சேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக்கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. இன்றுள்ள சூழலைப்பாவித்து அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தில் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:
https://www.sparknotes.com/shakespeare/#jumpTo-no-fearno
'பல்கலை வேந்தர்' சில்லையூர் செல்வராசன் பட்டத்துக்கேற்ப உண்மையிலேயே பல்கலை வல்லுநர்தான். கதை, கட்டுரை, கவிதை, மொழிபெயர்ப்பு, நாடகம் (மேடை நாடகம் & வானொலி நாடகம்) எனப் பன்முகத்திறமை மிக்கவர். உலக மகாகவி வில்லியம் ஷேக்ஸ்பியரைப்பற்றிய சுருக்கமான அறிமுக உரையே 'ஷேக்ஸ்பொயர் ஒரு ஜீவநதி; என்னும் சிறு பிரசுரமாக வெளியாகியுள்ளது. அதுபோல் ஷேக்ஸ்பியரின் புகழ்பெற்ற படைப்புகளில் ஒன்றான 'றோமியோ & ஜூலியட்' என்னும் நூலை அவர் தமிழாக்கம் செய்துள்ளார். ஷேக்ஸ்பியரின் நினைவு தினம் ஏப்ரில் 23. மருதமுனை அன்னை வெளியீட்டகம் வெளியிட்டுள்ள அவரது மேற்படி இரு நூல்களையும் உள்ளடக்கியுள்ள 'றோமியோ ஜூலியட்' தொகுதியினை இங்கு அறிமுகப்படுத்துகின்றேன். https://www.sparknotes.com/shakespeare/#jumpTo-no-fearno
http://noolaham.net/project/27/2603/2603.pdf
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.