தமிழ் ஆழி விமர்சனக்கூட்டத்தி்ல் கலந்துகொள்ள முன்-அழைப்பு
நண்பர்களே, தமிழ் ஆழியின் முதல் ஆறு இதழ்களுக்கான விமர்சனக் கூட்டமும் அதன் இணைய தள அறிமுகக்கூட்டமும் விரைவில் சென்னையில் நடக்கவுள்ளது. இது போன்ற நிகழ்ச்சிகளை மதுரை, கோவையிலும் நடத்த விருப்பம். நிகழ்ச்சியில் இதழ்களை விமர்சித்து பேச விரும்புவர்கள் தெரிவிக்கவும். உங்களிடம் எல்லா இதழ்களும் கையில் இல்லாத பட்சத்தில் பழைய இதழ்களின் பிடிஎஃப் கோப்புகளையும் அனுப்பிவைக்கிறோம். மதுரை, கோவையில் நிகழ்வு ஏற்பாடுகளைச் செய்ய எங்களது தோழமை சக்திகளின் உதவியும் தேவைப்படுகிறது. தமிழ் ஆழி ஜூலை இதழ் சர்வதேச சிறப்பிதழாக உருவாகி, இன்று அச்சுக்கு செல்கிறது. விரைவில் கடைகளில் கிடைக்கும். என்ன செய்யவேண்டும் என நாங்கள் நினைக்கிறோமோ அதில் ஒரு சிறு பகுதியையே செய்துவருகிறோம். என்றாலும் அனைவரின் கருத்துகளைக் கேட்டு, இதழை co-create செய்வது மிகவும் சிறந்தது. அதன் உள்ளடக்கம், வடிவமைப்பு உள்பட அனைத்தையும் நீங்கள் விமர்சித்து வழிகாட்டவேண்டும் என விரும்புகிறேன்.

தேசிய இனப் பிரச்சினைப்பாடுகளையும் யுத்த மறுப்பையும் அமைதிக்கான வேட்கையையும் சாதிய எதிர்ப்பையும் பெண்விடுதலையையும் விளிம்புப் பால்நிலையினரின் குரலையும் வஞ்சிக்கப்பட்ட மாந்தரின் பாடுகளையும் பேசும் பெருந்தொகுப்பு. கட்டுரைகள், சிறுகதைகள், நேர்காணல்கள், கவிதைகள் என நான்கு பகுப்புகள். பன்னிரெண்டு நாடுகளிலிருந்து எழுதப்பட்ட எழுபத்தைந்துக்கும் அதிகமான பனுவல்கள். இலக்கியச் சந்திப்பின் மரபுவழி கட்டற்ற கருத்துச் சுதந்திரத்திற்கான களம்.
பாரதியார் தித்திக்கும் தமிழில் தெவிட்டாத சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது சொற் புதிது சோதிமிக்க நவகவிதை என்னாளும் அழியாத மகா கவிதைகள் எழுதித் தமிழ்மொழிக்கு ஒரு புதிய பொலிவும் அழகும் சேர்த்தவர். இலக்கணப் பண்டிதர்களிடம் அகப்பட்டுக் கிடந்த தமிழை பாமரர்களும் சுவைக்கும் படி பாடல்கள் எழுதியவர். ஆனால், பாரதியார் கவிஞன் மட்டுமல்ல அவர் ஒரு சிறந்த கதாசிரியர், கட்டுரையாசியர், மேடைப் பேச்சாளரும் ஆவர். பாரதியார் கம்பர், திருவள்ளுவர், இளங்கோ போன்ற புலவர்களைப் போல் பூமிதனில் யாங்கணுமே கண்டதில்லை என்று முரசு கொட்டியவர். அவர் கம்பர், திருவள்ளுவர், இளங்கோ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதில் அவர் பின்வருமாறு எழுதினார்: "தமிழ் நாட்டில் இது போன்ற விஷயங்களைக் கவனிப்பார் இல்லை. தமிழ் நாட்டு வீரருக்கும் கவிகளுக்கும் லோகோபகாரிகளுக்கும் இதுவரை எவ்விதமான திருவிழாவையும் காணவில்லை. பூர்வீக மகான்களின் ஞாபகத்தைத் தீவிரமான பக்தியுடன் வளர்க்காத நாட்டில் புதிய மகான்கள் பிறக்க வழியில்லை. தப்பித் தவறி ஓரிருவர் தோன்றினாலும் அவர்களுக்குத் தக்க மதிப்பு இராது. பண்டைக்காலத்து சக்திமான்களை வியப்பதும் அவர்களுடைய தொழிற் பெருமையை உலகறிய முழக்குவதும் கூடியவரை பின்பற்ற முயல்வதுமாகிய பழக்கமே இல்லாத ஜனங்கள் புதிய சாமான்களை என்ன வகையிலே கவனிப்பார்கள்? எதனை விரும்புகிறாமோ அது தோன்றுகிறது. எதை ஆதரிக்கிறோமோ அது வளர்ச்சி பெறுகிறது; பேணாத பண்டம் அழிந்து போகும். பழக்கத்தில் இல்லாத திறமை இழந்துவிடப்படும். அறிவுடையோரையும் லோகோபகாரிகளையும் வீரரையும் கொண்டாடாத தேசத்தில் அறிவும், லோகோபகாரமும், வீரமும் மங்கிப்போகும்."



இலங்கையின் தமிழ் இலக்கியத் துறை இன்று வரை சமூக நலன் சார்ந்ததாக, மக்கள் வாழ்வோடு இணைந்ததாக இருப்பதற்குக் அடிப்படைக் காரணம் முற்போக்குக் கருத்துகள் பூவோடு மணம் போல, எமது வாழ்வின் அங்கம் ஆகிவிட்டதே காரணம் எனலாம். கே.கணேஸ் முதற்கொண்டு இன்றைய எழுத்தாளர்கள் வரையான பெருந்தொகையான முற்போக்குக் கருத்துக் கொண்ட எழுத்தாளர் ஆற்றிய மகத்தான பங்களிப்பை மறந்துவிட முடியாது. இன்று காலம் அவர்களில் பலரை எம் மத்தியில் இல்லாது மறைந்துவிடச் செய்துவிட்டது. இருந்தபோதும் அந்த மூத்த எழுத்தாளர்களில் ஒரு சிலர் எம்மிடையே இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். முதுமையின் தாக்கம் அவர்களின் உடலை வலுக்குன்றச் செய்துவிட்டபோதும் அவர்களில் சிலர் இன்றும் தங்கள் பங்களிப்பை சமூகத்திற்கு வழங்கிக் கொண்டே இருக்கிறார்கள். வாழும் காலத்திலேயே அவர்களைக் கெளரவிக்க வேண்டும் என்ற சிந்தனையின் அடிப்படையில் 'இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம்' விழா ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. எதிர்வரும் ஞாயிறு 30.06.2013 மாலை 5 மணிக்கு "மூத்த முற்போக்கு எழுத்தாளர்களுக்கான கெளரவிப்பு" விழா கொழும்பு தமிழ் சங்க சஙகரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. குறித்த நேரத்தில் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகும் என்ற குறிப்புடன் அழைப்பிதழ் கிட்டியுள்ளது. கூட்டத்திற்கு செல்வி திருச்சந்திரன் அவர்கள் தலைமை தாங்குகிறார்.



07-06-2013 - இலங்கைத் தமிழர் புதுடெல்லி மாநாடு திட்டமிட்டபடி நடைபெறுகிறது.
கவிஞர் இந்திரன் கலைத் தூதர் போன்று தமிழகத்திலிருந்து குவாடெலூப் (Guadeloupe) தீவுக்குச் சென்றுவிட்டு நாடு திரும்பும் வழியில் உறவுகளைச் சந்திப்பதற்காக மூன்று நாட்கள் பாரிஸ் மாநகரில் தங்கியுள்ளார். நேற்று மாலை (07 - 06 - 2013) பாரிஸ் முன்னோடிகள் இலக்கிய வட்டத்தின் குறுகிய கால ஏற்பாட்டில் படைப்பாளிகள் - ஊடகவியலாளர்கள் - இலக்கிய அபிமானிகள் கலந்துகொண்ட கலந்துரையாடல் நிகழ்வு இந்திரனுடன் நடைபெற்றது. பாரிஸ் மாநகரில் ''ஸ்ராலின்கிராட் மெற்றோ" நிலையத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள ''சமரா கோணர் " உணவகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாரிஸ் முன்னோடிகள் இலக்கிய வட்டத்தின் தலைவர் வி. ரி. இளங்கோவன் - கவிஞர் தா. பாலகணேசன் - திருமதி பாலகணேசன் - கவிஞர் க. வாசுதேவன் - ''தமிழமுதம்" வானொலி இயக்குனர் எஸ். கே. ராஜன் - எஸ். குமாரதாஸ் நேசன் - இ. குலம் - மூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு உரையாடினர்.


22 May 2013- "I was recently denied a writing prize because they said I was lazy." runs one of Lydia Davis's two-sentence short stories. Well not any more. Davis has just been awarded the fifth Man Booker International Prize at an award ceremony at the Victoria and Albert Museum in London. Her inventive, carefully-crafted and hard to categorise works saw off the challenge from nine other contenders from around the world. The judges - Professor Sir Christopher Ricks, Elif Batuman, Aminatta Forna, Yiyun Li and Tim Parks - recognised that crafting spare, philosophical and original works, however short, is not for the lazy at all but takes time, skill and effort. The Prize, worth £60,000, is awarded for an achievement in fiction on the world stage and Davis's achievements are writ large despite often using startlingly few words (some of her longer stories only stretch to two or three pages). Her work has the brevity and precision of poetry. Sir Christopher Ricks, chairman of the judges, said her "writings fling their lithe arms wide to embrace many a kind. Just how to categorise them? They have been called stories but could equally be miniatures, anecdotes, essays, jokes, parables, fables, texts, aphorisms or even apophthegms, prayers or simply observations." Davis then is not like any other writer and she follows, and contrasts with, the previous winners of the prize - Ismail Kadaré, Chinua Achebe, Alice Munro and Philip Roth.




பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









