பதிற்றுப்பத்தில் சேரநாட்டு வளம் - முனைவர்.ம.சியாமளா, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை (சுழற்சி - 2), குரு நானக் கல்லூரி (தன்னாட்சி) சென்னை. -

முன்னுரை
சங்க இலக்கியத் நூல்களான எட்டுத்தொகையில் ஒன்று பதிற்றுப்பத்து ஆகும். 'ஒத்த பதிற்றுப்பத்து’ என்ற அடைமொழி கொண்ட பதிற்றுப்பத்து சேரர் மன்னர்களின் வாழ்க்கையையும், அந்நாட்டு மக்களின் பழக்க வழக்கங்களையும் படம்பிடித்துக் காட்டுகிறது. புறப்பொருள் பற்றிய செய்திகளைத் தொகுத்துரைப்பது அகவற்பாக்களால் ஆனது. புறநானூறுக்கும், பதிற்றுப்பத்துக்கும் ஒரு வேற்றுமை உண்டு. முடி மன்னர் மூவரையும், வேளிர் முதலிய பிறரையும் பற்றிய பாடல்களின் தொகுதி கொண்டது புறநானூறு. ஆனால் பதிற்றுப்பத்தோ சேரமன்னர்களையே பற்றிய பாடல்களின் தொகுதி எனலாம். அத்தகைய சேரநாட்டின் வளம் குறித்து ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
பதிற்றுப்பத்து
பத்துப் பத்துப் பகுதிகளைக் கொண்ட நூலாதலின் இது 'பதிற்றுப்பத்து' என்று பெயர் பெறலாயிற்று. ஒவ்வொரு பத்தும் ஒவ்வொரு புலவரால் ஒவ்வொரு சேர மன்னரைக் குறித்துப் பாடப் பெற்றமையின் இந்நூல் பத்துப் பத்துப் பகுதியாகக் கொள்ளத்தக்கது. இதிலுள்ள பத்துப் பத்துகளும் 'முதற்பத்து’, ’இரண்டாம் பத்து’ என்று எண்ணால் பெயர் பெற்றுள்ளன. தொகுத்தவர் தொகுப்பித்தவர் பற்றி யாதொரு செய்தியும் அறிய இயலவில்லை ஒவ்வொரு பாட்டும் இறுதியில் துறை. வண்ணம், தூக்கு, பெயர் என்பவற்றைப் புலப்படுத்தும் பழங்குறிப்புகள் உள்ளன.
ஒவ்வொரு பத்தின் இறுதியிலும் அப்பத்தைப் பாடினார் புலவர். அதன் பாட்டுடைத் தலைவர், அவர் செய்த அரும் பெருஞ் செயல்கள் புலவர்க்கு அவர்கள் அளித்த பரிசில் முதலிய செய்திகளைக் குறிப்பிடும் பதிகம் உள்ளது. இப்பதிகங்கள் ஆசிரியப்பாவில் தொடங்கி, கட்டுரையாக முடிவு பெறுகின்றன. இவை சாசுலங்களில் கனைப்பெறும் மெய்க்கீர்த்திகளைப் போன்ற அமைப்பை உடையன.
சேரநாட்டு வளம்
சேரநாடு பொதுவாகச் சிறந்த வளம் பெற்ற நாடு. இருப்பினும் அந்நாட்டில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய நான்கு நிலத்துப் பொருளும் ஒருங்கே விளைந்து மலிந்திருந்தது என்பதை இரண்டாம் பத்தில் குமட்டூர்க் கண்ணனார் குறிப்பிடுகின்றார்.


சிந்தனை மலர்ச்சிக்கான பாதையைக் காட்டிய சோக்ரடீஸ் இன் அறிவுத் தேடல் இங்கு அலசப் பட்டுள்ளது. ஒழுக்க விசாரணைகளில் மிகுந்த கவனம் செலுத்திய போதும் அரசியலில் சோக்ரடீஸ் போதிய அளவு ஆர்வம் காட்டவில்லை. எனினும் அவருடைய சீர்திருத்தத் திட்டத்தில் அரசியலுக்கும் இடம் இருந்தது. நாட்டின் பொதுச் சேவைகளை அவர் வேண்டுமென்றே புறக்கணித்தார் என்ற குற்றச்சாட்டிலும் உண்மை இருக்கவில்லை. நாட்டுப் பற்றில்லாதவர் எனும் குற்றச்சாட்டும் அவர் மீது இல்லை. ஆனால் தமது மெய்யியல் ஒழுக்கவியல் போதனைகளில் அவர் தம்மை முழுமையாக ஈடுபடுத்தியிருந்தார். நடைமுறை வாழ்க்கையோடு தொடர்புடைய பிரச்சினைகளுக்கும் அவர் பதில் தேடினார். சோக்ரடீஸ் தமது சிந்தனைகளை எழுத்து வடிவில் தரவில்லை. எழுதுவதில் அவருக்கு நம்பிக்கையோ ஆர்வமோ இருக்கவில்லை. அவர் காலத்தில் அறிஞர்கள் பலரிடம் இருந்தது போல் நூலகங்களும் அவரிடம் இருக்கவில்லை. பிளேட்டோ, அரிஸ்டோட்டில், எபிக்கூரஸ் முதலானவர்கள் நடத்தி வந்தது போன்ற கல்விக் கூடங்களும் அவருக்குச் சொந்தமானவையாக இருக்கவில்லை. பொதுமக்கள் கூடும் சந்தை, பாதை ஓரம், விளையாட்டரங்கு அல்லது நண்பர்களின் வீடு போன்ற இடங்களில்தாம் அவருடைய கல்விச்சாலைகளாளவும் சிந்தனைக் கூடங்களாகவும் விளங்கின. பொதுவாக அவருடைய உரைகள் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் மீதும், மக்களின் சிந்தனை மாற்றங்கள் மீதும் அக்கறை கொணடவையாக இருந்தன. அதேவேளை அவ்வப்போது மெய்யியலாளர்களோடும் அரசியல் வாதிகளோடும் கலைஞர்களோடும் அவர் கருத்துப் பரிமாற்றங்கள் செய்துள்ளார். அவருக் கென்று மிக நெருக்கமான தோழர்களும் சீடர்களும் இருந்தனர் இவ்வாறு சோக்ரடீஸ் இன் சிந்தனை மலர்ச்சிக்கான பாதையை நூலாசிரியர் விரிவாக விபரித்துச் செல்கின்றார். ஐந்து பக்கங்களில் இது நீண்டு செல்கின்றது.
சந்திரனில் ‘நீலப்பிசாசு’ என்று சமீபத்தில் ஊடகங்களில் வெளிவந்த செய்தியை வாசித்த போது, பலரும் பதட்டப்பட்டார்கள். மனிதர்களைச் சந்திரனில் குடியேற்ற அமெரிக்கா முயற்சி செய்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அங்கு பிசாசு குடிகொண்டிருக்கிறதா என்ற பயமும் ஒருபக்கம் எழுந்தது. இது உண்மையா, சந்திரனில் பிசாசு இருக்கிறதா? என்றெல்லாம் கேள்விகள் கேட்கத் தொடங்கிவிட்டார்கள். எட்டாம் வகுப்பில் என்னிடம் கல்வி கற்கும் சில மாணவர்களுக்கும் இந்த சந்தேகம் இருந்ததால், இந்தக் கேள்வியை எழுப்பியிருந்தனர். மேலை நாட்டவருக்கும் இந்தப் பேய், பிசாசுகளில் நம்பிக்கை இருப்பதால்தான், கலோவீன் தினத்தைப் பிரமாண்டமாக இங்கே கொண்டாடுகின்றார்கள். சின்னப் பிசாசா அல்லது பெரிய பிசாசா? எப்படி இந்த நீலப்பிசாசு சந்திரனுக்கு வந்தது?
எமது படகு வுஸ்பேர்க் (Wurzburg) என்ற நகரத்துக்குச் செல்லும்போது அங்கு எனது சகோதரன் பல வருடங்களாக இருப்பதால் அவனைச் சந்திக்க நினைத்திருந்தேன். ஆனால், அவன் அன்றைய தினம் வேலை – அவன் வேலை இடம் வைத்தியசாலை என்பதால் விடுமுறை பகலில் எடுக்க முடியாது என்றபோது நான் வுஸ்பேர்கில் இறங்கி அந்த நகரத்தைப் பார்க்க விரும்பவில்லை. இரண்டு முறை தம்பியிடம் சென்றபோது, வுஸ்பேர்க்கில் பல இடங்களைப் பார்த்தேன் என்பதால் அங்கிருந்து புதிதான இடத்திற்கு போவோம் என நினைத்தேன். ஏற்கனவே படகில் சிலரை ரொத்தன்பேர்க் என்ற ஒரு மத்தியகாலத்து (Medieval town) நகரத்திற்குக் கூட்டிச் செல்வதாக இருந்தார்கள் . சியாமளா அன்று தனக்கு ஓய்வு வேண்டும் என்பதால் படகில் தங்கிவிட நான் மட்டும் தனியாகச் சென்றேன்.
உண்மைகள் என்றும் உவப்பானவை அல்ல !
தற்போது ,ஆரம்ப இளைஞர் அமைப்பில் இருந்தவர்கள் சிதறி , சிலர் சேர்ந்து தோழர்களாகி இயக்கங்ககளை உருவாக்கியும் , சேராது தனிப்பட நட்பு வட்டத்துடன் இயங்கிறதென மக்களுக்குத் தெரியாத பல அமைப்புகள் இருந்தன. தலைவர்களாக உருவெடுத்திருப்பவர்கள் ஒருத்தர் வீட்டிலே ஒருத்தர் தலைமறைவாகி இருந்த காலமும் இருந்தது . அச்சமயம் , வீட்டுப்பிள்ளையாக .. சகோதராக அரவணைக்கப்பட்டவர்கள் . இப்ப என்னப் பிரச்சனையோ ...? எதிரியாகி , சார்ப்பாக நின்றதிற்கு அல்லது தெரியாத ஒரு காரணத்திற்காக ..சுட்டு த் தள்ளும் செய்திகள் நகரை பரபரப்பாக்கி விடுகிறது . விடுதலைக்கு தம்மை அர்ப்பணித்த இளைஞர்கள் ...இப்படி விரயமாக சாகிறது வருத்தமாக இருக்கிறது .

ஷம்பாலா 2019 - இல் வெளியான நாவல். தமிழவன் அவர்களால் எழுதப்பெற்ற இந்நாவல் ‘ஓர் அரசியல் நாவல்’ என்ற கோணத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இந்நாவலில் கூறுகின்ற அரசியல் மக்களுக்கு எந்த விதமான சூழ்நிலைகளில் பயனுள்ளதாக இருக்கிறதா? அல்லது பயனற்றதாக இருக்கிறதா? என்பதை நாம் பார்ப்போம். இந்நாவல் இரண்டு வகைக் கதைப்போக்குகளைக் கொண்டுள்ளது. ஒன்று பேராசிரியர் அமர்நாத் எனபவரது எழுத்தும் சிந்தனையும் அரசால் உளவு பார்க்கப்படுகிறது. அமர்நாத் என்பவர் ஒரு எழுத்தாளர். சிந்தனையாளர், அறிவுஜீவி, முற்போக்காளர் என்ற அடையாளத்துடன் விளங்குபவர். அதனால்தான் அவர் சிந்தனைப் போலீசால் கண்காணிக்கப்படுகிறார். எப்படியெல்லாம் கண்காணிக்கப்படுகிறார்? எதற்காக கண்காணிக்கப்படுகிறார்? அதனால் அமர்நாத் அடைந்த வேதனை - மனநிலை என்ன? அவர் குடும்பம் அனுபவித்த அவல நிலை என்ன? சிந்தனை எப்படியெல்லாம் தடம் மாறுகிறது. தன் வாழ்வை எப்படி? நகர்த்திச் செல்கிறார். குடும்பத்துக்காக என்ன செய்கிறார். அது மட்டுமல்லாமல் அந்த கண்காணிப்பை மீறி அதிகாரத்தை உடைத்து எப்படி செயல்படுகிறார் என்பதையும் பார்க்கலாம்.

தாயாய் இருப்பாள் தாரமாய் இருப்பாள்

அனைத்துலக மகளிர் தினத்திற்காய்த் துணிவுடன் போராடி, அளப்பரிய தியாகங்களை மேற்கொண்ட அனைத்துப் பெண்களையும் இவ்வேளை நினைவுகூர்ந்து தலைசாய்த்து வணங்குகின்றேன்.
மார்ச் 8ம் திகதி சர்வதேச மகளிர் தினமாகும். ஒரு நூற்றாண்டுக்கும் மேலான காலத்துக்கூடாக, சமூகரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும், கலாசாரரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் பெண்கள் அடைந்திருக்கும் முன்னேற்றங்களை உலகளாவியரீதியில் கொண்டாடும் ஒரு கொண்டாட்டமாக இது இருப்பதுடன், பாலின சமத்துவத்துவத்துக்கான செயல்பாடுகளுக்குரிய ஓர் அறைகூவலாகவும் அமைந்திருக்கிறது.
மனதின் சாளரங்கள் திறப்பதற்கு மாமனிதர்களின் தத்துவங்கள் உதவுவது போல, சில வாசிப்புகளும் உதவுவதை அவள் அறிவாள். இறுகியிருந்த எண்ணங்கள் சிட்டுக் குருவிகளைப் போல சிறகடித்துப் பறக்கவும் , இனிய சங்கீதம் எங்கும் நிறைக்க வல்லதும் வாசிப்பு என்பதை மறுக்க முடியாது.

ஆழ் மனத்திரைக்குள் பதிந்திருக்கும் பக்கங்களைப்புரட்டிப் புரட்டி மறுபடியும் அப்புத்தகத்தை வாசிப்பதில் அத்தனை சுகம்!அதற்குள்தானே நிரம்பிக்கிடக்கின்றன அத்தனையாயிரம் கதைகள்?ஓடி ஓடி களைத்துப்போகும் வாழ்வெனும் வட்டத்திற்குள் அவற்றைப்பகிர்ந்திட எமக்குத்தான் நேரமில்லையே!எப்போதாவது முதுமைக்கு நரையழகாகும் பருவத்தில் ஒவ்வொன்றாக எடுத்து வாழ்வின் புதிய பயணத்தை ஆரம்பிக்கும்போதுதான் கதை சொல்லியாக இது கைகூடும் என்றால் அதுவும் ஆனந்தம்தான்!அதற்கும் அப்பால் ஞாபகங்களை கரைந்துவிடாது காத்திட பக்கங்களைப்புரட்டிப்பார்ப்பதும்கூட மனநலத்திற்கான ஆரோக்கியமும்கூட !

இசையால் இசைவிக்க முடியாத உயிரினம், உலகில் எதுவுமே இல்லை. இசை உயிரினங்கள் அனைத்தையும் துளிர்ப்பிக்க வல்ல ஜீவசக்தி. இந்த இசையை அனுபவிக்கும்போது மனம் அமைதி பெறுகின்றது. இனிமையான இசையை இரசிப்பதென்பது ஓர் அலாதியான அனுபவம்! இதனால்தான் “இசையில்லாத வாழ்க்கை இனிக்காது” என்று நீட்சேயும் – ”துன்பத்தைத் துடைப்பதற்கே இசை உண்டாக்கப்பட்டது” என்று ஷேக்ஸ்பியரும் சொல்லிச் சென்றார்கள் போலும்!
ஏன் என்று கேட்காதுவிட்டால், மடையர் நாம் என்று கட்டிவிடும் அறிவு. நாம் ஆறறிவு மனிதர்களா? இல்லையெனில் ஐந்து அறிவு மிருகங்களா? என்று புரியாது போய்விடும். மிருகங்கள், பறவைகள் பலவற்றின் குணநலங்களை எடுத்தாராயும்போது அவையே தம் வாழ்வுக்குத் தேவையான அறிவு கொண்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. தலையாட்டித் தொடரும் ஆட்டு மந்தைகள் போல் வழிவழியாகத் தொடரும் பழக்கவழக்கம் என்றோ, ஊரோடு ஒத்தோடாவிட்டால், சமூகம் எம்மை ஒதுக்கிவிடும் என்றோ, ஆச்சரியமானதாக இருக்கின்றது என்றோ, எல்லோரும் ஏற்றுக் கொள்ளுகின்றார்களே! அதில் ஏதோ உண்மை இருக்கும் என்றோ எதையும் நம்பிவிடக்கூடாது.



’அணி’ என்ற சொல்லுக்கு ’அழகு’ என்பது பொருள். கம்பர் தம் காப்பியத்தில் வேற்றுமை பொருள் வைப்பணி, மடக்கணி, ஒப்புவினை புணர்ப்பு அணி, ஏகதேச உருவக அணி, உருவக அணி, உவமை அணி, அலங்கார அணி, குறிப்பு மொழி அணி, தன்மை நவிற்சி அணி, உடன் நவிற்சி அணி, பிற குறிப்பு அணி, மேல் மேல் முயற்சி அணி, அலங்கார வினோதங்கள், அவநுதி அணி, எடுத்துக்காட்டு உவமை அணி, உயர்வு நவிற்சி அணி என பல அணிகளைக் குறித்துள்ளார். அவற்றுள் ஒன்று தன்மேம்பாட்டுரை அணி அணியாகும். தண்டியலங்காரத்தில் தன்மேம்பாட்டுரை அணி குறித்துக் கூறியுள்ள கருத்துக்களை கம்பராமாயணத்தின் வழி ஆராய்வோம்.


பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் 








