ஹோரேஸ் ஹேமன் வில்சன் ஒரு ஆங்கில 'ஓரியண்டலிஸ்ட்' ஆவார். அவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதத்தின் முதல் போடன் பேராசிரியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். செயின்ட் தாமஸ் மருத்துவமனையில் (St Thomas’ Hospital) மருத்துவம் பயின்றார். மேலும் 1808 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் வங்காள ஸ்தாபனத்தில் உதவி அறுவை சிகிச்சை நிபுணராக இந்தியா சென்றார். பொது அறிவுறுத்தல் குழுவின் செயலாளராக பல ஆண்டுகள் செயல்பட்டு கல்கத்தாவில் உள்ள சமஸ்கிருத கல்லூரியின் படிப்பை மேற்பார்வையிட்டார்.

“பூர்வீகப் பள்ளிகளில் ஆங்கிலத்தை மட்டுமே பயிற்றுவிக்கும் ஊடகமாக இருக்க வேண்டும்” என்ற முன்மொழிவை கடுமையாக எதிர்த்தவர்களில் ஒருவராக இருந்தார். 1832 ஆம் ஆண்டில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் டாக்டர் வில்சனை சமஸ்கிருதத்தின் புதிதாக நிறுவப்பட்ட போடன் நாற்காலியின் முதல் ஆக்கிரமிப்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் மார்ச் 6, 1832 இல் 'தி டைம்ஸில்' ஒரு நெடுவரிசை நீள விளம்பரத்தை வெளியிட்டார். 1836 இல் கிழக்கிந்திய கம்பெனியின் நூலகராக நியமிக்கப்பட்டார்.

கிழக்கிந்திய கம்பெனி கல்லூரியிலும் கற்பித்தார். 10 ஏப்ரல் 1834 இல் அவர் லண்டன் ராயல் சொசைட்டியிலும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஹென்றி தாமஸ் கோல்ப்ரூக்கின் பரிந்துரையின் பேரில் வில்சன் 1811 ஆம் ஆண்டு வங்காளத்தின் ஆசிய சங்க செயலாளராக நியமிக்கப்பட்டார். அவர் கல்கத்தாவின் மருத்துவ மற்றும் உடலியல் சங்கத்தின் உறுப்பினராகவும், Royal Asiatic Society இன் உறுப்பினராகவும் இருந்தார். வில்சன் இந்தியாவின் பண்டைய மொழி மற்றும் இலக்கியங்களில் ஆழ்ந்த ஆர்வம் காட்டினார். அவர்; சமஸ்கிருதம்-ஆங்கில அகராதியை (1819) பூர்வீக அறிஞர்களால் தொகுக்கப்பட்ட பொருட்களிலிருந்து தயாரித்தார். ருடால்ஃப் ரோத்(சுரனழடக சுழவா) மற்றும் ஓட்டோ வான் போட்லிங்க்(ழுவவழ எழn டீழாவடiபெம)ஆகியோரால் இந்த வேலை முறியடிக்கப்பட்டது. அவர்கள் வில்சனுக்கான தங்கள் கடமைகளை அவர்களின் சிறந்த படைப்பின் முன்னுரையில் வெளிப்படுத்தினர்.

வில்சனின் சாதனைகளில் ஒன்றாக குறிப்பிடுவது ரிக்வேதத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தமை ஆகும். இருப்பினும் ரிக்வேத மொழி பெயர்ப்பினை முழுமையாக நிறைவு செய்யாமல் வில்சன் மரணத்தை தழுவியதும் இந்தியா ஹவுஸ் இன் நூலகரான பாலன் ரின் (ballantyne) அவர்களால் இப்பணி தொடரப்பட்டது. அவராலும் அதனை நிறைவேற்ற முடியாமல் அகாலமரணம் எய்தினார். இறுதியில் வில்சனின் முதல் மாணாக்கருள் ஒருவராகிய ந.டி.காவெல் (cowell) பூர்த்தி செய்தார்.

இருக்கு வேத மொழி பெயர்ப்பு ஆறு பெரும் தொகுதிகளாக வெளிவந்ததுடன் வேதவிற்றபன்னரான சாயனரின் உரைவிளக்க அடிப்படையில் தான் வில்சனால் மொழி பெயர்க்கப்பட்டது. வைத்தியரான வில்சன் இந்துக்களின் ஆயுர்வேதப் பனுவல்களில் குறிப்பிடப்பட்டுள்ள சிகிச்சை முறை தொடர்பில் ஆர்வம் கொண்டிருந்தார். கொள்ளைநோய் மற்றும் வெண்கு~;டம் ஆகியவற்றுக்கான ஆயுர்வேத சிகிச்சை முறைகள் தொடர்பான ஆய்வுகளிலும் வில்சன் ஈடுபட்டிருந்தார். கல்கத்தா மருத்துவ மற்றும் பௌதிக கழகத்தினுடான வெளியீடுகளில் இவை பற்றி கட்டுரைகளை வெளியிட்டார்.

இந்துமருத்துவம் தொடர்பாக வில்சன் குறிப்பிடுவது “நாம் அறிந்த வகையில் புகழ் பெற்ற எந்த நாடுகளுக்கும் இணையான விதத்தில் மருத்துவத்திலும், சத்திரசிகிச்சை முறைகளிலும் இநதுக்கள் ஒரு பூரண தேர்ச்சியினை பெற்றுள்ளார்கள்” எனும் உரைப்பகுதி மூலம் அடையாளப்படுத்துவதாய் உள்ளது. இந்திய அறிவியல் குறித்தும் உயர்வான நிலைப்பாட்டினை கொண்டுள்ளார். மருத்துவமாக இருந்தாலும் வானியல் மற்றும் பௌதிகவியல் இருப்பினும் அவற்றை மிகச் சிறப்பாக உணர்ந்து கொண்டு நாடுகளின் அறிவியல் வளர்ச்சிக்குச் சமாந்தரமாக இந்துக்களின் அறிவியலும் வளர்ச்சி பெற்றிருந்தை தெளிவுபடுத்துகிறார்.

புராணங்கள் சமயக்கதைகள் மட்டுமல்ல. அவற்றின் ஊடாக இந்துசமயத்தில் காலகாலமாக வழக்கிலிருந்த பல தொன்மங்கள் வெளிக்கொணரப்படுகின்றன என குறிப்பிடுகின்றார். விஷ்ணு புராணத்தின் ஆங்கில மொழி பெயர்ப்பே பௌராணிகவியல் சார்ந்து வில்சனால் மேற்கொள்ளப்பட்ட முக்கிய பணியாகும். 5 தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. 1840 இல் பிரசுரிக்கப்பட்டது. 1837 இல் சாங்கிய காரிகையை மொழி பெயர்த்தார்.
மேலும் மகாபுராணங்கள், கதாசரித்திர சாகரம் எனும் நூலின் சுருக்க உரைகளும் வில்சனால் எழுதப்பட்டன. புராணங்கள் உள்ளடக்கல்கள் இயல்பு பற்றிய குறிப்பு (puranas : an account of their contents and nature) என்ற நூல் 1897இல் வெளி வந்தது.

புராணங்களின் தொன்மையும் சமயவியலும் (theology and antiquity), புராணங்களின் எண்ணிக்கை, புராணங்களின் சாரம் (synopsis of the puranas), உபபுராணங்கள், விஷ்ணு புராணம் பற்றிய குறிப்பு என ஐந்து இயல்களில் உள்ளன.

அடுத்து கேணல் கொலின் மக்கன்சியால் சேகரிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்ட இந்திய சுவடிகள் கலைப் பொருட்கள்-தொல்பொருட்சின்னங்களே மக்கன்சி ஆவணத்திரட்டு (அயஉமநணெநை உழடடநஉவழைnஎன) ஆகும். இதற்கு வில்சன் இணை ஆசிரியராக இருந்துள்ளார். 8 தொகுதிகளாக வெளிவந்தது. இதில் 528க்கு மேற்பட்ட சுவடிகள் வில்சனால் சேகரிக்கப்பட்டவை. குறிப்பாக வேதங்கள், வேதாந்தம், நியாயம்இ மீமாம்சைஇ சாங்கியம்இ தந்திரங்கள ;இ தர்மசாஸ்திரங்கள்இ புராணங்கள்இ மருத்துவம்இ வானசாஸ்திரம் போன்றவை அடங்கும்.

1813ஆம் ஆண்டு காளிதாசர் இயற்றிய காவியமான மேகதூதத்தினை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். இந்துக்களின் மதப்பிரிவுகள் என்ற நூலில் இவர் இந்து சமயத்தின் பல்லினத்தன்மையையும் பல வகை நம்பிக்கைகளையும் பற்றி நன்கு புரிந்து வைத்திருப்பதை பல இடங்களில் அடையாளப்படுத்தி கூறியுள்ளார். வழிபாட்டினை மேற்கொள்பவனுடைய மனம் தான் வழிபாட்டு முறைகள் தெய்வத்தின் உருவம் போன்றவற்றை தீர்மானிக்கின்றது என வில்சன் வலியுறுத்துவதோடு இந்து சமுதாயத்தில் இதற்குரிய சுதந்திரம் இறைவனை வழிபடுவோருக்கு வழங்கப்பட்டிருந்தமையினை சுட்டிக் காட்டுகின்றது.

நம்பிக்கையால் வழிபாடு மேற்கொள்வது மட்டுமன்றி தத்துவ நெறிமுறையிலும் இந்துக்களால் பின்பற்றப்படுவதை எந்தவொரு விடயத்திலும் எப்போதுமே ஒற்றுமைப்படாத மனித அபிப்ராயம் மெய்யியல் வி~யத்திலும் அதே போன்று வேறுபாடுகளுக்கு இடமளித்தே இந்து தரிசனங்களின் வேறுபட்ட சிந்தனைப் போக்குகளை தோற்றுவித்தன எனும் கூற்று மூலம் எடுத்துரைத்துள்ளார். பன்மைச் சிந்தனை இந்துசமயத்தில் நிலவினாலும் இந்துசமய ஆத்மீகத் தளத்தினை ஒரு போதும் அது பிளவுபடுத்திச் சிதைப்பதில்லை.

இந்துகற்கை மீது வில்சனுக்கு ஏற்பட்ட பேரார்வமும் அதன் ஆளுமைகளும் மேலைத்தேய நாடுகளில் பரந்து பட்ட நோக்கில் காணப்படுகின்றது. மேலைத்தேச ஆய்வுலகுக்கு இந்துகற்கைகள் அளப்பரிய பங்கினை ஆற்றியதோடு பிரித்தானிய ஆய்வாளரான வில்சனின் இந்துசமயத்தின் மீதான ஆழ்ந்த ஈடுபாட்டினை மேற்கூறிய விடயங்களின் அடிப்படையில உணர்ந்து கொள்ள முடிகின்றது.

உசாத்துணைகள்
1. முகுந்தன்.ச, “இந்து கற்கைகளை வளமூட்டிய மேலைத்தேசத்து ஆளுமைகளும் ஆய்வுகளும்" (2021), குமரன் புத்தக இல்லம்,கொழும்பு-சென்னை 
2. https://en.wikipedia.org/wiki/Horace_Hayman_Wilson3. https://onlinebooks.library.upenn.edu/webbin/book/lookupname?key=Wilson
3
. https://onlinebooks.library.upenn.edu/webbin/book/lookupname?key=Wilson

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R