5
கிளிம்மின் வாழ்வில், (இம்மூன்றாம் தொகுதியின் படி), குறுக்கிடக்கூடிய மூன்றாவது முக்கிய நபர் மரீனா எனும் பெண்மணியாவாள். இவளை சந்திக்கும் போது கிளிம்மின் மனநிலை அமைதி அற்றதாயும், உள் பிளவுகளின் கோரத்தாண்டவங்களால் துன்புறுவதாயும் வெறுமையின் பலிகடாவாகவும் இருக்கின்றது. ஓரு சூனியம் போன்ற தகிக்கும் வெறுமையின் வெளியில் இருந்து துன்புற்று வெளிவர முயற்சித்துக் கொண்டிருக்கின்றது அவன் மனம். அதேப்போன்று, சிந்தனைத் தளத்தில் அவன் தனக்குரிய தத்துவத்தை தேடிப் பற்றிக் கொள்ள அல்லது, உருவாக்கி கொள்ள அவன் பிராயத்தனம் செய்து கொண்டிருந்த தருணத்திலேயே மேற்படி மரீனாவுடனான சந்திப்பும் நடந்தேறுகிறது. மரீனா, பொதுவில், ஓரு மிகப் பெரிய – சரியாக சொன்னால் ஓரு பிரமாண்டமான ஆளுமைமிக்கவளாகத் திகழ்கின்றாள். தத்துவங்கள், அரசியல் இதைவிட முக்கியமாகத் தீவிர இலக்கிய பரீட்சயம் கொண்டவளாயும், இலக்கிய உலகின் தொடர்ச்சியான, ஆழ்ந்த அவதானிப்பு கொண்டவளாயும் இருப்பதை கிளிம் கண்டு கொள்கின்றான். ‘தேடல் கொண்டவர்களும், ஆன்ம விடுதலை அல்லது தூய ஆவியின் நிலை குறித்த விசாரிப்பு உள்ளவர்களும் என் கரிசனைக்கு உரிய மனிதர்களாவர்’ என்று அவள் தன்னை கிளிம்மிடம் வரையறுக்கின்றாள். கிளிம் ஆன்ம விடுதலை குறித்து சாடைமாடையாய் கேள்வியை எழுப்பியதுமே அவள் கூறுவாள்: “ஆன்மீகவாதிகள் இரண்டு வகைப்படுகின்றனர். ஒரு வகையினர் ர்நுனுழுNஐளுவுளு. அதாவது உச்சத்தைத் தொட்டு உள்ளம் கிளர்ச்சியுற்று, அந்த கிளர்ச்சியின் ஒரு கணத்துக்காய் வாழ்பவர்கள். (ஜெயமோகன் போன்றோர்களின் சித்தரிப்பில், விமானம் ஓடுவதை போல் ஓடுவதாகவும், பின் மேலெழுந்து – உச்சத்தை தொடுவது –ளுருடீடுஐஆநு– என்பது போல). மற்ற வகையினர் காந்தியைப் போல. ளுயுஊசுஐகுஐஊஐயுடு ஐ நோக்கி முன்னே ஓடுபவர்கள் - நீ எந்த வகை குறித்து கேட்கின்றாய் என்பது போல அவள் கிளிம்மை நோக்குவாள் அவள்.
எமது தேடலே ‘விடுதலைதான்’ - இந்த இறுகிய சூனியத்திலிருந்து என்பவர்களும் - விடுதலையின் அல்லது பரவசத்தின் அந்தக் கண கிளர்ச்சிக்காக வாழ்பவர்களும், இறுதியில் என்னத்தைத்தான் காண்கிறார்கள்? வெறுமையைத்தான். மற்றது எல்லாமே அவரவர்களின் மனதின் உருவாக்கம் மாத்திரமே என்பாள் அவள். உண்மையில் புதுமைப்பித்தன் வகையறாக்களின், குறித்த தேடல்கள் (சில கதைகள்) சிலருக்குப் பரவச கணங்களை உருவாக்கினாலும், ஓர் அர்த்தமற்ற வெறுமையில் அல்லது அவரவர் மன உருவாக்க பிம்பங்களில் சென்று முடிவதை மறுக்க முடியாது. அப்படியானால் யார் இவள் - வாழ்வின் அர்த்தத்தை எவ்வாறு உணர்கிறாள்; என்பது கிளிம்மின் அப்போதைய தேடல்களில் முக்கியமானதாகின்றது.
“மார்க்ஸ் - அரிஸ்டாட்டில்’ இருவரையும் என்னால் ஏற்க முடியாது”.
“சமூகத்தின் அர்த்தங்கள், பகுத்தறிவு, மனித பிரஞ்ஞையின் மீதுள்ள சூழலின் தாக்கம் - அனைத்தையும் நான் ஏற்றுக்கொள்வேன். ஆனால் என்னுள் காணப்படும் ஆவி எல்லையற்றது – அதை நீ பிரபஞ்ச உண்மைகளாகவே புரிந்து கொள்ள வேண்டும்…”
இவ்வளவும், கிளிம்மை பொறுத்தவரை, ஏதோ ஒரு கனவுலக சஞ்சாரத்தைப்போல் இருக்கின்றது. அவளோ, அதி அற்புதமான அழகுடைய ஆளுமைமிக்க பெண்மணியாக வேறு இருக்கின்றாள். கிளிம் பொறுக்கமாட்டாமல், ஆவி (ளுPஐசுஐவு) என்பது என்ன என வினவுகின்றான்.
“வாழ்க்கையினுள் ‘இறங்காத’ யாருக்குமே அதனை விளங்கப்படுத்த முடியாது… அப்படியே அவர்கள் இறங்கி விட்டால், பின்னர் விளங்கப்படுத்த வேண்டிய அப்படி ஒரு அவசியமே எழாது…”
அவள் அவனைப் பற்றித் திறம்பட நுணுக்கமாய் விசாரித்து தெரிந்து கொள்கின்றாள்.
இதேப்போல் கிளிம்மும் கேள்விகளை அடுக்குவான்.
“நீ கேள்விகளை அடுக்குகிறாய்… ஆனால் தீர்ப்பதற்காக அல்ல… மேலும் மேலும் சிக்கல்களை வளர்ப்பதற்காய் - ஏதோ, யார் அதிகம் சிக்கல் கொண்டவர் என்பதை நிரூபிப்பது போல…”
“உன் கேள்விகள் சிந்தனையால் அல்ல. ஆனால் சித்தத்தின் அடிப்படையிலேயே விடையறுக்கத் தகுந்தவை. ரைடர் சகோதரர்கள் முதன் முதலில் விமானத்தை பறக்கவிட்டது சித்தத்தினாலேயாகும்… சிந்தனை அதற்கு உதவி இருக்கலாம் - அவ்வளவே…” - இப்படியாக அவளின் தர்க்கம் உருக்கொள்கிறது.
இவ்வளவு ஞானமா இவளிடம்?
அவள் தான் கூறியப்படியே, அவளது அனைத்து வழக்குகளையும் கிளிம்மிற்கு மாற்றித் தருகின்றாள். இது போலவே கிளிம்மிற்கு குறிப்பிடத்தக்க அளவில் வழக்குகளுக்கான வாடிக்கையாளர்களையும் அம்மாகாணத்தில் திரட்டித் தருகின்றாள். அவளது வழக்குகளுக்காகவும், அவளது சட்ட ரீதியான விடயங்களை பிரதிநிதித்துவப் படுத்துவதற்காகவும், குறிப்பிடத்தக்க வேதனத்தை வேறு அவள் அவனுக்கு தருகின்றாள்.
“உன் இதயத்தில் பகுத்தறிவு என்ற தீயை மூட்டிவிடப் எத்தனிக்கின்றாய்… ஆனால் உன் இதயமோ விடாபிடியாக எரிய-சுடர்விட மறுக்கின்றது. அதற்கு பதிலாய்,அது வெறுமனே காய்ந்து உலரத் தொடங்கி விட்டது. முடிவற்ற பகுத்தல்,முடிவற்ற ஆய்தல் அல்லது கணித்தல் என்பவற்றால் நீ ரொம்பத்தான் களைத்துப் போய் விட்டாய்…”
ஆனால்,கிளிம்மை ஒரு வகையில் மலினப்படுத்தக் கூடிய மரீனாவின் இக்கூற்றுகள் அனைத்தும், கிளிம்மை கோபமடையச் செய்வதாயில்லை. இப்படியாக இவர்களது சம்பாசனைகள் நாளுக்கு நாள் நீளுகின்றன – கிளிம்மிற்கு அவள் தவிர்க்க முடியாத ஒரு தோழியாக, படிப்படியாக உருவாகத் துவங்குகின்றாள். மேலும் இருவரது அரசியலும் கூட ஒரு வகையில் ஒத்திசைவதாகத் தெரிகின்றது. உதாரணமாக, புரட்சியாளர்களை அப்போதைய அரசு, தினமும் கொன்றொழித்து, இளைஞர்களை நிதமும் தூக்கிலிடுவது குறித்து, அவள் கூறுவாள், அடக்க மாட்டாமல்: “நானும் கூட அவர்களைத் தூக்கிலிடவே செய்வேன்…”
ஆனால், கணத்தில் அவளே தன்னைத்தான் சுதாகரித்துக் கூறுவாள்: “நீயே பார், எத்தனை வழிபறிகள்…”
கிளிம்முக்கு அவள் ஒரு புதிராகவே தோன்றுகிறாள். எவ்வளவு தன்னம்பிக்கை! இவ்வளவு தன்னம்பிக்கையும்– எங்கிருந்து வருகிறது, இவளுக்கு, என்பது கிளிம்மின் அப்போதைய கேள்வியாகின்றது. கூடவே, லட்சக்கணக்கில், ஆதனங்களின் விற்பனை மூலம் பெருமளவு பணத்தை அவள் திரட்டுகிறாள். அனைத்தும், சீரிய வழியில் திரட்டப்படுகிறதா - ஏதோ, எங்கோ இத்தர்க்க ஓட்டங்களில் ஒரு சறுக்கல் இருப்பதாய் கிளிம் சந்தேகம் கொள்கிறான்.
மறுபுறத்தில் அவளது இலக்கிய ஈடுபாடு என்பது, அவனை நாளுக்கு நாள், மலைக்க வைப்பதாய் உள்ளது:
“யதார்த்தவாதம் எப்போதோ செத்தொழிந்து விட்டது – அது ஏற்படுத்திய வாண வேடிக்கை என்றோ பிசுபிசுத்து, அணைந்து போய் விட்டது. அவை அனைத்துமே, இன்று பிரயோசனமற்றவையாகி விட்டன”
“புதிய கலாசார முனைப்புகள் தேவையுறுகிறது. அவற்றை ஒரு இயக்கமாக உருவாக்க வேண்டி உள்ளது…”
அவளது மேற்படி கருத்து நிலை, கிட்டத்தட்ட எமது தமிழ் இலக்கிய பரப்பின் இன்றைய நிலைமைகளை மீள நேரடியாக எம் கண்முன் கொணர்ந்து நிறுத்துவதாய் இருக்கின்றது.
விஷ்;ணுபுரத்தை எழுதி முடித்த கையோடு, ஜெயமோகன் விஷ்ணுபுர இலக்கிய இயக்கம் என்ற ஓர் இயக்கத்தை உருவாக்குவதும், யதார்த்தவாதம் பொறுத்து, ;அதுவா…அது என்றோ செத்தொழிந்து விட்டதே என்று ஆற்றப்படும் பரப்புரைகளும் மேற்படி பின்னணியில் நின்று பார்க்கும் போது, மேற்கண்டவாறு, ஓர் ‘மரீனா தர்க்கமாகவே’ தோன்றுகின்றது. மரீனா, மதத்தை கூட இப்படியாகத்தான் வகைப்படுத்தி, அறிந்து வைத்திருந்தாள். நிறுவனப்பட்ட மதத்தை அவள் நிராகரிக்கத் தலைப்பட்டாள். மக்கள் சாரிகளின் ஆன்மீக உலகு எனும் விடயம் அவளை பெரிதும் கவர்வதாக இருக்கிறது. அவளது வீட்டை அவன் முதல் தடைவையாக விஜயம் செய்யும் போது, அவளது வீடு ஓர் ஒதுக்கு புறமாய் இருப்பதை கிளிம் அவதானிக்கின்றான்.
“இப்படி தனியாக வாழ்வது அச்சம் தருவதாய் இல்லையா… தனித்த வாழ்வு சலிப்பை ஏற்படுத்த வில்லையா…” என்பது போன்ற கேள்விகளை அடுக்குகிறான் கிளிம்.
‘பொதுவில் நான் மோசமாக வாழவில்லை. நிறையவே வாசிக்கின்றேன்… ஆங்கில மொழியை கற்கின்றேன்… இங்கிலாந்து சென்று வரும் ஆவலுடன் வேறு இருக்கின்றேன்..”
“ஏன் இங்கிலாந்து”?
சிரித்துக் கொண்டே கூறுவாள் அவள்: “என் இறந்து போன கணவர் அங்கே சில காலம் வசித்தவர்… கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள்… அந்த மக்கள்வெறும் பித்துக்குளிகள், வெகுளிகள் என்பது அவரது கதைகளில் இருந்து நான் கற்றுக் கொண்டது. அவர்கள் பிலாவட்சியையும் அன்னி பெசன்டையும் நம்பினார்கள்… ஏன் அவர்களது விஞ்ஞானிகளை எடுத்துக் கொள்ளுங்களேன்: குரூக்ஸ் (ஊசுழுழுமுளு),ஒலிவர் லாட்ஜ்(ழுடுஐஏநுசு டுழுனுபுநு)…மேலும், இவர்கள் மாத்திரமா” என புன்னகைப்பாள், அவள்.
மரீனா, குறிப்பிடும்… இந்நால்வரின் சரித்திரங்களும் சற்றே கேள்விக்குரியானதுதான் என்பதிலும் சந்தேகமில்லை. அன்னிபெசன்டின் பத்திரிக்கையில் பாரதி பிற்பட்ட காலத்தில் எழுத முற்பட்டிருந்தாலும், பாரதியின் விடுதலையில் அன்னிபெசண்டும் அக்கறை எடுத்தார் என்று கூறப்பட்டிருந்தாலும், அவளது அரசியல் பிரவேசம் குறித்து பாரதியின் எச்சரிக்கை குறிப்பு ‘பொன்வால் நரியில்”(புழுடுனுநுN குழுஓ) காணக்கிட்டுகின்றது என்ற உண்மை எளிதில் எத்திச் செல்ல முடியாதது.
மேலும், இந்நால்வரும் ஏதோ ஒரு வகையில் மாயஜாலங்களுடனும் மந்திர வித்தைகளுடனும், மெஸ்மரிசத்துடனும் ஒரு கட்டத்தில் தொடர்பு கொண்டவர்கள்தான். போதாதற்கு, ஆவிகளுடன் பேசுவதில், ஆளுக்காள் சளைத்தவர்களும் அல்லர். அன்னிபெசண்டும் பிலவட்சியும், ஹென்றி ஹொல்கொட்டுடன் தொடர்பு கொண்டு சர்வதேச மதம், சர்வதேச பிரஜாஉரிமை, சர்வதேச மனிதன் - என்றெல்லாம் புதிய புதிய கருத்தாக்கங்களை,(இந்திய விடுதலை இயக்கம் மூர்க்கமாய் வளர ஆரம்பித்திருந்த ஓர் சூழ்நிலையில்)இந்திய புத்திஜீவிகளிடை விதைக்க முற்பட்டது பாரதியின் பார்வையில் எவ்வாறு இருந்தது என்பதெல்லாம் எமது ஆய்வுக்குரியதும் கரிசனைக்குரியதும்தான்.
ராணுவத்தில் மூன்று வருட காலம், தொடர்ச்சியாக சேவையாற்றி, பின் ஆப்ராம் லிங்கன் கொலை விசாரணை குழுவிலும் அங்கம் வகித்த ஹென்றி ஹோல்கொட் திடீரென, ‘புத்த தரிசனத்தை அடைந்ததும், இலங்கை வந்து சேர்ந்ததும், பின் அநாகரிக தர்மபாலவை ஆகர்~pத்ததும், அதற்கூடாக இலங்கை சிந்தனை மரபில் அல்லது அரசியல் மரபில் புதிய ஓர் முளையை தோற்றுவித்ததும், இதேப்போல் அன்னி பெசண்டின் இந்திய ஆர்ய சமாஜ்ய தொடர்புகளும்-ஆகர்~pப்புகளும் அமைந்ததும்– என்பதெல்லாம் கூட, ‘மரீனாவின் வி~மப் புன்னகையின்’ பின்னால் உள்ளடங்ககூடிய விடயங்களாகவே படுகின்றது.
இதேப் போன்று விஞ்ஞானிகளாக தோற்றம் தந்த குரூக்ஸ் - லாட்ஜ், இருவருமே,ஒரு படி மேலேயே சென்று ஆவிகளை ஆளுக்காள் இறக்குமதி செய்ததும் அதில் ஒருவர் ஆவிகளுடன் சகஜமாக பேசுவதும், போதாதற்கு அவர் ஆவிகளுடன் போட்டோ எடுப்பதுமாய் இருந்து இங்கிலாந்தின் வெகுளியான மக்களை ஒரு கட்டத்தில் ஆட்டம் காட்டி வைத்ததும் குறிப்பிடத்தக்கதே.
இதில், ஒலிவர் லாட்ஜ் முதலாம் உலகப் போரில் இறந்து போன தன் மகன், தற்போது மேலே, ஆவி உலகில் இருக்கும் பல்வேறு அதிசயங்கள் குறித்து பின்வருமாறு கூறியதை அன்னார், இங்கிலாந்து மக்களுக்கு கிரமமாக அறிவித்து மக்களைத் திகிலில் ஆழ்த்தினார்: “இங்கே, ஆவி உலகில் விஸ்கி கூட கிடைக்கிறது. சிகரெட்டும் கூட. ஆனால் நோய்கள் -பிணிகள் இல்லை… இறந்த அனைவருமே, அவ்வப்போது அடிக்கடி சந்தித்துப் பேசிக் கொள்கிறோம்…”
இது, ‘அரண்டு’ போன இங்கிலாந்து மக்களின் மனத்தடைகளை, அதாவது முதலாம் உலக போர் கால கட்டத்தில், படைகளில் சேரவும் ராணுவத்தில் பணியாற்றவும் மக்கள் காட்டக்கூடிய ஓரளவு தயக்கங்கள் - மனத்தடைகள் என்பனவற்றை– மேற்படி, ஆவி உலக கதைகள், எப்படி எப்படி தகர்த்திருக்கும் என்பதுவும் இலகுவில் ஊகிக்க தக்க ஒன்றே.
மறுபுறத்தில், தன் நாவலில், இவற்றுக்கு கூட கார்க்கி, ஒரு மூலையில் இடம் தந்துள்ளது என்பது, கார்க்கி தன்நாவலின் ஆய்வு பொருளுக்காக திரட்டியதரவுகளை-மூலப்பொருட்களின் விசாலப் பரப்பை காட்டக்கூடிய ஒன்றாகவும் இவை அமைந்து விடுகின்றது என்பதும் அவதானிக்கதக்க ஒன்றே. மேலே கூறிய, ‘கதைகள்’ ஓர் அரசியலும் தத்துவமும் சேர்ந்த கலவையாக இருப்பினும், இந்நால்வரின் மேற்படி அட்டகாசங்கள், நாவலில் விலாவாரியாக வருவதில்லை. நால்வரின் பெயர்களையும் மரீனா, மக்களின் பேதைமைகளோடு, தொடர்புபடுத்திக் கூறும் ஒரு சிறிய பந்தியுடனும் மரீனாவின் சிறிய புன்னகையுடனும், இவர்கள் பொறுத்த பிரஸ்தாபிப்பு, முடிந்து போகின்றது. அதாவது இவர்களது வண்டவாளங்களை வேண்டுமென்றால், நீயே போய் பார்த்து தேடிக் கொள் என்று மரீனா கிளிம்மிடம் கூறுவது போல் காணக்கிட்டுகிறது. (வாசகனிடத்தில், காரக்கியும் கூட!) எளிய, வெகுளியான மக்களை ஆவிகளைக் காட்டி எப்படி கொள்ளையடிப்பது, அல்லது ஆவிகளை விட்டு எப்படி அவர்கள் மூளைகளைச் சலவை செய்வது, அதற்கூடு,எப்படி தத்தமது நலன்களை பாதுகாத்து முன்னெடுப்பது,- இவை யாவும், உலகெங்கிலும் காலம் காலமாகவே நிகழ்ந்து வரும் ஓர் நிகழ்வின் பகுதியாகவே இருந்துள்ளதையே மேற்படி நால்வரின் கதைகளும் எமக்குக் கிரமமாக கூறுகின்றன – தேடிப் பார்க்கும் போது. (கணணியின் தேவைப்பாடு இன்றியமையாதது)
விஞ்ஞானம் என்ற பேரிலும், விடுதலை என்ற பேரிலும், ஆவிகள் என்ற பேரிலும், ஆன்மா என்ற பேரிலும், பேதைiமிக்க மக்களை இப்படியாய் கொள்ளையடிப்பதில் ஆளுக்காள் சளைத்தவர்கள் அல்ல என்பதும் இவை, இச்சமூக அமைப்பின், பிரிபட முடியாத ஓர் பகுதியாக இருக்கின்றதோ என்று அஞ்சும் அளவுக்கு, இவை எமது நாளாந்த விடயங்களில் இடம்பெறாமலும் இல்லை. மரீனா கிடக்கட்டும். எமது சொந்த சரக்கான ‘ஆவி உலகச் சமாச்சாரங்களை–அது எங்கள் ஊர் தாத்தா, மாடசாமி பொறுத்து சொல்லும் கதைகளாக இருக்கட்டும், அல்லது எமது சிறுகதை மன்னன் புதுமைப்பித்தன் கூற வரும், ஒரு சில ஆவி உலகத்து கதைகளாக இருக்கட்டும் - சாரத்தில், பேதைகள் இருக்கும் வரை இக்கதைகளுக்கும் முடிவில்லை என்றாகிறது – அவற்றுக்கு அளிக்க வேண்டிய, ‘நவீனத்துவம்’,‘மன இருண்மை’ போன்ற பாபவிமோசனங்கள் எல்லாம் கிரமமாக அளிக்கப்பட்டு.
[தொடரும்]