நூலை வாசிக்க
சிறுவர்களுக்கான 1000 புத்தகங்களை உருவாக்கும் இலக்குடன் Stem-Kalvi செயற்பட்டு வருகிறது. நீங்களும் இந்தத் திட்டத்தில் இணைந்துகொள்ளலாம். தொடர்புகொள்வதற்கு: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். இந்தப் புத்தகங்கள் இலவசமானவை, இவற்றை stemkalvi.org/books என்ற வலைத்தளத்தில் பார்வையிடலாம். உங்களுக்குத் தெரிந்த சிறுவர்களுடன் சேர்ந்து வாசிக்கலாம். பின்னூட்டமிடலாம்."
நூலை வாசிக்க
ஸ்டெம் கல்வி தொண்டு நிறுவனம் இலங்கையில் வறுமையான பிரதேசங்களில் தனது சேவையை வழங்குகின்றது. உயர்தரத்திற்குரிய கணிதம், பௌதிகவியல், இரசாயனவியல், உயிரியல் பாடங்களுக்கு மாத்திரமல்லாமல் 11ம் வகுப்புக்கு கீழான கணிதம், விஞ்ஞானம் ஆகிய பாடங்களுக்குமான பயிற்றப்பட்ட ஆசிரியர்களுக்கு மிகப்பெரும் தட்டுப்பாடு இலங்கையின் பல மாவட்டங்களில் நிலவி வருகின்றது. இத்தட்டுப்பாடு தமிழ் மக்கள் பெருமளவில் வசிக்கும் மலையக மாவட்டங்களான நுவரேலியா, இரத்தினபுரி, மொனராகலை, மாத்தளை, கேகாலை, மாத்தறை ஆகியவற்றிலும், கிழக்கு மாகாண மாவட்டங்களான அம்பாறை, திருகோணமலை ஆகியவற்றிலும், வட மாகாணத்தில் யாழ் மாவட்டம் தவிர்ந்த மற்றைய மாவட்டங்களிலும் பெரியளவில் காணப்படுகின்றது. ஆசிரியர்கள் பற்றாக்குறையால் பல பாடசாலைகள் உயர்தர பௌதிக விஞ்ஞான, உயிரியல் விஞ்ஞான பாட நெறிகளை நிறுத்தி வருவதே இதற்கு காரணமாகவும். ஸ்டெம் கல்வி நிறுவனம் இவ்வாசிரியர் பற்றாக்குறையை எண்ணிம தொழில்நுட்பங்களைப்பாவித்து தீர்க்க முயற்சித்து வருகின்றது. [ நன்றி: http://www.stemkalvi.org/about-us/ ]





பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









