இனியொரு
விதி செய்து
கடக்க முடியாது
பாரதியின்
பாடல்களைத் தவிர்த்து
நாம்.
ஆடுவோமே
பள்ளுப் பாடுவோமேயென
அங்கலாய்த்து
கடக்க முடியாது
பாரதியின்
சவ ஊர்வலத்தை
நாம்.
நல்லதொரு வீணையை
நலம் கெட
விட்டவர்கள்
நாம்.
கரித்துண்டில்
கதகதப்பு
பழகி
மரத்தை
அழித்தவர்கள்தாமே
நாம்.
பரியந்தமற்று
பரவசம்
கொள்கிறோம்.
பாரதிகளை
தொலைத்துக் கொண்டிருக்கும்
நாம்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.