வ.ந.கிரிதரன் பாடல்: ஏற்றம்மிகு உலகைச் சமைக்கவே சூழலைப் பேணுவோம்!
- இசை & குரல் - SUNO AI ஓவியம்: கூகுள் AI
பாடலைக் கேட்க
நீலவண்ணக் கோள் ஒர் அற்புதம்!
காலவெளி தந்த பேர் அதிசயம்!
கண்ணுக்குக் தெரியாத உயிர்கள் எத்தனை!
கண்ணுக்குத் தெரியும் உயிர்கள் எத்தனை!
எண்ணற்ற உயிர்களின் இருப்பிடம் அல்லவா!
கண்ணுங் கருத்துமாகப் பேணுதல் கடமை அல்லவா!
வெறுமை சூழ் பேரண்டத்தில் உயிர் அல்லவா!
சிறுமைப் படுத்தல் தகுமோ முறையோ?
சூழலைப் பேணுவோம். தவறுகளைக் களைவோம்.
ஞாலத்தின் நிலையை மாற்றுவோம். நம் காலக் கடமையல்லவா!
நீலவண்ணக் கோள் ஒர் அற்புதம்!
காலவெளி தந்த பேர் அதிசயம்!
கட்டடக் காடுகளால் காடுகளை அழிக்க மாட்டோம்.
எங்கும் இயற்கையைப் பேணுவோம். விருட்சங்கள் வளர்ப்போம்.
இயற்கை அழிவுக்கான பொருட்களைத் தவிர்ப்போம்.
இங்குள்ள உயிர்கள் இருப்பைச் சிதைக்க மாட்டோம்.
காற்றில் உயிர்வாயு இல்லையென்றால் நாமில்லை அல்லவா.
ஏற்றம்மிகு உலகைச் சமைக்கவே உறுதி எடுப்போம்.
மாநிலத்தில் இயற்கையெழில் பேணிட வழிவகுப்போம்.
மகிழ்ச்சியை எங்கும் பரப்பியே வாழ்ந்திடுவோம்.
நீலவண்ணக் கோள் ஒர் அற்புதம்!
காலவெளி தந்த பேர் அதிசயம்!
* வ.ந.கிரிதரன் பாடல்கள் என்னும் என் 'யு டியூப் சானலு'க்கான முகவரி - https://www.youtube.com/@girinav1 இச்சானலைச் 'சப்ஸ்கிரைப்' செய்து ஆதரவினை அளியுங்கள். மேலும் இது போன்ற காணொளிகளை உருவாக்க உங்கள் ஆதரவு மிகவும் அவசியம்




பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









