ஒரு பக்கக் கதை: மது ஒழிப்பு - மணிராம் கார்த்திக் (மதுரை) -
* ஓவியம் AI
மதுரை மேல மாசி வீதி மூன்று சாலை சந்திப்பு இடத்தில்,
அதிகாலை ,
இரு வயதான துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை சுத்தம் செய்து கொண்டிருந்த படி,
“ ஏன் சுந்தரம் ? நேத்து இங்க என்னா மீட்டிங் போட்டாங்க ?“ என்று மீனாட்சி கேட்டாள். ,
“ மது ஒழிப்பு. அரசுக்கு எதிரா போராட்டம்.மதுவை ஒழிக்க சொல்லி மாபெரும் போராட்டம் நடத்தியது எதிர்கட்சி “ என்று சுந்தரம் கூறினான்.
“ மது ஒழிப்பு போராட்டம்னு சொல்ற , இங்க பார்த்தா ஒரு லோடு சரக்கு பாட்டில் கிடக்கு. இத சுத்தம் செய்யவே நேரமாகும் போல !” என்றாள் மீனாட்சி.
“ மது ஒழிப்பு போராட்டம் தான் , அதான் மதுவ வாங்கி ஒழிச்சிருக்காங்க. போராட்டத்தில் கலந்திருக்க ஒவ்வொருவருக்கும் ஒரு குவாட்டரும், கோழி பிரியாணியும் யாருக்கும் தெரியாம கொடுத்திருக்காங்க. கூட்டம் கூடிருச்சு.” என்று சுந்தரம் கூறினான்.
“சிரிப்பு தான் வருது.பேரு மது ஒழிப்பு மாநாடு , மது குடிக்காத ஆளே இல்லை “ என்று மீனாட்சி நக்கலாக கூறினாள்.