3
அதாவது சர்வதேச நெருக்கடிகள், தனது உச்சத்தை தொட்டு, இழுப்பறி நிலைமைகள், யுத்த மேகங்களை உருவாக்கி வருகையில் இந்தியா போன்ற நாடுகளின், நடு நிலைமைத் தன்மை(?) பொருத்துக் கொள்ள முடியாததாகின்றது.
அதாவது, இலங்கையின் இராஜதந்திரத்தில், இலங்கைத் தமிழர் கேள்வியை, இந்தியாவிலிருந்து எப்படி கத்தரித்து விடுவது அல்லது எப்படி அந்நியப்படுத்தி விடுவது என்பது முதன்மை நடைமுறையாக இருப்பதை போலவே, ஒரு, ரஷ்ய-சீன கூட்டில் இருந்து இந்தியாவை விலகிச்செல்ல செய்வதும், அதனை தனது செல்வாக்கின் எல்லைகளுக்குள் கொணர்ந்து நிறுத்துவதுமே அமெரிக்காவின் ஆசியாவுக்;கான அடிப்படை இராஜதந்திரமுமாகின்றது. இச்சூழலிலேயே, யுவான்வாங்-5 கப்பலின் வருகை என்பது, இவ்ராஜதந்திரத்தின், பல்வேறு தோற்றப்பாடுகளை உள்ளடக்கியதாக இருந்தது.
இக்கப்பல் வந்துசேர்ந்த ஓரிரு தினங்களின் முன்னரே இந்தியாவின், ட்ரோனியர் விமானம் இலங்கைக்கு வந்து சேர்ந்து விட்டது. இது இலங்கைக்கு வழங்கப்பட்ட பரிசா அல்லது பரிசு வடிவில் அமைந்துள்ள ட்ரோஜோன் குதிரையா என்பதெல்லாம் ஏற்கவே ஆய்வாளர்களால் சின்னாப்பின்னப்படுத்தப்பட்டு வாதிக்கப்பட்டுள்ளது. போதாதற்கு, கப்பலின் வருகையைத் தொடர்ந்து, இராமேஸ்வர கண்காணிப்பும் பயிற்சியும் தீவிரப்படுத்தப்பட்டது. (இது, இந்திய சிந்தனைகளையும் அதிருப்தியையும் அறிவிக்கும் ஒரு தோற்றப்பாடு என கூறப்படுகின்றது). ஆனால், இவையணைத்தும், ஓர் தோற்றப்பாடே ஆகும். உண்மையான அரசியல், ஆழமானது. மிக நுணுக்கமாக பயணிப்பதாய் இருந்தது.
கப்பலின் வருகையானது, இந்தியாவால் எதிர்க்கப்பட்டது என்பதும் அதனைத் தொடர்ந்து இலங்கை, கப்பலை தனது துறைமுகத்தில் தரிக்க மறுப்பு தெரிவித்தது என்றும், ஆனால் அம்மறுப்பை மீறி சீன கப்பலானது இலங்கையை நோக்கி பலவந்தமாக தன் பயணத்தை தொடர்ந்தது எனவும் பரவலாக கதை அடிப்படலாயிற்று.
மேற்படி சூழலில், இலங்கை, இந்த இக்கட்டை சமாளிக்க, இந்தியாவுடனும், அமெரிக்காவுடனும், சீனத்துடனும் அவசர பேச்சு வார்த்தைகளை நாடியது என்றும் கூறப்பட்டது. மறுபுறத்தில் மேற்கத்தேய ஊடகங்கள், சீன கப்பலின் வருகைக்கு, பரபரப்புமிக்க, அளவுகடந்த முக்கியத்துவத்தை தந்து இது ஒரு “உளவு கப்பல்” (Spy Ship) என்ற அடைமொழியைத் தந்து, இதில் பொருத்தப்பட்டுளள ராடர்கள் இந்திய ஏவுகணைகளையும், இந்திய செய்மதிகளையும் உளவு பார்த்து அவற்றின் நுணுக்க விபரங்களை அறியும் திறன் வாய்ந்தவை அல்லது தலையீடு செய்பவை என்ற வர்ணணையில், வரைபடம் சகிதம், படம் பிடித்து காட்டின. (உலகில் எத்தனை “உளவு கப்பல்கள்” உண்டு என்பதும் ஏன் அவை மாத்திரம் இப்படியாக பெயரிடப்பட முடியவில்லை என்பதும், இப்பத்திரிகைகள் தம்மைத்தாம் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்விகளாயின). இருந்தும், இந்நிலையில், இந்திய நலனுக்கெதிராக (?) ஓர் சமரசம் எய்தப்பட்டு, ஆகஸ்ட் 11இல் இலங்கையில் நங்கூரமிடவேண்டிய கப்பல் ஆகஸ்ட் 16ம் திகதி நங்கூரமிட அனுமதிக்கப்பட்டது, தாமதமாய்! இத்தகைய பின்னணியிலேயே, இதனைத் தொடர்ந்து, தாய்வான் கடல் நீரினையின், “இராணுவமயமாக்கலாவதற்கு” எதிராக, இந்தியா முதன்முதலாக தன் “அதிருப்தி குரலை” வெளியிட்டது. இவையணைத்தும் யுவான்வாங்-5 கப்பலின் வருகை ஏற்படுத்திய சாதனை என்பதில் சந்தேகமில்லை.
தொடந்து இந்தியாவுக்கான இலங்கை தூதர் மிலிந்த மொறகொட அவர்கள் சீன கப்பலின் வருகை ஏற்படுத்திய முரண்பாடுகளின் பின்னர்;, இலங்கை-இந்திய நாடுகள் இது போன்ற முரண்பாடுகளுக்கு இனியும் எதிர்காலத்தில் இடமளியாத வண்ணம், தங்கள், தங்கள் கடல் எல்லைப்பரப்புகளில் நடந்தேற கூடிய பாதுகாப்பு விடயங்கள் சம்பந்தமாக, “பேசி” ஒரு ஒப்பந்தத்திற்கு வந்தாக வேண்டும் என ஓர் அறிக்கையை விடுத்திருந்தார். ஆனால், உலக ஒழுங்கில், மேற்படி இந்திய அறிக்கையுடன் ஒரு புதிய அத்தியாயம் திறக்கப்பட்டு விட்டதா – அதாவது, இதுகாலம் வரை நடுநிலை வகித்ததாய் கூறப்பட்ட இந்தியாவானது, ஒரு சிறு யுவான் வாங்-5 கப்பல் விவகாரத்தால், நிலைமாறி போனதா-அப்படியென்றால் இந்நிகழ்வுக்கான மூலக்காரணத்தை தொடக்கி வைத்தவர்கள் யார் எவர் என்ற கேள்வி இன்று இந்திய ஆய்வாளர்களால் கிரமமாய், ஆனால் தாமதமாய், தூக்கிப்பிடிக்கப்பட்டு வருவதாக தெரிகின்றது.
4
“சீனா, இலங்கையை துரும்பு சீட்டாக பயன்படுத்தி கொண்டது. நெருக்கடிக்கு சீன கொள்கையே காரணம்” – யாவும் முடிந்த பின், இந்தியா ஆய்வாளர்களில் ஒருவரான, இந்தியாவின் முன்னால் தேசிய பாதுகாப்பு பிரதி ஆலோசகர், பங்கஜ் சரணின் கருத்து இது (29.8.2022). இதுபோலவே, இந்தியாவுக்கு உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்ட மாலைத்தீவின் முன்னால் ஜனாதிபதி மொகமட் ரஷிட்டும், “ஜெய்சங்கரும் நானும் கவலையடைகின்றோம்” என்றும் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார் (29.82022). இவை, விடயங்களின் “ஆழத்தை” ஆய்வாளர்களுக்கு, ஓரளவில் சுட்டிகாட்டியிருந்தன. ஒரு பக்கம,; நெருக்கடிக்கு மூலக்காரணம், சீனமே என்ற சாடல். மறுபக்கம் ஜெய்சங்கரும் நானும் கவலையில் ஆழ்ந்துவிட்டோம் என்ற கவலை.
எது எப்படி இருப்பினும், இதற்கு சரியாக நான்கு தினங்களின் முன்னரே, இந்தியா, தனது கோதுமை ஏற்றுமதியை முற்றாக தடை செய்திருந்தது. ஏப்ரல்-ஜூலை இடைப்பட்ட மாதத்தில் இந்தியாவின் கோதுமை ஏற்றுமதி 200மூத்தால் அதிகரித்திருக்க காணப்பட்டது. இவ்வருடம், 22 ஜூன் தொடக்கம், இந்தியா 1.8 மில்லியன் டன் கோதுமை மாவை, இலங்கை உட்பட பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருந்தது. ஆனால் இப்போது விடுக்கப்பட்டிருக்கும் இத்தடை உத்தரவு, உக்ரைன்-ரஷ்ய போரால் ஏற்பட்ட உணவு நெருக்கடியை, உலகளவில் அதிகரிக்கவே செய்யும் என்றும் கூறப்பட்டது. இருந்தும், உள்நாட்டு நிலைமைகளை காரணங்களாக காட்டி, இந்தியா, உணவு தடையை அமுல் செய்துவிட்டது. இந்த முடிவு ஆகஸ்ட் மாத இறுதியில் வெளிவந்திருந்தாலும், இந்திய அரசுக்குள், இதற்கான கலந்தாலோசனை ஆகஸ்ட் முதற் பகுதிகளிளாவது இடம்பெற்றிருக்க வேண்டும் என்றாகின்றது. ஆனால், இந்த கோதுமை தடையை விட முக்கியமானது, இந்தியாவின் “நடுநிலையான” நிலைபாடுதான். இந்த “நடுநிலை” நிலைப்பாடு என்பது இந்தியா ரஷ்யாவுடன் ளு-400 ஏவுகணைகளுக்காக செய்துகொண்ட ஒப்பந்தத்தையும் (5.3 கோடி டாலர்) உள்ளடக்குவது என்பதேயாகும்.
சுருக்கமாக கூறினால், ரஷ்ய எண்ணெய்யை வாங்குதல், உன்ரைன்-ரஷ்ய யுத்தத்தில் தனது “நடுநிலைமையை” பேணி வருதல், தனது ஆயுத கொள்வனவுக்காகவும், விணிவெளி திட்டங்களுக்காகவும் ரஷ்யாவில் பெருமளவில் தங்கியிருத்தல், தாய்வான்-சீன முரணில் வாய்திறவாமல் இருத்தல், கோதுமையை தடை செய்தல்-என்று தன் நிலையை வகுத்து வைத்திருந்த இந்தியா-இன்று- தாய்வான் நீரிணைத் தொடர்பில் சீனத்திற்கு எதிராக, அமெரிக்காவுக்கு சார்பாக, தன் வாயை, இத்தனை வருடங்களின் பின், திறந்துள்ளது என்றால்; (28.8.2022) இது, முற்றிவரும் உலக முரண்பாடுகளால்தான் சாத்தியப்படுகின்றது என்ற ஒரு பொத்தாம் பொது விடையையும் தாண்டி, அவதானத்துனக்குள்ளும் பரிசீலனைக்குள்ளும் கொண்டுவரப்பட வேண்டிய ஒரு விடயமாகின்றது. இத்தகைய ஒரு பின்னணியிலேயே சரணின் சாடலும், ரஷிடின் கவலைகளும் தொடர்பு கொள்கின்றன.
யுவாங்-5 கப்பலின் தரிப்புக்கு அனுமதி வழங்கிய இலங்கை, விடயத்தின் ஆழத்தை உணராமல் மிகுந்த வெகுளித்தனத்தோடு முதலில் அனுமதியை வழங்கிவிட்டு பின் வருத்தப்பட்டு சீனத்தின் அழுத்தங்களுக்கும், அச்சுறுத்தல்களுக்கும்தான் அடிபணிய நேரிட்டது என்றும் முக்கியமாக தான் பெற்ற கடனின் பின்னணியிலும் (10மூ) இனி தான் எதிர்பார்த்திருக்கும் எதிர்கால கடன்கள் என்ற பின்னணியிலும்- இதைவிட முக்கியமாக தான் மறித்தாலும், சீனம் தன் சொல்லை கேட்கப்போவதில்லை – கப்பலை பலவந்தமாக “தனது” அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு இட்டு சென்றுவிடும் என்ற அபய குரலின் பின்னணியில் அமெரிக்காவும், இந்தியாவும் இணைந்தாற் போல், கப்பலை நங்கூரமிட அனுமதித்து இருந்தார்கள்-ஆனால் “தாமதப்படுத்தி”. இச்சித்திரம் ஏற்கப்பட்டது. (அதாவது 11-17 தினங்களில் நங்கூரமிடப்பட வேண்டிய கப்பல், மெதுவாய், வேகம் குறைந்த நிலையில் ஓட்டி வரப்பட்டு, ஈற்றில், 16-22 தினங்களிலேயே நங்கூரமிட அனுமதி வழங்கப்பட்டதாய் கூறப்பட்டது). இதற்கிடையில் தனது முதலாவது அனுமதி வழங்கலை ரத்து செய்துவிட்ட இலங்கை தனது இரண்டாவது அனுமதி வழங்கலை, “தாமதத்துடனான நங்கூரமிடல்” என்ற நிபந்தனையுடன் வழங்கும் நிர்பந்தத்திற்கு உள்ளானது.
மொத்தத்தில் இலங்கை அடைந்த நிர்பந்தம், கவலைக்குரியதானது-இந்த முழு விவகாரத்திலும்-சீனமே, தலையான குற்றவாளியாக கூண்டில் ஏற்றப்பட்டது. “இதனைத் தொடர்ந்தே”, இந்திய எண்ணப்போக்கில், “நிலைப்பாட்டு” மாற்றம் ஏற்பட்டு, தாய்வான் நீரிணைத் தொடர்பில், இந்தியா தனது வாயை திறக்கவேண்டிய நிலையும் உருவானது. உலக அரங்கில், நடந்தேறிய இக்காட்சி மாற்றம், பல்வேறு சர்வதேச ஆய்வாளர்களையும் வெகுவாய் கவராமல் விடவில்லை.
யுவான் வாங்-5 கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நுழைந்ததை இட்டு (16.8.20200), அது எப்படி இலங்கை-சீன அதிகாரிகளால், சிவப்பு கம்பள விரிப்புடன் வரவேற்கப்பட்டது என்பதும் Guardian முதல் பல்வேறு மேற்கத்தேய பத்திரிகைகளிலும், விலாவாரியாக எழுதப்பட்டது. இதேபோல், டீடீஊஇ “உளவு கப்பல்” என்ற புதிய அடைமொழியைக் “கண்டுபிடித்து” இக்கப்பலுக்கு வழங்கிய அதே நேரத்தில், கப்பலின் ராடர்களின் ஒட்டுக்கேட்கும் திறன் 750KM ஐ கடந்ததாகவும், கேரள, தழிழ்நாடு, ஆந்திர பிரதேசத்து அனைத்து துறைமுகங்களையும் ஊடுறுவ கூடியதாகவும் இருக்கும் என்பதனையும் Guardian தொட்டுக்காட்டியிருந்தது (16.8.2022).
மொத்தத்தில், சீனம், இலங்கையின் “வெகுளிதனத்தை” பாவித்து, இந்திய துணைக்கண்டத்தில், ஒரு படுபயங்கரமான நகர்வை, இந்திய பாதுகாப்புக்கு எதிராக நடத்தி முடித்த பின்னணியில், இந்திய ரஷ்ய சார்பான, அல்லது, சீன-தாய்வான் முரணில் பெலோஸ்கியின் சார்பாக அல்லது தாய்வான் கடற்பரப்பின் “சுதந்திர கடற்பயணத்திற்கான உரிமை” என்பது சார்பாக அல்லது, தன் பாதுகாப்பை கருத்திற் கொண்டு, ஓர் சீன-ரஷ்ய கூட்டணிக்குள் விழுந்து விடாது, அமெரிக்கா சார்பான நிலைப்பாட்டை, சர்வதேச அரங்கில் தூக்கிபிடிக்க வேண்டிய கட்டாயத்துள் இந்தியா தள்ளப்பட்டு போனது (29.8.2022 அளவில்). இந்த பின்னணியிலேயே, இந்தியா இவ்வாறு தள்ளப்பட்டு போனதற்கான மூலக் காரணிகளை இன்று இந்திய ஆய்வாளர்கள் ஆராய முற்பட்டு இருக்கின்றனர். இலங்கையால், சீன கப்பல் நங்கூரமிடுவதற்கான முதல் அனுமதி, “வெகுளித்தனமாய்” கிட்டத்தட்ட “ஒரு மாதத்திற்கு” முன்பே வழங்கப்பட்டு விட்டது என்பதனை (அதாவது, அது, அதனை உளவு கப்பல் என்பதை அறியாமலும், அதனது ராடர்கள் 750 கி.மீ தொலைதூரம் எல்லை விரிக்கக்கூடியது என்பதனை அறியாமலும் (?)- வழங்கப்பட்டுவிட்டதை கண்டுள்ளனர். இந்த முக்கியத்துவம் கொண்ட கப்பல் சம்பவம் ஏற்பட, கிட்டதட்ட ஒரு மாதத்திற்கு முன்னால், இலங்கையின் அமெரிக்க தூதுவரும், இலங்கையின் சீன தூதுவரும் ஓர் சந்திப்பை மேற்கொண்டிருந்தனர் என்பதை இன்று அவர்கள் சுட்டி காட்டியுள்ளனர் (சந்திப்பு - 13.6.2022 அளவில்). அதாவது, இலங்கை விவகாரத்தில், அவர்கள் இலங்கையின் தற்போதைய பொருளியல் நெருக்கடியைப் பற்றியே சந்திப்பில் கதைத்தோம் என்று கூறியிருந்தாலும் விடயங்கள் அப்படி “வெகுளித்தனமாக” நடந்தேறுவதாக இருப்பதில்லை என்பதனை அவர்கள் சுட்டிகாட்டி உள்ளார்கள்.
இச்சந்திப்பை அடுத்தே இலங்கை வெகுளித்தனமாக, கப்பல் தரிப்பதற்கான, தனது முதலாவது அனுமதியை, சந்திப்பின் பின், ஜூலை மாதத்திலேயே வழங்கியிருந்ததை அவர்கள் சுட்டிகாட்டியுள்ளனர். இருந்தும், தூதுவர்களுக்கிடையிலான இச்சந்திப்பு, இந்த “முதல்” அனுமதி வழங்கல் ஆகிய இரண்டுக்கும் இடையிலான தொடர்பு குறித்து அவர்கள் வெளிப்படையாக ஏதேனும் கூறாமல் இருந்தாலும், இவ்விரு சம்பவங்களையும், இதன் பின்னர் நிகழ்ந்த இந்திய “நிலை மாற்றம்” பற்றிய சிந்தனைகளையும் அவர்கள் தமது கழுகு பார்வைக்குள் கொணராமல் விடவில்லை. (முதலாவது அனுமதி வழங்கப்பட்ட திகதி:12.7.2022. சந்திப்பு – 13.06.2022)
இதனுடன் இணைந்தாற்போல், அவர்கள் தற்போதைய இந்தியாவுக்கான இலங்கை தூதரால் விடுக்கப்பட்ட “புதிய பேச்சு வார்த்தைக்கான” அழைப்பையும் பார்க்க விழைந்துள்ளனர் என்பதிலேயே அவர்களது நிலைப்பாடு மேலும் தெளிவு பெறுவதாய் உள்ளது. இனி, கேள்வி இத்தகைய நுணுக்கமான நகர்வுக்கான யதார்த்த-அரசியல் நிலைமைகளை இலங்கை தன்னளவில் விருத்தி செய்துள்ளதா என்பதே ஆகும்.
[தொடரும்]
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.