நவஜோதி யோகரட்னம் - அரசு கலைக் கல்லூரி குளித்தலை தமிழாய்வுத்துறை நடாத்திய இணையவழி மூன்றுநாள் பன்னாட்டுக் கருத்தரங்கில் ‘பிரித்தானியாவில் புலம்பெயர் படைப்பிலக்கியங்கள்’ ஆற்றிய உரை. -


அரசு கலைக் கல்லூரி குளித்தலை தமிழாய்வுத்துறை நடாத்திய இணையவழி மூன்றுநாள் பன்னாட்டுக் கருத்தரங்கில் ‘பிரித்தானியாவில்; புலம் பெயர் படைப்பிலக்கியங்கள்’ குறித்து பேசுவதற்கு என்னை அழைத்த முனைவர் சௌ.பா. சாலாவாணிஸ்ரீ, தலைவர் முனைவர் பொ. ரமேஷ், முதல்வர் முனைவர் கி.மாரியம்மாள், முனைவர் மா. கர்ணன், மற்றும் மாணவச் செல்வங்கள், பார்வையாளர்கள் அனைவருக்;கும் எனது அன்பு கலந்த வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

   ஈழத்தமிழர்களுக்குக் குறிப்பாக யாழ்ப்பாணத்தமிழர்களுக்கு  லண்டன் ஒரு கனவுத் தேசமாகவே இருந்திருக்கிறது. ஆங்கிலேய ஆட்சியின் கீழ் இலங்கை இருந்தது மட்டுமல்ல யாழ்ப்பாணத்தில் தீவிரமாக இயங்கிய மிஷநெறிகளின் உயர்கல்வி செயற்பாடுகளாலும், லண்டன் கனவு நிரந்தரமாகவே அவர்களின் நெஞ்சில் பதிந்திருக்கிறது. ஆரம்பகாலங்களில் உயர் கல்வி கற்பதற்காகவும் உயர் தொழில்களை நாடியும் ஈழத்தமிழர்கள் லண்டன் நோக்கிப் புலம்பெயர்ந்திருந்தனர். மருத்துவர்களாகவும், கணக்காளர்களாகவும், உயர்கல்வி சார்ந்தும் இலண்டன் நோக்கிய புலப்பெயர்வுகள் இடம்பெற்றது.

   1982ஆம் ஆண்டு இனக்கலவரத்தின்பின் அகதிகளாக ஈழத்தமிழர்கள் லட்சக்கணக்கில் குடிபெயர்ந்தனர். இந்நிலையில் லண்டனில் தமிழ் பத்திரிகைகளின் தோற்றமும், எழுத்தாளர்களின் பிரவேசமும், புனைகதை ஆக்கங்களும், விமர்சனக் கூட்டங்களும், நூல் வெளியீடுகளும், கலை நிகழ்ச்சிகளும் வாரத்திற்கு இரண்டு முறை என்ற வகையிலாயினும் தொடர்ந்து இடம்பெற்றவண்ணமே உள்ளன. இப்பின்னணியிலேயே லண்டனில் புலம்பெயர் படைப்பிலக்கியங்கள்; பற்றி நான் பேச இருக்கிறேன்.

   நாவல்; - சிறுகதை – கவிதை - கட்டுரை போன்றவற்றை பிரித்துக் கூறுவது மிகப்பொருத்தாக இருக்கும் என நம்புகிறேன். நாவல் இலக்கியத்தைப் படைத்தவர்கள் மற்றைய இலக்கிய வடிவங்களையும் படைத்திருப்தையும் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அத்தோடு நேரத்தை மனிதிற்கொண்டு முழுப் பட்டியலையும் இங்கு சொல்வதும் சாத்தியமில்லை. முடிந்தவரை தேர்ந்தெடுத்திருக்கிறேன். சில நூல்கள் தவறவிட்டிருக்கலாம் என்று கூறி...

நாவல்கள்
ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம்  மட்டக்களப்பில் கோளாவில் கிராமத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் 1970 ஆம் ஆண்டு லண்டனுக்குக் குடிபெயர்ந்தவர். ‘ஒரு கோடை விடுமுறை’ என்ற நாவல் அது வெளியான காலத்தில் அரசியல் கவனத்தை ஈர்த்த நாவலாகும். அதன்பின் ‘தேம்ஸ் நதிக்கரையில’ ‘தில்லை ஆற்றங்கரை’, ‘உலகமெல்லாம் வியாபாரிகள’, ‘அவனும் சில வருடங்களும்’,  ‘பனி பெய்யும் இரவுகள’,  ‘வசந்தம் வந்து போய்விட்டது’,  ‘நாளைய மனிதர்கள்’ ஆகிய எட்டு நாவல்களைப் படைத்ததின் மூலம் லண்டனில் மிகப் பெரும் நாவல் ஆசிரியராக அவர் பரிணமித்துள்ளார்.

ராஜேஸ்வரி பாலசுப்ரமணியத்தின் சிறுகதைகள்;  'இலையுதிர் காலத்தின் ஒரு மாலை நேரம்', 'அரைகுறையடிமைகள்',  'ஏக்கம்',  'நாளைக்கு இன்னொருத்தன்',  'அம்மா என்றொரு பெண்' ஆகிய  சிறுகதைத் தொகுதிகளாக வெளிவந்துள்ளன. லண்டன் 1995 என்ற சிறுகதைத் தொகுப்பையும் 2019 ஆம் வெளியிட்டவர். லண்டனில் நீண்டகாலமாக குழந்தைகள் நல அதிகாரியாக பணிபுரிந்த ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம்  ‘உங்கள் உடல் உள பாலியல் நலம்’,  ‘தாயும் சேயும்’ என்ற இரு மருத்துவ நூல்களைச் சிறப்பாக எழுதி வெளியிட்டுள்ளார். தமிழில் வெளிவந்த மருத்துவ நூல்களில் இந்த நூல்கள் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். இதனைவிட ‘தமிழ்க் கடவுள் முருகன் வரலாறும் தத்துவமும்’ என்ற இவரது ஆய்வு நூலும் தமிழகத்தில் பாராட்டைப் பெற்ற நூலாகும்.

     வவுனியூர் இரா. உதயணன் 1979 ஆம் ஆண்டு எழுதத் தொடங்கியவர், பல தொடர்கதைகளையும்,  சிறுகதைகளையும் (80க்கு மேல்) பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் எழுதியுள்ளார். 6 நாவல்கள்,  2 சிறுகதைத் தொகுப்புகள்; வெளிவந்துள்ளன. ‘சுருதி பேதமைகிறது’ (நாவல்) – ‘விதி வரைந்த பாதையிலே’ (நாவல்) – இலங்கை அரசின் சாகித்திய விருது பெற்றது. ‘நூல் அறுந்த பட்டங்கள்’ தமிழ்நாடு கலை இலக்கிய மன்ற விருது பெற்றது. ‘பனி நிலவு’ (நாவல்) கொடகே விருது பெற்றது. மற்றும் சின்னப்ப பாரதி அறக்கட்டளை முதன்மை விருது பெற்றது. ‘உயிர்க்காற்று’ (நாவல்),  ‘வலியின் சுமைகள்;’ (நாவல்) கொடகே விருது, திருப்பூர் தமிழ்ச்சங்க விருது, ராஜபாளையம் மணிமேகலை மன்ற விருது, திருப்பூர் இலக்கிய விருது பெற்றது. ‘மாறுபட்ட சூழலில் வேறுபட்ட மனிதர்கள்’ (சிறுகதைத் தொகுப்பு) ‘வன்னிவலி’ (சிறுகதைத் தொகுப்பு),  ‘நூல் அறுந்த பட்டங்கள’,  ‘பனிநிலவு’ , வலியின் சுமைகள் ஆகிய நாவல்கள் இந்தி,  மலையாளம், சிங்கள மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ‘வலியின் சுமைகள்’ நாவலை நாவலாசிரியரே ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார். சென்ற வருடம் ஆகஸ்ட் மாதம் ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவையின் புத்தகப்பெருவிழாவில் இவரது படைப்புக்கள் ஆய்வு செய்யப்பட்டு ‘ஈழத்து இலக்கிய ஆளுமை வவுனியூர் இரா. உதயணன்’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது. ( பேராசிரியர் சு. துரை அவர்களால் ஆய்வு செய்யப்பட்டது)  அத்துடன் விண்வெளி ஆராய்ச்சியாளர் கலாநிதி மயில்சாமி அண்ணாத்துரை அவர்களால் கௌரவிக்கப்பட்டவர்.

விமல் குழந்தைவேல் இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் அக்கரைப்பற்று கோளாவிலில் பிறந்தவர். 1988 இல் லண்டனுக்குப் புலம் பெயர்ந்த இவர் 90களிலேயே எழுதத்தொடங்கினார். ‘தெருவில் அலையும் தெய்வங்கள்’,  ‘அசதி’,  ‘குறளிக் குஞ்சன’,  ‘அவளுக்குள் ஒருத்தி’ போன்ற நான்கு சிறுகதைத் தொகுதிகளையும்,  ‘மண்ணும் மல்லிகையும,  ‘வெள்ளாவி’,  ‘கசகறணம்’ என மூன்று நாவல்களும் இதுவரை எழுதியுள்ளார். ‘வெள்ளாவி’ ஒரு சர்ச்சைக்குரிய நாவலாகத் திகழ்ந்ததையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

 உரும்பிராய் எம்.ரி செல்வராஜா ‘ரஷ்யாவின் ரஸ்புட்டின் தீர்க்கதரிசியா? புரட்சியாளரா?’ என்ற சரித்திர நாவல், ‘லண்டனில் நாரதர்’ - நாடகத் தொகுதி, ‘நினைவில் ஒரு நிலா’ (சிறுகதைத் தொகுதி) ,  ‘வாடகை வீடு’ – (சிறுகதைத் தொகுதி, ‘உண்மை தெரியாமல் வைத்த நட்பு’ (சிறுகதைத் தொகுதி) ஆகியன இவரது படைப்புகளாகும், தமிழறிவு – பாடநூல்கள் என்ற பிறதொரு கல்விசார் நூலினையும் ஆக்கியுள்ளார்.

தீபதிலகை என்ற கிருஷ்ணவேணி ஸ்ரீகந்தவேள் யாழ் பல்தொழில் நுட்பக் கல்லூரியில் கணக்கியலை மேற்கொண்டவர். கவிதை, உரைநடை இரண்டிலும் தடம்பதித்து வரும் இவர் ‘மகிழம் பூவும் அறுகம்புல்லும்’ என்ற சரித்திர நாவலை எழுதி வெளியிட்டுள்ளார்.

சிவ தியாகராஜா மருத்துவம் பயின்ற மருத்துவரான இவர் மானிட வரலாறு குறித்தும்,  ஈழத்தமிழர் வரலாறு குறித்தும் ஆய்வுகளை மேற்கொண்டவர். இலங்கையின் புராதன யாழ்ப்பாணத்தில் கந்தரோடை நாகரீகம் குறித்து அவர் எழுதிய ஆங்கில நூல் சிறந்த ஆய்வு நூலாகும். ‘ஈழத்தமிழரின் ஆதிச் சுவடுகள்’, ‘தமிழ் மக்களும் தழுவிய மதங்களும்’ (கி.மு.3000 முதல் கி.பி. 2000 வரையிலான சமய வரலாற்றுச் சுருக்கம்),  ‘நீ சாகமாட்டாய் ராதா’ (நாவல்),  ‘எம்.ஜி.ஆர்,  சிவாஜி,  ஜெமினி கணேசன் சில இனிய நினைவுகள்’ போன்ற நூல்களையும் எழுதியவர்.    

கரவை மு. தயாளன்  ‘கலசம்’ சைவ இதழின் ஆசிரியர், ‘திருவருள்’ என்ற சஞ்சிகையின் ஆசிரியர்.  ‘சில மனிதர்களும் சில நியாயங்களும்’ (நாவல்),  ‘கடல் கடந்து’ போனவர்கள் (நாவல்),  ‘புளிய மரம்’(சிறுகதைத் தொகுதி),  ‘மண்ணில்  தெரியுது வானம்’ (கட்டுரைத் தொகுப்பு). பௌதீகவியல்,  கணிதம்,  ஆங்கிலம் ஆகிய பாடங்களில் மாணவர்களுக்கான 36 கைநூல்களை வெளியிட்ட ஒரு சிறந்த ஆசிரியராகவும் திகழ்பவர்.

பசுபதி சசிகரன் ‘கட்டடக் காடு’ (நாவல்),  ‘பாவு தளிர்ந்த தூவு வானம்’ (சிறுகதைத் தொகுப்பு) இலங்கை அரசின் சாகித்திய விருது பெற்றது.

அனோஜன் பாலகிருஷ்ணன் ‘சதைகள்’ (நாவல்), ‘பச்சை நரம்பு’ (சிறுகதைகள்)

சிறுகதைகள்
பிரித்தானியாவில் வாழ்ந்துகொண்டிருக்கும் பவானி ஆழ்வாப்பிள்ளை 1960 களிலேயே ஈழத்து வரலாற்றில் பெண்ணியக் கருத்துக்களை துணிச்சலோடு முன்வைத்த முதல் பெண் எழுத்தாளர் ஆவார். கற்பு. ஒழுக்கம் போன்ற கருத்தியல்களை புரட்சிகரமாக அணுகிய பவானி ஆழ்வாப்பிள்ளையின் சிறுகதைகள் ‘கடவுளரும் மனிதரும்’ என்ற சிறுகதைத் தொகுப்பாக வெளிவந்துள்ளது.  பேராதனைப் பல்கலைக்கழகப் பட்டதாரியான பவானி ஆழ்வாப்பிள்ளை, தனது எழுத்துக்களை தன்னை அறிதலான சுயநிர்ணயம் என்று கூறுகின்றார். கலைச்செல்வியில் அவர் எழுதிய ‘மன்னிப்பாரா ; என்ற சிறுகதை சர்ச்சைக்குள்ளான பெண்ணியல்வாதக் கதையாகும். சி. வைத்திலிங்கம் சிறுகதை முன்னோடிகளில் ஒருவராகக் கணிக்கப்படும் இவரின் ‘கங்கா கீதம்’ என்ற சிறுகதைத் தொகுப்பை அவரது புதல்வி யமுனா ஸ{மங்கலி தருமேந்திரன் நூலாக வெளியிட்டார்.

  இளைய அப்துல்லாஹ் ' நீரில் விளக்கெரியும் நந்திக்கடல்' - (பத்திகள்),  'துப்பாக்கிகளின் காலம்' (சிறுகதைகள்) 2004, ' பிணம் செய்யும்தேசம்'(கவிதைகள்) 2004, ' அண்ணை நான் தற்கொலை செய்யப் போகிறேன்' (கட்டுரைகள்) 2010,  கடவுளின் நிலம் (கட்டுரைகள்) 2010,  ‘லண்டன் உங்களை வரவேற்பதில்லை’ கட்டுரைகள்),  2011 போன்ற நூல்களை வெளியிட்டவர்.

 சி.மாதுமை  தனது சிறுவயது முதல் எழுதுவதில் மிகுந்த ஆர்வம் காட்டி வந்த மாதுமை  தனது இருபத்தாறாம் வயதில் ‘தூரத்துக் கோடை இடிகள்’ (2005) என்ற சிறுகதைத் தொகுதியை வெளியிட்டவர்.

சாரங்கா சாவகச்சேரியை பிறப்பிடமாகக்கொண்டவர்;. 1992 ஆம் ஆண்டு ஈழநாதத்தில் ‘ஓன்றரைக்கால்’ என்ற சிறுகதை மூலம் எழுத்துலகில் பிரவேசித்தவர். ‘ஏன் பெண்ணென்று’ என்ற சிறுகதைத் தொகுப்பை 2004இல் ‘ஞானம்’ வெளியீடாக  எழுதி வெளியிட்டவர். கோவிலூர் செல்வராஜன் பல்துறைக் கலைஞரான இவர் ‘இளமைக்கோவில் ஒன்று’ – (நாவல்), ‘படகுத்துறை அருகினிலே’ – (நாவல்),  ‘லாவண்யா ஒரு முற்றுப்புள்ளி’ – (நாவல்), ,  'மலைக்கோட்டை மர்மம்'  - தொடர்கதை(சிறுவர்),  ‘புதுக்கோலங்கள்’(மெல்லிசைப்பாடல்கள்), ‘மண்வாசம்’ (கவிதைகள),  ‘விடியாத இரவுகள்’ (சிறுகதைகள்),  (லில்லி தேவகிகாமணி இலக்கிய விருது (1977) தமிழ் நாடு),  ‘கோவிலூரின் பக்திப்பாடல்கள்’ தொகுப்பு,  ‘தேசத்தின்தென்றல்’ (தாயக உணர்வுப் பாடல்கள்),  ‘இல்லாமல்போன இன்பங்கள’ (கட்டுரைகள்),  ‘ஊருக்குத் திரும்பணும்’(சிறுகதைகள்)

முல்லை அமுதன்  எனும் பெயரில் 80களிலிருந்து எழுதிவரும் மகேந்திரன் இரத்தினசபாபதி அவர்கள் ‘நித்தியகல்யாணி’ (கவிதைத் தொகுப்பு),  ‘புதிய அடிமைகள்’ (கவிதைத் தொகுப்பு),  ‘விடியத்துடிக்கும் ராத்திரிகள்’ (கவிதைத் தொகுப்பு),  ‘விழுதுகள் மண்ணைத் தொடும’ (கவிதைத் தொகுப்பு), ‘ஆத்மா’ (நாவல்),  ‘யுத்த காண்டம்’ (கவிதைத் தொகுப்பு),  ‘விமோசனம் நாளை’ (நாவல்),  ‘பட்டங்கள் சுமக்கின்றான்’ (நாவல்),  ‘ஸ்சிநேகம்’ (நாவல்),  ‘யாகம்’ (நாவல்),  ‘இசைக்குள் அடங்காத பாடல்கள்’ (கவிதைத் தொகுப்பு) இலக்கியப் பூக்கள் தொகுதி ஒன்று,  இரண்டு போன்ற நூல்களுடன் (கட்டுரைத் தொகுப்பு), எழுத்தாளர் விபரத் திரட்டு ஆவணம் (2015),  ‘தாமரை தீவானின் மொழிநூறு’ (கவிதைத் தொகுப்பு),  ‘சுதந்திரனின் கவிதைகள்’ நூல்களையும் வெளியிட்டுள்ளார். வருடாந்தம் ஈழத்து நூல் கண்காட்சிகளை நடாத்துவதுடன், ஈழத்து நூல்களை ஆவணப்படுத்தியும் வருவதுடன், காற்றுவெளி,  நெய்தல் இலக்கிய சஞ்சிகையும் நடாத்தி வருகின்றார். தற்போது ‘என் வீடு அழகாய் இல்லை’ எனும் கவிதை நூல் வந்துள்ளது. இவருக்கு இங்கிலாந்து ரூட்டிங் முத்துமாரியம்மன் கோவில் அறங்காவலர் குழுவினரால் முத்தமிழ் விழாவில் 14.04.2012 பைந்தமிழ் காவலர் எனும் பட்டமளித்து கௌரவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

 சந்திரா இரவீந்திரன்  : இலங்கையின் வடமராட்சி – பருத்தித்துறையில் மேலைப்புலோலியூர், ஆத்தியடியைப் பிறப்பிடமாகக் கொண்ட சந்திரா இரவீந்திரன் 1991இல் பித்தானியாவிற்கு இடம்பெயர்ந்து இலண்டனில் வசித்து வருகின்றார். ‘ஒரு கல் விக்கிரகமாகிறது’ 1981இல் வெளியான இவரது முதற் சிறுகதையாகும். 1988இல் பருத்தித்துறை –யதார்த்தா இலக்கிய வட்டத்தினால் ‘நிழல்கள்’ என்ற முதல் சிறுகதைத் தொகுதி வெளியிடப்பட்டது. 2011 இல் ‘நிலவுக்குத் தெரியும்’ என்ற சிறுகதைத் தொகுப்பை எழுதி வெயிட்டவர். உமையாழ் சிறந்த விமர்சனங்கள், கட்டுரைகளை எழுதிவருபவர். உமையாழின் ‘ஊயளள அல்லது ஏற்கனவே சொல்லப்பட்ட கதையில் சொல்லப்படாதவை’ என்ற சிறுகதைத் தொகுப்பை அண்மையில் வெளியிட்டிருக்கிறார்.

நிவேதா உதயராயன் : இணுவில் என்னும் ஊரில் பிறந்து புலம்பெயர்ந்து ஜேர்மனிக்குப் புலம்பெயர்ந்து பின்னர் இடம்பெயர்ந்து பிரித்தானியாவில் வாழ்ந்துகொண்டிருக்கிறார். ‘வரலாற்றைத் தொலைத்த தமிழர்;’- ஆய்வு நூல், ‘நிறம் மாறும் உறவுகள்’- (சிறுகதைகள்),  ‘நினைவுகளின் அலைகள்’- ‘கவிதைத் தொகுதி’,  உணர்வுகள் கொன்றுவிடு - சிறுகதைத் தொகுப்பு ஆகியவற்றை எழுதி வெளியிட்டவர். வினோதரன்; ‘தவிச்சமுயல்;’ சிறுகதைத்தொகுப்பை எழுதி வெளியிட்டவர்.

கவிதைகள்
நவஜோதி ஜோகரட்னம்   ‘எனக்கு மட்டும் உதிக்கும் சூரியன்’ லண்டனில் வெளியான எனது முதல் கவிதைத் தொகுப்பாகும். விமர்சகர் மு. நித்தியானந்தன் ‘தீபம்’ தொலைக்காட்சியில் இதனைப் பாராட்டி விமர்சனம் செய்திருந்ததை நினைவுவிருத்த விரும்புகின்றேன். அரசு கலைக்கல்லூரி குளித்தலை தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் சௌ. பா. சாலாவாணிஸ்ரீ அவர்கள் ‘எனக்கு மட்டும் உதிக்கும்சூரியன்’ என்ற கவிதைத் தொகுப்பை ஆய்வு செய்துள்ளார் என்பதை இவ்வேளை நன்றியோடு; கூறிக்கொள்ள விரும்புகிறேன். ‘மகரந்தச் சிதறல்’ என்ற எனது இரண்டாவது நூல் பாமுகம் பா.ரிவி லண்டன் தமிழ் வானொலியில் நான் மேற்கொண்டிருந்த நேர்காணல்களில் 33 பெண் ஆளுமைகளின் தொகுப்பாகும். இசை,  நாட்டியம்,  நாடகம், ஓவியம், இலக்கியம்,  அரசியல்,  மருத்துவம், தொழில்முயற்சி போன்ற ஆளுமைகளை வெளிப்படுத்தி நிற்கும் காத்திரமான நூலாகும். இந்நூல் இலங்கையில் இரா. உதயணன் இலக்கிய விருதைப் பெற்றது.

இளவாலை அமுது நெஞ்சே நினை, இவ்வழிச் சென்ற இனிய மனிதன், காக்கும் கரங்கள் (வைத்திய நூல்) அன்பின்கங்கை அன்னை திரேசா, மடுமாதா காவியம்,  அன்னம்மாள் ஆலய வரலாறு,  அமுதுவின் கவிதைகள் ஆகிய நூல்களை எழுதி வெளியிட்டவர்.

ப.வை.ஜெயபாலன் தெல்லிப்பழையை பிறப்பிடமாகக் கொண்ட லண்டன் வாசி. கவிஞர் எழுத்தாளர்,  செய்தித்தயாரிப்பாளர். ‘தடாகம்’,  ‘நிழல் தேடும் தமிழன்’ (கவிதைத் தொகுப்பு) ,  ‘சிங்களம் தந்த சிறை’ அனுபவத் தொகுப்பும் இவரது ஆக்கங்களாக வெளிவந்தவை. புதினம்,  ஒரு பேப்பர் ஆகிய பத்திரிகைகளில் சங்கதிகள், ஊரின் வாசம் என்ற கட்டுரைத் தொடர்களை பல ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதிவருபவர். யுகசாரதி திரு எஸ். கருணாந்தராஜா களுவாஞ்சிக்குடியில் பிறந்து தற்போது லண்டனில் வாழ்ந்துகொண்டிருக்கிறார். யுகசாரதி எனும் புனைப்பெயரைக் கொண்ட கருணானந்தராஜா ‘ஈழத்தாய் சபதம்’,  ‘பாரதியின் குயில் பாட்டு’. ‘வள்ளுன் காதல்’ போன்ற கவிதைத் தொகுப்புகளையும்,  மற்றும் ஆங்கிலத்தில் ஒரு விவசாய ஆய்வு நூல் போன்ற நூல்களை எழுதி வெளியிட்டவர். ஓர் விவசாய விஞ்ஞான ஆராய்ச்சியாளராகத் திகழும் கருணானந்தராஜா தமிழ்மொழிமீதும்,  தமிழினம் மீதும் உயிர்மூச்சாய் தனது வேட்கையைக் கவிதைகளில் வெளிப்படுத்துபவர். இவரது பாரதி குயில்பாட்டின் தத்துவ மர்மம் நூலுக்கு ஸ்ரீராம் நிறுவனத்தினரால் ‘பாரதி இலக்கியச் செல்வர்’ என்னும் பட்டமும், பொற்கிளியும் டைரக்டர் கே. பாலச்சந்தர் அவர்களினால் வழங்கப்பட்டது.

அங்கயற்கண்ணி  காங்கேசன்துறையைச் சேர்ந்த அங்கயற்கண்ணி தமிழரசுக் கட்சியில் செயற்பட்ட பெண்மணியாகத் திகழ்ந்தவர். தமிழரசுக் கட்சியின் அரசியல் மேடைகளில் நன்கு அறியப்பட்ட  அங்கையற்கண்ணி தமிழகத்தில் புலம்பெயர்ந்தபோது எழுதிய கவிதைகள் ‘ஈழத்துப் போராட்டம்’ என்ற தலைப்பில் தொகுப்பாக ‘கயல்விழி’ என்ற புனைபெயரில் வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது. கலைஞர் மு. கருணாநிதியின் முன்னுரையுடன் வெளியான கவிதைத் தொகுப்பு ஈழத்தின் விடுதலைப் போராட்ட கவிதைகளாக மலர்ந்திருந்தன. லண்டன் கவியரங்குகளில் அடிக்கடி பங்குகொள்ளும் அங்கயற்கண்ணி சமூக சேவகியாகச் செயற்பட்டு வந்துள்ளார்.

 உதயகுமாரி பரமலிங்கம்,  அரியாலையூர் அம்புயம், நிலா போன்ற புனைபெயர்களில் கவிதை, கட்டுரை, நாடகம் போன்றவற்றைப் படைத்து வருகின்றார். ‘எந்தையும் யானும்’  (நிலாவினதும் அவரது தந்தை சிவம் பரமலிங்கத்தினதும் கவிதைகள்),   ‘எழுத எழுத’  (சக்கர நாற்காலியில் தன் வாழ்வை நகர்த்தும் நிலாவின் சுயசரிதம்),  ‘நிலாவின் இந்திய உலா’ 2003,2009 களில் இந்தியா சென்ற நிலாவின் அனுபவங்களின் கோர்ப்பு.  2010 இல் வெளிவந்த சிறந்த பயணக்கட்டுரைக்கான தமிழியல் விருதினை 2011இல் பெற்றது,   ‘உறைக்கும் உண்மைகள்’ ஐரோப்பிய வாழ்வியலை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட குறுநாவல். அக்டோபர் 2010 திருநெல்வேலி, தமிழகம். ‘அம்மா வாழ்க!’ பலவிதமான ஆக்கங்களின் தொகுப்பு.
தமிழ் உதயா ஈழத்தின் மல்லாவியில் பிறந்தவர். ‘பின்நோக்கிப் பாயும் நதியில் உருளும் கூழாங்கற்கள்’,  ‘உப்புச் சாடிக்குள் உறையும் துயரக்கடல்’,  ‘ஆதிக்கிழவனின் காதல்’,  ‘அத்லாண்டிக் மகா சமுத்திரத்தில் கரையொதுங்கும் துறவாடைகள்’,  ‘கூடடையும் ஆளண்டாப் பறவைகள்’,  ‘போதி மரங்களில் இரத்தப் பூக்கள்’,  (ஈழப்போரின் குரலற்றவரின்சாட்சியங்கள்),  ‘அகாலத்தின் நித்தியக் கடல்’,  ‘ஆண்நிற வெயில்’,  ‘எனக்குப் பறவை நிழல’;,  ‘பாஷோவின் அறையில்’,  மொழிபெயர்ப்பு ((Bleeding of the Voiceless of the Eezham War)  போன்ற கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டவர். செல்வி நிதர்சனா ஜெகநாதன் ‘லண்டன் தமிழ் நிலையம்’ பாடசாலை மாணவியாக ‘இளம் நினைவுகள்’ என்ற கவிதைத் தொகுப்பை வெளியிட்டவர்.

மாதவி சிவலீலன் ‘பொன்னாலைக் கிருஷ்ணப்பிள்ளையின் பாடல்கள் - ஓர் ஆய்வு’ என்னும் நூலையும்,  ‘இமைப்பொழுது’ என்ற கவிதைத் தொகுப்பையும் எழுதி வெளியிட்டுள்ளார்.

மு.புஷ்பராஜன் : 1970களில் எழுதத் தொடங்கியவர். இலக்கிய, திரைப்பட விமர்சனக் கட்டுரைகளும் சிறுகதைகளும் கவிதைகளும் எழுதியுள்ளார். மீனவர் பாடல்களின் தொகுப்பு ஒன்றினை ‘அம்பா’ என்ற பெயரில் அலை வெளியீடாக வெளியிட்டிருக்கிறார். ‘மீண்டும் வரும் நாட்கள்’ என்ற கவிதைத் தொகுப்பை; 2004 இல் வெளியிட்டவர்,  ‘வலை உணங்கு குருமணல்’ என்ற கட்டுரைத்தொகுதியையும் 2011இல் வெளியிட்டவர்.
 
நடா சிவராஜா ‘சின்னஞ்சிறு  தூறல்கள்’ கவிதைத் தொகுப்பு.

தஷந்தி சங்கர் ‘என் விரல்களின் தவம்’ (கவிதைத் தொகுப்பு)

அனன்யா ரஜீந்திரகுமார் ‘எங்கள் கண்ணம்மாவின் கவி வரிகள்’ கவிதை நூலைவெளியிட்டவர்.

தவ சஜீதரன் ‘ஒளியின் மழலைகள்’ கவித்தொகை ஒன்று,  கவித்தொகை இரண்டு  என்ற நூலை வெளியட்டவர்.

நா .சபேசன்  ‘இனிவரும் காலம்’ 1986 என்ற கவிதைத் தொகுப்பை வெளியிட்டவர்.


அ.சிவ சிவா என் எண்ணத்தில் சில கவிதைத்துளிகள் என்ற கவிதைத் தொகுப்பை எழுதி வெளியிட்டவர்.

கட்டுரைகள் (Non Fiction books)
எஸ்.அகஸ்தியர் எழுதிய ‘லெனின் பாதச் சுவடுகளில்’ என்ற நூலில் லெனின் மீது அவர் கொண்ட இதயசுத்தியான மதிப்பைப்; பார்க்க முடிகின்றது. எஸ். அகஸ்தியர் என் இனிய தந்தை என்பதை இதில் நினைவு கூருகின்றேன். மார்க்சிய ஒளியில் தன் இலக்கியத்தைத் தரிசித்த அகஸ்தியர் சிறுகதை,  நாவல்,  குறுநாவல்,  கவிதை,  வானொலி நாடகம்,  விமர்சனம்,  உருவகக்கதை,  குட்டிக்கதை,  உணர்வூற்றுருவகச் சித்திரம்,  நாட்டுக்கூத்துப் பாடல்,  வாழ்க்கை வரலாறு ஆகிய இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் அழுத்தமான முத்திரையைப் பதித்தவராவார். சாதியப் போராட்டத்தை முன்வைத்து இவர் எழுதிய ‘எரி நெருப்பில் இடை பாதையில்லை’ என்ற நாவல் ஈழத்தில் எழுந்த முதல் தலித்திய நாவலாகும். அவர் பாரிசில் மறைந்த 25 ஆவது இந்த ஆண்டில் உங்களுடன் அவர் குறித்துப் பேசுவது என் நெஞ்சை நெகிழ்த்துகிறது. அவரது ‘சுவடுகள்’ என்ற நாவலும் விரைவில் வெளிவர உள்ளது. 16 இற்கும் மேற்பட்ட காத்திரமான நூல்களை எழுதி வெளியிட்டவர். அரச விருதுகள் பலவற்றை இவர் பெற்றிருந்தாலும், இவரது ‘மேய்ப்பர்கள்;’ என்ற நூலுக்கு தமிழ்நாடு, இலங்கை அரசின் விருதுகளைப்; பெற்றிருந்தமையை இங்கு குறிப்பிட்டுக் கூற விரும்புகிறேன்.
 
திருமதி தனபாக்கியம் குணபாலசிங்கம்  ஏழாலையைச் சேர்ந்த தனபாக்கியம் குணபாலசிங்கம் தமிழகத்தில் தொல்லியலை சிறப்புத்துறையாகப் பயின்றவர். ஈழத்தில் கிடைக்கப்பெற்ற ஈமத்தாழிகளுக்கும், தமிழகத்தில் கிடைக்கப்பெற்ற ஈமத்தாழிகளுக்கும் இடையிலான ஒற்றுமைகளை ஆராய்ந்து எழுதிய ‘இலங்கையில் தொல்லியல் ஆய்வுகளும் திராவிட கலாச்சாரமும்’ என்னும் நூல் மிக முக்கிய வரலாற்று ஆய்வு நூலாகும். இதனைத் தொடர்ந்து ‘தமிழகப் பூர்வீக வரலாறும் அரிய செய்திகளும்’ என்ற நூலை வெளியிட்டார். இதனையடுத்து ‘மட்டக்களப்பு மான்மியம் ஓர் ஆராய்ச்சி’ என்ற தலைப்பில் இவர் வெளியிட்ட நூல் மட்டக்களப்பு தமிழர்களின் வரலாற்றை பொதுமக்களும் விளங்கிக்கொள்ளும் வகையில் எளிமையாக எழுதப்பட்டுள்ளது. ‘வங்க இளவரசர் விஜயன் வரலாhறும்; இலங்கையிற்; சிங்கள இன, மொழி,  எழுத்துத்தோற்ற,  வளர்ச்சி நிலைகளும்’ என்ற இவரது நூல் பெருங்கற்பண்பாட்டுத் தொல்லியல் களங்களிலிருந்து கிடைத்த தடையங்களை அடிப்படையாகக் கொண்ட சிறந்த ஆய்வு நூலாகும்.

      இவர் எழுதிய ‘சைவ சித்தாந்தமும் விஞ்ஞான உலகமும்’ என்ற நூலும் ‘பின்பற்றப்பட வேண்டிய சைவ தத்துவங்கள்’ என்ற நூலும் ஈழத்து சைவ சித்தாந்த வரலாற்றைத் தொகுக்கும் சிறந்த முயற்சிகளாகும். ‘மானிட வரலாறு’ என்ற இவரின் நூல் தனித்துவமானது. ‘குமரிக்கண்டம் முதல் சுமேரியாவரை தமிழர் வரலாறு’ என்ற அவரது மற்றுமொரு நூல் விவிலிய வேதத்தோடு தமிழர்களைத் தொடர்புபடுத்தி ஆராயும் நூலாக முகிழ்த்;துள்ளது. இவரது ‘பிராணிகள் கூறும் அறிவியல் கதைகள்’ என்னும் நூலும் ‘The stories of Moral Teachings’  என்ற நூலும் முக்கிய நூல்களாகும்.

சிறீக்;கந்தராசா செல்லத்தம்பி  சட்ட வல்லுநரான இவர் தமிழிலும்,  ஆங்கிலத்திலும் புலமை வாய்ந்தவர். சங்கத் தமிழ்க் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர். ;. ‘Scenes from Tamil classic’  என்ற நூலை எழுதி வெளியிட்டவர். சிலப்பதிகாரத்தையும் மணிமேகலையையும் ஆங்கிலத்தில் உரைநடையில் நூலாக்கி உள்ளார். பெரிய புராணத்தை எளிமையான வடிவில் ஆங்கிலத்தில் தந்திருக்கிறார்.  ‘திருமந்திரம்’,  ‘இனிக்காதா இலக்கணம்?’,     ‘Tamil through English’,  ‘ ‘அவ்வையார் காட்டிய வழி’, ‘ஆங்கிலம் பிறந்த கதையும் வளர்ந்த கதையும’,  ‘ஊர்க்காற்று’, ‘சட்டமும் தமிழும்’ போன்ற காத்திரமான படைப்புக்களை வெளியிட்டவர்.
 மு. நித்தியானந்தன் யாழ் பல்கலைக்கழகத்தில் பொருளியல் துறையில்  விரிவுரையாளராகப் பணியாற்றியவர். லண்டனில்  Hayes   பாடசாலையில் பணியாற்றிய இவர் சிறந்த இலக்கிய விமர்சகர் ஆவார். மலையக மக்களின் வரலாற்று ஆவணமாக ‘கூலித்தமிழ்’ என்ற சிறந்த மலையக மக்களின் வரலாற்று நூலை எழுதி வெளியிட்டவா. சுப்ரமணியம் விசாகன் வரலாற்று ஆய்வாளாரான  இவர் ‘இலங்கையில் மனிதக் குடியமைவு மரபணுவியல்   (DNA)  அடிப்படையிலான ஆய்வு உருவரை –   PEOPLING Of SRI LANKA An outline Based on Genetic  (DNA) Studies’    என்ற ஆய்வு நூலை எழுதியுள்ளார்.

 சிறந்த ஊடகவியலாளரான இளையதம்பி தயானந்தா . 1990 களின் தொடக்கத்தில் இலங்கை வானொலியின் அறிவிப்பாளராக திகழ்ந்த தயானந்தா தமிழகத்தின் தலைசிறந்த ஜெயகாந்தன், சிவாஜிகணேசன் போன்ற ஆளுமைகளினநேர்காணல்களை மேற்கொண்டவர். நேர்காணப்பட்ட எழுத்தாளர்கள், அரசியல்வாதிகள்,  பிரபலங்களை மனிதத்துவ உயிர்ப்புடன் நேயர்கள் முன் நிறுத்துவதில் பிரபலமானவராகச் செயற்பட்டவர். அந்த நேர்காணல்களின் தொகுப்பு ‘வானலையின் வரிகள்’என்ற தொகுப்பாக வெளிவந்து பலரதும் பாராட்டைப்பெற்றது.

 புனிதம் பேரின்பராஜா   இலங்கைப் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பட்டதாரியான புனிதா பேரின்பராஜா இலங்கையில் ஆசிரியராகப் பத்தாண்டுகளுக்கு மேலாகக் கடமையாற்றியவர். புலம்பெயர்ந்து பிரித்தானியாவுக்கு வந்து லண்டன் பல்கலைக்கழகத்தில் ‘பல்கலாச்சார’த் துறையில் பல ஆய்வுகளை மேற்கொண்ட புனிதா பேரின்பராஜா லண்டன் ஆங்கிலப் பாடசாலைகளில் மொழியியல் வல்லுநராகக் கடமையாற்றியதோடு,   ஆங்கில ஆசிரியர்களுக்கு விரிவுரையாளராகவும்,  செயலாளராகவும் செயலாற்றியவர். தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதும் ஆற்றல் கொண்ட புனிதா பேரின்பராஜா ஐந்து நூல்களை எழுதி வெளியட்டவர்.  ;. ‘Indian Music: Songs and Dance for schools’ (with CD), ‘Musical Instruments of the Indian sub continent’, ‘Heritage studies – positive images of Asian in Britian’,  ‘Journeys of a lifetime’, ‘Tamil through songs’.
மீனாள் நித்தியானந்தன் மருத்துவத்தாதியாக அனுபவம் கொண்ட இவர் ஃபுளோரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையார் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டவர். இவர் லண்டனில் 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற பெண்கள் சந்திப்பில் இந்தியாவின் முதல் பெண் மருத்துவரான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பற்றி வாசித்த கட்டுரையின் மூலம் இலக்கிய உலகிற்கு அறிமுகமானவர். தமிழ்க் கவியின் ‘ஊழிக்காலம்’,  ‘இனி ஒரு போதும்’ ஆகிய நூல்களையும்,  மலையாள எழுத்தாளர் கமலாதாஸின் ‘என் கதை’,  ராஜேஸ்வரியின் மருத்துவத்துறை நூல்களையும்;; விமர்சனம் செய்தபோது இவரின் விமர்சனப் பார்வை அனைவராலும் பாராட்டப்பட்டது..

பேராசிரியர் கோபன் மகாதேவர் மட்டுவிலில் 1934 இல் பிறந்து தன் 14 ஆவது வயது தொடக்கம் தமிழிலும்,  ஆங்கிலத்திலும் கட்டுரைகள்,  கவிதைகள்,  சிறுகதைகள் நூல்களை எழுதி வருகிறார். பல பொறியியல் ஆராய்ச்சி,  தொழில் நுட்பம்,  பரிபாலனம்  துறைகளில் பட்டங்கள் பெற்றவர். 1974 இல் யாழ் நகரில் நடந்த அனைத்துலக தமிழாராய்ச்சி மகாநாட்டின்  பிரதம செயலாளர். 2006 -2014 காலத்தில் பிரித்தானிய ஈழவர் இலக்கியச் சங்கம்   (ELAB)    எனும் எழுத்தாளர் பட்டறையை துணைவி வைத்தியை சீதாதேவியின் ஊக்கத்துடன் நடாத்தி 2007,  2010,  2012,  2014களில் ‘பூந்துணர்’  (Perspectives)   எனும் தொகுப்பு நூல்களை வெளியிட்டவர். 1997 இன் பிரித்தானிய ஆங்கிலக் கவிதை நூல்கள் போட்டியில் தன்  Life in Nutshells  என்னும் நூலுக்கு முதற் பரிசு பெற்றவர். ஈழம்,  ஐக்கிய ராச்சிய  அரசியல்களில் ஈடுபாடு கொண்டவர். 1994 இல்  A Plan for peace in Eelam  எனும் நூலை வெளியிட்டவர்.
    வைத்தியை சீதாதேவி மகாதேவா இவர் தனது 65 ஆவது வயதில் இளைப்பாறிய பின்பே,  தன் கணவரின் ஊக்கத்துடன் எழுதத் தொடங்கி ஆங்கிலத்திலும்,  தமிழிலும் அறுபதிற்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதியவர். துணைவருடன் இணைந்து நடாத்திய பிரித்தானிய ஈழவர் இலக்கியச் சங்கத்தில்  (ELAB)  திறமைமிக்க,  விரும்பப்பட்ட ஒரு முன்னணிநிலை எழுத்தாளராக மலர்ந்து மறைந்தார். ‘வைத்தியை சீதாதேவி மகாதேவாவின் 80   Years’  என்னும் நூலை அவர் பிறந்ததினப் பரிசாக வெளியிட்டு ஆற மாதங்களில் மாரடைப்புச் சிகிச்சையில் இறந்தார். வாழ்க்கை, வைத்தியம், பெண்ணுரிமை, விஞ்ஞானம், குடும்ப வாழ்க்கை வைத்தியம், பெண்ணுரிமை, விஞ்ஞானம்,  வைத்திய அபிவிருத்தி, குழந்தை வளர்ப்புப் போன்ற தனக்கு நன்கு பரிச்சயமான சில விடயங்களைப் பற்றியே ஆராய்ச்சிகளை மேற்கொண்டு எழுதிப் புகழுடன் மறைந்தார்.

 திருமதி றீற்றா பற்றிமாகரன் எழுத்தாளராகவும்,  ஆசிரியையாகவும்,  நூலாசிரியராகவும்,  ஊடகவியலாளராகவும் பணியாற்றிவரும் றீற்றா பற்றிமாகரன் 1984 ஆம் ஆண்டிற்கான அகில இலங்கைச் சாகித்திய மண்டல இளம் எழுத்தாளருக்கான கட்டுரைப் போட்டியில் முதல் இடத்தைப் பெற்றுக்கொண்டவர். இளங்கலைமாணி  (B.A))பட்டத்தைப் பேராதனைப் பல்கலைக்கழகத்திலும், இள விஞ்ஞானமாணி பட்டத்தை  (BSC, PC Dip (social policy), PG Dip (Housing) ) பட்டங்களை  ஒக்ஸ்வேர்ட் புரூக்ஸ் பல்கலைக்கழகத்திலும் பெற்றுக்கொண்டவர். 1. புதியமுறையில் தமிழ் எழுதுதல் (1992),  ‘சிறுவர்க்கான தமிழ் மழலையர் பாடல்கள்’ கதைகள் ஒலிநாடா (1996),  ‘பம்பி சிறுவர் வாசிப்பு நூல்’ (1996),  ‘தமிழ் செய்முறைப் பயிற்சி’ (1998),  ‘தமிழ் பயிற்சி நூல்’  (1999),  ‘இலங்கைத் தமிழர்கள் வரலாறு கலாச்சாரம் பாரம்பரியம்’(2005), ‘இலக்கணத் தொகுப்பு’ (2008),  ‘சங்ககாலத் தமிழர் வாழ்வும் கலைகளும்’ (2011) போன்ற நூல்களை எழுதி வெளியிட்டவர்.

திருமதி தமிழரசி சிவபாதசுந்தரம்; ஈழத்தில் புங்குடுதீவைச் சேர்ந்தவர். இவரது பதினைந்தாவது வயதில் ‘திருவாசகத்தில் பெண்கள்’ என்ற தலைப்பில் எழுதிய ஆய்வுக்கட்டுரை ஈழத்து அறிஞர்களால் அன்று பாராட்டப்பட்டது. உலகநாடுகளில் வெளிவரும் இதழ்களில் பல புனைபெயர்களில் எழுதிவரும் தமிழரசி சங்கத்தமிழ்,  ஈழவரலாறு,  சமயம்,  இசை,  நாட்டியம்,  ஓவியம்,  சிற்பம் பற்றிய நூற்றுக்கணக்கான ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். தாயகப் பற்றும்,  மொழிப்பற்றுமிக்க தமிழ்ப்பண்டிதையான இவர் 2007 இல் ‘திருக்குறளில் கேள்வியால் ஒரு வேள்வி’ என்ற நூலை எழுதி வெளியிட்டவர். கவிதைகள், எழுச்சிப் பாடல்கள்,  பக்திப்பாடல்கள்,  நாட்டிய நாடகங்களையும் இயற்றியுள்ளார்.
புலவர் .நா.சிவநாதன் ‘ஆழ்கடலுக்குள் என் ஆருயிர் முன்னோர்’ (வரலாறு. இலக்கியம், ஆய்வு) 2007 – ‘காவியச் சலங்கைகள்’ 2012,  தமிழ் நாடகங்கள், ‘சத்தியம் சாகாது’ (தமிழ் கவிதைகள்) போன்றவற்றை எழுதி வெளியிட்டவர்.
அடேல் பாலசிங்கம் தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் மிக முக்கிய பங்கு வகித்த பெண்மணியாவார். அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த அடேல் பாலசிங்கம் லண்டனில் வாழ்ந்து பின்னர் தமிழகத்திலும், ஈழத்திலும் வாழ்ந்து தமிழ் சமூகம் குறித்த சிந்தனை கொண்டவராவார். ‘விடுதலைப் புலிகளின் பெண் போராளிகள்’  (women fighters of liberation Tigers)  என்ற தலைப்பில் அவர் எழுதிய நூல் பெண் போராளிகளின் போராட்ட வரலாற்றை தொகுத்துத் தரும் சிறந்த நூலாகும். ‘சுதந்திர வேட்கை’  ( The Will to Freedom)  என்ற இவரது நூல் சுயசரிதை விவரணமாகவும்,  வரலாற்று நோக்குடனும் எழுதப்பட்ட நூலாகும். இவரது ‘உடையாத விலங்குகள்’ (Unbroken Chain)  என்ற நூல் திகழ்கின்றது. ஆங்கிலத்தில் இவர் எழுதிய இந்த மூன்று நூல்களும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு மிகச் சிறந்த வரவேற்பைப் பெற்றன. பொன்னையா ஜெயஅழகி அருணகிரிநாதன் கர்நாடக சங்கீதம் குறித்தும்,  சைவத் திருமுறைகள் குறித்தும் லண்டனில் ஆய்வுகளை மேற்கொண்டுவரும் ஜெயஅழகி அருணகிரிநாதன் ‘The Tevaram Contribution to Saivism and Indian Music’ என்ற ஆராய்ச்சி நூலை எழுதி வெளியிட்டவர்.
ராஜகோபால் ‘வல்வெட்டித் துறையிலிருந்து அமெரிக்காவரை கப்பலோட்டிய தமிழர்கள்’ என்ற நூலை எழுதி வெளியிட்டவர். ஈழநாடு, ஈழகேசரி பத்திரிகைகளின் ஆசிரியராகப் பணிபுரிந்த பா.ம. ராஜகோபால் அவர்கள் தற்போது புதினம் பத்திரிகையின் ஆசிரியராகப் பணி புரிந்து வருகிறார்.

த.ஜெயபாலன் லண்டனிலிருந்து 1997 ஆம் ஆண்டுதொடக்கம் தேசம் பத்திரிகையின் ஆசிரியராகச் செயற்பட்டவர். ‘வட்டுக்கோட்டையிலிருந்து முள்ளிவாய்க்கால்வரை’ என்ற கட்டுரைத்தொகுதியை 2016 ஆம் ஆண்டில் வெளியிட்டவர்.
டாக்டர் அம்பி உடற்கூற்றியல் விரிவுரையாளரான டாக்டர் அம்பி பயண இலக்கியத்தின் முக்கிய நூலாக ‘கண்டேன் கைலாசம்’ என்ற நூலை எழுதி வெளியிட்டுள்ளார். யமுனா ராஜேந்திரன் சினிமா,  அரசியல், பேட்டிகள்,  மொழிபெயர்ப்புத் துறைகளில் மிகப் பெரும் ஆளுமையாகத் திகழும் இவர் 50 நூல்களை எழுதி வெயியிட்டுள்ளார். தொகுப்பும் மொழியாக்கமும் ‘அம்மாவின் மரணம் தஸ்லீமாநஸ்ரீன் கவிதைகள்’,  ‘ஈழம் எதிர்ப்பு அரசியலின் எதிர்காலம்’,  ‘மணல்மேட்டில’;, ‘ஜிப்ஸியின் துயர நடனம’, ‘எனக்குத் தாய்நாடு என்பதே இல்லை’, ‘இலங்கையின் கொலைக்களம்’ (ஆவணப்பட சாட்சியம்), ‘பாப்லோ நெரூதாவின் துரோகம’;, ‘அரசியல் இஸ்லாம்’,  ‘புத்தரின் பெயரால்’,  ‘இந்தியப் பிரிவினை சினிமா’ (இந்து முஸ்லீம் பிரச்சினை),  ‘கிரிஷ் கர்னாட் நகர்ப்புற நக்சலான நேருவின் புதல்வன’;,  ‘உத்தம விக்லன்’, ‘பேசுவதை நிறுத்திக்கொண்ட சிறுவன்’,  ‘தமிழ் திரையில் பாலு மகேந்திரா’,  ‘எர்னஸ்டோ சேகுவோரா ஆரியல் டோர்மே ரோக் டால்டன்’ போன்ற இன்னும் பல தலைப்புக்களில் எழுதி வெளியிட்ட சிறப்புக்குரியவர். சிவானந்த சோதி தமிழர் லண்டன் தகவல் சஞ்சிகையை நடாத்தியவர்.

ஓவியர் கே. கே.ராஜா லண்டனில் நூல் வெளியீடுகள், நாவல், கவிதை விமர்சனங்கள்,  ஈழத்துக் குறும்பட விழாக்கள்,  ஓவியக் கண்காட்சிகள் என்று லண்டனில் இலக்கியக் கலாசார வாழ்விற்கு உயிர் தந்துகொண்டிருக்கும் ஓவியர் கே.கே.ராஜா அவர்களின் இடையறாத செயற்பாட்டினை இங்கு பதிவு செய்வது பொருந்தும். இந்த இலக்கிய கலாசார நிகழ்வுகளின்போது அவர் தொடர்ச்சியாக வெளியிட்ட கையேடுகள்  (Souvenirs)    ஒரு இலக்கியக் கைந்நூலின் தரம்மிகுந்தவை.  

பௌசர் மூன்றாம் மனிதன் என்ற இதழை வெளியிட்டவர். ‘எதுவரை’ சஞ்சிகையை நடாத்தி வருகின்றார். விம்பத்துடன் இணைந்து லண்டனில் இலக்கியக் கருத்தரங்குகளை பெரு முயற்சியுடன் மேற்கொள்ளுபவர்.

பொன் பாலசுந்தரம் முன்னைய பத்திரிகையாளர். பிரித்தானியாவும் ஈழத்தமிழர்களும், லண்டனில் தமிழர் திருமணங்கள் ஆகிய இரு நூல்களை வெளியிட்டவர். துரை சிவபாலன் அ.ஆ.இ... உயிர்மொழி என்ற நூலை எழுதி வெளியிட்டவர். விமல் சொக்கநாதன் புதினம் பத்திரிகையில் தொடர்ச்சியாக பத்தி எழுத்துக்களை எழுதுபவர். ‘விமலின் பக்கங்கள்;’ என்னும் நூலை எழுதி வெளியிட்டவர். சரோஜினி சந்திரகோபால் பத்தி எழுத்தாளர். அம்பலவாணர் மயூரன் ‘இராமாயணத்தின் வரலாற்று நம்பகத்தன்மை’ என்ற நூலை வெளியிட்டவர். என் செல்வராஜா: இவர் 22 புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார். ஈழத்து எழுத்தாளர்களை ஆவணப்படுத்தும் பணியில் சாதனை படைத்து ‘நூல்தேட்டம்’  தொகுதிகளை தொடர் முயற்சிகளாக வெளியிட்டு வருபவர். ஐ.தி.சம்பந்தன் தமிழ் சமயம் சமூகசேவை அரசியல் யாவற்றிலும் தொண்டாற்றியவர். ‘சுடரொளி’ சஞ்சிகையை வெளியிட்டு பிரபல்யமாகப் பேசப்பட்டவர். ‘அகதிகளின் சோக வரலாறு’ – 1996, ‘ஒப்பற்ற தலைவர் தந்தை செல்வா’ 2002, ‘குமுதினி படுகொலை’ – 1985,  ‘ஒரு வேரின் மூச்சு’ -2006, ‘கறுப்பு யூலை 83 குற்றச்சாட்டுக்கள்’ - 2010, ‘நீங்காத நினைவலைகள்’ - 2014,  ‘அரச ஊழியர்களுக்கு,  இளைக்கப்பட்ட அநீதிகள்’ ஆகிய நூல்களை எழுதி வெளியிட்டவர்.

வ.மா.குலேந்திரன் ‘தமிழினி தகவல் களஞ்சியத்தை’ எழுதி வெளியிட்டவர், ‘இலங்கைத் தமிழ் அறிஞர்களும்’, ‘முஸ்லிம் அறிஞர்களும்’,  ‘தமிழக முதல்வர்கள்’,  ‘இலங்கை ஜனாதிபதிகள்’,  ‘கடல் அனர்த்தம்’,  ‘டாக்டர் கலைஞர் கருணாநிதி’, ‘லண்டன் விசா வழிகாட்டி’,  ‘அகராதிக் கவிதைகள’;, ‘சமம்’,  ‘அப்துல்கலாம்’ ஆகிய நூல்களை எழுதியவர். அ.இரவி ‘காலங்கள் ஆகி வந்த கதை’,  ‘பாலைகள் நூறு’(சிறுகதை)  .

ரோகினி சிவபாலன் சமய யாத்திரைகளை மேற்கொண்டு ‘கடவுளும் குருவும் என் கண்ணோட்டத்தில்’ ,  ‘காஷ்மியரில் இருந்து கன்னியா குமரிவரை’,  ‘கைலாச தரிசனம்’ ஆகிய மூன்று நூல்களை எழுதி வெளியிட்டவர். தொடர்ந்தும் சமய யாத்திரைகளை மேற்கொள்வதிலும்,  சமய நூல்களை எழுதுவதிலும் முனைப்பாகச் செயற்பட்டுக்கொண்டிருக்கிறார். பத்மநாப ஐயர்.இ. ‘இன்னுமொரு காலடி’, ‘கண்ணில் தெரியுது வானம்’,  ‘கிழக்கும் மேற்கும’;,  ‘தேடலும் படைப்புலமும்’ (ஓவியர் மாற்கு சிறப்பு மலர்) 1987. ‘மரணத்துள் வாழ்வோம்’,  ‘யுகம் மாறும்’ போன்ற நூல்களை தொகுத்து வெளியிட்டுள்ளார். மகாலிங்கசிவம் (மாலி) ஈழநாடு பத்திரிகையின் பாராளுமன்றச் செய்தித் தொகுப்பாளராகச் செயற்பட்டவர். ‘அஞ்சல்’, ‘நாழிகை’ ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியா. க. பாலேந்திரா ‘யுகதர்மம’;, ‘கண்ணாடி வார்ப்புகள்’ ஆகிய நூல்களை எழுதி வெளியிட்டவர்.

நேரத்தை கருத்தில் கொண்டு எனது உரையை நிறைவிற்குக் கொண்டு வர உள்ளேன். நான் முன்பு குறிப்பிட்டதுபோன்று 82ஆம் ஆண்டிற்குப் பின்னர் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் தாக்கங்களின் காரணமாக ஈழத்தமிழர்கள் மேற்குநாடுகளுக்கு பாதுகாப்புக் கருதி புலம்பெயர்ந்தனர். பிரித்தானியாவிற்குப் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் இவ்வளவு தூரம் படைப்பிலக்கியத்தில் சாதனை புரிந்திருப்பது உங்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் என நம்புகிறேன். எதிர்காலத்தில் படைப்பாளிகளாக வரவிருக்கும் தமிழகத்து இளம் சந்ததியினருக்கும் எமது அனுபவங்கள் ஒரு உந்துசக்தியாக அமையுமென நினைக்கிறேன். இத்தகையதொரு வாய்ப்பினை வழங்கிய அரசு கலைக்கல்லூரி தமிழாய்வுத்துறைக்கு மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். குறிப்பாக முனைவர் சாலாவாணிசிறீ அவர்கட்கு மனது நிறைந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன். மற்றும் முனைவர் ரமேஷ்,  முனைவர் கர்ணன், அதிபர் முனைவர் மாரியம்மாள் ஆகியோருக்கு எனது இனிய நன்றிகளைத் தெரிவித்து, இது ஒரு உறவுப் பாலமாக அமையட்டும் என விரும்பி விடைபெறுகின்றேன்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.
வீடு வாங்க & விற்க!

'
சாந்தி சந்திரன்
Shanthi Chandran

HomeLife/GTA Realty Inc.
647-410-1643  / 416-321-6969
5215 FINCH AVE E UNIT 203
TORONTO, Ontario M1S0C2

விளம்பரம் செய்ய

வ.ந.கிரிதரனின் பாடல்கள்
பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க

அ.ந.கந்தசாமியின் நாவல் 'மனக்கண்' மின்னூல்!
வாங்க
வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' மின்னூல்!
பதிவுகளில் வெளியான சிறு நாவலான எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' தற்போது அமேசன் & கிண்டில் மின்னூற் பதிப்பாக, பதிவுகள்.காம் வெளியீடாக வெளியாகியுள்ளது. தமிழ் அகதி இளைஞன் ஒருவனின் முதற்காதல் அனுபவங்களை விபரிக்கும் புனைகதை.  மின்னூலினை வாங்க

                                         

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
 

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். மின்னூலினை வாங்க


எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம்

 


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி. இதனை வாங்க இங்கு அழுத்தவும்.


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி. நூலை வாங்க


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan. To buy


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp. Buy here