வ.ந.கிரிதரன் பாடல்- நினைவுக் குருவிகள் உன்னைச் சுற்றியே!

வ.ந.கிரிதரன் பாடல்கள் - https://www.youtube.com/@girinav1 - செயற்கை நுண்ணறிவு மூலம் இசை, குரல் கொடுக்கப்பட்ட எனது பாடல்கள். கேட்டு மகிழுங்கள். உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். பாடல்கள் பிடித்திருந்தால் 'சான'லை மறக்காமல் subscribe செய்து கொள்ளுங்கள். உங்கள் ஆதரவு இச் 'சான'லின் வளர்ச்சிக்கு நன்கு உதவும். நன்றி.
நினைவுக் குருவிகள் உன்னைச் சுற்றியே!
( இசை & குரல் - AI Suno ஓவியம் - AI)
பாடலைக் கேட்டுக் களிக்க
நினைவுக் குருவிகள் உன்னைச் சுற்றியே
சிறகடிக்க நான் என்னை மறக்கின்றேன்.
உன் அன்பின் வலிமை ஆட்கொள்ள
என் நிலை குலையும் ஆனால்
இன்பத்தேன் குடிக்கும் தேனி ஆவேன்
அன்பே .அது போதும் எனக்கு.
நினைவுக் குருவிகள் உன்னைச் சுற்றியே
சிறகடிக்க நான் என்னை மறக்கின்றேன்.
எதிர்பார்ப்பு அற்றது தூய அன்பு.
எதிர்பார்ப்பில் தூய்மை எங்கே கூறு?
இருப்பில் இதுபோல் ஓருறவு வரப்பிரசாதம்.
இல்லையா அன்பே நீயே கூறு.


போபால் நகரத்திலிருந்து நாற்பது கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சாஞ்சியில், மன்னன் அசோகனால் கி.மு. 3-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பௌத்த தூபி அமைந்திருக்கிறது. இதைச் சுற்றிப் பல தூபிகள் உள்ளன இந்த தூபி புத்தரின் எச்சங்களுடன் கட்டப்பட்டதோடு, அதன் ஆடம்பரமான கூம்பு (கிரீடம் போன்ற அமைப்பு) பார்வையாளர்களை கவர்கிறது. தூபியின் நான்கு பக்கங்களிலும் வாசல்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாசலிலும் வரலாற்றுப் பின்னணியுடன் கூடிய சிற்பங்கள், குறிப்பாகப் புத்தரின் ஜாதகக் கதைகள், பிறப்பு முதல் பரிநிர்வாணம் வரை உள்ள நிகழ்வுகள் மற்றும் அசோக மன்னரின் வாழ்க்கைச் சம்பவங்கள் கல்லில் காவியமாகச் செதுக்கப்பட்டுள்ளன.
வெள்ளத்தின் வேதனை போக்கிடவே வா
தனது, 23ம் வயதில் சேதுபதி தமிழாசிரியனாய் இருந்த பாரதியை, ஜி.சுப்ரமணிய ஐயர் அழைத்து செல்கின்றார் (பத்திரிகை தொழிலில் ஈடுபடுத்தும் பொருட்டு). இரண்டு வருடங்களில், அவனோ புதுமையாக வலம் வருகின்றான். அவனது வியக்க வைக்கும் மொழிபெயர்ப்பு திறனும், பெண்கள் பொறுத்தும் சாதிய கீழ்நிலையில் ஜீவிக்க கூடியவர்கள் பொறுத்தும், இன ஒற்றுமை பொறுத்தும் அவனுள் கொந்தளிக்கும் எண்ணக்கருக்கள் அறிஞர்களையும் திகைக்க வைக்கின்றது. ஆங்கிலேயரின் ஆட்சியின்பால் சமரசமற்ற வெறுப்பணர்வை உமிழும் அவன், அவர்களின் ஆதிக்கத்தின் சூட்சுமங்களை கண்டுணரும் கூர்மதி படைத்தவனாகவும் இருக்கின்றான். மக்கள் சைன்யத்தை வாஞ்சையுடன் நெருங்கும் அவன், தனது எழுத்தை அவர்களுக்காகவே அர்ப்பணிக்க முடிவு செய்கின்றான். இவ்வளவுமாய் இல்லை என்றால், இல்லை என்பதே உறுதியான விடையாகின்றது. கைலாசபதியின் வார்த்தைகளில் கூறுவதானால்: “அவனது பார்வை பாயாத இடமே இல்லை” எனலாம்.




“கௌதம், படிப்படி என்று தொண்டைத் தண்ணி வற்றுகிற அளவுக்குக் கத்துறேனே! கொஞ்சமாவது இந்த அம்மா மீது கரிசனை இருக்கா?”


நினைவுகளைத் தேடித் தேடி ‘திகம்பர நினைவுக’ளாகவும், ‘கலாபன் கதை’களாகவும், ‘காலக் கனா’ மற்றும் ‘குருடர்க’ளாகவும் எழுதி தொகுப்புகளாக்கிய பின்னரும், மனத்தின் ஆழவும், அதன் பக்கங்களில் ஒட்டிக்கொண்டும் கிடந்து நினைவுகள் இன்னும் வெடித்தெழவே செய்துகொண்டிருக்கின்றன. அவை, திகைக்க வைக்கும்படி முக்கியமான, என்னை உருவாக்கிய மூலாதாரமான சம்பவங்களாகவும் இருக்கின்றன. அவை, எவ்வாறு இதுவரை காலத்தில் எனக்குள் தவறிப்போய்க் கிடந்தனவென நானறியேன். அதனால் மேலும் ஒரு நினைவுக்குளிப்பை நடத்த நான் தீர்மானித்தேன். அந்த எழுச்சி முகிழ்ந்த கணம் இது.
சமூகம் என்பது கருத்துகளின் கூட்டுச் சுவாசம். ஒரு தலைமுறை எழுந்து நிற்க வேண்டுமெனில், அது கேள்விகளால் ஊட்டமளிக்கப்பட வேண்டும்; விமர்சனத்தால் செம்மையாக்கப்பட வேண்டும்; உண்மையால் வழிநடத்தப்பட வேண்டும். ஆனால் இன்றைய காலத்தில், சில அமைப்புகள் மற்றும் குழுக்கள், சமூக மாற்றத்தின் பெயரில் அதிகார அரசியலை உள்-வட்டமாக நிறுவி, வெளியில் இருந்து வரும் நேர்மையான விமர்சனங்களையும் கூட பகைமை என சித்தரித்து ஒடுக்குகின்றன. இந்த அதிகாரக் கட்டமைப்பு வெளியில் தெரியாத நிழல் போல செயல்பட்டாலும், அதன் தாக்கம் சமூகத்தின் ஆழ வேர்களையே சிதைக்கும் அளவுக்கு வலிமையானது.



'அமெரிக்கா' குறுநாவல்



நடையில் நின்று உயர் நாயகன் இராமனின் பெருமை குறித்து கூறும் கம்பராமாயணத்தில் அறிவியல் செய்திகளும் கூறப்பட்டுள்ளன. இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், பூச்சியியல், வானவூர்தியியல், மரபியல், வானியல், கணிதவியல், உளவியல் போன்ற பல துறை சார்ந்த கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன. அவற்றுள் மருத்துவயியல் சார்ந்த கருத்துக்களை இக்கட்டுரையில் நாம் ஆராய்வோம்.
- இலங்கைத் தமிழர் பிரச்சனை பற்றி சமூக, அரசியல் ஆளுமைகளுடன் உரையாடுவதிலுள்ள சிக்கல் என்னவென்றால் ஒவ்வொருவரும் தத்தமது அனுபவம், அறிவு ஆகியவற்றின் அடிப்படையில் பதிலளிப்பர், அத்துடன் தம் நலன்களை மையமாக வைத்தும் அவர்கள் பதில்கள் இருக்கும். அவரகளை ஆட்டி வைக்கும் சூத்திரதாரிகளின் நலன்களையும் அவர்கள் பதில்கள பிரதிபலிக்கும். ஆனால் செயற்கை நுண்ணறிவுடன் உரையாடும்போது இந்தப்பிரச்சனை இல்லை. செயற்கை நுண்ணறிவின் பதில்கள் உணர்ச்சியின் அடிப்படையில் அமைந்தவை அல்ல. அறிவின், கிடைக்கப்பெறும் உண்மைகளின் அடிப்ப்டையில் மட்டுமே இருக்கும். இது மிகவும் ஆரோக்கியமானதாக அமையும். இத்னால் பொதுப்பிரசை ஒருவரிடத்தில் இலங்கைத் தமிழர்கள் பிர்ச்சனை பற்றி எழும் கேள்விகள் பல உள்ளன. இவற்றுக்கான செயற்கை நுண்ணறிவின் பதில்கள் எவையாகவிருக்கும் என்பதை அறிவதன் நோக்கமே அதனுடன் நடத்திய, நடத்தவிருக்கும் உரையாடல்களின் முக்கிய நோக்கம். செயுற்கை நுண்ணறிவை நான் எந்திரன் என்று இங்கு குறிப்பிடுவேன். இவ்வுரையாடல்களை முழுமையாகச சந்தாதார்களுக்கான என் முகநூல் பக்கத்தில் வாசிக்கலாம் .
[ இலங்கைத் தமிழர் பிரச்சனை பற்றி எந்திரனுடனோர் உரையாடல் (1) - நேர்காணல் கண்டவர் எழுத்தாள்ர் வ.ந,.கிரிதரன் -


பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









