* படங்களை அழுத்துவதன் மூலம் பெரியதாக, தெளிவாகப் பார்க்கலாம்.
பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் ஆறாவது சர்வதேசத் தமிழியல் ஆய்வு மாநாடு நாளை (18-01-2023) ஆரம்பமாகிறது. “ஈழத்தில் அச்சுப் பண்பாடும் பதிப்பும்” என்ற தொனிப்பொருளில் இந்த மாநாடு பேராதனைப் பல்கலைக்கழகக் கலைப்பீடக் கருத்தரங்க மண்டபத்தில் நாளையும் (18-01-2023) நாளை மறுதினம் (19-01-2023) இணையவழியாகவும் நடைபெறவுள்ளது. பேராதனைத் தமிழ்த்துறையின் ஆறாவது சர்வதேசத் தமிழியல் மாநாட்டின் இணையவழி அமர்வுகள் 19-01-2023 காலை 9 மணிக்கு ஆரம்பிக்கின்றன.
இணைவதற்கான வழி: Join Zoom Meeting
தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் ஸ்ரீ. பிரசாந்தன் தலைமையில் நிகழும் இந்த மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வு நாளை காலை 9 மணிக்கு நிகழவுள்ளது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகப் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பிரதித் துணைவேந்தர் பேராசிரியர் டபிள்யூ. எம். டி. மதுஜித் அவர்களும் சிறப்பு விருந்தினராகக் கலைப் பீடாதிபதி கலாநிதி பிரபாத் ஏக்கநாயக்க அவர்களும் கலந்து சிறப்பிக்கிறார்கள். ஆதார சுருதி உரையை பேராதனைத் தமிழ்த்துறையின் ஓய்வுநிலைப் பேராசிரியரும் அறிஞருமாகிய எம்.ஏ.நுஃமான் அவர்கள் “அச்சுத் தொழில் நுட்பமும் புத்தகப் பண்பாடும்: இலங்கைத் தமிழ்ச் சூழலை மையமாகக்கொண்ட ஒரு வரலாற்று நோக்கு” என்ற தலைப்பில் நிகழ்த்துகிறார். இந்த மாநாட்டில் ஈழத்தில் அச்சுப் பண்பாட்டு வரலாறு தொடர்பான ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய ஆய்வுத்தொகுதியும் வெளியிடப்படவுள்ளது.
இரண்டாம் நாள் மாநாடு (19-01-2023) காலை 9 மணிமுதல் இணையவழியாக இடம்பெறவுள்ளது. இரண்டாம் நாள் மாநாட்டில் பேராசிரியர் வீ.அரசு அவர்கள் “தமிழக, ஈழ அச்சுப் பண்பாடுகளின் வரலாறு” என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்துகிறார். இரண்டு நாட்களும் நடைபெறும் மாநாட்டில் இங்கைப் பல்கலைக்கழக அறிஞர்களும் ஆய்வாளர்களும் தமிழ்நாடு மற்றும் புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் ஆய்வாளர்களும் கலந்துகொள்கிறார்கள் நேரிலும் இணையவழியிலும் கலந்துகொள்கிறார்கள். இந்தச் செய்தியைப் பகிர்ந்து உதவுமாறும் நேரிலோ இணையவழியிலோ கலந்து சிறப்பிக்குமாறும் மாநாட்டுக்குழு சார்பில் அன்போடு வேண்டிக்கொள்கிறேன்.
நன்றி
கலாநிதி செல்லத்துரை சுதர்சன்
மாநாட்டு இணைப்பாளர்
தமிழ்த்துறை
பேராதனைப் பல்கலைக்கழகம், இலங்கை.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.