அறிமுகம்: புதிய சொல் – இதழ் 7 (ஜூலை- செப் 2017)

‘புதிய சொல்’ தனது 7 வது இதழினை வெளியிட்டுள்ளது. வழமையான சிற்றிதழ் மரபின்படியே இதழ் தாமதம் குறித்த கவலையுடனும் பதிப்புத்துறையில் ஏற்படுகின்ற சிக்கல்களையும் சவால்களையும் குறித்த ஆசிரியர் குழுவின் அங்கலாய்ப்புக்களுடனும் இவ் இதழும் வெளிவந்துள்ளது. இப்போதெல்லாம் கையில் கிடைத்தவுடன் ஆணியடித்தால் போல் இருந்து படித்து முடிக்கும் வண்ணம் ஒரு சில இதழ்களே வெளிவருகின்றன. அந்த வகையில் புதிய சொல்லும் தனது 7வது இதழினை சமகால நிகழ்வுகளை பிரதிபலிக்கும் மிகச் சிறந்த சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகளுடன் மிக நேர்த்தியாக வெளியிட்டுள்ளது
சிறுகதைகள்
கிஸ்டீரியா – கற்சுதா - ஆயுதப்போராட்ட ஆரம்ப காலத்தில் ஆயுதக் குழுவொன்றினால் உளவாளியாகச் சந்தேகப்பட்டு ஒரு சிங்களப் பெண்ணிற்கு வழங்கப் பட்ட கொடூரமான தண்டனை குறித்து பேசுகின்றது.
ஏவல் - பாத்திமா மாஜிதா - முஸ்லிம் சமூகத்தில் பெண்கள் எதிர் கொள்ளும் சமூக அவலங்களையும் மதத்தலைவர்களின் போலித்தனங்களையும் சாடுகின்றது.
உறுப்பு - அனோஜன் பாலகிருஷ்ணன் -சிறு வயதில் சிங்கள இராணுவ வீரன் ஒருவனால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படும் சிறுவன் ஒருவன் எதிர்காலத்தில் எதிர்நோக்கும் ஆண்மை குறைவு குறித்து பேசுகின்றது.


இரண்டு விதமான எழுத்தாளர்கள் உண்டு. ஒருவகையினர் நரிகள் மாதிரி அவர்களுக்கு முழுக்காடும் பாதுகாப்பை அளிக்கும். எங்கும் நுளைந்து வருவார்கள். மற்றவர்கள் முள்ளம்பன்றிபோல். அவர்களது பாதுகாப்பு அவர்களது முட்கள் மட்டுமே. ஆனால் அது வலிமையாகவிருக்கும். இந்த உதாரணம் ஈழத்து மற்றும் ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்களுக்கும் பொதுவானது. பெரும்பாலானவர்களது பேசுபொருள் ஈழப்போராட்டமே.போர் முடிந்தாலும் இந்த போர் நிழலாகத் தொடர்ந்து வருகிறது. போரைவைத்து சிறப்பாக பலர் இலக்கியம் படைத்திருக்கிறார்கள். நெப்போலியனது படையெடுப்பு நடந்து நூறு வருடங்கள் பின்பாகவே டால்ஸ்டாயின் போரும் வாழ்வும் எழுதப்பட்டது. இதனால் இன்னமும் தொண்ணுறு வருடங்களுக்கு போர்காலத்தை நம்மவர் எழுதக்கூடும். இலங்கைப்போரால் ஈழத்தமிழர்கள் களைத்து சோர்ந்தாலும் சினிமாவில் மட்டும் போரைப் பார்த்த தமிழகத்து உறவுகளுக்கு ஈழப்போராட்டம், திருநெல்வேலி அல்வா மாதிரி. சில செவ்விகளையும் கட்டுரைகளையும் பார்த்தபின் ஈழப் போராட்டம் முடிந்ததே தெரியாமல் தமிழக சஞ்சிகையாளர்கள் உள்ளார்களா என எனக்கு சந்தேகம் ஏற்படுவதுண்டு. சமீபத்தில் நான் படித்த தமிழ்நதியின் பார்த்தீனியம் நாவல் 500 பக்கங்கள் கொண்டது. படிக்கும்போது தொடர்சியாக வாசிக்க வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்தியது. அதில் உள்ள சம்பவங்கள் விடுதலைப்புலி இயகத்தினரால் நடத்தப்பட்ட உண்மையான சம்பவங்களாக இருந்ததே அதன் காரணம். சம்பவங்கள் நாவலாசிரியரால் நகர்த்தப்படாது, விடுதலைப்புலித்தலைவர் பிரபாகரனால் நாவலில் நடத்தப்படுகிறது. கிரேக்க மொழி அறிவு மட்டுமல்ல, படிப்பே இல்லாத மத்தியூவிற்கு புதிய விவிலியத்தை எழுதும்போது துணை நின்ற தேவதை போன்று விடுதலைப்புலிகள் தமிழ்நதிக்கு துணை நிற்கிறார்கள்.
* நூல்: பச்சை விரல் | பதிவு செய்தவர்: வில்சன் ஐசக் | தமிழில்: ராமன் | வெளியீடு: காலச்சுவடு
மீராமொஹிதீன் ஜமால்தீன் என்ற இயற் பெயரையுடைய கவிஞர் மருதூர் ஜமால்தீனின் ''வலிகள் சுமந்த தேசம்'' கவிதை நூல் நூலாசிரியரின் 8 ஆவது நூல் வெளியீடாக வெளிவந்துள்ளது. சாய்ந்தமருதைப் பிறப்பிடமாகவும், ஏறாவூரை வசிப்பிடமாகவும் கொண்ட இவரது இந்த நூலை ஏறாவூர் வாசிப்பு வட்டம் வெளியிட்டுள்ளது.
“கவிதை என்பது உயர்ந்த உணர்விலே தோன்ற உண்மையான அமைதியில் உண்டாவது” என்றார் வோர்ட்ஸ்வொர்த். எமது வாழ்வில் எத்தனையோ உணர்வுகள் தோன்றுகின்றன. சில சம்பவங்களுக்காகக் கோபப்படுகிறோம். சிலவேளைகளில் துக்கப்படுகிறோம். இன்னும் சிலவற்றுக்காக மகிழ்ச்சிக்கடலில் தத்தளிக்கிறோம். ஆனால் எல்லாமே கவிதையாவதில்லை. அந்த உணர்வுகள் அமைதியில் கலந்து மொழியாகும்போதே கவிதையாகின்றன. இளங்கவி சிவசேகரனும் தன் வாழ்க்கை அனுபவங்களையும் கனவுகளையும் தாங்கிக் கொண்டு “மட்டைவேலிக்குள் தாவும் மனசு” கவிதைகளோடு வந்திருக்கிறான். இக்கவிதைகளில் அவன் மகிழ்ந்த காலங்கள் உள்ளன. துக்கப்பட்ட காலங்கள் உள்ளன. இன்னமும் ஈடேறாத வாழ்க்கை முரண்கள் உள்ளன.
ஈழத்தில் உலக மொழி படைப்புகள் தமிழில் மொழிபெயர்க்கும் முயற்சிகள் 50கள் தொடக்கம் நடைபெற்று வருகின்றன. ஆனால் சிங்கள இலக்கியங்கள் சிங்களத்திலிருந்து நேரடியாக தமிழில் மொழிபெயர்க்கும் முயற்சி என்பது 70களின் மத்தியம் தொடக்கம் பரவலாகியது எனலாம். சமீபத்தில் 10 சமகால நவீன சிங்களக் கவிஞர்களின் சுமார் 70 கவிதைகள் அடங்கிய தொகுப்பாக ரிஷான் ஷெரீப்பின் மொழிபெயர்ப்பில் வம்சி வெளியீடாக''இறுதி மணித்தியாலம்'' எனும் தலைப்பில் இக்காலகட்டத்தில் நமக்குக் கிடைத்திருக்கிறது. இத்தொகுப்பிலும் அடங்கிய சிங்கள நவீன கவிதைகள் நேரடியாகச் சிங்களத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்ட கவிதைகள் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தொகுப்பின் முதல் சிறப்பு என்று சொல்வது என்றால் இத்தொகுப்புக்கு இவர் தெரிவு செய்திருக்கும் கவிஞர்கள் சிந்தனையில் ஒன்றுபட்டவர்களாக இருக்கிறார்கள் என்பதுதான். மேலும் இவர்கள் மாற்றுக் கருத்தாளர்களாக இவர்கள் அடையாளப்படுத்தப்பட்டவர்கள். மனித உரிமைகள் பேணுதல், சகல இனங்களுக்கான உரிமைகளை மதித்தல். மேலும் இனம் மதம் சாதி மொழி பேதமற்ற நிலையில் சகல இனங்களுடன் ஊடாட விரும்புகின்றவர்களாக இருக்கிறார்கள். அத்தோடு தாம் சார்ந்த சமூகக் கட்டமைப்பைக் கடுமையாக விமர்சிக்கின்றவர்களாக இருக்கிறார்கள்.
பெருமாள் முருகன் தனது முன்னுரையில் தான் அறிந்த ஐந்து விலங்குகளில் மாடுகளை பன்றிகளை பற்றி எழுதமுடியாது. நாய்களும் பூனைகளும் கவிதைக்கானவை என்கிறார். வெள்ளாடுகள் சுறுசுறுப்பானவை என்பதால் அவற்றை வைத்து நாவல் எழுதியிருக்கிறார். தெய்வங்களைப்பற்றி எழுத பேரச்சம் எனவே அசுரர்களை பற்றி எழுதுகிறேன் என்கிறார். இப்படி அவர் எழுதிய நாவல் புனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை . கோகுல் எழுதிய ஓவர்கோட்டை(Gogol’s ‘Overcoat’)ஆவிகளின் கதை என்றால் பெருமாள் முருகன் எழுதியது ஆடுகளின் கதை. ஆனால் ஓவர்கோட்டை மற்றவர்கள் ரஷ்ஷியாவில் நிலவிய வறுமையை எடுத்துரைக்கும் குறியீட்டு சிறுகதையாக நினைத்தால் , பெருமாள் முருகனும் தமிழகத்தின் வறுமையையும் அரசியலில் மக்களுக்கும் அரசுக்கும் உள்ள தூரத்தையும் எழுதியிருக்கிறார் எனலாம். அவரது நாவலைப் பார்ப்போம்
கனடாவின் 150வது பிறந்ததினத்தை முன்னிட்டு, கனடாவில் வாழும் 15 பெண் எழுத்தாளர்களால் எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு இது. பெரும்பாலான எழுத்தாளர்களுக்கு இத்தொகுப்பில் உள்ள கதைகளே முதல் சிறுகதைகள் என்று எடுத்துக் கொண்டால், இத்தொகுப்பு அவர்களுக்கொரு வெற்றி. தொடர்ந்து எழுதுவதற்கான ஒரு படிக்கல்.
பொ கருணகரகரமூர்த்தியின் பெர்லின் நினைவுகள் மற்றைய புலம்பெயர்ந்த அனுபவங்கள்போல் சிதைந்து நாவல், சிறுகதை என உருமாறாது, கற்பனை கலக்காமல் அபுனைவாக தமிழ் இலக்கியப்பரப்பிற்கு வரவாகியுள்ளது.இதனால் இது நமது புலப்பெயர்ந்தோரது இலக்கியத்தில் முக்கியமான ஓரிடத்தைப் பிடித்துள்ளது. வாசிப்பதற்கான அவகாசத்தைத்தேடிப் பல காலங்களாக அடைகாத்து வைத்திருந்தேன். கடைசியில் அது கை கூடியது. நிச்சயமாக ஒரு டாக்சி ஓட்டுனராக அவர் முகம் கொடுத்த அனுபவங்கள் பலதரப்பட்டவை. டாக்சி ஓட்டுனராகப் பலரோடு பல தருணங்களில் ஏற்படும் சம்பவங்கள் மற்றவர்களுக்கு எக்காலத்திலும் ஏற்படாது. அதிலும் எத்தனை டாக்சி ஓட்டுனர்கள், அவர்போல் தனது அனுபவங்களை இலக்கியமாக்கும் மொழி தெரிந்தவர்கள்? அவரது மருத்துவராகும் எண்ணம் ஈடேறவில்லை என்பது உண்மை, ஆனால் அது தமிழ் இலக்கிய உலகத்திற்கு அதிஷ்டமாக அமைந்தது. மருத்துவரது நினைவுகள் அவர் இறந்தபின்போ அல்லது அவரது நோயாளிகள் இறந்தபின்போ மறைந்துவிடும். ஆனால் டாக்சி ஓட்டுனரான நண்பர் கருணாகரமூர்த்தியின் நினைவுகள் அழிவற்றவை. குறைந்தபட்சம் தமிழ்மொழியிருக்கும் வரையில் வாழும். இந்தப் புத்தகத்தில் இலங்கை நினைவுகளையும் பெர்லின் நினைவுடன் குழைத்து எழுதியது சுவையானது. அத்துடன் பல இலங்கையரது வாழ்வுகளை மற்றவர்களுடன் கலந்தது அவரது அகதித்தமிழ் வாழ்க்கையும் பதிவாக்கியுள்ளது.
புரவலர் புத்தகப் பூங்காவின் 38 ஆவது வெளியீடாக மா. பாலசிங்கம் எழுதிய தழும்பு என்ற நாவல் வெளி வந்திருக்கிறது. இதுவரை ஒரு நூலைத் தானும் வெளியிடாத பல புதிய எழுத்தாளர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ள புரவலர் புத்தகப் பூங்கா இதுவரை 38 எழுத்தாளர்களின் நூல்களை வெளியிட்டிருப்பது சாதனைக்குரிய விடயம். தன் தாய் மொழியாகத் தமிழைக் கொண்டில்லாதபோதும் நம் தாய் மொழித் தமிழுக்கு புரவலர் புத்தகப் பூங்காவின் நிறுவுனரான புரவலர் அல்ஹாஜ் ஹாஷிம் உமர் அவர்கள் ஆற்றிவரும் சேவை மகத்தானது. போற்றப்பட வேண்டியது.
சிங்கப்பூர் தேசிய நூலகம் நுழைந்து நூலடுக்குகளைப் பார்வையிட்டுக்கொண்டு வந்தேன். என் கண்ணில் பட்ட நூல் “பின்னர் அப்பறவை மீண்டும் திரும்பியது” எனும் கவிதை நூல். கையிலெடுத்துக் கொஞ்சம் புரட்டினேன். அது மலாய்மொழிக்கவிதைகளின் மொழிபெயர்ப்பு. நூல் கனமாக இல்லையென்றாலும் என் கவனத்தைக் கவர்ந்துவிட்டது. படிப்பதா? இல்லை அங்கேயே விட்டுவிடுவதா என யோசித்துப் பின் அங்குள்ள இருக்கையில் அமர்ந்து படிக்கத்தொடங்கினேன். நூலாசிரியரின் முன்னுரை என்னைப்படிக்கத்தூண்டியது. அடக்கமும் எழுத்தின்மீது அக்கறையும் கவனமும் தொனித்த நடை அவர்மீதான மரியாதையைக்கூட்டியது. அதனாலயே தொடர்ந்து இருக்கையிலும் இருகையிலிருந்த நூலிலும் கவனம் பதிந்தது. மலாய்மொழிக்கவிதைகளையும் மலாய்க்கவிதைகளின் ஆங்கிலமொழிபெயர்ப்பையும் தமிழில் பெயர்த்து தந்திருந்தார் ஆசிரியர் பா. சிவம். கவிதை நூலில் ஒரு புதிய சொல் விளைந்திருப்பதைக் உணர்ந்தேன். அது ‘நகர்ச்சி’. நுகர்ச்சி நமக்கு அறிமுகமான சொல். ஆனால் இது நகர்ச்சி. பல கவிஞர்களின் கவிதைகளின் தொகுப்பாக வெளிவந்திருக்கிறது.
பூங்காவனத்தின் 28 ஆவது இதழ் ஓய்வு பெற்ற அதிபரும், இலக்கிய ஆர்வலருமான திருமதி மர்ளியா சித்தீக் அவர்களின் புகைப்படத்தை அட்டைப்படமாகத் தாங்கி வந்திருக்கிறது.
சமூகமொன்றின் இயக்கத்துக்கும் நீடித்து நிலைபெறலுக்கும், வரலாறு என்பது அத்தியாவசியமான ஒன்றாக விளங்குகிறது. ஆனால் வரலாற்றைக் கட்டியெழுப்புவதில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் பல நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. உதாரணமாக, ஒரு ஆய்வாளன் ஆராய்கின்ற வழக்கிழந்த நடைமுறை ஒன்று, புவியியலால் தனித்த வேறொரு பகுதியில் இன்றும் மருவிய நிலையில் வழக்கில் இருக்கலாம். ஆனால், விரிவான தளத்தில் ஆய்வு முயற்சிகளை மேற்கொள்ளும் போது அந்த மிகச்சிறு அம்சம் கவனிக்கப்படாமல் போக வாய்ப்புகள் உண்டு.
மனிதன்பேசித்திரியும் விலங்கு என்றொரு பழமொழி உன்டு. இடம்பெயர்தல் ஆங்கிலத்தில் மைகிரேசன் என்பார்கள் காக்கை தன் ஊரைவிட்டு வெகுதொலைவு செல்லாது.புறா,கொக்கு,நாரை, பல கிலோமீட்டர் சென்று திரும்பும்.சுப்ரபாரதிமணியன் மைகிரேசன் கொண்ட மனிதர்.திருப்பூரில் பிறந்து குன்னூர் , ஹைதராபாத் பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை என பல ஊர்களில் பணி செய்த அனுபவம் கொண்டவர் ஒவ்வொருவருக்கும் ஒரு முகம் உண்டு அது தனக்கேயான முகம்.எனினும் பின்னால் பல முகங்கள் கொண்டவர்கள் என்பதே உண்மை.
“இந்த இராவணனின் எந்த தலை உண்மையானது?” – இது மூன்றாவது மனிதன் பெப்ரவரி 2003 இதழில் பாலு மகேந்திரா குறித்து உமா வரதராஜனால் எழுதப் பட்ட ஒரு கட்டுரையின் தலைப்பு. மேற்குறித்த கேள்வி பாலு மகேந்திரா மீது மட்டும் தொடுக்கப்படும் கேள்வி அல்ல. இப்படியான கேள்விகளை பன்முகத்தன்மை கொண்ட ஒவ்வொரு கலைஞனும் தன் படைப்பிலும் வாழ்விலும் மக்களிடமிருந்து தினந்தோறும் எதிர்கொண்ட வண்ணமே இருக்கின்றான். மேலும் அவனது படைப்புக்கும் வாழ்விற்கும் இடையேயான இடைவெளிகள் அதிகரிக்கும் பட்சத்தில் இது போன்ற கேள்விகளின் வீச்சு இன்னும் பலமானதாகவும் வீரியம் மிக்கதாகவும் விளங்கும். இதே போன்ற பல்வேறு விதமான கேள்விகளை உள்ளடக்கி, அன்று தொடக்கம் இன்றுவரை தனது திரைப்படங்களிலும் நிஜவாழ்க்கையிலும் என்றுமே சர்ச்சைகளை உருவாக்கி வரும் நடிகர் கமல்ஹாசன் மீதும் அவர் உருவாக்கிய பாத்திரங்கள்,படைப்புக்கள் மீதும் யமுனா ராஜேந்திரனால் வைக்கப்பட்ட விமர்சனக்கட்டுரைகளின் தொகுப்பாக ‘உத்தமவில்லன் – The Anti-Hero ‘ என்னும் 12௦ பக்கங்கள் அடங்கிய சிறு நூலொன்று பேசாமொழி பதிப்பகத்தினரால் வெளியிடப்பட்டுள்ளது.
எழுதப்பட்டது அல்லது பதியப்பட்டதே வரலாறு. மற்றவை ,வரலாறுக்கு முந்தியவை என வரையறுக்கப்படுகிறது வரலாறு என்பதன் ஆங்கிலப்பதம் (History) கிரேக்க மொழியில் இருந்து வந்தது. இதன் கருத்து அறிந்து ஆராய்தல் – அல்லது விசாரித்து அறிதல் எனப்பொருள்படும். இதற்கு கிளையோ (Clio) என்ற பெண்தெய்வம் அருள் பாலிப்பதாக கிரேக்கர்களால் உருவகிக்கப்படுகிறது.
பெண்கள் என்ற குழந்தை உழைப்பாளிகள் :
சமூகத்தில் நடக்கின்றவற்றை படம்பிடிக்கும் கருவியாக எழுத்தாளன் செயற்படுகின்றான். அந்த வகையில் இலக்கியத்தின் கவிதை, சிறுகதை, சிறுவர் இலக்கியம் என்ற பல்வேறு தளங்களிலும் செயல்படும் உ. நிசார் தன் எளிமையான எழுத்துக்களினூடாக வாசகரைக் கவர்ந்தவர். சமூகம் சார் சிறுகதைகள் இவரது ஆளுமைக்கு கட்டியம் கூறுவனவாக அமைந்திருக்கின்றன. இதுவரை 19 நூல்களை வெளியிட்டிருக்கும் இவரது 20 ஆவது நூலாக பூவிதழும் பூனிதமும் என்ற நூல் 09 சிறுகதைகளை உள்ளடக்கியதாக 96 பக்கங்களில் பானு வெளியீட்டகத்தின் மூலம் வெளிவந்திருக்கின்றது.
எங்கோ ஓர் மூலையில் இலை மறை காயாக இருந்து கொண்டு இலக்கியம் படைக்கும் எழுத்தாளர்களை இனங்கண்டு அவர்களை உலகறியச் செய்யும் பணியை புரவலர் புத்தகப் பூங்கா மேற்கொண்டு வருகிறது. இவ்வமைப்பு மூலம் இதுவரை 37 நூல்கள் வெளியீடு செய்யப்பட்டிருக்கின்றன. இவ்வமைப்பின் நிறுவனரான புரவலர் ஹாஷிம் உமர் அவர்கள் இலக்கிய உலகுக்கு தன்னாலான பல பங்களிப்புக்களை செவ்வனே செய்து வருபவர். இதுவரை பல முதற் பிரதிகளைப் பெற்று எழுத்தாளர்களை ஊக்குவித்து வருவதனூடாக ஒரு வரலாற்று சாதனையாளராக திகழ்கின்றார். புரவலர் புத்தகப் பூங்காவின் 37 ஆவது வெளியீடாக வெளிவந்திருக்கிறது இராகலை தயானியின் அக்கினியாய் வெளியே வா கவிதைத் தொகுதி. 57 கவிதைகளை உள்ளடக்கி 72 பக்கங்களில் வெளிவந்திருக்கும் இந்தத் தொகுதியில் மலையகம் சார்ந்த, பெண்கள் சார்ந்த கவிதைகளே விரவிக் காணப்படுகின்றன.
திரு. ஈஸ்வரன் அவர்கள் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்தவர். வல்லநாடு என்ற கிராமத்தைச் சேர்ந்த இவர் 1949 இல் கொழும்புக்கு வந்தார். புனித பெனடிக்ஸ் பள்ளியில் படித்த இவர், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இளங்கலை வணிகவியல் படித்தார். தற்போது ஈஸ்வரன் பிரதர்ஸ் என்ற தேயிலை நிறுவனத்தின் உரிமையாளராக இருக்கும் இவர் பேருபகாரியும் கூட. எழுத்தாளரான இவர் ஏனைய எழுத்தாளர்களுக்கும் கரம் கொடுத்து உதவும் ஒரு வள்ளல். பல முக்கிய சம்மேளனங்களில் தலைவராகவும் இருக்கிறார். 
போர் என்பது ஒரு பிரதேசத்தில் பிரவேசித்து விட்டால் அந்நிலமானது மரணங்கள் மலிந்த பூமியாக மாறிவிடுவது தவிர்க்கமுடியாததாகிவிடும். கூடவே இழப்புக்களும் இடப்பெயர்வுகளும் கூட அங்கு நியதிகளாகவும் நிரந்தரங்களாகவும் மாறி விடும். இத்தகைய மரணங்கள் மலிந்த பூமியிலிருந்து இன்னல்களுடனும் இழப்புக்களுடனும் இப்பூமிப்பந்தெங்கும் சிதறிப் போன பல லட்சம் ஈழமக்களினது சாட்சியங்களாகவும் குரல்களாகவும் மு.புஷ்பராஜனின் ‘மீண்டும் வரும் நாட்கள்‘ எனும் கவிதைகளின் தொகுதியொன்று வெளிவந்துள்ளது.
ஓர் அபலையின் டயரி, இது ஒரு ராட்சஷியின் கதை, 37 ஆம் நம்பர் வீடு, அவளுக்குத் தெரியாத ரகசியம் ஆகிய நான்கு நாவல்களைத் தொடராக வெளியிட்டு நாவல் துறையில் பிரபலமான ஒரு நாவலாசிரியராக மிளிர்ந்துகொண்டிருக்கும் திருமதி ஏ.சீ. ஜரீனா முஸ்தபா நாவல்கள் தவிர ரோஜாக் கூட்டம் என்ற சிறுவர் கதைத் தொகுதியையும், யதார்த்தங்கள், மீண்டும் ஒரு வசந்தம் ஆகிய சிறுகதைத் தொகுதிகளையும் வெளியிட்டுள்ளார். பொக்கிஷம் இவரது கவிதைத் தொகுதியாகும்.
மொழி என்பதோர் திரவிய கூடம் தாகத்தோடும் தேடலோடும் அதன் உட்புகுந்து தெரிதல் நிகழ்த்தும் ஒருவன் மொழிசார் கலைவடிவங்கள் எதையேனும் தனது படைப்புகளைத் தரும் ஒரு ஊடகமாகக் கொள்ளுதல் இயலும். அத்தகைய ஒரு தெரிதலின்போது, அவன் தனது அனுபவங்கள் மூலம் வடிவமைத்துக் கொண்ட நுண்புலனின் திறனைப் பிரயோகிக்கிறான். அந்த நேரத்தில் அவன் தெரிவு செய்கிற சொற்கள் தேர்ந்து கொள்கிற சொல்முறை வெளிப்படுத்துகிற உணர்வுகள் எல்லாம் ஒருங்கிணைந்து அவனுக்கான கலைவடிவ உருவாக்கத்தைத் தீர்மானிக்கின்றன.
ஈழத்தில் இருந்து கனடாவிற்குப் புலம்பெயர்ந்து தமிழ் மொழியில் விஞ்ஞானத்தை வாசகர்களிடம் இலகு தமிழில் எடுத்துச் செல்லும் நோக்குடன் பல அறிவியல் நூல்களை உருவாக்கியதோடு தொடர்ச்சியாக அறிவியல் கட்டுரைகள், கவிதைகள், தொடர்கதைகள் போன்றவற்றைப் படைத்து வரும் எழுத்தாளர் கனி விமலநாதன் அவர்களின் “விந்தைமிகு விண்வெளி விபத்து” என்ற தலைப்புக் கொண்ட விஞ்ஞான நாவல் எனது கையில் கிடைத்ததும் மிக்க ஆவலுடன் படிக்கத் தொடங்கினேன். நாவலைப் படித்து முடித்ததும் நாவலைப் பற்றி ஒரு விமர்சனக் கட்டுரையை எழுத வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் ஊற்றெடுத்தது. நாவலை வாசிக்கத் தொடங்கியதும் நான் முழுமையாக வாசித்திட வேண்டும் என்ற ஆவலை எனக்குக் கொடுத்ததை வைத்துக் கொண்டே நூலாசிரியர் வாசகர்களிற்கு ஆவலைத் தூண்டும் வகையில் இந்த நாவலைப் படைப்பதில் வெற்றி கொண்டுள்ளார் என்று திடமாக என்னால் கூற முடிகின்றது.
‘‘போரில் நீ வென்றால், அதை நீ விபரிக்க வேண்டியதில்லை; தோற்றால், அதை விபரிக்க நீ அங்கிருக்கக்கூடாது!’ இரண்டாம் உலகப் போருக்குத் தீ மூட்டியவரும், ஜேர்மன் சர்வாதிகாரியுமான அடொல்ஃப் ஹிற்லர்தான் இதைச் சொன்னவர். ‘2009 மே 18இல் முடிவுக்கு வந்த தமிழீழப் போரில் விடுதலைப் புலிகள் எப்படித் தோற்றுப் போயினர்?’ என்ற வினாவுக்கு விடையளிக்கக்கூடாது என்பதற்காகவே அவ்வமைப்பின் மூலவர்கள் பலரும் கூட்டாக உயிரிழந்தார்களோ என இக்கூற்று எண்ணத் தூண்டுகின்றதல்லவா? இதேவேளை, விடுதலைப் புலிகளின் தோல்வி குறித்து, போரியல் வல்லுனர்களும் அரசியல் ஆய்வாளர்களும் புதிய புதிய எடுகோள்களையும் அனுமானங்களையும் ஊகங்களையும் முன்வைப்பதில் ஆளுக்காள் இதுவரைக்கும் சளைக்கவுமில்லை; இன்னமும் களைக்கவுமில்லை. எது எவ்வாறாயினும், நந்திக்கடலில் நடந்துமுடிந்த அவலத்தின் காரணங்களை ஒரு சாமானியனின் நோக்கில், நறுக்கென்று சொல்லிவிடும் சாமர்த்தியம், நான்கே நான்கெழுத்து வார்த்தை ஒன்றிடம் உண்டு. அதுதான் ‘துரோகம்!’

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









