எம்ஜிஆர் பிறந்த தினம் ஜனவரி 17. அவர் எனக்கு என் பால்ய பருவத்தில் அறிமுகமானது திரைப்படங்கள் மூலம். முதலில் நினைவு தெரிந்து பார்த்தது 'எங்க வீட்டுப்பிள்ளை' . இரண்டாவதாக பார்த்தது 'ஆயிரத்தில் ஒருவன்'. முதல் பார்த்தலிலேயே குழந்தைகளான எங்களைக் கவர்ந்து விட்ட வசீகர முகம் அவருடையது.
'ஆயிரத்தில் ஒருவன்' பாடல்கள் எல்லாமே மனத்தில் நிலைத்து நிற்பவை. அவற்றில் கவிஞர் கண்ணதாசன் எழுதிய 'அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்' பாடல் எனக்கும் மிகவும் பிடித்த பாடல்களிலொன்று. மானுட விடுதலையை வேண்டும் வரிகள் இப்பாடலை வரலாற்றில் நிலைத்து நிற்க வைத்து விட்டன.
பாடலைக் கேட்க : https://www.youtube.com/watch?v=ZSHe7gfCnW8
திரைப்படத்தைப் பார்க்க : https://www.youtube.com/watch?v=hgNpAugsV18
கவிஞர் கண்ணதாசனின் பாடல் முழுமையாக:
- எம்ஜிஆரும் கவிஞர் கண்ணதாசனும் -
அதோ அந்த பறவை போல வாழவேண்டும்.
இதோ இந்த அலைகள் போல ஆடவேண்டும்.
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்.
காற்று நம்மை அடிமை என்று விலகவில்லையே.
கடல் நீரும் அடிமை என்று சுடுவதில்லையே.
காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே.
காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே.
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்.
தோன்றும்போது தாயில்லாமல் தோன்றவில்லையே.
சொல்லில்லாமல் மொழியில்லாமல் பேசவில்லையே.
வாழும்போது பசியில்லாமல் வாழவில்லையே.
போகும்போது வேறு பாதை போவதில்லையே.
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்.
கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை.
கோவில் போல நாடு காண வேண்டும் விடுதலை.
அச்சமின்றி ஆடிப்பாட வேண்டும் விடுதலை.
அடிமை வாழும் பூமி எங்கும் வேண்டும் விடுதலை.
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்.
- எம்ஜிஆரும் பாடகர் டி.எம்.செளந்தரராஜனும் -