பாரிஸ்: குவார்னிகா அறிமுகமும் வெளியீடும் உரைகளும்

பாரிஸ்: குவார்னிகா அறிமுகமும் வெளியீடும் உரைகளும்


பாரிஸ்: குவார்னிகா அறிமுகமும் வெளியீடும் உரைகளும்

காவ்யா தமிழ் இதழ் மற்றும் திலகபாமா கவிதைகள் நூல் வெளியீட்டு விழா! [தகவல்: திலகபாமா இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். ]

தமிழ்த்துறை சிக்கய்ய நாய்க்கர் கல்லூரி (ஈரோடு) / காவ்யா அறக்கட்டளை இணைந்து 'காலத்தின் கல்வெட்டு புலவர் செ.இராசு' எனும் தலைப்பில் ஒருநாள் தேசியக் கருத்தரங்கை அக்டோபர் திங்கள் நடாத்த உள்ளன. அவ்வமயம் பேராசிரியர்களும் தமிழ்ச்சான்றோர்களும், தமிழ் ஆர்வலர்களும் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர். தாங்கள் இக்கருத்தரங்க ஆய்வுக் கோவைக்குக் கட்டுரை வழங்கிச் சிறப்பிக்க வேண்டுகிறோம். மேலதிக விபரங்கள் இங்கே
நண்பர்களே, பேசாமொழி 9 வது இதழ், லெனின் விருது சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. பேசாமொழி இப்போது இணையத்தில் படிக்க கிடைக்கிறது. இந்த இதழில், டிராட்ஸ்கி மருது, வெங்கட் சாமிநாதன், தியடோர் பாஸ்கரன், யமுனா ராஜேந்திரன், ராஜேஷ், தினேஷ், பிச்சைக்காரன், அருண் மோ.ஆகியோரின் கட்டுரைகள் வெளியாகியுள்ளது. முக்கியமாக லெனின் இயக்கிய நாக்-அவுட், ஊருக்கு நூறு பேர் போன்ற படங்கள் பற்றிய கட்டுரைகள் வெளியாகியுள்ளது. ஊருக்கு நூறு பேர் திரைப்படம் பற்றிய தியடோர் பாஸ்கரன் கட்டுரையின் தமிழ் வடிவமும் வெளியாகியுள்ளது. தவிர வெங்கட் சாமிநாதனின் முக்கியமான கட்டுரை ஒன்றும், தமிழ் திரைப்படங்களில் அரசியல் பற்றிய யமுனா ராஜேந்திரனின் கட்டுரையும் மிக முக்கியமான கட்டுரை. நண்பர் பிச்சைக்காரனின் ஒருத்தி திரைப்படம் பற்றிய கட்டுரையும், அம்ஷன் குமாரின் நேர்காணலும், பிச்சைக்காரன் சிலாகித்து எழுதி இருக்கும் ஊருக்கு நூறு பேர், நாக்-அவுட் படங்கள் பற்றிய கட்டுரைகளும் இந்த இதழில் வெளியாகியுள்ளது. தவிர தொடர்களான, மருதுவின் அனிமேசன் கலை பற்றிய கட்டுரையும், நண்பர் ராஜேஷின் ஒளிப்பதிவு பற்றிய கட்டுரையும் வெளியாகியுள்ளது. நண்பர்கள் அவசியம் இந்த மாத பேசாமொழி முழு இதழையும் படித்துவிட்டு உங்கள் கருத்துகளை பகிரவும். http://pesaamoli.com/index_content_9.html - அன்புடன் , தமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)
இலண்டன் மாநகரில் நடைபெற்ற நான்காவது 'இலக்கிய மாலை" நிகழ்வில் பிரான்ஸ் நாட்டில் வாழும் மூத்த எழுத்தாளர் வி. ரி. இளங்கோவனின் ஆறு நூல்கள் அறிமுகமாகின. கடந்த சனிக்கிழமை (10 - 08 - 2013) மாலை இலண்டன் 'மனோர் பார்க்" (Manor Park) என்ற இடத்தில் அமைந்துள்ள சைவ முன்னேற்றச் சங்க மண்டபத்தில், சமூகத் தொண்டரும் இலக்கிய அபிமானியுமான திரு செல்லையா வாமானந்தன் தலைமையில் 'இலக்கிய மாலை" நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் வி. ரி. இளங்கோவனின் நூல்களான 'இப்படியுமா..?" - சிறுகதைத் தொகுதி, 'அழியாத தடங்கள்" - கட்டுரைத் தொகுதி, 'தமிழர் மருத்துவம் அழிந்துவிடுமா..?", 'மண் மறவா மனிதர்கள்", 'பிரான்ஸ் மண்ணிலிருந்து தமிழ்க் கதைகள்" - (இளங்கோவன் கதைகள் இந்தி மொழிபெயர்ப்பு) மற்றும் இளங்கோவன் பதிப்பித்த 'இலக்கிய வித்தகர்" த. துரைசிங்கத்தின் 'தமிழ் இலக்கியக் களஞ்சியம்" ஆகிய ஆறு நூல்களே அறிமுகமாகின. இலண்டன் கலை இலக்கிய நண்பர்கள் வட்டம் ஏற்பாடு செய்த இந்நிகழ்வில், எழுத்தாளர் துரை. சிவபாலன் நூல் அறிமுகவுரையாற்றினார். கணினி அறிஞரும் இலக்கிய அபிமானியுமான திரு சிவா பிள்ளை நூல் வெளியீட்டுரை நிகழ்த்தி நூல்களை வழங்கினார். விருதுகள் பெற்ற நாவாலாசிரியர் வவுனியூர் இரா. உதயணன் முதற்பிரதிகளைப் பெற்றுக்கொண்டார்.

சென்ற சனிக்கிழமை கனடா மிஸசாகாவில் டிக்ஸி வீதியில் உள்ள நூல்நிலைய பார்வையாளர் மண்டபத்தில் பரதகலாவித்தகர் ஸ்ரீமதி. லலிதாஞ்சனா கதிர்காமனின் ஆக்கத்தில் அமிர்தார்ணவம் என்ற நடனக்கலைக்குரிய பாடல்களும், அதற்குரிய முத்திரைகளும் அடங்கிய நூல் ஒன்று வெளியிடப்பட்டது. மிகவும் சிறப்பாக நடைபெற்ற இந்த நூல் வெளியீட்டு விழாவில் எழுத்தாளர் திரு. திருமதி குரு அரவிந்தன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர். திரு.எஸ். மதிவாசன், திரு. ஸ்ரீமதி பவானி ஆலாலசுந்தரம் ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டனர். முதலில் மங்களவிளக்கேற்றி, கனடிய தேசிய கீதம், தமிழ்தாய் வாழ்த்து, அமிர்தாலயா நுண்கலைக்கல்லூரிக் கீதம் போன்றன இசைக்கப்பட்டன. தொடர்ந்து வரவேற்புரை நிகழ்ந்தது. அடுத்து திருமதி வாசுகி நகுலராஜா அவர்களால் நூல் ஆய்வு செய்யப்பட்டது. சிறுவர்களுக்கு ஏற்ற பாடல்களை எடுத்து அதற்கு எப்படி அபிநயம் பிடிக்கலாம் என்பதை சிறப்பாகவும் எழிமையாகவும் இந்த நூல் எடுத்துக் காட்டுவதாகவும், வர்ணத்தில் படங்கள் அச்சிடப்பட்டிருப்பதால் பலராலும் வரவேற்கப்படும் என்றும் தனது ஆய்வுரையில் அவர் குறிப்பிட்டார். அடுத்து உரையாற்றிய கலைக்கோயில் அதிபர் குகேந்திரன் கனகேந்திரம் அவர்கள் இந்த நூலில் உள்ள சிறப்பம்சங்களை ஒவ்வொன்றாக எடுத்துக் கூறி, அமரரான தங்கள் சகோதரியும் இசையாசிரியையுமான திருமதி. அமிர்தாஞ்சனா சுரேஸ்வரன் அவர்களின் நினைவாக தமிழிலும், ஆங்கிலத்திலும் படங்களோடு கூடிய விளக்கங்கள் அடங்கிய இந்த நூலை வெளியிட்ட ஸ்ரீமதி லலிதாஞ்சனாவிற்கு நன்றி தெரிவித்தார்.
நாகர்கோவில் கலை இலக்கிய மேம்பாட்டு உலகப் பேரவை சார்பில் வழங்கப்படும் இந்த ஆண்டிற்கான சி.பா.ஆதித்தனார் இலக்கிய விருது குமரி எஸ். நீலகண்டன் எழுதிய ஆகஸ்ட் 15 என்ற நாவலுக்கு வழங்கப்படுகிறது. வரலாற்று நூலுக்கான டி.வி.ராமசுப்பையர் இலக்கிய விருது முன்னாள் துணைவேந்தர் முனைவர் க.பா. அறவாணனுக்கும் சிறந்த கவிதை நூலுக்கான முரசொலிமாறன் இலக்கிய விருது ந.கருணாநிதிக்கும் வழங்கப்படுகிறது என்று கலை இலக்கிய மேம்பாட்டு உலகப் பேரவையின் மேலாண் இயக்குநர் கவிஞர் தியாகி தெ.வெ.பகவதிப் பெருமாள் தெரிவித்துள்ளார்.
தகவல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
நண்பர்களுடன் அல்லது தோழர்களுடன் சேர்ந்து இலண்டனிலிருந்து பாரிஸ் செல்வதற்கான மதுரமான வழி பேருந்துப் பயணம்தான். சென்று திரும்பும் பயணநேரம் 17 மணிநேரங்கள் என்றாலும், வழியில் யூரோ டன்னல் அல்லது பெஃரி என மூன்று மணி நேரங்கள் போய்விடும். இங்கிலாந்து மற்றும் பிரெஞ்சு எல்லைகளுக்குள் எனப் போகவர பேருந்து நிற்கும் நான்கு அரை மணிநேரங்கள் சேர்த்தால் மொத்தமாகப் பேருந்திற்கு வெளியில் ஐந்து மணி நேரங்கள் கழிந்து விடும். சென்று சேர 6 மணிநேரமும் வந்து சேர 6 மணிநேரமும் என 12 மணிநேரங்களை நீங்கள் நண்பர்களுடன் அந்தரங்கமாகவும் விச்ராந்தியாகவும் பேசியபடி பேருந்தில் இருந்தபடி பயணம் செய்யலாம். தோழர்.பி.ஏ.காதர் அவர்களுடன் பாரிஸ் சென்றுவர இப்படியானதொரு சந்தர்ப்பம் எனக்கு வாய்த்தது. தோழர். காதர் என்னுடைய ஈழம் : எதிர்ப்பு அரசியலின் எதிர்காலம், அரபுப் புரட்சி : மக்கள் திரள் அரசியல் மற்றும் எஸ்.என்.நாகராசனின் நேர்காணல் தொகுப்பான ஆயுதப் போராட்டத்தால் இனி உலகைக் காப்பாற்ற முடியாது என மூன்று நூல்களின் இரு வெளியிட்டு நிகழ்வுகளிலும் கலந்து கொண்டார். இலண்டன் கூட்டம் விம்பம் கலை இலக்கிய திரைப்பட அமைப்பின் அனுசரணையில் சூலை மாதம் 6 ஆம் திகதி சனிக்கிழமையும், பாரிஸ் கூட்டம் அசை கோட்பாட்டிதழ் மற்றும் சர்வதேச சமூகப் பாதுகாப்பு மையம் என இரண்டு அமைப்புகளின் அனுசரணையில் சூலை மாதம் 21 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமையும் நடைபெற்றது. விம்பம் அமைப்பின் பின் ஓவியர் கிருஷ்ணராஜாவும், பாரிஸ் கூட்டத்தின் பின் அசை தொகுப்பாளர் அசோக் யோகனும் தோழர். வரதனும் இருந்தார்கள்.

இலண்டன் மாநகரில், இலக்கிய மாலை நான்காவது நிகழ்வு ஆகஸ்ட் மாதம் 10-ம் திகதி (10 - 08 - 2013) சனிக்கிழமை மாலை 4.30 மணியளவில் நடைபெறவுள்ளது. இலண்டன் கலை இலக்கிய நண்பர்கள் வட்டம் ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்வில், பிரான்ஸ் நாட்டில் வாழும் மூத்த எழுத்தாளர் வி. ரி. இளங்கோவனின் ஆறு நூல்கள் அறிமுகமாகவுள்ளன. இலண்டன் 'மனோர் பார்க்" (Manor Park) என்ற இடத்தில் அமைந்துள்ள சைவ முன்னேற்றச் சங்க மண்டபத்தில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் இலண்டன் மாநகரில் வாழும் பல மூத்த கலை இலக்கியப் படைப்பாளிகள் கலந்துகொண்டு உரைநிகழ்த்துவர். வி. ரி. இளங்கோவனின் நூல்களான 'இப்படியுமா..?" - சிறுகதைத் தொகுதி, 'அழியாத தடங்கள்" - கட்டுரைத் தொகுப்பு, 'தமிழர் மருத்துவம் அழிந்துவிடுமா..?, 'மண் மறவா மனிதர்கள்", 'பிரான்ஸ் மண்ணிலிருந்து தமிழ்க் கதைகள்" - (இளங்கோவன் கதைகள் - இந்தி மொழிபெயர்ப்பு) மற்றும் இளங்கோவன் பதிப்பித்த 'தமிழ் இலக்கியக் களஞ்சியம்" ஆகிய ஆறு நூல்களே அறிமுகமாகவுள்ளன. வி. ரி. இளங்கோவனின் கல்லூரிக்கால ஆசிரியரும், இலக்கிய நேசரும், கணினி விரிவுரையாளருமான திரு சிவா பிள்ளையும் நண்பர்களும் இந்நிகழ்வுக்கான சகல ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் கொழும்பில் நடைபெற்ற 'இலக்கிய மாலை" நிகழ்விலும், யூன் மாதம் பாரிஸ் மாநகரில் இடம்பெற்ற 'இலக்கிய மாலை" நிகழ்விலும் இந்நூல்கள் அறிமுகம் செய்யப்பட்டமையைத் தொடர்ந்து தற்போது இலண்டன் மாநகரில் நடைபெறும் 'இலக்கிய மாலை" நிகழ்வில் இவை அறிமுகமாகின்றன. 'பிரான்ஸ் மண்ணிலிருந்து தமிழ்க் கதைகள்"- (இளங்கோவன் கதைகள் - இந்தி மொழிபெயர்ப்பு) நூல் கடந்த செப்டம்பர் மாதம் 27-ம் திகதி புதுடில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வெளியிடப்பட்டு பாராட்டுப் பெற்றமை குறிப்பிடத்தக்கது. - இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். -
திராவிடர் உணவுமுறை, திராவிடர் உடைமுறை, திராவிடர் குடியிருப்பு, திராவிடர் தொடக்கக்கல்வி, திராவிடர் உயர்கல்வி, திராவிடர் தொழில்கள், திராவிடர் விவசாயமுறை, திராவிடர் மருத்துவம், திராவிடர் திருமணமுறை, திராவிடர் இல்ல விழாக்கள், திராவிடர் பொதுவிழாக்கள், திராவிடர் சுற்றுலாக்கள், திராவிடர் கலைகள், திராவிடர் விளையாட்டுக்கள்,திராவிடர் தற்காப்புக்கலைகள். மேற்கண்ட தலைப்புகளின் அடிப்படையில் கட்டுரைகளை எதிர்பார்க்கிறோம். சிறந்தகட்டுரைகளைத் தொகுத்து திராவிடர் பண்பாட்டு மலரை வெளியிட உள்ளோம். தேவையான கட்டுரைகளை காட்சிவடிவில் மாற்றி விளக்கக்காட்சிகளாக, ஆவணப் படங்களாக, காட்சிஅரங்குகளாக நிகழ்வில் வெளிப்படுத்த உள்ளோம்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

நூல் அறிமுகம் : நோபல் பரிசு பெற்ற காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் எழுதிய * “தனிமையின் நூறு ஆண்டுகள்“
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (கனடா)
Thamil National Alliance (Canada)
56 Littles Road, Scarborough ON M1B 5C5
Phone: 416-281-1165, Email: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பும் இரவு உணவும்! எதிர்பாராத காரணங்களால் பின்போடப்பட்ட மேற்படி நிகழ்ச்சி எதிர்வரும் ஓகஸ்ட் 11, (ஞாயிற்றுக் கிழமை) மாலை 6.00 மணிக்கு நியூ யஸ்மின் விருந்து மண்டபத்தில் நடைபெறும் என்பதை மகிழ்ச்சியோடு அறியத் தருகிறோம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் திரு இரா சம்பந்தன் நா.உ , திரு மா.அ. சுமந்திரன் நா.உ
கலந்து கொண்டு சிறப்பிக்கிறார்கள். தமிழ்த் தேசியத்துக்குத் தோள் கொடுப்போம். இழந்த உரிமைகளை மீட்டெடுப்போம். ஏற்கனவே வாங்கிய நுழைவுச் சீட்டு செல்லுபடியாகும் . தொடர்பு: 416 303 4360 416 281 1165 416 282 0947
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
எதிர்வரும் 28 ஆம் திகதி மாலை 4.30 மணிக்கு தமிழ் சங்கத்தில் (வினோதன் மண்டபம்) நமது மலையகம். கொம இணையதள அறிமுக நிகழ்வு நடைப்பெறவுள்ளது. திரு. தெளிவத்தை ஜோசப் தலைமையில் நடைப்பெறும் இந்நிகழ்வில் தொடக்கவுரையை லெனின் மதிவானம் ஆற்றுவார். தொடர்ந்து ‘‘மலையகம் தகவல் தள இணைய வலைப்பின்னலுக்குள் உள்வாங்குவதன் அவசியம்‘ என்ற தலைப்பில் பேராசிரியர் சோ. சந்திரசேகரன் அவர்களும், ‘ மலையகத்தின் அரசியல் இருப்பில் இணையத்தளம்’’ என்ற தலைப்பில் சரிநிகர் என். சரவணன் அவர்களும் உரையாற்றுவார்கள். நன்றியுரையை எம். ஜெயகுமார் வழங்க தொகுப்புரையை மல்லியப்பு சந்தி திலகர் நிகழ்த்துவார்.

1983ம் ஆண்டு ஜூலை மாதம் 23ம் திகதி இலங்கையின் சிங்கள பேரினவாத அரசினால் தமிழ் மக்களுக்கெதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலையின் 30ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பிரித்தானியத் தமிழர் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட நினைவேந்தல் மற்றும் ஆர்ப்பாட்ட நிகழ்வுகள் ஜூலை மாதம் 23ம் திகதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 4 மணியளவில் பிரித்தானிய பிரதம மந்திரியின் உத்தியோகபூர்வ வதிவிடமான 10 Downing Street முன்பாக ஆரம்பமாகி இரவு 7 மணி வரை மிக எழுச்சியோடு நடை பெற்றது. இலங்கையில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாட்டை பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் மற்றும் இளவரசர் சாள்ஸ் ஆகியோர் புறக்கணிக்க வேண்டுமென்றும், தமிழர் தாயக பகுதிகளில் நடைபெறும் திட்டமிட்ட இனவழிப்பு, இராணுவமயப்படுத்தல், பௌத்தமயப்படுத்தல் மற்றும் காணி அபகரிப்பு போன்றவற்றை நிறுத்த அழுத்தம் கொடுக்கக் கோரியுமான பதாதைகளை ஏந்திய வண்ணம் இவ் ஆர்பாட்டத்தில் பல நூற்றுக் கணக்கான பிரித்தானிய வாழ் தமிழ் மக்கள் பங்கேற்றனர்.

1983ம் ஆண்டு இலங்கையின் சிங்கள பேரினாவாத அரசினால் தமிழ்மக்களுக்கெதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலையின் 30ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தமிழ் வள ஆலோசனை மையத்தின் றொம்மன் வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நண்பர்களே தமிழ் ஸ்டுடியோ ஒவ்வொரு ஆண்டும் மாற்று சினிமா கலைஞர்களை கவுரவப்படுத்த வழங்கி வரும் படத்தொகுப்பாளர் லெனின் அவர்களின் பெயரிலான விருது இந்த ஆண்டு இயக்குனர் லீனா மணிமேகலைக்கு வழங்கப்படுகிறது. ஆவணப்பட / குறும்படங்களின் வாயிலாக தொடர்ந்து சமூக பிரச்சனைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததும், தனி ஒரு படைப்பாளியாக தொடர்ந்து இந்த Main Sream கட்டமைப்பை எதிர்த்து போராடி வருவதும், தொடர்ச்சியாக தன்னுடைய இலக்கு நோக்கி பயணிப்பதும் அவருக்கு இந்த விருது வழங்க காரணமாயிருக்கிறது. லெனின் விருது 10,000 ரூபாய் ரொக்கம், கேடயம், சான்றிதழ்களை உள்ளடக்கியது. இது தவிர, லெனின் விருது பெறுபவரின் படங்களில் சில, தமிழ்நாடு முழுவதும் தமிழ் ஸ்டுடியோவால் திரையிடப்படும். இந்த ஆண்டு லீனாவின் படங்கள் தமிழ்நாடு முழுவதும் திரையிடப்படவிருக்கிறது. பின்னர் சென்னையில் லீனா இயக்கிய முக்கியமான படங்கள் திரையிடப்பட்டு அதுப் பற்றிய விவாதம் நடைபெறும். இந்த விவாதத்தில் லீனாவும் பங்கேற்பார்.
சர்வதேச மட்டத்தில்மாதா மாதம் தவறாது நடத்தி வரும் போட்டி இது இம் மாதம் (ஜூலை )மாதம் நடாத்தப்படுகின்ற கவிதைப் போட்டிக்கு கவிதை ஆர்வம் உள்ளோர்களிடம் இருந்து கவிதைகளை எதிர்பார்க்கின்றோம் தரமான ஒரு கவிதை தெரிவு செய்யப் பட்டு அதற்க்கு (கவிஅருவி )சான்றிதழும் ஒரு சிறப்புக் கவிதை தெரிவு செய்யப் பட்டுஅதற்கு (கவித்தீபம் )சான்றிதழும் வழங்கி வருகின்றோம் இன்னும் வெற்றி பெற்பவர்களுக்கு சான்றிதழ் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப் பட்டுவருகின்றது. ஏற்கனவே நாம் நடத்திய கவிதைப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த மலிக்காபாரூக் ,கவியன்பன் கலாம் , முத்துப் பாலகன் ,ஆயிசா பாரூக் சைலஜா ராகவன் ஆகியோர்களும் இலங்கையை சேர்ந்த ராஜ கவி ராகில் கலைமகன் பைரூஸ் கலா நெஞ்சன் சாஜஹான் போன்றோ வெற்றி பெற்று சான்றிதழ்களும் பெற்று உள்ளார்கள் போட்டிக்கு வரும் 03 கவிதைகள் தெரிவு செய்யப் பட்டு ஆண்டின் இறுதி மாதத்தில் தடாகம் அமைப்பினால் கவிதை நூலும் வெளியிட ஏற்பாடுகள் செய்யப் பட்டு உள்ளது எனவே கவிதைகளில் ஆர்வம் உள்ளவர்கள் 30/07/2013 செவ்வாய்கிழமைக்கு முன்னர் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம் சாதி மதம் சார்பான கவிதைகளை அனுப்ப வேண்டாம் கவிதைகள் எதுவானாலும் சரியே ( தலைப்பு இல்லை )விரும்பிய தலைப்பில் எழுதி அனுப்பலாம் உங்களது கவிதைகள் வந்து சேர வேண்டிய ஜிமெயில் முகவரி இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
தயவு செய்து போட்டிக்காக கவிதைகள் அனுப்பவர்கள் யாராக இருந்தாலும் தமது அறிமுகம் முகவரி புகைப்படம் தொடர்பு இலக்கம் ஆகியவற்றை கண்டிப்பாக அனுப்பி வைக்கமாறு அன்போடு வேண்டுகின்றோம் நன்றி
கலைமகள் ஹிதாயா ரிஸ்வி , அமைப்பாளர் , தடாகம் கலை இலக்கியகல்வி கலாசார சமூக அபிருத்தி சர்வதேச அமைப்பு ./ இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
நண்பர்களே பேசாமொழி 8வது இதழ் வெளியாகியுள்ளது. பேசாமொழி முழுக்க் முழுக்க இணையத்தில் இலவசமாக படிக்க கிடைக்கிறது. தமிழில் நல்ல சினிமாவுக்கான மாத இணைய இதழ் பேசாமொழி. இந்த இதழில், மணிவண்ணன் பற்றி மருதுவின் நினைவுகள், யமுனா ராஜேந்திரனின் விஸ்வரூப விமர்சன விமர்சனங்கள், ராஜேஷின் ஷாட் பை ஷாட் மொழியாக்கம், செழியனின் பேசும்படம் குறித்த தினேஷின் திறனாய்வு, ஜெயச்சந்திர ஹஸ்மியின் ராமையாவின் குடிசை ஆவணப்படம் பற்றிய கட்டுரை, ஆவணப்பட இயக்குனர் அமுதனின் நேர்காணல், நல்ல சினிமா எது என்பது குறித்த தியடோர் பாஸ்கரனின் உரை, பந்தய புரவிகள் படம் குறித்த வருணன் விமர்சனம், ரிஷானின் சிங்களப் படம் குறித்த கட்டுரை, பிச்சைக்காரனின் கன்னடப் பட விமர்சனம், தமிழ் ஸ்டுடியோவின் 55 வது குறும்பட வட்டத்தில் நிகழ்ந்தவை என முழுக்கு முழுக்க நல்ல சினிமாவுக்கான அடித்தளமாகவே இருக்கிறது. அவசியம் படியுங்கள்: http://pesaamoli.com/index_content_8.html - அன்புடன் , தமிழ் ஸ்டுடியோ.காம் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
அன்புடையீர். வணக்கம். மாதா மாதம் மின்னிதழாக வெளிவரும் காற்றுவெளி இதழுக்கு கவிதை, சிறுகதை,கட்டுரை, விமர்சனம் போன்ற படைப்புக்களை அனுப்புங்கள். கட்டுரை இலக்கியம், ஆன்மீகம், கணினியியல், நூலக்ம் சார்ந்ததாய் இருக்கலாம். அரசியல் கட்டுரைகள் தவிர்க்கப்படும்.தமிழ் சிறுசஞ்சிகைகள் பற்றிய உங்கள் பார்வையை கட்டுரையாக எழுதலாம். நண்பர்களுக்கும் காற்றுவெளியை அறிமுகம் செய்துவையுங்கள்.
21 - ஞாயிறு - யூலை - 2013.
14.30 மணி தொடக்கம் 20.00 மணி வரை.
SALLE POLONCEAU ,
25, RUE POLONCEAU, 75018 PARIS.
மெற்ரோ : LA CHAPELLE
மண்டபத்திற்கு வரும் பாதை: : place de la chapelle >> rue de jessaint >> 25 RUE POLONCEAU
சமூக அக்கறைகொண்ட அனைவரையும் தோழமையோடு அழைக்கின்றோம்.
சர்வதேச சமூகப் பாதுகாப்பு அமைப்பு – பிரான்ஸ்.
A. அசை-சமூக அசைவிற்கான எழுத்தியக்கம்- பிரான்ஸ்
06 19 45 02 76 / 06 51 26 70 75 / 06 23 60 72 65
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
உரையாடலுக்கான முன் அவதானிப்பு குறிப்புக்கள்.
முதல் அமர்வு: இனப்படுகொலை : ஒரு வரலாற்றுப் பார்வை -உரையும் கலந்துரையாடலும்-
வரலாற்று ரீதியில் இனப்படுகொலை எனும் கருத்தாக்கம் எவ்வாறு என்று தோன்றியது? மார்க்சியர்களும், மார்க்சியர்கள் அல்லாதவர்களும் இதனை எவ்வாறு அணுகினர்? யூதர்கள் மற்றும் பாலஸ்தீனர்கள் பிரச்சினையை உலகம் எவ்வாறு அணுகுகிறது? இனவிடுதலை பெற்ற நாடுகள் எவை? அவை எதிர்கொள்ளும் பிரச்சினைகள் என்ன? இனம், தேசிய அரசு, மற்றமை குறித்த ஒரு வரலாற்று ரீதியிலான ஆய்வுரையின் பின்பான கலந்துரையாடலாக இந்நிகழ்வு இருக்கும்.

எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் ஆண்டுதோறும் ஈழத்திலும், வெளிநாடுகளிலும் வாழ்கின்ற ஈழத்துத் தமிழ்ப் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் வண்ணம், தமிழியல் விருது வழங்கி வருகின்றது. இந்த வகையில், 2012 ஆம் ஆண்டுக்கான விருதுபெறுபவர்களின் பெயர் விபரங்களை எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் வெளியிட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை (யூலை 5 இல்) சோனி அரங்கில் ஆயனரும் சிவகாமியும் முதலாம் மகேந்திர பல்லவரும் அவர் மகன் முதலாம் நரேந்திர பல்லவரும் புலிகேசியும் நாகநந்தியும் அப்பரும் உயிரோடு எழுந்து வந்து காட்சி தந்தார்கள். அவையோர் மெய்மறந்து வைத்த கண் வாங்காமல் கடைசிவரை அவர்களைக் கண்டு களித்தார்கள். ஆறாம் ஏழாம் நூற்றாண்டில் காஞ்சிமாநகரைத் தலைநகராகக் கொண்டு கொடி கட்டிப் பறந்த பல்லவர்களது வரலாறு கண்முன் விரிந்தன. மாமல்லபுரம் பல்லவர்கள் சிற்பக்கலைக்கு கட்டியங்கூறி நிற்கிறது. இது 1,500 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பெற்றது. முதலாம் நரேந்திரவர்மனின் இன்னொரு பெயர் மாமல்லன். அவனால் எழுப்பப்பட்ட கலைக்கோயில் அவனது பெயரைத் தாங்கி நிற்கிறது. பெரும் பாறைகளைக் குடைந்து கற்றளி என்று அழைக்கப்படும் கோயில்களை கட்டியவர்களும் பல்லவரே. இங்குள்ள பஞ்சபாண்டவ இரதங்களை அவனுடைய மகன் முதலாம் நரசிம்மவர்மன் என்னும் மாமல்லன் கட்டியதாகவும், வேறு பல கட்டுமானங்களை அவனுடைய பேரன் பரமேசுவரவர்மனும் அவனுடைய மகன் இரண்டாம் நரசிம்மவர்மன் என்னும் இராஜசிம்மனும் கட்டியதாகவும் பல அறிஞர்கள் கூறுகிறார்கள். முக்கியமாக கணேச இரதம், கடற்கரைக் கோயில்கள் ஆகியவை இராஜசிம்மனால் கட்டப்பட்டுள்ளதாகவே அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள்.
பேசாமொழி 7ஆவது இதழ் - இணையத்தில் படிக்க..
படிக்க: http://pesaamoli.com அல்லது http://pesaamoli.com/index_content_7.html
நண்பர்களே மாற்று சினிமாவுக்கான இணைய இதழ் "பேசாமொழியின்" 7ஆவது இதழ் வெளியாகியுள்ளது. வெங்கட் சாமிநாதன், யமுனா ராஜேந்திரன், டிராட்ஸ்கி மருது, ராஜேஷ் (கருந்தேள்), எஸ். ஆனந்த் (கோணங்கள்), எம். ரிஷான் ஷெரிப், சுரேஷ் சுந்தர், தினேஷ், அருண் மோ. விஸ்வாமித்திரன் போன்றோரின் கட்டுரைகள் இந்த இதழில் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டின் கிராமத்து படங்களில் தென் மேற்கு பருவக் காற்று எப்படி வித்தியாசப்படுகிறது என்பதை மிக ஆழமாக வெங்கட் சாமிநாதன் விவரித்துள்ளார். பாலஸ்தீன படமான டீவைன் இன்டர்வென்சன்ஸ் படம் பற்றியும், நடிகர் & இயக்குனர் மணிவண்ணன் பற்றிய அஞ்சலிக் கட்டுரையையும் யமுனா ராஜேந்திரன் எழுதியுள்ளார். அனிமேசன் பற்றிய ஓவியர் மருதுவின் தொடரும், நாவலில் இருந்து உருவாக்கப்பட்ட சினிமாக்கள் தொடர்பான கோணங்கள் ஆனந்தின் கட்டுரையும், இலங்கை இயக்குனர் பிரசன்னா விதானங்கே பற்றிய விச்வாமித்ரனின் கட்டுரையும், ரிஷானின் உலகப் படக் கட்டுரையும் மிக முக்கியமாக இந்த இதழில் நீங்கள் தவறவிட கூடாத கட்டுரைகள். பேசாமொழி, இணைய இதழ். கீழ்க்கண்ட இணைய முகவரியில் நீங்கள் இந்த இதழை இலவசமாகவே படிக்கலாம்.