முகநூலில் துணைப்பேராசிரியர் ஜே.பி.ஜோசபின் பாபா அவர்கள் (இப்பொழுது இவர் பேராசிரியராக இருக்கக் கூடும். விபரம் தெரிந்தவர்கள் அறியத்தரவும்)  அமரர் எம்.டி. வாசுதேவன் நாயர் பற்றிக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து விமர்சித்திருந்தார். அவை பற்றி நிகழ்ந்த வாதப்பிரதிவாதங்களில் சிலவற்றை ஒரு பதிவுக்காக இங்கு தருகின்றோம். உங்கள் கருத்துகளையும் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

ஜே.பி.ஜோசபின் பாபா  J P Josephine Baba

கல்லூூரி படிப்பு முடிந்ததும் இருவரும் ஒரே கல்வி நிலையத்தில் ஆசிரியர்களாக வேலை பார்க்கின்றனர். அப்பெண் பணக்கார வீட்டு பெண்மணி. அவர்   எம்ஜிஆரின் அப்பா வழி குடும்பத்தை சேர்ந்தவர். ஆங்கிலத்தில் முதுகலை பட்டம்  பெற்றவர். எழுத்தாளரை விட எழுத்திலும் திறமையானவர். ஒரு நாள் தனது குடும்பத்தின் எதிர்ப்பை புறக்கணித்து விட்டு எழுத்தாளருடன் வாழத் துவங்குகிறார். கணவனின் எழுத்தை ஆங்கிலத்தில் கொண்டு வரும் பாரிய பணியில் இருக்கிறார்.எழுத்தாளருக்கு குடி, நட்புகள் என தனது வெளி விசாலமாகிறது. சாகித்ய அக்காதமி துவங்கிய பல விருதுகளை சொந்தமாக்குகிறார். அவருடைய சமூக புகழ் நிலை உயர்கிறது. 11 வயது மகளுக்கு நடனம் கற்பிக்க  ஏழையான கலாமண்டலம் சரஸ்வதி  வீட்டுக்கு அழைக்கப்படுகிறார். பின்பு எழுத்தாளரின் குடியிருப்பு சரஸ்வதி வீட்டுக்கு இடம் மாறுகிறது. மனைவியையும் மகளையும் முற்றிலும் மறந்து, தன்னை நிறுவ தனது எழுத்திலும் சினிமாவிலும் தனது மனைவிக்கு தான் அடைக்கலம் கொடுத்தது மாதிரி கதை எழுதுகிறார். படம் எடுக்கிறார்.( திரைப்படம் அக்ஷரங்கள் ) எழுத்தாளரின் மனைவி பிரமிளாவும் தனது வாழ்க்கையை புத்தகமாக எழுதும் நிலைக்கு தள்ளப்படுகிறார். பிற்பாடு வழக்காடு மன்றத்தில் தனது கணவர்  தனக்கு வேண்டும் என மனைவி கெஞ்சியும்  மனைவியும் மகளும்  வேண்டாம் என எழுத்தாளர் சரஸ்வதியுடன் இணைந்து  கொள்கிறார். எழுத்தாளரின் மனைவியையும் மகளையும் மனைவியின் சகோதரர் அமெரிக்க அழைத்து செல்கிறார்.

மனத்துயரில் இருந்த மனைவி பல நோய்களுக்கு உள்ளாகுகிறார். கடைசியில் கேன்சர் நோய் சிகித்சையில் கடைசி நாட்களில் இருக்கும் போது தனது கணவனை காண விரும்கிறார், வேண்டுகிறார். ஆனால் கதைகளில் அன்பு காதல் கனிவு என்று எழுதி விருது பெற்றவரால் மனைவிக்கு நிம்மதியான ஒரு மரணத்தை கூட கொடுக்க இயலவில்லை.  தனது 44 ஆம் வயதில் 26 வயது நடன  டீச்சருடன் வாழும் போது சொந்த மனைவி தன்னை விட மூன்று வயது பெரியவர் என்பது இளகாரமாக தெரிகிறது. ஆனாலும் ஆண் என்பதால் பல விருதுகள், ஹேமா கமிட்டி ரிப்போர்ட்டில் பெயர் அடிபட்டும்  பிரபலம் என்பதால்  தனிநபர் வாழ்க்கையில் இருக்க வேண்டிய நேர்மையை பற்றி கேள்வி இல்லை , 91 வயதில் அரசு மரியாதையுடன் MT போயுள்ளார் என மலையாளம் ஒரு பகுதி இலக்கிய உலகம் விவாதித்துக் கொண்டு இருக்கிறது. மனித உறவுகளை, காதல் அன்பு என்ற இயபல்பான உணர்வுகளை  தன்னுடைய சுயநல ஆசைகளுக்காக பயன்படுத்தும் toxic  இலக்கிய ஆண்களில் ஒருவரான MT யை காண முதல் மகள் வந்து இருந்தாரா என தெரியவில்லை.

இதில் சரஸ்வதி,  தான் ஒரு தியாக சுடராக சொல்லிக் கொண்டு பல நேர்முகங்களை கொடுத்து வருவது தான் முரணாக உள்ளது. ஒரு குடும்பத்தில் இருந்து ஒரு ஆணை எடுத்துக் கொண்டு போவதின் அரண் தான் என்ன? ஆனால் புகழ வெளிச்சத்தில் உள்ள ஆண்களுக்கு எல்லாம் எளிதாக உள்ளது.


நவரத்தினம் கிரிதரன் (வ.ந.கிரிதரன்)

நீங்கள் ஒருவரின் வாழ்க்கையின் நிகழ்வுகளின் அடிப்படையில் அவர் பற்றிய எண்ணங்களை உருவாக்குகின்றீர்கள் என்று நினைக்கின்றேன். நீங்கள் இவ்விதம் முடிவெடுப்பதற்கு ஆதாரங்கள் உண்டா? எம்.டி.வாசுதேவன் நாயருக்கும், அவரது முதல் மனைவிக்குமிடையில் ஏன் பிரிவு வந்தது? அது பற்றிய போதிய விபரங்கள் உங்களிடம் உள்ளனவா? மணமுறிவு என்பது பல்வேறு காரணங்களினால் ஏற்படலாம். அவை பற்றி எதுவும் தெரியாமல் நீங்கள் இவ்விதம் எழுத்தாளரைக் குற்றஞ்சாட்டுகின்றீர்கள். மேலும் சட்டரீதியாக மண முறிவு பெற்றவர்கள் மீண்டும் சந்திக்க வேண்டிய தேவை இல்லை. முதல் மனைவியின் இறுதிப்படுக்கையில் வாசுதேவன் நாயர் சென்று சந்திக்க வேண்டிய தேவை இல்லை. விரும்பினால் செல்லலாம். ஆனால் அவசியமில்லை. இதை ஒரு குற்றமாக எடுத்து எழுத்தாளரைச் சாடுகின்றீர்கள். அவர் முதல் மனைவியுடன் விவாகரத்து ஏற்பட்ட பின்பே இரண்டாவதாக மணம் முடித்தார். முடித்தவர் புகழ்பெற்ற நர்த்தகி. அவரையும் தரக்குறைவாக விமர்சிக்கின்றீர்கள்.

ஜே.பி.ஜோசபின் பாபா  J P Josephine Baba

Navaratnam Giritharan நான் மலையாளம் வாசிப்பவர் செய்திகள் கேட்ப்பவர். சும்மா காது வழி செய்தியை எழுதவில்லை. தமிழ் இலக்கிய வெளி மாதிரி மலையாளம் இலக்கிய வெளி புனித பிம்பம் கட்டமைப்பது இல்ல. அவர்கள் பகுதாய்ந்து தகவல்கள் தருகிறவர்கள்.இதில் தரம் தாழ என்ன இருக்கு. அவர்கள் முதல் மனைவி பற்றி சொல்லாவிடிலும் ஊர் உலகம் அவதானித்து சொல்கிறது. இரண்டாம் மனைவி பற்றிய பரிவு முதல் மனைவிக்கும் இருக்கும் தானே. அவர் வாழ்க்கையில் ஏமாற்றப்பட்டார் என்பதற்காக அவர் பக்கம் யாரும் பேசக்கூடாது என்ற நியதி உண்டா?

இதற்காக உதவிப்பேராசிரியர் ஜே.பி. ஜோசபின் பாபா காட்டும் ஆதாரம் ஒரு யு டியூப் சானல். அதுவும் வாசுதேவன் நாயர் மறைந்ததன் பின் பதிவேற்றப்பட்ட காணொளியைக்கொண்டது. - https://www.youtube.com/watch?v=X6cP7-3Jh_Q

நவரத்தினம் கிரிதரன் (வ.ந.கிரிதரன்)

J P Josephine Baba // சும்மா காது வழி செய்தியை எழுதவில்லை. // ஆதாரங்கள், ஆய்வுக் கட்டுரைகள் உண்டா? யு டியூப் சானல்களில் கூறுவதையெல்லாம் உண்மை என்று ஏற்றுக்கொள்ள முடியாது. முதல் மனைவி சட்டரீதியாக விவாகரத்து பெற்றவர். அத்துடன் அவரது தொடர்பு வாசுதேவன் நாயரின் வாழ்வில் முற்றுப்பெற்று விட்டது. அது கூட ஏன் நடைபெற்றது என்பதற்கு எமக்கெல்லாம் சரியான காரணங்கள் தெரியாது. வாசுதேவன் நாயரோ கலை, இலக்கியவாதி. இவர்கள்தம் நிலை காரணமாக அவர்களுக்குள் பிணக்குகள் ஏற்பட்டனவா நாம் அறியோம். இந்நிலையில் ஒருவர் மறைந்தபின்னர் இவ்விதம் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது. இத்தகவல்கள் உங்களுக்கு முன்பே தெரிந்திருந்தால், வாசுதேவன் நாயர் உயிருடன் இருந்திருக்கும் காலத்திலேயே கூறியிருக்க வேண்டும். விமர்சித்திருக்க வேண்டும். ஏன் இவ்வளவு காலம் அவர் மறையும் வரையில் காத்திருந்தீர்கள்? நீங்கள் குறிப்பிடும் யு டியூப் சானலும் அவர் மறைந்த பின் பதிவேற்றப்பட்ட ஒன்றுதான். நீங்களோதான் பல்கலைக்கழகப் பேராசிரியர். நீங்கள் இதுபோன்ற யு டியூப் சானல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றையெல்லாம் ஆதாரங்களாகக் கொள்வது ஆச்சரியம் தருகின்றது.

நீங்கள் தரக்குறைவாக விமர்சிக்கும் வாசுதேவன் நாயரின் மனைவி சரஸ்வதி இவர்தான். புகழ்பெற்ற நர்த்தகி. பல விருதுகளைத் தனது கலைப்பங்களிப்புக்காகப் பெற்றவர். நாட்டியப்பள்ளியை உருவாக்கியவர். http://nrityalaya.net/kalamandalam-saraswathy/  நீங்கள் தரக்குறைவாக விமர்சிக்கும் வாசுதேவன் நாயரின் மனைவி சரஸ்வதி இவர்தான். புகழ்பெற்ற நர்த்தகி. பல விருதுகளைத் தனது கலைப்பங்களிப்புக்காகப் பெற்றவர். நாட்டியப்பள்ளியை உருவாக்கியவர். http://nrityalaya.net/kalamandalam-saraswathy/   வாசுதேவன் நாயர் தனது இரண்டாவது மனைவியுடன் 47 வருடங்கள் வாழ்ந்திருக்கின்றார். அந்த இல்லறப்பிணைப்பைக் கொச்சைப்படுத்துகின்றீர்கள்?

எழுத்தாளர் அ.யேசுராசா (Athanas Jesurasa)

Navaratnam Giritharan //முதல் மனைவியின் இறுதிப்படுக்கையில் வாசுதேவன் நாயர் சென்று சந்திக்க வேண்டிய தேவை இல்லை. விரும்பினால் செல்லலாம். ஆனால் அவசியமில்லை. // - காதலித்து மணந்த மனைவியையும் 11 வயது மகளையும் விட்டுவிட்டு, இடையில் சந்தித்த - மிகவும் வயதில் குறைந்த - பெண்ணுடன் சென்றுதான் வாசுதேவன் நாயர் வாழ்ந்தார். அதைத்தான் விட்டாலும், நோயுற்று இறுதிநாள்களில் சந்திக்க விரும்பிய முதல் (காதல்) மனைவியை அவர் கட்டாயம் சந்தித்திருக்கவேண்டும் ; அதுதான் மனிதாபிமானம். அதில் அவர் தவறியது, அவரது எழுத்தில் வெளிப்பட்ட அன்பு, காதல், மனிதநேசம் போன்றவற்றைக் கொச்சைப்படுத்துகிறது. நான் விரும்பும் சிறந்த மலையாள எழுத்தாளர் அவர் என்பதால், பெரும் அதிர்ச்சியும் கவலையும் அடைந்தேன்! சுமார் 40 கி. மீ. தொலைவில் உள்ள கிளிநொச்சியில் பணியாற்றிய - உயர் அதிகாரியான ஈழத்து "முற்போக்கு" எழுத்தாளர் செ. யோகநாதன், யாழ்ப்பாணத்தில் இறந்த தனது தந்தையின் மரணச் சடங்கிற்கு வரவில்லை. அப்போது பிரச்சினைகள் இல்லாத பழைய - சுமுகமான காலம்! ஆனால், காதல் திருமணத்தின் பின் தனது குடும்பத்துடனான தொடர்பை நீண்டகாலமாக யோகநாதன் துண்டித்திருந்தார் ; அவரது செயலையும் சாதாரணமாகத்தான் எடுத்துக்கொள்வீர்களா?

நவரத்தினம் கிரிதரன் (வ.ந.கிரிதரன்)

Athanas Jesurasa வணக்கம் திரு.யேசுராசா, உங்களிடமிருந்து இத்தகைய எதிர்வினையொன்றினை நான் நிச்சயம் எதிர்பார்க்கவில்லை. வாசுதேவன் நாயருக்கும் முதல் மனைவிக்குமிடையிலான பிணைப்பு 11 வருடங்கள். இரண்டாவது மனைவியுடனான பிணைப்பு 47 வருடங்கள். முதல் மனைவி எப்பொழுது இறந்தார் என்பது தெரியவில்லை. ஆனால் முறையாக விவாகரத்துப் பெற்ற ஒருவர், இன்னுமொருவருடன் தன் வாழ்க்கையைப் பிணைத்துக்கொண்ட ஒருவர் தன் முதல் மனைவியின் கடைசிக் காலத்தில் சென்று பார்க்கவில்லை என்பதால் அது மனிதாபிமானமில்லை என்று கூறுவது ஆச்சரியத்தைத் தருகின்றது. செ.யோகநாதனின் நிலையை எதற்காக இங்கு ஒப்பிடுகின்றீர்கள்? வாசுதேவன் நாயரின் இல்லத்தின் பெயர் சித்தாரா. அது அவரது முதல் மனைவிக்குப் பிறந்த மகளின் பெயர்.


ஜே.பி.ஜோசபின் பாபா  J P Josephine Baba

நரேந்திர குமார் படைப்புக்கும் படைப்பாளர்களுக்குமான முரண் தான். இவர்களை இப்படி வளர்த்து விடுவது வாசகர்கள், அருவடிகள், அரசியல் தேவைக்கான வாய்ப்புகள், சங்கங்கள். படைப்பை வாசிக்காது பல போதும் படைப்பாளிகளோடு உணர்வு பூர்வமாக இணைந்து விடுகின்றனர். அவர்கள் எழுத்து objective ஆக அணுகுவது இல்லை. கேரளா இலக்கியவாதிகள் மற்றும் சினிமா கலைஞர்கள் சேர்ந்து செய்யும் அடாவடித்தனத்தை ஹேமா கமிட்டி ஊடாக வெளியே கொண்டு வந்தனர் அரசியல்வாதிகள் செய்யும் ஊழல் மாதிரி முக்கியம் கொடுக்க வேண்டும். அரசியல்வாதி பொருட்களை அபகரிப்பது போல இலக்கிய வாதிகள் மனிதர்களின் சித்தனை வளத்தை கெடுக்கின்றனர். கேள்வி கேட்காதவிதம் பெண்களை பாதிப்புக்கு உள்ளாகின்றனர். மக்கள் அறிந்து வாசிப்பது. உதாரணம் அக்ஷரங்கள் என்ற திரைப்படம் ஊடாக ஒரே நேரம் இரு பெண்களை ஏமாற்றுவதை பொருள் / விளக்கம் கொடுத்துக் கொண்டு இருப்பார். பெண் கதாப்பத்திரங்கள் இவர்கள் சுகங்களுக்காக படைப்பதுடன் அப்படியான வாழ்க்கையை பெண்களின் கடமை / புனிதம் என கதை அமைத்து இருப்பார்கள். இதே போன்ற கள்ள உறவுகளை இலக்கியம் ஊடாக simlify or usual ஆக படைத்து இருப்பார்கள். அப்படி ஒரு உண்மையற்ற ஆணா திக்க சமூகம் இவர்கள் வாழ்க்கை ஊடான எழுத்தை இலக்கியத்தை குற்ற உணர்சசி அற்று உருவாக்குகின்றனர்.


நரேந்திர குமார்

J P Josephine Baba இதெல்லாம் ரொம்ப மிகையான கூற்று.. இத்தனை ஆழமாக போனால் நாம் தினத்தந்திதான் வாசிக்க முடியும்.. விக்ரமன் படம்தான் பார்க்க முடியும்..


நவரத்தினம் கிரிதரன் (வ.ந.கிரிதரன்) Navaratnam Giritharan

நரேந்திர குமார் //ரொம்ப மிகையான கூற்று// மிகையான கூற்று மட்டுமல்ல. யு டியூப் சானலை ஆதாரமாகக் கொண்ட ஆதாரங்களற்ற கூற்று.

நவரத்தினம் கிரிதரன் (வ.ந.கிரிதரன்) Navaratnam Giritharan

இன்றுள்ள பிரெஞ்சு அதிபர் தன்னை விடப் பல வருடங்கள் மூத்த பெண்ணை மணம் செய்தவர். அதிபர் பிறந்தது 77இல். மனைவி பிறந்தது 53இல். 24 வயது மூத்தவர் மனைவி.

நரேந்திர குமார்

ஹேமா கமிட்டி ரிப்போர்ட்டில் இவர் பெயர் அடிபட்ட நினைவில்லை..

எழுத்தாளர் அ.யேசுராசா (Athanas Jesurasa)

// கடைசியில் கேன்சர் நோய் சிகித்சையில் கடைசி நாட்களில் இருக்கும் போது தனது கணவனை காண விரும்கிறார், வேண்டுகிறார். ஆனால் கதைகளில் அன்பு காதல் கனிவு என்று எழுதி விருது பெற்றவரால் மனைவிக்கு நிம்மதியான ஒரு மரணத்தை கூட கொடுக்க இயலவில்லை. // - அதிர்ச்சியும் சங்கடமும் அடைந்தேன் ; இவர், நான் மிகவும் விரும்பும் மலையாள எழுத்தாளராக இருந்தார்!

ஜே.பி.ஜோசபின் பாபா  J P Josephine Baba

Athanas Jesurasa இதே மாதிரி தான் சுகுமார் அழிகோடும் இருந்தார்.கோழைகள்

நவரத்தினம் கிரிதரன் (வ.ந.கிரிதரன்)

//மனைவிக்கு நிம்மதியான// 11 வருடங்கள் வாழ்ந்த முன்னாள் மனைவி. மனைவி அல்லர். அதன்பின்னர் வாசுதேவன் நாயர் தனது இரண்டாவது மனைவியுடன் 47 வருடங்கள், மறையும் வரை வாழ்ந்திருக்கின்றார்.

எழுத்தாளர் அ.யேசுராசா (Athanas Jesurasa)

J P Josephine Baba ஹேமா கமிட்டி அறிக்கை பற்றி விரிவான கட்டுரையை எழுதி வெளியிடுங்கள் ; அது முக்கியமானதொன்றாகும்!

நவரத்தினம் கிரிதரன் (வ.ந.கிரிதரன்)

Athanas Jesurasa // ஆனாலும் ஆண் என்பதால் பல விருதுகள், ஹேமா கமிட்டி ரிப்போர்ட்டில் பெயர் அடிபட்டும் பிரபலம் என்பதால் தனிநபர் வாழ்க்கையில் இருக்க வேண்டிய நேர்மையை பற்றி கேள்வி இல்லை// என்று இப்பதிவாளர் குற்றஞ்சாட்டியுள்ளார். ஹேமா கமிட்டி ரிப்போர்ட்டிற்கான இணைப்பு - https://www.livelaw.in/.../hema-committee-report-556457.pdf நான் இன்னும் முழுமையாக வாசிக்கவில்லை. வாசிக்கும்போது மேலுள்ள குற்றச்சாட்டு உண்மையா என்பதையும் அவதானிப்பேன். நீங்கள் முதலில் வாசித்தால் பதிவு செய்யுங்கள்.

எழுத்தாளர் அ.யேசுராசா (Athanas Jesurasa)

Navaratnam Giritharan // இன்னுமொருவருடன் தன் வாழ்க்கையைப் பிணைத்துக்கொண்ட ஒருவர் தன் முதல் மனைவியின் கடைசிக் காலத்தில் சென்று பார்க்கவில்லை என்பதால் அது மனிதாபிமானமில்லை என்று கூறுவது // - புற்று நோயில் துன்புறும் தனது இறுதிநாள்களில், கணவனைச் சந்திக்க விரும்பித் தகவல் தெரிவித்தபோது அவர் மறுத்தார் என்ற முக்கிய தகவலை நீங்கள் தவறவிடுகிறீர்கள்! ; அதுதான் வாசுதேவன் நாயரின் மனிதபிமானமற்ற செயல் என்னும் குற்றச்சாட்டாக மாறுகிறது!

நவரத்தினம் கிரிதரன் (வ.ந.கிரிதரன்)

Athanas Jesurasa //. சக மனிதர்மீதான அக்கறை, மனிதநேயம் என்றெல்லாம் தமது படைப்புகளில் கொட்டிக்குவிக்கும் எழுத்தாளரான // வாசுதேவன் நாயர் முதல் மனைவியை முறைப்படி விவாகரத்து செய்த பின்னரே இரண்டாவதாக மணம் செய்தார். இரன்டாவதாக மணம் செய்தவருடன் 47 வருடங்கள் வாழ்ந்தார். அவர் தன் முதல் மகள் சித்தாரா மேல் மிகுந்த பாசம் வைத்திருந்தார். அதன் காரணமாகவே வீட்டுக்கும் முதல் மகள் பெயரை வைத்தார். முதல் மனைவியுடன் ஏன் விவாகரத்து ஏற்பட்டது என்பதை நீதிமன்றத்தின் விவாகரத்துக் குறிப்புகள் தாம் வெளிப்படுத்த வேண்டும். மேலும் நவயுகத்தில் விவாகரத்து என்பது பலரின் உணர்வுகளைப் பாதிப்பதாகவிருந்தாலும் தவிர்க்க முடியாத ஒன்று. அதற்காகவே சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. விவாகரத்து முடிந்த ஒருவர் , இன்னுமொருவருடன் வாழ்க்கையைப் பிணைத்துக்கொண்ட ஒருவர் முதல் மனைவியின் இறுதிக்காலத்தில் சென்று பார்க்கவில்லை என்பதை வைத்து அவரது மனிதாபமிமானத்தை எடை போடுவது சரியாகத் தெரியவில்லை. எங்களுக்குத் தெரியாது அவர்களுக்கிடையில் இருந்த பிளவுகளின் ஆழம். யு டியூப்காரரின் கூற்றுகளின் அடிப்படையில் ஒருவர் கருத்துகளை முன் வைக்கின்றார். நீங்களும் அதை ஏற்றுக்கொண்டு உங்கள் கருத்துகளை முன் வைக்கின்றீர்கள். இதை ஏற்றுக்கொள்வதில் எனக்குச் சிரமம் உண்டு. ஆனால் வாசுதேவன் நாயர் தன் மூத்த மகள் விடயத்தில் தன் கடமையைச் செய்ததாகவே கட்டுரையொன்றின் மூலம் உணர முடிகின்றது. மூத்த மகளும் தந்தையுடன் தொடர்புகளைப் பேணி வந்ததாகவே தெரிகிறது. https://indiapresentinfo.in/.../sithara-vasudevan-nair...

நவரத்தினம் கிரிதரன் (வ.ந.கிரிதரன்)

Athanas Jesurasa //புற்று நோயில் துன்புறும் தனது இறுதிநாள்களில், கணவனைச் சந்திக்க விரும்பித் தகவல் தெரிவித்தபோது அவர் மறுத்தார் என்ற முக்கிய தகவலை நீங்கள் தவறவிடுகிறீர்கள்! // இந்தத்தகவலை எங்கிருந்து பெற்றீர்கள்? முதல் மனைவி எப்பொழுது இறந்தார்? விவாகரத்து பெற்று எத்தனை வருடங்களின் பின்னர் அவரது மரணம் சம்பவித்தது?  இவற்றைப்பற்றிய தகவல்களைத் தர முடியுமா?

நவரத்தினம் கிரிதரன் (வ.ந.கிரிதரன்)

Athanas Jesurasa //அவரது செயலையும் சாதாரணமாகத்தான் எடுத்துக்கொள்வீர்களா?// இப்பதிவு யோகநாதனைப்பற்றியது அல்ல. மேலும் அவரைப்பற்றிய நீங்கள் கூறும் தகவலை நான் இதுவரை அறிந்திருக்கவில்லை. இத்தகவலை நீங்கள் அறிந்தது எப்போது? செ.யோ இருந்தபோது இது பற்றி எங்காவது நீங்கள் கருத்து தெரிவித்துள்ளீர்களா? எழுதியிருக்கின்றீர்களா? இத்தகவல் நீங்கள் உண்மையென்று கருதினால் செ.யோ.வை விமர்சித்து ஒரு கட்டுரை ஆதாரங்களை முன் வைத்து எழுதுங்கள். அதன் பின்னர் அது பற்றி விவாதிப்போம்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.
வீடு வாங்க & விற்க!

'
சாந்தி சந்திரன்
Shanthi Chandran

HomeLife/GTA Realty Inc.
647-410-1643  / 416-321-6969
5215 FINCH AVE E UNIT 203
TORONTO, Ontario M1S0C2

விளம்பரம் செய்ய

வ.ந.கிரிதரனின் பாடல்கள்
பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க

அ.ந.கந்தசாமியின் நாவல் 'மனக்கண்' மின்னூல்!
வாங்க
வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' மின்னூல்!
பதிவுகளில் வெளியான சிறு நாவலான எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' தற்போது அமேசன் & கிண்டில் மின்னூற் பதிப்பாக, பதிவுகள்.காம் வெளியீடாக வெளியாகியுள்ளது. தமிழ் அகதி இளைஞன் ஒருவனின் முதற்காதல் அனுபவங்களை விபரிக்கும் புனைகதை.  மின்னூலினை வாங்க

                                         

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
 

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். மின்னூலினை வாங்க


எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம்

 


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி. இதனை வாங்க இங்கு அழுத்தவும்.


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி. நூலை வாங்க


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan. To buy


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp. Buy here