இரணைமடுக்குளத்திலிருந்து யாழ் மாவட்டத்துக்கு..! - வ.ந.கிரிதரன் -
அஞ்சலி: மலேசியத் தமிழ் எழுத்தாளர் வே.ம.அருச்சுணன் மறைவு! - வ.ந.கிரிதரன் -
மலேசிய எழுத்தாளர் வே.ம.அருச்சுணன் அவர்கள் மறைந்த செய்தியினை எழுத்தாளர் யோ.புரட்சி அண்மையில் முகநூலில் பகிர்ந்திருந்தார். பதிவுகள் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமானவர் வே.ம.அருச்சுணன். அவரது படைப்புகள் பல 'பதிவுகள்' இதழில் வெளியாகியுள்ளன. சமுதாயப்பிரக்ஞை அவரது எழுத்துகளில் படர்ந்திருக்கும். மலேசியத் தமிழர்களின் உரிமைக்காய் அவை குரல்கொடுக்கும். மலேசியத் தமிழர்கள்தம் வரலாற்றை அவை பதிவு செய்யும், அவரது 'வேர் மறந்த தளிர்கள்' என்னும் நாவலும் பதிவுகள் இதழில் தொடராக வெளியாகியுள்ளது. அந்நாவலுக்கு முன்னுரையொன்றும் கேட்டு அனுப்பியிருந்தேன். நூல் வெளியானதா என்பது தெரியவில்லை. அவரது மறைவு பற்றிய மேலதிகத்தகவல்களைப் பெற இணையத்தில் தேடிப்பார்த்தேன். எவையும் அகப்படவில்லை. அருச்சுணனின் மறைவு பற்றிய மேலதிக விபரங்களை அறிந்த மலேசிய நண்பர்கள் எனது மின்னஞ்சலுக்கு அவற்றை அனுப்பி வையுங்கள். எனது மின்னஞ்சல் முகவரி: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். அவரது மறைவு பற்றி எழுத்தாளர் யோ.புரட்சியின் முகநூற் பதிவினைக் கீழே தருகின்றேன். அவரது மறைவால் வாடும் அனைவர்தம் துயரிலும் 'பதிவுக'ளும் பங்குகொள்கின்றது. தனிப்பட்டரீதியில் நானும் பங்குகொள்கின்றேன்.
எழுத்தாளர் யோ புரட்சியின் முகநூற் பதிவு:
"மலேசியா வே.ம.அருச்சுணன் அவர்கள் காலமான துயரச்சேதி. ('1000 கவிஞர்கள் கவிஞர்கள்' படைப்பாளி). நேரே கண்டதில்லை, உள்ளத்தால் தள்ளி இருந்ததில்லை. எமது பெயரைச் சொல்லிச்சொல்லி தினம் வாழ்த்துவார். எங்கள் குடும்பத்திலுள்ளோர் பெயரைச்சொல்லியும் வாழ்த்துவார். அவருக்கு இருந்த முக்கியமான ஆவல் '1000 கவிஞர்கள் கவிதைகள்' பெருநூலினை பார்த்துவிட என்பது. முகநூலில் வெளிப்படையாகவே இது பற்றி அடிக்கடி எழுதியிருந்தார். அவரது தொலைபேசியூடாக தொடர்பு கிட்டிய பின்பு பெருநூலினை மலேசியா அனுப்பி இருந்தோம். அதனைப் பற்றி வலையொளியில்(யூ டியூப்பில்) பதிவு ஒன்றினையும் செய்திருந்தார். இந்த நூல்தான் அவருக்கும், எமக்கும் உறவுப்பாலமாகி நின்றது. குடும்பமாகச் சேர்ந்து அந்நூலினை கொண்டாடி இருந்தார். அந்தப் புகைப்படங்களையும் அனுப்பி இருந்தார். குடும்பப் புகைப்படங்கள் வெளியே இட வேண்டாம் என்றார். அவரிடம் பெருநூல் சென்று சேர்ந்த திகதியான 23.02.2021இல் அவர் இந்தச் செய்தியை அனுப்பினார். வணக்கமும் வாழ்த்துகளும் யோ புரட்சி! தாங்கள் எனக்கு அன்புடன் அனுப்பி வைத்த '1000 கவிஞர்கள்' நூல் நேற்று 22.2.2021 திங்கள் மதியம் இனிதே கிடைக்கப் பெற்றேன். மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். தங்களின் அயரா முயற்சியில் மலர்ந்த அந்த நூலின் பக்கங்களைப் புரட்டும் போது பரவசமடைந்தேன்! உங்கள் உழைப்பைக் கண்டு அதிசயப்பட்டேன்.வாழ்த்துகள். தங்களது சார்பில் எனது துணைவியார் அந்நூலை எனக்கு அன்புடன் பரிசாக வழங்கி வாழ்த்தினார். அந்நூல் குறித்து எனது எண்ணப்பதிவைத் தங்களுக்குப் பின்னர் அனுப்பி வைக்கிறேன். தாங்கள் சொன்னது போல் மனமுவந்து நூலை அன்புடன் எனக்கு அனுப்பியமைக்கு மிக்க நன்றி. அன்புடன், கவிஞர் வே.ம.அருச்சுணன்,மலேசியா. 23.2.2021.
வே.ம.அருச்சுணன் அவர்களே! மாயமாக கரைந்துகொண்டிருக்கும் இந்தப் பூவலக வாழ்வில் வஞ்சகமின்றி எம்மை நேசித்த பண்பாளர்களில் தாங்கள் முக்கியமானவர். உங்கள் ஒவ்வொரு எழுத்திலும் அன்பும் சேர்ந்திருக்கும். உங்களோடு சில நிமிடங்களாவது பேச்சிலே உரையாடியமை மறக்கவியலா துளிகள். வருடக்கணக்காய் எழுத்தூடே இதயம் இணைந்திருந்தது. வே.ம.அருச்சுணன் அவர்களின் இழப்பினாலே துயருற்றிருக்கும் உறவுகளோடு எமது துயரினை பகிர்ந்து அவர்களுக்கு ஆறுதல் சொல்கிறோம்."
லண்டன் (கனடா) துயர் - வ.ந.கிரிதரன் -
ஜூன் 6 கனடா வரலாற்றில் துயர் நிறைந்த ஒரு நாளாக வரலாற்றில் இடம் பெற்றுவிட்டது. அமைதியான ஒண்டாரியோ மாகாணத்திலுள்ள லண்டன் நகரில் , மாலை நேர உலாவுக்காக வீதியில் சென்று கொண்டிருந்த முஸ்லிம் குடும்பமொன்றின் நான்கு உறுப்பினர்களை முஸ்லிம் இனத்தின் மீது வெறுப்புணர்வு மிக்க இருபது வயது இளைஞன் ஒருவன் தனது 'பிக் அப் ட்ரக்'கால் மோதிக்கொலை செய்துள்ளான். அக்குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது வயதுச் சிறுவன் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளான். அக்குடும்பத்தினர் 14 வருடங்களுக்கு முன்னர் நல்வாழ்வுக்காகப் பாகிஸ்தானிலிருந்து கனடாவுக்குப் புலம்பெயர்ந்தவர்கள். இப்படுகொலைச் சம்பவத்தில் மரணமானவர்கள் விபரங்கள் வருமாறு: ஜும்னா அஃப்சால் (Yumna Afzaal, 15), மடிகா சல்மான் (Madiha Salman, 44), தலாட் அஃப்சால் (Talat Afzaal, 74) & சல்மான் அஃப்சால் (Salman Afzaal, 46). படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் ஃபயெஸ் ( Fayez, 9).
வாழும்காலத்தில் வாழ்த்துவோம்: ஜூன் 09 பேராசிரியர் மௌனகுருவுக்கு பிறந்த தினம்! மகாபாரதம் - சார்வாகனனை எமக்கு படைப்பிலக்கியத்தில் வழங்கிய பன்முக ஆளுமை! - முருகபூபதி -
இலக்கியப்பிரவேசம் செய்த ( 1972 ) காலப்பகுதியில், நான் சென்னை வாசகர் வட்டம் வெளியிட்ட அறுசுவை என்ற ஆறு குறுநாவல்கள் இடம்பெற்ற நூலைப்படித்தேன். அதில் சார்வாகன் என்ற பெயரில் ஒருவர் அமரபண்டிதர் என்ற குறுநாவலை எழுதியிருந்தார். அவர் ஒரு மருத்துவநிபுணர் என்ற தகவல், நான் அவுஸ்திரேலியாவுக்கு வந்த பின்னர்தான் தெரியும். அவர் தொழு நோயாளர்களுக்கு சிறந்த சிகிச்சையளித்தமைக்காக இந்திய அரசினால் பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டவர். எங்கள் மூத்த தமிழ் அறிஞர் கி. இலக்ஷ்மண அய்யரின் துணைவியார் பாலம் அவர்களின் ஒன்றுவிட்ட சகோதரர். மெல்பனுக்கு அவர் வந்தபொழுது எனக்கு அறிமுகப்படுத்தினார் திருமதி பாலம் லக்ஷ்மணன். சார்வாகன், அவரது இயற்பெயரல்ல. அந்தப் புனைபெயரின் பின்னாலிருந்த கதையை தமிழக சார்வாகனனே சொன்னார்.
மகாபாரதத்தில் குருஷேத்திர களத்தில் கௌரவர்களை அழித்து வெற்றிவாகைசூடிய பாண்டவர்கள், தருமருக்கு பட்டாபிஷேகம் சூட்டும்விழாவில் அந்தச் சபையிலிருந்து எழுந்து, அந்த வெற்றியின் பின்னாலிருக்கும் பேரழிவை சுட்டிக்காண்பித்து கடுமையாக விமர்சித்தவர் சார்வாகன் என்ற முனிவர். அவரது கூற்றால் வெகுண்டெழுந்த மக்கள் அவரை அடித்தே கொன்றுவிட்டார்களாம். சார்வாக மதம் என்ற புதிய கோட்பாடு உருவானது என்றும் பாஞ்சாலியும் அந்த மார்க்கத்தை பின்பற்றியதாக கதை இருப்பதாகவும் சார்வாகன் என்ற புனைபெயரைக்கொண்டிருந்த மருத்துவர் ஸ்ரீனிவாசன் சொன்னபொழுது மகாபாரதத்தின் மற்றுமொரு பக்கத்தை தெரிந்துகொண்டேன். துணிவுடன் தனக்கு சரியெனப்பட்டதைச் சொன்ன, சார்வாகன் பற்றிய முழுமையான கதையை பல வருடங்களின் பின்னரே இலக்கியப்பிரதியாக படித்தேன்.
சினிமாவிலும் அரசியலிலும் சாதித்திருக்கும் முழுநேர எழுத்தாளரின் வாழ்க்கைப்பயணம்! - முருகபூபதி -
ஜூன் 03 கலைஞர் கருணாநிதி பிறந்த தினம்
” கருத்து முரண்பாடு வந்தபின்னரும் நண்பர் எம்.ஜி.ஆர். என்னை கலைஞர் என்றுதான் விளித்தார். ஆனால், நான் எழுதிக்கொடுத்த வசனங்களுக்கு திரைப்படத்தில் பேசி நடித்த ஜெயலலிதா தன்னைப்பற்றி மேடைகளில் விமர்சிக்கும்போது, “ ஏய் கருணாநிதி” என்றுதான் திட்டுகிறார்” இவ்வாறு தனது ஆதங்கத்தை பலவருடங்களுக்கு முன்னரே தெரிவித்திருப்பவர் தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி.
அவருடைய இந்த ஆதங்கத்தை ஒரு வார இதழ் “சொன்னார்கள்” என்ற தலைப்பில் வெளியிட்ட கருத்துக்களில் படிக்கநேர்ந்தது.
கருணாநிதிக்கு, கலைஞர் என்ற பட்டத்தை அவர் எழுதிய தூக்குமேடை நாடகத்தின் அரங்காற்றுகையின்போது நடிகவேள் எம்.ஆர். ராதா வழங்கினார் என்பது தகவல். நடிகவேள் ராதா மாத்திரமின்றி பின்னாளில் அவரது வாரிசுகளான எம்.ஆர்.ஆர். வாசு, ராதா ரவி, ராதிகா, வாசுவிக்ரம் ஆகியோருக்கும் மாத்திரமின்றி, சிவாஜி, எம்.ஜீ.ஆர், சகஸ்ரநாமம், கே.ஆர். ராமசாமி, கே. ஏ. தங்கவேலு, ரி.எஸ். பாலையா, பி. எஸ்.வீரப்பா, எஸ்.வி. சுப்பையா, ரங்கராவ், நாகையா, ஆர். எஸ். மனோகர், என். எம். நம்பியார், எஸ்.ஏ. அசோகன், எஸ்.எஸ். ராஜேந்திரன், ஜெய்சங்கர், சிவகுமார், பிரசாந்த், நெப்போலியன், விஜயகுமார், சத்திய ராஜ், மற்றும் கண்ணாம்பா, ராஜம்மா, டி.ஆர். ராஜகுமாரி, பானுமதி, பத்மினி, மனோரமா, விஜயகுமாரி, ராஜம், ஜெயலலிதா, சரோஜாதேவி, லட்சுமி, ஶ்ரீபிரியா, அம்பிகா உட்பட எண்ணிறந்த நடிகர்கள், கலைஞர் எழுதிய வசனங்களைப்பேசி நடித்தவர்களே!
கலைஞர் கருணாநிதி நினைவாக... - வ.ந.கிரிதரன் -
கலைஞர் மு.கருணாநிதியின் பிறந்தநாள் கொரோனா காலகட்டமாதலால் ஆரவாரமின்றி கடந்து சென்றிருக்கின்றது. திமுகவினர் ஆட்சியிலிருக்கும் இச்சமயத்தில் வழக்கமான சூழல் நிலவியிருக்குமென்றால் இடம்பெற்றிருக்கக் கூடிய ஆரவாரத்தை நினைத்துப்பார்க்க முடிகின்றது.
அரசியலுக்கு அப்பால் கலைஞரின் முக்கிய பங்களிப்புகளாக நான் கருதுவது தமிழ் இலக்கியப்பங்களிப்பு மற்றும் அவரது திரையுலகப்பங்களிப்பு. இலக்கியப்பங்களிப்பு என்னும்போது அவரது ஆட்சியில் உருவாக்கப்பட்ட தமிழ் இலக்கியரீதியிலான திட்டங்களையும் குறிப்பிடலாம்.
கன்னியாகுமரியில் அவரது ஆட்சியில் அமைக்கப்பட்ட வள்ளுவர் சிலை இன்று முக்கியமான நில அடையாளச் சின்னமாக மாறியிருக்கின்றது. அவரை எப்பொழுதும் அச்சிலை நினைவு கூர வைக்கும்.
என் பால்ய பருவத்தில் நான் கலைஞரை அறிந்துகொள்ள வைத்த படைப்புகளிலொன்று 'குமுதம்' சஞ்சிகையில் அவர் எழுதிய 'ரோமாபுரிப்பாண்டியன்' சரித்திர நாவல். வாசிக்கத்தொடங்கியிருந்த என்னை மிகவும் கவர்ந்த மொழி நடையில் அமைந்திருந்த தொடர்நாவல். ராணிமுத்து பிரசுரமாகவும் அவரது நாவலான 'வெள்ளிக்கிழமை' வெளியாகியிருந்தது. சென்னையில் நடைபெற்ற உலகத்தமிழ் ஆராய்ச்சி மகாநாட்டு மலரில் வெளியான அவரது 'பூம்புகார்' நாடகத்தையும் குறிப்பிடலாம். இவைதாம் கலைஞரை எனக்கு அறிமுகப்படுத்தின.
சிலப்பதிகாரத்தைத் தனது எழுத்துகள் மூலம் பட்டிதொட்டியெங்கும் கொண்டு சென்றவர் கலைஞர். 'பூம்புகார்' திரைப்படம் முக்கியமான திரையுலகப்பங்களிப்பு. அவரது 'சங்கத்தமிழ்', 'தொல்காப்பியப்பூங்கா', குறளோவியம்' ஆகியவை முக்கியமான அவரது படைப்புகள். அவர் ஆட்சியில் அவரமைத்த வள்ளுவர் கோட்ட'மும் முக்கியமான பங்களிப்புகளிலொன்று.
கவிதை: பார்போற்றும் பாரதி! - முனைவர் கோ. புஷ்பவள்ளி -
பாரதத்தாய் பெற்றெடுத்த மைந்தன்!
பார்போற்றும் கவி; அவன் தான் எங்கள் பாரதி!
அச்சமில்லை! அச்சமில்லை! என அச்சம் தவித்தவன்!
ஆண்மையின் அடையாளமாகத் திகழ்ந்து!
ஏறுபோல் நடந்து! கொடுமையை எதிர்த்து போராடி!
சரித்திரம் பல படைத்து!
சாவதற்கு அஞ்சாமல் சாத்திரம் கலைந்து!
பல சாக்கடைகளை அகற்றி!
சமூகப் புரட்சி செய்த சாதனையாளன்!
கவிதை: உனக்காய் என்ன செய்தோம்..? - பத்மா இளங்கோவன் (பத்மபாரதி) -
வண்ண வண்ண நிறங்களிலே
வகை வகையாய்ச் சட்டை தைத்து
எங்களைத் தான் அலங்கரித்து
சித்திரமாய்ப் பார்த்திருந்த
எம் தாயே..
உனக்காய் நாம்
என்ன செய்தோம்..?
நீராட்டிச் சோறூட்டி
நெற்றியிலே பொட்டிட்டு
சின்ன அடியெடுத்து
சித்திரத் தேர் அசைகையிலே..
உள்ளம் குளிர
உச்சி முகர்ந்தவளே..
உனக்காய் நாம்
என்ன செய்தோம்..?
கவிதை: விதியொன்று செய்! - முனைவர் பீ. பெரியசாமி -
கொரோனா கொடும் நோய்த்தொற்று
ஆட்டிப்படைக்கிறது அகிலத்தை.
விட்டு விலகவில்லை நவயுக கர்ணன்கள்
எப்போதும் உதவிக்கரம் நீட்டி காக்கிறார்கள்.
மரணித்துக் கொண்டே இருக்கிறார்கள்
நவயுக மீட்பர்கள்.
கவிதை: ஆனை பார்த்தவர்! - வ.ந.கிரிதரன் -
சொன்னார் நண்பர்
"சொல்லப்படாதவரிவர்" என்று.
அதற்கு நான் கூறினேன்
"ஆனை பார்த்த குருடர்களிடம்
அதற்கு விளக்கம் கேட்டிருக்கின்றீர்கள்.
அதனால்தானிந்த குழப்பம்"என்று.
"குழப்பமா? என்ன குழப்பம்?"
என்று தலையில் கை வைத்தார் நண்பர்.
"சொல்லப்படாதவர் பற்றிச் சொல்லியிருக்கின்றீர்களே"
"சொல்லியிருக்கின்றேன் சொல்லப்படாதவர் பற்றி.
ஆமாம்! நீங்கள் சொல்லுவது சரியே"
சொன்னார் பதிலுக்கு அவர்.
"அதுதான் கூறினேன் குழப்பமென்று" என்றேன்.
அதற்கும் அவர் "புரியவில்லை" என்று
மீண்டும் தலையில் கை வைத்தார்.
நிகழ்வுகள்: ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் இணைய வழிக் கலந்துரையாடல் - நூல்களைப் பேசுவோம்! பேசுபவர்: பேராசிரியர் செ.யோகராசா -
வாசிப்பும் யோசிப்பும் 373: கடுல்ல பதிப்பக வெளியீடாக தீபச்செல்வனின் 'நடுகல்' சிங்கள மொழியில்...!
எழுத்தாளர் தீபச்செல்வனின் நாவலான 'நடுகல்' சிங்கள மொழியில் 'கடுல்ல' பதிப்பக வெளியீடாக வெளியாகியுள்ளது. சிங்கள மொழிபெயர்ப்பினைச் செய்திருப்பவர் ஏற்கனவே பல தமிழ் நூல்களை மொழிபெயர்த்துள்ள எழுத்தாளர் ஜி.ஜி.சரத் ஆனந்த.
இச்செய்தியினை அவரே அறியத்தந்திருந்தார். நன்றி சரத் ஆனந்த. நாவலாசிரியர் தீபச்செல்வனுக்கும் வாழ்த்துகள்.
ஜி.ஜி.சரத் ஆனந்த உண்மையிலேயே தற்போதுள்ள சூழலில் மகத்தான சேவையொன்றினைச் செய்து வருகின்றார். சிங்கள, தமிழ் மக்களுக்கிடையில் இவரது மொழிபெயர்ப்புகள் புரிந்துணர்வை வளர்க்க, தமிழ்ப்படைப்புகளை சிங்கள மக்கள் அறிந்து
கொள்ள இவரது மொழிபெயர்ப்புகள் வழி வகுக்கின்றன.
பால்ய பருவத்து நண்பர்களின் துயரம்! - வ.ந.கிரிதரன் -
என் பால்ய , பதின்ம பருவத்துத் தோழர்களில் முக்கியமான இருவரை என்னால் மறக்க முடியாது. அவர்களுடன் என்னால் முடிந்த வரையில் நான் தொடர்பிலிருந்தேன். ஒருவர் என் சிந்தனையாற்றலை வளர்ப்பதற்கு உதவினார். அடுத்தவரோ என்னை எழுதுவதற்கு ஊக்குவித்தார். நான் எழுதுவதற்கு அவர் மிகவும் உதவியாகவிருந்தார். அவர் தந்த ஊக்கமே என்னை மேலும் மேலும் எழுத வைத்தது. என் பால்ய பருவத்திலிருந்து பதின்ம மற்றும் இளமைப்பருவங்களிலும் அவர் என்னை ஊக்குவித்துக் கொண்டேயிருந்தார். இவர்கள் இருவரையும் என்னால் ஒரு போதுமே மறக்க முடியாது. என் வாழ்நாள் முழுவதும் என் நினைவுகளில் இவர்கள் நிறைந்தேயிருப்பார்கள்.
சு. தமிழ்ச்செல்வியின் “கீதாரி” நாவல் கதைச்சுருக்கமும் விமர்சனமும்! - முனைவர் பா. ஈஸ்வரன் -
கீதாரி நாவலின் ஆசிரியர் சு.தமிழ்ச்செல்வி கவிதையில் தொடக்கமாகி, சிறுகதையில் நடைபழகி, நாவலில் விருச்சமாகி நின்கின்றார். பல விருதுகளுக்குச் சொந்தக்காரர். குறிப்பிடத்தகுந்த தற்காலப் பெண்ணிய எழுத்தாளர்களில் இவரும் ஒருவர். இவரின் படைப்புகள் பல கல்வி நிறுவனங்களில் பாடமாக வைக்கப்பட்டுள்ள சிறப்பிற்குரியன. அந்த வகையில், ஆசிரியரின் அறிமுகச் செய்திகளையும், கீதாரி நாவலின் கதைச் சுருக்கத்தையும், விமர்சனத்தையும் இக்கட்டுரையில் காணலாம்.
ஆசிரியர் பிறப்பு
திருவாரூர் மாவட்டம் கற்பகநாதர் குளத்தில் 04.05.1971 ஆண்டு பிறந்தவர் சு.தமிழ்ச்செல்வி. தந்தை சுப்பிரமணி ஹோமியோபதி மருத்துவராகப் பணியாற்றியவர். தாய் முத்துலட்சுமி. இரண்டு சகோதரிகள், ஒரு சகோதரன், கடைசியாகப் பிறந்தவர் சு.தமிழ்ச்செல்வி.
கல்வியும் ஆசிரியப் பணியும்
பிறந்த ஊரான கற்பகநாதர் குளத்தில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்புவரை படித்தவர். ஆறாம் வகுப்பு, ஏழாம் வகுப்பு இடும்பாவனம் என்னும் ஊரில் முடித்தவர். எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்புவரை வேதாரண்யத்தில் கஸ்தூரிபாய் கன்யா குருகுலத்தில் படித்தவர். திருத்துறைப்பூண்டியில் ஆசிரியர் பயிற்சியை முடித்தவர்.
(முகநூற் பதிவுகள்) தமிழ் அழகியல் என்றால் என்ன? – இந்திரன் -
பிளேட்டோ, அரிஸ்டாட்டில், கன்பூஷியஸ் காலத்திலேயே எது அழகு என்பது குறித்த தேடல் தொடங்கிவிட்டது. அழகு குறித்த இத்தேடலைத் தத்துவ சாத்திரத்தின் ஒரு பகுதியாகவே உலகம் முழுவதும் இன்று வரை வளர்த்து வந்திருக்கிறார்கள். இத்தகைய தத்துவார்த்தத் தேடலை ‘அழகியல்’ (AESTHETICS) என்று பெயர்சூட்டி வளர்த்து மகிழ்ந்திருக்கிறார்கள். ஆனால், தமிழில் இது நிகழவில்லை. தமிழ் அழகியல் எனும் ஒரு துறையை நாம் வளர்த்தெடுக்கவில்லை. தொல்காப்பியர் என்கிற ஒருவரை நாம் ஓர் இலக்கணவாதியாகத்தான் இனம்கண்டிருக்கிறோமே தவிர, அவரை ஓர் அழகியல்வாதியாக நாம் இனம்காணவில்லை. சம்ஸ்கிருதத்தில் ‘நாட்டிய சாஸ்திரம்’ எழுதிய பரதமுனியை அழகியல் வாதியாக புரிந்துகொள்வதுபோல, காஷ்மீரத்தைச் சேர்ந்த அபினவகுப்தர் ஓர் அழகியல்வாதியாக அடையாளம் காணப்படுவதுபோல, ஐந்திணைக் கோட்பாடுகளை விரிவாக விளக்கியிருக்கும் தொல்காப்பியரைத் தத்துவார்த்த முறையில் நாம் ஆராயத் தவறிவிட்டோம். தொல்காப்பியர் ஓர் அழகியல்வாதி என்பதைத் தமிழர்களாகிய நாம் சொல்லத் தவறுகிறபோது, அவர் எப்படி ஓர் உன்னதமான அழகியல்வாதி என்பதை மலையாளக் கலை இலக்கியவாதியான அய்யப்பப் பணிக்கர்தான் நமக்கு எடுத்துக்காட்டுகிறார்.
இதற்குக் காரணம் என்ன?
முதலில் நாம் நமது ஓவியம், சிற்பம், கவிதை, இசை ஆகிய அனைத்தையும் பற்றி ஆராய்வதற்கான கோட்பாடுகளை மேற்குலகிலிருந்து மிக எளிதில் இறக்குமதி செய்துகொள்கிறோம். தற்காலக் கவிஞர்களும் ஓவிய, சிற்பக் கலைஞர்களும் தங்கள் படைப்புகளை எடைபோடுவதற்கான தத்துவார்த்தமான தராசுத் தட்டுகளை நாம் தமிழ்ப் பண்பாட்டு மண்ணிலிருந்து உருவாக்காமல், இரவல் சிந்தனைகளோடேயே திருப்தி அடைந்துவிடுகிறோம். இன்னமும் மேலைச் சிந்தனையாளர்களே நமது சிந்தனை எஜமானர்களாக இருக்கிறார்கள். கீழைச் சிந்தனையாளர்கள் யார், அவர்களின் பெயர்கள் என்ன, அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது குறித்த தேடல்களைத் தமிழ் எழுத்தாளர்களும் ஓவிய, சிற்பக் கலைஞர்களும் கொண்டிருக்க வில்லை. தமிழ், தமிழன், தமிழ் அடையாளம் என்று பேசுவது கிரகமயமான இன்றைய உலகத்துக்கு ஒத்துவராத ஒன்று என்று நம்பத் தொடங்கிவிட்டோம். தமிழ் அழகியல் என்று பேசுவது ஓர் அரசியல் சொல்லாடலே தவிர, அது ஒரு தத்துவார்த்த சொல்லாடல் அல்ல என்று நம்பும் கலைஞர்கள் இங்கே நிறைந்து இருக்கிறார்கள். இத்தகைய நிலையில் தமிழ்க் கவிஞனுக்கும், சிற்பிக்கும், ஓவியனுக்கும் இரட்டைத்தலை முளைத்துவிடுகிறது. அவன் ஓர் உள்மனிதனாகவும் வெளிமனிதனாகவும் ஒரே நேரத்தில் வாழ நிர்பந்திக்கப்படுகிறான்.
இன்று மே 29 ஆம் திகதி சண்முகம் சபேசன் நினைவு தினம் அவர் மறைந்த பின்னர் வெளியாகும் காற்றில் தவழ்ந்த சிந்தனைகள்! - முருகபூபதி -
இலங்கை வடபுலத்தில் யாழ்ப்பாணம், நீராவியடியில் 1954 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 06 ஆம் திகதி சண்முகம் – பர்வதலக்ஷ்மி தம்பதியரின் மூத்த புதல்வனாகப் பிறந்த சபேசன், கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி அவுஸ்திரேலியா மெல்பனில் மறைந்தார். யாழ். இந்துக்கல்லூரியின் முன்னாள் மாணவரான அவர், 1989 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் மெல்பனுக்கு புலம்பெயர்ந்து வந்தபின்னர், அவுஸ்திரேலியா ஈழத்தமிழ்ச்சங்கம், தமிழர் ஒருங்கிணைப்புக்கு குழு, தமிழர் புனர்வாழ்வுக்கழகம் முதலானவற்றில் அங்கம் வகித்தவாறு, மெல்பன் 3 C R தமிழ்க்குரல் வானொலியில் கால் நூற்றாண்டு காலம் ஊடகவியலாளராகவும் எழுத்தாளராகவும் இயங்கிய “தமிழ்த் தேசிய பற்றாளர்". 3 C R தமிழ்க்குரல் வானொலியில் தங்கு தடையின்றி, வாரம்தோறும் அரசியல் விமர்சன கட்டுரைகளை எழுதி தனது குரலிலேயே ஒலிபரப்பினார். அவ்வாறு எழுதப்பட்ட கட்டுரைகளை தொகுத்து நூலாக்கவேண்டும் என்ற எண்ணத்திலேயே காலத்தை கடத்திவிட்டு, எதிர்பாராமல் உடல்நலம் பதிப்புற்று மறைந்துவிட்டார்.
ஆய்வு: படகர்களின் இறப்புச்சடங்கில் “செகிணி” எனும் ஆப்பி! - முனைவர் கோ. சுனில்ஜோகி -
இனக்குழு மக்களின் வாழ்க்கைவட்டச் சடங்குகளுள் மரபு, பண்பாடு, நம்பிக்கை, சமூகம் மற்றும் குறியீட்டு நிலைக்கான பன்பரிமாணங்களை உட்செறித்ததாக இறப்புச்சடங்குத் திகழ்கின்றது. ஆன்மா மற்றும் உடல் எனும் இருநிலைகளை மையமிட்டு நிகழ்த்தப்படும் இறப்புச் சடங்கில் அவ்வினக்குழு மக்களின் நம்பிக்கையே முன்னிலை வகிப்பதோடு அச்சடங்கின் போக்கினையும் தீர்மானிக்கின்றது எனலாம். இறப்புச்சடங்கார்ந்த எல்லா சடங்கியல் வினைகளும், அச்சடங்கிற்குரிய புழங்குபொருட்களும் அச்சடங்கின் மரபு மற்றும் பண்பாட்டுத் தொடர்ச்சியின் நிலைக்களனாகவும், மரபு மற்றும் பண்பாட்டினைக் காக்கும் பெட்டகமாகவும் திகழ்கின்றன. அவ்வகையில் யுனெஸ்கோவால் உலகப் பூர்வகுடிகளாக அங்கீகரிக்கப்பட்ட, தொன்மையான வாழ்வியலைக் கொண்டு விளங்கும் நீலகிரி, படகர் இன மக்களின் இறப்புச் சடங்கில் மரபு, பண்பாடு, மரபறிவு, சடங்கியல், குறியீடு, புனிதம், சமூகம், தொன்மை, வழிபடுபொருள் மற்றும் வாழ்முறை போன்ற பன்பரிமாண கூறுகளைத் தன்னுள் உட்செறித்துள்ள தொன்மையான புழங்குபொருளாக ‘ஆப்பி’ விளங்குவதை நிறுவுவதாக இந்த ஆய்வுக்கட்டுரை அமைகின்றது.
அருணா நாராயணனின் கவிதைகள் இரண்டு: நிலைப்புணர்தல் & வெஞ்சனம்!
1. கவிதை: நிலைப்புணருதல்! - அருணா நாராயணன் -
உண்மைக்கும் நம்பிக்கைக்கும்
நம்பிக்கைக்கும் உண்மைக்கும்
நடுவில் என்ன நிலை.
எடுகோள்கள் இன்றும்
மாறி மாறிக் கொண்டே
கடவுளையும் சாத்தானையும்
மோத விட்டுவிட்டு
பசிக்காய் அலைந்து கொண்டிருக்கின்றன.
இல்லாததை இருப்பதாய்
நம்பும் ஒருவர்
அந்த நம்பிக்கையிடம் கடவுச்சீட்டு வாங்கிக் கொண்டார்.
இருந்தும் இருப்பதை
உணராத அவரும்
அந்த அறிவிடம் அனுமதி
பெற்றுக் கொண்டார்.
அறிவும் நம்பிக்கையும்
எதிர் எதிர் திசையில் பயணித்து கொண்டு இருந்தது.
ஆனாலும் நடுவில் மனம் மட்டும்
ஒற்றைக் கோடாய் புறப்பட்ட இடத்தில் கோட்பாடுகளை
துவைத்து கொண்டு இருந்தது.
கவிதை: உனக்குத் தெரியாதாம் ! - மின்னல் (அமெரிக்கா) -
- கவிஞர் மின்னல் எழுதிய புகலிடப்பெண்ணொருத்தியின் அனுபவம். இக்கவிதை கூறும் பொருளையிட்டு முக்கியத்துவம் வாய்ந்தது. பல்வேறு தளைகளுக்குள் சிக்கி , அவற்றிலிருந்து வெளியே வர முடியாமல் தவிக்கும் பெண்களை நோக்கி அவற்றிலிருந்து வெளியே வா என அறை கூவல் விடுக்கிறது இக்கவிதை. இக்கவிதைக்கு ஓவியம் வரைந்தவர்: ஓவியர் அருந்ததி. - பதிவுகள் -
உனக்குப் பணத்தின் பெறுமதி தெரியாதாம்.
"சாகும் போது நான் என்ன காசை
கொண்டா போகப்போகிறேன் - எல்லாம்
உனக்கும் பிள்ளைகளுக்கும் தானே" என்று
உணர்ச்சியுடன் சொல்லுவான்.
அதனால் தான் அவன் உன்னுடைய வங்கி கணக்கையும்
தானே கட்டுப்படுத்துவானாம்.
இப்ப நீ அவனிடம் கை நீட்டி நிற்கின்றாய்.
உன் சம்பளத்தை கூட செலவழிக்க
அவனுடைய அனுமதி வேண்டும்.
நீ கேட்பது எல்லாம் வீண் செலவாம்.
அவனுடைய குடி பழக்கம் பணத்தை
விழுங்குகிறது. யார் இதை கேட்க முடியும்?
அப்படித்தான் மெல்ல மெல்ல
உன் வாழ்வு அவனுடைய கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
எஸ் பொன்னுத்துரை ஈழத்து செவ்வியல் எழுத்தர்! - எஸ்.நடேசன் -
‘உங்கள் ஈரல் பல காலம் ஓவர்டைம் செய்த ஈரல்’என்று எஸ்.பொ. மரணிப்பதற்கு சில கிழமைகள் முன்பு அவர் ‘ஈரலில் பிரச்சினை’என்றபோது கூறினேன்.
‘அது சரிதான்’ என்று மெதுவான சிரிப்பு தொலைப்பேசியில் கேட்டது.
‘உடலைப் பார்த்துக் கொள்ளுங்கள்’
‘அதுதான் அநுரா பார்க்கிறான்’
‘அம்மாவாலும் அநுராவாலும் நீங்கள் அதிர்ஷ்டசாலி. எனது மனைவியின் தமையன். சமீபத்தில் சுவாசப் புற்றுநோயால் இறந்தவர் .வாழ்க்கையில் மனிதன் தண்ணியோ சிகரட்டோ வாயில் வைக்காதவர். நோய்கள் எவரையும் விட்டு வைப்பதில்லை’என்றேன்.
‘தமிழ் இலக்கிய தோட்டத்தில் எஸ்.பொ. என்ற பொன்னுத்துரை நீண்டு, பருத்து , அறுபது வருடங்கள் மேல் ஓங்கி வளர்ந்து கிளைவிட்ட வேப்பமரம் போன்றவர். அவரால் வெளிவந்த பிராணவாயுவைச் சுவாசித்து எழுதத் தொடங்கிய என் போன்றவர்களின் கையைப் பிடித்து இலக்கியத்தின் ஏடு தொடக்கியவர். இந்தப்பயணத்தில் பல வருடங்கள் மனதளவில் என்னுடன் துரோணராக வந்தவர். சிலவேளையில் சிலருக்கு வேப்பம் கசப்பாக இருந்தாலும் ஈழத்து இலக்கியத்தில் முக்கிய பாவனைப் பொருளாக அவர் இருந்தார். இப்படிப்பட்ட எஸ்.பொ. வை ஆரம்பக்காலத்தில் நான், எனது நண்பனின் தந்தையாகவே சந்தித்தேன். எனது மனைவியும் அநுராவும் அவுஸ்திரேலியாவில் மருத்துவ பரீட்சைக்கு படித்த காலத்தில் அவரைச் சந்தித்தேன். அதற்கு முன்பு எஸ்.பொ.வை சந்தித்ததில்லை.கேள்விப்பட்டதில்லை.
அவுஸ்திரேலியாவில் உதயம் நடத்திய காலத்தில் நான் எழுதிய வீட்டு மிருகங்கள் மருத்துவ அனுபவம் பற்றிய கதைகளை ‘தமிழ் இலக்கியத்தில் எவரும் தொடாத பகுதியை நீ எழுதி இருக்கிறாய்” எனச் சொல்லி அவற்றை புத்தகமாகப் பிரசுரிக்க என்னைத் தூண்டினார். அதன்பின் என்னால் மதவாச்சிக் குறிப்புகளாகப் பல காலத்தின் முன்பு, எழுதிக் கிடப்பிலிருந்த கை எழுத்துப்பிரதியை வண்ணாத்திக்குளமாக்கத் தூண்டினார். அதன்பின் எனது இரண்டு புத்தகங்களை பதிப்பித்தார்.