ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல் - “தமிழியல் ஆய்வுக்கு பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்களின் பங்களிப்பு”
Join Zoom Meeting | Meeting ID: 847 7725 7162 | Passcode: 554268


Join Zoom Meeting | Meeting ID: 847 7725 7162 | Passcode: 554268


சென்ற 13-7-2025 ஆம் ஆண்டு ஞாயிற்றுக் கிழமை கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ‘கதைச்சரம்’ என்ற சிறுகதைத் தொகுப்பு ரொறன்ரோவில் உள்ள பைரவி நுண்கலைக் கூடத்தில் வெளியிட்டு வைக்கப்பெற்றது. தேனீர் சிற்றுண்டியைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றி தமிழ்தாய் வாழ்த்து, கனடா தேசியப்பண் ஆகியன செல்வி சோலை இராச்குரார், செல்வி சென்னி இராச்குமார் ஆகியோரால் இசைக்கப் பெற்றன. அதைத் தொடர்ந்து அகவணக்கம் இடம் பெற்றது.

* நன்றி - புகைப்பட உதவி - 'தடயத்தார்' கிருபா கந்தையா.
'நானுன்னை முத்தமிடுகையில் புத்தர் சிரித்துக்கொண்டிருந்தார்' - இளங்கோவின் (டிசெ. தமிழன்) புதிய சிறுகதைத்தொகுதி , நேற்று Scarborough Village Receation Centre இல் நடைபெற்றது. கலை, இலக்கிய, சமூக, அரசியற் பிரமுகர்கள் பலர் வந்திருந்தனர்.
நிகழ்வின் ஆரம்பம் போர்ச்சூழலில் , மனித உரிமை மீறல்களில் பலியாகிய அனைவர்தம் நினைவாக , மெளன அனுஷ்டிப்புடன் ஆரம்பமாகியது. 'தேசியம்' இலங்காதாஸ் பத்மநாதனின் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்வின் ஆரம்பத்தில் நிரோஜினி றொபேர்ட் இளங்கோவின் சிறுகதையொன்றின் சில பகுதிகளை வாசித்தார். வித்தியாசமான, ஆனால் ஆரோக்கியமான முயற்சி. தொடர்ந்து எழுத்தாளரும், நாடகவியலாளருமான பா.அ.ஜயகரன், முனைவர் மைதிலி தயாநிதி, நம் கலை, இலக்கிய உலகில் நன்கறியப்பட்டவரும், வானொலி, தொலைக்காட்சி ஊடகவியலாளரும், நாடகவியலாளருமான பி.விக்னேஸ்வரன் இயக்கத்தில் மேடையேறிய, இப்சனின் 'பொம்மை வீடு' நாடகத்தில் சிறப்பாக நடித்துப் பலரின் கவனத்தையும் பெற்றவருமான அரசி விக்னேஸ்வரன், 'காலம்' செல்வம் ஆகியோர் நூல் பற்றிய தம் கருத்துகளை பகிர்ந்துகொண்டனர்.

சொப்கா என்று அழைக்கப்படும் கனடாவில் கடந்த 16 வருடங்களாக இயங்கும் பீல் பிரதேச குடும்ப மன்றத்தின் ஆண்டு விழா சென்ற ஞாயிற்றுக் கிழமை மிசசாகா காவ்த்ரா வீதியில் உள்ள ஜான் போல் போலாந்து கலாச்சார மையத்தின் பார்வையாளர் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. முக்கிய சில பிரமுகர்களால் மங்கள விளக்கு ஏற்றி வைத்ததைத் தொடர்ந்து தமிழ்தாய் வாழ்த்து கனடிய தேசியப்பண் ஆகியன இசைக்கப்பெற்றன. அகவணக்கத்தைத் தொடர்ந்து வரவேற்பு நடனமும் வரவேற்பு உரையும் இடம் பெற்றன.

இலங்கையில் நடைபெறும் தமிழ் பண்பாட்டு – – அனைத்துலக மாநாட்டின் இரண்டாவது அமர்வு நுவரெலியாவில் வெகுவிமர்கையாக நடந்தேறியது.
தாஞ்சாவூர் அனைத்துலக பண்பாட்டு ஆய்வு மையம், தமிழ் நாடு திருநெறிய தமிழ் சைவ சமயப் பாதுகாப்பு பேரவை, இலண்டன் தமிழ் கல்வியகம், பிரான்சு உலக செம்மொழி தமிழ்ச் சங்கம் மற்றும் யாழ் பல்கலைக்கழக இந்து நாகரிகத்துறை ஆகியன இணைந்து நடத்தும் தமிழ் பண்பாட்டு – அனைத்துலக மாநாட்டின் முதலாவது அமர்வு யாழ்ப்பாணம் பல்லைக்கழகத்தில் 30-06-2025 தேதி இம்பெற்றது. இரண்டாவது நுவரெலியாவில் உள்ள மாவட்ட செயலகத்தின் கேட்போர் 02-07-2025 தேதி இடம்பெற்றது.
மூன்றாவது அமர்வு கொழும்பில் 06-07-2025 தேதியும் வரையும் இடம்பெறவுள்ளதாக என்று தமிழ்நாடு திருநெறிய தமிழ் சைவ சமய பாதுகாப்பு பேரவையின் தலைவர் க. சசிக்குமார் தெரிவித்தார்.
இம்மாநாட்டில் தென்னாபிரிக்கா, பிரான்சு, பிரிட்டன், சுவிட்சலாந்து நோர்வே, ஜெர்மனி, கனடா, மொரீசீயஸ், ரீ யூனியன், மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்து பேராளர்கள், சான்றோர்கள் பெரும் மக்கள் பங்கேற்றார்கள்.
மெய்நிகர் அரங்கு – 13 ஜூலை 2025 – ஞாயிறு | Meeting ID: 881 2810 4953 | Passcode: 299798
அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் இலங்கை எழுத்தாளர்களுக்காக நடத்திய இலக்கியப்போட்டியில் பரிசு பெற்ற நூல்களின் வாசிப்பனுபவப் பகிர்வு!

சென்ற சனிக்கிழமை 28-6-2025 ரொறன்ரோ அல்பியன் வீதியில் உள்ள திஸ்டில் நகர சமூக மையத்தின் பார்வையாளர் மண்டபத்தில் கனடாவில் இருந்து வெளிவரும் பெண்களுக்கும் இளையோருக்குமான வதனம் இதழ் - 6 வெளியிட்டு வைக்கப் பெற்றது. அமைதி வணக்கத்தைத் தொடர்ந்து பெரியோர்களால் மங்கள விளக்கேற்றி வைக்கப்பெற்றது. சிறுமிகளான பைரவி அருள்மாறன், லதிசா தயாளன் ஆகியோர் கனடிய தேசியகீதம், தமிழ்தாய்பண் பாடினார்கள். வரவேற்புரையை திருமதி கலைமகள் புஸ்பநாதன் நிகழ்த்தினார்.

1995ம் ஆண்டு தமிழில் ஒரு அதிசயம் நடந்தது. அதுதான் பாப்பா பாரதி - மாவை நித்தியானந்தன் - அந்த நாட்களிலே, தொலைக்காட்சியில் தமிழ்க் குழந்தைகள் பார்த்து மகிழ எதுவும் இருக்கவில்லை. எல்லாமே ஆங்கிலம் தான். கடைகளில் குழந்தைகளுக்கான ஒரு தமிழ்க் காணொளி கூட இருக்கவில்லை. இந்த நிலையிலேதான், மிகக் குறைந்த தொழில்நுட்ப வசதிகளோடும், நிதி வசதியோடும் பாரதி பள்ளி மூன்று முழுநீளக் காணொளிகளைத் துணிச்சலுடன் தயாரித்தது. முழு உலகமும் இதைப் பார்த்து வியந்தது. பல்லாயிரக் கணக்கான தமிழ்க் குழந்தைகள் இதில் வந்த பாட்டுகளையும், கதைகளையும், நாடகங்களையும் பார்த்துப் பரவசமடைந்தார்கள். திரும்பத் திரும்பப் பத்துத் தடவைகள், நூறு தடவைகள் என்று பார்த்தார்கள். ஏனென்றால், இதைவிட அவர்களுக்காக அன்று வேறெதுவுமே இருக்கவில்லை.
முதன்முதலில் நாடாவாக வந்த பாப்பா பாரதி, பின்னர் டிவிடி வடிவத்தில் வெளியிடப்பட்டது. எனினும், தொழில் நுட்ப சாதனங்களில் ஏற்பட்ட மாற்றங்களால், இவற்றின் பயன்பாடு தொடர்ச்சியை இழந்தது. இன்றைய நவீன தொழில்நுட்பச் சூழலில், குழந்தைகளுக்கான கார்ட்டூன்கள் இணையத்தில் நிறைந்துள்ளன. ஆயினும், பாப்பா பாரதி வித்தியாசமானது. ஆங்கிலத்தில் உள்ளதுபோல உண்மையான மனிதர்களைக் கொண்ட நிகழ்ச்சிகளை இன்றும் தமிழில் காண்பது அரிது.
எனவே, 30 ஆண்டுகளுக்குப் பின்னரும் எங்கள் பிள்ளைகள் மத்தியில் பாப்பா பாரதிக்குத் தனியிடம் உண்டு என்ற நம்பிக்கையில், அதனைத் துண்டு துண்டாகப் பிரித்து, யூரியூப் வழியாக வெளியிடுகிறோம். இதனால் தமிழ்க் குழந்தைகள் பயனடைவார்கள் என்று நம்புகிறோம்.
Join Zoom Meeting | Meeting ID: 389 072 9245 | Passcode: 12345

Join Zoom Meeting | Meeting ID: 847 7725 7162 | Passcode: 554268

ஈழத்திலும் ஐரோப்பாவிலும் நீண்ட காலம் பத்திரிகைத் துறையில் பணிபுரிந்த, மூத்த பத்திரிகையாளர் 'ஈழநாடு" எஸ். கே. காசிலிங்கம் அவர்களின் அமுதவிழா பாரிஸ் மாநகரில் கடந்த மாதம் 25 -ம் திகதி ஞாயிற்றுக்கிழமை (25 - 05 - 2025) மாலை சிறப்பாக நடைபெற்றது.
பிரான்ஸ் நாட்டில் வாழும் மூத்த எழுத்தாளர் வி. ரி. இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், கலை இலக்கியப் பத்திரிகைத் துறையினர், சமூக நிறுவனங்களின் பிரிதிநிதிகளெனப் பெருந்தொகையானோர் குடும்பத்துடன் கலந்துகொண்டனர்.
பிரித்தானியா, சுவிஸ், ஜேர்மனி, கனடா ஆகிய நாடுகளிலிருந்தும் விழா நாயகனின் உறவினர்கள், நண்பர்கள் வருகைதந்து சிறப்பித்தனர்.

சென்னை திருச்சி ஸ்ரீ பாரதகலா குரு நடனமாமணி ஸ்ரீமதி பூர்ணா புஷ்கலா அவர்களின் பரத நாட்டிய நடனம் கொழும்பு கதிர்காமத்தில் எதிர்வரும் ஜுலை மாதம் 4 ஆம் தேதி கொழும்பிலும் 6 ஆம் தேதி கதிர்காமத்திலும் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில் இந்தியாவிலுள்ள நடனக் கலைஞர்கள் பங்கேற்கவுள்ளனர். டாக்டர் கே.ராமநாதன்இ எம்.எல்.இ பி.எச்.டிஇ பிரணதி - அபிநயா - நடனக் கலைஞர தேவ தர்ஷினி - நடனக் கலைஞர் ருத்ரா - நடனக் கலைஞர் ஷஹானா - நடனக் கலைஞர் ஷாமிலி பிரியா - நடனக் கலைஞர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இதில் குரு நடனமாமணி ஸ்ரீ மதி பூர்ணா புஷ்கலா ஒரு திறமையான பரதநாட்டிய நிபுணர் மற்றும் மதிப்பிற்குரிய ஆசிரியர். அவர் சென்னை மற்றும் திருச்சியில் கிளைகளைக் கொண்ட ஸ்ரீ பரதகலா அகாடமியின் நிறுவனர் மற்றும் இயக்குனர் ஆவார்.
இது ஆர்வமுள்ள கலைஞர்களிடையே பாரம்பரிய நடனத்தை வளர்ப்பதிலும் ஊக்குவிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. பரதநாட்டியத் துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டி அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அவருக்கு நடனமாமணி என்ற மதிப்புமிக்க பட்டத்தை வழங்கியது. கலைகளுக்கான அவரது அர்ப்பணிப்புஇ தமிழக அரசால் கலை மற்றும் கலாச்சாரத் துறையின் ஆலோசகராக நியமிக்கப்படுவதற்கும் வழிவகுத்தது. கூடுதலாகஇ அவர் திருச்சிராப்பள்ளியில் உள்ள தமிழ்நாடு சிலம்பட்டம் சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றுகிறார்இ பாரம்பரிய நடனத்துடன் பாரம்பரிய தற்காப்புக் கலைகளையும் வென்றுள்ளார்.
இந்திய பாரம்பரிய கலைகளை உலகளாவிய தளங்களுக்கு எடுத்துச் செல்வதில் அவர் கொண்டிருந்த ஆர்வம்இ மலேசியா மற்றும் தாய்லாந்தில் சர்வதேச நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய வழிவகுத்தது. மலேசியாவில்இ அவருக்கு வாழ்நாள் தமிழ் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதுஇ மேலும் தாய்லாந்தில்இ சர்வதேச நடன விழா 2017 இல் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் பெருமையுடன் பங்கேற்றார். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க உத்திரகோசமங்கை கோயிலில் நடைபெறும் நாட்டியாஞ்சலி நடன விழாவின் பின்னணியில் உள்ள தொலைநோக்கு பார்வையாளரும் இவர்தான்இ இது தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்தப்படுகிறது.
* படத்தைத் தெளிவாகப் பார்க்க இரு தடவைகள் அழுத்தவும்!
தஞ்சாவூர் அனைத்துலக பண்பாட்டு ஆய்வு மையம், தமிழ் நாடு திருநெறிய தமிழ் சைவ சமயப் பாதுகாப்பு பேரவை, இலண்டன் தமிழ் கல்வியகம், பிரான்சு உலக செம்மொழி தமிழ்ச் சங்கம் மற்றும் யாழ் பல்கலைக்கழக இந்து நாகரிகத்துறை ஆகியன இணைந்து நடத்தும் தமிழ் பண்பாட்டு – அனைத்துலக மாநாடு இலங்கையில் யாழ்ப்பாணத்தில் 30-06-2025 தேதியும், நுவரெலியாவில் 02-07-2025 தேதியும், கொழும்பில் 06-07-2025 தேதியும் வரையும் இடம்பெறவுள்ளதாக என்று தமிழ்நாடு திருநெறிய தமிழ் சைவ சமய பாதுகாப்பு பேரவையின் தலைவர் க. சசிக்குமார் தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் இம்மாநாட்டில் தென்னாபிரிக்கா, பிரான்சு, பிரிட்டன், சுவிட்சலாந்து நோர்வே, ஜெர்மனி, கனடா, மொரீசீயஸ், ரீ யூனியன், மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்து பேராளர்கள், சான்றோர்கள் பெரும் மக்கள் பங்கேற்கவுள்ளனர்.
முதலாவது நிகழ்வு இந்து கற்கைகள் பீடத்தின் பீடாதிபதி பிரம்மஸ்ரீ ச. பத்மநாதன் தலைமையில் 30 ஆம் தேதி யாழ்பாணம் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கத்தில் நடைபெறும். இந்நிகழ்வில் இணைத்தலைவராக யாழ் பல்கலைக்கழக இந்து நாகரிகத்துறைத் தலைவர் பேராசிரியர் கலாநிதி விக்னேஸ்வரி பவநேசன் அவர்களும், ஒருங்கிணைப்பாளராக தமிழ் நாடு பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் முனைவர். க. பாஸ்கரன் அவர்களும், கருத்தரங்கு அமர்வுப் பொறுப்பாளர்களாக இந்து நாகரிகத்துறை பேராசிரியர் ச. முகுந்தன், இந்து நாகரிகத்துறை திரு. சு. ரமணராஜா, இலண்டன் தமிழ் கல்வியகம் இயக்குநர் திரு. ச. முருகையா. பாரீஸ் உலக செம்மொழி தமிழ்ச் சங்க நிறுவினர் கணேஸ்வரன் நவரத்தனம், தென்கிழக்குப் பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் கணேஸ்ராஜா, கிழக்குப் பல்கலைக்கழக கலாநிதி விக்னராஜன் ஆகியோர்களுடன் அலுவலக ஒருங்கிணைப்பாளர்களும் செயற்படவுள்ளனர்.
* அறிவித்தலைத் தெளீவாகப் பார்க்க, படத்தை ஒரு தடவை அழுத்தவும்.
தமிழ் இலக்கியத் தோட்டம் 25 ஆண்டு விருதுகளின் கொண்டாட்டம்! - தகவல்: அ.முத்துலிங்கம் -
2025ல் வழங்கப்படும் 2024ம் ஆண்டுக்கான விருதுகள்
இயல் விருது - சச்சிதானந்தன் சுகிர்தராஜா (பேராசிரியர், விளக்கவியலாளர், எழுத்தாளர்)
இயல் விருது - யுவன் சந்திரசேகர் (எழுத்தாளர், கவிஞர்)
புனைவு – இரவி அருணாசலம்
நூல் – பம்பாய் சைக்கிள்- (காலச்சுவடு பதிப்பகம்)
அல்புனைவு – த.பிச்சாண்டி
நூல் – எனக்குள் மணக்கும் எம்.ஜி.ஆர் நினைவுகள் ( பி.வி.பதிப்பகம்)
கவிதை -ரவி சுப்பிரமணியன் – நூல்: அருகிருக்கும் தனியன்- (போதிவனம் பதிப்பகம்)
கவிதை - றியாஸா எம் ஸவாஹிர்- நூல்: நிலங்களின் வாசம்- (வேரல்புக்ஸ் பதிப்பகம்)
மொழிபெயர்ப்பு : நீட்ரா ரொட்ரிகோ நூல்: கனவுச் சிறை (பாலா தேவகாந்தன்)
Prison of Dreams (5 Parts) - Published by Mawenzi House (author Bala Devakanthan)
அனுப்பும் படைப்புகளில் ஒழுங்காகத் தரிப்புக் குறிகள் இட்டு அனுப்புங்கள். முற்றுப்புள்ளி, கமா போன்ற தரிப்புக்குறிகள் அற்று வரும் படைப்புகள் நிராகரிக்கப்படும். ஒருங்குறிகளில் படைப்புகளை அனுப்புங்கள். இயலாதவர்கள் பாமினியிலும் அனுப்பலாம். படைப்புகளுடன் புகைப்படங்களை, படங்களை இணைத்து அனுப்புபவர்கள் அவற்றுக்கான உரிமை இல்லாதவிடத்து அவற்றை அனுப்ப வேண்டாம்.
நிகழ்வுகள் அல்லது சிறப்புத் தினங்கள் பற்றிய படைப்புகளை உரிய கால அவகாசம் கொடுத்து அனுப்புங்கள். இறுதி நேரத்தில் அனுப்பினால் அவை நிராகரிக்கப்படும் சாத்தியங்கள் உள்ளன. ஏனைய ஊடகங்களில் வெளியானவற்றை அனுப்பாதீர்கள். ஊடகங்கள் குறிப்பிடாதவாறு கிடைக்கப்பெறும் படைப்புகளே ஏற்றுக்கொள்ளப்படும்.

லண்டனில் ‘சாஸ்வதம்’ என்ற நடனப் பள்ளியை 2018ஆம் ஆண்டில் ஆரம்பித்து அண்மையில் தமது ஏழாவது ஆண்டை நிறைவேற்றும் வகையில் மிகச் சிறப்பாக நடாத்தியிருந்தார்கள். லண்டன் பாரதிய வித்ய பவனில் இடம்பெற்ற இந்த நாட்டிய நிகழ்வில் எண்பதிற்கும் மேற்பட்ட பல்வகையான நாட்டியக் கலைஞர்கள் பங்கு பற்றிச் சிறப்பித்தமை அற்புதமான காட்சியாக ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்டது.
கலாநிதி ஜெயந்தி யோகராஜாவுடன் ஸ்ரீமதி பவித்திரா சிவயோகமும் இணைந்து ஆரம்பித்த ‘சாஸ்வதம்’ என்ற நாட்டிய அமைப்பு, அங்கத்தவர்களான ஸ்ரீமதி சஸ்கியா யோகராஜா கிஷான், ரூபேஷ் கேசியுடன் அழகாக ஒழுங்கமைக்கப்பட்டு செயற்பட்ட விதம் மிகவும் பாராட்டிற்குரியது.
பிரதம விருந்தினர்களாக பாரதியவித்ய பவனின் ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவராகத் திகழ்ந்த ஸ்ரீ நேக்கா நாயகர் அவர்களும், கலாமண்டலம் பாபறா நந்தகுமார், மற்றும் கலாமண்டலம் நந்தகுமார் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர். சிறப்பு விருந்தினர்களாக ஸ்ரீமதி அம்பிகா தாமோதரம், ஸ்ரீ ஜெயந்தினி ஸ்ரீகரக்குருக்கள், நவஜோதி ஜோகரட்னம் ஆகியோர் வருகை தந்திருந்தனர்.
இந்தியா, கங்கேரி, கனடா, ஜேர்மனி, இங்கிலாந்து போன்ற நாடுகளிலிருந்து வருகை தந்து சிறப்பு நடனங்களை வழங்கியமையைக் குறிப்பிட்டுக் கூற வேண்டும். ரூபேஷ் கேஷி, சமிக்ஷா திவாகர், சுருதி பாக்கியராஜா போன்ற மற்றும் சில நாட்டியத் தாரகைகள் வித்தியாசமான கோணங்களில் தமது நாட்டியத் திறமையை வெளிக்காட்டி பார்வையாளர்களைக் கட்டிப்போட்டார்கள் என்றால் அது மிகையாகாது.


கண்டி தமிழ் மன்றம் வழங்கும் பேராதனை பல்கலைக்கழக தமிழ்த் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பெருமாள் சரவணகுமார் பதிப்பில் உருவான தேசபக்தன் கோ. நடேசையரின் ஒற்றன் மற்றும் இந்தியா - இலங்கை ஒப்பந்தம் ஆகிய இரு நூல்களின் அறிமுக விழா கண்டி யட்டிநுவர வீதியில் அமைந்துள்ள டெவோன் ஹோட்டலில் வெகு விமர்சையாக இடம்பெற்றது.
பேராசிரியர் துரை. மனோகரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கண்டித் தமிழ் மன்றத்தின் தலைவர் திரு. எஸ். பரமேஸ்வரன் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இரு நூல்கள் வெளியீட்டுரையினை பேராசிரியர் எம். ஏ. நுஃமான் அவர்களும். இந்தியா - இலங்கை ஒப்பந்தம் பற்றிய நூலின் அறிமுகவுரையினை சிரேஷ்ட ஊடகவியலாளர் இக்பால் அலி அவர்களும் மற்றும் ஒற்றன் நாவல் பற்றிய நூலின் அறிமுகவுரையினை திரு. கோ. கணபதிப்பிள்ளை அவர்களும் நிகழ்த்தினார்கள்
நூல்களின் ஆய்வுரையினை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் பொருளியல்துறை, சிரேஷ்ட விரிவுரையாளர் (மேனாள்) பேராசான் மு. நித்தியானந்தன் அவர்களும்
மற்றும் ஏற்புரையும் நன்றியுரையினையும் பேராதனைப் பல்கலைக்கழகம். தமிழ்த்துறை சிரேஷ்ட விரிவுரையாளர், நூல்களின் பதிப்பாசிரியர், கலாநிதி பெருமாள் சரவணகுமார் அவர்களும் நிகழ்த்தினார்கள்
பேராதனை பல்கலைக்கழக தமிழ்த் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எஸ் சுதர்சன் அவர்களின் நெறிப்படுத்தலில் நிகழ்ச்சித் தொகுப்பினை பேராதனை பல்கலைக்கழக உதவி விரிவுரையாளர் சர்வேஸ்வரன் வில்வசரன் அவர்கள் வழங்கினார்.
இதன் போது பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பல்லைக்கழக மாணவர்கள், வர்த்தகப் பிரமுகர்கள் உள்ளிட்ட பெரு எண்ணிக்கையானவர்கள் கலந்து கொண்டனர்.

நண்பரும்,கட்டடக்கலைஞருமான மயூரநாதனின் 'யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு' (1621 - 1948) என்னும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆய்வு நூல் எழுநா பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ளது. இது பற்றிய நண்பரின் முகநூற் பதிவு கீழே:
"இலங்கையில் இந்நூலின் விலை 4,800 ரூபா. இலங்கைக்கு வெளியே தேவைப்படுவோர் பதிவிலுள்ள இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும். எழுநாவின் மற்றுமொரு பதிப்பாக இ.மயூரநாதன் அவர்களின் 'யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு' எனும் நூலினை இன்று முதல் பெற்றுக் கொள்ளலாம் என்பதை வாசகர்களுக்கு அறியத் தருகின்றோம்.
தொடர்புகளுக்கு : இல:63, சேர்.பொன்.இராமநாதன் வீதி, கலட்டிச் சந்தி, திருநெல்வேலி, யாழ்ப்பாணம். | +94 77 797 5029 "
வாழ்த்துகள் மயூரநாதனுக்கும், எழுநா பதிப்பகத்திற்கும்.