முன்னுரை

தொடக்க காலத்தில் மனித இனம் குழுவாக வாழும் இனக்குழு வாழ்க்கை முறையை மேற்கொண்டிருந்தது. இவ்வாறு வாழ்ந்த மனித இனம் நாகரிகம் பெற்ற நிலை மனித இனத்தின் அடுத்தகட்ட வளர்ச்சியாகும். இவ்வின வரலாற்றின் முக்கிய நிகழ்வு இதுவென்று மானிடவியலார் குறிப்பிடுகின்றனர்.

தந்தை ஆதிக்கச் சமூகம்

உடைமைச் சமூகம் பாலியல் வேறுபாட்டினை அடிப்படையாகக் கொண்ட உயர்வு, தாழ்வு என்பதான கருத்தாக்கத்தினை உருவாக்கியது. இதன் காரணமாக இனக்குழுச் சமூக உட்கட்டமைப்பான தாய்வழிச் சமூக முறை முற்றிலும் அற்று தந்தையாதிக்கச் சமூகம் உருவாகியது. இதன் தொடர்ச்சியாகக் குடும்ப அமைப்பு பெண்ணை இரண்டாம் பாலினமாகவும், ஆணை அதிகார மையமாகவும் நிறுவியது.
இரண்டாம் பாலினமாகப் பார்க்கப்படுதல்

இரண்டாம் பாலினமாகப் பார்க்கப்படும் பெண் இனம் உலக அளவிலான பல்வேறு அறிவுசார் மாற்றங்களின் ஊடாக விழிப்படைந்த நிலையில் கல்வியறிவைப்பெறும் வாய்ப்பினைப் பெற்றது. அதன் விளைவாகத் தன்னைக் குறித்தும் தன்னோடு இணைத்துப் புறச் சூழலையும் உள்ளார்ந்து நோக்கும் விழிப்புநிலையை அடைந்தது.

குடும்ப அமைப்பு

அடுத்தகட்ட வளர்ச்சியாக அறிவார்ந்த சூழலில் பெண்கள் இயங்கத் தொடங்கினர். படைப்புச் சூழலைக் கைக்கொண்டு தன் உணர்வை இயல்புத் தன்மையோடு பதிவு செய்ய முன்வந்தனர். அதன் வெளிப்பாடே குடும்பம்.

1. குடும்ப அமைப்பு கருத்துருவாக்கம்
2. குடும்ப உறவுகள் – பெண்கள்
3. குடும்ப அமைப்பில் – தாய்
4. குடும்ப அமைப்பில் – தந்தை
5. குடும்ப அமைப்பு – கணவன்
6. குடும்ப அமைப்பு மேலாதிக்கம்
7. மரபு நிலைப்பாடு
8. நவீனக் கருத்தாக்கம்

குடும்ப அமைப்பு கருத்துருவாக்கம்

தாய்வழிச் சமூகத்தைப் பெண்ணே தலைமையேற்று வழிநடத்தினாள். வேட்டையாடல், உணவு சேகரித்தல் ஆகியவற்றில் பங்கேற்றாள். ‘உணவு’ சேகரித்தலின் மூலமாக அவ்வினத்தின் ஒட்டுமொத்த உணவுத்தேவை எந்தவித இடையூறுமின்றி பெண் திகழ்ந்தமைக்கு இவ்வினை முக்கியக் காரணமாகும்.

இனக்குழுச் சமூகத்தில் குழந்தைப்பேறு உயர்ந்த இடத்தை வழங்கியிருந்தது. இந்நிலை ஆணை அச்சத்திற்கு உள்ளாக்கியது. இதன் நீட்சியே வளமைக்கான சடங்குகளில் பெண்ணை முன்னிலைப்படுத்துவதாகத் தொடர்கிறது. ஆனால், காலப்போக்கில் குழந்தைப்பேறு குறித்த புரிதலும் அதற்கான ஓய்வும் ஆணைத் தலைமையேற்க வைத்தது. இக்காலத்தில் பெண் எடுக்கும் ஓய்வு அவளின் உரிமைகளை இழப்பதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தது. இக்காலகட்டமே பெண் அடிமையாகக் காரணமாயிற்று.

திருமணம் பெண்ணின் வாழ்க்கையில் மிக முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது. இந்நிகழ்வை ஏற்காத பெண், சமூக நடைமுறைகளிலிருந்து புறந்தள்ளப்படுகிறாள். குடும்ப அமைப்பிற்கான கருத்தாக்கங்களை மையப்படுத்தியே பெண் உருவாக்கப்படுகிறாள். இம்மனநிலையினைக் கவிஞர் திரிசடை தன் கவிதையில் பின்வருமாறு பதிவு செய்துள்ளார்.

தர்க்கம் தவிர்/ தவறிவிட்டால்/ கடமையில்/ நீ
தனிமை/ இனிமை என்று/ கூற என்ன திமிர்
என்று உறுமினர்/ எந்தோழிகள்/ இல்லறமே
நல்லறம்/ என்று/ பெரியோர்/ சொன்ன/ சாத்திரமும்
பொய்யோ?/ அல்ல/ ஆனால்/ அனுமானைப்போல
அந்தரங்கச்சேவை/ செய்ய கண்ணனின்/ காலடிகளை
எங்கு தேடுவது/ என்ற தீராதாகத்தைச்/ சொல்லால்
சொல்வதைத் தவிர/ வேறு வழியில்லையே (திரிசடை, 1978:36)

மிகத் தந்திரமாக அங்கிகாரமற்ற வேலைச்சுமையை இச்சமூகம் பெண்ணின் மீதுசுமத்தியுள்ளது. இதனூடாகப் பெண்ணை இவ்வமைப்பு பலவீனமானவளாகவும் முன்னிறுத்துகிறது.

அச்சரங்கள் ஓய்ந்து/ அறையை சுத்தப்படுத்தி எடுக்க/ கீழிருக்கும் பொருட்கள் எல்லாம்/ கட்டில்மேல் உட்காரும்/ சுத்தம் முடித்து/ துணி துவைத்து/ சாப்பாடு முடித்து/ கொஞ்சம் நேரம் சாய என/ வந்தால்/ மடிப்பதற்கான காய்ந்த துணிகள்/ உறங்கிக்கொண்டிருக்க….. கட்டில் கண்துஞ்ச என்பது/ கனவாய்தான் உள்ளது என்னும் கவிதை வரிகளும் இங்கு குறிப்பிடத்தக்கன.

குடும்ப உறவுகள் – பெண்

தன் குடும்ப உறுப்பினர்களுக்காகத் தன் சுயத்தை, தன் ஆளுமையை இழக்கவேண்டிய கட்டாயத்திற்குள்ளாகிறாள் பெண். இளம்பெண், காதலி, மனைவி, தாய் என்று எல்லா நிலைகளிலும் ஆணைச் சார்ந்தே பெண்ணின் வாழ்க்கை தீர்மானிக்கப்படுகிறது. அடக்கம், பொறுமை, விட்டுக்கொடுத்தல், அடங்கிப்போதல் என்று ஆண் உறவுகளோடு இணங்கிப் போவதற்கான முன் தயாரிப்புகள் இவ்வமைப்பில் வழங்கப்படுகின்றன. இதை,

எமக்கு என்று/ சொற்கள் இல்லை/ மொழி எம்மை/ இணைத்துக் கொள்வதுமில்லை/ உனது கதைகளில்/ யாம் இல்லை/ எனக்கென்று சரித்திரமில்லை/ நீங்கள் கற்றுத் தந்ததே நான்/ வார்த்துத் தந்ததே நிஜம்/ எமக்கென்று கண்களோ/ செவிகளோ கால்களோ/ இல்லை/ அவ்வப்போது நீ இரவலாய்/ தருவதைத்தவிர (கனிமொழி, 1986:96)

என்னும் கனிமொழி வரிகள் உணர்த்துகின்றன. இக்கவிதை, பெண் ஒவ்வொரு நிலையிலும் ஆணின் வழிப்பட்டவளாகவே இருந்து கரைந்துபோதலை வெளிப்படுத்துகின்றது.

குடும்ப அமைப்பில் – தாய்

தாய் என்பது ஒரு பெண்ணுக்கு மகப்பேறு மகிழ்ச்சியை உண்டுபண்ணுகிறது. அதே நேரத்தில் சமுதாயத்தில் இம்மகப்பேறு பெண்ணுக்கு ஒரு மதிப்பிழந்த தன்மையையும் பயமுறுத்தல் நிலையையும் உருவாக்குகிறது. (கிறிஸ்திவா சாரதாம்பாள், செ, 2005, ப.62) என்கிறார் கிறிஸ்திவா சாரதாம்பாள்.

தன்னைக் குறித்த எந்தவிதமான சிந்தனையும் அற்றவளாகவே தாய் சித்தரிக்கப்படுகிறாள். தனக்கென்று தனிப்பட்ட விருப்புவெறுப்பு அற்றவளாக வாழவே அவளை சமூகம் கற்பிக்கிறது என்பதை,

…… தனக்கும் கனவுகள் இருந்ததை மறந்து/
ஓடிக்கொண்டிருப்பாள்/
எங்களுக்காக அழுது சிரித்துத் தன் கனவுகளை எங்கள் மீது திணித்து/
அது நடக்காதபோது/
அழிச்சாட்டியம் செய்து/
தோற்றுப் போய்/ நிற்காது ஓடிக்கொண்டு/ அவ்வப்போது/
நிறைய அன்பு செலுத்தும்/ என் அம்மாவைப் பற்றி எந்தக் கதைகளும் சொல்லுவதே இல்லை. (கனிமொழி, 2003, 27)

என்று எழுதுகின்றார் கனிமொழி.

குடும்பம் குழந்தைகள் என்று தன் வாழ்க்கையை முற்றிலும் கரைத்துக் கொள்ளும் பெண்ணே தியாகத் திருவுருவாகவும் தாய்மையின் இலக்கணமாகவும் கொண்டாடப்படுகிறாள் என்பதை இதன்வழி உணரமுடிகின்றது.

குடும்ப அமைப்பு – தந்தை

ஆணோடு இணைந்தே பெண் அடையாளப்படுத்தப்படும் நிலை குறித்துப் பெண் கவிஞர்கள் பதிவு செய்துள்ளனர். இதனை எல்லா நிலைகளிலும் தன் வாழ்க்கையில் பயிற்சி செய்யப் பெண் பக்குவப்படுத்தப்படுகிறாள். இதனை,

அப்பா சொன்னாரென
பள்ளிக்குச் சென்றேன்
தலை சீவினேன் – சில
நண்பர்களைத் தவிர்த்தேன்
சட்டை போட்டுக்கொண்டேன்
பல் துலக்கினேன், வழிபட்டேன்
கல்யாணம் கட்டிக் கொண்டேன்
காத்திருக்கிறேன்
என்முறை வருமென்று (கனிமொழி, 1996:17)

என்ற கனிமொழியின் கவிதை புலப்படுத்துகின்றது.

தந்தை ஆதிக்கச் சமூகக் கட்டமைப்பின் அனைத்து முடிவுகளும் ஆணின் அதிகாரம் சார்ந்தே செயல்படுத்தப்படுகின்றது. குடும்ப அமைப்பின் அதிகார மையமாகக் குடும்பத்தலைவன் திகழ்கிறான்.

ஏனோ வளர்ந்து பெரிதானதும்/
எல்லைகள் சுருங்கி/
அப்பாவின் பரிமாணங்கள்/
அதன் ஆரம்பப் புள்ளியுள்/
ஒடுங்கிப் போயின அம்மா அறிமுகப்படுத்தின/
அம்மாவின் கணவனானாலும் (பிருந்தா, சே,. 1999:54)

தந்தையின் ஆதிக்க உறவினூடாகப் பெண் பிள்ளையின் மனநிலையினை இக்கவிதை பேசுகிறது. தன்னியல்பில் எதையும் புரிந்துகொள்ள இயலாமை. தந்தையின் அதிகார உறவு தடுப்பதை இக்கவிதை உணர்த்துகிறது.

குடும்ப அமைப்பு – கணவன்

திருமணத்திற்கு முன் தோழனாக இருந்தாலும் திருமண ஒப்பந்தம் நிறைவுற்றதும் தன் ஆதிக்கத்தினை மிக ஆழமாக அதே நேரத்தில் கூர்மையாகவும் செயல்படுத்துகின்றான். எல்லா நிலைகளிலும் மனைவியின் சுயத்தை அழிப்பதின் மூலமாகத் தன் ஆதிக்கத்தை நிறுவுகிறான்.

பரிவு/ பிரியம்/ பகிர்ந்துகொள்ளுகின்றனர்/
இதில் எங்கிருக்கிறது கற்பு முரண்/ என்று/
தெரியவில்லை எனக்கு/ இருபதாண்டு இல்லறப் பரிவர்த்தனைக்குப்/
பின்னும்/ பாடம் புகட்டிக் கொண்டேயிருக்கும் புருஷனுக்கு/
முன்னும்/ பின்னும் (ரெங்கநாயகி, 2002:45)

குடும்பத் தளத்திலும் பணித் தளத்திலும் தொடர்ந்து இயங்கும் நிலையில் மனைவி கணவனின் மேற்பார்வைக்கு உள்ளாக வேண்டிய அவல நிலை சமூகத்தில் உள்ளது. கற்புக் கருத்தாக்கத்துடன் கூடிய ஆணாதிக்க உளவியலோடு பெண் போராட வேண்டியவளாகிறாள்.

பொருளாதாரம் சார்ந்தும் எந்தப் பாதுகாப்பையும் ஏற்படுத்தாது குடும்பத் தலைவெனென்று பெயரளவில் மட்டும் இருக்கும் கணவனை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது இக்கவிதை.

அடிக்கவில்லை/ ஒரு பெஃகுக்குமேல்
குடித்ததில்லை/ குழந்தையின் பால்பவுடர்
தீர்ந்தபோது/ காலி ஒருவன் என்னை அசிங்கமாக
வருணித்தபோது/ மகனின் சுரம் கஷாயத்திற்கு
கட்டுப்படாமல் போனபோது/ வீட்டுச்சொந்தக்காரர்
காலி செய்ய நோட்டீஸ் கொடுத்தபோது/
பல சமயங்களில்/ அவன் ஒன்றுமே செய்யவில்லை (வத்ஸலா, 2000:33)

குடும்ப அமைப்பு – மேலாதிக்கம்

அங்கீகாரமற்ற குழந்தை வளர்ப்பு, வீட்டுப் பராமரிப்பு உள்ளிட்ட வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்ய வேண்டியவள் பெண் மட்டுமே என்ற கருத்தியல் ஆழ வேரூன்றியுள்ளது. இதனை,

ஒரு கைகொடு/ அழும் குழந்தை என்னுடையது
மட்டுமல்ல/ நம்முடையதும் தான்/ அடுப்புச் சோறும் அதுவும் கூட/
நமக்காகத்தான்/ செய்தித்தாள் அது சென்றடைய வேண்டியது
என்னையும்தான்/
அலுவலக வேலை உனக்கு மட்டுமா? எனக்கும் தான்/
களைப்பும் சோர்வும்/
கணவனுக்குத் தானா? மனைவுக்கும் தான் (சுபத்ரா 1990:36)

என்னும் சுபத்ராவின் கவிதை கேள்விக்குட்படுத்துகின்றது.

தன்னைப் பற்றிய சிந்தனையற்ற பெண் விழிப்புற்றுத் தன்னைக் குறித்து சிந்திக்கும்போது கால வெறுமையை உணர்கிறாள்.

எனக்கொரு சந்தேகம்?/ உந்தேகம் பொன்
தேகமா?/ என்றவனை விரும்பிக் கரம்
பற்றினேன்/ ஓ! இப்போதல்லவா தெரிகிறது/
எடுத்ததற்கெல்லாம் சந்தேகம் வருமென்று (சந்திரகாந்தி, 1988: 87)

ஆதிக்க மனநிலையுடன் ஆண் செயல்படுகிறான். இதன் கூரிய வெளிப்பாடு பெண்ணின் நடத்தையைச் சந்தேகத்திற்கு உட்படுத்தும் செயல்பாடு என்பதை இக்கவிதை உணர்த்திநிற்கின்றது.

மரபு நிலைப்பாடு

பெண்ணிற்கென சமூகம் கற்பிக்கும் மரபான கருத்தாக்க உச்சத்தினை,
துன்பப்படாமல் இருப்பதைவிட துன்பங்களால் உறுத்தப்பட்டு
உறுத்தப்பட்டு வருத்தப்பட்ட சிப்பிகளே முத்து ஈணும்
என்பதால் துன்பங்களுக்கு நன்றி சொல்லி துயரத்துக்குத்
தன்னைப் பழக்கினாள் (திலகவதி, 1987:63)

என்று துன்பத்தையும் பெண் தனக்குச் சாதகாக்கிக் கொண்டதை குறித்துச் செல்கிறது திலகவதியின் இக்கவிதை. மேலும், இக்கவிதைக்கு இக்கவிஞர் இல்லற பாசம் என்று பெயரிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பெண்ணுக்கு/ மூனுமுடிச்சு/ ஆணுக்கும்
போடட்டும்/ ஒன்றேனும் சூடு…./ ஆனாலும்/
கருத்தரிப்பும்/ பிரசவிப்பும்/
பென்ணுக்கே/ நிலைக்கட்டும் தாய்மையின் பெருமையை/
தரவும் முடியாது/ அதை நீ
பெறவும் முடியாது/ ஆண் மகனே…. (மல்லை தமிழச்சி 2005:29-30)

இக்கவிதை, தாய்மை குறித்த சொல்லாடல்கள், புனிதமென்று கட்டமைக்கப்பட்ட கருத்தாக்கங்கள் பெண்ணின் மூளைக்குள் மிகத் தந்திரமாக இவ்வாதிக்கச் சமூகம் புகுத்தியுள்ளதை வெளிப்படுத்துகின்றன. பெண்ணை அடிமைப்படுத்தும் முக்கிய கற்பிதமாகத் தீவிரப் பெண்ணியவாதிகள் இக்கருத்தாக்கத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

நவீனக் கருத்தாக்கம்

பெண் தன் நிலை குறித்த விழிப்புணர்வு இன்றி அச்சூழலிலேயே உழல வேண்டியவளாகிறாள்.

இலட்சங்களைத் தட்சணை தந்து/
இலட்சியங்களை இழந்து/
தேய்ந்துமடிவதைவிட/ உரிமையின் உண்மையாய்/
அழுக்குக்கரம் படாமலேயே/ தனித்து நின்று தேயலாம் (விஜயலட்சுமி, கி. 1982:27)

என்னும் விஜயலட்சுமியின் கவிதை, பொருளைத் தந்தும் இலசியங்களை இழந்தும் குடும்ப அமைப்பிற்குள் நுழையும் பெண் உடல், உளம் சார்ந்த சிக்கல்களைத் தொடர்ந்து எதிர்கொண்டு அடையாளமிழந்து ஒன்றுமற்றுப் போவதைவிட உரிமைக்காகக் கடைசிவரை போராடித் தேயலாம் என்ற கருத்தை முன்வைக்கிறது.

பெண்ணின் வாழ்க்கை குறித்த அனைத்து முடிவுகளையும் ஆணே எடுக்கும் நிலை குடும்ப அமைப்பின் முக்கியச் செயல்பாடாக உள்ளது.
தொடர்ந்து பெண்ணைக் கட்டுப்படுத்த தேவையான அத்துணைக் கருத்தாக்கங்களையும் அவளுக்குள் புகுத்திச் செயல்படுத்தும் ஆணாதிக்கச் சமூக நுண் அரசியலைப் புரிந்துகொண்ட கவிஞரின் குரலாக இக்கவிதை அமைந்துள்ளது.

அலுத்துவிட்டது/ அக்கினிக்குளியல்/
ஆகுதி/ இருப்பிடத்தை/ மாற்றிக்கொள்ளலாம்/
பீடத்தில் அவள்/ பலிபீடத்தில் அவன் (ஆண்டாள் பிரியதர்ஷினி, 2004:29)

காலம் காலமாகப் பெண்ணே பலிபீடத்தில் நிறுத்தப்படும் நிலையை மாற்றி ஆணை நிறுத்தச் சொல்லும் வலிய குரலாக இக்கவிதை உள்ளது.

முடிவுரை

குடும்ப அமைப்பில் நிலவும் ஆதிக்க மனநிலையின் வெளிப்பாடுகளைப் பெண் கவிஞர்கள் மிக ஆழமாகத் தங்களின் படைப்புகளில் புலப்படுத்தியுள்ளனர். பொருளாதார அங்கீகாரமற்ற இல்லப்பணிகளில் தம்மைத் தொலைக்கும் பெண்ணைப் பல கவிஞர்கள் பதிவு செய்துள்ளனர். ஏராளமான கேள்விகளினூடாகப் பெண் படைப்புகள் அடுத்தகட்ட நகர்வை முன்வைத்துள்ளன என்பதையே மேற்கண்ட சில பெண்கவிஞர்களின் கவிதை வரிகள் புலப்படுத்துகின்றன.

துணைநின்ற நூல்கள்

1. ஆண்டாள் பிரியதர்ஷினி, முத்தங்கள் தீர்ந்துவிட்டன, குமரன் பதிப்பகம் சென்னை, 2004.
2. இராஜ லட்சுமி, ஏ., எனக்கான காற்று, மருதா வெளியீடு, சென்னை, 2004.
3. உமாககேஸ்வரி, மீ., வெறும்பொழுது, தமிழினி பதிப்பகம், சென்னை, 2002.
4. கனிமொழி, கருவறை வாசனை, சாந்தி பிரசுரம், சென்னை, 1995.
5. கனிமொழி, அகத்திணை, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், 2003.
6. சுபத்ரா, எந்தந்தோழா, மனிதப் பதிப்பகம், திருச்சி, 1990.
7. திரிசடை, பனியால் பட்ட பத்து மரங்கள், 1978.
8. பாலபாரதி, சில பொய்களும் சில உண்மைகளும் , வம்சி புக்ஸ், திருவண்ணாமலை.
9. மல்லை தமிழச்சி, விழியில் நனையும் பயிர், அகநி வெளியீடு, வந்தவாசி.
10. ரெங்கநாயகி, ஸ்நேகிதவனம், விருட்சம் வெளியீடு, சென்னை, 2002.
11. வத்ஸலா, சுயம், ஸ்நேகா பதிப்பகம், சென்னை, 2000.
12. வெண்ணிலா, அ., நீரிலலையும் முகம், தமிழினி பதிப்பகம், சென்னை, 2001.

அனுப்பியவர்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R