'சலனங்கள்' க.ரவீந்திரநாதன் கதைகள் நூல் வெளியீட்டு விழா!


ஊழின்வலி பெறுஒரே உயிரினம் யான் மட்டுமே
பாழும் நாவெதுவும் பரிதவிப்பைக் கேட்டதிலை
கண்ணெதுவும் கலங்கியே கடுந்துக்கம் கொண்டதிலை
மண்ணில் பிறந்தநாள் முதலாய் தூண்டியதில்லை யான்
கவலைநிறை எண்ணத்தையோ மகிழ்வின் புன்னகையையோ
இரகசிய இன்பத்தில் இரகசியக் கண்ணீரில்
மாறிடும் இவ்வாழ்வு நழுவி விலகியது
புதிதாய்ப் பூமியில் பிறந்த நாளின் தனிமைபோல்
பதினெட்டு அகவை பின்னும் நண்பர்கள் இன்றியே.
மறைக்க இயலா தருணங்கள் இருந்ததுண்டு
நிறை துயர்விளை தருணங்களாம் அவை
தன்பெருமை மறந்து என்னுயிர் வருந்தியபோது
தன்னை இங்கொருவர் நேசிக்க ஏங்கியது.

முகத்தில்
ஓங்கியறைந்த வார்த்தை
நீண்ட நேரமாக
அங்கேயே சுற்றிக் கொண்டிருந்தது
உவப்பில்லாத அந்த வார்த்தையை
மறைப்பதற்காக
நேரம் கடத்தும் வித்தையை
உடலும் தெரிந்து வைத்திருந்தது
யன்னல் மறைப்புக்குக்
கட்டிய துணியை அவிழ்த்து
மீளவும் கட்டுகிறான்
உள்ளேயிருந்த பிளாஸ்ரிக் கதிரையை
வெளியே வைக்கிறான்
மற்றையது உள்ளே மாறுகிறது
வெறுமையான தேநீர்க்குடுவை
தூக்கிப் பார்த்து
நகர்த்துகிறான்
தலைவாசல் முன்னிருந்த கால்விரிப்பு
தூசு தட்டப்படாமலே
நகர்த்தப்படுகிறது

தாகூரின் செல்வாக்கில் இருந்து, கழன்ற சி.வி.வேலுப்பிள்ளையின், நெடுங்கவிதையின் மூன்றாம் பகுதி இங்கே காணக்கிட்டுகின்றது. தமது காலத்தைய, அழுத்தமான மக்கள் குரலை வேலுப்பிள்ளை ஒலித்ததை போன்று, அவருக்கு பின்னால் வந்த எந்த ஒரு கவிஞனும் மலையக சமூகம் பொறுத்து ஒலித்தது கிடையாது எனலாம். ஆழ்ந்த சமூக பற்றுடன் இவரது குரல் ஒலித்தமைக்கான விலையை இவர் தம் வாழ்வின் ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் கொடுத்திருக்க கூடும். இவரது அக்காலத்தைய எழுத்துக்கள், அக்காலத்தைய மலையக அரசியல் சார்ந்த சிந்தனைக்கு மாத்திரமல்ல, பொதுவில் உழைக்கும் மக்களின் சிந்தனைக்குள்ளும் வலை விரிக்க கூடியதே. இனி மீண்டும் கவிதைக்குள் செல்லலாம்:
மயில் நிறத்து சேலை…
மயில் நிறத்து
சேலை…
அடர் வண்ண
பச்சை, மஞ்சள், சிவப்பாடை…
இமைகளையும் பெரிதாய் தீட்டி
நெற்றியில் குங்குமத்தையும்,
அழுத்தமாய் இட்டு, பள பளக்க செய்து
கன்றி சிவந்த இதழ்களும்
அழகுடன் இளக,
தூய்மையில் விட்டிருப்பார்… ஆகா, எம்
அனைத்தையும்
இன்பத்திலும் ஆழ்த்தியிருப்பார்…

(இன்னிசை வெண்பா மாலை)
இரவி தெருவினில் இட்டிடும் கோலம்
உரவாய் நுழைந்து உவந்து களித்துப்
பரவிடும் காலையில் பக்கலில் நின்று
வரமாய்க் கறந்திடும் பால்.
ஓட்டைக் குழலூத ஓலை சலசலக்க
சுட்ட அடுப்பில் சமைத்து அடங்கிட
விட்டம் அடுக்கிய விறகு பார்த்திடும்
கொட்டில் பரண்மேல் இருந்து.

அமரிக்காவின் மேற்கு மாநிலங்களில் எங்கள் பஸ் பயணத்தின் அடுத்த பகுதி கிராண்ட் கனியன் எனப்படும் பிரசித்தி பெற்ற புவியில் ஏற்பட்ட நீண்ட பிளவாகும். கிட்டத்தட்ட ஒரு மைல் ஆழத்திலும், பல மைல் அகலத்திலும் செங்குத்தாக அமைந்த பாறைகளின் பள்ளத்தாக்காக இது உள்ளது. இந்தப் பாறைகளின் வடிவமைப்பு பல மில்லியன் ஆண்டுகளாக கொலராடோ நதி என்ற சிற்பியால் செதுக்கப்பட்டது என்பதை அறியும்போது, மனிதர்களின் கலையின் ஆரம்ப ஊற்று இயற்கையே அதிலும் நீரும் காற்றும் ஆரம்ப காட்சியின் பிரதான இயக்குநர்கள் என நினைத்தேன்.
கிராண்ட் கனியன் அமைந்துள்ள பகுதி மிகவும் வரண்ட பிரதேசம். அதிக மரங்களற்று வெளியாக பாறைகள் அமைந்த பிரதேசமாக கண்ணுக்கெட்டியவரையில் தெரிந்தது. கிராண்ட் கனியன் மேல் ஹெலிகாப்டரில் பறந்தபடி பார்க்கும் ஒரு பயணம் இருந்தது. சியாமளா பயந்தபோது ஒரு மாதிரி தைரியம் கொடுத்து ஹெலிகாப்டரில் ஏற்றி சென்றேன். நல்ல வேளையாக பைலட்டேடு ஆறு பேர் அமரும் அந்த ஹெலிகாப்டரில் எங்களை முன் இருக்கையில் உட்கார வைத்தனர். முழுப் பகுதிகளையும் இலகுவாக பார்க்க படம் எடுக்க முடிந்தது. நாங்கள் கேட்காமலே அந்த வசதி கிடைத்தது.மேற்கு நாடுகளில் குறிப்பாக வயதிற்கு கிடைக்கும் மரியாதையை எம்மால் உணர முடிந்தது.
கிராண்ட் கனியன் பல மாநிலங்களில் விரிந்து பரவி இருந்தாலும் பெரும் பகுதி அமைந்திருப்பது அரிசோனா மாநிலத்தில் தான். மிகச் சிறிய பகுதிகள் யூட்டா மற்றும் நெவாடா மாநிலங்களில் உள்ளன. இந்த கிராண்ட் கனியன் 447 கிலோமீட்டர் நீளமானது. கிராண்ட் கனியன் அமைந்துள்ள பகுதியை வடக்கு–தெற்கு என பிரிக்கிறார்கள். கிராண்ட் கனியன் வடக்குப் பகுதி சமீபத்தில் காட்டுத்தீயால் அழிந்ததால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. நாம் சென்றது தென் பகுதி. கிராண்ட் கனியன் யுனெஸ்கோவால் பாதுகாக்கப் படவேண்டிய பரதேசமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இயற்கையின் ஏழு அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்த கிராண்ட் கனியன் அமைப்பை பல காலம் கேள்விப்பட்டிருந்த போதிலும், மேலிருந்து பார்ப்பது ஒரு வரப்பிரசாதம் என நினைத்தேன். இது அமரிக்காவின் முக்கிய தேசியப் பூங்காவாகவும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

மார்ச் 8 சர்வதேச மகளிர் தினம்!
கும்மியடி! தமிழ்நாடு முழுவதும்
குலுங்கிடக் கைகொட்டிக் கும்மியடி!
நம்மைப்பிடித்த பிசாசுகள் போயின
நன்மை கண்டோ மென்று கும்மியடி!
ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்
றெண்ணி யிருந்தவர் மாய்ந்துவிட்டார்
வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைப்போமென்ற
விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார்.
கற்பு நிலையென்று சொல்லவந்தார் இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்
வற்புறுத் திப்பெண்ணைக் கட்டிக்கொடுக்கும்
வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம்.

“ராகவியை நினைச்சா … அவளின்ர சிரிப்புத்தான் முதலில கண்ணுக்குத் தெரியும்,” ராகவியின் பாடசாலைச் சினேகிதி மாயா அவளின் அந்தியேட்டி நிகழ்வில் கண்ணீர்மல்க உரையாற்றிக் கொண்டிருந்தாள்.
அஞ்சலிக்காக மேடையில் வைக்கப்பட்டிருந்த படத்திலும் அழகாகச் சிரித்துக் கொண்டிருந்த ராகவியின் முன் சில ரோஜாப் பூக்களை வைத்து ஒரு கணம் கண்மூடி அஞ்சலி செலுத்திவிட்டு நிமிர்ந்தான் கேசவன். பூத்தட்டில் மேலும் பூக்களை நிரப்புவதற்காக அங்கு வந்திருந்த ராகவியின் கணவர் விக்கியின் கண்களும் அவனின் கண்களும் ஒரு கணம் சந்தித்துப் பிரிந்தன. விக்கியின் கண்கள் கொவ்வைப் பழங்கள் போலிருந்தன. விக்கியைப் பார்த்ததும் தனக்கு வந்தது பரிதாபமா அல்லது கோபமா என்று கேசவனுக்குத் தெரியவில்லை. இந்த ஒரு மாதமாக விக்கியைத் தவிர்க்கவோ, எதிர்கொள்ளவோ முடியாமல் அவன் போரடுவது அவனுக்குதான் தெரியும். நாகரீகம் கருதி விக்கியின் தோளைத் தட்டிக் கொடுத்துவிட்டு, மேடையிலிருந்து அவன் கீழே இறங்கினான். மீள மீள அவனின் முன் ராகவி வந்து நிற்பதுபோலவும், அதே கேள்விகளை அவள் திரும்பத் திரும்பக் கேட்பதுபோலவும் அவனுக்குப் பிரமையாக இருந்தது. அவளின் குழப்பங்களைச் சொன்னபோது எந்தவிதமான இடையீட்டையும் தான் செய்யவில்லையே என்ற குற்றவுணர்வு அவனை உறுத்திக் கொண்டிருந்தது.
கேசவனின் பால்ய சினேகிதன் ரவியின் மகள்தான் ராகவி. உணவகம் ஒன்றில் சமையலாளராகவும், இன்னொன்றில் பாத்திரங்கள் கழுபவராகவும் ரவி இரண்டு வேலைசெய்து கொண்டிருந்தான். அவனின் மனைவி உஷாவின் வேலை ரிம் ஹோட்டனில் மாலைநேர வேலையாக இருந்தது. கேசவனின் மனைவி வேலைக்காக வெளியில் போவதில்லை என்பதாலும், கேசவனின் வேலை இரவு வேலையாக இருந்ததாலும், ராகவியினதும் அவளின் தங்கை யாகவியினதும் சிறுபராயம் கேசவனின் வீட்டில்தான் அதிகமாகக் கழிந்திருந்தது. கேசவனுக்குப் பெண் பிள்ளைகள் இல்லாத குறையை அவர்கள் தீர்த்துக்கொண்டிருந்தனர்.

மனித சமூகம் வளர்ச்சியின் பல அடுக்குகளை கடந்து வந்துள்ளது. அறிவியல் வளர்ச்சி, தொழில்நுட்ப முன்னேற்றம், உலகமயமாக்கல் போன்ற பல மாற்றங்கள் நிகழ்ந்தாலும், மனித மனப்பாங்கில் பதிந்துள்ள சில பழமையான கட்டமைப்புகள் இன்னும் முற்றிலும் கலைந்து போகவில்லை. அவற்றுள் முக்கியமானது ஆணாதிக்கம். ஆணுக்கு மேலாதிக்கமும் பெண்ணுக்கு கீழாதிக்கமும் வழங்கும் இந்த சமூக அமைப்பு, காலத்தின் ஓட்டத்தில் பல வடிவங்களில் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இதை ஒழிக்க ஒரே ஒரு தீர்வு போதாது; பல்வேறு தளங்களில் ஒருங்கிணைந்த முயற்சி அவசியம். பெண்களுக்கு சமமான
கல்வி, வேலை வாய்ப்பு, சட்டப் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஆகியவை இந்த மாற்றப் பயணத்தின் உறுதியான தூண்களாக திகழ்கின்றன.
1. கல்வி – விடுதலையின் விளக்கேற்றி
“கல்வியே கண்ணெழுத்து” என்று தமிழ் மரபு கூறுகிறது. கல்வி என்பது வெறும் எழுத்தறிவல்ல; அது சிந்திக்கும் திறன், தீர்மானிக்கும் ஆற்றல், தன்னம்பிக்கை, சுயமரியாதை ஆகியவற்றின் தொகுப்பாகும். ஒரு பெண் கல்வி பெறும்போது, அவள் தனக்கான உரிமைகளை அறிகிறாள்; அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கத் துணிகிறாள். கல்வி பெற்ற பெண் குடும்பத்தின் முன்னேற்றத்திற்கும் சமூகத்தின் வளர்ச்சிக்கும் வழிகாட்டியாக மாறுகிறாள்.
பல இடங்களில் பெண்களின் கல்வி இன்னும் புறக்கணிக்கப்படுகிறது. “பெண் குழந்தைக்கு இவ்வளவு கல்வி போதுமே” என்ற மனப்பான்மை இன்னும் சில சமூகங்களில் நிலவுகிறது. இந்த எண்ணம் மாற்றப்பட வேண்டும். பள்ளி முதல் உயர் கல்வி வரை பெண்களுக்கு சமமான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். குறிப்பாக கிராமப்புறங்களில் கல்வி வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும்.
கல்வி பெற்ற ஒரு தலைமுறை பெண்கள் உருவானால், அது சமூகத்தின் சிந்தனைக் கட்டமைப்பையே மாற்றிவிடும். கல்வி என்பது ஆணாதிக்கத்தின் இருண்ட அறையில் ஏற்றப்படும் ஒளிக்கொடி போன்றது.
பகுதி 2
வேலுப்பிள்ளையின் எழுத்துக்கள் மூன்று கட்டங்களாக பிரிபடலாம்.
ஒன்று, காந்தியாலும் தாகூராலும் கவரப்பட்ட நிலையில், அவர் இளைஞனாய் இருந்த போது, தோன்றிய மனக்கசிவுகள்.
மற்றது, நேருவின் ஆசிர்வாதத்துடன், இலங்கை இந்திய காங்கிரஸ், ஸ்தாபனமுற்ற நிலையில் வேலுப்பிள்ளை, தொழிலாள சாரியுடனும் தொழிற்சங்கத்துடனும் இணைந்த ஓர் காலப்பகுதி.
மூன்றாவது, திருமணம் முடிந்து, ஓர் குடும்ப மனிதனாகிவிட்ட ஒரு காலப்பகுதி.
தொழிற்சங்கத்தில் இணைந்து தொழிலாளர் அணியுடன் கட்டிப் புரண்ட காலப்பகுதியில் (போலிஸ் வேனிலும் அடைப்பட்ட போது) முகிழ்த்து கிளம்பியதே ‘தேயிலை தோட்டத்திலே’ எனும் இந்நெடுங்கவிதை.
இந்த மாற்றங்கள் குறித்தே, அதாவது, இம்மாற்றங்கள் எப்படி ஏற்பட்டன – முக்கியமாக – ‘தாகூரின் ஆளுமைக்கு உட்பட்டிருந்த இவ் இளைஞன்’ என வேலுப்பிள்ளையை, வியக்கின்றார், ஜெக் மோகன்.
இப்பின்னணியில் வேலுப்பிள்ளையின் குடும்பமும் (Phழவழ)இ அனேக விடயங்களை எமக்கு எடுத்துரைப்பது.
கோபமுற்று, கைக்கட்டி இருக்கும் தாத்தாவின், பின்னால் நிற்கும் ஓர் இளைஞனாய் வேலுப்பிள்ளை தோன்றுகின்றார். தனது செல்லப்பேரன், கோட்-சூட்டு சகிதம், ஒரு துரை போன்று காட்சியளிக்க கூடும் என தாத்தா எதிர்ப்பார்த்திருந்தால், அது இயல்பானதாகவே இருந்திருக்க கூடும். ஆனால் இவ் இளைஞனோ, காந்திய குல்லாயும், கதிராடையும் அணிந்து, காலனித்துவத்துக்கு எதிராய் கோபம் கொண்டவனாய், இந்திய விடுதலை இயக்கத்தின் ஓர் சிறு பிழம்பாய் காட்சி தருகின்றான். இவனது பார்வை, தீவிரமான தீட்சண்யம், இவை யாவுமே, இவ் இளைஞனின் வருங்கால எழுத்துக்களுக்கு கட்டியம் கூறுவதாக அமைகின்றது. இருந்தாலும், இவ் இளைஞன் இன்னமும் தாகூரின் இளைஞனாகவே இருக்கின்றான் - பிற்காலத்தில், காலம் அவனை தொழிலாளர் அணியினர் மத்தியில் வீசி எறியும் மட்டும். அப்படி வீசி எறிந்த போது உருவானவையே இந் நெடுங்கவிதை. ஜெக்மோகன் வார்த்தையில்: ‘முற்றாக மர்மம் நிறைந்தது – இத் தாவல்’. இத்’தாவலின்’ முக்கியத்துவம், மனிதனையே புரட்டி எடுக்க தக்கதுதான் - வரலாற்றில்.

இள வயதில் வாசிப்பை நெறிப்படுத்த மூத்தவர்கள் ஓரிருவருடைய உதவி எனக்கு இருந்திருந்தாலும், பின்னால் இலக்கியரீதியான வழிகாட்டலுக்கு யாரும் இருந்திருக்கவில்லை என்பது துர்பாக்கியமாகும். அந்த வெளியைக் கடந்தேனென்றாலும், அது சுலபத்தில் கைகூடியிருக்கவில்லை. பிழைவிட்டு திருந்தி, பிழைவிட்டு திருந்தி… ஒவ்வொரு அடியையும் எடுத்துவைக்கவேண்டி இருந்தது. காலமே, ஒரு சக்தியாகயிருந்து அந்த வெறுமையை நிவர்த்தித்தது என்றுதான் இப்போது நினைக்கத் தோன்றுகிறது.
அக் காலத்திய அரசியல் மேடைகள் இலக்கியமும் பேசின. பாரதியார், பாரதிதாசன், திருவள்ளுவர், கம்பன் பற்றியேல்லாம் நான் மேடைகளில்தான் முதன்முதலாக அறிந்தேன். அவர்களது தமிழ்ப் பற்று என் நெஞ்சிலும் மூண்டெழுந்தது.
இளைஞனாக இருக்கும்போது சாவகச்சேரி சரஸ்வதி புத்தகசாலையில் நான் வாங்கிய புத்தகம் ‘பாரதியார் இன்கவித் திரட்டு’ என்கிற ராஜாஜி தொகுத்த புத்தகமாகும். அதில் எவ்வளவற்றைப் புரிந்துகொண்டேன் என்பதையெல்லாம் எனக்கு இப்போது சொல்லத் தெரியவில்லை. ஆனால் சுவையான விஷயம் என்னவென்றால், அந்தப் புத்தகத்தின் பெயரை ‘பாரதியாரின்’ ‘கவித்திரட்டு’ என்பதாகவே அப்போது நான் புரிந்துகொண்டிருந்தேன். பின்னால் பாரதியாரின் பாடல்கள் சிலவற்றை நான் வாசித்துப் புரிந்துகொள்ள முடிந்தபோது,
அதை ‘பாரதியார்’ ‘இன்கவித்’ ‘திரட்டு’ என சரியாகப் பிரித்து பொருள்கொள்ளத் தெரிந்தேன்.
அப்போதே பாரதிதாசனின் ‘தமிழுக்கு அமுதென்று பேர்’, சுத்தானந்த பாரதியாரின் ‘தமிழே தமிழே தமிழர்க்குயிரே’ போன்ற பாடல்களை பொருள் புரிந்து வாசிக்க முடிந்திருந்தது.
இவைபோலவேதான் திருக்குறளும், கம்பராமாயணமும் எனக்கு அறிமுகமானது மேடைகள் வழியாகத்தான்.
இந்தளவு பின்னணியோடு நான் க.பொ.த. உயர்தரம் புகுந்தபோது, தமிழ் பாடத் திட்டத்தில் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளையின் ‘இலக்கிய வழி’ நூலும் இடம்பெற்றிருந்தது. ஏற்கனவே பாலபாடத்திலும், பாலபோதினியிலும், இலக்கிய மஞ்சரியிலும் என் இலக்கிய ரசனை வளர்ந்திருந்ததுபோல், ‘இலக்கிய வழி’ மூலமும் ஒரு பாய்ச்சல் நிகழ்ந்தது.
சர்வதேச மகளிர் தினத்திற்காய்த் துணிவுடன் போராடி, அளப்பரிய தியாகங்களை மேற்கொண்ட அனைத்துப் பெண்களையும் முதற்கண் இவ்வேளை நினைவுகூர்ந்து தலைசாய்த்து வணங்குகின்றேன்.
2026 ஆம் ஆண்டிற்கான சர்வதேச மகளிர்தினக் கருப்பொருளாக ‘Give to Gain’ ‘வழங்கிப் பெறுவோம்’ என்பதாக உணர்த்தப்;படுகின்றது. உலகளாவிய ரீதியில் சமத்துவத்தை அடைவதற்கு தாராள மனப்பான்மையுடனும், கூட்டுப் பணியுடனும், பெண்களின் முன்னேற்றத்திற்காகப் பங்களிப்பதன் மூலம் அதனை அடையும் வகையில் வலுவுறுத்துவதாக அமைகின்றது. குறிப்பாக மரியாதை, அறிவு, சமத்துவமான நீதி மற்றும் வாய்ப்புகளை வழங்குவதில் கவனம் செலுத்துகின்றது.
அமெரிக்காவில் தொழிற்புரட்சி நகரான நியூயோர்க்கில் நெசவுத் தொழிலில் பெருமளவு பெண்கள் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் பதினாறு மணிநேரம் வேலை செய்து மிகக் குறைவான ஊதியத்தைப் பெற்றனர். அந்த ஊதியத்தைப் பெறுவதற்குக்கூட நிர்வாகத்தில் உள்ளவர்களின் உடற்பசிக்கு இணங்கினால்த்தான் கிடைக்கும் என்ற நிலை இருந்தது. 1857இல் நியூயோர்க் நகரில் உழைக்கும் பெண்கள்கூடிக் குரல் எழுப்பினர். தொடர்ந்து போராடினர்;. பெண்கள் அமைப்புகள் பல தோன்றின. 1908 இல் வாக்குரிமை கேட்டு கொதித்து எழுந்தனர். அப்போதைய ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட் அவர்கள் போராட்டத்தின் தாக்கம் கண்டு நில குலைந்து போனார். போராட்டம் என்பது மிகவும் பெரியது. போராடினால்த்தான் உரிமைகள் கிடைக்கும் என்ற சிந்தனை உலகெங்கும் கிளாந்தெழுந்தது.
அதன் விளைவாக 1910இல் ஹேகனில் அனைத்துலகப் பெண்கள் மாநாடு கம்யூனிஸ ஆர்வலரும் பெண்கள் உரிமைக்காகக் குரல் கொடுத்தவருமான கிளாரா ஜெட்கின் (Clara Zetkin) தலைமையில் கூடியது. அதன் தொடர்பாக சர்தேச மகளிர் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. இந்த அமைப்பின் சார்பில் 1911 ஆம் ஆண்டு மார்ச் 19ஆம் திகதி ஜேர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்து கலந்து கொண்ட மகளிர் பிரதிநிதிகளின் முதல் சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடினர்.

கலை, இலக்கியக்கோட்பாடுகள் பற்றிய என் எண்ணங்களை அவ்வப்போது காணொளிகளாகத் தருவதற்கு முடிவு செய்திருக்கின்றேன். அவ்வகையில் முகநூலில் பகிர்ந்துள்ள காணொளிகள் இவை. இவை பற்றிய உங்கள் கருத்துகள் எவையாயினும் அறியத் தாருங்கள். இவை பற்றிய ஆரோக்கியமான தர்க்கங்களுக்கு அவை வழி வகுக்கும். காணொளிகள் என் 'ஐபோன்' மூலம் எடுக்கப்பட்டவை.
நவீனம், நவீனத்துவம் பற்றி... https://www.facebook.com/reel/1254157106063345

ஆயத்துல்லாஹ் அலி கொமெய்னி:
அடிபணியாத நிழல்
வரலாறு தனது கறுப்புப் பிரதியைத் திறக்கும்போது
உறைந்த இரத்தத்தின் தழும்புகளிடையே
ஒரு தேசத்தின் நாடித் துடிப்பு கேட்கும்.
அவர் - பெரும்பான்மையின் ஆரவாரத்தால் அல்ல,
தனிமையின் தியானத்தால் செதுக்கப்பட்டவர்.
மத்திய கிழக்கின் மணற்புயலில்
திசைமாறாத ஒற்றை அச்சு.
அவரது நிழல் நிலத்தில் விழவில்லை;
ஏகாதிபத்திய நிலவரைபடங்களின் மீது
ஒரு பிளவென விழுந்தது.
[எழுத்தாளர் மா.சித்திவினாயகம் 'ரொறன்ரோ தமிழ்ச் சங்க'த்தில் 'கனடாவில் நவீனத் தமிழ்க் கவிதை' பற்றி ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்]
கனேடியப் பனி நிலத்தின்இந்தப் பெருங் குளிரிலும், நம் தமிழ்க் கவிதைப் பூந்தோட்டம் சீரோடு செழிக்கிறது. அது கொடிவிட்டுத் தழைத்துச் செழிக்கின்ற புனிதத்தைப் போற்றுகிற, இந்த தமிழ்க்கவிதை உரையாடலுக்கு வருகை தந்திருக்கும் அறிஞர்களே, கவிஞர்களே அன்பு உறவுகளே உங்கள் கரங்களை தமிழன்போடு இறுகப் பற்றுகின்றேன்.
புலம்பெயர்ந்த மக்களின் புண்பட்ட இதயங்களுக்குக் கவிதையே மருந்தாகிறது. அவர்களின் பண்பாட்டு அடையாளங்களுக்குக் கவிதையே மகுடமாகிறது.
இத்தகையதொரு சீரிய உரையாடலை, அவசியமான உரையாடலை ஒருங்கிணைத்த ரொறன்ரோ தமிழ்ச் சங்கத்திற்கும், அதன் நெறியாளர், மதிப்பிற்குரிய பேராசான் சுப்பிரமணிய ஐயா அவர்களுக்கும், அவருக்குத் தோள் கொடுக்கும் தோழர் அகில் போன்றோருக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.
கடந்த மாதம் இதே அவையில் மானிடவியல் குறித்த தேடல் ஒன்று இடம் பெற்றது ... மனிதன் குரங்கிலிருந்து கிளைத்தானா அல்லது கடவுளின் கையால் படைக்கப்பட்டானா என்ற அந்தப் பதிலறியாப் பெரும் போர் இன்றும் எங்கும் தொடர்கிறது. அதே போன்றதொரு தர்க்கமும், மயக்கமும் தான் கனடாவில் நவீன கவிதையின் தோற்றம் குறித்தும் நமக்கு எழுகின்றது.
கனடியத் தமிழ்க் கவிதையின் வேர்களைத் தேடுவது என்பதும் அதிலும் நவீன கவிதைக்கான பிறப்பை ஆராய்வதென்பதும் அதன் பூர்வீகம் அறிய முற்படுவதும்.. .. ஓர் வில்லங்கமான முயற்சி. இது ஒரு சிக்கலான, தேடல்.. ஆனால் அந்தத் தேடலை தேடுவதுதான் தமிழர் வாழ்வின் வரலாற்றின் நீட்சியென்பதை தன் குறிக்கோளாக கொண்டுள்ள ரொறன்ரோ தமிழ்ச் சங்கத்திற்கென் வாழ்த்துகள்.
கட்டுரையாளர் - முனைவர் கு.வளர்மதி, உதவிப்பேராசிரியர், இளங்கலைத் தமிழ்த்துறை, தி ஸ்டாண்டர்டு ஃபயர்ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி, சிவகாசி. -
முன்னுரை
பல்வேறு உயிரினங்களுள் கல்வி பெறும் வாய்ப்பினை உலகில் மனிதர்கள் மட்டுமே பெற்றுள்ளனர். பிற உயிரினங்களுக்கு கல்வி பயிலும் வாய்ப்பில்லை. மனிதர்கள் ஒருவரோடு ஒருவர் இணைந்து கூடி வாழும் அமைப்பே சமுதாயம் எனப்படும். சமுதாயத்தில் இரண்டறக் கலந்துவிட்ட கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் உள்ளது. சமுதாயத்தைப் பிரதிபலிக்கும் காலக்கண்ணாடியாகத் திகழும் கல்வியால் மட்டுமே ஒரு சமுதாயத்தை நல்லதொரு சமுதாயமாக மாற்றியமைக்க இயலும். சமுதாயத்தில் கல்வி பெற்றுள்ள இடத்தினைப் பதினெண்கீழ்க்கணக்கு அறநூல்கள் வழி ஆராய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.
கல்வி – விளக்கம்
ஒரு சிறிய நிலப்பரப்பில் பொதுவாழ்க்கை முறையைப் பின்பற்றி, கூட்டாக வாழும் மக்கள்தொகுதி சமுதாயம் எனப்படும். ஒரு மனிதனுக்குச் சமுதாயத்தினையும் அச்சமுதாயத்தில் தன்னுடைய வாழ்க்கை நிலையினையும் அறிந்து கொள்ளும் அறிவினைத் தருவதாக கல்வி அமைகின்றது. கல்வி என்பதன் வேர்ச்சொல் ‘கல்’ ஆகும். ‘தோண்டுதல், துருவுதல்’ ஆகிய பொருட்களைக் ‘கல்லுதல்’ என்ற சொல் உணர்த்தும். உடலளவில் மனிதர்களாகத் தோன்றுபவர்களை உள்ளத்தளவிலும் மனிதர்களாக மாற்றுவதே கல்வியாகும்.
எளிமையின் உருவமாக
ஒழுக்கத்தின் உச்சியாக
மக்கள் மனங்களில் வேரூன்றியவர்
புன்னகை மறையாத போராட்ட மேகம்,
இன்று மௌனமாக விண்மீன்களோடு கலந்துவிட்டாரோ?
செங்கொடியை சுமந்த தியாகத் தீபம்,
பதவிகள் தேடி வந்த போதும்
பழைய வாடகை வீடையே சொர்க்கமாகக் கொண்டவர்;
பொதுவாழ்வின் தூய்மைக்கு அளவுகோல் வைத்த
அந்த தவமிகு வாழ்க்கை
இன்று அமைதியில் உறங்குகிறதோ?
மண்ணுக்காகவும் மக்களுக்காகவும்
முன்னணியில் நின்ற நீதிச் சிங்கம்;
ஆற்று மணல் கொள்ளையை தடுத்த வீர மனம்,
இயற்கையின் காவலன், ஏழைகளின் இதயம்;
வயது தள்ளினாலும் நடை தளராதவர்
நீதிக்காக நடந்த அந்த அடிகள்
இன்று ஓய்வெடுக்கிறதோ?
இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் முன்னாள் தலைவரும், கட்சியின் முன்னாள் செயலாளருமான இரா. நல்லகண்ணு அவர்கள் பெப்ருவரி 25, 2026 அன்று, தனது நூறாவது வயதில் மறைந்தார். தனது பதினெட்டாவது வயதிலிரிந்து கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்துக்கொண்டவர். இந்தியாவில் ஆங்கிலேயருக்கெதிராகப் போராடிய சுதந்திர வீரர். கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தடை விதிக்கப்பட்டபோது நெல்லை சதி வழக்கில் இவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுச் சிறை வாசம் அனுபவித்தவர். பின்னர் கம்யூனிஸ்ட் கட்சி மீதான தடை நீங்கியபோது விடுதலை செய்யப்பட்டார். விவசாயத் தொழிலாளர் சங்கத் தலைவராகவும் பணியாற்றியவர்.
முன்னுரை
“அமர காவியம் இது”: என்று கூறியுள்ள திரு.சக்தீ பாலையா, தனது மொழிப்பெயர்ப்பு பற்றி, மேலும் கூறுவார்: ‘(ஆனால்) நான் எழுதியது வரிக்கு வரியிலான மொழிப்பெயர்பல்ல. மன உந்துதலால் உதித்த கவிதைகள் (இவை)’ (மேற்கோள்:திலகர்: சூரியகாந்தி:25.12.2023).
சக்தீ பாலையா இப்படி கூறுவதிலும் பல அர்த்தங்கள் உண்டு. என்றாலும், அவரே இம் மொழிப்பெயர்ப்புகளுக்கு முன்னோடியாக திகழ்கின்றார் என்பது அழுத்தமான உண்மையாகின்றது.
ஆனால், கீழே காணப்படும் மொழிப்பெயர்ப்பானது, அவரது மொழிப்பெயர்ப்பில் இருந்து சற்றே வேறுபட்டு, வித்தியாசமான ஒரு நடையில் தரப்படுகின்றது. ஒரு வேளை இது, வேலுப்பிள்ளையின் மூல நடையின் பாதிப்பால் ஏற்பட்ட ஒன்றாகவும் இருத்தல் கூடும்.
இப்புள்ளியிலேயே, வேலுப்பிள்ளை அவர்களின் எழுத்துக்கள் பொறுத்த, விருப்பு வெறுப்பற்ற கணிப்பொன்றை, நாம் உருவாக்கி கொள்வதும் அவசியமாகின்றது. ஏனெனில், ஜக் மோகனுக்கு மாத்திரமல்லாமல் அனேகருக்கும் ஓர் மர்மமாக அல்லது ஓர் புதிராக அமையக்கூடிய வேலுப்பிள்ளையின் எழுத்துக்கள் பொறுத்த யதார்த்தப்பூர்வமான கணிப்பொன்று எமக்கு தேவைப்பட்டுத்தான் போகின்றது.
மேலும், வேலுப்பிள்ளையின் எழுத்துக்கள் பொறுத்த பின்வரும் குற்றச்சாட்டுக்கள் காலந்தோறும் முன்வைக்கப்படாமலும் இல்லை:
“அவரது கலைப்படைப்புக்கள் தோட்டத் தொழிலாளியின் போர் குணத்தை காட்ட தவறுகின்றன. அவரது காலத்தில் நிகழ்ந்த முனைப்புற்ற போராட்டங்களையும் எழுச்சிகளையும் இலக்கியமாக்க அவர் தவற விட்டிருக்கின்றார்…” (2012 ஒக்டோபர்).
'காந்தளகம்' மறவன்புலவு க.சச்சிதானந்தன் அவர்களை இ துவரை பதிப்பாளராக, ஐக்கிய நாடுகள் அபிவிருத்திச் சபையில் பணி புரிந்தவராக, எழுத்தாளராக, சூழலியலில் ஆர்வமுள்ளவராக , அண்மைக்காலமாக ஹிந்துத்துவா நோக்கில் செயற்படுவராக அறிந்திருக்கின்றேன். அண்மையில் இலங்கையில் ஒடுக்கப்பட்ட தமிழ்ச் சமூகத்துக்காகக் குரல் கொடுத்துவரும் அருண் சித்தார்த் தனது முகநூற் பக்கத்தில் பகிர்ந்திருந்த காணொளியொன்றில் தென்பட்ட மறவன்புலவு சச்சிதானந்தன் அவர்களின் நேர்காணலொன்று என் கவனத்தை ஈர்த்தது.
அருண் சித்தார்த் தான் சார்ந்த சமூகத்திற்காகக் குரல் கொடுத்துவருபவர் என்னும் வகையில் முக்கியமானவர். இவரது கடந்த கால அரசியற் செயற்பாடுகள் முரண்பாடுகள் மிக்கவை. சொந்த வாழ்க்கை அனுபவங்கள் காரணமாக இவர் வெளிப்படுத்தும் கருத்துகள் அவ்வப்போது சர்ச்சைகளைக் கிளப்புபவை. இவரது செயற்பாடுகளில் முக்கியமானதாக நான் கருதுவது இதுவரை காலமும் பல்வேறு விதங்களில் ஒடுக்கப்பட்டு வரும் தான் சார்ந்த சமூகத்துக்காகக்குரல் கொடுத்து வருவது. அதனை ஏற்காமல் மூடி மறைத்து, கடந்து சென்றிட முடியாது. அது தீக்கோழி தன் தலையை மண்ணுக்குள் புதைப்பது போன்றது.

கட்டுரையாசிரியர் - முனைவர் ரா.பிரேம்குமார், உதவிப்பேராசிரியர், தமிழாய்வுத்துறை, ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), திருவானைகோவில், திருச்சிராப்பள்ளி-05 -
முகவுரை:
தமிழ் இலக்கிய வளர்ச்சியில் கிறித்துவப் பாதிரிமார்களின் பங்களிப்பு மிகச் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது. தமிழ் இலக்கியங்களின் பெருமையையும், செழுமையையும் மேனாட்டார் அறியும் வகையில் உலகளவில் எடுத்துச் சென்றவர்கள் இவர்கள். அத்துடன் உலக இலக்கிய புதுமைகளைத் தமிழுக்குக் கொண்டு வந்தவர்களும் இவர்கள் தாம், தமிழ் இலக்கணம், உரைநடை, செய்யுள் உள்ளிட்ட அனைத்து வகைகளிலும் புதுமைகளைப் படைத்து தமிழின் உயிரோட்டத்தை மிகச் செழுமைப்படுத்தியவர்கள் இவர்கள். ஐரோப்பாவிலிருந்து வந்து சமயப்பணி மூலமாக சமூகப்பணிக்காகத் தம்மை அர்பணித்துக் கொண்டு வாழ்ந்த பல பாதிரிமார்கள் தமிழிலும் புலமைப்பெற்று தமிழ் பணியாற்றியுள்ளனர். அந்தவகையில் வீரமாமுனிவர் என்று அழைக்கப்பட்ட காண்ஸ்டாண்டியஸ் ஜோஸப் பெஸ்கி தமிழுலகமே என்றும் வியந்து போற்றுவதற்குறிய பெருமைக்குரியவர் ஆவார்.
பிறப்பு:
இறைமகன் இயேசுவின் பிரதிநிதியாக உலகையாளும் பாப்பரசரின் ஆட்சிப்பீடம் உள்ளதும், வெர்ஜில், தாந்தே போன்ற பெருங்கவிஞர்கள் தோன்றியதும், கலை, இலக்கியம் ஆகிய துறைகளில், மறுமலர்ச்சி அரும்பியதும், ஈரறமும் முச்சீரும் சுகமோர் ஏழும் நிலவுவதும் ஆகிய பெருமைகளை உடையது இத்தாலிய நாடு. இந்நாட்டில் வர்ஜில் மாண்டுவா மாவட்டத்தில் காஸ்திக் கிளியோன் என்னும் ஊரில் 08.11.1680 ல் டான் கொண்டல்போ பெஸ்கிக்கும் எலிசபெத் அம்மையாருக்கும் நன்மகனாய் பிறந்தார்.

வ.ந.கிரிதரனின் பாடல் - இருப்பைப் புரிந்து கொள்ளல்!
இப்பாடலில் மேனாட்டு, கீழ்நாட்டு வாத்தியக் கருவிகள் எல்லாவற்றையும் ஒன்றாகப் பாவித்திருக்கின்றேன். அத்துடன் இராகம் - ஆனந்த பைரவியைப் பாவித்து உருவாக்கும்படி செயற்கை நுண்ணறிவைப் பணித்தேன். அதில் எவ்வளவுதூரம் அது வெற்றி அடைந்திருக்கின்றது என்பதை இசை வல்லுநர்கள்தாம் கூற வேண்டும். பாடல் அற்புதமாகவே பாடப்பட்டிருப்பதாகவே கேட்கையில் நான் உணர்ந்தேன். நீங்களும் அப்படியே உணர்வீர்கள் என்று கருதுகின்றேன். பாடலைக் கேட்க - https://www.youtube.com/watch?v=It5rpmhrFyU
வ.ந.கிரிதரனின் பாடல் - இருப்பைப் புரிந்து கொள்ளல்!
- இசை & குரல் - SUNO AI. ஓவியம் - கூகுள் AI
விரிந்து கிடக்கிறது பேர் அண்டம்.
புரிந்து கொள்ளவே முயற்சி செய்கின்றேன்.
இருக்கும் இருப்பைப் புரிந்து கொள்வது
இன்பம் மிக்கது. ஊக்கம் தருவது.
இருப்பை அறிவதும் அறியும் பொருட்டு
இருப்பது என்றால் அதுபோதும் எனக்கு.
விரிந்து கிடக்கிறது பேர் அண்டம்.
புரிந்து கொள்ளவே முயற்சி செய்கின்றேன்.