திரும்பிப்பார்க்கிறேன்: இலங்கையில் கல்விக்கும் இலக்கியத்திற்கும் அயராது சேவையாற்றிய ஆய்வறிஞர் முகம்மது சமீம்.

கடந்த சில மாதங்களாக முற்போக்கு இலக்கிய முகாமிலிருந்து அடுத்தடுத்து எனது இனிய நண்பர்களை நான் இழந்து கொண்டிருக்கின்றேன். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் முன்னாள் செயலாளர் நண்பர் பிரேம்ஜி ஞானசுந்தரன் அவர்களின் மறைவின் துயரத்தின் சுவடு மறையும் முன்னர் தமிழ் நாட்டில் மூத்த படைப்பாளி இலக்கிய விமர்சகர் தி.க.சிவசங்கரன் மறைந்தார். அவருக்கும் இரங்கல் எழுதி எனது நினைவுகளுக்கு அவரை மீண்டும் அழைத்து மனதிற்குள் உரையாடிக்கொண்டிருந்தவேளையில் --- இதோ நானும் வருகிறேன் என்னையும் அழைத்துக்கொள்ளும் என்று நெஞ்சத்தினுள் பிரவேசித்துவிட்டார் இனிய நண்பர் சமீம் அவர்கள். அவரது மறைவுச்செய்தியை அறிந்தவுடன் கடந்த காலங்கள்தான் ஓடிவருகின்றன. நான் இலக்கிய உலகில் பிரவேசித்த காலப்பகுதியில் அதாவது 1972 ஆம் ஆண்டு காலப்பகுதியில்தான் சமீம் எனக்கு அறிமுகமானார். அவர் கம்பளை சாகிராக்கல்லூரி அதிபராகவும் பின்னர் கிழக்குப்பிராந்திய கல்வி பணிப்பாளராகவும் பணியாற்றிய காலகட்டத்தில் எமது இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பணிகளிலும் தீவிரமாக இணைந்து இயங்கினார்.














இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மூத்த உறுப்பினரும் நீண்டகாலமாக அந்த அமைப்பின் செயலாளராகவும் பணியாற்றிய எழுத்தாளரும் ஊடகவியலாளருமான பிரேம்ஜி ஞானசுந்தரன் நேற்று மாலை கனடாவில் காலமானார். அச்சுவேலியில் 17-11-1930 ஆம் திகதி பிறந்த பிறந்த ஞானசுந்தரன் தமது ஆரம்பக்கல்வியை அச்சுவேலி கிறீஸ்தவ கல்லூரியிலும் பின்னர் யாழ். பரமேஸ்வராக் கல்லூரியிலும் கற்றார். 1947 இல் தமது 17 வயதிலேயே சுதந்திர இளைஞர் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கினார். அன்றிலிருந்து ஞானசுந்தரன் தீவிரமான வாசிப்பிலும் எழுத்துத்துறையிலும் ஈடுபடத்தொடங்கினார். தமிழகம்சென்று மூத்த அறிஞர்கள் நாமக்கல் கவிஞர் -வி.க. வா.ரா- சுவாமிநாத சர்மா - குயிலன், - பேராசிரியர் ராமகிருஷ்ணன் - தமிழ் ஒளி முதலானோரின் தொடர்பினால் இடதுசாரிக்கருத்துக்களை உள்வாங்கி இடதுசாரியாகவும் முற்போக்கு எழுத்தாளராகவும் இயங்கிய ஞானசுந்தரன் அங்கு கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி இதழிலிலும் பணியாற்றினார். தயாகம் திரும்பிய பின்னார் கே.கணேஷ் மற்றும் கே. ராமநாதன் ஆகியோரின் தொடர்புகளினால் இலங்கை கம்யூனிஸ்ட கட்சியின் தேசாபிமானி - மற்றும் சுதந்திரன் முதலான இதழ்களிலும் ஆசிரியர் குழுவில் இணைந்தார்.
வல்லமை என்ற இணைய இதழ் நடத்திய சிறுகதைப்போட்டியில் பரிசு பெற்ற சிறுகதை காட்சிப்பிழை. அவுஸ்திரேலியாவில் வதியும் சுதாகரன் இலங்கை பேராதனை பல்கலைக்கழக பொறியியல் பட்டதாரி. முன்னர் நியூசிலாந்தில் வாழ்ந்துவிட்டு அவுஸ்திரேலியா மெல்பனுக்கு வந்தவர். பல வருடங்களாக சிறுகதை, கட்டுரை, பத்தி எழுத்துக்கள் எழுதுபவர். இலங்கையிலும் தமிழகத்திலும் மற்றும் வெளிநாடுகளிலும் நடந்த பல சிறுகதைப்போட்டிகளில் பரிசில்கள் பெற்றவர். அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தில் பல பதவிகளிலிருந்து சிறந்த பங்களிப்பு செய்துவருபவர். சq;கத்தின் 10 ஆவது எழுத்தாளர் விழாவை (2010) முன்னிட்டு நடத்தப்பட்ட சர்வதேச சிறுகதை, கவிதைப்போட்டிகளை திறம்பட நடத்தியிருப்பவர். தற்பொழுது சங்கத்தின் செயற்குழுவில் இதழாசிரியராக பணியாற்றுபவர். குறிப்பிட்ட வல்லமை இணைய இதழின் சிறுகதைப்போட்டிக்கு வந்த கதைகளை தேர்வு செய்தவர் தமிழகத்தின் பிரபல இலக்கியவிமர்சகர் வெங்கட்சாமிநாதன். குட்டுப்பட்டாலும் படவேண்டும் மோதிரக்கையினால் என்பார்கள். வசிட்டவர் வாயால் பிரம்மரிஷிப்பட்டம் என்பார்களே அதேபோன்றதுதான் வெங்கட்சாமிநாதனின் தேர்வு. சுதாகரனின் காட்சிப்பிழை வல்லமை தொகுத்த பரிசுக்கதைகளின் தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. பாலகிருஷ்ணனுக்கும் கனடாவில் வயது முதிர்ந்தவர்கள் தஞ்சமடையும் இல்லத்திலிருக்கும் தெமட்டகொட அங்கிளுக்கும் இடையே அப்படி என்னதான் பிரச்சினை?






பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









