அண்மையில் யாருமே எதிர்பார்க்காத நிலையில் மறைந்தவர் எழுத்தாளர் சீர்காழி தாஜ். அவர் என்னுடன் முதன் முதலில் தொடர்பு கொண்டது இங்கு நான் பகிர்ந்துக்கொள்ளும் நீண்ட கடிதம் மூலம்தான். தமிழகத்திலுள்ள நூலகமொன்றில் என் 'அமெரிக்கா' , 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆகிய நூல்களை வாசித்து விட்டு எனக்கு முதன் முதலாக அவர் எழுதிய கடிதம் இதுதான். இதன் பின்னர் அவர் எனக்கு மேலும் சில நீண்ட கடிதங்களை அனுப்பியிருந்தார்.