பயித்தியமாகவும் கேடுகெட்டும் போன அரசு
பயித்தியமாகவும் கேடுகெட்டும் போன அரசு (Government Gone Mad And Bad) என்ற தலைப்பு எஸ்.எல். குணசேகரா சிறீலங்கா சட்டத்தரணிகள் சங்கத்துக்கு (BASL) 28 - 11 - 2012 அன்று அனுப்பிய கடிதத்தின் ஊக்குவிப்பாகும். குணசேகரா பசில் க்கு அனுப்பிய கடிதத்தில் "இப்போது பதவியிலுள்ள பயித்தியக்கார அரசு உச்ச நீதிமன்ற நீதியரசருக்கு எதிராக முன்னெடுத்துள்ள அரசியல் குற்றச்சாட்டை" எதிர்க்குமாறு கேட்டிருந்தார். அண்மையில் வெளிவந்த பெட்றீ (Petrie) அறிக்கை 70,000 தமிழர்கள் அரசினால் கொல்லப்பட்டதாகக் கூறியது. ஆனால் அதையிட்டு ஒட்டுமொத்தச் சிங்களவர்களும் பாராமுகமாக இருந்துவிட்டார்கள். கடந்த வாரம் பசில் அமைப்பு புதிய தலைமை நீதியரசரை ஆதரிப்பதில்லை என எடுத்த முடிவு பாராட்டத்தக்கது. ஆனால் நாட்டிலும் பசில் அமைப்பிலும் அதிகளவு பிழைகள் இருக்கின்றன. தலைமை நீதியரசர் விவகாரம் வெறுமனே நோயின் அறிகுறிதான். எடுத்துக்காட்டாக டொலர் 100 மில்லியன் பெறுமதியான ஓட்டப்பந்தயக் கார்களை அரசு எந்த வரியும் கட்டாமல் இறக்குமதி செய்தது என செய்திகள் தெரிவிக்கின்றன. அதைவிட மற்றவர்கள் கூற்றுப்படி எப்படி அரச சம்பளத்தில் வாழ்க்கையை நடத்துபவர் (அவரது தந்தையாரும் அரச சம்பளத்தில் இருப்பவர்தான்) டொலர் 100 மில்லியனை கட்ட முடியும்? சண்டே லீடர் என்ற செய்தியேடு (06-03-2011) பிரபா கணேசன் சொன்னதாக ஒரு செய்தி வெளியிட்டது. பசில் இராசபக்சே கட்சி மாறினால் உருபா 20 மில்லியன் தனக்கும் இன்னொரு அய்க்கிய தேசியக் கட்சி உறுப்பினர் பி.ஏகாம்பரம் அவர்களுக்கும் தருவதாக வாக்களித்தார். அது அபிவிருத்திக்கு என்று சொல்லப்பட்டது என்பதுதான் அந்தச் செய்தி.