யாழ்ப்பாணத்துக்கு மீண்டும் யாழ்தேவி ஓடவிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திபார்த்து மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். தற்பொழுது கிளிநொச்சிவரையில் ஓடிக்கொண்டிருக்கும் இந்த ரயில் பற்றித்தான் எத்தனை சுவாரஸ்யமான கதைகள் இருக்கின்றன. காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டைக்கும் கோட்டையிலிருந்து காங்கேசன்துறைக்கும் தினமும் காலை, மதியம் பின்னர் இரவுநேரமும் ஆறு ரயில்கள் மற்றும் அனைத்து நிலையங்களிலும் தரித்துச்செல்லும் பொதிகள் ஏற்றி இறக்கி நீண்ட நேரத்தை எடுத்துக்கொள்ளும் சரக்கு ரயில் என்பனவற்றில் பயணித்தவர்கள் தற்காலத்தில் உலகெங்கும் வாழ்கிறார்கள். இவ்வாறு தினமும் எட்டு ரயில்கள் ஓடிக்கொண்டிருந்த பாதையில் பல ஆண்டுகளாக ரயிலே இல்லை. நீடித்த உள்நாட்டுப்போர் தொலைத்துவிட்ட அந்த ரயில்களை… அந்தப்பயணங்களை, அதில் பயணித்த எவராலுமே தங்கள் மனங்களிலிருந்து தொலைத்துவிடவே முடியாதுதான்..... மேலும் வாசிக்க