வ.ந.கிரிதரனின் 'என்னை ஆட்கொண்ட மகாகவி'
எனது பாரதியார் பற்றிய கட்டுரைத் தொகுதி 'என்னை ஆட்கொண்ட மகாகவி' தற்போது அமேசன் - கிண்டில் மின்னூலாக வெளியாகியுள்ளது - https://www.amazon.com/dp/B0DNRLX984
நூலிலுள்ள கட்டுரைகள் வருமாறு:
'1. மகாகவி பாரதியார் நினைவாக. 4
2, பாரதி ஒரு மார்க்ஸியவாதியா? 6
3. பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு! 12
4. பாரதியும், ஐரோப்பிய பெண்களும், கட்டுப்பாடற்ற காதலும் 15
5. பாரதியாரின் சுயசரிதை, மற்றும் அவரது முதற் காதல் பற்றி.... 18
6. எழுத்தாளர் அருண்மொழிவர்மனின் 'தாய்வீடு'க் கட்டுரையான ‘வ.ந.கிரிதரனின் கட்டுரைகள் நூலை முன்வைத்துச் சில குறிப்புகள்’ பற்றி...... 22
7. எழுத்தாளர் அருண்மொழிவர்மனின் எதிர்வினையும் அதற்கான என் பதிலும்... 28
8. என்னை ஆட்கொண்ட மகாகவி! 31
9. பாரதியை நினைவு கூர்வோம்! 33
10.பாரதியார் நினைவாக: பாரதியாரின் 'திக்குகள் எட்டும் சிதறி' மழைக்கவிதை!
வ.ந.கிரிதரனின் 'அழியாத கோலங்கள்' ( பால்ய, பதின்மப் பருவத்து நனவிடை தோய்தல்)
அண்மையில் நண்பரும் எழுத்தாளருமான டானியல் ஜீவா அவர்கள் 'ஏன் நீங்கள் உங்கள் பால்ய பருவத்து அனுபவங்களை நூலாக்கக் கூடாது? நீங்கள் எழுதும் வவுனியா அனுபவங்களையெல்லாம் விரும்பி வாசிப்பவன் நான்' என்றார். அப்பொழுதுதான் நானும் அது பற்றி யோசித்தேன். நான் முகநூலில், பதிவுகள் இணைய இதழில், என் வலைப்பதிவில் எல்லாம் என் பால்ய, பதின்ம வயது அனுபவங்களை எழுதுவது வழக்கம். என் பால்ய பதின்ம வயதுத்திரைப்பட அனுபவங்களை, வாசிப்பு அனுபவங்களையெல்லாம் நிறைய எழுதியிருக்கின்றேன்.
மீண்டும் அவற்றை நோக்கியபோது ஒரு நூலாக்கும் அளவுக்கு எழுதியிருந்ததை உணர முடிந்தது. அவை அனைத்தையும் தொகுத்து நூலாக்கினால் நல்லதோர் ஆவணமாக அதுவிருக்கும் என எனக்கும் தோன்றியது. அதன் விளைவே இந்த மின்னூல். மேலும் பல தொகுப்புகள் வருவதற்கான சாத்தியங்கள் உள்ளன. சில பதிவுகள் , ஒன்றுக்கு மேற்பட்டவை, ஒரே விடயத்தைக் கூறுபவையாகவும் இருந்தாலும் அவற்றை நான் நீக்கவில்லை. எழுதப்பட்ட பதிவுகள் என்னும் அடிப்படையில் அவை அனைத்தையும் தொகுப்பில் உள்ளடக்கியுள்ளேன்.
இவை அழியாத கோலங்கள் மட்டும்மல்ல. ஒரு குறிப்பிட்ட காலத்து வரலாற்றை வெளிப்படுத்தும் ஆவணங்களும் கூட. இவ்விதமானதோர் ஆலோசனையினைத் தந்ததற்காக நண்பர் டானியல் ஜீவாவுக்கு நன்றி.
தற்போது இந்நூல் அமேசன் - கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகியுள்ளது. அதற்கான இணைப்பு - https://www.amazon.com/dp/B0DNQ8YNPY
இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள்:
1. மறக்க முடியாத வவுனியா மகா வித்தியாலயம்.... 6
2. அகில இலங்கைத் தமிழ்த்தின விழாக் கட்டுரைப் போட்டியில் முதற் பரிசு. 8
3. பால்ய காலத்து வவுனியா நினைவுகள்..... 9
4. வவுனியா நகரத்திரையரங்குகள்: அன்றும் இன்றும் 12
5. மறக்கமுடியாத 'பட்டாணிச்சுப் புளியங்குளம்!' 14
6. மறக்க முடியாத ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் சிலர்.. 15
7. மறக்க முடியாத 'யார் நீ' 17
8. பாம்புகள் மலிந்த வவுனியா.. 19
9. அரை நூற்றாண்டு இரகசியம்! 20
10. வன்னி நினைவுகள்: சந்தேகம் மிக்க ஆட்காட்டிப் பறவைகள்... 21
11. மங்கையர்க்கரசி அமிர்தலிங்கத்திடம் பெற்ற ‘ஓட்டோகிராப்’ 21
12. அப்பாவின் பெயரிலெழுதிய சித்திரைப் புத்தாண்டுக் கவிதை 24
13. நெஞ்சம் மறப்பதில்லை: சங்கீத ஆசிரியர் பொன் நடராஜா! 28
14. பொய்க்கால் குதிரை ஆட்டமும், வவுனியா நினைவுகளும்.. 29
15. அன்பு புத்தகசாலை 31
16. மறக்க முடியாத பெண் ஒருவரின் மரணம் 32
17. அன்னையர் தினப்பதிவொன்று....... 33
18. தாட்டானுடன் ஓர் அனுபவம்........ 35
19. அதிகாலையில் வால்வெள்ளி 'பென்னெட்'! 36
20. என் குருமண்காட்டு நினைவுகள் 37
21. அப்பா.. 39
22. யாழ் பொதுசன நூலக நினைவுகள்.... 41
23. 'ஜேம்ஸ் பாண்ட் 007' ஷான் கானரி! 43
24. வரலாற்றுச் சுவடுகளில்...: செ.சுந்தரலிங்கம் VS ஆர்.சுந்தரலிங்கம்.... 44
25. நாங்கள் அறிந்த 'சுப்பர் ஸ்டார்' - எஸ்.டி.ஆர் (STR)! 46
26. எந்தையே! என்னில், என் எண்ணங்களில் என்றும் நீ! 47
27. மறக்க முடியாத 'ரெட் சன்' (Red Sun). 49
28. யாழ் நகரத்துத் திரையரங்குகள் அன்று - மறக்க முடியாத மனோஹரா! 50
29. அஞ்சலி: விஜயன் சிதம்பரப்பிள்ளை (பிரான்ஸ்) 52
30. பசுமை நிறைந்த நினைவுகள்: அன்று யாழ்நகரில் பார்த்த ஆங்கிலத்திரைப்படங்கள். 54
31. அழியாத கோலங்கள்: ஜிம் பிறவுனின் 'எல் கொண்டர்' 57
32. ஜூலியனோ ஜெம்மா (Giuliano Gemma) 58
33. யாழ் நகரத்துத் திரையரங்குகள் அன்று - றீகல் 59
34. ஆர்ட்டிஸ் மணியத்தின் 'அடிமைப்பெண்' கட் அவுட்! 61
35. ஆர்டிஸ்ட் மணியத்தின் மாட்டுகார வேலன் கட் அவுட்! 62
36. தேடி எடுத்த புதையல்: ஓவியர் மணியத்துடனொரு நேர்காணல். 63
37. ராஜா திரையரங்கில் சாதனை படைத்த ‘ஒளி விளக்கு’ 65
38. 'செலூலாயிட்' மீதான கீறல்கள் (Scratches on Celluloid) என்னுமொரு ஆவணக்காணொளி! 66
39. மறக்க முடியாத 'பேசும் படம்' 68
40. விந்தை மிகு விந்தன் 69
41. பால்ய காலத்து அழியாத கோலங்கள்:மாயாவியின் வாடாமலர். 70
42. ஜெயகாந்தன் நினைவாக....... 71
43. எழுத்தாளர் சாண்டில்யன் பற்றிய நினைவுகள்... 72
44. அமரர் அ.மா.சாமி (குரும்பூர் குப்புசாமி , கும்பகோணம் * அமுதா கணேசன்) நினைவுக் குறிப்புகள்! 75
45. ஜெயகாந்தன் நினைவாக....... 77
46. எழுத்தாளர் நாரண துரைக்கண்ணன் 77
47. . பன்முகத்திறமை மிக்க பானுமதி 79
48.. ஜெகசிற்பியனின் 'நந்திவர்மன் காதலி' 80
49.. அழியாத கோலங்கள்: மீ.ப.சோமுவின் 'கடல் கொண்ட கனவு' 82
50. கல்கியில் வாசித்த தொடர்கதைகள் 83
51. எழுத்தாளர் நாரண துரைக்கண்ணன் (ஜீவா) அவர்களின் 'உயிரோவியம்' 84
52. ஜெகசிற்பியனின் ‘கிளிஞ்சல் கோபுரம்’ 85
53.. சிந்தையில் நிற்கும் ‘ஜீவபூமி’ 86
54. மனத்தில் நிற்கும் ‘மஞ்சள் ஆறு’ 87
55. ராணிமுத்தும், விடுகதை ஒன்றும். 90
56. அறிஞர் அண்ணா! 91
57. என் மனதுக்குகந்த மணிவண்ணன் ( நா.பார்த்தசாரதி) 94
58. நா.பா.வின் 'பொன் விலங்கு" பற்றிய உணர்வுகள்..... 95
59. பால்ய, பதின்ம வயதில் படைத்தவை 98
60. வின்சரில் படம் பார்ப்பதுமோர் அனுபவமே! 102
61. இலங்கைத் தமிழர்தம் சமூக, , அரசியல் வாழ்வில் 'சைக்கிளி'ன் ஆதிக்கம்! 103
62. அராலி நினைவுகள்.. 106
63. ‘ஓட்டோ மெக்கானிக் விஞ்ஞானி’ 108
64. 'கொண்டக்டர்' மணியம்! 109
65. யாழ்ப்பாணத்தில் அன்று ஓடிய 'டபுள் டெக்கர் பஸ்' 110
66. காரைநகர் கடற்கோட்டை பற்றிய நினைவுகள்... 111
67. காரைநகர் கடற்கோட்டையும், கடற்படை முகாமும் .. மேலும் சில நினைவுகளும். 112
68. வழுக்கையாறு அல்லது வழுக்கியாறு! 115
69. கல்லுண்டாய் வெளிப் பயண நினைவுகள்... 116
70. அழியாத கோலங்கள்: மணிவண்ணனின் (நா.பார்த்தசாரதி) 'குறிஞ்சி மலர்' 118
71. ஜெகசிற்பியனின் 'காணக்கிடைக்காத தங்கம்' 119
72. நான் இரசித்த காதல் கடிதமொன்று! கு.அழகிரிசாமியின் கற்பனைச்சித்திரம்! 120
73.. தி.ஜானகிராமனின் 'அன்பே! ஆரமுதே!' 122
74. ஶ்ரீ வேணுகோபாலனின் படைப்புகள் 124
75. என்னைக் கவர்ந்த ஜெகசிற்பியனின் 'ஜீவகீதம்'. 126
76. மறக்க முடியாத ஆளுமை 'ராஜு அங்கிள்' 130
77. என் வாசிப்பனுவப்படிக்கட்டுகளில் அகிலனின் படைப்புகள்! 133
78. எழுத்தாளர் ஶ்ரீ வேணுகோபாலன் (புஷ்பா தங்கத்துரை) 135