பதிவுகள் முகப்பு

குறுநாவல்: வேட்டை! - கடல்புத்திரன் -

விவரங்கள்
- கடல்புத்திரன் -
நாவல்
10 செப்டம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

           -கடல்புத்திரனின் 'வேட்டை' 'பதிவுகள்' இணைய இதழில் வெளியான குறுநாவல். நாவலில் வரும் சம்பவங்கள் , பாவிக்கப்பட்டுள்ள இயக்கப்பெயர்கள் இவற்றிலிருந்து இக்குறுநாவல் இலங்கைத் தமிழர்களின் விடுதலைப்போராட்டத்தின் சில கட்டங்களைத் தொட்டுச் செல்கின்றது என்பதைப் புரிந்து கொள்வீர்கள். இந்நாவலில் பாவிக்கப்பட்டுள்ள இயக்கப்பெயர்கள், சம்பவங்களிலிருந்து அவற்றின் உண்மையான இயக்கப்பெயர்களை நீங்கள் ஊகித்துக்கொள்ளலாம். பெரிதாக நடந்த இயக்க மோதற் கால அனுபவங்களை மிகவும் யதார்த்தபூர்வமாக விபரிக்கும் குறுநாவலின் அனுபவங்கள் இலேசாக அவ்வப்போது மனத்தில் மெல்லிய வலியினை ஏற்படுத்து விடுகின்றன. அதே சமயம் முட்டி மோதிக்கொண்ட அமைப்புகளின் அடிமட்டத்தோழர்களுக்கிடையிலான நேரடிச் சந்திப்புகளின் அனுபவங்கள் சிலவற்றையும் இக்குறுநாவல் பதிவு செய்கின்றது. -


பயிற்சி முகாமிலிருந்து வந்து ஒரு வருசம் கடந்து விட்டது . ஆனைக்கோட்டைத் தோழர்களைச் சந்திக்கும் ஆசை பெடியகளுக்கு  நிறைவேறவே இல்லை . ” போய்ப் பார்ப்போமா ? ” என்று  கேட்டுக் கொண்டே இருந்தார்கள்    வேறு ” அவன் எங்கே ? ; இவன் எங்கே ? ” …என்ற குரல்கள்  அங்காங்கே எழுந்து கொண்டிருந்தன . இங்கேயும் ,  ரஸ்யப்புரட்சியில் எழுந்த மாதிரி , மென்செவிக்குகள் எழுச்சியுற்று  இரண்டாகி பிரிந்து விடுமோ ? என்றிருந்தது . கேள்விகளை எழுப்புவது ,கண்டமாதிரி விமர்சனங்களை அள்ளிக் கொட்டுவது என‌ ….  ரசிகர் மன்றம் மாதிரி ஒவ்வொரு பகுதியும்  சுறுசுறுப்பாகவும் இயங்கிக் கொண்டிருந்தன‌ . ஒருபுறம் பயிற்சியால் வந்து குவிந்து கொண்டிருக்கும் தோழர்கள் . இந்திய அரசை விலத்தி ஆயுதங்களை வாங்கியதில் கோபமுற்று அத்தனையும் பறித்து விட்ட நிலைமை.  வாழ்வியலில் வறுமை எவ்வளவு மோசமோ …அதைப் போன்றதே  , . இயக்கத்திலும்  ஆயுத வறுமையும்  . ஒட்டு மொத்தத்தில் மார்க்சிச வழியில் பிரபலமாக விளங்கிய தாமரை பலவித சிக்கல்களில்  சிக்கித் தவித்தது.

           வெளியில்  , சிதைவுறுகிறதை விட சிதைக்கப்படுகிறதோ…என்ற மாதிரியான  நிகழ்வுகள்  தான் அதிகம்   .  முதலில் , தளமாநாடு கூட்டப்படுவதென்றும் , பிறகு ,  , அதில் பெறப்படும் அறிக்கைகளையும் சீர்தூக்கி பார்த்து பின்தளமாநாடு கூட்டப்படும் என்ற விநோதமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படலாயின . ஏற்கனவே , அல்லி இயக்கத்தினுள்   காங்கிரஸ் என்று ஒரு அவை கூடி  செயலதிபர் தொட்டு பலர் மீள்தெரிவும் , ஆராய்வும் என புதுவிசயங்கள் தொடங்கி விட்டிருந்தன . இருந்தாலும் அதிலேயும் கோடாலியால் கொத்தியது மாதிரிப் பிளவு  படும் போலத் தான் இருந்தது  .  அரசியலில் பல  படிகளைக் கடந்து கொண்டிருந்திருந்தாலும் இலக்கை …… அடைவோமா  ? என்பது  தெரியாது  .  கழுகு ,  திறமான இயக்கம் கிடையாது . அப்படி தன்னை நினைத்துக்  கொண்டு  சங்கரத்தையிலுள்ள முல்லைமுகாம் மீது அதிகாலையிலே தாக்குதலைத் தொடுத்து விட்டது .  தூக்கம் கலையாது வரிசையில் படுத்துக் கிடந்த தோழர்களுக்கு “என்ன நடந்தது ? ” எனத் தெரிய முதலே , எம் 16 சுடுகருவி சடசடவென சுட்டுத்தள்ளி விட ,  திறந்த  முளிகளை, மூடாமல்…. சுமார் 24 , 25 உடல்கள் இரத்தக்குளத்தில் கிடந்தன‌ .

           ‘ ஓரிரு மாதங்களுக்கு முதலே , முல்லைக்கு ‘போதாக்காலம்  தொடங்கி விட்டது . வெளியில் தெரிய‌ , அவர்களுடைய‌  தளத்திலிருந்த  இரு உபத்தலைவர்களுக்கிடையில் நிலவிய காழ்ப்புகள்  முற்றி பூசல்களாக‌    வெடித்திருந்தன .  அவ்வளவாகப் படித்திராத  . அச்சம் என்பதை அறியாத  . சாண்டில்யன் கதைகளில் வருகிற மாதிரி எதிரி சுடுகிற போதிலும் காயங்களுடனும் ஆக்ரோசமாக சிங்கம் போல சிலிர்த்து முன்னேறிச் சென்று  அச்சம் கொள்ள வைத்தவர்களும்  அதில் இருந்தனர் . பெருமளவு படையினரையும் , பெரிய நகரக்காவல் நிலயமொன்றையும் முழுமையாக ,வெற்றிகரமாக  தாக்கி அழித்த    இயக்கம்  .   அச்சமயங்களில் .  பெருமளவு ஆயுதங்களையும் கைப்பற்றி மக்களையும் புளாகிதமடையச் செய்திருந்தனர் . குட்டக்குட்டக் குனிபவரில்லை  ” தமிழர்கள் ” என புதிய வரலாற்றை  புதிதாகத்  தொடக்கி வைத்தவர்கள் .  வடமராட்சியில் ,ஒருமுறை  இவர்களுடன் எதேச்சையாக கழுகுத்தோழர் ஒருவர்   கொளுவப் போக  ” ஊருக்குள்ளே ஒருத்தருமே கால் வைக்கக் கூடாது ” என கர்ஜித்து ,  கழுகுக்கெதிராக ஊரடங்குச்சட்டம் போட்டு அட்டகாசப்படுத்தி விட்டார்கள்  .   கழுகு , அதை வெகு அவமானமாகவேக் கருதியது .  ஆனால் காளி சொன்னால்  சொன்னது தான் . தாஸின் கண்ணிலிருந்து எவருமே தப்ப முடியாது , அவனது வலது கரமாக நின்றான் .  இன்னும் சிலத் தோழர்கள் துவாரபாலகர்கள். தோளை உயர்த்தி சிலிர்ப்பவ‌ர்கள் .

மேலும் படிக்க ...

பாரதியை நினைவு கூர்வோம் -1. - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
09 செப்டம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

என் அபிமானக் கவிஞர்களில் முதலிடத்தில் இருப்பவர் மகாகவி பாரதியார். இதற்கு முக்கிய காரணங்களாக அவரது கவிதைகளில் விரவிக்கிடக்கும் இருப்பு பற்றிய தேடல், சிந்தனைத்  தெளிவு, சமூக, அரசியற் பிரக்ஞை, தீர்க்கதரிசனம், பூவுலக உயிர்கள் மீதான கருணை, இயற்கை  மீதான நாட்டம் , பெண் விடுதலைச் சிந்தனைகள், சமூக அவலங்களுக்கெகிரான அறை கூவல்; என்று பலவற்றைக் கூறலாம்.

பாரதியுடனான என் தொடர்பு என் பால்ய பருவத்தில் என் அப்பா பாரதியார் கவிதைத்தொகுதியொன்றினை வாங்கித்தந்ததுடன் ஆரம்பமாகியது. அக்காலகட்டத்தில் தமிழில் வெளியான பல வெகுசன இதழ்களை வாங்கிக்குவித்த அப்பா பாரதியார் கவிதைகள், இராஜாஜியின் 'வியாசர் விருந்து', 'சக்கரவர்த்தித் திருமகன்' , புலியூர்க் கேசிகனின் உரைகளுடன் வெளியான சங்ககால நூல்கள் எனப் பலவற்றையும் வாங்கித் தந்திருந்தார். அக்காலந்தொடக்கம் பாரதியின் கவிதைகள் என்னை ஆட்கொள்ளத்தொடங்கின.  இன்றுவரை அவ்வாதிக்கம் தொடர்ந்துகொண்டேயிருக்கின்றது.

பாரதியின் கவிதைகளின் முக்கிய சிறப்புகளிலொன்று மானுடப் பருவங்கள் அனைத்துக்கும் பொருந்தும் வகையில் அவை அமைந்திருப்பதுதான். . இதுவரைக் கால என் வாழ்வின் பல்வேறு பருவங்களிலும் அவரது பல்வேறு கவிதைகள் முக்கிய இடத்தைப் பெற்றுத் திகழ்ந்திருக்கின்றன. பால்யப் பருவத்தில் பிடித்த அவரது கவிதைகள் வேறு. பதின்ம வயதுகளில் பிடித்த கவிதைகள் வேறு. இளமைப்பருவத்தில் பாதித்த கவிதைகள் வேறு. உதாரணத்துக்கு பால்ய பருவத்தில் அவரது 'குடுகுடுப்பைக்காரன்' கவிதை, 'மழை' கவிதை போன்ற கவிதைகள் பிடித்திருந்தன. பதின்ம வயதுகளிலோ 'காற்று வெளியிடைக் கண்ணம்மா' போன்ற பாடல்கள் பிடித்திருந்தன. தேசிய விடுதலைக் கவிதைகள் பிடித்திருந்தன. இளமைப்பருவத்தில் 'நீற்பதுவே. நடப்பதுவே' போன்ற தத்துவச் சிறப்பு மிக்க கவிதைகள் பிடித்திருந்தன. அதே சமயம் எப்பருவங்களிலும் வாசிப்பில் இன்பம் தருபவை அவரது கவிதைகள்.

மேலும் படிக்க ...

சிறுகதை: நட்பில் மலர்ந்த துணைமலராரம். - குரு அரவிந்தன் -

விவரங்கள்
- குரு அரவிந்தன் -
சிறுகதை
09 செப்டம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இவன் இவள் ஐம்பால் பற்றவும், இவள் இவன்
புன்தலை ஓரி வாங்குநள் பரியவும்,
காதல் செவிலியர் தவிர்ப்பவும் தவிராது,
ஏதில் சிறு செரு உறுப மன்னோ,
நல்லை மன்ற அம்ம பாலே மெல் இயல்
துணை மலர்ப் பிணையல் அன்ன, இவர்
மணம் மகிழ் இயற்கை காட்டியோயே.
(குறுந்தொகை - 229 மோதாசனார்)

காங்கேசந்துறை சீமெந்து தொழிற்சாலையில் காலைநேரச் சங்கு ஊதியதும், அயலவர்கள் பரபரப்பானார்கள். தொழிற்சாலைக்குச் சொந்தமான குவாட்டேஸில் அருகருகே வசித்த பாரமநாதனும், அப்துல் காதரும் ஒன்றாகவே வேலைக்குக் கிளம்பினார்கள். அவர்களின் பிள்ளைகளான ஜெகனும், ஹானியாவும் ஒன்றாகவே ஐந்தாம் வகுப்பில் படித்ததால் கல்லூரி வீதியில் உள்ள பாடசாலைக்கு ஒன்றாகவே போய்வருவார்கள். இருவரும் படிப்பிலும், விளையாட்டிலும் கெட்டிக்காரர்களாக முன்னிலையில் இருந்தார்கள். ஹானியாவின் உறவினர்களால் அவர்களின் மதம் சார்ந்த அதிககட்டுப்பாடு இருந்தாலும், பெற்றோர்கள் புரிந்துணர்வு உள்ளவர்களாக இருந்ததால் இவர்கள் ஒன்றாகவே பழகினார்கள்.

அடிக்கடி ஹானியாவும், ஜெகனும் தங்களுக்குள் வேடிக்கையாகச் சண்டைபிடித்தாலும், சற்று நேரத்தில் ஒற்றுமையாகி விடுவார்கள். கடற்கரையில் ஒன்றாக மணல்வீடு கட்டி விளையாடி, ஒன்றாகவே அதிகநேரம் பொழுது போக்குவார்கள். இப்படித்தான் ஒருநாள் வீட்டிலே அவர்கள் கண்ணாமூச்சி விளையாடும் போது, ஓடிஒளிய இடமில்லாமல் இருவரும் ஓடிப்போய் ஸ்டோர்ரூமுக்குள் இருந்த பழைய கட்டிலின்கீழ் ஒளித்துக் கொண்டனர். இவர்களைத் தேடிவந்தவன் ‘யாராவது ஒளித்து இருக்கிறீங்களா?’ என்று இருட்டுக்குள் தேடினான். அருகே வந்தபோது கண்டுபிடித்திடுவானோ என்ற பயத்தில் இவனோடு நெருக்கமாக அவள் ஒட்டிக் கொண்டாள். வந்தவனால் அவர்களைக் கண்டு பிடிக்கமுடியவில்லை, அங்குமிங்கும் அறைக்குள் தேடிவிட்டு அவன் அறையைவிட்டு சென்றபின்பும், திரும்பவும் வருவானோ என்ற பயத்தில் அவர்கள் அசையாது அப்படியே கட்டிலுக்குக் கீழ் படுத்திருந்தனர்.

‘எருமை, கையை எடுடா..!’ என்ற போதுதான் இவன் விழித்துக் கொண்டான், தப்பான இடத்தில் அவளை தொட்டுவிட்டேனோ என்று அவன் ‘சொறிடா’ என்றான்.

‘விட்டா இப்படியே அணைச்சிட்டே இருப்பாய் போல..!’ என்றவள் உருண்டு கட்டிலிக்குக் கீழ் இருந்து வெளியேவந்தாள். அவளைத் தொடர்ந்து அவனும் வெளியேவந்தான்.

மேலும் படிக்க ...

நினைவில் வாழும் கலைத்தூது அருட்தந்தை மரியசேவியர் அடிகளார்! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
09 செப்டம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அன்பால் அனைவரையும் அரவணைத்த பண்பாளர் கலைத்தூது அருட்தந்தை மரியசேவியர் அடிகளார், இப்பூவுலகைவிட்டு மறைந்தாலும்  அவரால் நேசிக்கப்பட்ட மக்களாலும் நண்பர்கள் மற்றும் கலை, இலக்கியவாதிகளினாலும்  மறக்கப்பட முடியாத அற்புதமான பிறவி. தனது சமயப்பணிகளுக்கும் அப்பால், தமிழ்க்கலை வளர்த்த கர்மயோகி. தேடல் மனப்பான்மையுடன் அவர் தேடியது பணம், பொருள் அல்ல. எங்கள் தமிழின் தொன்மையைத் தேடியவர். “ தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்  “ என்ற கூற்றுக்கு அமைய, தான் தேடிப்பெற்றதையும் கற்றுக்கொண்டதையும் தமிழ்மக்களுக்கு நினைவூட்டிச்சொல்லிவந்த பெருந்தகை.  “கன்னித் தமிழ் வேர்களுக்குள் முத்தெடுப்போம் , காலமெல்லாம் முத்தம் பதிப்போம்.  “ என்ற தாரகமந்திரத்துடன், இலங்கையில் திருமறைக் கலாமன்றத்தை தங்கு தடையின்றி இயக்கிவந்தவர்.  “ மனிதநேயமொன்றையே இவரிடம் காணமுடிகிறது. கலை என்ற புனிதமான பாதையில் மனிதநேயம் என்ற ஒளியைத்தேடி,  பூரணத்துவமான பாதையில் சலசலப்பின்றி தெளிந்த நீரோடைபோல் தனது பயணத்தை தொடர்பவர்  “ என்று 1998 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மல்லிகை கலை, இலக்கிய மாத இதழில் இவர் பற்றி பதிவாகியிருந்தது. அந்த இதழின் முகப்பை அலங்கரித்தவர் மரியசேவியர் அடிகளார்தான்.  அட்டைப்பட அதிதியாக இவர் பற்றிய பதிவை பேராதனை ஏ. ஏ. ஜுனைதீன் எழுதியிருந்தார். அதனைப்படித்தது முதல், அடிகளாரை சந்திக்கவேண்டும் என விரும்பியிருந்தேன்.  நான் 1987 ஆம் ஆண்டே அவுஸ்திரேலியாவுக்கு வந்துவிட்ட பரதேசி. அதனால், அடிகளாரின் அருமை பெருமைகளை மல்லிகையின் குறிப்பிட்ட இதழிலிலேயே தெரிந்துகொண்டேன்.எனது ஆவல்  காலம் கடந்து அவுஸ்திரேலியாவில் நிறைவேறியது.  2000 ஆம் ஆண்டு காலப்பகுதியென நினைக்கிறேன்.  

அவர் அவுஸ்திரேலியாவில்  நான் வதியும் விக்ரோரியா மாநிலத்தில் மெல்பன் மாநகருக்கு வந்திருந்தார். அச்சமயம் எனது நண்பர் கொர்னேலியஸ் செபஸ்தியான் அவர்களின் இல்லத்திற்கு வருகை தந்திருந்த அடிகளாரை சந்தித்தேன். அச்சமயம் மெல்பனில் திருமறைக்கலா மன்றத்தின் கிளை அமைக்கப்பட்டது. நண்பர் அன்டனி கிறேஷியன் உட்பட வேறும் சிலர் இச்சந்திப்பில் பங்கேற்றனர். அடிகளார் மறைந்தபின்னர் மெல்பன் வானமுதம் வானொலியில் அதன் நிகழ்ச்சித்தயாரிப்பாளர்,  திரு. வில்லியம் ராஜேந்திரன் ஒருங்கிணைத்த நினைவேந்தல் நிகழ்விலும் இந்த நண்பர்கள்  அடிகளார் பற்றி  நினைவுரையாற்றினார்கள்.  முதல் சந்திப்பிலேயே அடிகளார் எனதும் நண்பரானார். அவரை அட்டைப்பட அதிதியாக  மல்லிகையில் பாராட்டி கௌரவித்த மல்லிகை ஆசிரியர் டொமினிக்ஜீவாவுக்கு 2002 ஆம் ஆண்டு பவளவிழா வந்தது. அந்த விழா 2003 ஆம் ஆண்டுவரை நீடித்தது. குறிப்பிட்ட 2003 ஆம் ஆண்டு  இலங்கையில் நடந்த  தேசிய சாகித்திய விழாவுக்காக  நான் வந்திருந்தபோது,  அடிகளார் என்னைத்  தொடர்புகொண்டு,  அந்த விழாவுக்கு முதல்நாள் பம்பலப்பிட்டி கதிரேசன் மண்டபத்தில் நடந்த திருமறைக் கலாமன்றத்தின் காப்பிய விழாவுக்கு அழைத்தார். அத்துடன் ஒரு வேண்டுகோளையும் என்னிடம் விடுத்தார். இந்த காப்பிய விழாவில் மல்லிகை ஆசிரியரை பாராட்டி கௌரவிக்கவிருக்கிறோம்.  வெளிநாட்டிலிருந்து வந்திருக்கும் நீங்கள், மல்லிகையால் இலக்கிய உலகிற்கு அறிமுகமானவர் என்பதை அறிவேன். நீங்களே வந்து ஜீவா பற்றி உரையாற்றவேண்டும் என்றார்.  இந்த எதிர்பாராத அழைப்பு எனக்கு இன்ப அதிர்ச்சியை தந்தது. அடிகளாரின் வேண்டுகோளை அன்றைய தினம் அங்கே சென்று பூர்த்திசெய்தேன்.

மேலும் படிக்க ...

அஞ்சலி: கவிஞர் புலமைப்பித்தன் மறைவு!

விவரங்கள்
- ஊர்க்குருவி -
கலை
09 செப்டம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கவிஞர் புலமைப்பித்தனின் மறைவு துயரைத்தந்தாலும், அவர் ஒரு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்துவிட்டுத்தான் சென்றிருக்கின்றார். கலைஞர்களுக்கு என்றுமே அழிவில்லை. இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்த பின்னும் வள்ளுவர் இன்னும் இலக்கிய உலகில் வாழ்ந்துகொண்டிருக்கின்றார். சிலப்பதிகாரம் தந்த இளங்கோவடிகள், மணிமேகலையை  வழங்கிய சீத்தலைச் சாத்தனாரென்று தமிழின் தலை  சிறந்த இலக்கியப்படைப்பாளிகள் இன்றும் தம் படைப்புகளூடு வாழ்ந்துகொண்டுதானிருக்கின்றார்கள். மகாகவி பாரதி மறைந்து பல தசாப்தங்கள் கடந்து விட்டன. இன்றும் அவரது படைப்புகளூடு வாழ்ந்து கொண்டிருதானிருக்கின்றார். கவிஞர் புலமைப்பித்தனின் மறைவும் இத்தகையதுதான். இனியும் அவர் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழ் இலக்கியத்தில் வாழ்ந்துகொண்டிருதானிருப்பார்.

இன்று தமிழ்த்திரைப்படப் பாடல்களையும்  தமிழ் இலக்கியத்தின் அங்கமாகப் பார்க்கும் நிலை உருவாகிவிட்டது.  உதாரணத்துக்கு முனைவர் கெளசல்யா சுப்பிரமணியத்தின் இசை பற்றிய ஆய்வுக்கட்டுரைகளில் இத்தகைய போக்கினைக் காணலாம். சங்கப்பாடல்கள் எவ்விதம் இன்று வரை நிலைத்து நிற்கின்றனவோ அவ்விதமே சிறந்த தமிழ்த்திரைப்படப்பாடல்களை வழங்கிய கவிஞர் கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கவிஞர் அ.மருதகாசி, கவிஞர் வாலி, கவிஞர்  புலமைப்பித்தன், கவிஞர் உடுமலை நாராயண கவி, கவிஞர் வைரமுத்து எனப் பலரின் திரைப்படப்பாடல்கள் தமிழ் இலக்கிய உலகில் நிலைத்து நிற்கும்.

கவிஞர் புலமைப்பித்தனின் பல பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்தவை. குறிப்பாக 'ஆயிரம் நிலவே வா', 'ஓடி ஓடி உழைக்கணும்', 'எங்கே அவள்', 'பாடும்போது நான் தென்றல் காற்று', 'நீங்க நல்லாயிருக்கணும்' பாடலில் வரும் கருத்தாழம் மிக்க வரிகள், 'சிரித்து வாழ வேண்டும்', 'நான் யார் நான் யார்' இவ்விதம் கூறிக்கொண்டே போகலாம்.

எம்ஜிஆரின் அபிமானத்துக்குரிய  கவிஞர்களில் கவிஞர் வாலி, கவிஞர் புலமைப்பித்தன் ஆகியோர் முக்கியமானவர்கள். இவர் எம்ஜிஆரின் நெருங்கிய நண்பர்களிலொருவரும் கூட.  கவிஞர் புலமைப்பித்தன் தமிழகத்தின் அரசவைக் கவிஞராக விளங்கியவரும் கூட.

கலைஞனொருவருக்கு நாம் செய்யக்கூடிய சிறப்பான அஞ்சலி அக்கலைஞரின் படைப்புகளூடு அவரை நினைவு கூர்வதுதான். அவ்வகையில் அவர் இழப்பால் துயரில் வாடும் அனைவர்தம் துயரில் பங்குகொள்வதோடு , அவர் நினைவாக  எனக்கு மிகவும் பிடித்த வரிகளை உள்ளடக்கிய 'நேற்று இன்று நாளை' திரைப்படத்தில் இடம் பெறும்  'பாடும் போது நான் தென்றற் காற்று' பாடலையும் இங்கு  பகிர்ந்துகொள்கின்றேன்.

மேலும் படிக்க ...

தொடர் நாவல்: கலிங்கு! - தேவகாந்தன் -

விவரங்கள்
- தேவகாந்தன் -
தேவகாந்தன் பக்கம்
06 செப்டம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


2009 - 5


கிளிநொச்சியிலிருந்து வந்து சுமார் ஒன்றரை வருஷத்தை வடமராட்சியில் கழித்த பரஞ்சோதி பாதியாக சுருங்கிப் போனாள். எலும்பும் உருகிச் சிறுத்துப் போயிருந்தாள். துயரத்தின் வேர்கள் அவளுள் ஆழமாய் இறங்கியிருந்தன. சாந்தமலருக்கு தாயைப் பார்க்கவே முடியவில்லை. அவளால் செய்ய எதுவுமிருக்கவில்லை. வன்னியில் யுத்தம் நடந்துகொண்டிருந்தது. அது தொடங்குகிற காலத்தில், போன வருஷம் ஜுன் மாதமளவில், ஏ9 பாதை மூடப்பட்டது. யுத்தம் முடிந்து ஒரு ஸ்திரமான நிலைமை தோன்றும்வரை அது மீண்டும் திறக்கப்போவதில்லை. அம்மாவுக்கான கதவுகள் அடைத்தே இருக்கும். யுத்தம் எப்போதும் நடந்துகொண்டிருந்தது. அது வெளிவெளியாய் நின்றிருந்தால், உள்ளுள்ளாய் நடந்தது. சமாதான காலத்திலும் நடந்தது. எப்போதும் நடந்தது. கிழக்கு மாகாணத்தில், வன்னியின் எல்லைகளில் குறிவைத்த தாக்குதல்களாய் அது வடிவங்கொண்டிருந்தது. துல்லியமான விமானக் குண்டு வீச்சினால் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் போன்றவர்கள் அழிக்கப்பட, ஆழ ஊடுருவும் படையினரின் கிளைமோர் தாக்குதல்களால் புலிகளுக்கு ஆதரவான ‘கிளி பாதர்’ கனகரத்தினம் அடிகள்போன்ற கத்தோலிக்க மதகுருமாரும் இல்லாமல் ஆக்கப்பட்டதற்கான முன்னெடுப்பும் யுத்தம்தான். நாடாளுமன்ற அங்கத்தவர்கள் சந்திரநேரு, ஜோசப் பரராஜசிங்கம் போன்றவர்களும் கொலைக் குறியில் மறைந்தனர். அரசாங்கத்தின் யுத்த முன்னெடுப்பிற்கு எதிரானதும், புலிகளின் செயற்பாட்டுக்கு ஆதரவுமான நிலைப்பாடு கொண்டிருந்த தராகி சிவராம்போலவே, லசந்த விக்ரமதுங்கபோன்ற பத்திரிகை ஆசியர்களும் காட்சியிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். சிங்கள ஊடகவியலாளர்களே நாட்டைவிட்டு தப்பித்து ஓடுமளவு நிலைமை பயங்கரம்கொள்ள வைக்கப்பட்டிருந்தது. புத்துயிர் பெற்றிருந்த தேசப் பாதுகாப்புக்கான ஊடக மையம் ஊடகத் துறையிலுள்ள மாற்றுக் கருத்தாளரை முற்றாக அழித்தது. அவையெல்லாம்கூட யுத்தத்தின் உபகூறுகளே.

மேலும் படிக்க ...

தொடர்கதை: ஒரு கல் கரைந்தபோது…..! -  - நெல்லை வீரவநல்லூர் ஸ்ரீராம் விக்னேஷ் -

விவரங்கள்
- நெல்லை வீரவநல்லூர் ஸ்ரீராம் விக்னேஷ் -
நாவல்
06 செப்டம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

(6)

இப்போதெல்லாம் அக்காள் என்னிடம் முகம்கொடுத்துப் பேசுவதே குறைவு. நினைக்கும்போது மனத்துக்குள் அழுத்தமாக இருந்தாலும், சுதந்திரமாக நடமாட முடிகிறதே என்னும் ஒரு ஆறுதல்.

என்பொருட்டு அம்மாவுக்கும் வேதனைகள் குறைந்துள்ளமை கண்டு மகிழ்கின்றேன். பக்கத்திலுள்ள பெரிய கோவிலுக்கு, அவ்வப்போ அம்மாவுடன் செல்வதும், தரிசனம் முடித்தபின் கோவில் மண்டபத்தில் சிறிதுநேரம் உட்கார்ந்திருப்பதும், அப்போது அம்மாவின் மடியில் தலைவைத்துப் படுத்திருப்பதும் என்னை வேறு வேறு உலகுகளுக்குக் கொண்டுசென்றன.

அம்மாவும் அதே சூழ்நிலையில் மெய்மறந்தவங்களாய் தனது பால்யகால நினைவுகளை, என் தாத்தா பாட்டியோடு வாழ்ந்த காலத்தில் இதே கோவில், இதே மண்டபம், இதே இடத்தில் பாட்டியின் மடியில் சாய்ந்திருந்த, சுவையான சம்பவங்களைக்கூட பேசுவாங்க.

அத்தகைய சூழலில் இன்றும் நாங்கள். அம்மாவிடம் கேட்டேன் நான்.

“யேம்மா…. செவ்வாய்க் கெழமையில எப்பவுமே சாயங்கால பூஜைக்குத்தானே என்னய இந்தக் கோயிலுக்குக் கூட்டிக்கிட்டு வருவீக…. இண்ணிக்கு எதுக்கு காலைப் பூஜைக்கே கூட்டிக்கிட்டு வந்திட்டிய….. முகத்தில வேற ரொம்ப பூரிப்பு தெரியிது…. சொன்னா நானும் சந்தோசப்படுவேன்…. இல்லியா….”

கருவறைப் பக்கம் திரும்பி ஒருகணம் கண்ணை மூடித் தொழுத அம்மா தனது பார்வையை எனது பக்கம் திருப்பினாக.

“நீயும் சந்தோசப்படாமல் வேறை யாரு சந்தோசப்படுவா…. நாளைக்கு காலையில ஒம்பதரை டூ பத்தரை மணிக்குள்ள உன்னய பொண்ணுபாக்க வர்ராங்க…. மாப்பிளை சொந்த ஊரு மதுரைப் பக்கம்…. அதனால, அதுசம்பந்தமா இண்ணைக்கு சாயங்காலம் பாத்து முடிக்கப் பல வேலைங்க இருக்கிறதால, எல்லா வெசயமும் நலமாய் முடியணும்னு வேண்டிக்க மொதல் வேலையாய் இங்க வந்தோம் புரியிதா….”

மேலும் படிக்க ...

இணையவழிக் கல்வி வரமா? சாபமா? - முனைவர் பா.பிரபு. தமிழ்த்துறை இணைப் பேராசிரியர், இந்துஸ்தான் கலை அறிவியல் , கோயம்புத்தூர் - 28 -  

விவரங்கள்
- முனைவர் பா.பிரபு. தமிழ்த்துறை இணைப் பேராசிரியர், இந்துஸ்தான் கலை அறிவியல் , கோயம்புத்தூர் - 28 -
சமூகம்
05 செப்டம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

உலகிலேயே கல்வியைக் கலைமகளாக வணங்கும் இனம் நம் தமிழினம். கல்விக்கு மிக முக்கியமான இடத்தை நம் முன்னோர்கள் வழங்கியிருந்தார்கள். மாற்றம் ஒன்றே மாறாதது என்பதற்குக் கல்வியும் விதிவிலக்கல்ல. கல்விமுறையில் காலந்தோறும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வந்தாலும் தற்போதைய பெருந்தொற்றுக் காலத்தில் இணையவழியில் கற்பிக்கப்படும் கல்வி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதை மறுக்க இயலாது.அது இளம்தலைமுறைக்கு வரமா? சாபமா? என்பதை இக்கட்டுரையில் காணலாம்.

கல்வி குறித்த ஆன்றோர்களின் கருத்துகள்

எண்ணையும் எழுத்தையும் கண் என்று கூறினார் வள்ளுவர். பிச்சை புகினும் கற்கை நன்றே என்றும் எழுத்தறிவித்தவன் இறைவனாவான் என்றும் விளம்பியது வெற்றிவேற்கை. இவ்வாறு நம் சான்றோர்கள் கல்விக்கு மிக முக்கியமான இடத்தைக் கொடுத்திருக்கிறார்கள்.

காலந்தோறும் கல்வியில் ஏற்பட்ட மாற்றங்கள்
ஆதியில் இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்த மனிதன் அந்த இயற்கையிலிருந்தே அனைத்தையும் கற்றுக் கொண்டான்.அவ்வகையில் மனிதனின் முதல் ஆசானாக இயற்கையே விளங்கியது என்றால் அது மிகையல்ல.மனித இனம் சமூகமாக இணைந்து வாழ்ந்த போது தங்களுக்குள் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள எண்,எழுத்து போன்ற குறியீடுகள் தேவைப்பட்டன.இதுவே கல்வியின் வளர்ச்சிக்கு அடிப்படையாக விளங்கியது எனலாம்.

குருகுலக் கல்வி
கால ஓட்டத்தில் ஒரு குருவைத் தேடிச் சென்று வாழ்க்கையைக் கற்றுக் கொள்ளும் குருகுலக் கல்விமுறை தோன்றியது.அக்கல்விமுறை மிகச் சிறந்தது என்றாலும் அது ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமே உரியது என்ற சூழலும் ஏற்பட்டது.

மேலும் படிக்க ...

விவ(சாயம்) - முனைவர். பொ.ஜெயப்பிரகாசம், கோவை - 641107 -

விவரங்கள்
- முனைவர். பொ.ஜெயப்பிரகாசம், கோவை - 641107 -
சமூகம்
05 செப்டம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம். இல்லை உலக உயிர்களின் முதுகெலும்புதான் விவசாயம். கணிப்பொறியிலோ ஆய்வகத்திலோ நெல்லையும் கம்பையும் உருவாக்கமுடியாது . மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியாவின் விவசாயம் அதள பாதாளத்துக்குப் போய் விட்டது. காரணம் யோசிக்க வேண்டிய அரசாங்கமோ பன்னாட்டு நிறுவனங்களுக்கு பாய் விரித்துப் படுக்கச் சொல்கிறது . தன் நாட்டில் சுற்றுப்புறத்திற்கும் நிலத்திற்கும் பாதிப்பு ஏற்படும் தொழில்களை இங்கே நிறுவி வியாபாரம் பார்க்கிறார்கள் பன்னாட்டு வியாபாரிகள்.

என தாத்தா சொல்வார் “டே கண்ணு நாங்க சின்னப் பசங்களா இருக்கறப்போ இந்த ஊரெல்லா எப்படி இருந்துச்சு தெரியுமா எங்கியோ ஒரு பக்கத்தான் கட கிட இருக்கும்.மத்த பக்கம் பாத்தா சுத்தியும் பச்சம் பசேனு இருக்கும்.” அவர் சொன்னது இன்று மிகப்பெரிய நகரமாக கருதப் படுகிற இடங்கள்தான். ஆனால் இன்றோ அது நிறுவனங்களா வாழிடங்களாக மாறிவிட்டன. சரி மனிதப் பெருக்கத்திற்கு எல்லாம் இருந்தால் தான் வாழ முடியும் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் எல்லா இடங்களிலும் இவை இருந்தால்தான் வாழ முடியும் என்றால் எப்படி ஏற்றுக் கொள்வது .

மந்திரிகளுக்கும் அரசாங்க அதிகாரிகளுக்கும் கோடி கோடியாய் கொட்டிக் கொடுக்கும் அரசாங்கம்  விவசாயிகளைக் கண்டு கொள்வதில்லையே. தற்கொலையின் தார்ச்சாலையாக மாறி வருகிறார்கள் விவசாயிகள். வாழ் நாள் முழுவதும் விவசாயம் செய்து சம்பாதித்த பணத்தில் பூச்சி கொல்லி மருந்துக்கு மட்டுமே மிச்சமிருக்கிறது என்றால் என்ன செய்வார்கள். வட்டிக் கடைக்காரர்களின வாய்ப்பாடாக மாறி விட்டார்கள். பயிர்களை அறுவடை செய்வதுதான் விவசாயின் வாழ்க்கை . ஆனால் வறுமையின் கொடுமையால் தங்களைத் தாங்களே அறுவடை செய்வதுதான் அவர்களது வாடிக்கை. பசுமைப் புரட்சி விவசாயத்தைச் சாகடித்தது என்றால் மரபுப் பயிர்களின் விவசாயச் சந்தையில் விவசாயத்தையும் விவசாயியையுமே சாகடித்து வருகிறோமே. நாம் சாகடித்தது போதாது என்றால் உரிமையை கேட்ட நம்மையே சாகடித்தது அசாங்கமே. அப்படிச் செய்தவர்களையே மறந்து அரியணையில் அமர வைத்துச் சங்கிதம் பாடுபவர்களும் இவர்களே.

மேலும் படிக்க ...

அறிவிப்பாளர் கே.எஸ்.ராஜா நினைவாக..

விவரங்கள்
- ஊர்க்குருவி -
கலை
04 செப்டம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இன்று கே.எஸ்.ராஜா நினைவு தினம். எம் தலைமுறையினரின் பதின்ம வயதுப்பருவத்தில் எம்மையெல்லாம் கவர்ந்த இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன அறிவிப்பாளர்களில் ஒருவர். இவரது குரலும், இவரது தனித்துவம் மிக்க அறிவிப்புப் பாணியும் இவரது பலமான அம்சங்கள். இவரைப் பற்றி எண்ணியதும் முதலில் நினைவுக்கு வருவது: தனது பெயரைக் குறிப்பிடுகையில் சிவாஜியின் ராஜா படப்பாடலொன்றில் வரும் ராஜா என்னும் சொல்லை ஒலிக்கச்செய்வார். அதுதான்.

இது போன்ற சிறு சிறு விடயங்கள் அவரது அறிவிப்புக்கு மெருகூட்டின. இவ்விதமான தனித்துவமான அம்சங்களைத் தனது ஒலிபரப்பில் புகுத்துவதில் வல்லவர் இவர்.

இலங்கையில் , இலண்டனில் பல்கலைக்கழகப் பட்டங்கள் பெற்ற இவர் ஒலிபரப்புத் துறையின் மீதிருந்த ஆர்வத்தால் அத்துறைக்குள் புகுந்து வெற்றியீட்டியவர். ஆனால் போர்ச்சூழல் இவரையும் பலி கொண்டது துயரகரமானது. இவர் நினைவாக இங்கு நான் பதிவிட்டிருக்கும் புகைப்படம் அறிவிப்பாளர் அப்துல் ஹமீட் அவர்களின் பதிவொன்றில் கிடைத்த புகைப்படமொன்றிலிருந்து வெட்டியெடுத்தது. அதற்காக அவருக்கும் என் நன்றி.

இவரை ஒருமுறை நேரில் சந்தித்திருக்கின்றேன். ஆனால் அச்சந்திப்பில் அவருடன் கதைக்கவில்லை. அப்பொழுது ஒரு தடவை யாழ் மெயிலில் வீடு திரும்பிக்கொண்டிருந்தேன். மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த காலகட்டம். அப்புகைவண்டியில் இவரும் பயணித்துக்கொண்டிருந்தார். இவரைச்சுற்றி, இவரை அறிந்து கொண்ட கூட்டமொன்று கூடியிருந்தது. இவரும் அவர்களுடன் சுவையாக உரையாடிக்கொண்டிருந்தார். இவர்தான் கே.எஸ்.ராஜா என்று யாரோ கூற, அறிந்து இவரைப்பார்த்து அவரா இவர் என்று வியந்து நின்றேன். நினைவிலுள்ளது.

மேலும் படிக்க ...

ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் இணைய வழிக் கலந்துரையாடல்: பேசுநூல்: உண்மை ஒளிர்க என்று பாடவோ? ( பா.விசாலம் அவர்களின் நாவல் )

விவரங்கள்
- ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் -
நிகழ்வுகள்
02 செப்டம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

அஞ்சலி: உதயகுமாரி பரமலிங்கம் (இலண்டன் நிலா) மறைவு! - பதிவுகள்.காம் -

விவரங்கள்
- பதிவுகள்.காம் -
நேர்காணல்
02 செப்டம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- எழுத்தாளர் உதயகுமாரி பரமலிங்கம் (நிலா) அவர்கள் மறைந்த செய்தியினை துயரத்துடன் வசதிகள் வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம். நிலா, வஸந்தா என்னும் பெயர்களில் இவரது இலண்டன் நிகழ்வுகள் பற்றிய கட்டுரைகள் பதிவுகள் இணைய இதழில் வெளியாகியுள்ளன. அவ்வப்போது பதிவுகள் இதழில் வெளியாகும் நிகழ்வுகள் பகுதிக்கு இலண்டனில் நடைபெற்ற நிகழ்வுகள் பற்றிய கட்டுரைகளைப் புகைப்படங்களுடன் அனுப்பி, அவை பதிவுகள் இணைய இதழில் வெளியாகியுள்ளன. எழுத்தாளர் மாதவி சிவலீலனின் 'இமைப்பொழுது' நூல் வெளியீட்டு நிகழ்வு  பற்றிய இவரது  கட்டுரை  11 டிசம்பர் 2017 வெளியான  பதிவுகள் இணைய இதழில் 'இலண்டனில் இமைப்பொழுது' என்னும் தலைப்பில் ,  நிகழ்வுக் காட்சிகளை வெளிப்படுத்தும் புகைப்படங்களுடன் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.   

இலண்டன் தமிழ்ப் பெண்கள் அமைப்பின் ஸ்தாபகர்களில் ஒருவரான இவர் நிலா , அரியாலையூர் அம்புஜம் மற்றும் வஸந்தா ஆகிய புனைபெயர்களில் எழுதி வந்தவர்.  இவருடனான நேர்காணலொன்று ஏப்ரில் 2010 வெளியான பதிவுகள் இதழின் 124ஆவது பதிப்பில் எழுத்தாளர் நவஜோதி யோகரட்ணத்தின் எழுத்து வடிவத்தில் வெளியானதும் குறிப்பிடத்தக்கது.  அந்நேர்காணல் அவரைப்பற்றிய எழுத்து, வாழ்க்கை எனப் பலதரப்பட்ட விடயங்களைக் கூறுவதால் முக்கியத்துவம் மிக்கது. - பதிவுகள். காம் -



உதயகுமாரி பரமலிங்கத்துடனான (நிலா) சந்திப்பு! நேர்காணல் கண்டவர்: எழுத்தாளர் நவஜோதி யோகரட்ணம்

 

அரியாலையூர் அம்புஜம், நிலா ஆகிய புனைபெயர்களில் எழுதி வரும் உதயகுமாரி பரமலிங்கம் இலங்கையில் பதினைந்திற்கும் மேற்பட்ட நாடகங்களை இயக்கியுள்ளார். தொலைக்காட்சிகளில்; பங்கேற்றும், வானொலியில் அறிவிப்பாளராகவும் பங்களித்துவரும் உதயகுமாரி பரமலிங்கம் ‘எந்தையும் யானும்’ என்ற கவிதைத் தொகுப்பினையும் ‘எழுத எழுத’என்ற தனது அனுபவங்களின் கோர்ப்பாகவும் இரண்டு நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். லண்டனில் கணனி வலை பொறியியல் துறையில் பட்டம் பெற்ற உதயகுமாரி நிலாமுற்றம் என்ற இணையத்தளத்தை திறம்பட நடத்தி வருகின்றார்.

நவஜோதி: புலம்பெயர் வாழ்வில் எங்களுக்கு உடல்ரீதியாக வசதிகள் இருப்பினும் மனநிலையில் வெறுமைகொண்டது போன்ற உணர்விலிருக்கிறோம். ஆனால் நீங்கள் உடலில் வலு குன்றியவராய் இருந்தும் மனரீதியாக மிகவும் தென்பாகஇ மிகுந்த உற்சாகமாகஇ ஆளுமையோடு இருக்கிறீர்கள். இத்தகைய நம்பிக்கை உங்களுக்கு எப்படி வேரூன்றியது.?

மேலும் படிக்க ...

புத்தாக்க அரங்க இயக்கம் வழங்கும் அரங்கக் கதையாடல் 09: மட்டக்களப்பு அடிப்புற அரங்கச் செயற்பாட்டு அமைப்பின் செயற்பாடுகளும் இராம நாடகக் கூத்தின் ஆற்றுகை அனுபவப் பகிர்வும்!

விவரங்கள்
- தகவல்: எஸ்.ரி.குமரன் -
நிகழ்வுகள்
01 செப்டம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

கவிதை: மதில் மேல் பூனைகள்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
கவிதை
01 செப்டம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மதில் மேல் பூனைகளை நான் வெறுப்பவன்.
முதுகெலும்பற்றவை அவை.
சந்தர்ப்பங்களுக்கேற்ப அவை நடப்பவை.
சீற வேண்டிய நேரத்தில் சீறாதவை அவை.
சீற வேண்டிய தருணங்களில் மதில்களில்
உறங்கிக் கிடப்பவை அவை.
அதனால் அவற்றை எனக்குப் பிடிப்பதில்லை.
சீற வேண்டாத தருணங்களில் சீறி அவை
சிம்ம கர்ச்சனை செய்பவை.
அதனால் அவற்றை எனக்குப் பிடிப்பதில்லை.
மதில் மேல் பூனைகள்
முதுகெலும்பற்றவை.
மதில் மேல் பூனைகள்
சூடு சொரணையற்றவை.

மேலும் படிக்க ...

'வணக்கம் இலண்ட'னின் ஏற்பாட்டில் தலைமுறை தாண்டிய பயணம் – 9: சுமைகள் முதல் உயிர்வாசம் வரை தாமரைச்செல்வியின் ஆறு நாவல்களைப் பேசும் இலக்கியக் களம்' மெய்நிகர் அரங்கு !

விவரங்கள்
தகவல்: தாமரைச்செல்வி
நிகழ்வுகள்
31 ஆகஸ்ட் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

சிந்தனைக் களம்: "பரதக்கலை மரபுகளும் மாற்றங்களும்!"

விவரங்கள்
- தகவல்: பேராசிரியர் நா.சுப்பிரமணியன் -
நிகழ்வுகள்
31 ஆகஸ்ட் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


மேலும் படிக்க ...

இளைஞர் சாதனையாளர் கழகம், மலேசியா: பாரதியின் வேண்டுதல்கள்!

விவரங்கள்
- தகவல்: முனைவர் இ.பாலசுந்தரம் -
நிகழ்வுகள்
31 ஆகஸ்ட் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கூகுள் சந்திப்பு:  https://meet.google.com/srz-beaj-equ

 

எதிர்வினை: வரலாற்றை எழுதியவரது , வரலாற்றுக்குச் சாட்சியானேன்! - நடேசன் (ஆஸ்திரேலியா) -

விவரங்கள்
- நடேசன் (ஆஸ்திரேலியா) -
கட்டடக்கலை / நகர அமைப்பு/ வரலாறு/ அகழாய்வு
30 ஆகஸ்ட் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- அண்மையில் பதிவுகள் இணைய இதழில் வெளியான 'மறைக்கப்பட்ட வரலாற்றுத்தகவல்கள்' என்னும் கட்டுரைக்கான எதிர்வினையிது. - பதிவுகள்.காம் -


1980களில் நான் சென்னையிலிருந்த காலத்தில், என் மாணவப் பருவத்து நண்பனான இரகுபதியை சந்தித்ததேன். அக்காலத்தில்தான் இரகுபதியின் ஆய்வு நூல் சென்னையில் பதிக்கப்பட்டது. இராமாயணத்தில் அணிலாக Early Settlements in Jaffna என்ற ஆய்வு நூலின் பதிப்பில் எனது பங்கும் இருப்பதால் சில உண்மைகளை விளம்ப விரும்புகிறேன்.

வரலாற்றை, வரலாற்றியல் மரபோடு பதிவிட விரும்புவர்கள், அதைத் தாங்களே தேடி அறிந்து பதிவிடுவது நல்லது. மரபைக் கவனிக்காத கூற்றுகளுக்காக ஒதுங்கி இருக்கும் நண்பரை இழுத்து வருவதற்கு எனக்குப் பிரியமில்லை. இருப்பினும், நூல் பதிக்கப்பட்ட காலத்தில் சென்னையில் வாழ்ந்து , விடயங்களைத் தெரிந்துகொண்டு, இந்த நூலுக்கு நிதியுதவி வழங்கியவருள் ஒருவன் என்ற முறையில் எனக்குத் தெரிந்தவற்றைச் சொல்லவேண்டும்.
பத்மநாப ஐயரின் அமுதவிழாவின் சூம் நிகழ்வில், மு. நித்தியானந்தன் கூறிய விடயங்கள் மூன்று; முதலாவது, பத்மநாத ஐயர் அபாயகரமான சூழலில் தனியாக நூற்பிரதியை எடுத்துச் சென்றார் என்பது. பத்மநாப ஐயரும் பொ. இரகுபதியும் ஒன்றாகச் சேர்ந்துதான் கடல் வழியாகப் பயணித்தார்கள் என்பதை பத்மநாப ஐயரே பதிவிட்டிருக்கிறார். நித்தியானந்தன் கூற்று மாறுபட்டுத் தொனிப்பது ஏன்?

இரண்டாவது, நூலாசிரியர் தனது நூலில் பத்மநாப ஐயருக்கு நன்றி தெரிவிக்கவில்லை என்பது. நூலின் நன்றியுரையில் பெயர் குறிப்பிட விரும்பியிராத நண்பர் ஒருவர் (A friend of mine who wishes to remain anonymous) பதிப்பிற்கு முன்முயற்சி எடுத்து அடித்தளமிட்டார் என்று நூலாசிரியர் குறிப்பிட்டிருக்கிறார். அது தனக்குரியது என்று பத்மநாப ஐயர் பல ஆண்டுகளுக்குப்பின் பூடகமாக ஏற்றுக்கொண்டதுடன், தன் முயற்சியால் வந்த நூல்களின் பட்டியலில் இந்நூலையும் இணைத்திருக்கிறார். இதை நூலாசிரியர் இதுவரை மறுக்கவில்லை. அது அவர்கள் இருவருக்கும் இடையிலான புரிந்துணர்வு என்று தோன்றுகிறது.
மூன்றாவது , நூற்பதிப்புச் செலவு இந்தியப் பணத்தில் 55000 ரூபா என்றும் , பத்மநாப ஐயரின் முயற்சியால் வந்த பணத்தில் நூல் பதிப்பிக்கப்பட்டு , பின்னர் அது வெளியானபோது திருமதி. இரகுபதியின் பதிப்பாக வெளியானது என்ற பொருட்பட மு. நித்தியானந்தன் பேசியிருந்தார்.

மேலும் படிக்க ...

மீண்டும் மிதக்கும் டைட்டானிக்!  - கிறிஸ்டி நல்லரெத்தினம் - மெல்பன் -

விவரங்கள்
- கிறிஸ்டி நல்லரெத்தினம் - மெல்பன் -
கிறிஸ்டி நல்லரெத்தினம்
29 ஆகஸ்ட் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 " எங்கும் கும்மிருட்டு..... நடுநிசி..... "கி....ரீ.... ரீ... ரீ...ச்" என எங்கோ யாரோ கூரிய நகங்களால் எதையோ பிறாண்டும் சத்தம்! அச்சத்தம் காதுகளில் புகுந்து முள்ளந்தண்டை சில்லிட்டது. படுக்கையில் இருந்து துள்ளி எழுந்து...... "என்ன, 'மர்மக்கதை மன்னன்' பி.டி.சாமியின் மர்ம நாவலில் இருந்து ஒரு பக்கத்தை படிக்கிறேன் என எண்ணினீர்களோ? “  அது தான் இல்லை! ஏப்ரல் 14, 1912 இல் தன் கன்னிப் பயணத்தில் RMS டைட்டானிக் எனும் பாரிய பயணிகள் கப்பல் பனிப்பாறையுடன் உரசிய வேளையில் எழுந்த மரண ஒலி அது! அது சரி, 109 வருடங்களுக்கு பின் இந்த நனவிடை தோய்தல் எதற்காம் என நீங்கள் கேட்பது புரிகிறது. அதை பின்னர் சொல்லட்டுமா? சரி, கதைக்கு வருவோம்.

ஏப்ரல் 10, 1912 இல் இங்கிலாந்தின் தென்கிழக்கில் அமைந்துள்ள செளதாம்ப்டன் எனும் துறைமுகத்தில் இருந்து ஆயிரத்திற்கும் அதிகமான பயணிகளுடனும் 892 மாலுமிகளுடனும் தன் கன்னிப் பயணத்தை ஆரம்பித்தது 46,328 தொன் எடையுள்ள டைட்டானிக். அக்காலங்களில் இதுவே உலகின் மிகப் பெரிய பயணிகள் நீராவிக் கப்பல் என பெயர் பெற்றது.

ஏப்ரல், மே மாதங்கள் கடல் பயணங்களுக்கு பிரபலம் அல்லாததால் கப்பலின் மொத்த 2,453 பயணச்சீட்டுக்களில் பாதியே விற்பனையாகிற்று. மேலும் அந்நாட்களில் நடைபெற்றுக் கொண்டிருந்த தேசிய நிலக்கரி ஊழியர்களின் வேலை நிறுத்தமும் பயணிகளின் பயணத்தை பின்போட வைத்தது.

கப்பலின் முதலாம் வகுப்பில் பயணம் செய்த 325 பயணிகள் ஒருவருக்கு ஒரு வழிப் பயணத்திற்கு ( இரு படுக்கை அறை ) செலுத்திய தொகை $4,350. இது இன்றய மதிப்பீட்டில் $50,000 ஐ தாண்டும் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! இவர்களுக்கென ஜிம், நீச்சல் தடாகம், வாசிகசாலை, உயர்தர உணவகங்கள் உட்பட பல சொகுசு வசதிகள் இருந்தன என்றால் சும்மாவா? ஆம், கோடீஸ்வரர்களின் சொர்க்கம்தான்!

மூன்றாம் வகுப்பில் அமெரிக்காவில் தமக்கென ஒரு நல்வாழ்வை அமைத்துக் கொள்ளும் கனவுடன் ஆமேனியா, இத்தாலி, சீரியா, சுவீடன் போன்ற நாடுகளில் இருந்து வந்த சமுதாயத்தின் கீழ்தட்டு மக்களே நிரம்பியிருந்தனர். இவ்வகுப்புப் பயணிகளுக்கு ஆடம்பரமான வசதிகள் இல்லாவிட்டாலும் அக்காலகட்டத்தில் இருந்த மூன்றாம் வகுப்பு வசதிகளை விட டைட்டானிக் மேலாதானதாகவே கட்டமைக்கப்பட்டிருந்தது.

மேலும் படிக்க ...

அஃக்கன்னாவும், தமிழ்ப் பேராசிரியர் ஒருவரின் பெயரும்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
29 ஆகஸ்ட் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 - அண்மையில் முகநூலில் நானிட்டிருந்த பேராசிரியர் நுஃமானின் பெயர் பற்றிய பதிவும் , அதற்கான எதிர்வினைகளும் இவை. ஒரு பதிவுக்காக இங்கு பதிவு செய்கின்றேன். - வ.ந.கி -


பேராசிரியர் நுஃமான் அவர்கள் தனது பெயரை அஃக்கன்னா பாவித்து எழுதுகையில் அஃக்கன்னாவுக்குரிய தமிழ் இலக்கண விதியைப் பாவிப்பதில்லை (நுஃமான் என்பதற்குப் பதிலாக நுஃகுமான் என்றிருந்தால் அது தமிழ் இலக்கண விதிக்குப் பொருத்தமாக இருந்திருக்கும்) . அது ஏன் என்ற கேள்வியும் எனக்கிருந்தது. தற்போது அதற்கான பதில் அவரது முகநூல் எதிர்வினையொன்றின் மூலம் கிடைத்துள்ளது. 'அடிப்படைத் தமிழ் இலக்கணம்' என்னும் தமிழ் இலக்கண நூலில் அஃக்கன்னா  என்னும் எழுத்துக்குரிய  இலக்கண விதியையும் குறிப்பிட்டு விட்டு அதே அட்டையில் நுஃமான் என்று போட்டிருந்ததுதான் என் கவனத்தைக் கவர்ந்தது. அந்நூல் மூலம் தமிழ் படிக்கும் எவருக்கும் இக்கேள்வி எழும்.

அண்மையில் எழுத்தாளர் ந.சுசீந்திரன் அவர்கள் தனது பதிவொன்றில் அஃக்கன்னா பற்றிக் குறிப்பிட்டிருந்தார். அஃக்கன்னா என்னும் எழுத்தை நுஃமான் அவர்கள் தொடர்ந்தும் வாழ வைத்துக்கொண்டிருப்பதாக அதில் அவர் குறிப்பிட்டிருந்தார். அதிலும் நான் என் நுஃமான் பெயர் பற்றிய குழப்பத்தை எதிர்வினையாகக் குறிப்பிட்டிருந்தேன். சுசீந்திரனின் குறிப்புக்கான எதிர்வினையில் நுஃமான் அவர்கள் தான் ஏன் அவ்விதம் இலக்கணத்தவறுடன் தன் பெயரைப் பாவிக்கின்றார் என்பதற்கான காரணத்தைக் குறிப்பிட்டிருக்கின்றார். அது முக்கியமான தகவலென்பதால் அதனைக் கீழே தருகின்றேன்.

மேலும் படிக்க ...

பேராசிரியர் இளையதம்பி பாலசுந்தரம் பற்றிய குறிப்புகள்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
Administrator
வ.ந.கிரிதரன் பக்கம்
28 ஆகஸ்ட் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இலங்கைத் தமிழ் ஆய்வாளர்களில் பேராசிரியர் இளையதம்பி பாலசுந்தரம் அவர்கள் முக்கியமானவர்களிலொருவர். இலங்கைத் தமிழ்ப்பகுதிகளின் ஊர்ப்பெயர்கள் பற்றிய இவரது ஆய்வு நூல்கள், நாட்டார் இசை, பாடல்கள் பற்றிய நூல்கள், ஒப்பனைக்கலை மற்றும் கனடாத் தமிழர்தம் வரலாறு பற்றிய 'கனடாவில் இலங்கைத்தமிழரின் வாழ்வும், வரலாறும்’ என்னும் நூல் போன்ற இவரது ஆய்வு நூல்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை.

இவரது 'கனடாவில் இலங்கைத்தமிழரின் வாழ்வும், வரலாறும்’ என்னும் நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு வேலைகள் தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக அண்மையில் என்னுடன் அலைபேசியில் உரையாடியபோது தெரிவித்தார். அத்துடன் அந்நூல் வெளியானபோது அது பற்றிய குறிப்பொன்றினை 'பதிவுகள்' இணைய இதழில் எழுதியிருந்தேன். அதில் அந்நூலில் விடுபட்ட சில விடயங்கள் பற்றியும் , அந்நூலிலுள்ள என் படைப்புகள் பற்றிய தகவல்கள் பற்றிய மேலதிக விளக்கங்களையும் குறிப்பிட்டிருந்தேன். அவற்றை நினைவில் வைத்திருந்து தற்போது வெளியாகும் ஆங்கில மொழிபெயர்ப்பில் அவற்றையும் உள்வாங்கியுள்ளதாகவும் அண்மைய உரையாடலின்போது பேராசிரியர் தெரிவித்திருந்தார். அவரது இந்தப் பண்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. சிறந்த ஆய்வாளர் ஒருவரின் முக்கிய இயல்புகளிலொன்று தொடர்ச்சியாகத் தனது ஆய்வு பற்றிய தகவல்களைத் தேடிக்கொண்டிருப்பது. அத்தகவல்களின் உண்மைத்தன்மையறிந்து ஆய்வு நூல்களின் புதிய பதிப்புகளில் அவற்றை உள்வாங்கி ஆய்வுகளை மேலும் செழுமைப்படுத்துவது. இந்தப்பண்பு பேராசிரியர் இளையதம்பி பாலசுந்தரம் அவர்களிடத்தில் நிறையவே உள்ளது. இவரைப்போல் தொடர்ந்தும் தன் ஆய்வுகள் பற்றிய புதிய தகல்வகளைத் தேடிக்கொண்டிருக்கும் இன்னுமொருவர் பேராசிரியர் நா.சுப்பிரமணியன் அவர்கள்.

மேலும் படிக்க ...

மறைக்கப்பட்ட வரலாற்றுத் தகவல்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
கட்டடக்கலை / நகர அமைப்பு/ வரலாறு/ அகழாய்வு
26 ஆகஸ்ட் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

'தலைமுறை தாண்டிய பயணம்: பத்மநாப ஐயர் - 80!' என்னும் மெய்நிகர் நிகழ்வில் (வணக்கம் லண்டன் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட நிகழ்வு) உரையாற்றிய கலை, இலக்கிய விமர்சகர் மு.நித்தியானந்தன் அவர்கள் கூறிய வரலாற்றுத் தகவலொன்று என் கவனத்தை ஈர்த்தது. அது முனைவர் பொ.ரகுபதியின் Early Settlements in Jaffnaஅ நூல் பற்றியது.

இந்நூல் பற்றிக் குறிப்பிடுகையில் மு.நித்தியானந்தன் அவர்கள் கூறிய விபரங்கள் வருமாறு:

யுத்தச் சூழலில், கடற்படையினரின் ஆதிக்கம் நிலவியதொரு சூழலில் பத்மநாப அய்யர் அவர்கள் இயக்கமொன்றின் படகொன்றில் மேற்படி நூற் பிரதியுடன் (தட்டச்சுப் பிரதியாகவிருக்க வேண்டும்) இந்தியா சென்று க்ரியா நிறுவனத்துடன் கடன் அடிப்படையில் நூலைப் பதிப்பிக்க ஒப்பந்தம் செய்ததாகவும், அவ்வேலை அக்காலகட்டத்தில் பாரிசிலிருந்த ரிஷியகுமாரின் பண உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டதாகவும் நித்தியானந்தன் தனதுரையில் குறிப்பிட்டிருந்தார். அதற்கான மொத்தச்செலவு ரூபா 55,000 என்றும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் அவர் நூலாசிரியரே பெரும் முயற்சி எடுக்காததொரு சூழலில் பெரு முயற்சியெடுத்தவர் பத்மநாப அய்யர் என்றும் குறிப்பிட்டார். ஆனால் நூல் வெளியானபோது அந்நூலில் பத்மநாப அய்யரின் பெயர் எங்குமே இடம் பெற்றிருக்கவில்லையென்றும் நித்தியானந்தன் சுட்டிக்காட்டினார். மேலும் பத்மநாப அய்யர் வெளியிட்ட தொகுப்பு நூல்கள் பலவற்றில் பலரின் பெயர்கள் இருந்தாலும் , அவை பத்மநாப அய்யரின் முயற்சியால் மட்டுமே வெளியானவையே என்றும் சுட்டிக்காட்டினார் நித்தியானந்தன்.

மேலும் படிக்க ...

கோப்பாய்க் கோட்டை பற்றிச் சில குறிப்புகள்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
26 ஆகஸ்ட் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்
 
கலாநிதி பொ.இரகுபதி எழுதிய Early Settlements in Jaffna நூலில் கோப்பாய்க் கோட்டை பற்றிய இரு பக்கக் கட்டுரையுமுள்ளது. அக்கட்டுரை தற்போது இராசமாளிகை என்றழைக்கப்படும் காணித்துண்டொன்று பற்றிய தகவற் கட்டுரையே. உண்மையில் இது போன்ற இடங்களைப்பற்றிய ஆய்வுகளின்போது அவை பற்றி ஏற்கனவே ஆய்வுக்கட்டுரைகள் அல்லது தகவற் கட்டுரைகள் வெளியாகியிருந்தால் அவற்றையும் தேடிப்பிடித்து வாசித்து அவை பற்றியும் குறிப்பிட்டிருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால் அது ஆய்வாளரின் ஆய்வுச்சிறப்பை எடுத்துக் காட்டும்.
 
கோப்பாய்க் கோட்டை இருந்ததாகக் கருதப்படும் 'பழைய கோட்டை' (Old Castle) பற்றி சுவாமி ஞானப்பிரகாசர் கட்டுரையொன்று எழுதியிருந்தார் ( (Ceylon Antiquary and Literary Register 2(3), Jan 1917, pp.194-195, 'Sankily's Fortress at Kopay'). அது பற்றி கலாநிதி கா.இந்திரபாலாவைச் சந்தித்தபோது சுட்டிக்காட்டியிருந்தார்.  அது யாழ் பல்கலைக்கழக நூலகத்திலுள்ளது. அது பற்றிய விபரங்கள் அறிந்தவர்கள் தகவலையும், அக்கட்டுரை வெளியான பக்கங்களையும் பகிர்ந்துகொண்டால் மிகவும் நன்றியுள்ளவனாகவிருப்பேன்.
 
ரகுபதி அவர்கள் மேற்படி சுவாமி ஞானப்பிரகாசரின் கட்டுரையையும் உள்வாங்கி மேற்படி கோப்பாய்க் கோட்டை பற்றிய கட்டுரையில் குறிப்பிட்டிருந்தால் மிகவும் பயனுள்ளதாகவிருந்திருக்கும்.
 
சுவாமி ஞானப்பிரகாசர் கோப்பாய்க் கோட்டை இருந்த இடம் எதுவென்பதை அடையாளம் கண்டு (திருமதி வேர்ட்ஸ்வேர்த் என்பவருக்குச் சொந்தமான கோப்பாயிலுள்ள old castle என்னும் பகுதியே அது) அதுபற்றி விபரித்திருந்தார். உடனேயே அப்பகுதியைப் பார்க்கவேண்டுமென்ற ஆர்வமெழுந்தது. கோப்பாய் சென்று பழைய கோட்டையின் (old castle) அன்றிருந்த நிலை பற்றி சிறு கட்டுரையொன்றினை எழுதி வீர்கேசரி பத்திரிகைக்கு அனுப்பினேன். அது 'கோப்பாய் பழைய கோட்டையின் கோலம்' என்னும் தலைப்பில் 15.3.1981 அன்று வெளியான வீரகேசரி வாரவெளியீட்டில் வெளியாகியது. சுவாமி ஞானப்பிரகாசரின் காலத்தில் ஒருவருக்குச் சொந்தமாகவிருந்த அக்காணி நான் சென்று பார்த்தபோது பிரிக்கப்பட்டுப் பலருக்குச் சொந்தமாகவிருந்தது. தற்போது தனியாருக்குச் சொந்தமாக அது இருந்த இடமே அடையாளம் காணமுடியாதவாறு மாறியுள்ளது. அது பற்றியும் முகநூற் பதிவொன்று எழுதியிருந்தேன். அதற்கான இணைப்பையும் இப்பதிவின் இறுதியில் தந்துள்ளேன்.
மேலும் படிக்க ...

தலைமுறை தாண்டிய பயணம்: பத்மநாப ஐயர் - 80!

விவரங்கள்
- ஊர்க்குருவி -
இலக்கியம்
26 ஆகஸ்ட் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

தமிழ்க் கலை இலக்கிய உலகில் பத்மநாப ஐயர் நன்கறியப்பட்ட ஒருவர். அவருக்கு ஆகஸ்ட் 24 அகவை 80. அதனையொட்டி 'வணக்கம் லண்டன்' நடத்திய 'தலைமுறை தாண்டிய  பயணம்'  மெய்நிகர் நிகழ்வில் கலை, இலக்கிய ஆளுமைகள் பலர் கலந்து தம் கருத்துகளைத் தெரிவித்தனர்.  இந்நிகழ்வில் உரையாற்றிய அனைவரும் பத்மநாப ஐயரின் இலக்கியப்பங்களிப்பைப்  பல்வேறு கோணங்களில், அவருடனான தம் சொந்த அனுபவங்களின் அடிப்படையில் அணுகி ஆற்றிய உரைகள் பத்மநாப ஐயரின் பன்முகக்  கலை, இலக்கியப் பங்களிப்பை அறிய உதவுகின்றன.

மேலும் படிக்க ...

இதுவரை வெளியான வ.ந.கிரிதரனின் வெளியான நூல்கள் & மின்னூல்கள் (அமேசன் - கிண்டில் வெளியீடு)!

விவரங்கள்
- வ.ந.கி -
வ.ந.கிரிதரன் பக்கம்
25 ஆகஸ்ட் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

வ.ந.கிரிதரனின் வெளியான நூல்கள்:

1. அமெரிக்கா (நாவல் & சிறுகதைத்தொகுப்பு. ஸ்நேகா - மங்கை பதிப்பக வெளியீடு)
2. நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (ஆய்வு நூல். ஸ்நேகா பதிப்பக வெளியீடு)
3. மண்ணின் குரல் (நாவற் தொகுப்பு. குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடு)
4. குடிவரவாளன் (நாவல். ஓவியா பதிப்பக வெளியீடு)
5. அமெரிக்கா (நாவல். திருத்திய பதிப்பு. மகுடம் வெளியீடு)
6. எழுக அதி மானுடா (கவிதைத்தொகுப்பு. மங்கை பதிப்பக வெளியீடு)
7. மண்ணின் குரல் (நாவல், கட்டுரை & கவிதைத்தொகுப்பு. மங்கை பதிப்பக வெளியீடு)


வ.ந.கிரிதரனின் மின்னூல்கள் (அமேசன் - கிண்டில் வெளியீடு):

1. நவீன கட்டடக்கலைச் சிந்தனைகள் (கட்டுரைகள்)
2. வ.ந.கிரிதரனின் கட்டுரைகள் தொகுதி ஒன்று.
3. ஒரு நகரத்து மனிதனின் புலம்பல் (கவிதைத்தொகுப்பு)
4. அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள் (அறிவியற் கட்டுரைகள்: கதைகள் & கவிதைகள))
5. கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள் (புகலிட அனுபவச் சிறுகதைகள்)
6. நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாவது பதிப்பு)
7. கணங்களும் குணங்களும் (நாவல்)
8.மண்ணின் குரல் (நாவல். கனடாவில் வெளியான முதல் நாவல்)
9. அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் (நாவல்)
10. குடிவரவாளன் (நாவல்)
11. அமெரிக்கா (நாவல்)
12. An Immigrant (Novel - Translation by latha Ramakrishnan)
13. Nallur Rajadhani City Layout (Research Paper - Translation By Latha Ramakrishnan)
14. A messsage for Stallion Stealers! (A collection of poems. Five of them are translated by various writers and the rest are my own English poems)
15. America (English Translation by Latha Ramakrishan)

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. தமிழறிஞர் த. துரைசிங்கம் காலமானார்! - இளநிலா சுரேசானந்த் -
  2. 'சென்டானியல் கொலிஜ்' (Centennial College) நினைவுகள்..... - வ.ந.கிரிதரன் -
  3. படித்தோம் சொல்கின்றோம் : மக்கத்துச்சால்வை மண்ணும் மக்களும் சௌந்தர்ய உபாசகரின் எளிமையான வாழ்வை பேசும் சிறப்பு மலர்! - முருகபூபதி -
  4. சிறுகதை: மேய்ப்பர்கள்!  - எஸ். அகஸ்தியர் -
  5. திகில் நாயகன் 'நைட்' ஷியாமளன்! - கிறிஸ்டி நல்லரெத்தினம் – மெல்பன் -
  6. காலத்தால் அழியாத கானங்கள்: 'உன்னைத்தான் நான் அறிவேன்' - ஊர்க்குருவி -
  7. எதிர்வரும் ஞாயிறு நிகழ்வு: Zoom வழியாக , சி. மெளனகுருவின் இரு நூல்கள்- அறிமுகமும் கலந்துரையாடலும்! - எம்.பெளசர் -
  8. முருகபூபதியின் கதைத்தொகுப்பின் கதை ! சிறுகதைத் தொகுப்பில் பெண்கள் ! ஒரு கண்ணோட்டம்!   - சி.ரஞ்சிதா -
  9. கவிதை: காலச்சுழல்!  - துவாரகன் -
  10. 'நடு' இணைய இதழ்: கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலனுடனான நேர்காணல்!
  11. ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் இணைய வழிக் கலந்துரையாடல்: ‘தமிழரின் காப்பிய அழகியல் ’ - இளங்கோ , கம்பன் ஆகியோரை மையப்படுத்திய பார்வை! பேசுபவர்: பேராசிரியர் நா. சுப்பிரமணியன்!
  12. இலங்கை மாணவர் கல்வி நிதியம் – அவுஸ்திரேலியா ( 1988 – 2021 )! மலையகத்தில் கொவிட் நெருக்கடி காலத்தில் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் பணிகள்! - முருகபூபதி -
  13. சிறுகதை: ஒரு வாய் சோறு! - இணுவையூர் சக்திதாசன், டென்மார்க் -
  14. குறு நாடகம்: ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை. - வ.ந.கிரிதரன் -
பக்கம் 101 / 115
  • முதல்
  • முந்தைய
  • 96
  • 97
  • 98
  • 99
  • 100
  • 101
  • 102
  • 103
  • 104
  • 105
  • அடுத்த
  • கடைசி