பதிவுகள் முகப்பு

ஈழக்கவி கவிதைகள் - அக-நகரத்தின் வாசல்கள்

விவரங்கள்
- ஈழக்கவி -
கவிதை
22 பிப்ரவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஒரு முன்னுரை

"வாசிப்பு என்பது ஒரு திறப்பு; கவிதை என்பது அந்தத் திறப்பின் வழி நுழையும் ஒளி."

இந்த வலைப்பதிவு, ஒரு தனிமனிதனின் அகப்பயணத்தை வார்த்தைகளாக மாற்றும் ஒரு முயற்சி. இங்கே கவிதைகள் வெறும் சொற்களின் கூட்டமல்ல; அவை காலத்தின் சுவர்களில் படிந்திருக்கும் நினைவுகளின் ரேகைகள்.

"அக-நகரத்தின் வாசல்கள்" - இந்தப் பெயர் உணர்த்துவது போல, ஒவ்வொரு கவிதையும் ஒரு ரகசியக் கதவைத் திறக்கும். அந்த வாசல்களுக்குப் பின்னே:

மௌனமாகப் பேசும் நிழல்கள் உண்டு.
காலத்தை ஒரு நகரமாகப் பார்க்கும் விசித்திரப் பார்வை உண்டு.
தன்னைத் தேடிப் புறப்பட்டு, இறுதியில் பிரபஞ்சத்தின் இசையோடு ஒன்றிப்போகும் ஒரு பெண்ணின் ஆன்ம விடுதலையுண்டு.

இந்தத் தொகுப்பு, ஒரு பிம்பத்திலிருந்து பிம்பமற்ற நிலைக்கு (Abstraction) நகரும் ஒரு பயணம். இதில் வரும் 'அவள்', வெறும் ஒரு பாத்திரமல்ல; நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் அந்தத் தேடல் மிக்க ஆன்மாவின் பிரதிபலிப்பு.

நிழல்கள் மெல்ல ஒளியாக மாறும் இந்த ரசவாதத்தைக் காண, இந்த வாசல்களின் வழியே உங்களை அன்புடன் அழைக்கிறேன்.

- ஈழக்கவி -


1. உருமாற்றம் (அவளின் உளநிலை மாற்றங்கள்)

அகத்தின் அலைக்கழிப்பில் 
ஒரு வண்ண விளிம்பில் நிற்கிறாள். 
பழைய நிழற்படங்கள் 
தொட முடியாத 
தொலைவில் சுடர்விடுகின்றன.

"நான் நானல்ல" – 
அவளின் பிரகடனம். 
பிறர் பார்வையின் கோடுகள் 
அவளைச் சித்திரமாக்க முடியாது.

அவளுக்குள் ஒரு புயல் 
இப்போது மெல்லப் பச்சையமாகிறது. 
அச்சம் என்பது 
கடந்து போக வேண்டிய 
ஒரு நிலப்பரப்பு.

நிழலுக்கு வெளியே 
அவளுக்காகக் காத்திருக்கிறது 
இன்னும் பெயரிடப்படாத 
ஒரு பிரகாசம்.

மேலும் படிக்க ...

கோவிற் கலையும் தமிழரும்! - முனைவர். அ. ஸ்ரீதேவி -

விவரங்கள்
- முனைவர். அ. ஸ்ரீதேவி -
ஆய்வு
20 பிப்ரவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கட்டுரையாளர்  - முனைவர். அ. ஸ்ரீதேவி , துறைத்தலைவர் தமிழ்த்துறை, நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்.105 -


திறவுச் சொற்கள்:

சிற்பம் – கல், மரம் அல்லது உலோகத்தில் செதுக்கப்பட்ட கலை வடிவம்
• சிலை – வழிபாட்டிற்கோ அலங்காரத்திற்கோ பயன்படும் மனித அல்லது தெய்வ உருவம்
• கோபுரம் – கோவிலின் நுழைவாயிலில் அமைந்த உயரமான கட்டிட அமைப்பு
• விமானம் – கருவறையின் மேல் அமைந்த கட்டிட அமைப்பு
• மண்டபம் – திருவிழா, இசை, நடனம் போன்ற நிகழ்வுகளுக்கான கூடம்

முன்னுரை

கோவில்கள் தமிழர்களின் சமய நம்பிக்கைகள் மற்றும் பண்பாட்டின் மையமாக விளங்குகின்றன. இவை வழிபாட்டுத் தலங்களாக மட்டுமல்லாது கட்டிடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை மற்றும் கல்வெட்டு போன்ற கலை வளர்ச்சியின் மையங்களாகவும் இருந்துள்ளன. தமிழ் கோவில்கள் திராவிடக் கட்டிடக்கலையின் தனித்துவத்துடன் கூடியன; உயரமான கோபுரங்கள், விமானங்கள், மண்டபங்கள் மற்றும் நுணுக்கமான சிற்ப அலங்காரங்கள் தமிழர்களின் அழகியல் பார்வையையும் நுட்பமான கலைத் திறனையும் வெளிப்படுத்துகின்றன. கோவில்கள் கல்வி, இசை, நடனம், மற்றும் சமூக ஒருங்கிணைப்புக்கும் முக்கிய பங்களிப்பை செய்துள்ளன. இதன் மூலம் தமிழர் வாழ்வியல், ஆன்மிக சிந்தனை மற்றும் பண்பாட்டின் அடையாளம் கோவில்களில் பிரதிபலிக்கிறது. எனவே, கோவில் கலை தமிழர் பண்பாட்டை அறியவும், அவர்களின் கலாச்சார மரபை புரிந்துகொள்ளவும் முக்கியமான ஆதாரமாகும்.

“நுட்பம் உடையார் நுண்ணிய செய்கை,
படிப்பார் கண்ணும் புலப்படும்.” – திருக்குறள்

“அருவி அலைத்து விழுந்தாலும்,
சிற்பி கை தொட்டு அழகாய் படைக்க வேண்டும்.”

“அழகு எல்லாம் தொழிலில் காண்பான் கலைஞன்.”

மேலும் படிக்க ...

ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல் : “கனடாவில் நவீன தமிழ்க் கவிதை”

விவரங்கள்
- தகவல்: முனைவர் நா.சுப்பிரமணியன் -
நிகழ்வுகள்
19 பிப்ரவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

Meeting ID: 847 7725 7162 | Passcode: 554268 | Join Zoom Meeting 

மேலும் படிக்க ...

பெப்ருவரி 14 காதலர் தினம் (வெலன்ரைன் தினம்)! அன்பைப் பரிமாறும் தினம்! - குரு அரவிந்தன் -

விவரங்கள்
- குரு அரவிந்தன் -
குரு அரவிந்தன்
16 பிப்ரவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

வெலன்ரைன் தினம் என்பது உலகம் முழுவதிலுமுள்ள மக்கள் பலராலும் பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி கொண்டாடப்படும் ஒரு கொண்டாட்ட நாளாகும். பொதுவாக அன்பைப் பரிமாறும் தினமாக இதை எடுத்துக் கொள்வதால், ‘அன்பைப் பரிமாறும் நாள்’ என்றும் குறிப்பிடுவர். இத்தினத்தில் வேறுபாடு காட்டாமல் யாரும் யாரிடமும் தங்கள் அன்பைப் பரிமாறிக் கொள்வதால், மனதால் பண்பட்ட யாரும் அதைத் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். 

அதே சமயம் காதலர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்த, அல்லது பரிமாறிக்கொள்ள இந்த நாள் உகந்ததாகவும் இருப்பதால், ‘காதலர்கள் தினம்’ என்றும் குறிப்பிடுவர். சில நாடுகளில் 9 நாட்கள் இதைக் கொண்டாடுவர். காதலைக் கொண்டாடாத நாடுகளே இல்லை என்பதால், தொடக்கத்தில் அன்பைப் பரிமாற காதலர்கள் இயற்கை தந்த மலர்களையும், அவர்களுக்குப் பிடித்தமான இனிப்பு போன்றவற்றையும் பரிமாறினர். அதன் பின் கையால் எழுதிய வாழ்த்து மடல்களையும், தொடர்ந்து அச்சு யந்திரங்கள் வந்ததால் அச்சிட்ட வாழ்த்து மடல்களைப் பரிமாறும் வழக்கமும் அறிமுகமானது.

வெலன்ரைன் தினம் எப்படி அறிமுகமானது என்பதைப் பார்ப்போம். மூன்றாம் நூற்றாண்டில் ரோமானிய அரசனான இரண்டாம் கிளாடியஸ் பேரரசர் இரண்டு பேருக்குத் தண்டனை கொடுத்து அவர்களை பெப்ரவரி 14 ஆம் திகதி தூக்கிலிட்டார். வெவ்வேறு ஆண்டுகளில் அவர்கள் தூக்கிலிடப் பட்டாலும் அவர்களைப் போன்ற தியாகிகளுக்கு வெலன்ரைன் என்று பெயரிட்டார்கள். பெப்ரவரி 14 ஆம் திகதி அன்று நடந்ததால், அவர்கள் செய்த தியாகம் புனித காதலர் தினமாகப் 14 ஆம் நூற்றாண்டில் இருந்து கொண்டாடப் படுகின்றது. இதைப்பற்றி, ‘செயிண்ட் வெலன்ரைன் தினத்திற்கானது இது, ஒவ்வொரு பறவையும் தன்னுடைய இணையைத் தேடி வரும்போது’ என்று ஜெப்ரி சாஸர் ஓரிடத்தில் குறிப்பிட்டிருந்தார்.

ஆங்கிலத்தில் ‘லவ்’ என்று சொன்னால் அது அன்பைக் குறிக்கும். யாரைப் பார்த்தும் ‘லவ்யூ’ சொல்ல முடியும், தவறாக எடுக்க மாட்டார்கள். ஆனால் தமிழில் அப்படி அல்ல, அன்பு என்ற சொல்லை இன்னும் விளக்கமாக, தெளிவாகப் பிரித்திருக்கிறார்கள். அன்பு, பாசம், காதல், நேயம், பக்தி என்று அன்புக்குத் தனித்தனியாக விளக்கம் தந்திருக்கிறார்கள். 

மேலும் படிக்க ...

தொடர் நாவல் : சுதந்திர மனிதன்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
நாவல்
16 பிப்ரவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அத்தியாயம் ஒன்று: அர்த்தமும், அர்த்தமின்மையும்!

சுதந்திரன் அவன் வசித்து வரும் தொடர்மாடிக் கட்டடத்தின் , அப்பார்ட்மென்டின் பல்கணியிலிருந்த சாய்வு நாற்காலியில் வந்தமர்ந்தபோது நன்கு இருண்டு விட்டிருந்தது. வானம் தெளிவாகவிருந்தது. நகரத்து ஒளி மாசிலிருந்து தப்பி நட்சத்திரக்கன்னியர்கள் சிலர் தொலைவிலிருந்து கண்களைச் சிமிட்டிக்கொண்டிருந்தனர். தொலைவிலிருந்து கண்களைச் சிமிட்டிக்கொண்டிருக்கும் சுடர்க்கன்னியர்கள் வழக்கம்போல் அவனுக்கு மனக்கிளர்ச்சியை ஏற்படுத்தினர். அவர்கள் ஓரிடத்திலிருந்து தன்னைப் பார்த்துக் கண்களைச் சிமிட்டுவதைப்போல் அவன் அப்போதெல்லாம் கருதிக்கொள்வான். அச்சிந்தனையே அவர்கள் மேல் அவனது ஈர்ப்பை மேலும் அதிகமாக்கியது. ஆனால் உண்மையில் அவர்கள் ஓரிடத்தில், ஒரே சமயத்திலிருந்து அவனை நோக்க்கவில்லையென்பதையும் உணர்ந்திருந்தான். காலத்தின் அடுக்குக்களின் வெவ்வேறு அடுக்குகளிலிருந்து  அவர்கள் அவனை நோக்கிக் கண்களைச் சிமிட்டிக்கொண்டிருந்தார்கள். உண்மையில் அவர்கள் ஒவ்வொருவரையும் சுற்றி வெறுமை கலந்த விரி வெளி கவிந்திருந்தது. தனிமையின் வெறுமைக்குள் அவர்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அதிலிருந்துகொண்டுதான் அவர்கள் உற்சாகம் மிக்கர்வகளாகக் கண்களைச் சிமிட்டிக்கொண்டிருந்தார்கள். அதனால் அவனுக்கு அவர்கள் மேலான மதிப்பும், நாட்டமும் அதிகரித்தது.

எவ்விதம் அவர்களால் தனிமைக்குள் இனிமை காண முடிகின்றது?  ஒருவிதத்தில் தனக்கும் அவர்களுக்குமிடையில்தான் என்ன வேறுபாடு? தானும் ஒருவகையில் அவர்களைப்போன்றுதானே இருக்கின்றேன் என்றும் எண்ணிக்கொண்டான். தான் மட்டுமே அவன் வசிக்கும் இக்கோளில் உள்ளவர்கள் அனைவருமே இப்படித்தானே இருக்கின்றார்கள் என்றும் இவ்விதமான சமயங்களில் எண்ணிக்கொள்வான். அன்றும் எண்ணிக்கொண்டான்.

இரவுகளில் நட்சத்திர வானைப்பார்த்து மெய்ம்மறக்கும் இயல்பு அவனுக்கு அவனது பால்யப் பருவத்திலிருந்தே அவனுக்கிருந்தது. அதற்குக் காரணம் அவனது தந்தைதான். பூமத்தியரேகைக்கண்மையிலிருந்த வெப்பமண்டலத் தீவொன்றில் பிறந்தவன் அவன். பகலும், இரவும் சமமாகப் பிரிக்கப்பட்ட பிரதேசத்தில் ,இரவுகளில் அவன் தந்தை சாய்வு நாற்காலியில் அண்ணாந்து சாய்ந்தபடி விரிந்து ,பரந்திருக்கும் இரவு வானைப்பார்த்திருப்பார். அவரது சாறத்தொட்டிலுக்குள் படுத்திருந்தபடி அவனும் அண்ணாந்து பார்த்தபடி , இரவு வானை, அங்கு கண்சிமிட்டும் நட்சத்திரக் கன்னியரை இரசிப்பான். 

காலம் எவ்வளவு தூரம் விரைந்தோடி விட்டது? பருவ  மழை பொழியும் வெப்பமண்டலத்திலிருந்து , பருவப்பனி பொழியும் குளிர் மண்ணுக்கு அவனது இருப்பு மாறி ஆண்டுகள் பல ஓடிவிட்டிருந்தன. போரும், சமூக,ம் அரசியல், பொருளியற் சூழலும் அவன் இருப்பை நிர்ணயித்ததன்  விளைவு அவனது புலம்பெயர்தலுக்கான முக்கிய காரணம். 

இந்த இட மாற்றம் அவனைப்பெரிதும் பாதித்ததா? இல்லையென்றே கூற வேண்டும். அங்கிருந்தால் எப்படியிருப்பானோ, எப்படிச் சிந்திப்பானோ அவ்விதமே இங்கும் அவன்  இருந்தான். சிந்திக்கின்றான். இருப்பை எதிர்கொள்கின்றான். உண்மையில் நவீனத்  தொழில் நுட்ப வசதிகள் இருப்பை மிகவும் எளிதாக்கியிருந்தன என்றும் கூறலாம். ஒரு விதத்தில் இருப்பைப் பொருளியல்ரீதியில் கொண்டு நடத்தத் தொழில் நுட்பம் மிகவும் உதவியிருக்கின்றதென்றே கூற வேண்டும். சமூக ஊடகங்கள் அவனைப் பொருளியல்ரீதியில் தாங்கிப்பிடிக்கும் தூண்களாக மாறியிருந்தன என்றும் கூறலாம். வீட்டிலிரிந்து சுய தொழில் முனைவனாக வேலையாற்றவும் தொழில் நுட்பம் வழி சமைத்தது. இப்போது மேலதிகமாகப் பொருள் ஈட்டவும் வழி காட்டியிருக்கின்றது.  இது அவனது சுய சிந்தனைகளுக்கு , சுய விருப்புகளுக்கு மேலும் உரமூட்டிச் சிறகடிக்க வைத்திருக்கின்றது. 

இருப்பு பற்றிய தேடல் எப்போதும் அவன் இருப்பினோர் அம்சமாகத்தான்  இருந்திருக்கின்றது. இருந்து வருகின்றது. இருக்கும் வரையிலும் இருந்து வரும்.

அர்த்தத்துடன் இங்கு வந்தோமா? அர்த்தமின்றி வந்தோமா?  அர்த்தமின்றி வந்தோமென்றால் அர்த்தமுண்டா ? இருப்புக்கு அர்த்தமுண்டா? இடை விடாமல் அவன் இருப்பில் இன்றுவரை தொடர்ந்து வரும் வினா. இதற்கான  விடைதான் என்ன? அர்த்தமுள்ள விடை இதற்குண்டா? அல்லது இல்லையா? அர்த்தத்தடன் வந்தோமென்றால் ஏன் வந்தோம்? அர்த்தம்தான் என்ன? அர்த்தமில்லையென்றால் எதற்கு வந்தோம்? எதற்கு இந்த இருப்பு?

சிந்தனைகள் சுதந்திரனைத்   துரத்துகின்றன. விடாமல் துரத்துகின்றன. இருப்புக்கு ஒரு சாரமுண்டா? சாரம்தான்  இருப்பை நிர்ணயித்ததா? அல்லது இருப்புத்தான் சாரத்தின் அடித்தளமா? இருப்பற்று சாரமில்லையா? ஏன்? ஏன்? ஏன்?

இந்தக்கேள்வி எழுந்தால் சிந்தனைக்கொரு முடிவே இல்லை. விரிந்திருக்கும் காலவெளி நிரந்தரமானது அல்ல. இயங்கிக்கொண்டிருப்பது. இடைவிடாது , ஓய்வேதுமற்று இயங்கிக்கொண்டிருப்பது. ஒவ்வொரு கணமும் இடம் மாறிக்கொண்டிருப்பது. இதில் நிலைத்து நிற்பதென்று எதுவுமேயில்லை இயக்கம் தவிர. மாறுதல்கள் தவிர.  இதில் அவனது இருப்பு என்ன அர்த்தம்  இருக்க முடியும்?

இருப்பு தற்செயலானது. முக்கியத்துவம் அற்றது. தற்செயலான ஒன்றினுள், முக்கியத்துவம் அற்ற ஒன்றினுள் இருக்கும் இருப்புக்கு அர்த்தம் கண்டு இருப்பதில் ஏதும் அர்த்தமுண்டா? ஆனால் அப்படியும் இருக்காவிட்டால் இருக்கும் வெறுமைக்குப் பதில், அப்படி அர்த்தம் கண்டு இருப்பதால் உருவாகும் அர்த்தம் இருக்கும்வரை திருப்தியை, இன்பத்தைத்  தராதா? தரும் அல்லவா? சுதந்திரனின் சிந்தனைகள் இவ்விதமும் இருப்பது அவன் இருப்பின் இயல்பு.

இவ்விதமாக இருப்பு பற்றிய சிந்தனைகளில் மூழ்கிக் கிடந்தவன் இறுதியில் வழக்கம்போல் ஒரு முடிவுக்கு வந்தான். இருப்புக் காரணம் அர்த்தம் அல்ல. அர்த்தத்துக் காரணம் இருப்பே. சாரம் அற்ற இருப்புக்குச் சாரம் தருவது இருப்பே. இதுவே சரியானது என்று தனக்குத்தானே ஒரு தடவை கூறிக்கொண்டான் சுதந்திரன்.  இவ்விதம் சுதந்திரன் கூறிக்கொண்டாலும் அவனது இருப்பு பற்றிய விசாரம் இத்துடன் நிறைவுக்கு வந்து விடுவதில்லை. அடுத்த நாளிரவும் மீண்டும் அவன் வந்து இந்தச் சாய்வு நாற்காலியில் சாய்ந்து , இரவு வானை நோக்கும்போது முதலிலிருந்து ஆரம்பித்து விடும். முடிவில் இவ்விதம் முடிந்தாலும் , அது அப்பொழுதுக்கான ஒரு முடிவே. தற்காலிகமான தீர்வே. மீண்டும் மற்றோர் இரவில் மீண்டும் அவ்விசாரம் தொடங்கும் வரையிலான தற்காலிகமானதொரு தீர்வே.

இவ்விதமாகச் சாய்வு நாற்காலியில் சாய்ந்திருந்த சுதந்திரனை நித்திராதேவி பூரணமாக ஆட்கொண்டபோது, அவன் நிலையைக் கண்டு தொலைவில் , கவிந்திருந்த வெறுமைக்குள்ளிருந்த, காலத்தின் வெவ்வேறு அடுக்குகளில் வாசம் செய்து கொண்டிருந்த  நட்சத்திரக் கன்னியர்கள் கெக்கலி கொட்டிச் சிரித்துக்கொண்டிருந்தார்கள்.

[தொடரும் ]

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

* டிஜிட்டல் ஓவியம் - கூகுள் AI

இந்தியத் திரைப் படத் துறையில் ஒரு பெரு மாற்றத்தைக் கொண்டு வந்த திரு சத்யஜித் ராய்! - இராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் -

விவரங்கள்
- இராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் -
கலை
12 பிப்ரவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இந்தியத் திரைப் படஉலகம் மட்டுமின்றி அகில உலக் திரைப் பட உலகிலேயே மிகவும் பெருமையாகப் பாராட்டப் படுபவர் திரு சத்யஜித் றேய் அவர்கள். அத்துடன்; வங்காளத் திரைப் படத்திற்கு மட்டுமல்லாமல் இந்தியத் திரைப் படத் துறையில் ஒரு பெரு மாற்றத்தைக் கொண்டு வந்தவர்; திரு சத்யஜித் ராய்.

இந்திய நடிகரில் ஒருவரான சித்தார்த் சத்யஜித் ராயைப் பற்றிக் குறிப்பிடும்போது,’ அவரின் படம் மேற்கு நாடுகளில் வெளிவந்ததும்,திரைப்பட ஆர்வமுள்ள மக்கள் திரண்டு வந்து வரிசையில் நிற்கிறார்கள். ஆனால் இந்தியாவில் அப்படி ஏன் இல்லை’ என்று கேட்டார். அதற்குப் பதில் இக்கட்டுரையிலுள்ளது என்று நினைக்கிறேன்.

நாங்கள் உலக அமைதிக்கும் சமாதானத்திற்குமான தியானக் களத்தில் இருப்பவர்கள். அதே கோட்பாடுகளைத் தழுவிய தனது அறிவு, ஆற்றல்,அத்துடன் முழுவாழ்க்கையையுமே ஒட்டு மொத்த மக்களின் சிறந்த சிந்தனை மாற்றத்திற்காக அர்ப்பணித்த திரு சத்தியத் ராய் அவர்களைப் பற்றிக்; கொஞ்சமாவது தெரிந்து கொள்வது எமது அதிர்ஷடம் என்று சொல்லிக் கொள்கிறேன்.

இவ்வுலகின் பெரும்பாலான இடங்களில் ஒரு மனிதன் பிறக்கும்போது ஒரு கலைஞனாகவோ வைத்தியராகவோ அல்லது வேறு எந்தத் தொழிலையும் செய்யவேண்டும் என்ற உள்ளுணர்வுடன்; பிறப்பதில்லை. ஆனால் இந்தியாவில் மட்டும் பெருமபாலானவர்களின் குலத் தொழில் அல்லது குடும்பத் தொழில் அவர்களின் எதிர்காலத்துடன் இணைக்கப் பட்டு விடுகிறது. ஓன்றிரண்டு மனிதர்கள் தங்களின் வாழ்க்கைப்; பிரயாணத்தில் கண்ட அனுபவங்களின் உள்ளுணர்வின் உந்துதலால் தற்செயலாக அவர்களுக்கு அறி முகமில்லாத துறைகளில் தங்களையிணைத்துக் கொண்டு உலகம் வியக்கும் வகையில் பெருமையான மாற்றங்களைச் செய்திருக்கிறார்கள்.

மேலும் படிக்க ...

பொலிசாரின் சட்ட மீறல்களும், சிறுவனின் மரணமும்! - நந்திவர்மப்பல்லவன் -

விவரங்கள்
- நந்திவர்மப்பல்லவன் -
அரசியல்
12 பிப்ரவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்



யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டிப் பகுதியில் , பொலிசாரின் வேண்டுகோளையும் புறக்கணித்துத் தப்பி வாகனத்தில் விரைந்த, வட்டுக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த, 17 வயதுள்ள , அயூப்ராஜ் அருள் என்னும் சிறுவன் கொல்லப்பட்டிருக்கின்றான். வழக்கம்போல் பல்வேறு விமர்சனங்கள், குற்றச்சாட்டுகளால் சமூக ஊடகங்கள் நிறைந்து வழிகின்றன.

பொலிசார் அவ்வப்போது மேலதிகமாகத் தம் பலத்தைப் பாவிப்பதால உயிர்கள் பறிபோவதென்பது உலகின் பல பாகங்களிலுன் அவ்வப்போது நடைபெறுமொன்று. இங்கும் அதுதான் நடந்திருக்கின்றது. பொலிசாரின் நடவடிக்கையைக் கடந்த கால வரலாற்றுடன் இணைத்துப் பார்க்கும் போக்கென்பது நம்மவரின் பலரின் பொதுவான பண்பு. இவ்விடயத்திலும் அதைக் காணலாம்.

இங்கு நடந்ததென்ன?

மேலும் படிக்க ...

வ.ந.கிரிதரனின் பாடல்கள் : தலை குனிந்து செல்லும் பெண்ணே! , என் பிரியம் மிகு யாழ் மண்ணே! & உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு.

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
11 பிப்ரவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

1. வ.ந.கிரிதரன் பாடல் : தலை குனிந்து  செல்லும் பெண்ணே! 

இசை & குரல்:  SUNO AI   ஓவியம்: கூகுள் AI

பாடலைக் கேட்டுக் களிக்க : https://www.youtube.com/watch?v=DYAA3AhCA0Y

தலை குனிந்து  செல்லும் பெண்ணே! 
தலை நிமிர்ந்து பார்த்தால் என்ன?
தலை நிமிர்ந்து பார்த்தால் என்ன
நிலை குலைந்தா போவாய் கண்ணே!

கண்ணும் கண்ணும் பார்க்க வேண்டும். 
காதல்  நதியெனப்  பொங்க வேண்டும்.
எண்ணம் எல்லாம் நிறைய வேண்டும்.
மண்ணின் வாழ்வு சிறக்க வேண்டும்.

தலை குனிந்து  செல்லும் பெண்ணே! 
தலை நிமிர்ந்து பார்த்தால் என்ன?

மேலும் படிக்க ...

சிறுகதை; பாட்டில்கள்! - சுப்ரபாரதிமணியன் -

விவரங்கள்
- சுப்ரபாரதிமணியன் -
சிறுகதை
10 பிப்ரவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 அசோக மரங்களின் குவியல் அடர்த்தியான நிழலைக்கொண்டு வந்திருந்தது. மரத்தடியில் போடப்பட்டிருந்த சிமெண்ட் நாற்காலிகள் திரைப்பட விழாவுக்கானது என்றில்லாமல் அயனக்ஸ் திரையரங்குகளின் நிரந்தரத்தன்மையால் உருவாக்கப்பட்டவை.  மண்தரையின் ஈரம் இன்னும் குளுர்ச்சியைக் கொண்டு வர முயற்சித்தது.

கோவா திரைப்பட விழா ஆரம்பித்து ஆறு நாட்களாகிவிட்டன.கோவாவின் முத்திரை எங்குமாக இருந்தது.பேசுபவர்களின் வாயிலிருந்து வரும் மது வாசனை முக்கியமானது . மது குறைந்த விலையில் எங்கும் கிடைப்பதே இங்கிருந்து போனவர்களை தாரளமாகப் புளங்கச் செய்தது. 

தாடிக்கார்ர் ஒருவர் சுற்றிலும் போடப்பட்டிருந்த ஸ்டால்களில் விநியோகிக்கப்பட்ட  அட்டைகளை சீட்டுக்கட்டை ஒன்றின் மேல் ஒன்று மடக்கி அடுக்குவது போல் அடுக்கிக் கொண்டிருந்தார். அதில்  உணவு விபரங்கள், மத்திய அரசின் என் எப் டி சி ஸ்டாலில் கிடைக்கும் இந்திய இயக்குனர்களின் படங்களின் பட்டியல்,  பழமையான திரைப்படக்கலைபொருட்கள், திரைப்படம் சம்பந்தமான வெவ்வேறுப் போட்டிகளை அறிவிப்பவை என்றிருந்தன, படங்கள் பற்றியக் குறிப்புகளை அடுக்கி வைத்திருந்தார்.அந்த அடுக்கின் மேல் பகுதியில் சோவியத் ரஷ்யப்படங்களின் விபரங்கள் அழுத்தமான வர்ணஙகளில் பளீச்சிட்டன. சட்டென மேலிருந்த சோவியத் அரங்கின் அட்டைகள்கவிழ்ந்து விழுந்து தூரமாய் தெரித்துப் போனது. அது ஒரு பெண் இயக்குனரின்  காலடிக்குச் சென்று உட்கார்ந்தது. அவர் அதை எடுத்துப் பார்த்து வியந்து கொள்வதைப் போல் பார்த்துக் கொண்டார். . தார்க்கோவிஸ்கியின் மிரர்  படத்தின் காட்சியை அந்தப்படம்  காட்டியது காட்டிக் கொண்டிருந்த்து. ட்ரினிடி மடாலயத்திலிருந்து துறவிகள் ஆந்த்ரேய் ருப்ளேவ், தானியல்,  மூவர்    புனித உருவங்களை வரைவதற்காக மாஸ்கோவிற்குச் சென்று கொண்டிருக்கின்றனர்.   மழைக்காக ஒதுங்குமிடத்தில் ஆடியும் பாடியும் அங்கிருப்போரைச் சிரிக்க வைத்துக் கொண்டிருக்கும் ஒருவனைக் காவலர்   பிடித்துச் செல்லும் காட்சி அதிலிருந்தது. அக்காட்சியை அப்பெண்  இயக்குனர்    பார்த்துக் கொண்டிருந்தார்.

மேலும் படிக்க ...

நினைவுக் குளியல் (3): பஞ்சாங்க ஐயர்! - தேவகாந்தன் -

விவரங்கள்
- தேவகாந்தன் -
தேவகாந்தன் பக்கம்
10 பிப்ரவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அவரது பெயர் சுப்பிரமணிய ஐயர். ஆனால் அவரை பஞ்சாங்க ஐயரென்றுதான் ஊர் அறிந்திருந்தது. திருக்கணித பஞ்சாங்கத்தை ஆண்டுதோறும் உருவாக்கி, அச்சடித்து, வெளியிட்டவர் அவர். அதற்காக வீட்டிலே ரெடில் எனப்படுகிற கை அச்சு யந்திரமொன்றை வைத்திருந்தார்.

ஊரில் சகலருமே பஞ்சாங்க ஐயரைத் தெரிந்திருந்தவேளை, ஐயர் வெகுசிலரையே அங்கே தெரிந்திருந்தாரென்பது விசித்திரமானதல்ல. அவரின் போக்கு அப்படி.

அவர் வெளிப் பிரக்ஞைகள் இல்லாதவராக, தானும் தன் திருக்கணிதத்துக்கான காலக் கணிப்பும் அதன் அச்சாக்க வேலைகளுமாகயிருந்தார். அவரது மனத்தை, மனிதர்களையும் தினசரிச் சம்பவங்களையும்விட, சூரியன் சந்திரன் ராகு கேது ஆகிய நவக்கிரகங்களே கூடுதலாக ஆக்ரமித்திருக்க முடியும்.

ஐயருக்கு அப்போது நாற்பது / நாற்பத்தைந்து வயதிருக்கலாம். போந்த பொலிந்த வெள்ளை உடம்பு அவருக்கு. அதில் ஆரோக்கியம் பளீரிட்டது. ஆயினும் ஐயர் கலகலப்பாக இருந்ததை யாரும் கண்டதில்லை.

அவர் மகிழ்வோடு எதிர்கொண்டவர்களாய் யாருமில்லைப்போல், அவரை மகிழ்வோடு எதிர்கொண்டவர்களாயும் அதிகம் பேர் இருக்கவில்லை. ஒருவித வெறுப்போடும், பயத்தோடும் அவரை ஊர் விலகிப் போனது. அவரது முசுறுக் குணம்தான் அதன் காரணமென அக்கம்பக்கத்தில் சனங்கள் பேசியதுண்டு. சிலர் அவருக்கு மூலவியாதி என்றும் சொன்னார்கள். ஆனால் ஐயர் அவைபற்றி எந்தக் கரிசனையும் கொண்டதில்லை.

மேலும் படிக்க ...

அமெரிக்கப் பயணத்தொடர்: மேற்கு அமரிக்கா (1) - நடேசன் -

விவரங்கள்
- நடேசன் -
பயணங்கள்
10 பிப்ரவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முன்பு இரண்டு முறை அமெரிக்கா வந்திருந்தபோதும், அமெரிக்காவின் பிரதான நகரங்களான போஸ்டன், நியூயோர்க், பிலடெல்பியா போன்ற, உறவினர்கள் வாழும் கிழக்குப் பகுதிகளிலேயே தங்கி விருந்தோம்பலை அனுபவித்து பயணம் முடிந்துவிடும். அதுவே அமரிக்க பயணமாகிவிடும். வட அமெரிக்காவின் மேற்குப் பகுதி எக்காலத்திலும் பார்க்காத பகுதியென என் மனத்தில் எப்போதும் இருந்தது எனலாம்.

யரழ்ப்பாணம் இந்துக் கல்லூரி விடுதியில் இருந்த காலத்தில் மனோகரா றீகல் என்ற இரு தியேட்டர்களிலும் பாடங்களை பகிஸ்கரித்து நான் பார்த்த கவ்பாய் படங்களாலும், பின்னர் வயது வந்தபின் பார்த்த ஹாலிவுட் படங்களாலும், கலிஃபோர்னியாவின் நகரங்கள் மட்டுமல்லாமல் லாஸ் ஏஞ்சலஸின் புறநகரங்களான சாண்டா மோனிக்கா, பெவர்லி ஹில்ஸ் போன்ற பெயர்கள் எப்போதும் நினைவில் நிழலாக ஆடும்.

அமெரிக்க அரசின் தூதரகங்கள் மற்றும் தன்னார்வ நிறுவனங்கள் மற்றைய நாடுகளில் அரசுகளை மாற்றுவதிலும் ராணுவப் புரட்சிகளை உருவாக்குவதிலும் ஈடுபட்டிருப்பதால் ஹாலிவுட் திரைப்படங்களே அமெரிக்காவின் முக்கிய கலாச்சார நல்லெண்ணத்த தூதுவர்கள் என்பது எனது நிலைப்பாடு. இதற்கப்பால் அமரிக்க பல்கலைக்கழகங்கள் என் மதிப்புக்குரியன. பல முறை, நான் மேல்ப்படிப்பு கற்க்க முயன்றும் நமக்கு அதிஸ்டமிருக்கவில்லை.

மேலும் படிக்க ...

'வ.ந.கிரிதரன் பாடல்கள்' 'யு டியூப் சானலு'க்கு உங்களை வரவேற்கின்றோம்!

விவரங்கள்
- வ.ந.கி -
வ.ந.கிரிதரன் பக்கம்
08 பிப்ரவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நண்பர்களே! 'வ.ந.கிரிதரன் பாடல்கள்' என்னும் எனது 'யு டியூப் சானலு'க்கு உங்களை வரவேற்கிறேன். செயற்கை நுண்ணறிவை (AI) நாம் அனைவரும் ,பல் துறையில் இருப்பவர்களும், பொது மக்களும் ஆக்கபூர்வமான வழிகளில் பயன்படுத்த முடியும் என்பதற்கு ஓர் உதாரணம் இந்தச் 'சானல்'.  

எனக்கு என் பாடல்களை இசையமைத்துப் பாடுவதைப் பார்க்க விருப்பமாகவிருந்தது.  அதைச் சாத்தியமாக்கியுள்ளது செயற்கை நுண்ணறிவு. செயற்கை நுண்ணறிவின் துணை இல்லாவிட்டால் என்ன  நடந்திருக்கும்?  நான் ஓர் இசைக்குழுவின் உதவியை, பாடகர் உட்பட,  நாடியிருக்க வேண்டும். அது மிகவும் இலகுவானதொன்றல்ல. அது பெரும்பொருட்செலவை வேண்டி நிற்பது.  இவ்விதமானதொரு சூழலில்தான் எனக்கு செயற்கை நுண்ணறிவு உதவிக்கு வந்தது.

SUNO என்னும் செயற்கை நுண்ணறிவு உங்கள் பாடல் வரிகளுக்கு , நீங்கள் விரும்பியவாறு இசையமைத்து , விரும்பிய குரலில் பாடித்தரும். இது எனக்கு மிகவும் உதவியாக உள்ளது.  உவப்பைத்  தருகின்றது. பாடல்களுக்குப் பாவித்துள்ள ஓவியங்களையும் உருவாக்கித்  தந்தது கூகுளின் செயற்கை நுண்ணறிவான நனோ பனானா  தொழில் நுட்பமே.

மேலும் படிக்க ...

அடிகளார் கண்ணுற்ற அஞ்சலி! - கலாநிதி செல்லத்துரை சுதர்சன் -

விவரங்கள்
- கலாநிதி செல்லத்துரை சுதர்சன், தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம் -
ஆய்வு
07 பிப்ரவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கட்டுரையாசிரியர்:  -கலாநிதி செல்லத்துரை சுதர்சன், தமிழ்த்துறை, பேரதனைப் பல்கலைக்கழகம் 


அறிமுகம்

சைமன் காசிச்செட்டி (1807-1860) அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய நூல் The Tamil Plutarch.. அந்நூலின் விரிவுப் பெயர் The Tamil Plutarch Containing A Summary Account of The Lives of The Poets and Poetesses of Southern India and Ceylon from the Earliest to the Present time, with Select Specimens of Their Compositions என்பதாகும். இது, 1859ஆம் ஆண்டு வெளிவந்தது. இதனை Jaffna: Ripley & Strong Printers என்ற நிறுவனம் வெளியிட்டது. இந்த நூற்பெயர் தொடர்பாக, சுவாமி விபுலானந்த அடிகளின் எழுதிய சிறு குறிப்பு ஒன்றை அலசுவதே இக்கட்டுரையின் நோக்கம்.

அடிகளார் கண்ணுற்ற அஞ்சலி

இந்த நூலின் இரண்டாம் பதிப்பு 1946 ஆம் ஆண்டு வெளிவந்தது. இதனை, Colombo: The General Publishers Ltd என்ற நிறுவனம் வெளியிட்டது. சுவாமி விபுலானந்த அடிகள் இந்த நூற்பெயரில் ஓர் அஞ்சலியைக் கண்ணுற்றுள்ளார். இரண்டாம் பதிப்பிற்கு, அடிகளார் ஆங்கிலத்தில் வழங்கிய அணிந்துரையில், அதனைப் பதிவுசெய்துள்ளார். அதன் தமிழாக்கம் வருமாறு:

'இந்தப் படைப்பிற்கு ஆசிரியர் வழங்கிய பெயர், பண்டைய கிரேக்க மற்றும் ரோமின் உயர் மானுடர்களின் இணையான வாழ்க்கையை எழுதிய, புகழ்பெற்ற ஆசிரியருக்கு ஓர் அஞ்சலியாக இருக்கலாம்' (16.12.1946)

மேலும் படிக்க ...

இலக்கியவெளி நடத்தும் “பேராசிரியர் ஆறுமுகம் சதாசிவம் அவர்களின் தமிழியல் சுவடுகளும் நூற்றாண்டு தின நிகழ்வும்”

விவரங்கள்
- தகவல்- அகில் -
நிகழ்வுகள்
07 பிப்ரவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 வழி: ZOOM  Join Zoom Meeting | Meeting ID: 389 072 9245 | Passcode: 12345

மேலும் படிக்க ...

அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்த பாராளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திராவின் உரை - நந்திவர்மப்பல்லவன் -

விவரங்கள்
- நந்திவர்மப்பல்லவன் -
அரசியல்
07 பிப்ரவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

பெப்ருவரி 5 அன்று  இலங்கைப் பாராளுமன்றத்தில் 'பொதுஜனபெரமுன' கட்சியின் முக்கிய ஆளுமையான  நாமல் ராஜபக்ச  இனவாதத்தைக் கக்கத் தொடங்கியபோது தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான லக்மாலி ஹேமச்சந்திரா உடனடியாகவே அதற்கெதிராகக் கடுமையான பதிலடி கொடுத்திருக்கின்றார். சுதந்திரதின நிகழ்வில் யுத்தத்தை வென்ற இராணுவத்திற்கு உரிய மரியாதை கொடுக்கப்படவில்லையென்று நாமல் ராஜபக்ச இனவாதத்தைக் கையிலெடுத்தபோதுதான் லக்மாலி ஹேமச்சந்திரா இவ்விதம் பதிலடி கொடுத்தார். 1989இல் பிறந்த லக்மாலில் ஹேமச்சந்திராவின் இவ்வுரை வரலாற்று முக்கியத்துவம் மிக்கது. சிங்கள இளந்தலைமுறையினர் எவ்வளவுதூரம் காலத்துடன் மாறி வந்திருக்கின்றார்கள் என்பது நாட்டின் எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையினைத் தருகின்றது. தமிழ் , முஸ்லிம் இனங்களைச் சேர்ந்த இளைய தலைமுறையினரும் லக்மாலி ஹேமரத்தின போன்று தம் இன அரசியல்வாதிகள் இனவாத்த்தைக் கையில் எடுக்கும் சமயங்களில் அவர்களைத்  தட்டி வழி நடத்த வேண்டும். நெறிப்படுத்த வேண்டும். பிரச்சனைகளைத் தீர்ப்பதற்குப் பதில் இனவாதத்தை எந்நேரமும் கையிலெடுப்பதைக் கண்டிக்க வேண்டும்.

மேலும் படிக்க ...

ஜனாதிபதி அநுர குமார திசாயநாயக்கவின் சுதந்திர தின உரையும் , அது பற்றிய குடிமகன் ஒருவனின் சிந்தனைகளும்! - நந்திவர்மப் பல்லவன் -

விவரங்கள்
- நந்திவர்மப் பல்லவன் -
அரசியல்
05 பிப்ரவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இலங்கையின்  ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது சுதந்திரதினச் செய்தியையொட்டித் தனது முகநூற் பக்கத்தில் மும்மொழிகளில் வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வருமாறு தெரிவித்துள்ளார்:

"'இலங்கையை கட்டியெழுப்புவோம்' என்ற தொனிப்பொருளின் கீழ் இன்று (04) முற்பகல் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்ற பெருமைமிகு 78 ஆவது தேசிய சுதந்திர தின விழாவில் கலந்துகொண்டேன். தாய்நாட்டினதும் மக்களினதும் பெருமைமிக்க சுதந்திரத்திற்காகப் போராடிய அனைத்து வீரர்களுக்கும் தேசத்தின் கௌரவத்தையும் மரியாதையையும்  செலுத்தி, பெருமைமிக்க வரலாற்றின் தாத்பரியத்துடன் கட்டமைக்கப்பட்ட புதிய இலங்கைக்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்'  என்று அனைவருக்கும் அழைப்பு விடுத்தேன். ஒரு தேசமாக நாம் பெற்ற சுதந்திரம் பொருளாதார சுதந்திரத்தை அடைவதன் மூலம் முழுமையடைகிறது என்றும், அதற்காக 'இலங்கையை கட்டியெழுப்புவோம்'  என்ற தொனிப்பொருளின் கீழ், அறிவார்ந்த மனித வளம், தேசிய ஒற்றுமை, சட்டத்தின் ஆட்சி, சுற்றாடல் பாதுகாப்பு, வலுவான சர்வதேச ஒத்துழைப்பு ஆகிய ஐந்து தூண்களின் அடிப்படையில் புதிய மாற்றத்துடன் கூடிய சகாப்தத்தை நோக்கி நாடு கொண்டு செல்லப்படுகிறது என்றும், நாடு பொருளாதார ரீதியில் பெரும் வெற்றிகளின் நன்மைகள், பொருளாதாரத்தில் கீழ்மட்ட மக்களுக்குச் செல்வதை உறுதி செய்வதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாகும் என்று குறிப்பிட்டு, அந்த இலக்கை நோக்கிய நீண்ட பயணத்தில் எம்முடன் இணையுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுத்தேன்."

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் வருகை இலங்கை அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய பாய்ச்சல். நாட்டை இதுவரை காலமும் பீடித்திருந்த இனவாத, மதவாத, மொழிவாத அரசியலிருந்து , புதிய பாதையில் நடத்திச் செல்வதற்குரிய வாய்ப்பு தற்போது அமைந்துள்ளது. நாட்டின் பெரும்பான்மையான மக்கள் , அம்மக்களின் வர்க்கத்திலிருந்து ஒருவர் அதிபராகியிருக்கின்றார். இது மிகப்பெரிய மாற்றம். 

நாட்டின் பொருளாதார வெற்றியை இதுவரை தடுத்து நின்றவை இனவாத, மதவாத, மொழிவாத அரசியல். இவற்றைப் பாவித்து அரசியல் செய்த அரசியல்வாதிகள் எல்லாரும் , வர்க்கப்பின்னணியில் எவ்வித வேறுபாடுகளுமற்று இணைந்திருப்பார்கள். தம் அரசியல் நலன்களுக்காக மக்களைப் பிரித்தாளும் அரசியல் கோசங்கள் எழுப்புவார்கள். இன்று அந்நிலை ஓரளவு மாறியுள்ளது வரவேற்கத்தக்கது.

அருமையாகக் கிடைத்த ஆட்சி வாய்ப்பைப் பயன்படுத்தி, அநுர அரசு செய்ய வேண்டிய நல்ல வேலைகளையெல்லாம் தடுக்கும் வகையில் , ஆட்சிக்கட்டிலில் இருந்து விரட்டியடிக்கப்பட்டவர்கள் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் முயற்சிகள் செய்து வருவதையும் கண்டு கொண்டுதானிருக்கின்றோம். இவற்றுக்குப் பணிந்து போகாமல், தம் வழியில் உறுதியுடன் செல்வதில்தான் அநுர அரசின் வெற்றி தங்கியுள்ளது. அவ்விதம் சென்றால், அதில் வெற்றியும் அடைந்தால், பெரும்பான்மையான மக்களின் மனங்களும் மாறும், மீண்டும் பழைய நிலைக்குச் செல்லாத வகையில் மாறும்.  எனவே இவ்விதமான சவால்களை அநுர அரசு வெற்றிகரமாக எதிர்கொள்ளட்டும். அதுவே அனைவருக்கும் நன்மை.

மேலும் படிக்க ...

சிறுகதை: நிலவின் மொழி புரிவதில்லை! - ஶ்ரீரஞ்சனி -

விவரங்கள்
- ஶ்ரீரஞ்சனி -
சிறுகதை
05 பிப்ரவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கண்விழித்த விக்ரமின் முகத்துக்கு முன், இரண்டு கோடுகளுடன் இருந்த test kitஐ ஊசலாட்டியபடி மலர்ந்து சிரித்தாள் வர்ஷி. “Oh, my god!” என்றவண்ணம் குதித்தெழுந்தான் அவன். எழுந்தவேகத்தில், உணர்ச்சிப்பெருக்குடனான முத்தங்களை அவள் மேல் மழையாகப் பொழிந்தான். அவளின் நரம்பு முனைகள் ஜில்லிட்டன. பரவசமாகிப்போன அவளுக்குள் ஆயிரமாயிரம் பட்டாம்பூச்சிகள் சிறகடித்துப் பறந்தன. அவனின் இதயம் சலங்கைகட்டி ஆர்ப்பரித்தது. அந்த மகிழ்வின் உச்சம் மிகுந்த நெகிழ்ச்சியுடனான கலவிக்கு அவர்களை அழைத்தது. முதல் கலவியைவிட இது இத்தனை மகிழ்ச்சியானதாக இருக்கிறதே என அவர்கள் கிறங்கிப்போனார்கள். உள்ளங்காலிலிருந்து உச்சம்தலைவரை அவளுக்குச் சிலிர்த்தது.

“எனக்குள்ள ஒரு உயிர்! நம்பேலாமலிருக்கு. I love you so much… Oh, my darling, we made it happen!” அவனுக்குள் தன்னை அவள் இறுகப் பிணைத்துக்கொண்டாள்.

“சாத்தியமில்லை எண்டார் டொக்டர், ஆனா, நாங்க சாத்தியப்படுத்தியிருக்கிறம்! I am ecstatic! We will celebrate it the whole day!” மீளவும் கலவிக்குத் தயாரானான் அவன்.

அப்போது அவளின் தொலைபேசி சிணுங்கியது. அவர்களோ மீண்டும் மீண்டும் முத்தமிடுவதும், கட்டியணைப்பதுமாகக் கட்டிலில் புரண்டுகொண்டிருந்தார்கள். ஆனால், தொலைபேசியோ ஓய்வதாய் இல்லை. கடைசியில், விக்ரமைத் தனது இடது கையால் அணைத்தபடி, வலது கையால் தொலைபேசியை எட்டியெடுத்தவள், “அப்பா!” என்றாள் குதூகலமாக.

“வர்ஷி, அம்மாக்குச் சூலகத்திலை... கான்சராம்...,” சொற்களிடையே இடைவெளி விட்டுவிட்டு அப்பா சொன்னார்.

“என்ன? கான்சரோ?...” அவளின் குரல் அதிர்ந்தது.

மேலும் படிக்க ...

கல்வெட்டுக்கள் இரண்டு: சிம்மவிஷ்ணு 25 ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டு (கி.பி. 579) கண்டுபிடிப்பு & சோழர்கால (கி.பி.12-13) கல்வெட்டு கண்டுபிடிப்பு! - முனைவர் ஆ. சந்திரன் -

விவரங்கள்
- முனைவர் ஆ. சந்திரன் -
கட்டடக்கலை / நகர அமைப்பு/ வரலாறு/ அகழாய்வு
05 பிப்ரவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- கட்டுரையாளர்: முனைவர் ஆ. சந்திரன்,உதவிப் பேராசிரியர், தமிழ் முதுகலை மற்றும் ஆய்வுத்துறை, தூயநெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), திருப்பத்தூர், திருப்பத்தூர் மாவட்டம். -

1. சிம்மவிஷ்ணு 25 ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டு (கி.பி. 579) கண்டுபிடிப்பு &   சோழர்கால (கி.பி.12-13) கல்வெட்டு கண்டுபிடிப்பு

மாவட்டம் – தர்மபுரி
வட்டம் - அரூர்
ஊர் - மல்லூத்து
எழுத்து - வட்டெழுத்து
கல்வெட்டு கண்டறிந்த நாள் - 29.12. 2025
கல்வெட்டு அளவு - இரண்டு அடி ஒன்பது அங்குலம் இரண்டு அடி மூன்று அங்குலம்

29.12.2025 தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டம் மல்லூத்து என்ற கிராமத்தில் பல்லவ மன்னன் சிம்ம விஷ்ணு (கி.பி. 579) 25 ஆட்சியாண்டு கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. இது தமிழ் அய்வில் புதிய வரவு. வட்டெழுத்தில் உள்ள இந்தக் கல்வெட்டு மல்லுத்து கிராமத்தில் உள்ள வயல்வெளியில் கண்டறியபட்ட இந்நடுகல் கல்வெட்டு வேடியப்பன் தெய்வமாக அவ்வூர் மக்களால் வழிபட்டுவரப்படுகிறது.

கல்வெட்டில் உள்ள எழுத்துகளின் தற்கால தமிழ் எழுத்து வடிவம்

1.கோ விசைய (சிங்க) வி
2. ண்ணபருமற்க்கு யிருப
3. த்தைந் (தா) வது கோ
4. வூர் நாட்டு டெரும்
5. மைத் தொறுக்
6. கொள்ள எ
7. றிந்து பட்டா
8. ன் கங்கிளவரை(சர்)
9. மக்கள் சிங்கவிண்ணன்
10. இளமகன் கீரந்தை
11. மயான் கல்

மேலும் படிக்க ...

வ.ந.கிரிதரன் பாடல்: நெஞ்சு பொறுக்குதில்லையே நம் தமிழரை நினைத்து விட்டால்

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
03 பிப்ரவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


இசை & குரல்: SUNO AI    ஓவியம்: கூகுள் AI

பாடலைக் கேட்க

நெஞ்சு பொறுக்குதில்லையே நம் தமிழரை நினைத்து விட்டால்
நெஞ்சு பொறுக்குதில்லையே நம் தமிழரை நினைத்து விட்டால்

பழம் பெருமை பேசுவதை நிறுத்தார்.
பழைய நூல்களை வாங்கவே மாட்டார்.
சமூகப் பிரிவுகள் வளர்த்தே வாழ்வார்.
சங்கத்  தமிழரென்றே பொங்கி எழுவார்.

நெஞ்சு பொறுக்குதில்லையே நம் தமிழரை நினைத்து விட்டால்
நெஞ்சு பொறுக்குதில்லையே நம் தமிழரை நினைத்து விட்டால்

தமிழர் நூல்களை ஏறெடுத்தும் பாரார்.
தமிழர்  படைத்தார் குறுந்தொகை என்பார்.
தமிழர்  சிலம்பு என்பார், மணிமேகலை என்பார். 
தமிழர் இவரோ இவற்றை  வாங்கார்.

நெஞ்சு பொறுக்குதில்லையே நம் தமிழரை நினைத்து விட்டால்
நெஞ்சு பொறுக்குதில்லையே நம் தமிழரை நினைத்து விட்டால்

நடிகை பின்னால் மயங்கிக் கிடப்பார்
நடிகர் பின்னால் மயங்கிக் கிடப்பார்.
உணர்ச்சி அரசியலில் மூழ்கிக் கிடப்பார்.
உணர்ச்சி மிகுந்து மோதிக்கொள்வார்.

நெஞ்சு பொறுக்குதில்லையே நம் தமிழரை நினைத்து விட்டால்
நெஞ்சு பொறுக்குதில்லையே நம் தமிழரை நினைத்து விட்டால்

தமிழ் எழுத்தாளர் எழுத்தால் வாழ்ந்ததில்லை.
தமிழ்க் கலைஞருக்கோ ஆதரவு  இல்லை.
ஊடகப் புகழ் நாடியே  அலைந்து திரிவார்.
உணர்ச்சியில் மட்டுமே நிலை மறப்பார்.

மேலும் படிக்க ...

அதிகாரத்தின் ஆன்மீகமயமாக்கம் - மேற்கத்திய அரசியல் யதார்த்தவாதத்திற்கு மாற்றாகக் காந்திய அறவியல்! - ஈழக்கவி -

விவரங்கள்
- ஈழக்கவி -
ஆய்வு
03 பிப்ரவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 

1. ஆய்வுச் சுருக்கம் (Abstract)

மேற்கத்திய அரசியல் சிந்தனையில் ஆதிக்கம் செலுத்தும் 'அரசியல் யதார்த்தவாதம்' (Political Realism) மற்றும் மகாத்மா காந்தியின் 'தார்மீக அரசியல்' ஆகியவற்றுக்கு இடையிலான முரண்பாடுகளை இக்கட்டுரை ஆராய்கிறது. வன்முறையற்ற எதிர்ப்பு (Satyagraha) மற்றும் அதிகாரப் பரவலாக்கல் (Sarvodaya) மூலம் காந்தி எப்படி ஒரு புதிய அரசியல் பரிமாணத்தை உருவாக்கினார் என்பதை விளக்குகிறது.

  1. அறிமுகம்:

அரசியலின் ஆன்மா - அறமும் அதிகாரமும்

அரசியல் மெய்யியல் (தத்துவ) வரலாற்றில், அரசியலை அறவியலிலிருந்து (Ethics) பிரித்துப் பார்ப்பது ஒரு மரபாகவே இருந்து வந்துள்ளது. ஆனால், மகாத்மா காந்தி இந்தப் பிரிவினையை முற்றிலுமாக நிராகரித்தார். அவரைப் பொறுத்தவரை, "அறமற்ற அரசியல் ஒரு சாவுக்கண்ணி (Death-trap)". தனிமனிதனின் ஒழுக்கமே பொதுவாழ்வின் அடித்தளம் என்பதை அவர் ஆணித்தரமாக முன்வைத்தார்.

2.1 தனிமனித ஒழுக்கமும் பொதுவாழ்வும்: ஒரு பிரிக்க முடியாத பிணைப்பு

மேற்கத்திய தாராளமயக் கொள்கைகள் பலவும் "தனிப்பட்ட வாழ்க்கை" (Private Life) மற்றும் "பொது வாழ்க்கை" (Public Life) ஆகியவற்றை வேறாகப் பார்க்கின்றன. ஒரு அரசியல்வாதி தனிப்பட்ட முறையில் எப்படி இருந்தாலும், அவர் திறமையான நிர்வாகியாக இருந்தால் போதும் என்ற கருத்து நிலவுகிறது.

மேலும் படிக்க ...

கனடாவில் ‘தைப்பொங்கல்’ நூல் வெளியீடு! - சுலோச்சனா அருண் -

விவரங்கள்
- சுலோச்சனா அருண் -
நிகழ்வுகள்
03 பிப்ரவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

சென்ற ஞாயிற்றுக்கிழமை 18-1-2026 அன்று கனடா எத்தோபிகோவில் உள்ள திஸ்டில் நகரமண்டபத்தில் கிராமத்து வதனம் தமிழ் பெண்கள் அமைப்பினரின் ஏற்பாட்டில் தைப்பொங்கல், மரபுத்திங்கள், மற்றும் நூல் வெளியீட்டு நிகழ்வுகள் இடம் பெற்றன. மங்கள விளக்கேற்றி, தமிழ்தாய் வாழ்த்து, கனடா தேசியப்பண் ஆகியன இசைக்கப்பெற்றன. அமைதி வணக்கத்தைத் தொடர்ந்து கிராமத்து வதனம் தமிழ் பெண்கள் அமைப்பின் பாடலுக்கு, நடன ஆசிரியர் திருமதி தயாளினி ஜீனராஜின் மாணவிகளின் நடனம் இடம் பெற்றது. இந்தப் பாடலை அகணி சுரேஸ் எழுத, சி. சுதர்சன் இசையமைக்க, மயூரதி தேவதாஸ் பாடியிருந்தார். அடுத்து திருமதி கலைமகள் புஸ்பநாதனின் வரவேற்பு உரை இடம் பெற்றது. நூல் வெளியீட்டு நிகழ்வில் கனடாவில் இருந்து வெளிவரும் இளையதலை முறையினருக்கான, எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்களை முதன்மை ஆசிரியராகக் கொண்ட ‘வதனம்’ எட்டாவது இதழும், திருமதி கமலவதனா சுந்தா எழுதிய சிறுவர்களுக்கான ‘தைப்பொங்கல்’ நூலும் வெளியிட்டு வைக்கப்பெற்றன.

மேலும் படிக்க ...

சிறுகதை: நன்றி முத்தம்! - கன்பரா யோகன்-

விவரங்கள்
- கன்பரா யோகன்-
சிறுகதை
02 பிப்ரவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

காலை ஏழு  மணி. வெயில்  ஆறுமணிக்கே விழத் தொடங்கியிருந்த கோடை காலக் காற்றிலும் குளிர் இருந்தது. தூரத்தே அடர்த்தியான பைன்  மரக் கூம்புகள் கொண்ட மலைகள் மெல்லிய நீல பனிப் புகாரினூடே தெரிந்தன. பளிச்சென்ற வெய்யில் வந்து மலை விளிம்புகள் தெளிவாகத் தெரியும் வரை இந்தப் புகார் இருக்கும்.

நான் நடந்து கொண்டிருந்த தெரு, நில மட்டத்திலிருந்து  ஒரு நாலைந்து மீற்றர் உயரத்திலிருந்தது. பள்ளத்தில் கட்டப்பட்டிருந்ததால் வீடுகளின் கூரை உச்சிகளை ஒரு பறவையைப் போல என்னால் பார்க்க முடிந்தது. பெரும்பாலும் பழைய வீடுகள், அவற்றுள் சில  பலகை வீடுகள். தெரு மட்டத்திலிருந்து வீட்டு முற்றங்களுக்கு இறங்கப் படிகள் இருந்தன.   

அருகிலிருந்த கோப்பிக் கடை ஒரு நிமிட நடை தூரத்திலிருப்பதை கைத்தொலைபேசியின் GPS காட்ட அந்த பத்து நிமிட நடை என்னை பீகா நகரின் சூப்பர் மார்க்கட் உள்ள தெரு வரைக்கும் கொண்டு சென்றது.  தெருவிலிருந்த சிறிய கடைகள் இன்னும் திறக்கவில்லை.

ஏழு மணிக்கே சூப்பர் மார்க்கட் கடைத் தொகுதியின் நுழைவாயில் தானியங்கிக் கதவு திறந்திருந்தாலும் உள்ளே இன்னும் பல கடைகள் பூட்டிக் கிடந்தன.  ஒரேயொரு சுவர்களில்லாத திறந்த காலையுணவுக்கடையில் இரு சீனச் சிறுமிகள்  பிசியாக நின்றனர். அவர்களிடம் கேட்டபோது கோப்பி, தேநீர் விற்பதில்லையென்றனர். வெளியே ஒரு கடை உண்டு என்றாள் அவர்களில் ஒருத்தி.  

மேலும் படிக்க ...

வ.ந.கிரிதரன் பாடல்: ஏற்றம்மிகு உலகைச் சமைக்கவே சூழலைப் பேணுவோம்!

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
02 பிப்ரவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

வ.ந.கிரிதரன் பாடல்: ஏற்றம்மிகு உலகைச் சமைக்கவே சூழலைப் பேணுவோம்!

- இசை & குரல் - SUNO AI  ஓவியம்: கூகுள் AI

பாடலைக் கேட்க

நீலவண்ணக் கோள் ஒர் அற்புதம்!
காலவெளி தந்த பேர் அதிசயம்!

கண்ணுக்குக் தெரியாத உயிர்கள் எத்தனை!
கண்ணுக்குத்  தெரியும் உயிர்கள் எத்தனை!
எண்ணற்ற உயிர்களின் இருப்பிடம் அல்லவா!
கண்ணுங் கருத்துமாகப் பேணுதல்  கடமை அல்லவா!
வெறுமை சூழ் பேரண்டத்தில் உயிர் அல்லவா!
சிறுமைப் படுத்தல் தகுமோ  முறையோ?
சூழலைப் பேணுவோம். தவறுகளைக் களைவோம்.
ஞாலத்தின் நிலையை மாற்றுவோம். நம்  காலக் கடமையல்லவா!

மேலும் படிக்க ...

"அம்பிலி மாமே! ஒப மொக்கத கரண்ணே?" - ராஜு அங்கிள் நினைவுகள்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
02 பிப்ரவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்



ராஜு அங்கிளை (அம்மாவின் கடைசிச் சகோதரர்)  நினைத்ததும் என் நினைவில் வரும் முக்கிய விடயங்களிலொன்று அவரது 'ரெகோர்ட் பிளேயர் ஸ்டாண்ட்' .  மரத்தால் ஆன அழகான  'ரெகோர்ட் பிளேயர்' அமைப்பு அது. அவரை இசைப்பிரியர் என்றும் கூறலாம். மேனாட்டுப்பாடகர்களின் ஒலித்தட்டுகள் ( Records) தொடக்கம் சிங்கள  'பைலாப்' பாடல்களின் ஒலித்தட்டுகள் வரை பல பாடல்கள் அடங்கிய ஒலித்தட்டுகள் அவரிடமிருந்தன. ஜிம் ரீவ்ஸ் (Jim Reeves), எல்விஸ் பிரெஸ்லி (Elvis Presley), பீட்டில்ஸ் (Beatles) போன்றோரின்  ஒலித்தட்டுகள் அவரிடமிருந்தன. அவர் எழுபதுகளின் ஆரம்பத்திலேயே கனடா வந்து விட்டதால் , அது வரை எட்டாக் கனியாகவிருந்த அந்த ரெகோர்ட்  பிளேயர் எமக்கும் எட்டும் கனியானது. அதன் பின் அங்குள்ள ஒலித்தட்டுகளை அவ்வப்போது ஒவ்வொன்றாகக் கேட்டு மகிழ்வதுண்டு. அவற்றிலொன்று என்னை மிகவும் கவர்ந்தது. அது ஒரு சிங்களப்பாடல். அதனைப் பாடியவர் யார் என்பது தெரியாது. ஆனால் கேட்ட முதல் தடவையே என்னைக் கவர்ந்துவிட்ட பாடல் அது. அண்மையில்தான் அப்பாடலை யு டியூப்பில் தேடிக் கண்டு பிடித்தேன். அதனைப்பாடியவர் அக்காலகட்டத்தில் புகழ்பெற்ற விளங்கிய சிங்களப்பாடகர் சி.டி.ஃபெர்ணாண்டொ என்று அப்போதுதான் அறிந்துகொண்டேன்.  அந்தப்பாடல்: "அம்பிலி மாமே! ஒப மொக்கத கரண்ணே?"

மேலும் படிக்க ...

கலை, இலக்கிய நிகழ்வுகளை ஆவணப்படுத்தும் ஊடகவியலாளரும் , கலைஞருமான கிருபா கந்தையா! - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
நிகழ்வுகள்
02 பிப்ரவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்



ஊடகவியலாளரும், கலைஞரும், புகைப்படப்பிடிப்பாளருமான கிருபா கந்தையா அவர்களின் 'தடயத்தார்'  'யு டியூப் சானல்' சத்தமின்றி முக்கியமானதொரு பணியினை ஆற்றி வருகின்றது. 'டொரோண்டோ'வில் நடைபெறும் கலை, இலக்கிய நிகழ்வுகளைக் காணொளிகளாக்கி இந்தத் 'தடயத்தார்' சானலில் பதிவிட்டு வருகின்றார் கிருபா கந்தையா.  'தடயத்தார்' சானல் கலை, இலக்கிய நிகழ்வுகளைப் பதிவு செய்வதன் மூலம் ஆவணப்படுத்தி வருகின்றது. இது அவ்வளவொன்றும் இலகுவான செயலல்ல. கடும் உழைப்பினையும் , அர்ப்பணிப்பையும் வேண்டுமொரு செயல்.

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. கலாமோகன் தோற்கும் இடங்கள் (2) : கலாமோகன் படைப்புக்கள் குறித்த ஒரு பார்வையும் சில குறிப்புக்களும்! - வாசன் -
  2. தமிழில் நூலாக வெளியான முதலாவது சரித்திர நாவலை எழுதிய பெண் எழுத்தாளர் சிவநயனி முகுந்தன்! - வ.ந.கிரிதரன் -
  3. கம்பராமாயணத்தில் அணுவியல்! - முனைவர் க.மங்கையர்க்கரசி -
  4. எல். ஜோதிகுமாரின் 23ஆம் வயதில் பாரதி : புதிய முளைகளின் முகங்களை வரைதல்! - எம்.எம். ஜெயசீலன் -
  5. மெல்பேர்ன் நகரத்து நூலகத்தில்... -இந்து.லிங்கேஸ்-
  6. " ஏய் மாமா நீ ஒரு கோமாளிதான்" பாடலைப் பாடிய பாடகி திருமதி கனகாம்பாள் சதாசிவம் மறைந்தார்! ஆழ்ந்த இரங்கல்!
  7. சீவகசிந்தாமணியில் அகப்பொருள் மரபுமாற்றங்கள்! - முனைவா் பா.பொன்னி -
  8. நெதர்லாந்தின் நீர் மேலாண்மை! -பவானி சற்குணசெல்வம் -
  9. ஈழக்கவி கவிதைகள்!
  10. தமிழர்களின் திருமண சடங்குளும் அதன் விளக்கங்களும்! - த.சிவபாலு B.Ed.Hons, M.A.in Ed. -
  11. நாடக அரங்கக்கலையில் நவீனத்துவத்தை உட்புகுத்திய நாடகர்! - த. நரேஸ் நியூட்டன் -
  12. கனடியப் பிரதமர் மார்க் கார்னியின் வரலாற்று முக்கியத்துவம் மிக்க உரை! - ஊர்க்குருவி-
  13. இந்தியப் பயணத்தொடர்: நர்மதை நதியின் ஓசை! - நடேசன் -
  14. கவிஞர் தாமரையின் 'தொலைந்து போனேன்' கவிதையில் பெண் மன வெளிப்பாடுகள்! - முனைவர் மூ.சிந்து -
பக்கம் 4 / 125
  • முதல்
  • முந்தைய
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • அடுத்த
  • கடைசி