பதிவுகள் முகப்பு

கூகி வா தியாங்கோ - வாழ்வும் மரணமும்! - வாசன் -

விவரங்கள்
- வாசன் -
இலக்கியம்
13 ஜூலை 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கூகி வா தியாங்கோ மறைந்து விட்டார் . கென்யா எழுத்தாளரும் கல்வியலாளருமாகிய அவரது மரணம் இன்றைய தமிழ் சமூகத்தில் எந்தவித சலனத்தையும் ஏற்படுத்தாது எமக்குள் எந்தவித ஆச்சரியத்தையும் ஏற்படுத்தவில்லை. எம்மைப் பொறுத்தவரை எமக்குள் இருக்கும் குழாயடிச் சண்டைகளைத் தீர்த்துக் கொள்ளவே எமக்குப் போதிய நேரமோ அவகாசமோ இல்லாதபோது இது போன்ற ஆளுமைகளின் இருப்பும் மறைவும் எமக்கு ஒரு பொருட்டாகவே தென்படுவதில்லை. இவரது வாழ்வு குறித்தோ அல்லது படைப்புக்கள் குறித்தோ எந்தவித நிகழ்வுகளையோ ஆய்வுகளையோ மேற்கொள்ளாமல் ஒரு சில சஞ்சிகைகளில் ஆங்காங்கே பதிவிடப்படும் வெறும் அஞ்சலிக் குறிப்பிடனேயே இவரது மரணத்தையும் கடக்க நினைக்கின்றது எமது சமூகம். இத்தனைக்கும் இதுவரை இவரது ஆறேழு நூல்கள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கின்றது. அதனையும் விட அன்றைய காலகட்டங்களில் இவர் எமது பல்வேறு சிறுபத்திரிகைகளைளின் அட்டைப்படமாக அலங்கரிக்கப் பட்டிருந்தார் என்பதும் இவரது எழுத்துக்களை எமது முன்னோடிகள் ஆய்வு ரீதியாக மதிப்பீடும் விமர்சனமும் செய்திருந்தனர் என்பதும் எமக்குள் மிகுந்த ஆச்சரியத்தினை ஏற்படுத்தி நிற்கின்றது. அன்று உலகளாவிய ரீதியில் தனது கவன வட்டத்தினை விஸ்தரித்து மிகவும் காத்திரமாக இயங்கி வந்த எமது சமூகம் ஒரு சில தசாப்த காலத்திற்குள் இப்படி தடாலடியாக கீழிறங்கிப் போயுள்ளது உண்மையிலேயே வேதனையை ஏற்படுதி நிற்கின்றது.

மேலும் படிக்க ...

காலம் நுஃமான் சிறப்பிதழ் “நுண்மாண் நுழைபுல நுஃமான்” - ஈழக்கவி -

விவரங்கள்
- ஈழக்கவி -
ஆய்வு
13 ஜூலை 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

‘காலம் நுஃமான் சிறப்பிதழ்’ வெளியீட்டு நிகழ்வில் (February 23.02.2025: Scarborough Villege Center; Canada) அவ்வை நிகழ்த்திய வெளியீட்டுரையின் காணொளியை அண்மையில் முகநூலில் கண்ணுற்றேன். உணர்வை உந்தச்செய்த உயிர்ப்பான உரை. நுஃமான் , மஹாகவி உறவின் ஆத்மார்த்தம் பற்றி அவ்வை உயிரோட்டமாய் உரையாடியிருந்தார். தந்தை மஹாகவி, மாமா நுஃமான் ஆகிய ஆளுமைகளது ஆப்த நேசம் பற்றிய அவ்வையின் உரையாடல் விரிபடுத்தப்பட்டு எழுதப்படுதல் நல்லது. அவ்வை அப்படி எழுதினால் அது ஒரு முக்கிய ஈழத்து இலக்கிய ஆவணமாக அமையலாம் என்ற உணர்வை அப்பேச்சு எனக்குள் உருவாக்கிற்று. அவ்வையின் வெளியீட்டுரை குறிப்பிட்டது போல, ‘எப்போதுமே சிறந்த படைப்புகளை தாங்கி வரும் காலம் இம்முறை நுஃமான் சிறப்பிதழாக வந்துள்ளது. இவ்விதழை முதலில் இருந்து கடைசிவரை ஒரே மூச்சாக வாசித்து முடித்தபோது அப்படியொரு பரவசமான நிலை’. இவ்விதழின் (ஜனவரி 2025) உயிர்ப்பான உள்ளடக்கம் எனக்குள்ளும் அப்படியொரு பரவசத்தை உருவாக்கிற்று. புன்முறுவல் பூத்த நுஃமான் அவர்களின் ‘அமுத’ புகைப்படம் அட்டையில் ‘நுண்மாண் நுழைபுல நுஃமானாக மினுக்கமுறுகிறது.

காலம் இதழ்களை என்னால் தொடர்ச்சியாக படிக்கமுடியவில்லை. ஆனாலும் படித்த இதழ்கள் மனசுக்குள் பதியமாயிற்று. மூத்த எழுத்தாளர் கே.கணேஷ் அவர்களின் புத்தகங்களால் குவிந்த தலாத்துஓயா இல்லத்தில்தான் முதன்முதலாக காலம் சஞ்சிகையை கண்டேன். என்னுடன் அதிநேசத்தோடு இருந்த கே.கணேஷ் அவர்கள் நான் மிகுந்த ஆர்வத்துடன் காலம் இதழ்களை படிப்பதைப்பார்த்து ஒருசில காலம் இதழ்களை எனக்கு அன்பளிப்பாக தந்தார்; (பல பெறுமதியான நூல்களை அவரது கையொப்பத்துடன் எனக்கு தந்திருந்தார்). கொழும்பு போகும்போது புத்தக கடைகளில் காலம் இதழை கண்டால் வாங்கிக்கொள்வேன். என் வாசிப்புப் புலத்துக்கு காலம் சஞ்சிகையும் வெளிச்சமிட்டிருக்கிறது.

மேலும் படிக்க ...

முருகபூபதி அவர்களின்; பிறந்த தினம் பதின்மூன்று யூலை! வாழ்த்துகிறேன்! - நவஜோதி ஜோகரட்னம், லண்டன். -

விவரங்கள்
- நவஜோதி ஜோகரட்னம், லண்டன். -
நவஜோதி ஜோகரட்னம்
12 ஜூலை 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

     

வாழ்க்கை ஓடிய ஓட்டத்தில் வெகு தூரம் போய்விட்டேன். ஏதோ தொலைத்தது போன்ற உணர்வு. திரும்பிப் பார்த்தேன் தொலைத்தது வேறு எதுவும் இல்லை. என்னைத்தான். அப்போதுதான் புரிந்தது எனக்;காக வாழ்க்கையை நான் வாழவே இல்லை என்று. அத்தகைய ஒரு வாழ்க்கையை வாழ்ந்து சிறுகதை, நாவல், கட்டுரை, பயண இலக்கியம், சிறுவர் இலக்கியம், புனைவு சாராத பத்தி எழுத்துக்கள், திறனாய்வு போன்ற துறைகளில் தன் ஆளுமைகளைச் செலுத்தி வருபவர்தான் முருகபூபதி அவர்கள்;. ஒவ்வொரு கலைஞர்கள். எழுத்தாளர்களின் பிரிவின்போதும் அதனைப் பதிவாக்குவதிலும் அவர் காட்டும் அக்கறை அவரது பரிவுணர்வை வெளிப்படுத்தும் ஒரு செயலாகும். இலக்கியம் முதன்மையாகக் கற்றுத் தரும் பாடம் என்னவென்றால்; பரிவு காட்டுவதுதான். அதனை இவரின் செயலிலும், எழுத்துக்கள் மூலம் புரிந்து கொண்டேன்.          

     பழகுவதற்கு இனிமையானவர் முருகபூபதி அவர்கள். எனது அன்புத்தந்தை எஸ் அகஸ்தியரோடு மிக நெருக்கமான உறவு கொண்டிருந்தவர்;. இலங்கையிலிருந்த காலப்பகுதியில் 1983களில இருவரும் சந்தித்துள்ளனர். பின்னர் எனது தந்தை அகஸ்தியர் பிரான்சிற்கும் முருகபூபதி அவர்கள் அவுஸ்ரேலியாவிற்கும் புலம் பெயர்ந்தனர். ஆனால் தொடர்ச்சியாக இருவரும் கடிதத் தொடர்புகளில்  இருந்திருக்கிறார்கள். அகஸ்தியருடன் இவர் மேற்கொண்ட நேர்காணலை இவரது ‘சந்திப்பு’ என்று நூலில் பதிவு செய்தமையை நன்றியுடன் நினவுகூர விரும்புகின்றேன்.

     அத்தகைய அவரது உறவின் தொடர்ச்சி இன்றுவரை எமது குடும்பத்துடன் தொடர்ந்து கொண்டிருப்பது மகிழ்வான விடயம்.  முக்கியமாக அகஸ்தியரின் ‘சுவடுகள்’  விவரண நவீனம் என்ற நாவல் 2023ஆம் ஆண்டில் வெளியிட்டவேளை, பல சிரமங்கள் மத்தியில் அவர் அந்நாவலை வெளிக்கொண்டு வருவதற்காகச் செய்த உதவியோ அளப்பரியது. என் இதயத்தில் அவை ஆழமாகப் பதிந்துள்ளது. மனிதர்கள் ஒருவர் ஒருவருக்குக்காட்டும் அக்கறையும் அன்பும் மேலானது. என்றும் அதனை நன்றியுடன் நான் நினைவிருத்துவதுண்டு. லண்டன் வரும் வேளைகளில் நான் அவரைச் சந்திப்பதில் மிக ஆர்வத்துடன் இருந்திருக்கின்றேன். தொலை நகல் வழியாக அவருடன் தொடர்புகள் தொடர்வது மகிழ்வுதருகின்ற விடயம். எனது தாயார் நவமணியின் சுகம் குறித்தும், எனது சகோதரி நவஜெகனி குறித்தும் தொடர்பு கொள்ளும் வேளைகளில் எல்லாம் அவர் விசாரிக்கத் தவறுவதேயில்லை. அத்தகைய ஒரு மனிதத்தை நேசிக்கின்ற ஒருவராவார்.        

மேலும் படிக்க ...

லெட்சுமணன் முருகபூபதி : ஒரு பன்முக ஆளுமை! - கிறிஸ்டி நல்லரெத்தினம் -

விவரங்கள்
- கிறிஸ்டி நல்லரெத்தினம் -
இலக்கியம்
12 ஜூலை 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

(அவுஸ்திரேலியாவில் தமிழ் எழுத்தாளன் எனும் அடையாளத்தின் முகவரியாளராக மிளிர்பவர் லெ.முருகபூபதி அவர்கள். அவரின் அகவை நாள் ஜூலை 13ம் நாளில், இச் சிறப்புக் கட்டுரை பிரசுரமாகிறது.  எழுத்தாளர் முருகபூபதி அவர்களுக்குப் பதிவுகளும் பிறந்தநாள் வாழ்த்துகளைத்  தெரிவித்துக்கொள்கிறது.)


1951ம் ஆண்டு ஜுலை 13ம் திகதி..... நிசப்தமான அந்த வெள்ளி இரவில் நுரை தள்ளி கரைநனைக்கும் அலையோசையைத் தவிர எங்கும் அமைதி. நீர்கொழும்பு மகப்பேறு வைத்தியசாலையில் 'வீல், வீல்' எனும் ஒரு குழந்தையின் அலறல் அந்த இரவின் அமைதியை கலைத்தது!

ஒரு அன்புத் தாய் குழந்தையை வாரியணைத்து உச்சி முகர்ந்து தந்தை லெட்சுமணனின் கரங்களில் பாலகனை ஒப்புவித்தாள். குடும்பத்தின் முதல் மகன் என்ற பெருமிதம் அவர் கண்களில் ஒரு புது ஒளியை தோற்றுவித்தது. தந்தை குனிந்து மழலையின் காதருகில் ஒரு மந்திரம் போல் "முருக....பூபதி " என நீட்டி விளித்து அவனை மெதுவாய் தாயின் அரவணைப்பிற்கு சொந்தமாக்கினார்.

அன்று அம்மழலையுடன் ஒட்டிக் கொண்ட 'முதல்' எனும் வார்த்தை அவன் வாழ்வில் நிரந்தரமாகவே அழியாச் சுடராய் அன்று ஏற்றிவைக்கப்பட்டது.

இலங்கையில் வடமேல் மகாணத்தின் கம்பஹா மாவட்டத்தில் நீர்கொழும்பு நகரில் 1954ஆம் ஆண்டு இந்து தமிழ்ப்பிள்ளைகளுக்காக தொடங்கப்பட்ட ஆரம்பப்பாடசாலை விவேகானந்தா வித்தியாலயத்தில் முதல் மாணவனாக 1954 ஆம் ஆண்டு விஜயதசமி தினமன்று ஏடு துவக்கி வித்தியாரம்பம் செய்வித்து தன் கல்விப் பயணத்தை ஆரம்பித்தார் முருகபூபதி, இவரின் மாணவ பதிவு இலக்கம் : 1.

மேலும் படிக்க ...

மறக்க முடியாத எழுத்துலக ஆளுமைகளில் ஒருவர் இந்திரா பார்த்தசாரதி! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
11 ஜூலை 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எழுத்தாளர்  இந்திரா பார்த்தசாரதிக்குப் பிறந்த நாள் ஜூலை 10.  என் வாசிப்பனுவத்தில் மறக்க முடியாத எழுத்தாளுமைகளில் ஒருவர் இ.பா. தனது மனைவி இந்திராவின் பெயரையும் பாவித்து, இந்திரா பார்த்தசாரதி என்னும் பெயரில் எழுதுபவர். எழுத்தாளர் ரங்கராஜன் தன்  மனைவி சுஜாதா என்னும் பெயரில் தமிழ்  இலக்கிய உலகில் தடம் பதித்தது நினைவுக்கு வருகின்றது.  

எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி எனக்கு  முதலில் அறிமுகமானபோது நான் ஒருவித வெறியுடன் வாசிப்பில் மூழ்கிக்கிடந்த பால்ய  பருவத்தினன். சொன்னால் நம்ப மாட்டீர்கள் அப்போது எனக்கு வயது பதினொன்றுதான். பத்து வயதிலேயே கல்கியில், விகடனில், குமுதத்தில், கலைமகளில், தினமணிக்கதிரி தொடர்களாக வெளியான தொடர்கதைகளை, சிறுகதைகளை , தீவிரமாக, வாசிக்கத்தொடங்கி விட்டிருந்தேன்.வெகுசனச் சஞ்சிகைகளில் எழுதி என் கவனத்தை ஈர்த்த, தீவிர இலக்கிய எழுத்தாளுமையாளர்களாக ஜெயகாந்தன், இந்திரா பார்த்தசாரதி . கு,அழகிரிசாமி போன்றோர் இருந்தனர். இவர்களது எழுத்துகள்  பொதுவான வெகுசன எழுத்தாளர்களின் எழுத்துகளிலிருந்து வேறுபட்டவை. ஆனால் அது இவர்கள் மீதான என் ஈர்ப்புக்குத் தடையாக இருந்ததில்லை. என் வயதுக்கு மீறிய விடயங்களைப்பற்றியெல்லாம் இவர்கள்தம் படைப்புகள் இருந்தாலும், அனைவரையும் சென்றடையும் வகையில் , ஒரு வித எல்லை மீறாத எழுத்து நடையில்  இவர்கள் எழுதினார்கள்.

மேலும் படிக்க ...

எழுத்தாளர் இளங்கோவின் (டி.செ.தமிழன்) சிறுகதைத்தொகுப்பு வெளியீடு - 'நானுன்னை முத்தமிடுகையில் புத்தர் சிரித்துக்கொண்டிருந்தார்'

விவரங்கள்
- தகவல்: இளங்கோ -
நிகழ்வுகள்
11 ஜூலை 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

பயணத்தொடர்: யப்பானில் சில நாட்கள் (7) - யப்பானிய தேயிலை - நடேசன் -

விவரங்கள்
- நடேசன் -
பயணங்கள்
11 ஜூலை 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஜப்பானில் இறங்கிய ஆரம்ப நாட்களில் பார்த்தபோது புரிந்து கொள்ளாது சந்தேகத்துடன் , எனக்குள் அடிக்கடி கேள்வி எழுப்பியபடி இருந்த ஒரு விடயம் பல யப்பானிய உணவுகளிலிருந்த பச்சை நிறம் : பச்சை கேக் உணவுக் கடைகளில் கண்ணாடிகள் ஊடாக பார்க்க முடிந்தது , பச்சை ஐஸ்கிரீமை தெருவில் மாணவர்கள் உண்டார்கள்,பச்சை சொக்கிலேட் வித்தியாசமாகக் கண்ணாடிப் பெட்டியிலிருந்து என்னைப் பார்த்துச் சிரித்தது, பலர் குடிக்கும் சோடாவும் பச்சை வர்ணமாக இருந்தது. யப்பானில் நான் கோக்கோ கோலாவைக் காண முடியவில்லை. யப்பானியர்கள் பச்சைத் தேயிலை குடிப்பது எனக்கு ஏற்கனவே தெரிந்தாலும், அவர்கள் உணவுப் பொருட்களில் பச்சைத் தேயிலை எனும் மச்சா தேயிலை சேர்த்துக் கொள்வார்கள் என்பதைப் புரிந்து கொள்ள சில நாட்கள் எடுத்தது.

டோக்கியோவிலிருந்து, நாகோயா என்ற பெரிய நகரத்திற்கு பஸ்ஸில் போகும் பாதை, வளைவுகள் மலைகள் நிறைந்தது. ஒரு பக்கம் பச்சை சிவப்பு என வர்ணம் கலந்த மலைச்சிகரங்களின் நிரந்தர அணிவகுப்பு மறுபக்கம் தூரத்தில் அமைதியான நீல வர்ணத்தில் பசுபிக் சமுத்திரம் என்பது அழகான காட்சி , அதுவும் இலையுதிர்காலம் கண்ணுக்குக் கல்யாண விருந்தாக இருந்தாலும், என் மனதில் வெளியே தெரியும் அழகிற்கு மாறாக உள்ளே இருப்பது நமக்குத் தெரியாது. கோபத்தில் கொதிக்கும் நிலமும், பொங்கி அதிரும் கடலும் நினைவுக்கு வந்தது. யப்பான் மூன்று கண்டங்களின் நிலத் தட்டுகள் சந்திக்கும் இடத்தில் இருப்பதால் நிலநடுக்கம், எரிமலை, சுனாமி என்ற இயற்கை அழிவுகள் நமது தவிர்க்க முடியாத உறவினர்கள்போல் வந்து தங்கிப் போவன.

மேலும் படிக்க ...

கொழும்பு நகரில் அமரர் பாலசுப்பிரமணியம் நினைவுச் சிறுகதை[ப்போட்டிப் பரிசளிப்பு நிகழ்வு!

விவரங்கள்
- தகவல்: பேராசிரியர் சி.மெளனகுரு -
நிகழ்வுகள்
11 ஜூலை 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

பேராசிரியர் கா. சிவத்தம்பி (1932 - 2011) நினைவுகள்! ஜூலை 06 - 14 ஆவது நினைவு தினம்! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
11 ஜூலை 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஒரு மனிதரைப்பற்றி நினைப்பது சுகமானது. ஆனால் அந்த மனிதரைப்பற்றி எழுதுவது சுகமானதல்ல. சுலபமானதும் அல்ல. என்று பல வருடங்களுக்கு முன்னர் பிரான்ஸிலிருந்து வெளியான பாரிஸ் ஈழநாடு இதழில் நெஞ்சில் நிலைத்த நெஞ்சங்கள் தொடரில் சோவியத் தமிழ் அறிஞர் கலாநிதி வித்தாலி ஃபுர்ணிக்கா பற்றிய பதிவின் தொடக்கத்தில் எழுதியிருந்தேன்.

நெஞ்சில் நிலைத்த நெஞ்சங்கள் தொடர் பின்னர் அதே பெயரில் சிட்னியிலிருக்கும் எழுத்தாளர் மாத்தளை சோமுவின் தமிழ்க்குரல் பதிப்பகத்தினால் (1995 இல்) வெளியானது.

மறைந்த பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களை இத்தொடரில் எழுதும் பொழுது குறிப்பிட்ட மேற்கண்ட வாசகம்தான் நினைவுக்கு வருகிறது.

1976 முதல் அவர் மறையும் வரையிலிருந்த இலக்கிய நட்புணர்வுதான் இந்தப்பத்தியின் ரிஷிமூலம்.

பேராசிரியர் சிவத்தம்பியை முதல் முதலில் கொழும்பு விவேகானந்தா வித்தியாலயத்தில் 1972 இல் நடந்த பூரணி காலாண்டிதழ் வெளியீட்டு நிகழ்வில்தான் சந்தித்தேன். அந்த நிகழ்விற்கு அவர்தான் தலைமைதாங்கினார். அப்பொழுது அவர் தமது குடும்பத்தினருடன் பொரளை கொட்டா ரோட்டில் முன்னாள் நிதியமைச்சர் என். எம். பெரேராவின் வீட்டுக்கு அருகில் வசித்துவந்தார்.

மேலும் படிக்க ...

ரவி அல்லது (பட்டுக்கோட்டை) கவிதைகள்!

விவரங்கள்
- ரவி அல்லது (பட்டுக்கோட்டை) -
கவிதை
09 ஜூலை 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்



1. நிகர் செய்திடாத நியாயங்கள்.

வாய்விட்டழும் இவ்வேளையில்
வடித்த கண்ணீருக்கு
மதிப்பற்று கழிந்த நாட்கள் அவை.

நீங்கள் விரிந்து
நாங்கள் சுருங்கிய நரகமது.

சமன் செய்திடாத அசுரத்தன வீக்கத்தின்
புரையோடிய அவலம்.

விட்டு
வெறுண்டோடிய புலம்பெயர்தலின் ரண ஓலம்
இதயம் எட்டவில்லை ஒருபோதும்.

கூடிய நெருக்கடி கூத்தில்
மீளாய்வு செய்திடாத ஓட்டத்தில்
இதயம் தொலைத்த
இயந்திரங்களின்
சிதிலத்தில்
மகிழவில்லைதான்
சேர்மானமாகி இருப்பதால்.


காடும் மலையும்
காணக் கிடைக்காத ஏரியும்.
ஓடியாடிய நதிகளும்
அதில்
ஒட்டுறவாக இருந்த உயிர்களையும்
கொன்றழித்த
கொடூரத்திற்கு முன்
இவ்வழுகையும்
அவலமும்
குறைவுதான்
தனக்கு
மட்டுமென
இவ்வுலகை
நினைக்கும் வரை.

மேலும் படிக்க ...

டால்ஸ்டாயின் முகங்கள்: கார்க்கி – பகுதி 9 - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
09 ஜூலை 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எனது கவிதை வரிகளை அவரிடம் வாசித்து காட்டினேன்:

‘காளான்கள் இருக்கவில்லை

துவாரங்கள் மட்டுமே…

ஈரமுடன்,

காளான் மனம் வீசுவதாய்…’

‘நல்லது. மிக மிக நல்லது. நல்ல அவதானிப்பு’

திடீரென ஒரு குழிமுயல் எம்மை வெறித்து பார்த்து கொண்டிருப்பதைக் கண்டோம்.

பெரிதும் கிளர்ச்சியடைந்த அவரது கன்னங்கள் சிவப்பாய் மாறின. வாய்விட்டு கத்தினார். பின் என்னைத் திரும்பிப் பார்த்து வாய்விட்டுச் சிரித்தார். இச்சிரிப்பானது புத்தி பூர்வமானதாகவும் மிகுந்த மனித நேயம் கலந்திருப்பதாகவும் எனக்குப் பட்டது. என் உள்ளம் அவரைக் கட்டியணைத்தது.

இன்னும் ஒரு சமயம்: வானில் ஓர் பருந்து வட்டமிட்டது. திடீரென அது அசைவின்றி நின்றது. அதனது இறக்கைகள் மெதுவாக அசைந்தன அல்லது அசையாதிருந்தன - இப்போது பாய்வதா அல்லது பொறுத்திருப்பதா என்று நின்று, நிதானிப்பது போல. டால்ஸ்டாய் அவரது கரங்களைக் கண்ணுக்கு மேல் வைத்து உற்றுபார்த்து விட்டு கூறினார்: ‘திருட்டு நாய்… கோழிகளா உன் இலக்கு… வண்டிக்காரனைக் கூப்பிடுவோம்… அவன் பார்த்துக் கொள்வான்’

வண்டிக்காரனைக் கூப்பிட்ட சத்தத்தில் பருந்து பயந்து அவ்விடத்தை விட்டு அகன்றது.

மேலும் படிக்க ...

இலங்கையில் நடைபெறும் தமிழ் பண்பாட்டு – – அனைத்துலக மாநாட்டின் இரண்டாவது அமர்வு! - இக்பால் அலி -

விவரங்கள்
- இக்பால் அலி -
நிகழ்வுகள்
09 ஜூலை 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இலங்கையில் நடைபெறும் தமிழ் பண்பாட்டு –  – அனைத்துலக மாநாட்டின் இரண்டாவது அமர்வு   நுவரெலியாவில்   வெகுவிமர்கையாக நடந்தேறியது.     

தாஞ்சாவூர் அனைத்துலக பண்பாட்டு ஆய்வு மையம், தமிழ் நாடு திருநெறிய தமிழ் சைவ சமயப் பாதுகாப்பு பேரவை, இலண்டன் தமிழ் கல்வியகம், பிரான்சு உலக செம்மொழி தமிழ்ச் சங்கம் மற்றும் யாழ் பல்கலைக்கழக இந்து நாகரிகத்துறை ஆகியன இணைந்து நடத்தும் தமிழ் பண்பாட்டு – அனைத்துலக மாநாட்டின் முதலாவது அமர்வு   யாழ்ப்பாணம் பல்லைக்கழகத்தில்  30-06-2025  தேதி இம்பெற்றது. இரண்டாவது நுவரெலியாவில் உள்ள மாவட்ட செயலகத்தின் கேட்போர்  02-07-2025 தேதி   இடம்பெற்றது. 

மூன்றாவது அமர்வு  கொழும்பில் 06-07-2025 தேதியும் வரையும்    இடம்பெறவுள்ளதாக என்று தமிழ்நாடு திருநெறிய தமிழ் சைவ சமய பாதுகாப்பு பேரவையின் தலைவர் க. சசிக்குமார் தெரிவித்தார்.
 
இம்மாநாட்டில்  தென்னாபிரிக்கா, பிரான்சு, பிரிட்டன், சுவிட்சலாந்து நோர்வே, ஜெர்மனி, கனடா, மொரீசீயஸ், ரீ யூனியன், மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்து  பேராளர்கள், சான்றோர்கள் பெரும் மக்கள் பங்கேற்றார்கள். 

மேலும் படிக்க ...

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் இலங்கை எழுத்தாளர்களுக்காக நடத்திய இலக்கியப்போட்டியில் பரிசு பெற்ற நூல்களின் வாசிப்பனுபவப் பகிர்வு!

விவரங்கள்
- தகவல்: கிறிஸ்டி நல்லரெத்தினம் -
நிகழ்வுகள்
08 ஜூலை 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மெய்நிகர் அரங்கு – 13  ஜூலை 2025 – ஞாயிறு | Meeting ID: 881 2810 4953 | Passcode: 299798

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் இலங்கை  எழுத்தாளர்களுக்காக நடத்திய இலக்கியப்போட்டியில் பரிசு பெற்ற நூல்களின் வாசிப்பனுபவப் பகிர்வு!

மேலும் படிக்க ...

பண்ணைத்துறையின் பெயருக்கான காரணம் பற்றிய சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
ஆய்வு
08 ஜூலை 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

யாழ்ப்பாண இராச்சியத்தின் காலத்தில் முக்கிய துறைமுகங்களாக விளங்கியவை கொழும்புத்துறை , பண்ணைத்துறை ஆகிய துறைமுகங்கள். பண்ணைத்துறை என்பதற்கான பெயருக்கான காரணம் எதுவாக இருக்கும்? அண்மையில் வெளியான கட்டடக்கலைஞர் மயூரநாதனின் 'யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு' நூல் பற்றிய விமர்சனத்தில் கலாநிதி சிவ தியாகராஜா அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கின்றார்:

 ".... யாழ்ப்பாணக் கோட்டை இருக்கும் பண்ணை என்ற இடப்பெயர் அவ்விடத்தில் முற்காலத்திலிருந்த ஓர் உலகப்பண்ணையின் ( World Market ) பெயரின் எச்சமாகவே தோன்றுகின்றது."  

பண்ணை என்பது விவசாயம், பல்வகை மிருக வளர்ப்பு (கோழிப்பண்ணை, பாற் பண்ணை என)  ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதிகளைக்  குறிக்கப்பயன்படும் சொல். ஆங்கிலத்தில் Farm என்பார்கள். கலாநிதி சிவ தியாகராஜா கூறுவது போல் இவ்விதமான ஒரு பகுதி துறைமுகங்களுக்கு அருகில் இருப்பதில்லை. துறைமுகங்களுக்கு அருகில் பெரும் வர்த்தகச் சந்தைகள் இருப்பதுதான் வழமை.  

இங்கு தனது நூலுக்கான விமர்சனத்தில் உலகப்பண்ணை என்று குறிப்பிடுகின்றார்? World Market என்று குறிப்பிடுகின்றார். அதாவது உலகச்சந்தை இருந்தது என்னும் அர்த்தத்தில் பயன்படுத்துகின்றார். பண்ணையைச் சந்தை என்னும் அர்த்தத்தில் பாவிக்கின்றார். 

மேலும் படிக்க ...

கனடாவில் பெண்களுக்கான வதனம் இதழ் வெளியீடு! - சுலோச்சனா அருண் -

விவரங்கள்
- சுலோச்சனா அருண் -
நிகழ்வுகள்
07 ஜூலை 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


சென்ற சனிக்கிழமை 28-6-2025 ரொறன்ரோ அல்பியன் வீதியில் உள்ள திஸ்டில் நகர சமூக மையத்தின் பார்வையாளர் மண்டபத்தில் கனடாவில் இருந்து வெளிவரும் பெண்களுக்கும் இளையோருக்குமான வதனம் இதழ் - 6 வெளியிட்டு வைக்கப் பெற்றது. அமைதி வணக்கத்தைத் தொடர்ந்து பெரியோர்களால் மங்கள விளக்கேற்றி வைக்கப்பெற்றது. சிறுமிகளான பைரவி அருள்மாறன், லதிசா தயாளன் ஆகியோர் கனடிய தேசியகீதம், தமிழ்தாய்பண் பாடினார்கள். வரவேற்புரையை திருமதி கலைமகள் புஸ்பநாதன் நிகழ்த்தினார்.

மேலும் படிக்க ...

ஈழக்கவியின் பார்வையில் பிரமிள் கவிதைகள்! - கலாநிதி தி. செல்வமனோகரன் -

விவரங்கள்
- கலாநிதி தி. செல்வமனோகரன் -
நூல் அறிமுகம்
07 ஜூலை 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எல்லோரையும் ஆகர்ஷிக்கக்கூடிய இலக்கிய வடிவம் கவிதை, தமிழில் அதற்கு நீண்ட வரலாறு உண்டு. கவிதையாகவன்றி அர்த்த புஷ்டியுள்ள சமூக, தனிமனித பிரக்ஞையுள்ள ஒன்றாகவே கவிதை ஆரம்பத்தில் இருந்து வந்தாலும் காலதேச வர்த்த மானத்திற்கேற்ப அது தன்னைப் படிமலர்ச்சி செய்து கொள்கிறது. அறமாய், தத்துவமாய், பிரசார மொழியாய் கற்பனை யதீதமாய், உணர்வுகளின் குழம்பாய், வித்துவச் செருக்காய் எனப் பல்ரூப சுந்தரமாய் காட்சியளிக்கின்றது.

தமிழ்க் கவிதையை அழகுபடுத்தியதில் ஈழத்தவர்களுக்கும் கணிசமான பங்கு உண்டு. திருகோணமலையில் பிறந்து தமிழகத்தை வாழ்விடமாகக் கொண்டு கவிஞனாகவே வாழ்ந்து மறைந்து போன ஒருவரே பிரமிள் என்கின்ற தர்மு சிவராம். அவர் தனக்கு வைத்துக் கொண்ட பெயர்களோ அநேகம் மரபில் காலூன்றி புதிய முன்னகர்வுகளையும் புதுக்கவிதையாக்கத்தில் புதிய பாய்ச்சலையும் தந்தவர் பிரமிள். படிமங்களை அதிகம் பிரக்ஞை பூர்வமாகக் கையாண்ட சிலர் கருத்தியலையும் படிமங்களாக்கியவர். தனக்கேயான நவீன கவிதா மொழியையும் கவிதா வடிவத்தையும் உருவாக்கி சிறப்பாகப் பயன்படுத்தியவராவார். அவருடைய கவிதைகள் பெரும் பாலும் அகப்பிரக்ஞையின் வழி உருவான அதிதீவிரமான தூண்டுதலுக்கு ஏற்ப துலங்கலாக சொற்கள் வழி பயணித்து தன்னை யாவுமாக (சாங்கிய தரிசனத்தின் பிரக்கிருதி போல) விரித்துக் கொள்கின்றது. ஒளிச் சிதறல்களாய் எங்கும் பரவித் தன்னைக் கட்டவிழ்த்து கட்டவிழ்த்து விரிவும் ஆழமும் தேடிப் பயணிக்கிறது. அந்தப் பயணம் தான் பிரமிளின் அடையாளம் என்றாகிவிட்டது. தன் வாசகர்களாலும் ஏன் எதிர்ப் பாசறையாளர்களாலும் "கவிஞன்" என அங்கீகரிக்கப் பட்ட பிரமிளின் கவிதைகளை ஈழக்கவி நுண்ணிய உசாவல் செய்கிறார்.

மேலும் படிக்க ...

அஞ்சலிக்குறிப்பு: எழுத்தாளர் மெல்பேர்ண் மணி (திருமதி கனகமணி அம்பலவாணபிள்ளை) மறைந்தார் ! அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலச்சங்கத்தில் இணைந்திருந்தவர் ! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
06 ஜூலை 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அவுஸ்திரேலியா – மெல்பனில் எம்மத்தியில் வாழ்ந்த முன்னாள் ஆசிரியரும், மூத்த எழுத்தாளருமான திருமதி கனகமணி அம்பலவாண பிள்ளை ( மெல்பேர்ண் மணி ) அவர்கள் மறைந்துவிட்டார், என்ற துயரமான செய்தி அறிந்தவுடன், அன்னாரின் புதல்வி இசை ஆசிரியை திருமதி ரமா சிவராஜா அவர்களை தெடர்புகொண்டு அனுதாபமும், ஆறுதலும் தெரிவித்துவிட்டே, இந்த அஞ்சலிக்குறிப்பினை கனத்த மனதுடன் எழுதுகின்றேன்.

நான் உடல் நலம் குன்றியிருக்கும் சமகாலத்தில், தமது மகள், மருமகனுடன் என்னைப்பார்க்க வந்து ஆறுதல் சொன்னவர், இந்த இலக்கிய சகோதரி. அவர் பற்றி, இடம்பெற்ற ஒரு விரிவான ஆக்கம், கடந்த மார்ச் மாதம் நான் வெளியிட்ட யாதுமாகி ( இரண்டாம் பாகம் ) நூலிலும் வெளியாகியிருக்கிறது. முன்னர் ஊடகங்களில் அந்த ஆக்கம் வெளியானபோதும் அவர் அதனை வாசித்திருக்கிறார். மீண்டும் அந்தப்பதிவை எமது வாசகர்களுக்கு , ஒரு சில மாற்றங்களுடன் , வழங்குகின்றேன்.

தமிழ் எழுத்தாளர் விழா இயக்கத்தை 2001 ஆம் ஆண்டு ஆரம்பித்தபோதே, நூல்கள் தொடர்பான வாசிப்பு அனுபவப் பகிர்வு நிகழ்ச்சியையும் அதில் இணைத்துக்கொண்டோம். கடந்த பல வருட காலமாக இந்நிகழ்வு நடந்துவருகிறது.

எழுத்தாளர்கள் எவ்வளவுதான் எழுதினாலும் அவற்றை படிப்பதற்கு வாசகர்கள் இல்லையேல், எழுத்தாளர்கள் காணாமல் போய்விடுவார்கள். கலைஞர்களுக்கு ரசிகர்கள் எவ்வளவு முக்கியமோ, அவ்வாறே எழுத்தாளர்களுக்கும் வாசகர்கள் மிக மிக முக்கியம்.

மேலும் படிக்க ...

ஈழநாடு எஸ்.கே.காசிலிங்கம் அவர்களின் அமுத விழா மலர் வெளியீடு!

விவரங்கள்
- தகவல் - வி.ரி.இளங்கோவன் -
நிகழ்வுகள்
05 ஜூலை 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நிகழ்வு - சண்முகதாசன் நினைவுப் பேருரையும் நூல் வெளியீடும்!

விவரங்கள்
- தகவல் - வி.ரி.இளங்கோவன் -
நிகழ்வுகள்
05 ஜூலை 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

டால்ஸ்டாயின் முகங்கள்: கார்க்கி – பகுதி 8 - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
05 ஜூலை 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

டால்ஸ்டாய், இவ்வகை டால்ஸ்டாய்களை அறிந்தே இருந்தார்… ஒரு சமயம், ஒரு இளைஞர் Yasnaya Polyanaவில் வர்ணித்தார்: ‘வாழ்வானது எளிமையாக மாறியுள்ளது: –ஆன்மா தூய்மை நிறைந்ததாக மாறியுள்ளது - இது, டால்ஸ்டாயின் தத்துவத்தைப் பின்பற்ற தொடங்கியதிலிருந்துதான்’ என்றார்.

டால்ஸ்டாய் என்னிடம் குனிந்து முணுமுணுத்தார்: ‘போக்கிரி. அனைத்தும் பொய். ஆனால் என்னைச் சந்தோசப்படுத்துவதற்காகவும் இருக்கக் கூடும்…’

ஆகவே, பலரும் இதை முயல்வாராயினும், இறுதிக் கணிப்பில் அவர்கள் தோல்வியையே தழுவினர் எனலாம். அவருக்கு மகிழ்ச்சியைத் தரக்கூடிய எதை ஒன்றையும் முழுமையாய்ப் புரிந்ததாய் இல்லை.

ஆனாலும், என்னிடம், தமது வழமையான தலைப்புகளான-உலகளாவிய மன்னிப்பு, அண்டை வீட்டாரைக் காதலிப்பது அல்லது பரிசுத்த வேதாகமத்தை அல்லது உலகளாவிய உயரிய பௌத்தத்தைப் பற்றிக் கூறுவது – ஆகிய ஒன்றையும் என்னிடம் தொட்டார் இல்லை. ஏனெனில் மிக ஆரம்பத்திலேயே எனது ஈடுபாடுகள் குறித்து அவர் நன்கு அறிந்தவராய் இருந்திருக்கக் கூடும். ஆனால், இதனை மிக ஆழமான முறையில் நான் வரவேற்றிருக்கவே செய்தேன்.

பெண்கள் பொறுத்து அவர் பேசியவற்றை நான் மதித்தேன் இல்லை. காரணம் இப்பேச்சு, சில சமயங்களில் இயற்கைக்கு மாறாகவும் சற்றே பொய்மை கலந்ததாகவும் சில சமயம் மிக தனிப்பட்ட அந்தரங்க விடயங்களைத் தொடுவதாகவும் இருப்பதை நான் கண்டேன். யாரோ அவரை மிக ஆழமாகப் புண்படுத்தி இருக்க வேண்டும் என்றும் அக்காயத்தை அவர் மறக்கவோ மன்னிக்கவோ தயாராக இல்லை என்பதாகவும் நான் கருதினேன்.

மேலும் படிக்க ...

திருக்குறள் ஆய்வில் கி.ஆ.பெ.விஸ்வநாதம் அவர்களின் பங்களிப்பு! - முனைவர் சு.சோமசுந்தரி, ஆய்வறிஞர், உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை -

விவரங்கள்
- முனைவர் சு.சோமசுந்தரி, ஆய்வறிஞர், உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை -
ஆய்வு
05 ஜூலை 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

                                 - தமிழறிஞர் கி.ஆ.பெ.விஸ்வநாதம் -

முன்னுரை

தமிழில் முத்திரை பதித்த மூத்த தமிழறிஞர். பள்ளி சென்று கல்வி கற்காமலே கற்றவரை வியப்பிலாழ்த்தியவர். முந்தைய தலைமுறையினருக்கு செந்தமிழ்ப் பற்றினை ஊட்டியவர். முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விஸ்வநாதம் அவர்கள் திருச்சியைச் சார்ந்தவர். இவர் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்ப் போராளி ஆவார். தமிழுக்கு இவர்ஆற்றிய பணிகள் அளப்பரியன. 23 தமிழ் நூல்களை தமிழிலக்கிய உலகுக்கு வழங்கியுள்ளார்.

கி.ஆ.பெ அவர்களின் நூல்கள்

கி.ஆ.பெ அவர்கள் 1899ஆம் ஆண்டு திருச்சியில் பிறந்தவர். இவரது பெற்றோர் பெரியண்ணபிள்ளை, சுப்புலட்சுமி ஆவர். கி.ஆ.பெ.விஸ்வநாதம் அவர்கள் அறிவுக் கதைகள், அறிவுக்கு உணவு, ஆறு செல்வங்கள், எண்ணக்குவியல், எது வியாபாரம்?எவர் வியாபாரி?, எனது நண்பர்கள், ஐந்து செல்வங்கள், தமிழ் மருந்துகள், தமிழ்ச்செல்வம், தமிழின் சிறப்பு, திருக்குறள் கட்டுரைகள், திருக்குறள் புதைபொருள்-பாகம்1, திருக்குறள் புதைபொருள்-பாகம் 2, திருக்குறளில் செயல்திறன், நபிகள் நாயகம், நல்வாழ்வுக்கு வழி, நான்மணிகள், மணமக்களுக்கு, மாணவர்களுக்கு, வள்ளலாரும் அருட்பாவும், வள்ளுவரும் குறளும், வள்ளுவர் உள்ளம், வானொலியிலே ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.

மேலும் படிக்க ...

செங்கம்‌ சுப்பிரமணியர்‌ திருக்கோயில்‌ ! - முனைவர் பீ. பெரியசாமி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, டாக்டர் எம்.ஜி.ஆர். சொக்கலிங்கம் கலைக் கல்லூரி, ஆரணி, திருவண்ணாமலை- 632317, தமிழ்நாடு, இந்தியா, -

விவரங்கள்
- முனைவர் பீ. பெரியசாமி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, டாக்டர் எம்.ஜி.ஆர். சொக்கலிங்கம் கலைக் கல்லூரி, ஆரணி, திருவண்ணாமலை- 632317, தமிழ்நாடு, இந்தியா, -
ஆய்வு
05 ஜூலை 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஆய்வுச்சுருக்கம்

கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பர். எல்லா ஊர்களிலும் கோயில்கள் அமைந்திருக்கும். ஒவ்வொன்றும் ஒரு சிறப்பு பெற்றிருப்பதை நாம் கண்டிருக்கின்றோம். அந்த வகையில் குன்றெல்லாம் குடிகொண்டிருக்கும் முருகப்பெருமானின் அருள்வழங்கும் திருத்தலங்களுள் ஒன்று செங்கம் அடுத்த வில்வராணி எனும் கிராமத்தில் அமைந்துள்ள லிங்க சொருப சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இத்திருக்கோயிலுக்கு வருபவர்களின் 27 நட்சத்திரக்காரர்களின் அனைத்து தோஷங்களையும் விலக்கி எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்ந்திட சுப்பிமணியர் அருளாசி வழங்குகின்றார். இத்தலத்தை நட்சத்திரதலம் என்றும் நட்சத்திரக்குன்று என்றும் அழைக்கின்றனர்.

முக்கியச்சொற்கள்

வில்வராணி, முருகன், சுப்பிரமணியன், நட்சத்திரக்குன்று, நட்சத்திரத்தலம்    

முன்னுரை

செங்கத்துக்கு அருகில் வில்வராணி எனும் கிராமத்தில் மலையின் இடைபட்ட (நடுவில்) இடத்தில் சுப்பிரமணியர் திருக்கோயில் அமைந்துள்ளது. இதனை நட்சத்திரக்கோயில், நட்சத்திரக்குன்று என்றும் அழைக்கின்றனர். இங்கு வந்து முருகனை வழிபடுவோரின் சகல தோஷங்களும் விலகி வாழ்வில் அனைத்து நலன்களையும் பெறுவர் என்பது நம்பிக்கையாக உள்ளது. இதனை இக்கட்டுரையில் காணலாம்.

மேலும் படிக்க ...

பயணத்தொடர் - யப்பானில் சில நாட்கள் (6 ) காமகுரா அமிதா புத்தர்! - நடேசன் -

விவரங்கள்
- நடேசன் -
பயணங்கள்
05 ஜூலை 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

டோக்கியோவிலிருந்து கிழக்கே காமகுரா போகும் வழி கடற்கரைச்சாலை ஒரு பக்கம் கடற்கரை மறுபகுதியில் மலைத்தொடர்களைப் பார்க்க முடிந்தது. இந்த மலைத்தொடரின் மத்தியில் யப்பானின் முக்கிய ஃபூஜி மலை உள்ளது. இந்தியாவில் இமயமலைபோல், யப்பானிய மதச் சடங்குளிலும் இலக்கியத்திலும் ஃபூஜி மலை கருப்பொருளாக உள்ளது. தற்காலத்தில் வெளிநாட்டினரும் இங்கு செல்வதும் மலையேறுவதும் முக்கிய ஒரு விடயமாக உள்ளது.

நாங்கள் சென்ற இலையுதிர்காலத்தில் காலத்தில் பஸ்ஸில் போகும்போது பனிபடர்ந்த சிகரங்கள் மத்தியில் ஃபூஜி மலையை எங்களால் பார்க்க முடிந்தது . எரிமலையானதால் வெள்ளை பனி, மலை முகட்டிற்கு கொடுத்தகம்பிளித் தொப்பி போன்ற வடிவம் கவர்ச்சியானது. மலைச்சிகரம் பெரும்பாலும் மேகங்களால் மறைக்கப்பட்டு இருக்கும்.

அழகானதாக இருந்தபோதிலும் இந்த மலையை வருடத்தில் இரண்டு மாதங்கள் மட்டும் ஏற முடியும். மற்றைய காலத்தில் பாதுகாப்பிற்காக மற்றவர்களை அனுமதிப்பதில்லை என்றார். ஃபூஜி மலை மற்றைய மலைகள் போன்றது அல்ல. அது ஒரு எரிமலை கடைசியாக 300 வருடத்திற்கு முன்பாக பொங்கியது. நமது நாடுகளில் வானிலை அறிக்கையில், மழை வெயிலைக் காண்பதுபோல் தினமும் ஃபூஜி மலையின் நடத்தைகளை அறிவிப்பார்கள் . டோக்கியோவிற்கு அண்மையில் ஃபூஜி மலை இருப்பதால் மக்கள் உணவுகளை வாங்கி வைப்பதும், எரிமலையின் பொங்கலை எதிர்பார்த்து இருப்பதுமான விடயங்கள் நடப்பதாக ரிச்சாட் சொன்னபோது எரிமலையை மடியில் கட்டியபடியே வாழ்க்கைதான் டோக்கியோ மக்களுக்கென நினைக்கத் தோன்றியது.

எங்களுக்கு மலையேறும் எண்ணம் இல்லாதபோதிலும் ஃபூஜி மலை பற்றிய சுவையான விடயங்கள் அறிய முடிந்தது. பத்து மணி நேரத்தில், தான் மலைக்கு ஏறியதாகச் சொன்னார் ரிச்சாட் என்ற அந்த இளைஞர். மலையின் மேல் குடிசைகள் உள்ளதால் ஏறுபவர்கள் மலையின் பல இடங்களில் தங்கிச் செல்ல முடியும் . யப்பானில் அடிக்கடி சொல்லும் வசனம் உள்ளது: “ஒரு முறையாவது ஃபூஜி மலை ஏறாமல் விட்டால் நீ முட்டாள் ஆனால் , இரண்டாவது தடவை ஏறினால் அதை விட முட்டாள் “.

மேலும் படிக்க ...

அதிஷ்டக்காரரா? - ஶ்ரீரஞ்சனி -

விவரங்கள்
- ஶ்ரீரஞ்சனி -
சிறுகதை
05 ஜூலை 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

* ஓவியம் AI

கோர்ட், சூட் சகிதம் கூலிங்கிளாசுடன் காரிலிருந்து ஒய்யாரமாக இறங்கிய விமலனைப் பார்த்ததும், பக்கத்து வளவில் வியர்க்க விறுவிறுக்கப் புல் வெட்டிக்கொண்டிருந்த பாஸ்கரனின் கரங்கள் அவனையறிமாலேயே புல்வெட்டும் மெசினை நிறுத்தின.

“அடேயப்பா, பென்ஸ் எண்டால் பென்ஸ்தான். சொக்கான கார்! உங்கட பிஎம்டபிள்யூவுக்கு என்னாச்சு?” பாஸ்கரனின் கண்கள் அகல விரிந்தன.

“சும்மா, ஒருக்கா மாத்துவமெண்டு நினைச்சன். வாழ்க்கையை அனுபவிச்சு வாழோணும்!” சாவிக்கொத்தைத் தனது வலது கைச் சுண்டுவிரலில் சுழற்றியபடி, தோள்களைக் குலுக்கினான் விமலன்.

“குடுத்துவைச்சனீங்க,” என்ற பாஸ்கரன், “சொகுசான கார் மட்டும்தான் வாழ்க்கையெண்டு இல்லை” எனத் தனக்குள் முணுமுணுத்தபடி முகத்தை மறுபக்கம் திரும்பிக்கொண்டான். அங்கே, அவனின் பழைய ரொயாற்றோ கொரலா, அதன் நெளிந்த இடது பக்கம் இன்னும் திருத்தப்படாத நிலையில், கறள் கட்டிய முன்பக்கம் தெரியப் பரிதாபமாக நின்றிருந்தது.

புல்வெட்டும் இயந்திரத்தை அவன் மீளவும் இயக்கினான். அது பெருத்த ஒலியுடன், புற்களைத் தனக்குள் மீளமீள வாரிக்கொண்டது. வரிக்கணக்குச் செய்துகொடுத்து எப்படித்தான் விமலன் இப்படி உழைக்கின்றானோ - அவனுக்குள் கிளர்ந்த பெருமூச்சின் வெப்பம் அவனைத் தகித்தது. ஏற்கனவே தொந்தரவுசெய்து கொண்டிருந்த அவனின் முதுகுடன், இணைந்துகொண்ட அவனின் கனத்துப்போன தோள்களும் அவனைப் பெரிதும் இம்சைப்படுத்தின.

மேலும் படிக்க ...

டால்ஸ்டாயின் முகங்கள்: கார்க்கி – பகுதி 7 - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
03 ஜூலை 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஒருமுறை, அவரது Yasnaya Polyanaவிலிருந்து, அவரது ‘எளிய மனிதர்களில்’ ஒருவரோடு நான் பயணம் செய்ய நேரிட்டது. இந்த எளிய மனிதர் கூறினார்: ‘கடவுளே என்ன இது… எப்பேர்ப்பட்ட மனிதர்… கண்டிப்பும்… நேர்த்தியும்… சீற்றமும்’. மேலும் கூறினார்: ‘ஏன். அவர் ஓர் அனார்க்கிஸ்ட்தான்’.

இந்த எளிய மனிதர் ஒரு மிகப்பெரிய தொழிலதிபராகவும், மிக பருத்த வயிற்றைக் கொண்டவராயும், பார்க்க பசிய இறைச்சியின் நிறம் கொண்ட தடித்த முகத்தைக் கொண்டவராகவும் இருந்தார்.

ஏன் இவர் டால்ஸ்டாயை ஒரு அனார்க்கிஸ்டாக காண்பதில் திருப்தி கண்டார்? இக்கேள்வியை ஆழ்ந்து அலசும் போதே, ரஷ்ய ஆன்மாவில் உள்ளடங்கும் ஆழ்ந்த ரகசியங்களையும் நான் கற்கக் கூடியதாக இருந்தது.

யாரொருவரையும் திருப்திபடுத்துவது என்றால், அது டால்ஸ்டாய்க்கு, கைவந்த கலையாக இருந்தது. ஒரு புத்திபூர்வமான பெண்ணை விட இதனை அவர், கச்சிதமாக நிறைவேற்றினார். பலதரப்பட்ட வட்டங்களுடன் கைகோர்த்தவர், அவர். ஒரே மேசையில் இவர்களுடன் தேநீர் அருந்தியவர்.

மாபெரும் கோமகன் நிக்கலாய், வீட்டுச் சாயம் பூசுபவன் இல்யா, ஒரு புரட்டஸ்தாந்து மதப்பிரிவைச் சார்ந்த பட்சுக், ஒரு இசைக்கலைஞன், ஒரு கோமகள், ஒரு கவிஞன்-இவர்கள் அனைவரையும் அவர் வெறித்து பார்க்க வைத்து விடுவார். Lao-Tse இன் (சீன தத்துவஞானி) தத்துவம் குறித்து அவர்களுக்கு விளக்க உரையாற்றி கொண்டிருப்பார். பல்வேறு இசைக்கருவிகளைக் கொண்டு ஒரு சேர்ந்திசை (Orchestra) செய்கையை இவர் ஒருவராக நிகழ்த்துவதாக, அது காட்சி தரும். ஒரு ட்ரம்ப், ஒரு ட்ரம், ஒரு புல்லாங்குழல், ஒரு எக்கார்டியன்-அனைத்தையும் இவர் ஒருவராகவே வாசித்து கொண்டிருப்பார்.

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. கம்பராமாயணத்தில் ஆயிரம் என்ற எண்ணுப்பெயரின் சிறப்புகள்! - முனைவர் க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி(சுழல்-II), மீனம்பாக்கம், சென்னை 600061, -
  2. மீண்டும் பாப்பா பாரதி - மாவை நித்தியானந்தன் -
  3. புகலிட அன்னையே! நீ வாழ்க! - வ.ந.கிரிதரன் -
  4. 'தமிழ்க் கவியுலகில் தனிக்கொடி ஏற்றினார்!' - - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண், அவுஸ்திரேலியா -
  5. இந்து லிங்கேஸ் பக்கம்!
  6. பயணத்தொடர்: யப்பானில் சில நாட்கள் (5) - இரவில் டோக்கியோ - நடேசன் -
  7. டால்ஸ்டாயின் முகங்கள்: கார்க்கி – பகுதி 6 - ஜோதிகுமார் -
  8. வாசிப்பும், யோசிப்பும் : எழுத்தாளர் எஸ்.கே.விக்னேஸ்வரனின் 'மூன்று மழைக்கால இரவுகள்' சிறுகதை! - வ.ந.கிரிதரன் -
  9. கவிதை: காத்துக் கிடக்கிற மண்! - வ.ஐ.ச.ஜெயபாலன் -
  10. டால்ஸ்டாயின் முகங்கள்: கார்க்கி – பகுதி 5 - ஜோதிகுமார் -
  11. திறனாய்வாளர் ஈழக்கவியின் 'பேராசிரியர் எம்.ஏ.நுஃமானும், மொழியியலும்' நூல் பற்றிய சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -
  12. பயணத்தொடர்: யப்பானில் சில நாட்கள் (4) - மீஜி ஷின்டோஆலயம் - நடேசன் -
  13. எழுத்தாளரும், சமூக, அரசியற் செயற்பாட்டாளருமான திருமதி வள்ளியம்மை சுப்பிரமணியம் மறைவு!
  14. கட்டடக்கலைஞர் இ. மயூரநாதனின் 'யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு (1621 - 1948) நூல் , நல்லூர் ராஜதானி பற்றிய கருத்துகள்! - வ.ந.கிரிதரன் -
பக்கம் 1 / 108
  • முதல்
  • முந்தைய
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • அடுத்த
  • கடைசி