யாவரும் கேளிர் 2023! - தகவல்: எல்லாளன் -



கனடா ஸ்காபரோ நகரில், 'மக்கள் எழுத்தாளர்' கே. டானியலின் 'சாநிழல்' குறுநாவல் வெளியீட்டு நிகழ்வு கடந்த சனிக்கிழமை மாலை (30 - 09 - 2023) மிகச் சிறப்பாக நடைபெற்றது. மூத்த தோழர் சூ. மார்க்கு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கே. பி. லிங்கம், செகா சிவா, தர்சன் சிவகுருநாதன் ஆகியோர் டானியல் பணிகள் குறித்தும் சாநிழல் நாவலின் சிறப்புக் குறித்தும் உரையாற்றினர்.
டானியலின் அரசியல், இலக்கிய, சமூகப் பணிகளில் இறுதிவரை அவருடன் உடன்நின்று செயற்பட்ட தோழர் வி. ரி. இளங்கோவன், டானியலின் பணிகள் குறித்துச் சிறப்புரையாற்றினார். இளந்தலைமுறையினர் உட்படப் பெருந்தொகையானோர் கலந்துகொண்ட இந்நிகழ்வில் பலரும் விருப்புடன் நூலைப் பெற்றுச் சென்றனர்.
கல்வியாளர்கள் பார்வதி - கந்தசாமி, மூத்த தோழர் வீரசிங்கம், ஹரிகரன் ஆகியோர் சிறப்புப் பிரதிகள் பெற்றனர். டானியலின் மூத்த மகன் புரட்சிதாசன் சிறப்புப் பிரதிகளை வழங்கினார்.
கனடா 'தேடகம்' அமைப்பினர் இந்நிகழ்வினைச் சிறப்பாக ஒழுங்கு செய்திருந்தனர். இந்நூல் ஏற்கனவே யாழ்ப்பாணம், சென்னை, தஞ்சாவூர் ஆதியாம் இடங்களில் வெளியீடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது..!
காற்றுவெளியின் மார்கழி மாத மின்னிதழ்(2023) நமது எழுத்தாளர் சொக்கன்(க.சொக்கலிங்கம்)அவர்களின் நினைவுச் சிறப்பிதழாக வெளிவரவுள்ளதால் அவரின் படைப்புக்கள்,பாத்திர வார்ப்புக்கள்,நாடகம்,நாவல்,சிறுகதை,கவிதை,தொகுப்புக்கள் போன்றதுறை சார்ந்த ஆழுமையினை ஆய்வுக்கட்டுரையாக(4 பக்கங்களுக்கு அதிகமாகாமல்) அனுப்புங்கள்.படைப்புக்கள் யாவும் யூனிக்கோட் எழுத்துருவிலும்,வேறெங்கும் பிரசுரமாகாமலும் இருத்தல்வேண்டும்.
அவர் சார்ந்த புகைப்படங்களையும் எதிர்பார்ப்பதோடு,இத் தகவலை நண்பர்களுக்கோ,ஊடகங்களுக்கோ பரிமாறுங்கள். தங்கள் மேலான ஒத்துழைப்பை நாடி, படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இடம்: Trinity Center, East Avenue,London
திகதி: 23.09.2023
நேரம்: காலை 10.30 - மாலை 7.30
சுவாமி விபுலானந்தர் கலை மன்றம் (கனடா ) கனடாவில் வாழும் காரைதீவைச் சேர்ந்த பேராசிரியர் இளையதம்பி பாலசுந்தரம் அவர்களுக்குப் பாராட்டு விழாவினை ஞாயிற்றுக் கிழமை 17.09.2023 அன்று நடத்தவுள்ளது. இடம்- தமிழ் இசைக் கலாமன்றம், 1120 Tapscott Road, Scarborough. நாள் & நேரம்: 17.09.2023 ஞாயிறு மாலை 5 மணி.
- தெளிவாகப் பார்ப்பதற்குப் படத்தை இரு தடவைகள் அழுத்தவும். -
- அறிவித்தலைத் தெளிவாகப் பார்க்க ஒருமுறை அழுத்தவும். -
- அறிவித்தலைத் தெளிவாகப் பார்ப்பதற்கு ஒருமுறை அழுத்தவும். -

சிட்னியில் செப்டெம்பர் 10 ஆம் திகதி 2023 தமிழ் எழுத்தாளர் விழாவில் இலக்கியப் படைப்பாளி தாமரைச் செல்வியின் ஐம்பது ஆண்டுகால எழுத்தூழியப் பங்களிப்பை பாராட்டும், கௌரவிப்பும் இந்நிகழ்வில் நடைபெறுகிறது.
அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வருடாந்த தமிழ் எழுத்தாளர் விழா எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சிட்னியில் தூங்காபி Toongabbie சமூக மண்டபத்தில் காலை 10-00 மணிக்கு ஆரம்பமாகும்.
அவுஸ்திரேலியாவில் வதியும் எழுத்தாளர்களின் நூல்களின் கண்காட்சி, மலையகம் 200 கருத்தரங்கு , வாசிப்பு அனுபவப்பகிர்வு முதலான நிகழ்ச்சிகள் நடைபெறவிருக்கின்றன. அத்துடன் எழுத்தாற்றல் மிக்க மணவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்படும்.
2023 தமிழ் எழுத்தாளர் விழாவின் காலை அரங்கில் வரவேற்புரையை கலாநிதி கார்த்திகா கணேசர் நிகழ்த்துவார். அதன்பின் கலாநிதி சந்திரிகா சுப்ரமணியன், Clr Lisa Lake , Mayor, Cumberland City Council மேயர் வரவேற்று உரையை ஆற்றுவார். அதன்பின் இளம் எழுத்தாளர்களுக்கான சான்றிதழ்கள் பிரதம அதிதி கம்பர்லாந்து மேயரால் வழங்கப்படும்.
நூலை வாசிக்க
சிறுவர்களுக்கான 1000 புத்தகங்களை உருவாக்கும் இலக்குடன் Stem-Kalvi செயற்பட்டு வருகிறது. நீங்களும் இந்தத் திட்டத்தில் இணைந்துகொள்ளலாம். தொடர்புகொள்வதற்கு: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். இந்தப் புத்தகங்கள் இலவசமானவை, இவற்றை stemkalvi.org/books என்ற வலைத்தளத்தில் பார்வையிடலாம். உங்களுக்குத் தெரிந்த சிறுவர்களுடன் சேர்ந்து வாசிக்கலாம். பின்னூட்டமிடலாம்."
- அறிவித்தலைத் தெளிவாகப் பார்க்க படத்தை ஒரு தடவை அழுத்தவும். -

நூல்: “எனினும் நான் எழுகிறேன்” | ஆசிரியர்: திரு க.நவம்
மொழிமாற்றங்கள் ஒன்றும் புதிதல்ல, நூல் வெளியீடுகளும் ஒன்றும் புதிதல்ல. ஆனால் எவற்றை மொழிபெயர்க்கிறோம், அவற்றை எங்ஙனமாய் மொழி மாற்றங்கொள்ளும் மொழிக்குள் உள்வாங்குகிறோம், அவற்றை யார் மூலமாக யாரிடம் கொண்டு சேர்க்க விரும்புகிறோம் என்பவற்றை இந்நூலும் இந்நூல்சார்ந்த வெளியீடும் எனக்குள் ஏற்படுத்திய அனுபவங்கள் வாயிலாக,வாசகர்களாகிய உங்களுக்கு எடுத்துக் கூறுவதுதான் இவ்வரைபின் முக்கிய நோக்கம்.
இந்நூலுக்கு முகவுரை எழுதியவன் என்ற வகையில் , நூலைப்பற்றியும், இந்நூல் வெளியீடு பற்றியும் என் மனதில் தோன்றியதை எழுதவேண்டும் என்ற ஆர்வமும் இக்குறிப்பின் இன்னொரு காரணமாக அமைகிறது.

சனிக்கிழமை 22-7-2023 அன்று கனடா, மிஸஸாகாவில் உள்ள ஜோன்போல் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்ற பீல்பிரதேச சொப்கா குடும்பமன்றத்தின் கலை நிகழ்வின்போது பிரபல எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்களின் ‘சாக்லாட் பெண்ணும் பண்ணை வீடும்’ என்ற எழுத்தாளர் குரு அரவிந்தனால் தமிழில் எழுதப்பட்ட வெளிநாட்டுச் சிறுகதைகள் அடங்கிய சிறுகதைத் தொகுப்பும், மாலினி அரவிந்தனின் ‘பறவைகள்’ என்ற சிறுகதைத் தொகுப்பும் வெளியிட்டு வைக்கப்பட்டன. கலை, இலக்கிய ஆர்வலர்கள் பலர் மண்டபம் நிறைந்த இந்த நிகழ்வில் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.