்லப்படுகின்ற எட்டுத்தொகை, பத்துப்பாட்டு இலக்கியங்களில் சங்கம் என்ற சொல்லே பயன்படுத்தப்படவில்லை. கி.பி.400 வாக்கில் வச்சிரநந்தி என்பவர் நான்காம் சங்கம் தொடங்கினார். பிறகு சமணத் துறவிகள் சங்கம் என்ற சொல்லைப் பயன்படுத்திச் சமயத் தொண்டு ஆற்றினர். அந்தச் சொல்லைத் தான் பிற்கால இலக்கிய ஆசிரியர்கள் கி.பி.200க்கு முன் தோன்றிய இலக்கியங்களைச் சங்க இலக்கியங்கள் என்று அழைத்தனர். பாண்டிய மன்னர்கள் புலவர்களைக் கூட்டி வைத்துத் தமிழாய்ந்து, செய்யுட்கள் இயற்றிய அவையைச் சங்கம் என்று கூறினர்.

மேலும் படிக்க ...

யுடா அக்னாரியின் மழை நிலாக் கதைகள்! - நோயல் நடேசன் -

விவரங்கள்
- நோயல் நடேசன் -
நூல் அறிமுகம்
28 ஏப்ரல் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மாயா யதார்த்தம் எனப்படும் இலக்கிய வகை, Salman Rushdie (Midnight’s Children), Gabriel García Márquez (One Hundred Years of Solitude), மற்றும் அமெரிக்க கறுப்பின பெண் எழுத்தாளர் Toni Morrison (Beloved) போன்றோரின் படைப்புகளைப் படித்தபோது எனக்கு மிகுந்த ஈர்ப்பை ஏற்படுத்தியது.

யதார்த்த இலக்கியம் அன்றாடம் நாம் உண்ணும் இட்லி, தோசை போன்ற உணவாக இருந்தால், மாயா யதார்த்தம் விடுமுறையில் சுவைக்கும் இத்தாலிய அல்லது வியட்நாமிய உணவுப் போல புதுமையையும் இனிமையையும் தருகிறது.

இந்த உணர்வின் தாக்கத்தில்தான் நான் எழுதிய அசோகனின் வைத்தியசாலையில் போன்ற படைப்புகளில், பேசும் பூனை, கொல்லப்பட்ட பெண்ணின் ஆவி கதாநாயகியாக வருவது போன்ற அம்சங்களை பயன்படுத்தினேன். அதேபோல் தாத்தாவின் வீட்டில் என்ற படைப்பில், மனக்குழப்பமான கனவுகளின் வழியாக இந்தியாவில் இருந்து நாய்களை வரவழைத்து, எதிர்கால இலங்கை அரசியலைப் பற்றியும் சிந்தித்தேன். இவற்றை மாயா யதார்த்தம் எனக் கருதி, ஒரு சாதனை உணர்வுடன் நாவல்களாக உருவாக்கினேன்.

ஆனால், என்னை ஆரம்பப் பள்ளி மாணவனாகவே உணரச் செய்தது யுடா அக்னாரியின்  (Ueda Akinari)  சிறுகதைத் தொகுப்பு. 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்த ஜப்பானிய எழுத்தாளரின் ஏழு கதைகள் ‘மழை நிலாக் கதைகள்’ என்ற பெயரில், ஆஸ்திரேலியாவின் சிட்னியில் வாழும் தமிழ்ப் பெண் எழுத்தாளர் கீதா மதிவாணன் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க ...

இசை நாடக மேதை நாடக கவிமணி எம்.வி. கிருஷ்ணாழ்வார் (1985-1972) - த.சிவபாலு -

விவரங்கள்
- த.சிவபாலு -
கலை
28 ஏப்ரல் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நாடகக் கவிமணி எம்.வி. கிருஷ்ணாள்வார் கரவெட்டி மத்தியில் பிறந்து வளர்ந்தவர். நாட்டுக்கூத்தில் வல்லவராக அவர் வளர்ந்த வரலாறு ஈழத்து நாட்டக்கூத்து வரலாற்றில் ஒரு மைல்கல் எனலாம். பாடலுடன்இ ஆடலும் சேர்ந்து வர பொருளுக்கேற்ப பாடி ஆடுவது கூத்தின் பாங்கு. மிக நளினமாக தான் பூண்டுகொண்ட வேடத்திற்கேற்பவே மாறிவிடுகின்ற உன்னத நடிப்பாற்றல் கொண்டவர் அண்ணாவியால் என பிற்காலத்தில் எல்லோராலும் அழைக்கப்பட்டவரும் அறியப்பட்டவருமான நாடக கவிமணி அவர்கள். பாடல்களை இயற்றுவதிலும், அதனை இசையமைத்துப் பாடுவதிலும் வல்லவராக விளங்கினார். பண்டிதர்களும் ஏற்றிப்போற்றும் நிலைக்கு கவிதை யாப்பதில் தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாது விளங்கியவர். கரவெட்டியில் இடம்பெறும் அரசியல் பிரமுகர்களின் கூட்டங்களில் வாழ்த்துக் கவி இயற்றிப் பாடுவதிலும், அந்தியேட்டிச் சபிண்டீகரணத்தில் தான்எழுதிய கல்வெட்டில் உள்ள பாடல்களை மனமுருகப் பாடுவதிலும் சமத்தராக காணப்பட்டவர். சமத்துவத்தை வலியுறுத்தி சமதர்ம சமுதாயம் அமையவேண்டும் என விழைந்தவர். ஏழை எழியவர்களின் நண்பனாக, பட்டி தொட்டியெங்கும் சென்று கலைப்பணி ஆற்றியவர். அவரால் எழுதப்படும் இறந்தவரைப் பற்றிய நினைவலைகள் பிள்ளைகள் புலம்புவதாகவோ அன்றி மனைவி அல்லது கணவன் புலம்புவதாக அமையும்போது அவை உண்மையிலேயே நிகழ்ந்தவற்றைப் பின்னிப்பிணைந்தவைiயாக யதார்த்தமாக அமைந்திருப்பதற்கு அவர் இருந்த சூழலில் உள்ளவர்கள் அனைவரையும் அவர் நன்கு அறிந்திருந்தார். அவர்களில் வாழ்வில் ஒரு பங்காளராக, பார்வையாளராக அவர் மிக நெருக்கமாகப் பழகிவந்தமை அவரின் சமூகக்கண்ணோட்டத்தை எடுத்துக்காட்டுவன.

மேலும் படிக்க ...

காலத்தின் கரங்களும் ஜடப்பொருளின் சாட்சியமும்: அ.முத்துலிங்கத்தின் புனைவுகளில் இயற்கை - மானுட முரணியக்கப் பகுப்பாய்வு - ஈழக்கவி (ஏ.எச்.எம்.நவாஷ்) -

விவரங்கள்
- ஈழக்கவி (ஏ.எச்.எம்.நவாஷ்) -
ஆய்வு
24 ஏப்ரல் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 

சுருக்கம் (Abstract)

நோக்கம்: இக்கட்டுரை, ஈழத்துச் சிறுகதை உலகின் முன்னோடிப் படைப்பாளி அ.முத்துலிங்கம் அவர்களின் "ஆயுள்", "வமிசவிருத்தி", "கொழுத்தாடு" ஆகிய சிறுகதைகளை மையமாகக் கொண்டு, மனித இருப்பிற்கும் இயற்கையின் விதிகளுக்கும் இடையிலான முரண்பட்ட உறவினைப் பகுப்பாய்வு செய்கிறது. மனித மையவாதச் சிந்தனையிலிருந்து (Anthropocentrism) விலகி, காலத்தின் பிரம்மாண்டத்தையும், பருப்பொருட்களின் (Objects) நிலைத்தன்மையையும் இப்படைப்புகள் எவ்வாறு முன்வைக்கின்றன என்பதை ஆராய்வதே இவ்வாய்வின் முதன்மை நோக்கமாகும்.

முறையியல்: இவ்வாய்வு பின்நவீனத்துவக் கோட்பாடுகள், இருத்தலியல் நோக்கு (Existentialism) மற்றும் சூழலியல் விமர்சன (Ecocriticism) அணுகுமுறைகளைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது. கதைகளில் வரும் அறிவியல் தரவுகள் மற்றும் படிமங்கள் எவ்வாறு மெய்யியல் (தத்துவார்த்த) உண்மைகளாக மாற்றமடைகின்றன என்பது பண்புசார் பகுப்பாய்வு (Qualitative Analysis) முறையில் விளக்கப்பட்டுள்ளது.

கண்டுபிடிப்புகள்:

    ஆயுள்: இக்கதையில் மனிதனின் உணர்வுப்பூர்வமான வாக்குறுதிகளை விட, ரசாயனத் தன்மையுடைய பிளாஸ்டிக் குடுவை அதிக ஆயுளைப் பெற்றுள்ளது. இது மனிதனின் 'நிச்சயத்தன்மை' என்பது காலத்தின் முன் எவ்வளவு பலவீனமானது என்பதை உணர்த்துகிறது.

    வமிசவிருத்தி: உயிரினங்களின் உயிர் பிழைத்தல் மற்றும் சந்ததிப் பெருக்கம் என்பது ஒரு அறம் சார்ந்த செயல் என்பதை விட, அது இயற்கையின் தவிர்க்க முடியாத உயிரியல் விதி (Biological Law) என்பதை முத்துலிங்கம் நிறுவுகிறார்.

    கொழுத்தாடு: அதிகார படிநிலையில் மனிதன் இயற்கையைத் தன் நுகர்விற்காக மாற்றியமைப்பதையும், அந்தச் செயல்பாட்டில் நிகழும் அறவீழ்ச்சியையும் இக்கதை குறியீடாக்குகிறது.

மேலும் படிக்க ...

எல்.ஜோதிகுமாரின் '23-24 வயதுகளில் பாரதியின் வர்க்கச் சிந்தனைகள்' கட்டுரைக்கான எதிர்வினை! -பிரதா-

விவரங்கள்
-பிரதா-
இலக்கியம்
24 ஏப்ரல் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இந்த உரை, இளம் வயதிலேயே சுப்பிரமணிய பாரதி தனது அரசியல் சிந்தனைகளை எவ்வாறு படிப்படியாக வடிவமைத்துக் கொண்டார் என்பதை மிகவும் ஆழமான மற்றும் பல அடுக்குகள் கொண்ட அணுகுமுறையில் விளக்குகிறது.  இதில் அடங்கியுள்ள சிந்தனைகள் மூன்று முக்கிய கோட்பாட்டு தளங்களின் வழியாக தெளிவாகப் புரிந்துகொள்ளப்படுகின்றன. “மரபு–நவீனம் மோதல் (tradition - modernity)”, “அரசியல் சுயவடிவமைப்பு (political self-fashioning)”, மற்றும் “வெகுஜன அரசியல் (mass politics)”. இளம் பாரதி பழமையின் செழுமையுடனும், அதன் அறிவுச் சுவடுகளுடனும் ஆழமான தொடர்பை வைத்திருந்தாலும், அந்த மரபு அவரை நவீன அரசியல் தளத்திற்குள் நுழைவதில் தடையாக அமையவில்லை என்பது இவ்வுரையின் மைய வாதமாகத் தோன்றுகிறது. மாறாக, அந்த மரபை மறுப்பதற்குப் பதிலாக அதை மறுஅமைத்து (reconfiguration), புதிய அரசியல் கண்ணோட்டத்துடன் இணைக்கும் ஒரு செயற்பாட்டில் அவர் ஈடுபட்டார் என்பதே இங்கு வலியுறுத்தப்படுகிறது. காலனித்துவ சூழலில் உருவாகும் நவீனத்துவம் (postcolonial modernity) என்பது முழுமையான பழமையறுப்பு அல்ல. அது மாற்றியமைக்கப்பட்ட தொடர்ச்சி என்பதற்கு இவ்வுரை ஒரு வலுவான ஆதாரமாக விளங்குகிறது.

மேலும் படிக்க ...

கனடாவில் கட்டடக்கலைஞர் இ.மயூரநாதன் எழுதிய வரலாற்று நூலான 'யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு (1621 - 1948)' நூல் வெளியீடு! - தகவல்: ஓராயம் -

விவரங்கள்
- தகவல்: ஓராயம் -
நிகழ்வுகள்
24 ஏப்ரல் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கனடாவில் கட்டடக்கலைஞர் இ.மயூரநாதன் எழுதிய வரலாற்று நூலான 'யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு (1621 - 1948)' நூல் வெளியீடு!

கட்டடக்கலைஞர் இ.மயூரநாதன் எழுதிய வரலாற்று நூலான 'யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு (1621 - 1948)' நூல் வெளியீட்டு நிகழ்ச்சி மே 24 அன்று 'டொரோண்டோ'வில் நடைபெறவுள்ளது. அது பற்றிய ஓராயம் அமைப்பின் அறிவித்தலை இங்கு பகிர்ந்து கொள்கின்றோம். தமிழர் வரலாற்று நூல்களில் இந்நூல் மிகவும் முக்கியத்துவம் மிக்கது. யாழ்ப்பாண நகரின் பெளதிகக் கட்டமைப்பு, கட்டடச்சூழல் போன்றவற்றின் அடிப்படையில் நகரின் வரலாற்றை அணுகுவது இந்நூலின் முக்கிய சிறப்பம்சம். இத்தகவலை உங்களுக்குத் தெரிந்தவர்களுடன், தெரிந்த அமைப்புகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். இவ்விதமான நூல்களுக்கு ஆதரவளிப்பது நம் கடமை. ஆதரவளிப்போம்! நூல் வெளியீட்டை வெற்றிகரமானதாக்குவோம்!

எழுத்தாளர்களே! கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம் நடத்தும் நூல்களின் சங்கமம் (நூல் கண்காட்சி)!

விவரங்கள்
- தகவல்: ரவி கனகசபை -
நிகழ்வுகள்
24 ஏப்ரல் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எழுத்தாளர்களே! கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம் நடத்தும் நூல்களின் சங்கமம் (நூல் கண்காட்சி)!

எழுத்தாளர்களே! கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம் நடத்தும் நூல்களின் சங்கமம் (நூல் கண்காட்சி) எதிர்வரும் ஜூன் மாதம் 21 ஆம் திகதி ஸ்கார்பரோவில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் நீங்கள் உங்கள் நூல்களைக் காட்சிப்படுத்துவதற்கு, விற்பதற்கு நியாயமான கட்டணத்தில் ($30) வசதிகள் செய்து தருவார்கள். ஆர்வமுள்ளவர்கள் இங்குள்ள விண்ணப்பப்படிவத்தை நிரப்பிக் கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்துடன் தொடர்பு கொள்ளுங்கள்.

மேலும் படிக்க ...

(ஏப்ரில் 23 உலக புத்தக தினம்) வ.ந.கிரிதரனின் பாடல் அவரது குரலில் : "ஆழ நடுக்காட்டில் என்னை இருத்தி வாழு என்று சொன்னால் வாழுவேன்".

விவரங்கள்
- வ.ந,கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
23 ஏப்ரல் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

வ.ந.கிரிதரனின் குரலில் இசையமைத்துப் பாடுவது SUNO 5.5
ட்ஜிட்டல் ஓவியம் - சாட் ஜிபிடி வழி வநகி

ஆழ நடுக்காட்டில் என்னை இருத்தி
வாழு என்று சொன்னால் வாழுவேன்

வாசிக்கப் புத்தகம் இருந்து விட்டால்
வனமும் எனக்குச் சொர்க்க புரிதான்.
யோசிக்க வைப்பதும் புத்தகம் தான்.
யோசிப்பற்ற வாழ்வில் சுவை உண்டா?

ஆழ நடுக்காட்டில் என்னை இருத்தி
வாழு என்று சொன்னால் வாழுவேன்

புத்தகம் அற்ற உலகம்  எனக்கு
சித்தம் அற்ற வெறும் உடல்தான்.
இத்தரையில் இருப்பதற்கு புத்தகம் அவசியம்.
புத்தகம் அற்ற நிலம் பாழ்நிலமே.

ஆழ நடுக்காட்டில் என்னை இருத்தி
வாழு என்று சொன்னால் வாழுவேன்

மேலும் படிக்க ...

காந்திய அடித்தளத்தில் பெண் முன்னேற்றத்திற்கான பல்வேறு பரிமாணங்கள்!! - முனைவர் கு.வளர்மதி -

விவரங்கள்
- முனைவர் கு.வளர்மதி -
சமூகம்
22 ஏப்ரல் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கட்டுரையாசிரியர் - முனைவர் கு.வளர்மதி, உதவிப்பேராசிரியர், இளங்கலைத் தமிழ்த்துறை, தி ஸ்டாண்டர்டு ஃபயர்ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி, சிவகாசி -


முன்னுரை

இன்றைய உலகில் பெண்களின் பங்கு மகத்தானது. ‘மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா’ என்ற கவிமணியின் வாக்கினை ஏற்ற பல தலைவர்களுள் அண்ணல் காந்தியடிகளும் ஒருவர். பெண்ணைக் காட்டிலும் சிறந்தது வேறு இல்லை என திருவள்ளுவரும், வருங்காலம் பெண்ணுடையது தான் என வினோபாஅடிகளும் கூறுகின்றனர். அடிப்படையில் ஆண், பெண் இருவருக்கும் ஆன்மா ஒன்றே. இருவருக்கும் உணர்வுகளும் ஒன்றே. ஒருவர் மற்றவர் உதவியின்றி வாழமுடியாது. ஆண் காலங்காலமாக பெண் மீது ஆதிக்கம் செலுத்தி வந்திருப்பினும், ஆடவரிடையே தோன்றிய மகான்கள் பெண்ணை ஆணுக்குச் சமமென்றே மதித்திருக்கிறார்கள். பெண்களின் முன்னேற்றத்தில் காந்தியடிகளின் பங்கு கணிசமானது என்பதை மறைக்க முடியாது. காந்திய அடித்தளத்தில் பெண் முன்னேற்றத்திற்கான பல்வேறு பரிமாணங்களை விளக்குவதாக இக்கட்டுரை அமைகிறது.

மேலும் படிக்க ...

சுப்ரபாரதிமணியன் அவர்களின் அந்நியர்கள் – நாவல் ஒரு பார்வை! -டாக்டர். சீதாராமசாமி, பேராசிரியர் பிலோமினா கல்லூரி, மைசூரு -

விவரங்கள்
-டாக்டர். சீதாராமசாமி, பேராசிரியர் பிலோமினா கல்லூரி, மைசூரு -
நூல் அறிமுகம்
22 ஏப்ரல் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

சிறந்த நாவலுக்கான எழுத்து அறக்கட்டளையின் ஒரு லட்சம் ரூபாய் பரிசு பெற் சிறப்புடையது இந்த நாவல். அந்நியர்கள் யார் என்ற கேள்வியை பல்வேறு தளங்களில் எழுப்பும் நாவல் இது. இந்த நாவலில் சில முக்கியக் கதாபாத்திரங்களைப் பார்ப்போம். துளசி –+ (ராம்சந்த்) கிஷோர், கணேசன்-+ சத்யா; சுரேஷ்+ கல்பனா- ((துர்காவைக் காப்பாற்றுபவள்) தூயவன் – தம்பி ரங்கராஜன். இவை தவிர சிறு சிறு இடங்களில் வரும் நிறைய கதாபாத்திரங்கள்.


மேற்கண்ட பட்டியலில் மிகவும் தேறாதவன் என்றால் அவன் சுரேஷ்தான்.  பலமுறை கல்பனா அவனைத் திருத்த முயன்றும் முடியாமல் போகிறது.  ஊருக்கு வேலை தேடி வரும் பெண்கள் என்றால் இவனுக்குக் கொண்டாட்டம்தான்.  பனியன் கம்பெனி வைத்திருக்கிறான்.  அதில் ஒரு சமயம் ஒரு கேரள ஆளை நம்பி ஐம்பதாயிரம் இழந்திருக்கிறான்.  வாழ்க்கை போராட்ட மயமானது என்று உணர்ந்தாலும் சிறு பெண்கள் அல்லது அபலைகளாக வருபவர்கள், அல்லது ஏதாவது வேலை தேடி வருபவர்கள் என அவன் கண்ணுக்குத் தெரிந்து பட்டால் வேறு வினையே வேண்டாம்.

பலமுறை கல்பனா வேதனைப் படுகிறாள்.  ஆனால் என்ன பலன். அவளிடத்திலேயே அவன் தாறுமாறாக, இன்னும் எவ்வளவு சிறுமை படுத்த முடியுமோ அப்படி அவளைத் தன் சொற்களால் ஊனமாக்குகிறான்.  ஒருமுறை சுவருக்கு சுண்ணாம்பு பூசுதல் பற்றிய பேச்சு வருகிறது. dசுண்ணாம்பு பூச வில்லையென்றால் அது கேவலமான பொம்பள மாதிரி இருக்கும் என்று கல்பனா சொல்ல, அதற்கு அவன் உன்ன மாதிரியா என்கிறான்.  பேச்சு வலுக்கிறது.

மேலும் படிக்க ...

நெதர்லாந்து அரசியலமைப்பு! - பவானி சற்குணசெல்வம் -

விவரங்கள்
- பவானி சற்குணசெல்வம் -
அரசியல்
22 ஏப்ரல் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


நெதர்லாந்து எந்த வகையான அரசாங்கத்தைக் கொண்டுள்ளது? நெதர்லாந்து அரசியலமைப்பு முடியாட்சியைக் கொண்ட ஒரு பரவலாக்கப்பட்ட அரசியலமைப்பைக் கொண்டது. முக்கியமான சட்டம் மத்திய அரசால் மேலோட்டமாக உருவாக்கப்படுகிறது,

ஆனால் விரிவான விளக்கம் உள்ளூர் அதிகாரிகளுக்கு விடப்படுகிறது. அரசியலமைப்பு முடியாட்சி என்பதில் அரசியலமைப்பில் ராஜாவின் நிலைப்பாடு வகுக்கப்பட்டுள்ளது. ராஜா, அமைச்சர்களுடன் சேர்ந்து அரசாங்கத்தை உருவாக்குகிறார் என்று அரசியலமைப்பு கூறுகிறது. மன்னர் நெதர்லாந்து இராச்சியத்தின் தலைவராக உள்ளார். ஏப்ரல் 30, 2013 முதல் வில்லெம்-அலெக்சாண்டர் நெதர்லாந்து நாட்டின் ராஜாவாக இருக்கிறார். ஏப்ரல் 27 அன்று நாங்கள் ராஜாவின் பிறந்த நாளை நாடு முழுவதும் அனைத்து வகையான நிகழ்ச்சிகளுடன் களிப்புடன் கொண்டாடுவோம். பிற நாடுகளில் வேறுபட்ட அரசியல் அமைப்புகள் உள்ளன, எடுத்துக்காட்டாக குடியரசு.

புகைப்படம் மன்னர் வில்லெம்-அலெக்சாண்டர் மற்றும் ராணி மாக்சிமா, அமலியா, அலெக்ஸியா மற்றும் அரியேன ஆகிய மூன்று மகள்களுடன்.

உதாரணமாக:

மன்னர் நெதர்லாந்தின் பொறுப்பாளரா?

இல்லை, ராஜா அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருக்கிறார், ஆனால் முக்கியமாக ஒரு சடங்கு செயல்பாடு உள்ளது, அதாவது அவர் அரசாங்கத்தின் சார்பாக விருந்தினர்களைப் பெறுகிறார் மற்றும் நாடு முழுவதும் நிறைய வேலைகளைச் செய்கிறார். நாட்டின் பிரதிநிதியாக, அவர் வெளிநாடுகளுக்கு செல்கிறார்.

மேலும் படிக்க ...

இலக்கியவெளி நடத்தும் இணையவழி ஆய்வரங்கு – 58: “எஸ். அகஸ்தியர் படைப்புகள் - கலை இலக்கியமும் வர்க்க நிலைப்பாடும்” - தகவல்: அகில் -

விவரங்கள்
- தகவல்: அகில் -
நிகழ்வுகள்
22 ஏப்ரல் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

  Join Zoom Meeting  | Meeting ID: 389 072 9245 |  Passcode: 12345    

இலக்கியவெளி நடத்தும் இணையவழி  ஆய்வரங்கு  – 58: “எஸ். அகஸ்தியர்  படைப்புகள் - கலை இலக்கியமும் வர்க்க நிலைப்பாடும்”  
   
ஒருங்கிணைப்பு:  த. சிவபாலு | நாள்:  சனிக்கிழமை 09-05-2026

நேரம்:  
    இந்திய நேரம் - மாலை 6.30
    இலங்கை நேரம் - மாலை 6.30
    கனடா நேரம் - காலை 9.00
    இலண்டன் நேரம் - பிற்பகல் 2:00
    
வழி: ZOOM    

Join Zoom Meeting  | Meeting ID: 389 072 9245 |  Passcode: 12345    

மேலும் படிக்க ...

மினாப் 168: ஒரு நிரந்தரக் கையெழுத்து - ஈழக்கவி -

விவரங்கள்
- ஈழக்கவி -
கவிதை
22 ஏப்ரல் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 

(மீமெய்ம்மை வடிவம் - Surrealist High-Modernist Style) 

வானத்தின் நரம்புகளில்
ஒரு இரும்புப் பறவை நுழைகிறது.
அதன் வயிற்றில் 168 ஆத்மாக்கள்—
இலக்கங்களல்ல,
உறையவைக்கப்பட்ட காலத்தின் துளிகள்.

பாஸ்போர்ட்டின் பக்கங்களில்
தேசங்களின் முத்திரைகள் இல்லை;
பதிலாக, உலராத மை தீட்டிய
பிஞ்சு விரல்களின் ரேகைகள்.
ஒவ்வொரு பையிலும்
ஒரு 'நாளை' இருக்கிறது,
அது ஒருபோதும் 'இன்று' ஆக மாறாத
ஒரு அகதிச் சொல்.

இஸ்லாமாபாத்தின் மேசைகள்
வரைபடங்களால் மூச்சுத்திணறுகின்றன.
அங்கே சொற்கள்—
இரத்தம் தோய்ந்த கத்தரிக்கோல்கள்.
அவர்கள் அமைதியைப் பற்றிப் பேசுகிறார்கள்,
ஆனால் அந்த அறையின் ஜன்னல் வழியே
குழந்தைகளின் சிரிப்பு
நட்சத்திரங்களாக உதிர்ந்து கொண்டிருக்கிறது.

மேலும் படிக்க ...

மூத்த ஊடகவியலாளர் கலாபூஷணம் கே. பொன்னுத்துரை பவளவிழா!

விவரங்கள்
- தகவல்: கே. பொன்னுத்துரை -
நிகழ்வுகள்
21 ஏப்ரல் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எனது ஊகம் மட்டுமே: தமிழகச் சட்டசபைத் தேர்தல் முடிவுகள் 2026! - நந்திவர்மப்பல்லவன் -

விவரங்கள்
- நந்திவர்மப்பல்லவன் -
அரசியல்
21 ஏப்ரல் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


தமிழகச் சட்டசபைத் தேர்தல் ஏபரில் 23 நடைபெறவுள்ளது.  இத்தேர்தல் பற்றிய கருத்துக் கணிப்புகளில்  பெரும்பாலானவை திமுகவின் வெற்றியையே எதிர்வு கூறுகின்றன.  இந்நிலையில் தற்போது நிலவும் அரசியல் சூழலின் அடிப்படையில் தேர்தல் முடிவுகள் பற்றிய என் ஊகத்தை முன் வைக்கின்றேன். 

கடுமையான போட்டி திமுகவுக்கும் அதிமுகவுக்குமிடையில்தான் நடக்கின்றது. நடிகர் விஜய்யிற்கு வெறித்தனமான , பெரும்பாலும் இள வயதினரான  இரசிகர்களின் ஆதரவு உண்டு.  'நாம் தமிழர்' சீமானுக்கு அவரது உறுதியான தமிழ்த்தேசிய வெளிப்பாடு காரணமாக வாக்காளர்களில் ஒரு குறிப்பிட்ட அளவில் ஆதரவு உன்டு.

அதிமுகவைப் பொறுத்த வரையில் என்னைப் பிரமிப்படைய வைத்தவர் எடப்பாடி பழனிச்சாமி. சசிகலா அணி, செங்கோட்டையன் அணி, ஓபிஎஸ் அணி எனப் பிரிந்திருந்த அதிமுக இத்தேர்தலில் காணாமல் போகுமென்று அரசியல் அவதானிகள், ஆய்வாளர்கள் எண்ணிக்கொண்டிருந்த காலகட்டத்தில் திமுகவுக்கு எதிரான பலமான  எதிரியாக அதிமுகவை எடப்பாடி பழனிச்சாமி கொண்டு வந்திருப்பது அவரது ஆளுமைக்குக் கிடைத்த  வெற்றி. அவரது பலவீனம் பாஜகவுடன் கூட்டுச் சேர்ந்திருப்பது மட்டுமல்ல, அதன் அடிவருடிபோல் செயற்படுவது. மோடி அரசு இவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளைத் துருப்புச்சீட்டாக வைத்து இவரைத்  தம் கைகளுக்குள் அடக்கி வைத்திருப்பது போல்  தெரிகிறது.

மேலும் படிக்க ...

வாசிப்பும், யோசிப்பும்: கலாநிதி சிரினிமல் லக்துசிங்க (Dr. Sirinimal Lakdusinghe) மறைந்தார்! & நவீனக் கவிஞர்களும், மரபுக் கவிதையும்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன்
வ.ந.கிரிதரன் பக்கம்
21 ஏப்ரல் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

என்னுடைய 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு ' ஆய்வு நூல் எழுத்தாளர் ஜி.ஜி.சரத் ஆனந்தவின் சிங்கள மொழிபெயர்ப்பில் ,. ஆகச பதிப்பக வெளியீடாக வெளியானது. அந்நூலுக்கு அணிந்துரை எழுதியவர் தொல்லியல் அறிஞரும், தேசிய அருங்காட்சியகத்தின் முன்னாள் இயக்குநருமான கலாநிதி சிரினிமல் லக்துசிங்க (Dr. Sirinimal Lakdusinghe)  அவர்கள். என்னை அவருக்குத்  தெரியாது. இருந்தாலும் என் நூலை வாசித்து அதற்கோர் அணிந்துரை எழுதியவர் அவர். அவர் அண்மையில் மறைந்த தகவலினைத் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் சரத் ஆனந்த அவர்கள். அவர் இழப்பால் வாடும் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கல்.

மேலும் படிக்க ...

புறநானூற்றில் துணைவஞ்சி! - வி. துர்காஸ்ரீ, முனைவர் பட்ட ஆய்வாளர், காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம் -

விவரங்கள்
- வி. துர்காஸ்ரீ, முனைவர் பட்ட ஆய்வாளர், காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம் -
ஆய்வு
19 ஏப்ரல் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


கட்டுரையாசிரியர் : வி. துர்காஸ்ரீ, முனைவர் பட்ட ஆய்வாளர்,  காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம்  - நெறியாள்கை: முனைவர் சி.சிதம்பரம் -


முன்னுரை:

சங்க இலக்கியங்கள் அகம், புறம் என இரு பகுப்புகளை உடையது. இரண்டு பகுப்பிற்கும் அதற்கென திணை, துறைகள் இலக்கண நூலோரால் வகுக்கப்பட்டுள்ளன. அதனை முதன்மையாகக் கொண்டே எட்டுத்தொகை நூல்கள் பிற்காலத்தில் தொகுக்கப்பட்டுள்ளன. அவ்வாறு தொகுக்கப்பட்டுள்ள நூல்களுள் ஒன்றான புறநானூற்றில் வஞ்சித்திணையின் கீழ் துணைவஞ்சி என்ற துறையின் பெயரில் ஆறு பாடல்கள் உள்ளன. ஆனால் தற்போதுவரை கிடைக்கப்பெற்றுள்ள புற இலக்கண நூல்கள் எவற்றிலும் துணைவஞ்சி என்னும் இத்துறையானது சுட்டப்பெறவில்லை. இவ்வாய்வுக் கட்டுரை துணைவஞ்சி என்ற புறத்துறையின் விளக்கத்தினையும், எந்த அடிப்படையில் இத்துறை தோன்றியது என்பதையும் விளக்க முற்படுகின்றது.


துணைவஞ்சி - துறைவிளக்கம்

புறநானூற்றிற்கு உரை வரைந்த உ.வே. சாமிநாதையர், துணைவஞ்சி என்பதற்கு "ஒரு துறை, பிறரை வெல்லவாவது கொல்லவாவது துணிந்து நிற்கின்றானொருவனைச் சில கூறிச்சந்தி செய்வித்தல்" 1 என்கிறார். அதாவது போரில் தனது எதிரியை கொன்று வீழ்த்தி அல்லது சிறைபிடித்தாவது வெல்லுவேன் எனக் கோபம் கொண்டு துணிந்து நிற்பவன் ஒருவனை அறிவுரை கூறி தடுத்து நிறுத்துதலாகும். போர் செய்ய விரும்புவனை அறம் குறித்த நன்மொழிகள் கூறி தணித்து, உணரவைத்து போர் நிகழாமல் தடுத்து நிறுத்துவதைக் குறிப்பது துணைவஞ்சி என்ற துறையின் பொருண்மையாக அமைகிறது. துணைவஞ்சி என்ற துறையின் கீழ் புறநானூற்றில் 6 பாடல்கள் இடம்பெற்றுள்ளன

மேலும் படிக்க ...

கு.சின்னப்ப பாரதியின் 'சர்க்கரை' புதினத்தில் முதலாளித்துவமும் தொழிலாளர் வர்க்கமும்! - முனைவர் வ.கோபாலகிருஷ்ணன் -

விவரங்கள்
- முனைவர் வ.கோபாலகிருஷ்ணன் -
ஆய்வு
19 ஏப்ரல் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 


கட்டுரையாசிரியர் - முனைவர் வ.கோபாலகிருஷ்ணன், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சேலம் - 636005, பெரியார் பல்கலைக்கழக இணைவு பெற்றது, சேலம், தமிழ்நாடு, இந்தியா. ( Orcid: https://orcid.org/0000-0002-9465-4421) 

முகவுரை

தொழிலாளர்கள் என்போர் சமுதாயத்தில் சிக்கலுக்கு ஆளாக்கப்படக்கூடிய  குழுவினர் ஆவர். இவர்களுடைய நிலை பல ஆண்டுகளாகப் பல விதங்களில் இன்பம், துன்பம், அவலம் போன்ற பல பிரச்சினைகளில் அமைந்துள்ளது. இவற்றைத் தட்டிக்கேட்பதற்காகவும் இவர்களுடைய உரிமைகளுக்குப் போராடவும் தொழில் சங்கங்கள், தொழிலாளர் நல வாரியம் போன்ற பல அமைப்புகள் இருந்தாலும் தொழிலாளர்களுக்குச் சிக்கல்கள் இருந்துகொண்டே இருக்கின்றன. இவற்றை எல்லாம் தீர்ப்பதற்கு அரசியல், தனி நபர் சூழ்ச்சி போன்ற பல தடைகள் இருக்கின்றன. இத்தடைகள் யாவும் தொழிலாளர்களைப் பாதிக்கின்றன. ஒரு கட்டத்தில் தொழிலாளர்கள் தங்கள் பிரச்சினைகளை எடுத்துரைக்க முடியாமல் போகின்றனர். இந்நிலை  தற்கால இலக்கியங்கள் என்று கருதப்படுகின்ற நாவல் இலக்கியங்களில் பேசப்படுகிறது. அவற்றில் ஒன்றாக கு.சின்னப்ப பாரதி எழுதியுள்ள சர்க்கரை எனும் புதினம் அமைந்துள்ளது. இவற்றிலுள்ள முதலாளித்துவமும் தொழிலாளர் வர்க்க நிலையையும் பற்றிக் காண்பதே இவ்வாய்வின் நோக்கமாகும்.

தொழிலாளர் அறிமுகம்

தொழிலாளர்கள் என்போர் பொருளாதார தேவைக்காகப் பிறரிடம் வேலைப் பார்த்து அவ்வேலைக்கேற்ற ஊதியத்தைப் பெறுபவர்களே ஆவர். இவர்கள் தங்களின் குடும்ப தேவைக்காகவும் எதிர்கால சேமிப்புக்காகவும் உழைத்து வாழக்கூடிய வர்க்கத்தினர் ஆவர். மேலும், “மக்களின் சமூக வாழ்க்கை, நிலத்தை அடிப்படையாக வைத்து அமைகிறது. நிலத்துடனான உடல் உழைப்பு என்பதோடு மட்டுமல்லாது சகமனிதர்கள் உடனான உறவு நிலையைப் பொறுத்தும் சமூக வாழ்க்கை பொருள் உடையதாகிறது. நிலங்கள் பகுக்கப்பட்டு நிலத்தினை அடிப்படை ஆதரமாக வைத்து அமைந்த தொழில் பிரிவுகளும் தோன்றக் காரணமாயிற்று”1 என்ற கூற்றைக் காணும் போது தொழிலாளர்கள் என்போர் உடல் உழைப்பு, குடும்ப பொருளாதாரம் ஆகியவற்றிக்குப் பாடுபடக்கூடிய நிலையில் இருப்பவர்கள்; என்பதை இதன் வழியாக அறிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க ...

காலத்தை ஊடறுத்துப் பாயும் நதி – நடேசனின் 'தாத்தாவின் வீடு 'நாவல் - சி. ரமேஸ்

விவரங்கள்
- சி. ரமேஸ்
இலக்கியம்
18 ஏப்ரல் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இலங்கையின் வட மாகாணத்தின் எழுவைதீவு என்ற பிரதேசத்தில் அம்பலவாணர் சின்னத்தம்பி - ஆனந்தராணி நமச்சிவாயம் இணையருக்கு டிசெம்பர் 23,1954 அன்று மகனாகப் பிறந்த நோயல் சின்னத்தம்பி நடேசன்ஆரம்பக் கல்வியை எழுவைதீவு முருகவேள் பாடசாலையிலும் நயினாதீவு மகாவித்தியாலத்திலும் உயர்கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் பயின்றார். பேராதனை பல்கலைக்கழத்தில் தனது பட்டப்படிப்பை நிறைவு செய்தார். ஆஸ்திரேலியாவில் சிட்னி நியு சவுத்வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் முதுமாணி (முதுகலை) பட்டம் பெற்றவர் நோயல் நடேசன், 1984 - 1987 காலப்பகுதியில் தமிழகத்தில் தங்கியிருந்தபோது, தமிழர் மருத்துவ சேவை என்ற நிறுவனத்தை உருவாக்கினார். அந்த நிறுவனத்தில் நோயல் நடேசனுடன் மருத்துவரான அவரது மனைவியும் பணியாற்றினார். 1987-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்தார். இலங்கை, இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் 40 வருடங்கள் விலங்கு மருத்துவராக பணிபுரிந்து, ஓய்வு பெற்று, தற்போது மெல்பேர்னில் வசித்து வருகிறார். நோயல் நடேசன் ஏப்ரல் 1984-இல் 'உதயம்' மாத இதழை மெல்பேர்னில் ஆரம்பித்தார். 13 வருடங்களாக நிர்வாக ஆசிரியராகப் பணியாற்றினார். 2009 ஆம் ஆண்டு வரை 'உதயம்' பத்திரிகை ஆஸ்திரேலியாவில் தொடர்ச்சியாக வெளியானது. 'உதயம்' பத்திரிகையில் பல பத்திகள், சிறுகதைகள், தொடர்கள், தான் பணிபுரிந்த மிருக வைத்தியத்துறைசார் அனுபவங்கள் என்பவற்றை நோயல் நடேசன் எழுதினார். 1980-1983 ஜூலை வரையான காலத்தில், இலங்கையின் - மதவாச்சி பகுதியில் மிருக வைத்தியராக பணிபுரிந்த காலப் பின்னணியில் எழுதப்பட்ட நடேசனின் வண்ணாத்திக்குளம் என்ற முதலாவது நாவல் 'மித்ர 'பதிப்பகத்தினால் வெளியானது. இந்நாவல் பின்னர் ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்யப்பட்டது.

1980-83 கால கட்டத்திலே இலங்கை மக்களின் வாழ்க்கை முறைகளையும் இலங்கையின் அரசியல் பொருளாதார – சமூக நிலை மாற்றங்களையும் எடுத்துரைக்கும் நாவலே வண்ணாத்திக் குளம்.நடேசன் நாவலில் வரும் பதவியாக்குளம் எனப்படுகின்ற வண்ணாத்திக்குளம் தற்போது. இது ஒரு சிங்களக் குடியேற்றப் பிரதேசமாக மாறிப்போயுள்ளது. நடேசனின் சொந்த அனுபவங்களின் பிரதிபலிப்பே இந்நாவல். யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் மிருக வைத்தியர் ஒருவர் தொழில் நிமித்தமாக மதவாச்சி சென்று தான் தங்கியிருக்கும் விடுதியில் கூடவே தங்கியிருக்கும் பதவியாவைச் சேர்ந்த சிங்கள இளைஞனின் தங்கையைக்; கண்டு, காதல் கொண்டு பதிவுத் திருமண மூலம் கணவன் மனைவியாக வாழ முற்படும் போது நாட்டு நிலை அவ்விருவரையும் நேர்ந்து வாழ இடமளிக்காது புலம்பெயர்ந்து செல்லவேண்டிய நிலைக்குத் தள்ளுகிறது. இதன் வெளிப்பாடே வண்ணாத்திக் குளம்.

மேலும் படிக்க ...

கனடா - ரொறன்ரோவில் நூல் வெளியிட்டு விழா! - சுலோச்சனா அருண் -

விவரங்கள்
- சுலோச்சனா அருண் -
நிகழ்வுகள்
17 ஏப்ரல் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

சென்ற ஞாயிற்றுக்கிழமை 12-4-2026 கனடாவில் ரொறன்ரோவில் உள்ள இஸ்காபரோ சிவிக் சென்ரர் மண்டபத்தில் பண்டிதர் ம.செ. அலெக்ஸாந்தர் அரங்கில் கனடா தமிழ் எழுத்தாளர் இணையம், கனடா கவிஞர் கழகம் ஆகியவற்றின் முன்னாள் தலைவரான கவிஞர் அகணி சுரேஸ் அவர்களின் நூல்கள் வெளியீட்டு நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை குமரகுரு கணபதிப்பிள்ளை, ஜோதி ஜெயகுமார் ஆகியோர் கொண்டு நடத்தினர். முதலில் மங்கல விளக்கேற்றல், கனடாப்பண், தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து அகவணக்கம் இடம் பெற்றது. தொடர்ந்து ‘அகணி விருதுகள்’ அங்குரார்ப்பணம் செய்யப்பட்டு, சயனிகா சுரேஸ் அவர்களின் தலைமையுரை இடம் பெற்றது.

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல்: "முன்வரலாற்றுக் கால தமிழகம் ; இடம் - மனிதர்கள் - மொழி. அண்மைக் கால உரையாடல்கள்."
  2. சிறுகதை: கைக்குள்… -பாலமுருகன்.லோ -
  3. பதிவுகள் இணைய இதழுக்குப் படைப்புகள் அனுப்பும் எழுத்தாளர்களுக்கு!
  4. இரங்கல் செய்தி - டாக்டர் தி. ஞானசேகரன்! – குரு அரவிந்தன் -
  5. சித்திரைத் திருமகளை வரவேற்போம் வாருங்கள்!! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண், அவுஸ்திரேலியா -
  6. கனடாவில் கட்டடக்கலைஞர் இ.மயூரநாதன் எழுதிய வரலாற்று நூலான 'யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு (1621 - 1948)' நூல் வெளியீடு!
  7. ஞானம் ஆசிரியர் ஞானசேகரன் - படைப்பிலக்கியத்துறையிலிருந்து இதழாசிரியராகவும் பதிப்பாளராகவும் பரிணமித்த ஆளுமை! - முருகபூபதி -
  8. அஞ்சலி: எழுத்தாளர் ஞானசேகரன் மறைந்தார்! - வ.ந.கிரிதரன் -
  9. அறிவியல் அறிஞர் வெங்கட்ரமணனின் 'ஒளியிலிருந்து இருளுக்கு' நூல் பற்றிய குறிப்புகள்! - வ.ந,கிரிதரன் -
  10. நீலகிரி படகர்களின் ‘சுத்துக் கல்லு மொரா’ எனும் கடவுள் முதுமரமும் சங்கக் கூறுகளும்! - முனைவர்.கோ.சுனில்ஜோகி , உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோவை -
  11. நனவிடை தோய்தல்: குழையல் சோறு! - இந்து.லிங்கேஸ் -
  12. அமெரிக்கப் பயணத்தொடர்: மேற்கு அமரிக்கா (3 & 4) - நடேசன் -
  13. எமிலியின் ‘கோண்டல்’ எனும் புனைவுலகம்! - முனைவர் பத்மா ஸ்ரீ்தர் (நாங்குநேரி வாசஸ்ரீ்) -
  14. 23-24 வயதுகளில் பாரதியின் வர்க்கச் சிந்தனைகள் (4)! - எல்.ஜோதிகுமார் -
பக்கம் 1 / 126
  • முதல்
  • முந்தைய
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • அடுத்த
  • கடைசி