ஈராக்கில்
ஓர் ஆயிரத்தொரு இரவுகளுக்குப் பின்னர்
யாரோ ஒருவர் பிறிதொருவருடன் பேசுவார்.
சந்தைகள் திறக்கும்
வழக்கமான வாடிக்கையாளர்களுக்காக.
பிஞ்சுப் பாதங்கள் கிச்சுக்கிச்சு மூட்டும்
ரிக்கிரிஸ் நகரின் இராட்சத பாதங்களில்.
கடற் பறவைகள் தம் இறக்கைகளை விரிக்கும்
அவற்றை எவரும் சுட்டு வீழ்த்தமாட்டார்கள்.
பெண்கள் வீதிகளில் நடந்து செல்வர்
அச்சத்தில் பின் திரும்பிப் பாராமல்.
ஆண்கள் தம் உண்மைப் பெயர்களைச் சொல்வர்
தமது வாழ்வை ஆபத்தில் தள்ளாமல்.
சிறுவர்கள் பள்ளிக்குச் சென்று
மீண்டும் வீடுதிரும்புவர்.
புல்லில் கிடக்கும் மனித தசையை
கிராமத்துக் கோழிகள் கொத்தித் தின்னமாட்டா
முரண்பாடுகள் இடம்பெறும்
வெடிபொருட்கள் ஏதுமின்றி.
மேகம் கடந்து செல்லும்
வழமைபோல வேலைக்குப் புறப்படும்
கார்களின் மேலாக.
ஒரு கை அசையும்
யாரோ புறப்படுகையில்
அல்லது திரும்பி வருகையில்,
ஒரே சூரியோதயம்தான்
விழித்தெழுபவர்களுக்கும்
இனியொருபோதுமே விழித்தெழாதவர்களுக்கும்.
வாழ்வின்
ஒவ்வொரு கணமும்
சாதரணமான ஏதோ ஒன்று சம்பவிக்கும்.
The Iraqi Nights By Dunya Mikhail
In Iraq,
after a thousand and one nights,
someone will talk to someone else.
Markets will open
for regular customers.
Small feet will tickle
the giant feet of the Tigris.
Gulls will spread their wings
and no one will fire at them.
Women will walk the streets
without looking back in fear.
Men will give their real names
without putting their lives at risk.
Children will go to school
and come home again.
Chickens in the villages
won’t peck at human flesh on the grass.
Disputes will take place
without any explosives.
A cloud will pass over cars
heading to work as usual.
A hand will wave
to someone leaving or returning.
The sunrise will be the same
for those who wake
and those who never will.
And every moment
something ordinary
will happen
under the sun.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.