தினகரன் முன்னாள் பிரதம ஆசிரியர் ( அமரர் ) ஆர். சிவகுருநாதன் ( 1931 – 2003 ) நினைவுகள்! - முருகபூபதி -

கொள்ளுப்பிட்டி ரண்முத்து ஹோட்டலில் ஒரு நூல் வெளியீட்டுவிழா. நானும் ஒரு பேச்சாளன். நூலாசிரியரின் பதிலுரைக்கு முதல், விழாத்தலைவர் என்னை இவ்வாறு பேசுவதற்கு அழைக்கிறார். “நேரம் போய்க் கொண்டிருக்கிறது. இனி அடுத்துப் பேசப் போகிறவர் முருகபூபதி. அவருக்கு ஒரு வேண்டுகோள், கெதியாகப் பேசி முடித்துவிட்டு, நீர்கொழும்பு பஸ்ஸை பிடிக்க ஓடவும்.” சபையில் சிரிப்பலை அடங்கச் சில விநாடிகள் தேவைப்படுகிறது.
பம்பலப்பிட்டி சாந்திவிஹார் ஹோட்டலில் ஒரு பிரபல தமிழ்ப் பத்திரிகையாளருக்கு பாராட்டு பிரிவுபசார விழா. புகைபடக் கலைஞர் ஒருவர் சுறுசுறுப்பாக இயங்கி, படங்கள் எடுத்துக் கொண்டிருந்தார். விடைபெறவுள்ள பத்திரிகையாளரைப் பாராட்டிப் பேசுவதற்கு ஒரு முஸ்லிம் அரசியல் பிரமுகர் தலைவரால் அழைக்கப்படுகிறார். பிரமுகர் தமது பேச்சுக்கிடையே – அந்தப் புகைப்படக் கலைஞரையும் புகழ்ந்து சில வார்த்தைகளை உதிர்த்துவிட்டு “அந்தக் கலைஞர் சிறந்த படப்பிடிப்பாளர், அவருக்கும் நாம் பாராட்டு விழா நடத்த வேண்டும்” என்கிறார்.
உடனே, தலைவர் “அந்தக் கலைஞர் பத்திரிகைகளுக்காக எடுத்த படங்களையும் பார்த்துள்ளேன். அவர் எடுத்த வேறு படங்களையும் பார்த்துள்ளேன். ” என்று சொன்னவுடன் சபையில் அட்டகாசமான சிரிப்பொலி எழுந்து அடங்கியது. அந்தப்புகைப்படக்கலைஞர் நாணத்துடன் தலைகவிழ்ந்து சபையின் பின்புறம் ஓடி வந்துவிட்டார்.






மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை இசைக் கருவிகள் இசைக்கப்படுகின்றன. இசைக்கருவிகளைத் தமிழர்கள் தோல் கருவி, துளைக்கருவி, நரம்புக் கருவி, கஞ்ச கருவி, மிடற்றுக்கருவி எனப் பகுத்து வைத்தனர்.அரசனது அறிவிப்புகளை மக்களுக்கு முரசறைந்து அல்லது பறையடித்துச் சொல்வது மரபாகும்.இலக்கியங்களில் திருமணச்செய்தியை அறிவிக்க,முடி சூட்டு விழாவை அறிவிக்க, போர்த் தொடக்கத்தை அறிவிக்க, போர்ப் பூவைப் பெற்றுக்கொள்ள, போர் ஆரம்பித்து விட்டது என்பதை அறிவிக்க, சமாதானத்தை அறிவிக்க, போர் வெற்றியை அறிவிக்க, பிறந்தநாள் விழாவை அறிவிக்க,விழா நடைபெற இருப்பதை அறிவிக்க என்று பல அறிவிப்புகளை மக்களுக்குத் தெரிவிப்பதற்காகவே முரசு முழக்கப்பட்டதை இக்கட்டுரையில் ஆராய்வோம்.
என் கணவர் ஆபிரகாமின் இரண்டாவது தங்கை திரேசாவுக்கும் - ஸ்டீபனுக்கும் புனிதவியாகப்பர் ஆலயத்தில் நடந்துகொண்டிருந்த திருமணம், மணப்பெண்ணின் மறுப்பினால் பாதியிலே தடைபட்டது.
4


தைபிறந்து விட்டாலே தங்கமே தங்கம் 
'
மேற்கு நாடொன்றில் ஒரு சித்திரம் பார்த்தேன். அதில் தேவதை ஒன்று பரிசுத்த மத்தியு பின்பாக கையை பிடித்து வேதநூலை எழுதுவது போல் தீட்டப்பட்டிருந்தது. சாதாரண வரி வசூலிப்பாளரான மத்தியுவிற்கு எவ்வளவு எழுத தெரியும்? அதுவும் கிரேக்க மொழியில் என்பது சந்தேகமே! சாமானியர்களை வாழ்வை இலக்கியமாக எழுத்தில் கொண்டு வந்தது புதிய வேதங்கமே.


குஜராத்தி இலக்கியத்தின் தொடக்கப்புள்ளியாக, நவீன குஜராத்தி உரைநடையின் பிதாமகராக காந்தி கருதப்படுகிறார். பெரிதும் பக்திக்கே பயன்பட்டுவந்த நெகிழ்ச்சியான, இசைத்தன்மைகொண்ட , அலங்காரம் நிறைந்த உரைநடையை காந்தி அக்கால பிரிட்டிஷ் உரைநடையின் இடத்துக்குக் ஒரே தாவல் மூலம் கொண்டுவந்தார். கறாரான கூறுமுறை, கச்சிதமான சொற்றொடர்கள், உணர்ச்சிகள் வெளிப்படாத நேரடியான எளிய நடை ஆகியவை காந்திக்கே உரியவை. அது குஜராத்தி இலக்கியத்தை சட்டென்று அடுத்த கட்டத்துக்கு கொண்டுசென்றது.

பண்பாடு என்றால் என்ன எனும் கேள்விக்கு விடை தேடினால், அது மக்கள் தமது சமூக வரலாற்று வளர்ச்சியைத் தோற்றுவிக்கும் பெளதீகப் பொருட்கள், கருத்துக்கள், மத நம்பிக்கைகள், சமூகப் பெறுமானங்கள் என்பனவாகும். பண்பாடு இல்லையெனில் பாரதம் இல்லை என்பது தமிழரின் வாக்கு. மக்களின் தொழில் நுட்ப வளர்ச்சி, உற்பத்தி முறைமை, கல்வி, விஞ்ஞானம். இலக்கியம், கலைகள், நம்பிக்கைகள் அனைத்துமே பண்பாட்டினுள் அடங்குவன
இங்கிலாந்தில் இருந்து வருகை தந்திருந்த பாவலர் பாலரவியின் கவிதைத் தொகுப்புக்கள் 24-12-2023 ஆம் ஆண்டு ஸ்காபரோவில் உள்ள 110, ‘அயன்சைட் கிறிசென்ட்’ மண்டபத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது. கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில் ‘தெளிந்தபின் தெளிந்தவை,’ ‘எண்ணங்களின் வண்ணங்கள்,’ ‘வாழ்வாங்கு வாழ்ந்தோர்க்கும் வாழ்வோர்க்கும் வாழ்த்துக்கள்,’ ‘தேசமேயாகிய சுடர்கள்,’ ஆகிய நான்கு கவிதைத் தொகுப்புக்கள் வெளியிட்டு வைக்கப்பட்டன.

“செயற்கைப் புலமை” (AI) என்பது இன்று பிரபல்யமான ஒரு வார்த்தையாக உலகத்திற்கு வந்து சேர்ந்துள்ளது. அண்மையில், தமிழ் அரசியலில், சக்கைப் போடு கண்டுவிட்ட துவாரகாவின் வரவு கூட செயற்கைப் புலமையுடன் தொடர்பு படுத்தப்பட்டு, அமர்களப்படுத்தப்பட தவறவில்லை. துவாரகாவின் உரை பற்றிக் குறிக்கும் போது பேராசிரியர் கீதபொன்கலன், AIயின் தொடர்புக் குறித்து கருத்து தெரிவித்திருந்த போதிலும், இதற்கு முன்னதாகவே மேஜர் மதன்குமாரிடம் துவரகாவின் உரையானது செயற்கைப் புலமையால் தாயரிக்கப்பட்ட ஒன்றுதானா என்று கேட்கப்பட்ட போது, அக்கேள்விக்கு நேரடியாக பதிலளிப்பதிலிருந்து சாமார்த்தியமாக அவர் விலகிக் கொண்ட செயல் குறிக்கத்தக்கதுதான்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









