13 ஆவது திருத்தச் சட்டமூலம் பற்றிய முன்னாள் வடகிழக்கு மாகாண முதலமைச்சரும் , மார்க்சிய அறிஞருமான அ.வரதராஜப்பெருமாளின் கருத்துகள்!
"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு." - வள்ளுவர் -
தற்போதுள்ள அரசியல்வாதிகளில் மிகுந்த அரசியல் ஞானம் மிக்கவராக (கல்வி, அரசியல்) இவரை என்னால் அடையாளம் காண முடியும். இவர் மார்க்சிய அறிஞர்களில் ஒருவர். எண்பதுகளில் இவரது மார்க்சியக் கட்டுரைகளை 'குமரன் ' சஞ்சிகையில் வாசித்திருக்கின்றேன். ஆனால் இவர் தற்போது இலங்கைத் தமிழர் அரசியலில் முக்கியமானவர்களில் ஒருவர் அல்லர். இவர் தற்போது தனது அனுபவங்களைக் கடைந்தெடுத்து உருவான ஞானத்தை வெளிப்படுத்தும் எண்ணங்களை வெளிப்படுததி வருகின்றார்.
அவ்வகையில் அண்மையில் இவர் பகிர்ந்திருந்த இலங்கை , இந்திய அரசுகளுக்கிடையிலேற்பட்ட 13ஆவது திருத்தச் சட்டமூலம் பற்றிய கருத்துகளை 'எதிரொலி' பத்திரிகையில் வெளியான அரவிந்தன் என்னும் ஊடகவியலாளரின் கேள்விகளுக்கு அது பற்றி அளித்திருந்த பதில்களைப் பகிர்ந்திருந்தார். தெளிவான பதில்கள். உபகண்ட அரசியலை நன்கு விளங்கியுள்ளதை வெளிப்படுத்தும் பதில்கள்.