தீர்த்தக்கரை' சாந்திகுமாரின் சமூக, அரசியற் செயற்பாடுகள் பற்றியதொரு பார்வை! (10 - 13) - ஜோதிகுமார் -
10
தேசிய சிறுபான்மைகளின் அல்லது தேசியங்களின் கேள்வி என்பது வரலாற்றின் ஏற்றப்போக்கில் எந்நிலையில் காணப்படுகின்றது அல்லது முழு சமூக அசைவின் பின்புலத்தில் எக்கட்டத்தை அடைந்துள்ளது என்ற கேள்விக்கான பதில் தீர்க்கமாக கண்டுக்கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும் என்பது லெனினது பார்வையாக இருந்தது. தன் வேலைத்திட்டத்தை வகுத்துக் கொள்ள அல்லது இன்னமும் கறாராக கூறினால் தன் கோரிக்கைகளை கறராக கட்டமைத்துக்கொள்ள, இவ்வினாவானது முதலில் பதிலளிக்கப்பட்டாக வேண்டியதாகின்றது. உதாரணமாக, சாதீய போராட்டத்தை ~ண் கைக்கொண்ட தருணமும், தேசிய அல்லது இன ஒடுக்குமுறை போராட்டத்தை அவர் கைதவறவிட்டதாய் கூறப்படும் தருணமும் வரலாற்றில் வௌ;வேறானது. ஒன்று தேவைப்படுவது. மற்றது, கைலாசபதி குறிப்பிட்டது போல தவறவிடப்பட்டதாகின்றது. ஏனெனில், வரலாற்றின் போக்கில் (அல்லது ஆதிக்க சக்திகளின் காய் நகர்த்தல்களில்) இக்கேள்விகளின் வரலாற்று ஸ்தானமானது தொடர்ந்து இடம் மாறிக்கொண்டே இருப்பதாய் இருக்கின்றன. இவ்வகையிலேயே, இவற்றை சரியாக, சரியான தருணத்தில் பற்றிப் பிடிப்பது அதி முக்கிய தேவையாகின்றன.
இவ் அடிப்படையிலேயே, சாந்திகுமாரின் வரலாறு தொடர்பான – முக்கியமாக, மலையக வரலாறு தொடர்பான அக்கறைகள் குறிக்கத்தக்கனவாகின்றன. எஸ்.நடேசன் கொண்டிருந்த அதே அணுகுமுறையை – அவதாது வரலாற்றை கற்பதில் மூல பதிவுகளை தேடி, சேகரித்து, தன் பார்வையை அகல வீசி எறியும் ஓர் அணுகுமுறையை இருவரும் அவரவர் விகிதாசாரங்களில் கொண்டிருந்தாலும், இருவரது அரசியல் பின்புலமானது, ஒருவரில் இருந்து ஒருவர் தொடர்பில், சற்றே வேறுபடுகின்றது.


தெய்வீகன் எழுதிய `உன் கடவுளிடம் போ’ / தமிழினி பதிப்பகம் வாசிப்புக்குக் கிட்டியது. புத்தகத்தின் தலைப்பில் உள்ளே எந்தக் கதையும் இல்லை. புதிய களம் / தளத்தில் பயணிக்கும் கதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான வாசிப்பு அனுபவத்தைத் தந்தது. சில கதைகள் இதற்கு முன் அறிந்திராத பல சங்கதிகளைச் சொல்கின்றது. தொகுப்பின் முதல் கதையான `அவனை எனக்குத் தெரியாது’ -, ஆயுதங்களிடமிருந்து விலகி ஓடுவதை விரும்பியிருந்தும், அதுவாகவே மீண்டும் ஒருவனிடம் சேருவதைச் சொல்கின்றது. ஒரு இடத்தில் ஆரம்பித்து, இன்னோர் இடத்தில் பயணித்து, இரண்டையும் இணைக்கும் கதை. `இருள்களி’ கதை எமது போராட்ட நிகழ்வுகளை, முதலாம் உலகமகா யுத்தத்தின் போது துருக்கியின் கலிப்பொலியில் போரிட்ட அவுஸ்திரேலிய - நியூசிலாந்து வீரர்களின் நினைவுகளுடன் இணைகின்றது. இலங்கையில் கோயிலில் இருந்த பிள்ளையார் சிலை ஒன்று, எங்கெல்லாமோ சுற்றி, இந்தியா சென்று, அவுஸ்திரேலியா மெல்பேர்ணில் உள்ள அருங்காட்சியகத்தில் இருப்பதைச் சுவைபடச் சொல்லும் கதை `உறக்கமில்லாக் குருதி’.`தராசு’ என்ற சிறுகதையை நான் ஒரு குறுநாவலாகவே பார்க்கின்றேன். மேலும் இந்தக் கதையைச் சொல்வதற்கு ஆசிரியர் தேர்ந்தெடுத்த நடை தோதாக அமையவில்லையோ என்று எண்ணத் தோன்றுகின்றது.

முன்னுரை
” என்னமோ சீரியசா ஏதோ போயிட்டிருந்தது போல. நான் வந்து வாசல்லெ நின்னு கொஞ்ச நேரம் கழிச்சுதா திரும்பிப் பாத்தீங்க .. ”
இன்று, ஏப்ரில் 27, எழுத்தாளர் பிரபஞ்சனின் பிறந்தநாள். எழுத்தால் வாழ்ந்தவர் இவரென்று கூறலாம். அதன் காரணமாக இவர் அடைந்த வாழ்க்கை அனுபவங்களையெல்லாம், உணர்வுகளையெல்லாம் தன் எழுத்துகளில் பதிவு செய்திருக்கின்றார். குறிப்பாகச் சென்னை நகரத்து வாழ்க்கையைப்பற்றிய இவரது குறிப்புகள் முக்கியமானவை. தமிழ் நாவல்களில் இவரது 'வானம் வசப்படும்' மற்றும் 'மானுடம் வெல்லும்' ஆகியவை முக்கியமானவை. பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் இருந்த பாண்டிச்சேரி மக்கள்தம் வரலாற்றை, சமூக அமைப்பினை, அங்கு நிலவிய முரண்களை இவரது இந்நாவல்களூடு கண்டு கொள்ளலாம்.
எழுத்தாளர் நீலபத்மநாபனின் பிறந்தநாள் ஏப்ரில் 26. அதனையொட்டி எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் இக்கட்டுரை மீள்பிரசுரமாகின்றது. - பதிவுகள். -



எழுத்தாளர் கோமகனின் எதிர்பாராத மறைவு பலரையும் நிச்சயம் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கும். அவர் அவ்வப்போது உட்பெட்டியில் வந்து தொடர்பு கொள்வார். அவருடனான உட்பெட்டி உரையாடல்களில் சிலவற்றை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன். அவரது ஆளுமையினை எடுத்துக்காட்டும் உரையாடல்கள் இவை என்பதால் இவற்றைப்பகிர்ந்து கொள்வதும் அவசியமென்று நான் கருதுகின்றேன். இவற்றிலிருந்து அவர் தனது 'நடு' இணைய இதழைத் தனது சுய முயற்சியினால் இணையத்தில் கிடைத்த தகவல்களின் உதவியுடன் வடிவமைத்தார் என்பதை அறிய முடிகின்றது. அது அவரது சுய முயற்சியின் மூலம் கற்கும் ஆற்றலை வெளிப்படுத்துகின்றது. அந் 'நடு' இதழைச் சிறப்பாக வடிவமைத்து, காத்திரமான இதழாகக் கொண்டு வந்தது அவரது ஆற்றலின் வெளிப்பாடே.

பத்திரிகைகளோ அல்லது சஞ்சிகைகளோ சிறுவர்களுக்கான பகுதிகளுக்கும் இடம் கொடுப்பது மிகவும் அவசியமானதொன்று. சினிமா நடிகைகளின் உடலழகைக் காட்டும் கவர்ச்சிப்படங்களை வெளியிடுவதில் காட்டும் ஆர்வத்தை விட அதிக ஆர்வத்தைக் குழந்தைகளுக்கான (அல்லது சிறுவர்களுக்கான) பகுதிகளை நடத்துவதில் காட்ட வேண்டும்.



எழுத்தாளரும் ‘ நடு ‘ இணைய இதழின் ஆசிரியருமான கோமகன் பாரிஸிலிருந்து விடுமுறைக்கு இலங்கைக்கு வந்து திரும்புகையில் கட்டுநாயக்கா விமானநிலையத்தில் மாரடைப்பு வந்து மரணமடைந்தார் என்ற செய்தி அதிர்ச்சியைத்தருகிறது. அற்பாயுளில் மறைந்திருக்கும் கோமகனின் இயற்பெயர் இராஜராஜன். சுறுக்கர் என்ற புனைபெயரையும் கொண்டிருந்தவர். சிறுகதை, பத்தி எழுத்துக்கள், நேர்காணல் முதலான துறைகளில் தொடர்ந்து எழுதிவந்தவர். கடந்த 2017 ஆம் ஆண்டு இவர் வெளியிட்ட குரலற்றவரின் குரல் நேர்காணல் தொகுப்பு இலக்கியப்பரப்பில் கவனத்தை பெற்றிருந்தது. கோமகனின் தனிக்கதை, முரண் முதலான சிறுகதைத் தொகுப்புகளையும் வரவாக்கியிருப்பவர்.