எழுத்தாளர் சோமகாந்தன் வெளியிட்ட நூல்களிலோ அல்லது அவர் பற்றிய கட்டுரைகளிலோ அவரது 'களனி நதி தீரத்திலே' என்னும் இந்த நாவல் பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்ததாக எனக்கு நினைவிலில்லை. ஒரு வேளை நான் தவற விட்டிருக்கலாம். நான் அறிந்த வரையில் இந்நாவல் நிச்சயம் இதுவரை நூலாக வெளியாகவில்லையென்றே கருதுகின்றேன். ஆனால் அவரது நாவல்களில் இதுவொரு முக்கியமான நாவலாகவே எனக்குப் படுகிறது. 20.8.1961 தொடக்கம் 29.101.961 வரை மொத்தம் 11 அத்தியாயங்கள் வெளியாகியுள்ளன. 1- 4 வரையிலான அத்தியாயங்களுக்குத் தலைப்புகள் இடப்பட்டிருக்கவில்லை.
கதைச்சுருக்கம்: கதை சொல்லியும் அவன் நண்பன் நடராஜனும் பால்ய காலத்திலிருந்து நண்பர்கள். இருவரும் எஸ்.எஸ்.சி சித்தியடைந்து கொழும்பில் வேலை கிடைத்துச் செல்கின்றார்கள். ஒன்றாகத் தங்கியிருக்கின்றார்கள். இருவரும் களனி கங்கை நதிக்கரையில் றோசலின் என்னும் அழகியொருத்தியைச் சந்திக்கின்றார்கள். அதன் பின் ஒரு நாள் வேலைக்குச் செல்லும் நண்பர்கள் வழக்கமாகச் செல்லும் ட்ரொலி வருவதற்கு நேரமெடுக்கவே 'ராக்சி' பிடித்துச் செல்லத்தீர்மானிக்கிறார்கள். றோசலின் அன்று புதிய வேலை கிடைத்துச் செல்வதற்காக 'ட்ரொலி'யை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றாள். அவளுக்கும் நேரமாகிவிடவே இவர்களிடம் தனக்கும் 'ராக்சி'யில் இடம் தர முடியுமா என்று கேட்கின்றாள். இவர்களும் சம்மதித்து அவளுக்கு உதவுகின்றார்கள். அன்று முதல் மூவரும் நண்பர்களாகின்றார்கள்.
அவர்களுக்கிடையில் நட்பு வளர்கிறது. அவள் இருவருடனும் சகஜமாகப் பழகி வருகின்றாள். ஆனால் இருவரும் ஒருவருக்கொருவர் தெரியாமல் அவள் பேச்சு, செயல்களை வைத்து அவள் மீது காதல் கொள்கின்றார்கள். ஒரு சமயம் கதை சொல்லி உடல் நலம் கெட்டு ஊருக்குச் சென்று திரும்புகையில் நண்பன் நடராஜன் றோசி மேல் காதல் கொண்டிருப்பதை அறிந்து அவன் மேல் ஆத்திரமடைகின்றான். றோசியும் தன்னை ஏமாற்றி விட்டதாகக் கருதி அவள் மீதும் கோபமடைகின்றான்.
றோசி காரணமாக நண்பர்களுக்கிடையில் மோதல் முற்றி கதை சொல்லி நண்பன் நடராஜனைத் தாக்கவே , நடராஜனும் ஆத்திரமடைந்து அவனைவிட்டு விலகி, றோசியின் வீட்டுக்கே சென்று விடுகின்றான். உண்மையில் அதுவரை றோசி அவர்களுடன் சாதாரணமாகவே பழகி வந்திருக்கின்றாள். நடராஜன் அவளிருப்பிடத்துக் சென்ற பின்பே அவனது தன்மீதான தீவிர காதலை உணர்ந்து அவனைக் காதலிக்கத்தொடங்குகின்றாள்.
அத்தியாயம் இரண்டு: அன்னரின் தீர்மானம்!
"பொதுவாக மாலைநேரம் ஜாரி பிரித்து கால்பந்து விளையாடுகிறோம்" என்று சுந்தரம் கூறியதை சங்கர் சேர் சொல்லவும் அவர் கேட்டிருந்தார். சங்கர் "இப்ப , இந்த உடம்பை தூக்கிக் கொண்டு விளையாட முடியிறதில்லை . இருந்தாலும் சில நேரம் விளையாடுகிறேனஂ" எனஂறிருக்கிறார் . தற்போது அவர் இவர்கள் கூறுகிற ' வெள்ளி ' விளையாட்டுக் கழகத்தினஂ தலைவராக இருக்கிறார் ." ஒருநாள் கடலுக்கும் போவோம்... " என்று கருணா கூற அவருக்கு விளங்கத் தானஂ இல்லை . ஆனால் , சங்க காலத்தில் காட்டுக்கு போவது போல இதுவும் ஒன்றாக இருக்கலாம் எனத் தோன்றியது. வவுனியாவில் நாய்களை பழக்கிக் கொண்டு வேட்டைக்குப் போகிறார்கள் . தமிழர் மத்தியில் நிலவி இருக்கிற அவ்வித பழக்க வழக்கங்கள் கிராமங்களில் தொடர்கின்றன .
கருணாவிடம் "டேய் ,நான் தான் உங்களைக் குழப்புறவன் . நீ என்னைக் குழப்பித் தள்ளுறாயே , பெளர்ணமியிலே கடல் பொங்கிறது . தொழில் செய்ய போறதில்லையே நீ எப்படி ?" என புரியாமல் கேட்கிறார் .
"அப்படி....போகாதபடியால் தான் வள்ளங்கள் கரையிலே இருக்கின்றன சேர் . அவிழ்த்தால் , வள்ளம் கவனம் என்று மட்டும் சொல்வார்கள்"
அப்பாவியாக "கரையிலே இருந்து நூறு மீற்றர் தூரத்திற்குள்ளே தானே போகிறோம் . எங்களை கடல் ஒன்றும் செய்யாது" என்கிறான் .
இளங்கன்று பயம் அறியவில்லை . விஞ்ஞானமும் அறியாது . ஜனநாயகத்தைத் தெரிந்து கொண்ட அரசாங்கங்கள் என்ன ? , புத்திசாலிகளாகவா இருக்கினஂறன. மக்களுக்கு கைவிலங்கைப் போட்டு வருத்திக் கொண்டு தானே இருக்கின்றன ? . அமெரிக்கா இந்திய புராணக் கதைகளைக் கொப்பி அடிதஂது 'சுப்பர்மனிதர் , அந்த மனிதர் இந்த மனிதர்..என விஞஂஞான திரைப்படங்கள் என ரீல் விட்டு எடுத்து பணத்தைக் குவித்துக் கொண்டு இருக்கிறது.
மொழி என்பது இவ்வுலகில் உள்ள மனித உயிர் அனுபவங்களை, நினைவுகளைப் பதிவிட, பரிமாற்றம் செய்து கொள்ளப் பயன்படும் கருவி அகும். மொழி என்ற ஒன்று இங்கு இல்லையெனில் மனித உயிர்கள் இருக்கும் ஆனால் மனித சமூகங்கள், வரலாறு இருக்காது. ஆக மொழி என்பது மானுடா்களை அவா்களது சமூகத்துடன் நிலத்துடன் பிணைக்கும் கருவி என்பது புலப்படுகின்றது. மொழி என்பதன் வழியேத் தான் சமூகம் மற்றும் இலக்கியம், வரலாறு தோற்றம் பெறுகிறது. இப்பின்புலத்தில் பல்லவா்காலத் தமிழ் மொழியின் நிலைப்பாட்டினை அறிய வேண்டும். காஞ்சியின் ஆட்சியைத் தொடா்ந்து, தமிழகத்தின் வடபகுதியையும் ஆள்கையில், பல்லவா்கள் அரசின் ஆட்சி நிருவாகத்திற்குச் சமஸ்கிருத மொழியைப் பயன்படுத்தினாலும், ஆளும் மக்களிடையே தம் ஆதிக்கத்தைச் செலுத்தும் நோக்கிலும் ஆளப்படுகின்ற மக்களின் ஏற்பு நோக்கியும் தமிழை அணைத்துக் கொண்டு, “பல்லவத் தமிழ் கிரந்தம்” என்னும் தமிழ் எழுத்து வடிவத்தை உருவாக்கித் தந்தனா். இவ்வாறாகப் பல்லவா் காலத் தமிழ் மொழி எழுத்தளவில் மட்டுமின்றி, இலக்கண அளவிலும் பல மாற்றங்களுக்கு உள்ளானது. வடமொழிச் சொற்கள் பல புகுந்ததன் விளைவாக தமிழ் மொழி நெகிழ்வுற்றது. சொல் வளம் செறிவடைந்தது என்றால் அது மிகையற்றதே. அவ்வகையில், திருவாசக இலக்கியத்தினைக் கொண்டு, பல்லவா்க காலத் தமிழ்மொழியின் நிலைப்பாட்டினை ஆராய்வதாக இவ் இயல் அமைந்துள்ளது.
பல்லவா் காலம்
பல்லவா் ஆட்சி தென்னிந்தியாவில் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு தொடங்கி கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு வரையிலான காலப்பகுதி வரை நிலைத்து இருந்தது.பல்லவா்கள் இலங்கையை அடுத்துள்ள மணிபல்லவத் தீவிலிருந்து வந்தவா்களாகவும்,தொண்டை மண்டலத்துப் பழங்குடிகள் என்றும், பஹலவா் எனும் பாரசீ மரபினா் எனவும் பல்வேறு கருத்துகள் வரலாற்று ஆதாரங்களுடன் குறிப்பிடப்பட்டாலும், பல்லவா்கள் தென்னிந்தியா்களே என்றும் சில வரலாற்றிஞா்கள் எடுத்துரைத்துள்ளமையும் இங்கு எண்ணத்தக்கது.
Iசென்ற கட்டுரை தொடர் எதிர்பார்த்த வாதப்பிரதிவாதங்களைப் பரந்தளவில் கிளப்பவே செய்திருந்தது. புலம்பெயர் அரசியலின் தன்மை-தாக்கம், இவை பொறுத்த பல்வேறு எண்ணப்பாடுகள் கட்டுரைத் தொடரில் பரவலாக முன்வைக்கப்பட்டிருந்தன. இவற்றில் ஒன்று முழங்காலையும், மொட்டைத் தலையையும் தொடர்புபடுத்த இக்கட்டுரை தொடர் முயற்சிக்கின்றதா என்று அழுத்தமான முறையில் தன் கேள்வியை உள்ளடக்கத் தவறவில்லை. அதாவது, ஹைலன்ஸில் மேற்கொள்ளப்பட்ட சிதைவுகளுக்கும், வடமாகாண சபையினது செயல்திறனின்மையால் எழுந்த சூனியமாக்கல் நிகழ்வுகளுக்கும் இடையே இருக்கக்கூடிய தொடர்புகளையும் இதன் பின்னணியில் இருந்து இயக்கியிருக்க கூடிய எந்தவொரு புலம்பெயர் அரசியலின் தீவிர முகத்தையும் பொறுத்தே இக்கேள்விகள் முன்வைக்கப்பட்டிருந்தன. காரணம் சென்ற கட்டுரை தொடர் மேற்குறித் த கேள்விகளையும் அதற்குரிய காரணங்களையும் ஆராய முற்பட்டதே அன்னாரின் கட்டுக்கடங்கா கோபத்துக்கு காரணமாக அமைந்து போனதாய் இருக்கக்கூடும்.
ஆனால் கேள்விகளை திராணியுடன் கேட்டுக்கொள்ள தெரிந்திராத எந்த ஒரு சமூகமும் நாளடைவில் இடிந்து குட்டி சுவராகப் போய்விடும் என்பது ஏற்கனவே நாம் பார்த்த ஒன்றுதான். இந்தப் பின்னணியிலேயே எழுப்பப்பட்ட கேள்விகள் பொறுத்து கனதியான எதிர் தர்க்கங்களை முன் வையாது, வெறுமனே இது முழங்காலுக்கும் மொட்டைதலைக்கும் முடிச்சு போடப்படும் முயற்சி என அவசரமாய் ஆரூடம் சொல்லும் போக்கும் இடம்பெற்றிருக்கின்றது. ஆனாலும் முழங்காலுக்கும் மொட்டைதலைக்கும் முடிச்சு போடும் நிகழ்வென்பது வரலாற்றில் சற்று ஆழமாக பார்க்கத்தக்கதுதான்.
அண்மையில் பொது ஊடகங்களில் வெளிவந்த விளையாட்டுத்துறை சார்ந்த இரண்டு நிகழ்வுகளும், விண்வெளி சார்ந்ததொரு நிகழ்வும் பலரின் கவனத்தையும் பெற்றிருந்தது. ஒன்று இங்கிலாந்திற்கும் ஸ்பெயினுக்கும் நடந்த உலகக் கிண்ணத்திற்கான பெண்கள் உதைபந்தாட்ட இறுதிப் போட்டி, மற்றது பதினெட்டே வயதான பிரக்ஞானந்தாவின் உலகக் கிண்ணத்திற்கான சதுரங்க ஆட்டப் போட்டி, மூன்றாவது சந்திரனின் தென்துருவத்தில் தரையிறங்கும் போட்டி. இந்த மூன்று நிகழ்வுகளும் விளையாட்டுத்துறை மற்றும் விண்வெளித்துறையில் ஆர்வம் உள்ளவர்களை மட்டுமல்ல, ஏனைய பொதுமக்களின் கவனத்தையும் பெரிதாக ஈர்த்திருந்தன.
பெண்கள் உலகக் கிண்ணப் போட்டியில் ஸ்பெயின் அணியினர் வெற்றிக் கிண்ணத்தைப் பெற்றாலும், அவர்களின் இந்த வெற்றிக்குப் பின்னால் ஒரு சோகக்கதை இருந்தது. சிட்னியில் நடந்த இறுதிப் போட்டியில் இங்கிலாந்தும் ஸ்பெயினும் மோதிக் கொண்டன. ஸ்பெயின் அணியின் தலைவியான 23 வயதான ஒல்கா காரமோனா ஒரு கோலைப் போட்டு ஸ்பெயினுக்கு வெற்றியைத் தேடித்தந்திருந்தார். ஸ்பெயின் வெற்றியைக் கொண்டாடிய போது, இந்த வெற்றிக்குக் காரணமாக யார் அந்தக் கோலை அடித்து வெற்றியை ஸ்பெயின் நாட்டுக்குப் பெற்றுக் கொடுத்தாரோ, அவரிடம் ஒரு சோகச் செய்தி பகிரப்பட்டது, அது என்னவென்றால் அவரது தந்தையார் திடீர் மரணத்தைத் தழுவிக் கொண்டார் என்பதேயாகும்.
உன்
பட்டு மேனியைத்
தொட்டுத்தொட்டு ரசித்தேன்.
நாளும் உன் அழகை ரசித்தேன்.
நீராடி நீ வந்தால்
நீர்த்திவலைகள் உன் மேனியிலே
முத்து முத்தாய்ப் படிந்திருந்து
நர்த்தனமாடும்
அழகை ரசித்தேன்.
அதிலே
காலைக் கதிரவனும் மையல் கொண்டு
கண்சிமிட்டும் போதினிலே
நாணிச்சிவந்திருக்கும் உன் மேனியழகில்
என்னை மறந்தேன்.
இவர் இலங்கையில் நிலவிய போர்ச்சூழலுக்குப் பலியாகியவர்களில் ஒருவர். ஆனால் இவரைப்பற்றித் தமிழ் மக்கள் பொதுவாக அதிகம் அறிந்திருக்கவில்லை. அதற்கு முக்கிய காரணம் இவர் தன்னை அதிகமாக மக்கள் மத்தியில் வெளிப்படுத்தாம் இயங்கிக்கொண்டிருந்ததுதான். இவர் ஒரு சட்டத்தரணி. மனித உரிமைகளுக்காகப் போராடிய சட்டத்தரணி. இவர் நினைத்திருந்தால் மிகவும் இலகுவாக இலண்டனில் வாழ்ந்து செல்வச் செழிப்பில் மிதந்திருக்கலாம்.ஆனால் இவர் அப்படிச் செய்யவில்லை.
சமூக,அரசியல், மனித உரிமை மற்றும் பெண்ணியச் செயற்பாட்டாளரான சாந்தி சச்சிதானந்தம் அவர்களின் நினைவு தினம் ஆகஸ்ட் 27. அவரது பிறந்த தினமும் ஆகஸ்ட் 14. மொறட்டுவைப் பல்கலைககழகத்தில் கட்டடக்கலைத் துறை பட்டதாரி. விழுது என்னும் அரச சார்பற்ற நிறுவனத்தின் ஸ்தாபகர். 'இருக்கிறம்' என்னும் மாதச்சஞ்சிகையை அந்நிறுவன்ம் மூலம் வெளியிட்டவர். ஆங்கிலம் , தமிழ் மொழிகளில் இவரது சமூக, அரசியல் மற்றும் பெண்ணியம் சார்ந்த கட்டுரைகள் பல வெளியாகியுள்ளன.
'பெண்களின் சுவடுகளில்' (தமிழியல் வெளியீடு) , 'வறுமையின் பிரபுக்கள்' (மன்று வெளியீடு) , 'தடைகளைத் தாண்டி' (விழுது வெளியீடு) மற்றும் 'சரிநிகர் சமானமாக' (விழுது வெளியீடு) என்னும் நூல்களை எழுதியவர். இவரது தந்தையாரான வல்லிபுரம் சச்சிதானந்தம் வழக்கறிஞர். லங்கா சமசமாஜக் கட்சி சார்பில் 1970 இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் நல்லூரில் போட்டியிட்டவர். இவரது கணவரான அமரர் மனோரஞ்சன் ராஜசிங்கம் அவர்களும் ஒரு சமூக, அரசியற் செயற்பாட்டாளராக இயங்கியவரே.
வேந்தனார் குழந்தைப்பாடல்கள் 38 உம், மூன்று தனித்தனி நூல்களாக , குழந்தைகளின் வயதிற்கேற்றபடி மூன்று பாகங்களாக வெளியிடப்பட்டுள்ளன.இப் பாடல்கள் அனைத்தும் இசைவடிவிலும் கொடுக்கப் பட்டுள்ளன. இவை அனைத்தும் 'நூலகம் இணையத்தளத்தில்' உள்ளன. (www.noolaham.org இல் aavanaham.org உள்ளன.)
இப்பாடல்களில் ஏழு எட்டு பாடல்கள் ,கடந்த 70 வருடங்களாக இலங்கைத் தமிழ் சிறுவர் பாடசாலை பாடப் புத்தகங்களில் வெளிவந்து கொண்டுள்ளன. ( அம்மா, பாட்டி , எங்கள் வீட்டுப்பூனை , புள்ளிக்கோழி , மயில்,கூண்டிற்கிளி, அணில் , உதவி , ஒழுக்கம் மற்றும் சில பாடல்கள்...) வேந்தனாரின் குழந்தைப் பாடல்கள் 38 உம் , குழந்தைகள் தாமாகவே சிந்தித்து , உணர்வுடன் பாடுவதாக அமைந்துள்ளன. தூய, இனிய, எளிய தமிழில் , குழந்தைகளின் உள்ளத்தில் அன்பு , கருணை , பாசம் , பற்றுப் போன்ற உணர்வுகளை விதைக்கக் கூடியதாக இப் பாடல்கள் அமைந்துள்ளன.
அம்மா , பாட்டி , ஆசைமாமா, நண்பி போன்ற உறவுகளை பூனை , மயில்,கோழி , குயில்,அணில் , மான், கிளி போன்ற உயிரினங்களை பந்தடிப்போம், ஊஞ்சல் ஆடுவோம், இளநீர் குடிப்போம் , கரும்பு தின்போம் போன்ற செயற்திறன்கொண்ட பாடல்களை நிலா , மல்லிகைப் பூந்தோட்டம் , வாழை , கீரிமலை, பண்ணைப்பாலம் போன்றவற்றை உதவி , தொண்டு , கால் இழந்த ஏழை, கண்பார்வையற்ற ஏழை போன்ற , குழந்தைகள் உள்ளத்தில் கருணையை ஊட்டும் பாடல்களை நாவலர், பொன்.இராமநாதன் போன்ற பெரியார் பற்றிய பாடல்களை நாட்டில் அன்பு வேண்டும் , இளமைப்பருவம் போன்ற நாட்டுணர்வுமிக்க பாடல்களைக் கொண்டதாக , பல துறைகளையும் சார்ந்த 38 குழந்தைப் பாடல்கள் , குழந்தை மொழியாக, குழந்தைகளுக்கு வழங்கப் பட்டுள்ளன.
லண்டனில் ‘விம்பம்’ கலை இலக்கிய அமைப்பினூடாக குறும்பட விழாக்கள், ஓவியப் போட்டிகள், மலையக இலக்கியம், சமகால நாவல், சிறுகதை, கவிதை இலக்கியங்கள் குறித்த விமர்சன நிகழ்ச்சிகள் என நீண்டகாலமாக பயணித்து வருகின்றமை மிச்சிறப்பான விடயமாகும்.
விம்பத்தின் முக்கிய அமைப்பாளரான ஓவியர் கே.கே.கிருஷ்ணராஜா அவர்கள் தனது தாராள மனத்துடனும், மனித நேயத்துடனும் முன்னெடுத்துச் செல்லும் இத்தகைய பணி பெரிதும் பாராட்டுக்குரியன.
அந்த வகையில் கடந்த பத்தொன்;பதாம் திகதி லண்டன் ஈஸ்ற்ஹாம் பகுதியில் அமைந்த ரிறினிற்ரி மண்டபத்தில் ஒன்பது பெண் படைப்பாளிகளின் நூல்களின் விமர்சன அரங்கை ‘விம்பம்’ ஏற்பாடு செய்திருந்தது. முழுநாள் நிகழ்வாக இடம்பெற்ற இந்த நூல்களின் அறிமுகம், விமர்சன நிகழ்வு சமகால இலக்கியங்களை அறிந்து கொள்ளவும், அவற்றைப் புரிந்து கொள்ளவும், புரிந்தவற்றை பகிர்ந்து கொள்ளும் களமாக அமைந்திருந்தது.
இலங்கையில் அமிர்தலிங்கம் அவர்கள் எதிர்க்கட்சித்தலைவராக இருந்த காலப்பகுதியில், அவரது உரைகளுக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் வழங்கின. இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக அப்போது ஒரு தமிழர் எதிர்க் கட்சித்தலைவராக தெரிவாகியிருந்தார். அவரது நாடாளுமன்ற உரைகளை சபாநாயகர் ஆனந்த திஸ்ஸ டீ அல்விஸின் துணைவியாரும் பார்வையாளர் கலரியில் அமர்ந்திருந்து செவிமடுத்து , அமிர் அவர்களுக்கு பாராட்டு கடிதங்களும் எழுதியிருக்கிறார்.
ஒரு தடவை வெளிவிவகார அமைச்சர் ஏ. ஸி. எஸ். ஹமீது தொடர்பாக ஏரிக்கரை இல்லம் ( Lake House ) வெளியிட்ட ஒரு செய்தி பாரதூரமான சர்ச்சைகளை உருவாக்கிவிட்டது. நாடாளுமன்றிலும் விவாதிக்கப்பட்டது. குறிப்பிட்ட பத்திரிகையின் ஆசிரியர் சிங்கள இனத்தைச் சேர்ந்தவர். அவரை நாடாளுமன்றம் அழைத்து பகிரங்கமாக மன்னிப்பு கோர வைத்தது. அதனைக் கண்டித்து, அந்தச் சிங்கள சிரேஷ்ட ஊடகவியலாளருக்காக குரல் கொடுத்தவர் அமிர்தலிங்கம். அவர் மூவினத்தையும் சேர்ந்த ஊடகவியலாளர்களிடம் நன்மதிப்பினைப் பெற்றிருந்தவர்.
1.
கதை சொல்லும்போது உம் உம் கொட்ட வேண்டும்.
சுவாரஸ்யம் அவருக்கு இருக்காது.
சிறு குறும்புகளெனினும் கைத்தடி
என் முதுகைப் பதம் பார்க்கும்
அக்கா வலிக்கு ஒத்தடம் கொடுப்பாள்.
அம்மா உள்ளுக்குள் அழுவாள்.
அப்பா தன் கண்டிப்பை விடுவதாயில்லை.
அக்காவுக்குத் திருமணம் ஆயிற்று.
கதை சொல்ல முடியவில்லை.
பேரன் கிடைத்தான்.
அவனும் சாதுர்யமாக உம் கொட்டிக் கொண்டே தூங்குவான்.
அப்பாவுக்கும் உள்ளூர மகிழவே...
ஒருநாள் பேரனிடமிருந்து உம் வரவில்லை.
அவனின் முதுகைப் பதம் பார்த்துவிட்டது கைத்தடி.
அக்கா கோபத்தில் வெளியேறிவிடடாள்.
அம்மா உள்ளுக்குள் அழுது தீர்த்தாள்.
கதைச்செல்ல அப்பாவுக்கு ஆள் கிடைக்கவில்லை.
சுவருடன்,மரங்களுடன்,
பூக்களுடன்
பேசி இறந்துபோனார்.
Website: Stem-Kalvi | Email: STEMkalvi@gmail.com
இச்செயற்றிட்டத்தின் ஆரம்ப கட்ட நடவடிக்கைகளைப் பற்றி இக்கட்டுரை பேசுகிறது. ஆரம்ப பாடசாலைகளில் மாணவர்களின் வாசிப்பும், வாசிப்புத்திறனும் குறைந்திருப்பதாக அண்மையில் இலங்கையில் யூனிசேப் (UNICEF) நிறுவனம் செய்த ஆய்வொன்று தெரிவித்திருந்தது. இதையடுத்து ஸ்டெம் கல்வி தன்னார்வத் தொண்டு நிறுவனம் இதன் அடிப்படையில் புதிதாக இளம் மாணவர்களுக்காக ஒரு வாசிப்புத் திட்டம் ஒன்றை ஆரம்பித்திருக்கிறது.
இது குறித்து ஸ்டெ ம் கல்வி தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் இயக்குனர் கலாநிதி குமாரவேலு கணேசன் பின்வருமாறு குறிப்பிட்டார்.
"அண்மையில் யூனிசேப் நிறுவனத்தால் இலங்கையில் நடாத்தப்பட்ட 3ஆம் வகுப்பு மாணவர்களின் வாசிப்புத்திறன் பற்றிய ஒரு ஆய்வில் தமிழ் பிரதேசங்கள், முக்கியமாக வடமாகாணம், மிகவும் பி ன்தங்கி ய நிலையில் இருந்ததை நாம் எல்லோரும் அவதானித்தோம். வடமாகாணத்தில் 16% ஆன 3ம் வகுப்பு மாணவர்களும், கிழக்கு மாகாணத்தில் 25% ஆன 3ம் வகுப்பு மாணவர்களுமே அவர்களின் வயதுக்கேற்ற வாசிப்புத்திறனைக் கொண்டுள்ளதாக இவ்வறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. 3ம் வகுப்பு தமிழ் மாணவர்களின் வயதிற்கேற்ற வாசிப்புத்திறன் வடக்கு கிழக்குக்கு வெளியே தமிழர்கள் அதிகம் வாழும் மத்திய மாகாணத்தில் 11% ஆகவும், தென் மாகாணத்தில் 5% ஆகவும், ஊவா மாகாணத்தில் 12%ஆகவும், சப்பிரகமுவா மாகாணத்தில் 19% ஆகவும் காணப்படுகின்றது. மேல் மாகாணத்தில் கூட சிங்கள மாணவர்களின் வாசிப்புத்திறன் 52% ஆகக்காணப்படும்போது தமிழ் மாணவர்களின் வாசிப்புத்திறன் 30% ஆகவே காணப்படுகின்றது. இக்குறைபாட்டை கூடிய விரைவில் நிவர்த்தி செய்யாவிடில் எமது இளம் சமுதாயம் திறமையாக வாசிக்க முடியாத ஒரு எதிர்கால சந்ததியை உருவாக்கி விடும்.
நூலை வாசிக்க
சிறுவர்களுக்கான 1000 புத்தகங்களை உருவாக்கும் இலக்குடன் Stem-Kalvi செயற்பட்டு வருகிறது. நீங்களும் இந்தத் திட்டத்தில் இணைந்துகொள்ளலாம். தொடர்புகொள்வதற்கு: STEMkalvi@gmail.com இந்தப் புத்தகங்கள் இலவசமானவை, இவற்றை stemkalvi.org/books என்ற வலைத்தளத்தில் பார்வையிடலாம். உங்களுக்குத் தெரிந்த சிறுவர்களுடன் சேர்ந்து வாசிக்கலாம். பின்னூட்டமிடலாம்."
சந்திரயான் - 3 வெற்றிகரமாகச் சந்திரனின் தென் துருவத்தில் இறங்கியதன் மூலம் அப்பகுதியில் இறங்கிய முதலாவது நாடு என்னும் பெருமையினை இந்தியா பெற்றுள்ளது. இது இந்தியாவின் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான 'இசுரோ'வுக்குக் கிடைத்த வெற்றி மட்டுமல்ல. இந்தியாவுக்குக் கிடைத்த வெற்றி மட்டுமல்ல. மானுட குலத்துக்கே கிடைத்த வெற்றி. வாழ்த்துகள்.
முன்னுரை
புதினமோ, கதையோ, சிறுகதையோ எதுவாயினும் அது, தான் தோன்றிய காலத்தில் வாழ்ந்த சமுதாயத்தைப் பற்றியதாக இருக்கும். ‘நெருப்புத் தடயங்கள்’ என்றும் புதினங் காட்டுஞ் சமுதாயம் யாது என்பதையும் அதன் பின்புலம் யாது என்பதையும் ஆராய்வதே இவ்வியலின் நோக்கம்.
இலக்கியமும் சமுதாயமும்
இலக்கியங்கள் யாவும் சமுதாயத்தில் நடந்த அல்லது நடக்கின்ற நிகழ்ச்சிகளைச் சுவைபடக் கூறுவனவாகும். சமுதாயத்தின் ஒரு கால கட்டத்தில் நிகழ்ந்த அல்லது நிகழுகின்ற நிகழ்ச்சிகளைக் காட்டும் ஒரு சமுதாயப் படங்காட்டும் கருவி என்று கூடச் சொல்லலாம்.
“மனிதர்கள் வாழ்க்கையில் கண்டவை, அவர்கள் கண்டு அனுபவித்தவை, உடனே கவர்ச்சி ஊட்டுபவை, நிலையாக நின்று கவர்ச்சி ஊட்டுபவை எவையோ, அவைகளைப் பற்றிச் சிந்தித்தவை, சிந்தி;த்து உணர்ந்தவை இவைகளைப் பற்றி அறிவிப்பதே இலக்கியமாகும்”1 என்னும் ஹட்சனின் கூற்று ஈண்டு நினைக்கத்தக்கது.
மனிதன் சமுதாயத்தில் கண்டதையும், அனுபவித்ததையும் வைத்துக் கொண்டே இலக்கியங்கள் படைக்கிறான். ஆகவே, மனிதனையும், சமுதாயத்தையும் அறிய இலக்கியம் நமக்கு உதவுகின்றது. காலத்திற்கேற்றவாறு சமுதாயமும் இலக்கியமும் மாறுகின்றன. சமுதாயமும் இலக்கியத்துள் பொதிந்து வைக்கப்பட்டிருக்கும். எனவே, “இலக்கியம் ஒரு சமுதாய நிலையம்”2 என்பார் கூற்று சாலப் பொருந்துவதேயாகும்.
- அறிவித்தலைத் தெளிவாகப் பார்க்க படத்தை ஒரு தடவை அழுத்தவும். -
ஓடியே ஒளிவதைத் தவிர்ப்போமேதவறைச் சுட்டிக் காட்டிட வேண்டுமே.
தப்பைத் தட்டிக் கேட்டிட வேண்டுமே.
இவற்றை செய்யாது இருப்போரே
இவ்வுலகில் அதிகம் பேராவார்.
அறம் பிழைக்குது நாளுமிங்கே.
அதை தடுத்திட வருவாரில்லை.
மறம் கொண்டே இயங்கிடும்
மனிதர் இன்றெம்மிடை இல்லையே.
வீட்டினுள் வீரம்பேசிடுவர் பலர்.
வெளியில் அநீதி கண்டு ஒதுங்கிடுவர்.
நாட்டினில் இவர்போல் பலர் உளதால்
நாளும்பல தப்புகள் நடக்குதுவிங்கு.
அடுத்தவர்க்கு நடக்கும் அநீதி
அதைக் கண்டும்காணாது செல்வர்.
அடுத்தது தமக்கும் நடக்கு மெனவிவர்
அறியாது இருப்பதே கொடுமையடா.
வருமுன் காப்பது முறமையன்றோ.
வந்தபின்அழுதுதானென்ன பயன்?
ஒருமுறை சிந்தித்துப் பார்ப்போமே.
ஓடியே ஒளிவதைத் தவிர்ப்போமே.
மலையக தமிழ் மக்கள் தம்மை இந்தியர்கள் என்று அழைத்துக் கொண்டதால்......( அ ) 1948ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் பிரஜா உரிமை பறிப்பு சட்டம் ஒன்றை கொண்டுவந்து பிரஜா உரிமையையும் வாக்கு உரிமையையும் பறித்து அவர்களை நாடற்றவர் ஆக்கி அவர்கள் அனைவரும் இந்தியாவுக்கே போய்விடவேண்டும் என்று கோஷமிட்டார்கள். இந்திய வம்சாவழி மக்கள் இடதுசாரிகளுடன் சேர்ந்து இந்த நாட்டின் அரசாட்சியை கைப்பற்றி விட கூடும் என்று அச்சம் அப்போது எழுந்தது.
( ஆ ) 1964ஆம் ஆண்டு சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தி இந்த மக்களின் பத்து பேரில் 7 பேர் இந்தியாவுக்கு போய்விடவேண்டும் என்று ஒப்பந்தம் செய்து ஏழு இலட்சம் பேரை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்தார்கள்.
( இ ) 1945ஆம் ஆண்டு இரண்டாம் உலக மகா யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த தருணத்தில் கொழும்பு துறைமுகத்தின் மீது குண்டு வீசப்பட்ட போது கொழும்பு புறக்கோட்டை தமிழ் வர்த்தகர்கள் அனைவரும் தமது கடைகளை மூடிவிட்டு பாதுகாப்புக்காக இந்தியா சென்றுவிட்டனர் . இதனால் நாட்டில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டது. " இவர்கள் இவ்விதம் நெருக்கடியான நேரத்தில் நாட்டை விட்டு ஓடியவர்கள் , நாட்டுப் பற்று அற்றவர்கள் என்றும், அவர்களை இந்தியாவுக்கு அனுப்பி விடவேண்டும் என்றும் " அன்றைய காலகட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினரும் நிதி அமைச்சராக இருந்தவருமான ஜே. ஆர். ஜெயவர்த்தன பாராளுமன்றில் உரையாற்றியமை பாராளுமன்ற பதிவு புத்தகத்தில் பதிவாகியுள்ளது.
- ஓவியம் - செயற்கை அறிவு (AI) -
அன்று காலையில் புறப்படும்போது சூரியன் வரவில்லை. என்றாலும் மழை வரும் என்று காலநிலை அறிக்கையில் இருக்கவில்லை. ஆனாலும் வழமையான அதி எச்சரிக்கையுடன் குடையைக் கொண்டு போங்கள் என்று மனைவி தனது மடிக்கக் கூடிய கடல் நீல நிறக் குடையைத் தந்து விட்டாள். நான் மறுத்தும் கேட்கவில்லை. இப்போதே நீங்கள் ஊகித்திருப்பீர்கள் நான் குடையை மறந்து விட்டு வரப்போகிறேன் என்று. உண்மைதான். எனவே புதிய திருப்பங்களிலாத இந்தக் கதையை இப்போதே மூடி வைத்து விட்டாலும் உங்களுக்கு நேரம் மிச்சம்தான். இலகுவாக மறந்து விட்டு விடக்கூடிய அல்லது தொலைத்து விடக்கூடிய பொருட்கள் என்று அகில உலகத்துக்கும் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தினால் அதில் முதல் இடத்தில் இருக்கக்கூடியது குடைதான் என்று நினைக்கத் தோன்றுகிறது. மேகம் மூடிக் கொண்டிருக்க மழை என்று கொண்டு போவோம். பிறகு சூரியன் சிரித்துக் கொண்டே வரும். அன்றைக்கு பஸ் தரிப்பிடத்திற்கு நடந்த அந்த பதினைந்து நிமிடங்களில் ஒரு துளிதானும் மேலிருந்து விழவில்லை. பிறகு வெய்யில் வந்தாலும் அதுக்கு கொண்டு போன குடையைப் பிடிக்கவும் முடியாது. அதுவும் இந்தக் குளிர் தேசத்தில் வெயிலை ஆனந்தமாகத் தோலில் அள்ளிக் கொள்ள நினைக்கும் எவரும் வெயிலுக்கு குடை பிடிக்கும் யாரையும் பைத்தியங்கள் என்று எண்ணி விடலாமல்லவா?
அன்று மாலை வேலை முடிந்து நகரத்தில் பஸ் ஏறியபோது கிட்டத்தட்ட ஆசனங்கள் எல்லாம் நிரம்பியிருந்தன. கொண்டு போயிருந்த நாவலொன்றை காலையிலேயே பஸ்ஸில் யன்னல் வழி வந்த நல்ல காலைச் சூரிய வெளிச்சத்தில் சர சரவென்று பல பக்கங்களை வாசித்து விட்டிருந்தேன். இப்போது மிகுதியை இந்த மங்கலான சாயங்கால வெளிச்சத்தில் வாசிப்பது அவ்வளவு நல்லதாகப் படவில்லை. கண் பார்வையிலும் சில நாட்களாகப் பிரச்சினை ஒன்று ஏற்பட்டு சிறிய சிகிச்சையும் செய்திருந்ததுதான் காரணம்.
எட்கர் ஆலன்போ (செயற்கை அறிவு, AI, உருவாக்கிய ஓவியம்) -
முந்தைய நாள் மாலையில் மாநாட்டுக்காகச் செய்த ஏற்பாடுகள் என் நரம்புகளுக்குச் சற்று அதிகம்தான். எனக்கு மிக மோசமாகத் தலையை வலித்தது, தூங்க வேண்டும் போல இருந்தது, மாலையில் வெளியே செல்லலாம் என்று நான் நினைத்திருந்தேன். ஆனால் முடிவை மாற்றி விட்டேன். அதற்குப் பதிலாக லேசாக இரவு உணவைச் சாப்பிட்டு விட்டுத் தூங்கப் போகலாம் என்று நினைக்கிறேன். என்னைப்போல் எளிய இரவு உணவு சாப்பிடும் எண்ணம் இல்லை என்று என் மனைவி ஒரு வேளை உங்களிடம் கூறலாம். நான் மூன்று அல்லது நான்கு ‘சீஸ் பை’ சாப்பிட்டு இருக்கலாம். அத்துடன் நிறைய மது அருந்தி இருந்தேன், ஐந்து குப்பிகள். நான் ஏற்றுக் கொள்கிறேன் அது குறைந்த அளவில்லை.
நான் இரவு உணவை உண்டு விட்டு மறுநாள் காலையில் சற்று நேரம் வரை தூங்கலாம் என்ற நம்பிக்கையுடன் உறங்கச் சென்றேன். உடனடியாகத் தூங்கி விட்டேன். ஆனால் நான் நினைத்ததைப்போல் இரவில் நன்றாகத் தூங்க முடியவில் லை. நான் தூங்கி அரை மணி நேரம் ஆகி இருக்காது, முன் கதவிலிருந்து அழைப்பு மணி சத்தமாக ஒலித்தது. யாரோ பொறுமை இல்லாமல் கதவைத் தட்டினார்கள் ஒரு நிமிடம் கழிந்திருக்கும் நான் கண்களைத் தேய்த்துக் கொண்டிருந்தேன். என் மனைவி மூக்கிற்கு நேராகக் குறிப்புச் சீட்டு ஒன்றை நீட்டினாள். மிகவும் நெருங்கிய மருத்துவ நண்பரான பானனரிடமிருந்து அந்தச் சீட்டு வந்திருந்தது. “நண்பரே என்னை சாந்தியுங்கள்’ என்று அந்தக் குறிப்பு சொன்னது. “எங்களுக்கு உதவுங்கள், எங்களுடைய அதிர்ஷ்டம் அருங்காட்சியகத்தின் இயக்குனர் இறுதியில் பதப்படுத்தப்பட்ட மம்மியைச் சோதித்தறிய எங்களை அனுமதித்திருக்கிறார். நான் சொல்வது உங்களுக்குப் புரியும் என்று நினைக்கிறேன். அதைப் பிரிக்க எனக்கு அனுமதி இருக்கிறது. சில நண்பர்கள் மட்டுமே உடனிருப்பார்கள். நீங்களும் தான், நீங்களும் சேர்க்கப்பட்டு இருக்கிறீர்கள்” என்றிருந்தது. மம்மி இப்பொழுது என் வீட்டில் இருக்கிறது. இன்று இரவு 11 மணிக்கு நாம் அதைத் திறக்கலாம் என்றும் இருந்தது.